திருமூலர் அருளிய அட்டாங்கயோகம்

திருமூலர் அருளிய அட்டாங்கயோகம்

(திருமந்திரத்தின் மூன்றாம் தந்திரம்)

விளக்க உரையுடன்

cover

 

Rie

[email protected]

அட்டைப்பட வடிவமைப்பு – ரய்

மின்னூல் ஆக்கம் – மணிமேகலை

 

வெளியீடு – Freetamilebooks.com

உரிமை –Creative Commons Attribution 4.0 International License

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

அறிமுகம்

உங்களால் தலை உச்சியின் மேல் கவனம் வைத்து தியானம் செய்து, அதில் கிடைக்கும் மகிழ்வை உணர முடிகிறதா? அந்த மகிழ்வை உணர்ந்தால் நீங்கள் வானுலகில் உள்ள தேவர்களை விட மேலானவர்கள் என்று திருமூலர் சொல்கிறார். வானுலகத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதை விட நமது உச்சியில் ஊறும் அமுது மேலானது. அவர்களால் அகத்தில் ஊறும் அமுதைக் கடைந்து எடுக்கும் வழி தெரியவில்லை, அதனால் புற உலகின் அமுதத்தை நாடினார்கள். தேவர்களுக்கும் தெரியாத அந்த வழியை, அகத்தியானம் செய்யும் முறையை, திருமூலர் நமக்குச் சொல்லித் தருகிறார்.

அட்டாங்கம் என்றால் எட்டு உறுப்புக்கள் என்று அர்த்தம். அட்டாங்க யோகத்தின் எட்டு உறுப்புக்கள் – இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவை ஆகும். இயமம் என்பது தீய எண்ணங்கள், தீய செயல்கள் ஆகியவற்றை விலக்குவது. ஒழுக்க நெறியை நாடி அதில் தொடர்ந்து நிற்பது நியமம். அடுத்து பயல வேண்டியது பல வகைப்பட்ட ஆசனங்கள். ஆசனங்கள் கற்ற பிறகு பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி. அடுத்த பாடம் பிரத்தியாகரம் என்னும் மனத்தை உள்நோக்கித் திருப்பும் பயிற்சி. உள் நோக்கித் திரும்பும் மனத்தை அங்கேயே நிலை நிறுத்தும் பயிற்சி தாரணை ஆகும். மனம் அகத்திலே நிலை பெற்றால் தியானப் பயிற்சி சாத்தியமாகும். தியானத்திலே நிலைபெறப் பயின்றால் சமாதி நிலை அடையலாம். சமாதி என்பது பூரண நிலை. நமது மூலாதாரத்தில் (குறிக்கு இரு விரல் அளவு கீழே) இருக்கும் குண்டலினி வடிவிலான சக்தி, நமது தலையின் உச்சியில் இருக்கும் சிவனைச் சென்று சேர்வது சமாதி நிலையாகும்.

இயமமும் நியமமும் இல்லாமல் மற்ற பயிற்சிகள் சாத்தியமில்லை.

சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே. – (திருமந்திரம் – 618)

இயமம், நியமம் முதலியவற்றைக் கடைப்பிடிப்பவர்களால் சமாதி வரை செல்ல இயலும். இயமம், நியமத்தில் ஆரம்பித்து சமாதி வரை சென்றவர்கள் அட்டமாசித்திகளை அடைவார்கள். இயமம் முதல் சமாதி வரையிலான அட்டாங்க யோகத்தில் நிலைத்து நிற்பவர்களே யோகத்தின் பூரண நிலையை அடைய முடியும்.

பிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு திருமூலரின் அட்டாங்கயோகம், இன்னும் சிறந்த அனுபவத்தை நோக்கி நகர உதவும். சிறு வயதில் நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரெண்டு அங்குல நீள அளவில் இயங்கும். வயது ஏற ஏற சுவாசிப்பின் நீளம் குறைகிறது. யோகப்பயிற்சியின் நோக்கம் சுவாசிப்பின்நீளத்தை மறுபடியும் பன்னிரெண்டு அங்குல நீளத்திற்கு கொண்டு வருவதாகும். முறைப்படி தொடர்ந்து பிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு கள்

உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம்பல் நீக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் என்று திருமூலர் சொல்கிறார். அரைகுறையாக பயிற்சி செய்யும் நானே இதை அனுபவ உண்மையாக உணர்கிறேன்.

யோகம் பயில்பவர்களுக்கு திருமூலர் சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறார். திருமூலரின் அட்டாங்கயோகத்தை வெறுமனே படிப்பதால் உபயோகம் இல்லை, பயிற்சியும் அவசியம். தொடர்ந்த பயிற்சியும், நமது குருநாதரான திருமூலரின் வழிகாட்டுதலும், நம் மனத்தையும் புத்தியையும் செம்மைப் படுத்தும். ஆன்மிகம் தவிர்த்துப் பார்த்தாலும் அட்டாங்கயோகப் பயிற்சி நம்மை இன்னும் சிறந்த மனிதனாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader),

ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “திருமூலர் அருளிய அட்டாங்கயோகம் epub” Attanga-Yoga-Taught-by-Thirumular.epub – Downloaded 40300 times – 500.31 KB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “திருமூலர் அருளிய அட்டாங்கயோகம் mobi” Attanga-Yoga-Taught-by-Thirumular.mobi – Downloaded 5887 times – 461.76 KB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “திருமூலர் அருளிய அட்டாங்கயோகம் A4 PDF” Attanga-Yoga-Taught-by-Thirumular-A4.pdf – Downloaded 47294 times – 602.12 KB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “திருமூலர் அருளிய அட்டாங்கயோகம் 6 inch PDF” Attanga-Yoga-for-kindle1.pdf – Downloaded 10607 times – 342.76 KB

 

புத்தக எண் – 167

மே 17 2015

 


Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

5 responses to “திருமூலர் அருளிய அட்டாங்கயோகம்”

  1. GOVINDHARAJ.R.C Avatar
    GOVINDHARAJ.R.C

    அட்டாங்க யோகம் மபுக்

  2. NATARAJAN Avatar

    Thirumoolar aruliya asthangayogam book is not able to download. Please send me a copy to [email protected] Thanks in advance

  3. Ram Avatar
    Ram

    Thirumoolar aruliya asthangayogam book is not able to download. Please send me a copy to [email protected] Thanks in advance

  4. Selvi Avatar
    Selvi

    Thirumoolar aruliya asthangayogam Book is not able to download.please send me a copy to
    [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.