நூலாசிரியர் பேட்டி – ரவி நடராஜன்

மின்னஞ்சல் வழி பேட்டி – சிவமுருகன் பெருமாள்

தங்களது மின்னஞ்சலுக்கு நன்றி.

புத்தகங்களை வெளியிட்ட freetamilebooks.com  -க்கு நன்றி.

தங்கள் முதல் மின்னூல் இணையத்தின் முலம் வெளிவந்துடன் எப்படி இருந்தது ?

நல்ல ஒரு முயற்சிக்கு உதவுவது எப்பொழுதும் மகிழ்ச்சியான விஷயம்.

இந்த இரண்டு ஆண்டுகளில் freetamilebooks.com சேவை எப்படி இருந்தது ?

சில சமயங்களில் உங்களது சேவை நன்றாக இருந்தாலும், பிற சமயங்களில், புத்தகம் வெளியாக வெகு காலமாகியது. வணிக அமைப்பில்லாதலால், இதில் பணியாற்றும் பலருக்கும் வேலை காரணமாக நேரமில்லாததை அறிவேன். ஆயினும் என்னுடைய கடைசி புத்தகம் வெளிவர 4 மாதங்கள் ஆகியது. ஒரு குறைந்தபட்ச வெளியீட்டு நேர உத்தரவாதம் தேவை என்று நினைக்கிறேன். உதாரணத்திற்கு, புத்தக ஆவணம் கிடைத்த 1 மாததிற்குள் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

வாசகர்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்களா?

இதுவரை இல்லை.

மின்னூல்கள் இன்னும் பலரையும் சென்றடைய என்ன செய்யலாம்?

1) தமிழ்ப் புத்தகக் குழுக்கள் இருந்தால், அவர்களுக்கு சுட்டிகளை அனுப்பலாம். 2) இணைய உலகில் சில விஷயங்கள் முக்கியம். உதாரணத்திற்கு, ஒரு யூடியூப் விடியோ மில்லியன் பேர்கள் பார்த்தார்கள் என்றால், அது ஒரு சாதனை என்று கருதப்படுகிறது. உங்களது இணைத்தளத்தின் ஒவ்வொரு லட்சம் தரவிறக்கத்தையும் ‘சொல்வனம்’, ‘திண்ணை’, போன்ற தளங்களில் அறிவிக்க வேண்டும். ஒரு வளர்ச்சி எண்ணத்தை உருவாக்கினால், இன்னும் சில பேர் படிப்பார்கள். இதை சில வெகு ஜன தமிழ் ஊடகங்கள் இலவசமாக அனுமதிக்கலாம்.

நாங்கள் இன்னும் சிறப்பாக எப்படி செயல்படலாம்?

இதை முந்தைய கேள்விக்கு பதிலளிக்கையில் சொல்லியுள்ளேன்.

நன்றி

ரவி நடராஜன்.


Posted

in

by

ஆசிரியர்கள்: