இந்தக் காணொளியில் (https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs) காட்டப்பட்ட படி உங்கள் மின்னூல்களை Epup, Mobi, Pdf, html போன்றவற்றில் உருவாக்கும் போது, Pressbook இல் தமிழ் எழுத்துருக்களின் அநுசரணை இல்லாத காரணத்தால், இதில் உருவான Pdf கோப்பு வெறும் கேள்விக் குறிகளுடன் காணப்படும். அதனால் இதில் உருவான html கோப்பை pdf ஆக மாற்றுவதற்கான வழிமுறையும் இக்காணொளியில் காட்டப்பட்டுள்ளது.
ஆனாலும் அவ்வழிமுறையில் எனக்குச் சரியான pdf கோப்பு கிடைக்கவில்லை. அப்படிக் கிடைக்காததும் ஒருவகையில் நல்லதென்றே இப்போது எண்ணுகிறேன்.
PDF கோப்பை மிகச் சுலபமாக Microsoft word இலேயே உருவாக்கலாம்.
அதற்கு முதலில் நீங்கள் Wordஐத் திறந்து Page Layout இல் Size ஐத் தெரிவு செய்ய வேண்டும். A4 இல் pdfஐ உருவாக்கும் போது Size இல் A4 என்ற அளவைத் தேர்ந்தெடுத்தீர்களானால் சரி.
அடுத்து உங்களது ஆக்கங்களை Pressbook இலிருந்தோ அல்லது உங்களது கணினியிலிருந்தோ ஒவ்வொன்றாக எடுத்து word இல் பிரதி பண்ண வேண்டும். நீங்கள் விரும்பினால் Footer, Header களிலும் சில தரவுகளைச் சேர்க்கலாம். அதற்கு Insert ஐத் தெரிவு செய்து Footer or Header ஐ அழுத்தும் போது உங்களுக்கு விரும்பிய ஏதாவது வடிவங்கள் கிடைக்கும்.
மேலும் நீங்கள் உங்கள் படைப்புகளை அழகு படுத்தலாம். தலைப்புகளுக்கு வர்ணங்கள் கொடுக்கலாம். படங்கள் சேர்க்கலாம்.
எல்லாம் முடிந்து உங்களுக்குத் திருப்தி என்றதும் அதை நீங்கள் உங்கள் கணினியில் பதிய வேண்டும்.
பதிவதற்கான Save As ஐ அழுத்தும் போது எந்த வடிவத்தில் நீங்கள் பதியப் போகிறீர்கள் என்பதை நீங்களே தெரிவு செய்யலாம். அதன் போது நீங்கள் கீழுள்ள படத்தின் படி PDF ஐ ஐத் தேர்ந்தெடுத்தால் போதும். உங்கள் Word, PDF கோப்பு ஆகி விடும்.
இதே போல 6Inch pdf கோப்பை உருவாக்குவதற்கு
1 – நீங்கள் Wordஐத் திறந்து Page Layout இல் Size ஐத் தெரிவு செய்ய வேண்டும்.
2 – Size இல் More Paper Sizes ஐத் தெரிவு செய்ய வேண்டும்.
3 – இதில் Paper என்ற பகுதியில் Width ஐ 9 என்றும், Heioght ஐ 12 என்றும் மாற்ற வேண்டும்.
4 – அடுத்து இதில் உள்ள Margins ஐத் தெரிவு செய்ய வேண்டும்.
Margins இல் எல்லாப் பக்கங்களையும் 0,5 cm க்கு மாற்றி விட வேண்டும்.
உடனேயே உங்களுக்கு 6Inch Word கிடைத்து விடும்.
மேலே கூறியது போல பதியும் போது PDF ஐத் தேர்ந்தெடுத்தீர்களானால் சரி. 6 Inch PDF ம் கிடைத்து விடும்.
சந்திரவதனா
http://www.manaosai.com/index.php?option=com_content&view=article&id=720:pdf-microsoft-word-&catid=29:2009-07-02-22-33-23&Itemid=70
Comments
One response to “A4 PDF, 6 inch PDF கோப்பை மிகச் சுலபமாக Microsoft word இலேயே உருவாக்கலாம்”
அம்மா வணக்கம்.என்னிடம் எம் மாமாவின் பழைய புத்த்கங்கள் அதிகம் உள்ளது.அவற்றை scan செய்து pdf formatக்கு மாற்றி இ புக் செய்ய இயலுமா ? நன்றி