அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நூலைப்பற்றிச்சொல்ல நூலின் தலைப்பே போதுமானது. புதிதாக என்ன கூறிவிட முடியும். தெருவிளக்குகள் போல தன் வாழ்க்கையின் பல்வேறு துயர்களுக்கிடையே தன்னால் முடிந்த விஷயங்களை சிந்திப்பதோடு அல்லாமல் அதை செயல்படுத்த முயற்சிக்கும் தன்னை எரித்தேனும் சிறிது இருளையாவது போக்க முயலுமா என்று முயற்சிக்கும் உண்மையான தூய ஆத்மாக்கள் இவர்கள்.
இந்நூலிற்கான கட்டுரைகளை ஆக்கத்தலைமையாளர் தேர்ந்தெடுத்தார். இவற்றை அவர் உட்பட பலரும் மொழிபெயர்த்துள்ளோம். மனிதர்கள் மேல் அன்புகொண்ட, மனித வாழ்க்கை மேல் அக்கறையும், ஆதுரமும் கொண்ட இக்கட்டுரையிலுள்ள அந்த மனிதர்களின் செயல்களைத்தான் நாம் கவனம் செலுத்திப்பார்க்க வேண்டும். இந்தக்கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளியிட்ட கோமாளி மேடை வலைப்பூ நண்பர்களுக்கு என்றும் எங்களன்பு.
வாசியுங்கள்.நன்றி!
அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,
வின்சென்ட் காபோ
ஜோ ஃபாக்ஸ்
பதிப்பாளர் உரை
இந்த நூலிற்கான மொழிபெயர்ப்பினை பல்வேறு சூழ்நிலைகளில் செய்யவேண்டி இருந்தது. அதனால் சில கட்டுரைகளில் அது எங்கிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டது என்ற நாளிதழின் தேதி இல்லாமல் போய்விட்டது. பிழை பொறுத்துக்கொள்ளுங்கள். அடுத்தமுறை சரியாக இருக்க முயற்சிக்கிறோம். இந்த கட்டுரைகளுக்கான விதை 2008ல் வெளிவந்த இந்தியா டுடேவின் மாற்றத்தின் முன்னோடி என்ற இதழிலிருந்துதான் தொடங்குகிறது. அந்த மனிதர்களின் செயல்பாடுகளைப்போல உழைக்கும் பலரையும் அறிமுகப்படுத்த முயலும் எளிய முயற்சிதான் இது.
இதற்கான ஊக்கத்தை தந்த திரு. இரா .முருகானந்தம், எழுத்தாளர் ஸ்ரீராம், அறச்சலூர் ப்ரகாஷ் பொன்னுசாமி, வெள்ளோடு மெய்யருள், மரு. வெ. ஜீவானந்தம், செபியா நந்தகுமார், ஃப்ரீ தமிழ் இபுக்ஸ் இணையதள நண்பர் சீனிவாசன் அவர்களின் தலைமையிலான குழு மற்றும் இதற்கான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்த சிவராஜ் அவர்களையும் மறக்க முடியாது.
மனிதன் என்பவன் தீமையும், வன்முறையும் கொண்டவன் என நான் நம்பவில்லை. மாற்றத்திற்கான விஷயங்கள் அவ்வளவு எளிதில் நமது சமூகத்தில் நடைபெற வாய்ப்பில்லை; என்றாலும் அதற்கான எந்த முயற்சிகளும் இன்றுவரை தொய்வடையவில்லை. இதற்கான கட்டுரைகள் எழுதிய செய்தியாளர்களுக்கு நன்றி என்ற ஒரு சொல் போதாது. அவர்களின் பெயர்கள் கட்டுரையில் தக்க மரியாதையுடன் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எந்த நாளிதழின் கட்டுரைகள் பயன்படுத்தப்பட்டதோ அந்த பத்திரிகைகளின் பெயர்கள் கட்டுரைகளின் கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நன்றி!
ப்ரியங்களுடன்
அன்பரசு சண்முகம்
நூல் அறிமுக உரை
இந்நூலில் மொத்தம் பதினெட்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன என்றால் சமூகத்திற்கான தனிமனித பங்களிப்பு என்ற வகையில் உள்ளது. தனி மனித பொருளாதாரம், குடும்பம் என்று பல சுழல்காற்றுகளிடையே இந்த பதினெட்டு கட்டுரைகளிலும் உள்ள மனிதர்கள் தங்கள் மனதின் உள்ளொளியை அணையவிடவில்லை. சமூகத்திற்கு பயன்படும் வகையில் பல பொருட்களை உருவாக்கியிருக்கிறார்கள். இவை அனைத்தும் சுயமான அகத்தூண்டுதலினால் நிகழ்ந்துள்ளன என்பதை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது.
தனக்கு ஏற்படும் ஒரு பிரச்சனைக்கான தீர்வாக ஒன்றைத் தேடும்போது பலரும் அதே பிரச்சனைக்கான தீர்வுகளைத் தேடி அலைந்துகொண்டிருப்பது கண்டு நிலைமையைப் புரிந்துகொண்டு தான் கண்டுபிடித்த பொருளை சமூகத்திற்கானதாக மாற்றுகிறார்கள். இப்படித்தான் சாதாரண மனிதன் சமூகத்தைப் புரிந்துகொண்டு செயலாற்ற முடியும். எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் இதுபோன்ற மனிதர்கள் ஒரு பார்வையில் தன்னையொத்த மனிதர்களுடன், ஆத்மாக்களுடன் இணைந்துவிடுவார்கள்.
வீடு என்ற பாதுகாப்பான இடத்திலிருந்து வெளிவந்த பின்தான் தெருவில் விளக்கு இல்லாதது, வெளிச்சம் இல்லாதது நமக்கு நினைவு வருகிறது. இவர்கள் தங்களின் வாழ்வையே பலரது ஏளனத்திற்கும், கிண்டலுக்கும், நக்கல் சிரிப்புக்கும் பணயமாக வைத்து இன்றும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இறுதிக்கட்டுரையான ஒடிசாவின் ஐன்ஸ்டீன் கட்டுரையில் பண்டா தனது இயந்திரங்கள் உருவாக்கும் ஆர்வத்திற்காக தனது மனைவியின் நகைகளையே விற்றிருக்கிறார் என்பதை படிக்கும்போது என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. தோழர்களே! நமது தேசம் இயங்குவது இது போன்ற தன்னை எரித்து பிறருக்கு வெளிச்சம் மனிதர்களால்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த கட்டுரைகளைப் படியுங்கள். உதவும் எண்ணம் இருக்கிறவர்கள் அதை தங்கள் பையில் உள்ள பணமாக கருத வேண்டியதில்லை. தங்கள் அறிவாக கூட கருதலாம். இன்று நாம் பெறும் பல உரிமைகள், வசதிகள் இவர்கள் போன்றவர்களால்தான் கிடைத்தது. அர்ப்பணிப்பும், நேர்மையும், திட்டமும் கொண்ட உழைப்பு இல்லாமல் இவை சாத்தியமேயில்லை என்பதை இக்கட்டுரைகளைப் படித்தவுடன் உணருவீர்கள். நன்றி.
அன்புடன்,
கார்த்திக் வால்மீகி
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “Street Light” Streetlight.epub – Downloaded 5719 times – 569.59 KB
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “StreetLight” streetlight.mobi – Downloaded 3166 times – 1.34 MB
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “Street Light” streetlight_CustomA4.pdf – Downloaded 5919 times – 330.34 KB
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “Street Light” streetlight_6inch.pdf – Downloaded 3648 times – 475.90 KB
புத்தக எண் – 125
டிசம்பர் 19 2014
Leave a Reply