கணியம் அறக்கட்டளை அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2019, ஜனவரி 2020 மாத அறிக்கை
தொலை நோக்கு – Vision
தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்
பணி இலக்கு – Mission
அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.
நிகழ்ச்சிகள்
மதுரையில் மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை – டிசம்பர் 01, 2019 http://www.kaniyam.com/workshop-on-ebook-making-at-madurai/
தமிழ்ப்புலவர் தளத்தின் மூல நிரல் வெளியீட்டு விழா http://www.kaniyam.com/event-notes-on-releasing-source-code-of-tamilpulavar-org/
1000 மின்னூல்கள்
1000 மின்னூல்களை ஒருங்குறி வடிவில் வாங்குவதற்கான நன்கொடை வேண்டுகோள் இங்கே – http://www.kaniyam.com/call-for-donation-to-buy-1000-books-in-unicode-format/
ஒரு இனிய செய்தி
கனடாவில் உள்ள டொரன்டோ பல்கலைக்கழகம் (UTSC) , மின்னூல்களுக்கான மொத்த தொகையையும் நன்கொடையாக அளித்துள்ளது. ஈடாக, அனைத்து நூல்களையும் குறுகிய காலத்தில், epub, mobi, PDF, HTML, txt, odt வடிவங்களில் மாற்றி,அட்டைப்படம் சேர்த்து, விரைவில் வெளியிட வேண்டும். இதற்கான முழுநேரப் பணியாளர்கள் தேர்ந்தெடுத்தல், மின்னூலாக்கப் பயிற்சிகள், ஆவணங்கள், காணொளிகள், கணியம் – டொரன்டோ பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், மின்னூல்களை பொதுக்கள உரிமையில் வெளியிடுவதற்கான அறிவிப்பு ஆவண உருவாக்கம் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கான பொது அறிவிப்பு – தமிழ்மண் பதிப்பகத்தின் 1000 மின்னூல்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் அறிவிப்பு
3-4 முழுநேரப் பணியாளர்கள் நியமிக்க உள்ளதால், அவர்களுக்கான ஊதியம், இதர செலவுகளுக்கான நன்கொடைகளை வரவேற்கிறோம்.
இத்திட்டத்திற்கு தொடர்ந்து நன்கொடை அளித்து வரும் அனைவருக்கும் நன்றிகள்.
செயல்கள்
எண் | செயல்கள் | இந்த மாதம் | மொத்தம் | இம்மாதம் பங்களித்தோர் |
---|---|---|---|---|
1 | FreeTamikEbooks.com வெளியீடுகள் | 14 | 595 | லெனின் குருசாமி – சூரியா – த.சீனிவாசன் – இராஜேஸ்வரி |
2 | கணியம் கட்டுரைகள் | 67 | 1020 | கலீல் – து.நித்யா – ச.குப்பன் – இரா. அசோகன்- முத்து |
3 | கணியம் காணொளிகள் | 5 | 61 | கலீல் |
விக்கிமூலம்
விக்கிமூலத்தில் கணியம் திட்டத்துக்கென ஒரு பக்கம் உருவாக்கப்பட்டது. அதில் திட்டத்தின் குறிக்கோள்கள், பங்களிப்போருக்கான வழிகாட்டுதல்கள் எழுதப்பட்டன. இது வரை 9 பேர் இணைந்துள்ளனர். 36 மின்னூல்கள் முழுமையாக மெய்ப்பு பார்க்கப்பட்டு, சரி பார்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளன. மேலும் 12 மின்னூல்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளன. விரைவில் அவை சரி பார்க்கப்படும். மின்னூல்களின் பட்டியல் இங்கே எழுதப்படுகிறது.
காண்க https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:கணியம்_திட்டம்
கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியீடுகள்
MS உதயமூர்த்தி அவர்களின் படைப்புகளை கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட அனுமதி பெற்றுள்ளோம். விரைவில் உரிய ஆவணங்களை வெளியிடுவோம்.
கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் பலரும் தமது படைப்புகளை வெளியிடக் கோரி, உதவி வரும் அன்வர், கலீல் ஜாகீர் இருவருக்கும் நன்றி
மென்பொருட்கள்
- [Tesseract OCR மென்பொருளை பைதான் உதவியுடன் தானியக்கமாக்கல்] (https://github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/94)
- கூகுள் படிவம், கிட்ஹப் இணைப்பு
https://forms.gle/4yHiS2uSgH5haTCW7 இந்த படிவம் உருவாக்கி கிட்ஹப் உடன் இணைத்துள்ளோம். இங்கு புது மின்னூல்களுக்கான விவரங்களை நிரப்பினால், அவை தாமாகவே https://github.com/KaniyamFoundation/Ebooks/issues/ இங்கு பகிரப்படும்.
மின்னூல்களை வருட குறைந்த விலை வருடிப்பெட்டி செய்தல் Low cost ScanBox
மின்னூல்களை வருட குறைந்த விலை வருடிப்பெட்டி ஒன்று செய்துள்ளோம். https://github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/73 இதன் மூலம் எளிதாக, மொபைல் கொண்டே நூல்களை ஒளி வருடல் செய்யலாம்.
பெயர்ச்சொற்களைத் தொகுத்தல்
தமிழின் அனைத்து பெயர்ச்சொற்களையும் தொகுக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். விவரங்கள் இங்கே
இந்த விரிதாளில் https://docs.google.com/spreadsheets/d/1FqiFLstsTo6DXsPKPKzp7iPKR49Ml2k81UPR6Nq6inQ/edit?usp=sharing மொத்தம் 90,811 பெயர்ச்சொற்கள் சேர்க்கப் பட்டுள்ளன. அயராது இப்பணிக்கு பங்களிக்கும் திவ்யா அவர்களுக்கு நன்றி.
OpenStreetMap.org சொற்களை தமிழாக்கம் செய்தல்
OpenStreetMap.org ல் சென்னையில் உள்ள இடங்களை தமிழாக்கம் செய்யும் திட்டம் இது. இதன் செயல்களை இங்கே காணலாம்.
பங்களிப்போர் – அனிதா, அருணாசலம், இராமன்
Scan, OCR, Proofread
எழுத்தாளர்கள் தம் படைப்புகளை கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் தரும்போது, பலரும் அச்சு நூலாகவோ அல்லது PDF ஆகவே தருகின்றனர். அவற்றை, Scan, OCR, Proofread செய்து மின்னூலாக வெளியிடும் பணிகளைத் தொடங்கியுள்ளோம். தாரா அவர்கள் முழுநேரப் பணியாளராக இணைந்துள்ளார்.
பங்களிப்போர் – அன்வர் (நூல்களைப் பெறுதல்), லெனின் குருசாமி (Scan), அன்வர் (OCR), தாரா (Proofread)
இதுவரை 2600 பக்கங்கள் இதுவரை மெய்ப்பு பார்க்கப் பட்டுள்ளன. திட்டத்தின் செயல்பாடுகளை இங்கே காணலாம்.
வன்பொருள் நன்கொடைகள்
- 2 மடிக்கணினிகள் – டேவிட் ராஜாமணி
- 1 டேப்லட் – டேவிட் ராஜாமணி
- 1 ஐபோன் – டேவிட் ராஜாமணி
- 2 கிண்டில் – விஜயகுமார்
- வருடிப் பெட்டி – சீனிவாசன்
- DSLR D70S கேமரா – சீனிவாசன்
- 1 மடிக்கணினி – பேரா, பார்த்தசாரதி
- 1 மடிக்கணினி – நித்யா
மேலும் விவரங்களுக்கு காண்க – https://github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/84
புதிய திட்டங்கள்
பல்வேறு புதிய திட்டங்களுக்கான உரையாடல்களை இங்கே பதிந்து வருகிறோம். https://github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues
அவற்றுல் சில.
- கிண்டில் செயலியில் இருந்து மேற்கோள்களைப் பகிரும் ஆன்டிராய்டு செயலி
- கல்வெட்டு எழுத்துணரி
- Tesseract OCR – Windows version with GUI
- கலைக்களஞ்சியங்களை ஆவணப் படுத்துதல்
- epub ல் இருந்து HTML தளங்களை உருவாக்குதல்
- Samuel Fisk Green தமிழில் எழுதிய மருத்துவ நூல்கள் தேடுதல்
இம்மாத நன்கொடையாளர்கள்
எண் | பெயர் | தொகை |
---|---|---|
1 | பெயரிலி | 2200 |
2 | கொண்டசாமி ஜெயராமன் | 2,000 |
3 | அமேசான் மின்னூல் விற்பனை | 460 |
4 | ச. குப்பன் | 10,000 |
5 | தமிழரசன் சேது | 5,000 |
6 | கேரி தமிழ்ப்பள்ளி, வட கரோலினா, அமெரிக்கா | 1,54,000 |
7 | முருகன் | 500 |
8 | நாராயணன் | 200 |
9 | இரா. கதிர்வேல் | 200 |
10 | சே. அருணாசலம் | 200 |
11 | சரவண குமார் | 1,000 |
12 | அருண் ஐசக் | 1,000 |
13 | செல்வன் பச்சமுத்து | 35,580 |
14 | வேத வேடையன் | 7,116 |
15 | நிர்மல் பழனிசாமி | 1,420 |
16 | மதன் குமார் | 1 |
மொத்தம் – ரூ 2,20,877
இணைய வளங்கள் நன்கொடைகள்
- நூலகம் அறக்கட்டளை – சர்வர் (ரூ 350/மாதம்)
- E2E Networks – சர்வர் ( ரூ 730/மாதம்)
================================
செலவுகள்
- தாரகேஸ்வரி 32000 மெய்ப்பு பார்த்தல்
- விழுப்புரம் மென்பொருள் விடுதலை விழா நன்கொடை 5000
- நிரல் திருவிழா உணவு 3000
- முத்து – பயிலகம் 600 Projector வாடகை
- முத்து – பயிலகம் 300 டீ
- தீபா அருள் 1170 விக்கி மூலம்
- முத்து லட்சுமி 1170 விக்கி மூலம்
- காளீஸ்வரி 4555 விக்கி மூலம்
- சசி 810 விக்கி மூலம்
- யசோதா 435 விக்கி மூலம்
- திவ்யா 545 விக்கி மூலம்
- ரமேஷ் 3040 விக்கி மூலம்
- அன்வர் 1500 பயணம்
மொத்த செலவுகள் – ரூ 54,125
மொத்தம் கையிருப்பு – ரூ 2,94,710
இந்த இணைப்பில் அனைத்து வரவு, செலவு விவரங்கள் பகிரப்படுகின்றன. https://docs.google.com/spreadsheets/d/1zBXZzjYP_WKfm4y3EpTYw5yOTOeA-sSp8mcNjjNAUe0/edit?usp=sharing
வங்கிக் கணக்கு விவரங்கள்
Kaniyam Foundation
Account Number : 606 1010 100 502 79
Union Bank Of India
West Tambaram, Chennai
IFSC - UBIN0560618
- உங்கள் நன்கொடைகளை இந்தக் கணக்குக்கு அனுப்பி, கணியம் அறக்கட்டளை செயல்களை ஆதரிக்க வேண்டுகிறோம்.
- நன்கொடைகளை அனுப்பியபின், உங்கள் பெயர்,நன்கொடை விவரங்களை [email protected] க்கு அனுப்ப வேண்டுகிறோம்.
மேலும் விவரங்களுக்கு எழுதுக – [email protected]