ஞயம்பட வரை – கட்டுரைப் போட்டி:
தமிழ் மொழியைப் போற்றிடவும், கொண்டாடிடவும் ப்ரதிலிபி மற்றும் அகம் மின்னிதழ் இணைந்து ஒரு கட்டுரைப் போட்டியை நடத்துகிறார்கள். “ஞயம்பட வரை” கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள சிறப்பு தகுதிகள் எதுவுமில்லை. தமிழை பிழையற்று எழுதத் தெரிந்தாலே போதுமானது.
இது இணையத்தில் நடத்தப்படும் போட்டி. கீழே உள்ள இணைப்பின் மூலம் உங்களை இப்போட்டிக்காக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். போட்டித் தேதி முடிவடைந்தவுடன் கட்டுரைகள் பரிசீலக்கப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். பரிசு வழங்கும் விழாவையும் சிறப்பாகச் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
போட்டியில் அகம் குழுமம் மற்றும் ப்ரதிலிபி குழுமத்தை சார்ந்தவர்களோ அல்லது அவர்களது உறவினர்களோ கலந்து கொள்ள இயலாது.
போட்டி விவரங்கள் :
அ) போட்டிக்கான தலைப்பு : “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?” – பதில் காண முயல்வோம்.
ஆ) கட்டுரைகள் 1500 வார்த்தைகளுக்கு மேலும், 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இ) உங்கள் கட்டுரைகளை Unicode வடிவில், MS- Word Document-ஆக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
ஈ) கட்டுரைகளுடன், உங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு, உங்கள் புகைப்படம், உங்கள் தொலைபேசி எண் ஆகியவற்றை அனுப்பி வைத்தால், உங்களுக்கான எழுத்தாளர் பக்கத்தை உருவாக்க உதவும்.
எ) கட்டுரைகளை [email protected] மற்றும் [email protected] ஆகிய இரண்டு முகவரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஏ) கட்டுரைகளை அனுப்ப வேண்டிய இறுதி நாள் – வரும் பொங்கல் வரை நீங்கள் கட்டுரைகளை அனுப்பலாம்.
தொடர்புக்கு: சங்கரநாராயணன் – 09789316700 ; பாலாஜி – 09940288001. நன்றி.
மேலும் விபரங்களுக்கு
www.pratilipi.com/event/gnayam-pada-varai
போட்டியில் கலந்து கொள்வது பற்றிய, வா.மணிகண்டன் எழுதிய இந்தக் கட்டுரையையும் படித்து விடுங்கள்.
http://www.nisaptham.com/2016/01/blog-post_6.html