நூலாசிரியர் பேட்டி – அரவிந்த்

மின்னஞ்சல் வழி பேட்டி – சிவமுருகன் பெருமாள்

வணக்கம்

எனது கருத்துக்கள்

 

உங்கள் முதல் மின்னூல் இணையத்தின் முலம் வெளிவந்துடன் எப்படி இருந்தது ?

மகிழ்ச்சியாக, மன நிறைவாக இருந்தது.

 

இந்த இரண்டு ஆண்டுகளில் freetamilebooks.com சேவை எப்படி இருந்தது ?

மிகச் சிறப்பாகவே இருப்பதாக என் எண்ணம்.

 

தங்கள் மின்னூல் தற்போது வெளிவந்துடன் எப்படி இருக்கிறது?

சில வாரங்களே  ஆகியுள்ளன என்றாலும் வாசக வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் பல நூல்களைத் தரும் விழைவு உண்டாகிறது.

 

வாசகர்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்களா?

ஆம். சில மின்னஞ்சல்கள் வந்துள்ளன.

 

மின்னூல்கள் இன்னும் பலரையும் சென்றடைய என்ன செய்யலாம்?

எல்லாக் கருவிகளிலும் படிக்குமாறு புதிய Apps உருவாக்கி அதன் மூலம் பலரைச் சென்றடைய வைக்கலாம்.

 

நாங்கள் இன்னும் சிறப்பாக எப்படி செயல்படலாம்?

மின்னூல்களை அச்சு நூலாக்கி வெளியிட்டு அச்சு நூல்களுக்காக எழுதுபவர்களையும் மின்னூல்கள் எழுத வைக்கத் தூண்டலாம்.

அதுபற்றி அவர்களுக்கு எளியமுறையில் அறிமுகப்படுத்தி இணையத்தில் அவர்களை எழுத வைக்கலாம்.

தேர்ந்தெடுத்த சில மின்னூல்களை குறைந்த விலையில் (Rs. 20/-,30/-) என்று விலை வைத்து விற்பனையாகிறதா என்று பார்த்து, விற்பனைச் சந்தையில் படிப்படியாக ஈடுபடலாம்.

 

நன்றி

 

அன்புடன்

அரவிந்த்


Posted

in

by

ஆசிரியர்கள்: