
ஏற்காடு இளங்கோ
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
உருவாக்கம்: ஏற்காடு இளங்கோ
மேலட்டை உருவாக்கம்: ஜெகதீஸ்வரன் நடராஜன்
மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
ஆரோக்கியத்துடன் பிறந்து,ஆரோக்கியத்துடன் வாழ்பவர்களால்தான் எதையும் சாதிக்க முடியும் எனக் கருதுவது தவறு.ஒருவரை ஊக்கப்படுத்துவதன் மூலமும்,தன்னம்பிக்கையுடன் வளர்ப்பதன் மூலமும் மற்றவர்கள் செய்ய அஞ்சும் சாதனைகளைக் கூட செய்து முடிக்க முடியும்.பெரும்பாலான மக்கள் செய்யத் தயங்கும் சாதனைகளை சாதித்துக் காட்டியவர் ஜெசிக்கா காக்ஸ்.இவர் பிறவியிலேயே இரு கைகளும் இல்லாமல் பிறந்தவர்.இவர் பல சாதனைகளை தனது கால்கள் மூலம் செய்து மற்றவர்களை ஆச்சரியம் அடையச் செய்துள்ளார்.இவர் டேக்வாண்டோவில் இரண்டு கருப்பு பெல்ட்டுகளைப் பெற்றுள்ளார்.தனது சொந்தக் காரை கால்களால் தினமும் ஓட்டிச் செல்கிறார்.அத்துடன் மேலும் ஒரு உலக சாதனையாக விமானத்தையும் ஓட்டிக்காட்டி,விமானம் ஓட்டுவதற்கான உரிமத்தையும் பெற்றுள்ளார்.
வேதனையால் துவண்டுக்கிடக்கும் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் உற்சாகத்தையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஜெசிக்கா காக்ஸ் ஊட்டி வருகிறார். அவர் ஒரு இளம் பெண். பல்வேறு சாகசங்களைப் புரிந்து பல்துறை வித்தகராக விளங்குகிறார். இவரை வீரப்பெண் என்றும், அபூர்வப்பெண் என்றும் பலர் புகழ்கின்றனர். இவரின் சாதனைகள் நமக்கு உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டும். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன்.
இப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்த என் மனைவி திருமிகு. இ. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமிகு. செ. நமசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் எனது நன்றி. இந்தப் புத்தகத்தை மின் நூலாக வெளியிட்ட FreeTamilEbooks.com குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துகளுடன்…
– ஏற்காடு இளங்கோ
Download free ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “விமானம் ஓட்டிய கைகள் இல்லாப் பெண் epub” vimanam-ottiya-kaigal-illa-pen.epub – Downloaded 6772 times – 1.02 MB
கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “விமானம் ஓட்டிய கைகள் இல்லாப் பெண் A4 PDF” vimanam-ottiya-kaigal-illa-pen-A4.pdf – Downloaded 10843 times – 7.59 MB
செல்பேசிகளில் படிக்க
Download “விமானம் ஓட்டிய கைகள் இல்லாப் பெண் 6 Inch PDF” vimanam-ottiya-kaigal-illa-pen-6-inch.pdf – Downloaded 17068 times – 7.50 MB
புத்தக எண் – 95
ஜூலை 14 2014





Leave a Reply