அப்பாவி விஷ்ணு

AV
இது , முழுக்க முழுக்க த் தூக்கலாக இருக்கும் மின்னூல் .
இந்த நூலில்  அறிமுகமாகும்  ராசி- விஷ்ணு  தம்பதி   என் கற்பனைக் கதாபாத்திரங்கள். அதில்  ராசி செய்யும் அட்டகாசங்களுக்கு, ஈடு   கொடுக்கும் விஷ்ணுவைப்  பரிதாபத்துக்குரியவராய்  சித்தரித்திருக்கிறேன். நீங்கள் ,உங்களையே கூட அந்தத் தம்பதிகளின் இடத்தில் சில சமயங்களில்  பொருத்திப்  பார்ப்பதை  தவிர்க்க முடியாது.
ராசி, விஷ்ணு தம்பதி மட்டுமல்ல  , ராசி செய்யும் அலம்பலக்ளும் கற்பனையே! விஷ்ணு ,ராசியிடம் மாட்டிக் கொண்டு தவிப்பதை நீங்கள்  ரசித்துப் படித்து விட்டு  ,வாய்விட்டு சிரிக்காமல் இருக்க மாட்டீர்கள்.
அதனாலேயே இந்த நூலிற்குப் பெயர்  ” அப்பாவி விஷ்ணு ” என்று பெயரிட்டிருக்கிறேன்.ஆணாதிக்கம், பெண்ணியம் என்கிற எந்த சிந்தனைக்குள்ளும்   இவர்கள் இருவரையும்  நான் சிறைப்படுத்தவில்லை. ஜாலியாக உலவ விட்டிருக்கிறேன். படிப்பவர்களுக்கு விஷ்ணு அப்பாவியாகத் தோன்றலாம். அவ்வளவே.,ராசி விஷ்ணுவை  எவ்வளவு சங்கடப்படுத்தினாலும்  ராசிஅவரின் காதல் மனைவி. இவர்கள் இருவரின் லூட்டியும் இந்த நூலுடன் முடிந்து விடவில்லை.
இந்த மின்னூல் ஒரு ஆரம்பமே. இவர்களின்  அட்டகாசங்கள்  தொடர்ந்து  வெளியிட ஆசை. அதற்காக உங்களின் மேலான ஆதரவை  எதிர் நோக்குகிறேன்.
இந்த நூல் வெளியாக உதவிய திரு. சீனிவாசன் அவர்களுக்கும் ,free tamil ebooks teamஇல்  இருக்கும் அத்துணை பேருக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
நன்றி.
ராஜலட்சுமி பரமசிவம்

ஆசிரியர் – ராஜலட்சுமி பரமசிவம்

அட்டைப் படம் – மூலம் – http://www.flickr.com/photos/zooboing/5583655546/sizes/o/in/photostream/

அட்டைப் படம் – வடிவமைப்பு – ப்ரியமுடன் வசந்த் vasanth1717@gmail.com
மின்னூலாக்கம் – ஸ்ரீனிவாசன்

வெளியீடு – FreeTamilEbooks.com

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

Download free ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “அப்பாவி விஷ்ணு epub” appavi-vishnu.epub – Downloaded 9436 times – 1,019.14 KB

கிண்டில் கருவிகள், செயலிகளில் படிக்க
Download “அப்பாவி விஷ்ணு mobi” appavi-vishnu.mobi – Downloaded 3086 times – 2.05 MB

களில் படிக்க, அச்சடிக்க
Download “அப்பாவி விஷ்ணு A4 PDF” appavi-vishnu-a4.pdf – Downloaded 28470 times – 2.54 MB

செல்பேசிகளில் படிக்க
Download “அப்பாவி விஷ்ணு 6 Inch PDF” appavi-vishnu-6-inch.pdf – Downloaded 3857 times – 2.63 MB

கூகுள் பிளே புக்ஸ் – இல் படிக்க

google-play-books-image

புத்தக எண் – 45

சென்னை

மார்ச்சு 22, 2014

மேலும் சில சிறுகதைகள்

  • மனஓசை – சிறுகதைகள் – சந்திரவதனா
  • புது மெருகு – சிறுகதைகள் – கி. வா. ஜகந்நாதன்
  • நடிக்கப் பிறந்தவள் – சிறுகதை – நிர்மலா ராகவன்
  • நகுலனின் நாய் – சிறுகதைகள் – அரவிந்த் சச்சிதானந்தம்

ஆசிரியர்கள்:

Comments

6 responses to “அப்பாவி விஷ்ணு”

  1. RajalakshmiParamasivam Avatar
    RajalakshmiParamasivam

    இந்த மின்னூலை உருவாக்கித் தந்த திரு. சீனிவாசன் அவர்கள் குழுவினர் அனைவருக்கும், அட்டைபட உருவாக்கம் செய்த திரு. ப்ரியமுடன் வசந்த் அவர்களுக்கும் என் நன்றிகள்.

  2. VAI. GOPALAKRISHNAN Avatar
    VAI. GOPALAKRISHNAN

    நூல் வடிவம் …… அதுவும் மின்னூல் வடிவம் பெற்றமைக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள். மகிழ்ச்சிகள்.

  3. Vetha.Langathilakam. Avatar
    Vetha.Langathilakam.

    மின்னூல் வடிவம் பெற்றமைக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள். மகிழ்ச்சிகள்

  4. அருள்மொழிவர்மன் Avatar
    அருள்மொழிவர்மன்

    அருமையான, யதார்த்தமான, நகைச்சுவைப் பதிவுகளின் தொகுப்பு!

    ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்..ஆசிரியரிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.