தானியங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
உருவாக்கம்: ஏற்காடு இளங்கோ
மேலட்டை உருவாக்கம்: ஜெகதீஸ்வரன் நடராஜன்
மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
ஒருங்குறி ஆக்கம் – மு.சிவலிங்கம்
தானியத்தை கிராமப்புறங்களில் ‘தவசம்’ என்றே அழைக்கின்றனர். புல் குடும்பத்திலிருந்து கிடைக்கக்கூடிய விதைகளைத்தான் தானியம் என்கின்றோம். இவ்விதை உண்மையில் கனியேயாகும். ஒரே விதையும், அதனைத் சூழ்ந்து கனிச் சுவரும் இருக்கும். கனிச் சுவர் உமியாலும் மூடப்பட்டு இருக்கும். இது போன்ற கனியை காயாப்ஸிஸ் (caryopsis) என்பர். இதனை தானியம் என்றும் அழைக்கலாம்.
பழங்கால மனிதன் விலங்குகளை வேட்டையாடி உணவாக உண்டு வந்தான். அதுமட்டும் அல்லாமல் கிழங்கு, பழங்கள், கொட்டைகள் ஆகியவற்றையும் உண்டான். மேலும் காட்டுப் புல் விதைகளில் சுவையானதை உணவாக எடுத்துக் கொண்டான். சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பே தானியங்களை கல் கருவிகளைக் கொண்டு அரைத்துச் சாப்பிட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவர்கள் தானியங்களை அரைக்கப் பயன்படுத்திய கருவிகள், தொல்பொருள் ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காட்டுமிராண்டியாக, நாடோடி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த மனிதன், ஓரிடத்தில் நிலையாகத் தங்குவதற்கு அடிப்படையாக உதவி செய்தது தானியம்தான். மனிதன் விவசாயத்தைத் துவக்கியபோது முதன்முதலில் பயிர் செய்யப்பட்டவை தானியங்கள்தான். புல்லின் விதைகள்தான் முதன்முதலில் வீட்டுப் பயிராக மாறின. தனக்கு உணவாகக்கூடிய புல் விதைகளைக் கண்டுபிடித்து, அதனைப் பயிர் செய்யவும் கற்றுக் கொண்டான். தனக்கும் தன் விலங்குகளுக்கும் தேவையான தானியத்தை உற்பத்தி செய்ததன் மூலம், உணவைத் தேடுவதை விட்டுவிட்டான். இதனால் இவனுக்கு ஓய்வு கிடைத்தது. மனிதன் சமூகமாக வாழக் கற்றுக் கொண்டான். நாகரீகம், கலாச்சாரம் அறிவியல் போன்றவை வளர்வதற்கு அடிப்படையே, தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டதுதான்.
தானியங்கள்தான் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரதான உணவாக உள்ளன. தானியம் இல்லை என்றால் மக்கள் வாழ்வது சிரமம்தான். உலகில் தானிய உற்பத்தி குறைந்தால் பசியும், பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்தாடும். உலகில் பாதி மக்கள் சோறு சாப்பிட்டு வயிற்றை நிரப்புகிறார்கள். மீதி பேர் ரொட்டியைச் சாப்பிட்டு வயிற்றை நிரப்புகிறார்கள். தானியங்கள்தான் மனித இனத்திற்கு அதிக சக்தியைக் கொடுக்கின்றன. உலகில் மனிதனுக்கு 65 சதவீத கலோரி தானியம் மூலமே கிடைக்கிறது. கிழக்கு மற்றும் தெற்கு ஆசியாவில் வாழும் மக்களுக்கு 80 சதவீதமும், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு 70 சதவீத கலோரிகள் தானியங்கள் மூலமே கிடைக்கிறது. உலகில் 70 சதவீத நிலப்பரப்பில் தானியங்கள் விளைகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
Download free ebooks
ஆன்டிராய்டு (FBreader app), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “தானியங்கள் epub” thaniyangal1.epub – Downloaded 23126 times – 8.94 MB
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “தானியங்கள் mobi” thaniyangal1.mobi – Downloaded 3586 times – 16.03 MB
கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “தானியங்கள் A4 PDF” thaniyangal-a41.pdf – Downloaded 27652 times – 10.28 MB
செல்பேசிகளில் படிக்க
Download “தானியங்கள் 6 Inch PDF” thaniyangal-6-inch1.pdf – Downloaded 7450 times – 10.21 MB
புத்தக எண் – 80
சென்னை
ஜூன் 15 2014
Leave a Reply