நான் ஏன் மே பதினேழு இயக்க உறுப்பினரில்லை? – உமர்

மே 17 இயக்கத்தின் தோழர்களுக்கு,

வணக்கம்.

 1. நான் உமர். ஜூன் 2011 முதல் ஆகஸ்ட் 25, 2014 வரை தங்கள் இயக்கத்தில் உறுப்பினராய் இருந்தவன். ஒருங்கிணைப்பாளராகவும் செயலாற்றியவன். நான் தங்கள் அமைப்பை விட்டு விலகிய போது, நான் பதிவிட்ட காரணம் தவிர வேறு சில காரணங்களும் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் நான் அவற்றை இதற்கு முன் பகிர்ந்து கொண்டதில்லை. தற்பொழுது, உங்களிடம் அவற்றைப் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்தக் கடிதம்.

 2. முதலில் சிலரிடம் மன்னிப்பு கோர விரும்புகின்றேன். 09/03/2014 அன்று பெங்களுருவில் புதிதாக சந்தித்த தோழர்கள் சுஜய் [1], பிரேம் [2], சுந்தரவதனன் [3] உள்ளிட்ட தோழர்களிடம் எவ்வித நிபந்தனைகளுமற்ற மனப்பூர்வமான மன்னிப்பினை கோருகின்றேன். ஏன் என்பதற்கான காரணத்தினை இந்தக் கடிதத்தை முழுமையாக வாசித்த பின்பு அறிந்து கொள்வீர்கள். (புரிதலுக்காக ஒவ்வொரு பத்திக்கும் எண்கள் இட்டிருக்கின்றேன் - சதுர அடைப்புக்குறிகளுக்குள் இருக்கும் எண்களுக்கான சுட்டிகள் கடிதத்தின் முடிவில் இருக்கின்றன.)

 3. ஒருமுறை தி.நகர் சுப்புலட்சுமி பள்ளியில், மதியம் 2 மணிக்கு, மே பதினேழு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்பொழுது வகுப்பறைக்குள் நுழைந்த தோழர்விவேக் [4], முன்வரிசையில் அமர்ந்திருந்த திருமுருகனை [5], பார்த்தவுடன் It is a Medical Miracle” என்று கூறினார். பலரும் சிரித்தனர். விவேக் ஏன் அப்படி கூறினார் என்பதும், மற்றவர்கள் ஏன் சிரித்தனர் என்பதும் உங்களுக்குத் தெரியும். கூட்டங்களுக்கு சரியான நேரத்தில் வரும் பழக்கம் திருமுருகனுக்கு கிடையாது; அன்று சரியான நேரத்திற்கு வந்திருந்தார் என்றதும் விவேக் அதனை கிண்டல் செய்திருந்தார். அன்றைய கூட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் நான் திருமுருகனிடம் கூட்டங்களுக்கு நேரத்திற்கு வர வேண்டியதின் அவசியம் குறித்து பேசியிருந்தேன். தான் காலம் தாழ்த்தி வருவதனால் அங்கு இருக்கும் தோழர்கள் ஒருவருக்கொருவர் நன்கு பழகி, தோழமை உணர்வை வளர்த்துக் கொள்ள முடியும்; அதனால் தான் நான் தாமதமாக வருகிறேன் என்று திருமுருகன் கூறினார். இப்படித் தான் தமது அமைப்பில் இருக்கும் தோழர்கள் நல்ல தோழமை உணர்வுடன் இருக்க வேண்டும் என்று திருமுருகன் விரும்பினார்.

 4. இப்படியாகச் சென்று கொண்டிருந்த மே பதினேழு இயக்கத்தின் பயணத்தில், நான் வெளியேறும் முடிவை எடுத்தது ’புலிப்பார்வை’ திரைப்படம் தொடர்பாக நடைபெற்ற சில நிகழ்வுகளின் அடிப்படையில் என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்பொழுது நடைபெற்றவை சீமான் மற்றும் வைகோ தொடர்பான நிலைப்பாடுகள் என்பதை விடவும் புலிப்பார்வை திரைப்படம் தமிழீழ விடுதலைக்கு எதிரான காய்நகர்த்தல் என்பதை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது. அதனால் அத்திரைப்படத்தின் பேசுபொருளை முதலில் பார்ப்போம்.

  பகுதி 1. நான் வெளியேறிய நிகழ்வு
  1.1 புலிப்பார்வை பெயரில் மேற்கொள்ளப்பட்ட War of Perception.

 5. பாலச்சந்திரன் படுகொலையை மையமாக வைத்தே இந்த புலிப்பார்வை திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பாலச்சந்திரன் படுகொலை குறித்த உண்மை சம்பவங்களை முதலில் பார்ப்போம். பலமுறை உங்களிடம் நான் சொல்வது தான், சர்வதேச நகர்வுகளில் தேதிகளும் நேரங்களும் மிக மிக முக்கியமானவை என்று. இங்கும் நாம் அதிலிருந்தே தொடங்குவோம் பாலச்சந்திரன் உயிருடன் இருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்ட நேரம் 2009 மே 19 ஆம் தேதி காலை 10:14 மணி.


 6. பாலச்சந்திரன் உயிரற்ற சடலமாக இருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்ட நேரம் 2009 மே 19 ஆம் தேதி பிற்பகல் 12.01 நிமிடம். இந்த தகவல்கள் புகைப்படத்தில் இருக்கக் கூடிய Meta Data (EXIF Data) வில் இருந்து தெரிந்துக் கொண்ட தகவல்கள். [6], . இது ஒரு மிக முக்கியமான ஆதாரமாக EXIF Data எடுத்துக் கொள்ளப்படும்.

 7. பாலச்சந்திரன் 19 ஆம் தேதி தான் கொல்லப்பட்டார். 19 ஆம் தேதி காலை உயிருடன் இருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் இவை. அதற்கு முன்பு 18 ஆம் தேதி அன்று நடந்த ஒரு விடயத்தை பார்ப்போம், இலங்கை அரசு போர் முடிவுற்று விட்டது என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கின்றது.[7] இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏற்று ஐ.நாவும் Noon Briefing என்று சொல்லப்படும் மதிய சந்திப்பில் இதனை அறிவிக்கின்றது.[8], [9], [10]அதாவது நியூயார்க்கில் 18 ஆம் தேதி பகல் 12 மணி என்பது இலங்கையில் 18 ஆம் தேதி இரவு 11.30 அளவிற்கு வரும். ஆக சர்வதேச அளவில் ஐ.நா வும் மற்ற நாடுகளும் போர் முடிவுற்று விட்டது என்று அறிவித்த பின்பு தான் பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருக்கின்றார்.

 8. அதன் அடிப்படையில் பார்க்கும் போது பாலச்சந்திரன் படுகொலை நிச்சயமாக போர்குற்றம் அல்ல அது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம். போரில் ஈடுபடாத ஒரு தரப்பை கொல்வது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்று கூறுவார்கள், அதிலும் போர் நடைபெறாத காலத்தில் கொல்வது என்பது நிச்சயமாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் தான், ஆனால் இதனை அப்படியே மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்று சுருக்கி விட முடியாது, ஏனென்றால் கொல்லப்பட்ட நபர் யாரென்பது மிக மிக முக்கியம். போர் முடிவுற்றது என்று அறிவிக்கப்பட்ட பின்பும் பாலச்சந்திரனை கொல்ல வேண்டிய நோக்கம் கொலையாளிகளுக்கு ஏன் இருந்தது என்பது முக்கியம்.

 9. பாலச்சந்திரனை கொல்வது என்பது அவர் தமிழர் தரப்பின் தலைவராக பிற்காலத்தில் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், தமிழர் என்ற இனத்தை சார்ந்தவர்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்ற நோக்கமும் தான் காரணம். இது இனப்படுகொலை என்பதை நிறுவுவதற்கான செயலாக நிற்கிறது. அப்படி இனப்படுகொலை என்பதை நிறுவனத்திற்கான வலிமையான ஆதாரம் தான் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பான புகைப்படங்களும் படுகொலையும் கூட, இப்படி இனப்படுகொலை என்று நிறுவுவதற்கு வலிமையான இந்த ஆதாரம் யாருக்கெல்லாம் சிக்கலை ஏற்படுத்தும்? நிச்சயமாக பாலச்சந்திரனை கொன்றவர்களுக்கு தான் சிக்கலை ஏற்படுத்தும். பாலச்சந்திரனை கொன்றவர்கள் யார்? இரண்டு பேட்டிகளை நாம் பார்ப்போம்.

 10. முதலில் சரத் பொன்சேகாவினுடைய பேட்டி [11] அதில் அவர் பாலச்சந்திரன் இருக்கும் புகைப்படத்தில் இருக்கக் கூடிய இராணுவ வீரர்கள் அணிந்திருக்கும் உடை சிங்கள இராணுவத்தின் உடை அல்ல அது இந்திய இராணுவ வீரர்கள் அணியக் கூடிய உடையை போன்று இருக்கின்றது. சில நேரங்களில் விடுதலைப்புலிகள் கூட இந்திய இராணுவ உடைய திருடி வந்து பயன்படுத்துவார்கள் என்று அவர் கூறுகின்றார். சிங்கள இராணுவத்தினர் இல்லை என்று அவர் குறிப்பிடுகின்றார் அதே நேரத்தில் இந்திய இராணுவத்தின் உடைகளை புலிகளும் திருடி வந்து பயன்படுத்துவார்கள் என்று அவர் கூறுகின்றார். அப்படியென்றால் விடுதலை புலிகளே இந்த படுபாதக செயலை செய்திருக்கிறார்கள் என்று கூற வருகின்றார் என்று அர்த்தம், ஆனால் இங்கே தான் நாம் அந்த தேதியையும் அறிவிப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. ஏனென்றால் மே மாதம் 18 ஆம் தேதியே இலங்கை அரசே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்து விட்டோம் என்று, இவர்களால் முழுமையாக அழிக்கப்பட்டு விட்ட விடுதலை புலிகள் 19 ஆம் தேதி இந்திய இராணுவத்தின் உடைகளை பயன்படுத்தியிருக்க வாய்ப்பே இல்லை, அப்படியென்றால் பாலச்சந்திரனை கொன்றவர்கள் இந்திய இராணுவத்தினரா?

 11. இதற்கு இன்னும் ஒரு பேட்டியை அல்லது செய்தியை பார்ப்போம், மே மாதம் 15 ஆம் தேதியன்று இந்தியாவுடைய வெளியுறவுதுறை செயலர் சிவசங்கர் மேனன் அமெரிக்க இங்கிலாந்து அதிகாரிகளிடம் பேசும் பொழுது இலங்கையின் கள நிலவரம் என்னவென்று எங்களுக்கு நன்றாக தெரியும். இலங்கை அரசுக்கு தெரிந்ததைவிட எங்களுக்கு மிக விரைவாக தகவல்கள் கிடைக்கின்றன என்று அவர் கூறுகின்றார். [12], அப்படியென்றால் இனப்படுகொலை நடைபெற்று கொண்டிருந்த அந்த பகுதி இந்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்திருப்பதாக தெரிகின்றது. அப்படி இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் தான் போர் முடிவுற்றது என்று அறிவித்த பின்பு பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருக்கின்றார். அப்படியென்றால் இதனை இன்னும் விரிவாக ஆராய்ந்தால் ஒரு வேளை பாலச்சந்திரன் இந்திய படைகளால் தான் கொல்லப்பட்டிருக்க கூடும் என்று தெரிய வரலாம், அப்படியானால் இந்த பாலச்சந்திரன் படுகொலை என்பது இந்திய அரசிற்கும் இலங்கை அரசிற்கும் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தக் கூடிய ஒரு செயலாக இருக்கின்றது, அதனால் இது குறித்து பல்வேறு வழிகளின் மூலம் ஆதாரங்களை அழிப்பது அல்லது அந்த ஆதாரங்கள் மீதான மக்களின் பார்வையை மாற்றுவது என்று செயல் பட தொடங்குகின்றார்கள். மக்களுடைய பார்வையை மாற்றுவது என்பதை War of Perception என்று கூறுவார்கள், அதை உளவியல் போர் என்றும் கூறலாம்.

 12. War of Perception என்னும் நடவடிக்கையின் ஒரு முறையாக தான் புலிப்பார்வை என்ற திரைப்படம் தயாரிக்கப்படுகின்றது, அந்த திரைப்படம் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக பல்வேறு வரலாற்று தொடர்பான சம்பவங்களை திரித்து சொல்கிறது, வரலாற்று தகவல்களை பொறுத்தவரை மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றும் ஒரு விடயம் இருக்கிறது அது என்னவென்றால் மே மாதம் 15-ஆம் தேதிக்கு பிறகு விடுதலை புலிகள் தரப்பிலிருந்து வெளியுலகை தொடர்பு கொள்வது குறைந்து விட்டது. மே மாதம் 15-ஆம் தேதியன்று விடுதலைப்புலிகளுடைய அரசியல்துறை பொறுப்பாளர்கள் தான் வெளியுலகை தொடர்பு கொள்கிறார்கள். அவர்களும் கூட மே மாதம் 17-ஆம் தேதி நள்ளிரவிற்கு பிறகு வெளியுலக தொடர்புகளும் அற்று போகின்றன [13], இப்படி ஈழத்திலுள்ள யாரும் வெளியுலகை தொடர்பு கொள்ளாத கால கட்டம் அது, அந்த அரசியல்துறை பொறுப்பாளர்களை தவிர யாரும் தொடர்பு கொள்ளவில்லை இந்திய- இலங்கையினுடைய மேற்பார்வையில் ஈழத்திலிருந்து யாரும் தப்பிச் செல்ல முடியாத படியும் பல்வேறு நடவடிக்கைகளும் கூட மேற்கொள்ளப்பட்டிருந்தன.

 13. ஆனால் இந்த புலிப்பார்வை திரைப்படம் இந்த ஒட்டுமொத்த பின்னனியையுமே சிதைத்து ஈழத்திலிருந்து போராளிகள் சர்வசாதாரணமாக இந்தியா வருவது போலவும், இந்திய அரசு அவர்களுடன் உரையாடுவது போலவும், விடுதலைப்புலிகள் தலைமை கூட தொடர்ச்சியாக வெளிவுலகோடு தொடர்பு கொள்வது போலவும் மேலும் பல்வேறு வரலாற்று திரிப்புகளை மேற்கொண்டு, இன்னும் உச்சகட்டமாக பாலச்சந்திரனை ஒரு சிறுவர் போராளியாக சித்தரித்து அந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படி வரலாற்றை திரிக்க வேண்டிய வேலை இவர்களுக்கு ஏன் வருகிறது என்பதை நாம் தொடக்கத்திலேயே பார்த்தோம் என்றால். இனப்படுகொலை என்பதற்கு ஆதாரமாக இந்த புகைப்படம் இருக்கின்றது. இன்னொரு புறத்தில் இந்த புகைப்படம் தான் உலக அளவில் ஒருபெரும் எழுச்சியை 2013 ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கும.

 14. 2013 பிப்ரவரி 19 தேதியன்று பாலச்சந்திரனின் புகைப்படம் வெளியான பிறகு மார்ச் மாதத்தில் தமிழகத்தில் மாணவர் போராட்டங்கள் மிகபெரும் அளவில் எழுச்சியோடு நடைபெற்றன. அது சர்வதேச அளவில் ஒருபெரும் அதிர்வை ஏற்படுத்தியது. மேலும் மக்களிடத்திலும் பெரும் தாக்கத்தை அந்த புகைப்படம் ஏற்படுத்தியது. அப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்திய புகைப்படத்தை பற்றி தவறான கருத்தினை விதைத்து மக்களினுடைய உளவியலை மாற்றுவதன் மூலம் ஈழவிடுதலைக்கு ஆதரவாக எழும் மக்கள் எழுச்சியை திசை திருப்ப வேண்டும் என்பது தான் War of Perception –னின் ஒரு வழிமுறை.

 15. ஒரு திரைப்படம் மக்களின் மனதை மாற்றிவிட முடியுமா என்று நீங்கள் நினைக்கலாம், இதற்க்கு பதிலாக இரண்டு விஷயங்களை உங்கள் முன்வைக்க விரும்புகின்றேன். ஒன்று டேம் 999 என்ற திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது. அப்பொழுது அந்த படம் தவறான கருத்தை விதைக்கின்றது என்று கூறி மதிமுக அதற்க்கு எதிராக போராட்டங்களை நடத்தியது மட்டுமின்றி, பிரசாத் பிலிம் லேபாரட்டரிக்குள் புகுந்து அந்த படச்சுருளையும் கைப்பற்றி சென்றார்கள். [14] அது குறித்து வைகோ கூறினார் “இந்தத் தலைப்பே விஷமத்தனமாது” [15] என்று அப்பொழுது இந்த நஞ்சை விதைக்கும் செயலுக்கு எதிராக அவ்வளவு தீவிரமான முறையில் போராடிய வைகோ இந்த புலிப்பார்வை என்னும் பெயரில் வந்த திரைப்படத்திற்கு எதிராக போராடாமல் அதற்கு ஆதரவாக செயல்பட்டார். அப்படியென்றால் அவரையும் ஒரு பங்காளியாக சேர்த்துக் கொண்டு தான் இந்த War of Perception –ஐ இந்திய அரசு நடத்துகின்றது.

 16. இன்னொரு விடயத்தையும் சொல்கின்றேன் என்னுடைய சிறுவயது நண்பர் ஒருவனை நான் 2013 டிசம்பர் 1 அன்று சந்தித்தேன். ஜெர்மனிக்கு செல்வதற்கு முன்பு அங்கு பயன்படுத்தக் கூடிய ஜெர்கின்னை வாங்குவதற்கு அந்த நண்பனை சந்தித்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது பல்வேறு விஷயங்களை பேசிய பிறகு அவர் கூறினார் “இலங்கையில் இருக்கக் கூடிய தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்றவர்கள் தான்” என்றார். நான் “நீங்கள் மலையகத் தமிழர்களையும் ஈழத்தமிழர்களையும் குழப்பிக் கொள்கிறீர்கள்” என்றேன். “இல்லை இல்லை நான் ஈழத்தமிழர்களை பற்றி தான் குறிப்பிடுகின்றேன், நீங்கள் பார்த்தல் கடற்கரை ஓரங்களில் மட்டும் தான் அவர்கள் இருப்பார்கள், இது பொன்னியின் செல்வனை பார்த்தால் புரியும். ராஜராஜ சோழன் படையெடுத்து சென்ற பகுதிகள் கடற்கரை பகுதிகள். அங்கெல்லாம் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்” என்றார். அப்பொழுது நான் கூறினேன் “ராஜராஜ சோழன் படையெடுத்து சென்றது 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில். ஆனால் கி.மு 5 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் அங்கிருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் திருப்பரங்குன்றத்தில் கல்வெட்டு சான்றுகளில் கிடைத்திருக்கின்றதே அப்படியென்றால் முன்பு தமிழர்கள் அங்கு இல்லையென்று நீங்கள் சொல்கிறீர்களா” என்று அவரிடம் கேட்டேன், அதற்க்கு பிறகு அவர் தனது கருத்து தவறு என்பதை புரிந்துக் கொண்டார். ஆனால் எனக்கு என்ன அச்சமாக இருந்தது என்னவென்றால் வாசிப்பு பழக்கம் இருக்கக் கூடிய ஒரு நபரே பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்றை திரித்து எழுதப்பட்ட கதைகளை படித்துக் கொண்டு அதை வரலாறு என்று நம்பிக் கொண்டு, சில கருத்தை இவர்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள், அது போன்று திரைப்படங்களும் மக்கள் மனதில் சிறுக சிறுக பல்வேறு மாற்றங்களை தான் ஏற்படுத்தும்.

 17. இது தான் War of Perception-னின் அடிப்படை வேலை. ஒரே நாளில் மக்களின் மனதில் இருக்கக் கூடிய கருத்தை மாற்றக் கூடியதல்ல, மாறாக படிப் படியாக ஒவ்வொரு பொய் தகவலாக சொல்லிச் சொல்லி மக்களை மாற்றுவது தான் War of Perception. இந்த நோக்கத்தில் தான் இந்த புலிப்பார்வை என்ற திரைப்படமும் எடுக்கப்பட்டது.


1.2. மாணவர்கள் மீதான தாக்குதல்

 1. இப்படிப்பட்ட சிக்கல்கள் நிறைந்த புலிப்பார்வை திரைப்படத்தினுடைய ஒலிநாடா வெளியீடு (Audio Release) ஆகஸ்ட் 16 ஆம் தேதி அன்று நடைபெற்றது. அந்த ஆடியோ ரிலீஸ் நிகழ்வுக்கு சீமானும் சென்றிருந்தார். அங்கு அந்த புலிப்பார்வை படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக மாணவர்கள் சிலர் சென்று முழக்கங்களை எழுப்பினார்கள். அப்பொழுது அங்கிருந்த பச்சைமுத்து கட்சியான IJK வின் குண்டர்களும், சத்யம் தியேட்டரினுடைய பௌன்செர்களும் மாணவர்களைத் தாக்கி அவர்களுக்கு காயம் ஏற்படுத்தினார்கள். அப்பொழுது அங்கு வந்த காவல்துறை, மாணவர்களை கைது செய்து அழைத்து சென்றது. இது குறித்து மதியம் 12 மணியளவில் தோழர் கார்த்திக் [16] எனக்கு போன் செய்து கூறினார். அப்பொழுது நான் அவர்களுக்கு என்ன மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது என்று கேட்டேன். சிகிச்சை எதுவும் செய்யப்பட வில்லை என்று கூறினார். வழக்கறிஞர்கள் யாரும் இருக்கிறார்களா என்று கேட்டேன், அதுவும் யாரும் இல்லை என்று கூறினார். சரி நான் வழக்கறிஞர்களை அணுகுவதற்கு முயற்சிக்கிறேன், நீங்கள் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான வழிகளை பாருங்கள் என்றேன். அல்லது வழக்கறிஞர்கள் யாரேனும் வந்தால் அவர்களிடம் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்வதற்கான வழிகளை பார்ப்போம் என்று கூறிவிட்டு நான் வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அப்பொழுது தான் தெரிந்தது பெரும்பாலான வழக்கறிஞர்கள் யாரும் சென்னையில் இல்லை என்றும். அனைவரும் அடுத்த நாள் மதுரையில், நடக்க விருந்த ஒரு கருத்தரங்கிற்காக சென்றிருந்தனர் என்று.

 2. சரி வழக்கமாக போராட்டங்களில் பங்கெடுக்காத வேறுயாராவது வழக்கறிஞர்கள் பார்க்கலாம் என்று நினைத்து கொண்டு திருமுருகனுக்கு போன் செய்தேன். அப்பொழுது திருமுருகன் ஆம் நானும் கேள்விப்பட்டேன், இப்போ இதில் நாம் என்ன Stand (நிலைப்பாடு) எடுக்கலாம் என்று கேட்டார். மாணவர்களை தாக்கியது தவறான செயல். மாணவர்களை தாக்கியதில் பின்னணியில் இருந்த அத்தனை பேரும், பச்சைமுத்துவில் இருந்து சீமான் வரை அனைவருமே கண்டிக்கப்பட வேண்டியவர்கள். இது தான் நமது நிலைபாடாக இருக்கும் என்று கூறினேன். சரி நான் அருளிடம் arulnalanda@gmail.com பேசுகிறேன் நீங்கள் லேனாவிடம்[17] பேசுங்கள் என்று கூறினார். இதுக்கு நாம் ஒரு பதிவு போட்டிருவோம் என்று கூறினார். அதற்கு சரியென்று நான் கூறினேன். சிறிது நேரத்தில் லேனா என்னை அழைத்தார். அப்பொழுது லேனா கூறியது திருமுருகன் ஒரு பதிவு எழுதி படித்து காண்பித்தார், எனக்கு சரியாக இருந்தது. நான் போடுங்கள் என்று கூறினேன். அவரும் பதிவேற்றி விட்டார். நீங்களும் ஒருமுறை பாருங்கள், ஏதாவது விடுபட்டிருந்தால் சேர்த்துக்கலாம் என்றார். மேலும் நீங்கள் அதனை சேர்த்து ஒரு பதிவாக கூட போடுங்கள் என்றார்.

 3. அதன் பிறகு நான் வந்து அந்த பதிவை[18] பார்த்தேன். மிகவும் மொன்னையான ஒரு பதிவாக இருந்தது. புலிப்பார்வை படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்ற மாணவர்களை தாக்கியதை நாங்கள் கண்டிக்கின்றோம் என்று இருந்தது. தாக்கியதை கண்டிக்கின்றோம் என்பதெல்லாம் சரி. ஆனால் தாக்கியவர்களை பற்றி ஏதுவுமே பேசவில்லை என்ற பொழுது அது எனக்கு தவறாக தெரிந்தது. உடனடியாக நான் ஒரு பதிவு போட்டேன்[19].

  நான் வெளியிட்ட பதிவு:

  உலக வரலாறுகளைப் புரட்டிப் போட்ட புகைப்படங்கள் சில உண்டு. அமெரிக்காவின் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக வியட்நாமில் 10 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருத்தி நிர்வாணமாய் ஓடிவரும் புகைப்படம் உலகம் முழுதும் அறிந்தது. அதுபோன்ற ஒரு வலிமையான புகைப்படம் தான் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தின் பிடியில் இருக்கும்போது எவ்வித சலனமுமின்றி எங்கோ பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படமும். ஒரு அப்பாவிச் சிறுவனின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழர்கள் போராடியதை கடந்த ஆண்டு உலகம் பார்த்தது. இந்தப் புகைப்படம் என்பது மக்களை போராடவைப்பதற்கு மட்டுமின்றி மிக முக்கியமான ஒரு இனப்படுகொலை ஆவணமும் கூட. (சர்வதேச நீதிமன்றத்தில் இதனுடைய பங்கு குறித்து விரிவாக பிறகு எழுதுகின்றேன்)

  இப்படி ஒரு அதிர்வலையை ஏற்படுத்திய புகைப்படத்தையும், அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் நீர்த்துப் போக வைப்பதற்காக செய்யப்படும் முயற்சிதான் புலிப்பார்வை என்னும் வஞ்சகப்படம். பாலச்சந்திரன் ஒரு அப்பாவிச் சிறுவன் அல்ல; அவன் கொல்லப்படவேண்டிய தீவிரவாதி என்னும் ராஜபக்சே, சு.சாமி வகையறாக்களின் நஞ்சையும் வன்மத்தையும் தமிழர்களின் உளவியலில் புகுத்துவது தான் இதன் நோக்கம்.

  அப்படிப்பட்ட திரைப்படத்தை எதிர்க்காமல், அதனுடைய இசை வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்வது என்பது தவறான நிலைப்பாடு. அப்படி ஒரு நிலைப்பாடு எடுத்துவிட்டு, ஈழத்தைப் பற்றி பேசுவதற்கு ஒரு தளம் கிடைக்கிறது என்று கூறுவது எல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

  ஈழத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட மாணவர்கள் அங்கு தமது எதிர்ப்பைப் பதிவு செய்ய விடாமல், அவர்களை அடியாள் படை தாக்கும்போது வேடிக்கை பார்ப்பதை எல்லாம் பார்க்கும்போது பிடில் வாசித்த மன்னன் நினைவுக்கு வந்துச்செல்கின்றான்.

  சீமானை தோழர் என்று அழைத்ததற்காக வருந்துகின்றேன்.
  நான் மாணவர்களின் பக்கம் நிற்கின்றேன்.
  #
  IStandWithStudents‬‬‬‬

 4. அதில் மாணவர்களை தாக்கியதில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சீமானை நான் தோழர் என்று அழைத்ததுக்காக வருந்துகின்றேன் என்று கூறியிருந்தேன். அதாவது தோழன் என்று ஒருவரை நாம் கூறுகின்றோம் என்றால் அவர்களுக்குள் உயர்வு தாழ்வு இல்லை என்ற ஒரு பொருள் இருந்தாலும் தோழன் என்ற வார்த்தையினுடைய அடிப்படையாக நான் பார்ப்பது “எவன் ஒருவன் சமூக அநீதியை கண்டு கோபம் கொள்கிறானோ, அவன் ஒவ்வொருவனும் எனக்கு தோழனே” என்ற “சே” யினுடைய வார்த்தைகளை தான் நான் தோழன் என்பதற்கான அடையாளமாக பார்க்கின்றேன். அப்படி பார்க்கும் பொழுது தமது கண்ணெதிரிலேயே தம்முடன் இந்த போராட்ட களத்தில் நின்ற மாணவர்கள் தாக்கப்படுவதை கண்டும் அதை பற்றி ஒரு சிறு குரல் கூட எழுப்பாது மாறாக அங்கிருந்து வெளியே வந்து மாணவர்களுக்கு எதிராக ஒரு திரைக்கதை வசனத்தை புனைந்த சீமானை ஒரு தோழன் என்று அழைப்பதில் எனக்கு மிகுந்த முரண் ஏற்பட்டு அதனை அந்த பதிவில் வெளிப்படுத்தியிருந்தேன்.

  1.3. மே 17 மற்றும் திருமுருகனின் எதிர்வினை


 5. நான் அந்த பதிவை எழுதிய சிறிது நேரத்திலேயே பிரவீன் thozharpraveen@gmail.com எனக்கு போன் செய்தார். இது தான் அமைப்போட முடிவா என்று கேட்டார். மே பதினேழு இல் உள்ள தோழர்கள் அனைவருமே சீமான் மீது கோபத்தில் இருக்கிறார்கள். அதனால் எல்லாருமே பதிவு போடுகிறோம் என்று கூறினார்கள். ஆனால் அமைப்பின் முடிவு தெரியாததால் போடாமல் இருக்கின்றனர். இப்போ இதை போட சொல்லிவிடவா என்று கேட்டார். இல்லை பிரவீன் இது என்னோட முடிவு. அமைப்பின் முடிவு பற்றி நீங்கள் திருமுருகனிடம் கேட்டு கொள்ளுங்கள் என்று கூறினேன். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே திருமுருகனிடம் இருந்து போன் வந்தது. சரி பிரவீன், திருமுருகன் அழைக்கிறார் நீங்கள் இணைப்பை துண்டியுங்கள் என்று கூறினேன்.


 6. திருமுருகனிடம் பேசும் பொழுது, நீங்கள் பாட்டுக்கு இப்படி போட்டு விட்டீர்கள். எல்லாப் பசங்களையும் நான் கண்ட்ரோல் (கட்டுப்படுத்தி) செய்து வைத்திருக்கிறேன். இப்படி போட்டீங்கனா அவனவன் போட ஆரம்பிச்சுருவான் பிறகு என்ன பண்ணுறது என்று கூறினார். அப்போ தவறு செய்யும் பொழுது கண்டிக்காமல் இருக்கிறதுக்கு நாம் எதுக்கு திரு இருக்கிறோம் என்று கேட்டேன். அதுக்காக என்னப் பண்ண சொல்லுறீங்க? சீமானை அடிக்கணுமா, வாங்க போய் அடிச்சுட்டு வருவோம் என்றார். அதற்கு நான் அடிக்கிறது என்கிறது இல்லை. அவன் ஒரு தப்பு பண்ணியிருக்கான், அதனை கண்டிக்க நாம் முன் வரலை என்றால் நாம் ஏன் போராட்ட களத்தில் இருக்கிறோம் என்றேன். நீங்க பாட்டுக்கு போட்டுறீங்க, என்ன பண்ணுறதுனே தெரியாம பண்ணுறீங்க, இப்போ நான் எப்படி எல்லாரையும் கண்ட்ரோல் (கட்டுபடுத்துவேன்) பண்ணுவேன்? சரி அந்த பதிவை எடுத்திருங்க என்றார். அதற்கு நான், இல்லை திரு என்னால் எடுக்க முடியாது என்றேன். சரி கடைசி இரண்டு வரியாவது நீக்கியிருங்க என்றார். அதற்கு இல்லை திரு அதுவும் என்னால் பண்ண முடியாது என்று கூறி அலைப்பேசியை வைத்து விட்டேன்.


 7. அதன் பிறகு கொஞ்ச நேரத்தில் லேனா போன் செய்தார். அதற்குள் பலர் அந்த பதிவை பகிர ஆரம்பித்து விட்டார்கள், பரவலாக போக ஆரம்பித்து விட்டது. இதற்கு மேல் நீக்க முடியாது என்ற சூழலில் தான் லேனா பேசுகிறார். சரி போட்டுடீங்க... கொஞ்சம் கடுமையாக போட்டுடீங்க, கடுமையாக இருக்கிற மாதிரி தான் எனக்கு தெரிகிறது என்றார். இல்லை தோழர் தவறு செய்யும் பொழுது அதனை கண்டித்து பேச வேண்டும் என்பது தான் என் நிலைப்பாடு என்றேன். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து திருமுருகன் போன் செய்து அதை எடுக்க வேண்டாம் என்று கூறினார். அதற்கு எப்படியானாலும் நான் எடுக்க போவதில்லை என்று கூறினேன்.

  1.4. விஜயராமச்சந்திரனின் ஆதங்கம்.


 8. அதன் பிறகு சிறிது நேரத்துக்கு பின் விஜய்ராமச்சந்திரன் [20], என்ற தோழர் எனக்கு போன் செய்தார். இவரைமே பதினேழு இயக்கத்தின் தலைமை குழுவில் இருக்கக் கூடிய முக்கியமான 10 பேருக்கு நன்றாக தெரியும். மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் விஜயராமசந்திரன் யார் என்பது பற்றி முதலில் சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.


 9. விஜயராமசந்திரன் தொடர்ச்சியாகமே பதினேழு இயக்கத்தின் நிகழ்வுக்கு ஆதரவு அளித்து வரக் கூடியவர். மாதம் மாதம் தன்னால் ஆன நிதிபங்களிப்பையும் கூட வழங்கி கொண்டிருப்பவர். அவர் அரபுநாடுகளில் வேலை செய்து கொண்டிருந்தாலும் கூட, அங்கிருந்து கொண்டு இணையத்தின் வழியாக ஈழ போராட்ட சார்ந்த பல்வேறு செய்தியை தொடர்ச்சியாக பதிந்து கொண்டு வருபவர். பெரும்பாலும் ஈழ போராட்டத்தில் தொடர்புள்ள அனைவருக்குமே இவரை தெரியும். நேரடியாக பேசியோ, அறிமுகமோ இல்லையென்றாலும் அவரை பற்றி தெரியும். இதை நான் எப்படி கூறுகிறேன் என்றால் 2013 இல் நாங்கள் ஜெர்மெனி சென்ற பொழுது, ப்ரேமெனில் எங்களின் வாதங்கள் முடிந்ததற்கு பிறகு அன்று மாலை ஒரு உணவகத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்[21] , குமரவடிவேல் குருபரன் [22] ஆகியோருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்த பொழுது, ஒரு தோழர், ட்விட்டரில் உங்க ID யை ஒருவர் ஷேர் பண்ணிட்டு பிறகு அழித்து விட்டார் என்று கூறினார். யார் அது என்று வினவிய பொழுது, தோழர் கஜேந்திரகுமார் அவர் தான் விஜயாராமா என்றார். விஜயாராமா என்றால் யாரு என்று தெரியவில்லையே என்று கூறிய பொழுது அவர் உடனே ட்விட்டரை திறந்து அந்த நபரின் ப்ரோபைலை(Profile) காண்பித்தார். ஓ நீங்கள் விஜயராமச்சந்திரனை சொல்கிறீர்களா, இவர் மதுரை தோழர் தான், நமக்கு நன்றாக தெரியும் என்றேன். அவர் அரபு நாடுகளில் வேலை செய்கிறார் என்றேன். ஓ அப்படியா சரி சரி என்ற கூறினார். விஜய்ராமச்சந்திரனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம், குமரவடிவேல் குருபரன் உள்ளிட்ட நபர்கள் கூட அறிந்து வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் அவர் தொடர்ச்சியாக பதிவுகள் செய்து வருகிறார் என்பதினால் தான். அப்படிப்பட்ட ஒரு நபர் தான் அவர்.


 10. தோழர் விஜய்ராமச்சந்திரனின் இயல்பு என்ற பார்த்தீர்கள் என்றால் காங்கிரஸ்க்கு மாற்றாக பா.ஜ.க வை ஆதரிக்கலாம் என்ற நிலைபாட்டில் முதலில் இருந்தார். இப்பொழுது இல்லை. அதனால் 2013 களில் பாரதீய ஜனதா செய்யக் கூடிய சில செயல்களுக்கு ஆதரவு போக்குடன் தான் இருந்தார். குறிப்பாக அப்பொழுது யஸ்வன்த்சின்கா ராஜ்யசபாவில் பேசியவுடன் எனக்கு போன் செய்து. இன்று யஸ்வந்சின்கா எப்படி பேசினார் என்று பார்த்தீங்களா தோழர் என்று தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தினார். அதன் பிறகு 2013 இல் மோடியை எதிர்த்து மே பதினேழு இயக்கம் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்த பிறகு முகநூலில் வந்து மே பதினேழு இயக்கத்துடன் சண்டையிட்டார். அந்த விவாதத்தில் திருமுருகன் அளித்த பதில் இது.[23] 11. அதன் பிறகும் அவர் தன்னுடைய நிலையை மாற்றவில்லை. மோடியை எதிர்க்க வேண்டாம் என்ற நிலைபாட்டில் தான் இருந்தார். ஆனால் இறுதியில் அவர் மே பதினேழு இயக்கத்தின் முடிவை எப்படி ஏற்று கொண்டார் என்றால் “உங்களின் நேர்மையின் மீது நம்பிக்கை வைத்து நான் எனது முடிவை மாற்றி கொள்கிறேன், நானும் கருப்பு கொடி காட்ட வருகிறேன் என்று கூறினார்” [24]

 12. அந்த அளவுக்குமே பதினேழு இயக்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உடைய ஒரு நபர், நண்பர். இவர் ஆகஸ்ட் 16 ஆம் தேதி மாலை எனக்கு போன் செய்தார். என்ன தோழர் திரு தோழர் ஏன் சீமானை கண்டிக்கவில்லை என்று கேட்டார். நான் அவரிடம் இல்லை தோழர் அவர் தோழமை அமைப்பு பற்றி பொது வெளியில் பேச வேண்டாம் என்று நினைக்கிறார் போல என்றேன்.


 13. இதன் பிறகு ஒருநாள் கழித்து ஆகஸ்ட் 18 ஆம் தேதி நானும் திருமுருகனும் ஒரு நண்பரின் அலுவலகத்தில் சந்திக்கிறோம். அப்பொழுது அங்கு நடந்த ஒரு உரையாடல் என்பது சுமூகமாக செல்லவில்லை. வாக்குவாதம் எல்லாம் ஒன்றுமில்லை என்றாலும் இரண்டு பேருக்கும் ஒரு சுமூகமான உரையாடலாக இல்லை. அது வரைக்குமே எங்களுக்குள் பல்வேறு விடயத்தை பேசியிருக்கிறோம் ஆனால் அன்று மிகவும் கவனமான, சூசகமான வார்த்தைகள் தான் இரண்டு பேரிடமும் இருந்து வந்தது. அப்பொழுது நான் கூறினேன் எல்லாரும் எதிர்பார்கிறாங்க திரு, சீமான் செய்ய கூடிய தவறை நாம் சுட்டிக் காட்ட வேண்டும் என்று எதிர்பார்கிறாங்க, தோழர் விஜய்ராமச்சந்திரன் கூட இது குறித்து பேசினார் என்று கூறினேன். 2009 க்கு பிறகு உருவான அமைப்பான நாம் யார் தவறு செய்தாலும் சுட்டி காட்டுவோம், கண்டிப்போம் அது தொடர்பா ஒரு நிலைபாட்டினை எடுப்போம் என்று தான் அனைவரும் எதிர்பார்க்கிறாங்க என்று கூறினேன். அதற்கு திருமுருகன் பதில் எதுவும் கூறவில்லை, தலையை மட்டும் ஆட்டினார். அதன் பிறகு அன்றே அவருக்கு நான் அமைப்பை விட்டு விலகி விடுவேன் என்ற சந்தேகம் ஏற்பட்டிருந்தது அன்று அவர் பேசும் பொழுது கூறியது “அமைப்பில் இருக்கிற வரைக்கும் தான் நிறைய பேருக்கு தெரியும், அமைப்பை விட்டு போய் விட்டால் அடையாளம் இல்லாமல், அட்ரஸ் இல்லாமல் போய் விடுவார்கள்” இதுக்கு முன்னாடி இங்கு ஸ்டாலின் [25], இருக்கும் பொழுது ஒரு ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லி தான் வைத்திருந்தோம், பிறகு அவன் அமைப்பை விட்டு வெளியே போய் தனி அமைப்பு ஆரம்பித்தவுடன் இப்போ எங்க இருக்கிறான் என்றே தெரியாமல் இருக்கிறான் என்று கூறினார். இது நான் வெளியேறி விடுவேன் என்கிற எண்ணத்தில் தான் அவர் அவ்வாறு கூறியிருந்தார். நான் அதற்கு பதில் எதுவும் கூறாமல் தலையை மட்டும் ஆட்டி விட்டு சும்மா இருந்து விட்டேன்.

  1.5. பாக்கியராசனின் பதிவும், திருமுருகனின் சர்வாதிகாரமும்..


 14. பிறகு ஆகஸ்ட் 21 ஆம் தேதி வியாழக்கிழமை மதியம் திருமுருகன் அலைப்பேசியில் அழைத்தார். அழைத்து உமர் உங்களை பற்றி பாக்கியராசன்சே[26] ஒரு பதிவை முகநூலில் போட்டிருக்கிறான், நீங்கள் எதுவும் ரியாக்ட் (எதிர்வினை) பண்ண வேண்டாம் என்று கூறினார். சரி திரு நான் பார்க்கிறேன் என்று கூறினேன். இல்லை இல்லை நீங்க பார்க்குறீங்க என்பதில்லை அதுக்கு ரியாக்ட் பண்ணவே வேண்டாம் என்றார். அதற்கு நான், முதலில் நான் போஸ்ட்டை பார்க்கிறேன் திரு என்று கூறினேன். நீங்கள் போஸ்ட் எல்லாம் பாருங்கள் ஆனால் ரியாக்ட் பண்ணிறாதீங்க என்று கூறினார். நீங்க ரியாக்ட் பண்ணுகிற அளவுக்கு அவன் வொர்த் இல்லை என்று கூறினார். அது எனக்கும் தெரியும் திரு, என்னவென்று பார்க்கிறேன் என்றேன். பாக்கியராஜன் பதிவுக்கு நான் பதில் அளிக்க போவதில்லை என்று அழைப்பை துண்டித்து விட்டேன்.


 15. பிறகு வந்து பதிவை பார்த்தேன். அதில் பாக்கியராசன் என்ன போட்டிருந்தார் என்றால் “பச்சை முத்துவை பாராட்டியதுக்காக சீமானை விமர்சிப்பவர் எல்லாம் யாரென்று பார்த்தால், இவர்கள் எல்லாம் புதியதலைமுறை தொலைகாட்சியில் முகத்தை காட்ட ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்குகிற ஆள் தான் ” என்ற தொணியில் ஒரு பதிவு. இந்த பதிவை பார்த்தால் ஒரு மொக்க தனமான லாஜிக் உள்ள பதிவாக தான் தெரிந்தது. சொல்லப் போனால் லாஜிக்கே இல்லாத பதிவு அது. பதில் எழுதுகிற அளவுக்கு எந்த தகுதியும் இல்லாத ஒரு பதிவு என்று எனக்கு தெரிந்தது. தற்பொழுது பேச வேண்டும் என்ற முடிவெடுத்து விட்டதால் சொல்கிறேன். இது ஏன் மொக்க தனமான பதிவு என்றால் புதியதலைமுறையில் முகம் காட்ட வேண்டி பச்சைமுத்துவை காக்கா புடிக்க வேண்டுமென்றால், பச்சைமுத்துவை பாராட்டிய சீமானை பாராட்டி தான் காக்கா புடிப்பார்களே தவிர பச்சைமுத்துவை பாராட்டிய சீமானை எதிர்த்து காக்கா புடிக்க மாட்டார்கள். இப்படியொரு பதிவை பற்றி இதுக்கு மேல் பேசுவதற்கான தேவையுமில்லை என்று நான் அதனை பற்றி கண்கொள்ள வில்லை.


 16. பிறகு நான் இணையத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது ஆகஸ்ட் 20 ஆம் தேதி “தமிழ்ஹிந்து” பத்திரிகையில் சீமானுடைய பேட்டி ஒன்று வந்திருந்தது[27]. அந்த பேட்டி மிக மோசமான ஒரு பேட்டி. முதல் நாளே நான் அந்தப் பேட்டி வெளியானதை பார்த்திருந்தாலும், முழுமையாக படிக்கவில்லை. ஆகஸ்ட் 21 அன்று தான் இந்தப் பேட்டியை முழுமையாக படித்தேன். தவறான தகவல்களை அளித்து ஒட்டுமொத்த தமிழ் இனத்தை குழப்புவதற்கான ஒரு பேட்டியாக இருந்தது. அப்பொழுது நான் உடனடியாக திருமுருகனுக்கு அழைத்து, திரு, சீமானுடைய பேட்டி ஒன்று இருக்கிறது, மிகவும் தவறான பேட்டியாக இருக்கிறது. அது குறித்து உடனடியாக நான் எழுதணும் என்று கூறினேன்.


 17. உடனே நீங்க எழுதாதீங்க என்று தடுத்தார். இல்லை திரு என்று நான் ஆரம்பித்தவுடனே அவர் தொடர்ச்சியாக பேச ஆரம்பித்து விட்டார். “நீங்க என்ன பண்ணுரீங்கனே தெரியாம பண்ணுறீங்க, மத்தவங்க பண்ணுறதெல்லாம் வேற ஆனால் நீங்க பண்ணுநீங்கனா அது மே பதினேழு இயக்கத்தின் பெயர் தானே அடிபடும். நீங்க யாரோ ஒரு ஆள் இல்லை, மே பதினேழு இன் ஒருங்கிணைப்பாளர். இப்படி பண்ணுனீங்கன்னா நாம் தமிழரில் உள்ள தொண்டர்களை எல்லாம் பகைக்கிற மாதிரி வரும். நாம் அவர்களை எல்லாம் பகைத்து கொள்ள வேண்டாம். சீமானை பற்றி யாருமே பேச மாட்டேங்குறாங்க, நாம் மட்டும் ஏன் பேசனும்? வேல்முருகனில் ஆரம்பித்து யாருமே வாய் திறக்க மாட்டேங்கிறாங்க என்று கூறினார்” இடை இடையே நான் பேச குறுக்கிடும் பொழுதெல்லாம் கூட என்னை மறுத்து அவரே பேசி கொண்டிருந்தார். கிட்டதட்ட 5-6 நிமிடம் நடந்த உரையாடலில் முதல் இரண்டு வார்த்தைகள் தவிர முழுவது அவர் தான் பேசி கொண்டிருந்தார். எனக்கு பேசுவதற்கான வாய்ப்பு கூட கொடுக்கப்படவில்லை. திருமுருகன் தனது சர்வாதிகார முகத்தை அங்கு முழுமையாகக் காண்பித்தார். மற்றவர்களுக்கு பேசுவதற்குக் கூட வாய்ப்பு கொடுக்காமல், கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தின் மீது தனது காலை அழுந்தப் பதித்து தனது சர்வாதிகாரக் குரலை ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தார்.


 18. முதலில் அமைப்பின் அடிப்படை நோக்கத்திற்கு முரணாகவே ஒரு விடயம் அங்கு நடக்க ஆரம்பிப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். அதாவது யாருமே பேச மாட்டேங்குறாங்க நம்ம மட்டும் ஏன் பேச வேண்டும் என்ற ஒரு வாதத்தை அவர் அங்கு வைக்கிறார். மே பதினேழு இயக்கம் தொடங்கியதன் அடிப்படை காரணமே அதானே தோழர்களே. 2009 –ல் யாருமே பேசவில்லை என்பதினால் தானே மே பதினேழு இயக்கத்திற்கான தேவை இருந்தது. மற்றவர்கள் பேசியிருந்தால் மே பதினேழு இயக்கம் உருவாகியே இருக்காதே. இப்போ அவங்க யாரும் பேச வில்லை அதனால் நானும் பேச மாட்டேன் என்பது அதன் அடிப்படை நோக்கத்திற்கே விரோதமாக தானே இருக்கிறது.

  1.6. வைகோவின் பச்சை சந்தர்ப்பவாதம்.


 19. அதன் பிறகு வைகோ ஆகஸ்ட் 25 ஆம் தேதி, பச்சைமுத்துவின் கல்லூரி விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அதனை நான் பார்த்ததுமே, அன்று மாலை வைகோ பங்கெடுத்தது தவறு என்று ஒரு பதிவை முகநூலில் செய்துவிட்டு [28]. அதில் “நான் இந்த கருத்தை பதிவு செய்யும் பொழுது அது மே பதினேழு இயக்கத்தின் கருத்தாக பார்க்கப்படுகிறது, மே பதினேழு இயக்கம் இது போன்ற செயல்பாடுகளை கண்டிக்க முன்வர மறுக்கிறது, அதனால் இதற்கு மேல் நான் மே பதினேழு இயக்கத்தில் இருப்பதற்கு விரும்பவில்லை” என்று பதிவு செய்துவிட்டு நான் அமைப்பை விட்டு விலகி விட்டேன். நான் வெளியிட்ட பதிவு.

  புலிப்பார்வை திரைப்படத்தின் ஊடாக இன்னொரு வரலாற்றுப் பிழை இன்று முழுமையாக வெளிப்பட்டிருக்கின்றது. பச்சமுத்துவின் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், வைகோ பங்கேற்று பச்சமுத்துவிற்கு நற்பெயரைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு முயற்சியினை மேற் கொண்டிருக்கின்றார். மேம்போக்காக பார்க்கும் பொழுது இது ஒரு சாதாரண நிகழ்வாகத் தான் தெரியும். ஆனால், மக்களின் உளவியலில் வரலாற்றுத் திரிபுகளைத் திணிக்கும் நகர்வின் ஒரு அங்கம்தான் இதுவும்.

  முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இறுதி நாட்கள் குறித்தும், பாலச்சந்திரன் குறித்தும் வரலாற்றுத் திரிபுகளை முன்வைக்கும் புலிப்பார்வை திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளை எதிர்நோக்கியுள்ள இந்தச் சூழலில், படத்தின் தயாரிப்பாளர் மிகுந்த தமிழுணர்வாளர், தமிழறிஞர்களுக்கெல்லாம் விருது வழங்கும் நல்லவர் தெரியுமா என்று அவருக்கு ஆதரவாக கொடி பிடிப்பதற்குத்தான் வைகோவின் பங்கேற்பு பயன்படும். அதிலும், உலக வரலாறுகள் எல்லாம் தெரிந்த வைகோவிற்கு, பச்சமுத்துவின் புலிப்பார்வை வரலாறு தெரியாமல் போனதன் பின்னணி ஒரு மர்மம்தான்.

  பல நேரங்களில் செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிடுவதற்கு முன்னரே, தனது அறிக்கையினை வெளியிட்ட வைகோ, புலிப்பார்வை படம் குறித்து இதுவரையிலும் தனது கருத்தைத் தெரிவிக்காதது மட்டுமல்ல, மாணவர்கள் தாக்கப்பட்ட போதும் கூட காத்த கள்ள மௌனம் என்பது பச்சமுத்துவின் புலிப்பார்வைக்கு ஆதரவான மௌனம்தான் என்பது எளிதில் புலப்படுகின்றது. தனது இருக்கைக்கு அருகில் ஸ்டெர்லிங் ஆலையின் உரிமையாளருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பது அறிந்தவுடன், விமானத்திலேயே எதிர்ப்பு தெரிவித்து இடம் மாற்றிக்கொண்ட வைகோ, இன்று இவ்வளவு மோசமான நோக்கத்தோடு படமெடுக்க இறங்கியிருக்கும் பச்சமுத்துவோடு மேடையை பகிர்ந்து கொண்டதை பச்சை சந்தர்ப்பவாதம் என்று புரிந்து கொள்ளாமல் என்னவென்று புரிந்து கொள்வது?

  இந்தப் படத்தை ஆதரிப்பதென்பது ஒரு வரலாற்றுப் பிழை. அந்தப் பிழையை மேற்கொண்ட சீமானையும், வைகோவையும் சுட்டிக்காட்டாமல் இருக்க என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. ஆனால், நான் எனது கருத்தைப் பதியும் போது ஏற்படும் இன்னொரு சிக்கலையும் இங்கு பேசியாக வேண்டும்.

  கடந்த வாரம் நான் சீமான் குறித்து எனது கருத்தைப் பதிந்தவுடன், அது மே பதினேழு இயக்கத்தின் கருத்தாக பார்க்கப்படுவதாக பலரும் கருதினர். அப்பொழுது அந்தப் பதிவை நீக்க/மாற்றக் கோரியது மே பதினேழு இயக்கம். ஆனால், அந்தப் பதிவை நான் மாற்றவோ நீக்கவோ இல்லை. தோழமை இயக்கங்களின் செயல்பாடுகளை பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம் என்பது மே பதினேழு இயக்கத்தின் கருத்தாக இருக்கின்றது. தற்பொழுது இந்தப் பதிவுக்கும் அது போன்ற ஒரு கருத்தோடு இதனை மாற்றவோ நீக்கவோ கோரிக்கை வரலாம். ஆனால், தோழமை இயக்கங்கள் என்பதற்காக அவர்கள் மேற்கொள்ளும் வரலாற்றுப் பிழைகளை விமர்சிக்காமல் இருக்க என்னால் முடியாது. இதன் அடிப்படையில், இதற்கு மேலும் மே பதினேழு இயக்கத்தில் நான் தொடர்ந்து இயங்குவது என்பது இயலாத ஒன்று.

  இதன் அடிப்படையில், நான் மே பதினேழு இயக்கத்தில் இருந்து, அதன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுகின்றேன். மே பதினேழு இயக்கத்துடனான எனது பயணம் இத்துடன் முடிவுறுகின்றது.

  உமர்.”

  1.7. எனது வீட்டில் நடைபெற்றவை.

 20. அன்று இரவு 11 மணி போல திருமுருகனும், அருள்முருகனும் என் வீட்டுக்கு வந்தார்கள். சிறிது நேரத்தில் பிரவீனும் வீட்டுக்கு வந்திருந்தார். நீங்க பாட்டுக்கு இப்படி பதிவு போட்டுவிட்டு போய்டீங்க. அங்க ஒவ்வொருவரும் என்ன பண்ணுவதென்று தெரியாமல் இருக்கின்றனர். விவேக் அழுதுட்டு படுத்துட்டான். மனோஜ்[29] தண்ணி அடித்துவிட்டு படுத்துட்டான் என்று பிரவீன் கூறினார்.

  1.8. குடிகாரர்களின் கூடாரமான மே பதினேழு


 21. அப்பொழுது ஒரு விடயம் எனக்கு பட்டது. மே பதினேழு இயக்கம் என்பது அறிவாயுதம் எந்த கூடிய ஒரு அறிவுப்பூர்வமான இயக்கமாக தான் அறியப்பட்டது. மனோஜ் மற்றும் இதர நபர்களை பொறுத்தவரையில் நான் விலகுவது என்பது அவர்கள் எதிர்பார்க்காத ஒரு சம்பவமாக நடக்கிறது, ஒரு சிக்கல் ஏற்படுகிறதென்றால் அதை எப்படி அணுகுவது, அதற்கான தீர்வு என்ன என்று அறிவுபூர்வமாக யோசிப்பதை விட்டுவிட்டு தண்ணி அடிச்சுட்டு படுத்திட்டால் அது தீர்வை கொடுத்து விடுமா? அறிவுப்பூர்வமாக சிந்திப்பதற்கு எதிரான ஒரு பழக்கத்தை இவர்கள் கொண்டு வருகிறார்கள். இவர்களின் இப்படிப்பட்ட நிலைபாட்டிற்கு காரணமாக நான் பார்ப்பது வேற ஒரு நபரை. இதில் லேனாவை மிக முக்கியமாக சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். 2012 இல் ஒரு தடவை நான் ஒரு கருத்தை முன் வைத்தேன். அமைப்பில் இருக்கிறவர்களுக்கு குடிபழக்கம் இருக்க கூடாது என்று கூறினேன். உடனடியாக லேனா இல்லை இல்லை அது எல்லாம் அவர்களின் தனிப்பட்ட விடயம், நீங்க தனிப்பட்ட விடயத்தை எல்லாம் அமைப்பில் கொண்டு வந்து செய்யாதீங்க என்று கூறினார்.


 22. அதாவது குடிப்பது என்பது அது அவர்களின் தனிப்பட்ட விடயம் அதனை அமைப்புக்குள் கொண்டு வந்து அவர்களை குடிக்க கூடாது என்று கட்டாயபடுத்த கூடாது என்று கூறினார். ஏன் இவர் இப்படி கூறினார் என்றால் லேனாவுக்கு குடிக்கிற பழக்கம் இருக்கிறது. இந்த கட்டுபாட்டை கொண்டு வந்தால் அவர் குடிக்க முடியாது. அதனால் தான் குடிக்க முடியாமல் போய் விடுமோ என்ற காரணத்துக்காக அமைப்பில் தேவையான நடைமுறையை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தார்.


 23. இன்று அதன் விளைவை பார்த்தீர்கள் என்றால் ஒரு சிக்கல் வரும் பொழுது அதனை எதிர்கொள்வதற்கு சிந்திக்க கூட முடியாமல் மனோஜ் தண்ணி அடித்து விட்டு படுக்கிற நிலைமைக்கு வந்து நிற்கிறது. ஆக அறிவுபூர்வமாக செயல்பட கூடிய ஒரு அமைப்பை குடிப்பதன் மூலம் எதற்கும் தீர்வு கிடைத்து விடும் என்ற நிலையினை ஏற்படுத்திய தலைமை தான் இங்கு இருக்கின்றது.


 24. இதில் வளர்மதி[30], வேற தற்பொழுது உங்கள் அமைப்பில் அதிகார பூர்வமான உறுப்பினர் ஆகி விட்டார். இனி குடிப்பதை பற்றி, குடிக்க வேண்டிய தன் அவசியத்தை பற்றி, எப்படி குடிக்க வேண்டும் என்பது பற்றியும் பல்வேறு கட்டுரைகள் வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. இப்படி பட்ட தலைமைகளை கொண்ட உங்கள் அமைப்பு, குடிப்பதை வலியுறுத்த கூடிய தலைமைகள் கொண்ட ஒரு அமைப்பு அறிவுபூர்வமான அமைப்பு என்று சொல்வது வேடிக்கையாக தான் இருக்கிறது. நான் தலைமை என்று சொன்னவுடனே நீங்கள் திருமுருகனை நினைக்க வேண்டாம். நான் லேனாவை தான் இதில் குறிப்பிடுகிறேன்.


 25. திருமுருகன் என்று சொன்னவுடன் திருமுருகன் சம்பந்தப்பட்ட விடயத்தையும் கூறி விடுகிறேன். எனக்கு தெரிந்து திருமுருகனுக்கு குடிக்கிற பழக்கம் இருக்கிற மாதிரி தெரியவில்லை. இதனை நான் எப்படி சொல்லுகிறேன் என்றால் குடிபழக்கம் அமைப்பில் இருக்க கூடாது என்று நான் தொடர்ச்சியாக பேசி கொண்டு தான் வருகிறேன். இதில் 2013-ல் நாங்கள் ஜெர்மனி சென்ற பொழுது எந்த உணவகத்திற்கு சென்றாலுமே அங்கு முதலில் என்ன குடிகிறீங்க என்று தான் கேட்பார்கள். எங்களுக்கு இதுவே பெரிய சிக்கலாக இருந்தது. பிறகு எங்களுக்கு டீ குடுங்கள் என்று தான் கேட்போம். எங்க போனாலுமே இது வெறும் தண்ணீர் தானா இல்லை வேறு ஏதாவது மது வகையா என்று கேட்கக் கூடிய சிக்கல்கள் இருந்தது. அப்பொழுது திருமுருகன் இவ்வளோ பிரச்சனையா இருக்கே பேசாமல் குடிச்சிடலாம் போல இருக்கே என்று கூறினார். அதற்கு நான் இல்லை பண்ணக் கூடாது என்று மட்டும் கூறினேன். இதை அவர் கேட்டதும் கூட அவர் குடிக்கணும் என்கிற எண்ணத்தில் கேட்டிருப்பார் என்று எனக்கு தோன்றவில்லை. ஏனென்றால் நான் தொடர்ச்சியாக குடி பழக்கம் இருக்க கூடாது என்று கூறி வருவதனால் என்னை சோதித்து பார்ப்பதுக்காக தான் அப்படி கேட்டார் என்று நினைக்கிறேன்.


 26. இன்னும் இரண்டு மூன்று சம்பவங்களில் கூட நான் பார்த்திருக்கிறேன். ஜெர்மனியில் இருந்து நாங்கள் திரும்பி வரும் பொழுது வளர்மதிக்கு சாராயம் வாங்க வேண்டி, என்ன சாராயம் வாங்க வேண்டும் என்று தெரியாமல், வளர்மதியை அழைத்து ஒவ்வொரு சாராய பாட்டிலையும் படித்து காண்பித்து இதில் பலவகை இருக்கிறது இதில் எதை வாங்க வேண்டும் என்று கேட்டு வளர்மதி சொன்னவுடன் அதனை வாங்கி வந்திருந்தார். பிறகு 2013 இல் நாங்கள் டெல்லி சென்றிருந்த பொழுது வளர்மதியும் அறையில் தங்கியிருந்த பொழுது வளர்மதி குடித்து விட்டு இருந்தார். நான் படுத்திருந்தேன். அப்பொழுதும் கூட திருமுருகன் குடிக்காமல் தான் இருந்திருந்தார். வளர்மதி மட்டும் தான் குடித்து கொண்டிருந்தார். 2012 இல் ஒருமுறை வளர்மதியின் வீட்டில் மாடியில் சந்தித்த பொழுதும் கூட வளர்மதி மட்டும் தான் குடித்து கொண்டிருந்தார். திருமுருகன் குடிக்காமல் தான் உட்கார்ந்திருந்தார். அவருக்கு அந்த பழக்கம் இருக்கிற மாதிரி எனக்கு தெரியவில்லை. அதனை தெளிவுபடுத்தி விட வேண்டும் என்பதற்காக தான் இங்கு குறிப்பிடுகிறேன்.


  1.9. முட்டாளாய் காட்சியளித்த அருள்


 27. மீண்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இவர்கள் எனது வீட்டிற்கு வந்ததை பற்றி தொடர்கிறேன். அருள், பிரவீன் எல்லாரும் உட்கார்ந்திருக்கும் பொழுது நான் பேச தொடங்குகிறேன். ஆகஸ்ட் 21 ஆம் தேதி பாக்கியராசன் பதிவிட்டதுக்கு பிறகும், சீமான் கொடுத்த பேட்டியை பார்த்த பிறகும் நான் திருமுருகனை அழைத்து பேசும் பொழுது, திருமுருகன் எனக்கு பேசுவதற்கான வாய்ப்பை கூட கொடுக்கவில்லை. இது தவறானது இல்லையா?. என்னுடைய கருத்து தவறானதாகவே இருந்தாலும் எனக்கு பேச வாய்ப்பு கொடுத்து விட்டு அது ஏன் தவறு என்று தானே சொல்லியிருக்க வேண்டும்? எனக்கு பேச வாய்ப்பே கொடுக்காமல் அவருடைய கருத்தை மட்டும் திணிப்பது என்பது ஒரு வகையான கருத்து சர்வாதிகாரம் தானே. இதனை நீங்கள் எப்படி ஏற்று கொள்ள முடியும் என்று நான் கேட்டவுடனே அருள்முருகன் இல்லை அதெல்லாம் எனக்கு தெரியாது. நீங்க என்ன ஐந்து பேரிடம் பேசி விட்டா முடிவு பண்ணுனீங்க? நீங்க இரண்டு பேரும் பேசினதுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்று கேட்டார்.


 28. இந்த ஐந்து பேர் என்பது அப்போ இருந்த கட்டமைப்பின் படி திருமுருகன், நான், அருள்முருகன், லேனா, புருஷோத்தமன்[31] ஆகிய ஐந்து பேரை குறிக்கிறது. அதற்கு நான் பதில் கூறினேன், இந்த ஐந்து பேரும் என்றாவது சேர்ந்திருந்து பேசி முடிவெடுத்திருக்கிறோமா ? எப்பொழுதுமே யாரோ இரண்டு பேர் பேசி அது தான் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்திருக்கிறோம். யாரோ இரண்டு பேர் என்பது யாராக வேண்டுமென்றாலும் இருந்திருக்கலாம். ஒருவேளை அது நானும் திருவாகவோ, இல்லை லேனாவும் புருஷோத்துமாகவோ, இல்லை நானும் அருளாகவோ இருந்திருக்கலாம். எப்படி வேண்டுமென்றாலும் இருந்திருக்கலாம். இப்பொழுது கூட நம்ம இரண்டு பேர் தானே பேசி கொண்டிருக்கிறோம். ஐந்து பேரும் பேசிவிட்டு தான் முடிவெடுக்கணும் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை தானே என்று கூறினேன்.

 29. அதற்கு அருள்முருகன் இல்லை அதையெல்லாம் விட்டுருங்க, நீங்க அமைப்புக்கு டேமேஜ் (பங்கம்) பண்ணி விட்டு போய்டீங்க. நீங்க எப்படி இந்த பதிவை போடலாம். நீங்க பதிவு போட்டவுடனே தில்லைக்குமரன் [32] வந்து லைக் போடுறான், கலைக்கோவன் [33] வந்து லைக் போடுறான். அப்போ தில்லைக்குமரன் சொல்லி தான் நீங்க பதிவு போடுறீங்களா என்று கேட்டார்.

 30. நான் பதிவு போட்டது என்பது ஒரு பொதுவான விடயம். அதில் யார் வந்து லைக் போடணும் யாரு போடக்கூடாது என்று நான் சொல்ல முடியாது. அது அவரவர் விருப்பம். அதில் யாரோ ஒருவர் லைக் போட்டதுக்கு, அவர் சொல்லி தான் நான் பதிவு போட்டேன் என்று சிந்திக்க கூடிய அளவுக்கு ஒரு முட்டாளாக தான் அருள்முருகன் அங்கே எனக்கு காட்சியளித்தார். இதில் நான் அடிப்படையில் ஒரு கேள்வியை வைக்கிறேன். ஆகஸ்ட் 21 ஆம் தேதி அன்று எனக்கு பேசுவதற்கு எந்த விதமான வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை என்பதனை பற்றி பேச எந்த முயர்ச்சியுமே செய்யாமல், வேற வேற காரணங்கள் கற்பித்து கொண்டு (இது தான் இங்கே எப்பொழுதுமே நடக்கிறது) இவர்களாகவே ஒரு முடிவுக்கு வருவார்கள்.

  1.10. முழுமையாகக் கழன்று விழுந்த திருமுருகனின் முகமூடி

 31. அப்பொழுது நான் பேசி கொண்டிருக்கும் பொழுது விஜய்ராமச்சந்திரன் பற்றி பேசினேன். பேசினவுடனே திருமுருகன் பயங்கற கோபத்துடன் விஜய்ராமச்சந்திரன் எல்லாம் ஒரு ஆளாங்க, அவனை பத்தியெல்லாம் நீங்க பேசிட்டு இருக்கீங்க? அவன் சொல்லி எல்லாம் நாம் ஒன்னும் பண்ண முடியாது என்று கூறினார். திருமுருகன் மாட்டியிருந்த முகமூடி முழுமையாக கழன்று விழுந்தது. இது தான் திருமுருகனுடைய எதிர்வினையாற்றும் முறை. தன்னை எதிர்த்து ஒருவர் பேசிவிட்டால், அல்லது தனது தவறை யாராவது சுட்டிக்காட்டி விட்டால் போதும், அவர் யாராக இருந்தாலும் திருமுருகன் ஏற்று கொள்வதில்லை. தன்னுடைய தவறை ஏற்றுகொள்ளும் பக்குவம் இல்லை என்பதனை தான் இது காட்டுகிறது.

 32. மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் சீமானை கண்டிக்க வேண்டும் என்பது அத்தனை பேருடைய முடிவாகவும் இருக்கிறது. அதாவது அமைப்பில் இருக்க கூடிய திருமுருகனை தவிர்த்து அத்தனை பேருடைய முடிவும் அதுவாக தான் இருக்கிறது. ஆனால் திருமுருகன் என்ற ஒற்றை நபர் மட்டும் வேறு ஒரு முடிவில் இருக்கிறார். அமைப்புக்கு வெளியில் இருக்கும் விஜய்ராமச்சந்திரன் கூட அந்த முடிவில் தான் இருக்கிறார். இதையெல்லாம் சொல்லும் பொழுது அவனெல்லாம் ஒரு ஆளா என்று சொல்லுவது தன்னுடைய நிலையை எந்தவொரு நிலையிலும் மாற்றி கொள்ள விரும்பாத ஒரு மனப்போக்குடன் இருக்கும் நபர் தான் திருமுருகன்.

 33. நான் பத்தி 3 ல் ஒரு சம்பவத்தை சொல்லியிருந்தேன். விவேக் “மெடிக்கல்மிராக்கிள்” (Medical Miracle) என்று சொல்லியிருந்ததை குறிப்பிட்டிருந்தேன். அதை பார்த்தீர்கள் என்றால் திருமுருகன் எந்த ஒரு நிகழ்வுக்குமே நேரத்துக்கு வருவதில்லை. அது அவரின் பழக்கமாக இருக்கிறது. அதனை வெளிப்படையாக ஒத்து கொள்வது நல்லது. நான் அதை பற்றி பேசும் பொழுது “நீங்க முன்னாடியெல்லாம் 2 மணி என்று சொல்லும் பொழுதே பசங்க எல்லாம் ஓஹோ 2 மணியா அப்போ 4 மணிக்கு வந்தால் போதும் என்று பேசஆரம்பிச்சுடாங்க”. இது எல்லாம் உங்களால் தான் நடக்கிறது. நீங்கள் அதனை மாற்றி கொள்ளுங்கள் என்று அவரிடம் சொல்லும் பொழுது, அவர் இல்லை இல்லை நான் லேட்டா வரதுனால அவங்க ஒருத்தருக்கொருவர் பேசி பழகுவதற்க்கு வாய்ப்பிருக்கிறது என்று கூறினார். அவர்கள் பேசி பழக வேறு வாய்ப்பா இல்லை?, எத்தனையோ இடங்களில் துண்டறிக்கை குடுக்க செல்லும் பொழுது ஒன்றாக இருக்கிறாகள், பேசுகிறார்கள் பழகுகிறார்கள். இந்த இடத்தில் தான் பேசி பழக வாய்ப்பு கொடுக்கிறதா? தன்னுடைய தவறை, அதாவது தான் காலம் தாழ்த்தி வருவதை ஏற்று கொள்வதற்கான பக்குவமில்லாமல் வேறு ஒரு காரணம் சொல்வது. இது மாதிரி தான் எப்பொழுதுமே தன்னுடைய தவறை ஏற்று கொள்ளாமல் அதனை மூடிமறைப்பதற்கு வெவ்வேறு காரணங்கள் சொல்வது திருமுருகனுடைய இயல்பு. இது தான் விவேக் சொன்ன விடயத்திலும் விஜய்ராமச்சந்திரன் சொன்ன விடயத்திலும் பார்க்க முடிகிறது. இன்னும் கூட ஒரு விடயத்தை சொல்லுகிறேன்.

 34. 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எமர்ஜென்சிக்கு எதிராக சுவரொட்டி போட வேண்டும் என்று ஒரு வேலை ஆரம்பமானது. ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அதை திருமுருகன் போடுகிறார். அருள்முருகனும் அந்த சுவரொட்டி வடிவமைப்பதில் சம்பந்தப்பட்டிருந்தார். திருமுருகனின் அலுவலகத்தில் இருந்து தான் வடிவமைத்து போடுகின்றார். போட்டவுடன் அதில் ஒரு பின்னூட்டம் எழுத்தாளர் ஞானி [34] யிடம் இருந்து வருகிறது. அவர் நீங்க ஜூன் 26 1976 என்று போட்டிருக்கிறீர்கள். இது தவறு. எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது ஜூன் 25 1975 இதை திருத்திக் கொள்ளுங்கள் என்று பின்னூட்டம் இடுகிறார்.

 35. ஞானி பின்னூட்டம் இட்டது 9:37 மணிக்கு.[35] உடனே திருமுருகனிடம் இருந்து எனக்கு அழைப்பு வருகிறது. ஞானி போட்டுட்டான் இப்போ என்ன பண்ணுறது என்று கேட்டார். நான் தவறாக இருக்கும் பட்சத்தில் மாற்றி கொள்ள வேண்டியது தானே திரு என்றேன். இல்லை வேற ஏதாவது பண்ண முடியுமா என்று கேட்டார். தவறை தவறு என்று நேரடியாக ஒத்துக் கொள்வோம் திரு. இதுல வருடம் தவறாக இருக்கிறது, தேதி தவறாக இருக்கிறது சரியான தகவலை போடுவது தான் சரியாக இருக்கும். இதில் எந்த விதமான மாற்றமும் பண்ண முடியாது. இதையெல்லாம் நாம் எப்படி மாற்ற முடியும் என்று கூறினேன். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் லேனா, அருள் என்று வேற வேற ஆட்கள் பேசுகிறார்கள். அதில் நான் கூறியது தேதி தவறாக போட்டு விட்டோம். அதனை வெளிப்படையாக ஒத்து கொண்டு விட்டு சரி செய்து கொள்வதில் கெளரவ குறைச்சல் ஒன்றுமில்லை என்று கூறினேன். ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு 11:06 மணிக்கு திருமுருகன் ஒரு பதிலை போட்டார். பதில் போட்ட பின்பு ஒரு தனி பதிவில் திருத்தம் செய்யப்பட்ட போஸ்டரையும் போட்டார். அதில் அது வடிவமைப்பு பிழை. வருடம் தவறாக போட்டு விட்டோம் அதனால் நாங்கள் மாற்றி வெளியிடுகிறோம் என்று பதிவிட்டார்.[36] 36. இது வடிவமைப்பு பிழை எல்லாம் ஒன்றுமில்லை தோழர்களே. ஏனென்றால் அருள்முருகன் உட்கார்ந்து தான் Content (செய்தி) எழுதி கொடுக்கிறார். அங்கு திருமுருகனின் அலுவலகத்தில் தான் வடிவமைக்கப்படுகிறது. அவரும் அதனை பார்க்கிறார். எல்லாரும் பார்த்து விட்டு ஒப்புதல் கொடுத்ததற்கு பிறகு தான் பதிவேற்றுகின்றனர். திருமுருகன் தனது முகநூல் பக்கத்தில் தான் அதனை பதிவேற்றுகிறார்.

 37. ஒரு Advertisement Company (விளம்பர நிறுவனம்) நடத்துகிற திருமுருகனுக்கு ஒரு விடயம் அச்சுக்கு போவதற்கு முன்பு எந்தளவுக்கு நுணுக்கமாக பார்ப்பார்கள் என்று விளம்பர நிறுவனம் நடத்தும் திருமுருகனுக்கு நன்றாகவே தெரியும். அங்கு வடிவமைப்பு பிழை வருவதற்கான வாய்ப்புகளே இல்லை. இவர்கள் சரியான தகவல்கள் இல்லாமல் குருட்டாம் போக்கில் ஏதோ எழுதிவிட்டு அதனை ஒத்து கொள்ளும் மனபக்குவம் இல்லாமல் இருப்பதற்கான ஒரு ஆதாரம் தான் இது. இது போல பல சம்பவங்களை நான் சொல்ல முடியும். திருமுருகனின் முகநூலில் இருந்து ஒரு சம்பவத்தை குறிப்பிட வேண்டும் என்பதற்காக தான் இதை நான் குறிப்பிடுகின்றேன்.

 38. இந்த மாதிரியான ஒரு சிக்கலில் தான் திருமுருகன் தன்னுடைய தவறை ஏற்றுகொள்ளும் தன்மை இல்லாமல், உள்ளே வேறொரு காரணத்தை வைத்துக்கொண்டு வெளியே சீமானை எதிர்க்க கூடாது என்பதற்கு அவர் கூறும் காரணம் நாம் தமிழர் தொண்டர்களை நாம் பகைத்து கொள்ள வேண்டாம் என்று. இது என்னை பொறுத்தவரையில் நாம் தமிழர் தொண்டர்களை பகைத்து கொள்ள வேண்டாம் என்று திருமுருகன் சொல்வதற்கும், விஜய் ரசிகர்களை பகைத்து கொள்ள வேண்டாம் என்று சீமான் சொல்வதற்கும், தி.மு.க தொண்டர்களை பகைத்து கொள்ள வேண்டாம் என்று திருமாவளவன் சொல்வதற்கும், சிங்களவர்களை பகைத்து கொள்ள வேண்டாம் என்று கருணாநிதி சொல்வதற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இதில் நாலு பேரும் பகைத்து கொள்ளவேண்டாம் என்று சொல்வதற்கு இருக்கும் அடிப்படை ஒற்றுமை என்னவென்றால் அவர்கள் செயல்பட விரும்பவில்லை என்பதாகும். செயல்பட விரும்பாமல் இருப்பதற்கு ஒவ்வொருவருக்கு ஒரு காரணம் இருக்கிறது. கருணாநிதிக்கு ஒரு காரணம், திருமாவளவனுக்கு ஒரு காரணம், சீமானுக்கு வேறு காரணம் திருமுருகனுக்கு வேறு காரணம் ஆனால் பின்னணியில் அவர்கள் தாங்கள் செயல்பட விரும்பாமல் இருப்பதற்காண உண்மையான காரணத்தை நேரடியாக கூறாமல் வேறு ஒரு காரணத்தை கூறி பூசி மெழுகுகிறார்கள் என்பது ஒரு விடயமாக இருக்கிறது.

 39. இதை நான் ஆகஸ்ட் 25 ஆம் தேதி எனது வீட்டில் வந்து பேசிய பொழுது கூட நான் இதனை குறிப்பிட்டேன். இதில் கருணாநிதியின் பெயரை மட்டும் நான் குறிப்பிடவில்லை. மற்ற மூன்று பேரையும் மட்டும் நான் கூறினேன். ஏனென்றால் நான் முழுமையாக எல்லாவற்றையும் பேச வேண்டாம் என்று நினைத்திருந்தேன். அதனால் ஒரு சம்பவத்தை மட்டும் முதலில் கூறினேன். திருமுருகன் எனக்கு பேச வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது மட்டும் கூறினேன். இது ஜனநாயக பூர்வமான தன்மை இல்லை என்பதாகும். இன்னொரு விடயமும் நான் அதில் வைத்தேன். அது குறித்து பிறகு பேசுகிறேன். அன்றைக்கு வாக்கு வாதமாக போக வேண்டாம் என்பதனால் தான் நான் இவ்வாறு கூறினேன். அதனை அருள்முருகன் ஏற்று கொள்கிறார். ஆனாலும் நீங்க வந்து அமைப்பில் சேர வேண்டும். நீங்க அமைப்பை விட்டு விலகியதை நாங்கள் ஏற்று கொள்ள முடியாது என்று கூறினார். நான் திருமுருகன், சீமான், திருமாவளவன், கருணாநிதி ஆகியோர் கூறக்கூடிய காரணங்கள் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று கூறிய பிறகு இப்போ இவர்கள் வேறு ஒரு வாதத்தை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

 40. அதாவது சீமானை எதிர்க்காமல் இருப்பதற்கு ஒருகாரணம் புதிதாக கூறி இருக்கிறார் அது என்னவென்றால் நாம் வேறு ஒரு இலக்கை நோக்கி பயணிக்கிறோம், நமக்கு இலக்குதான் முக்கியம். இடையில் ஏற்படும் இதுபோன்ற நிகழ்வுகளையெல்லாம் நாம் பேச வேண்டியதில்லை என்பதாக ஒரு சமாளிப்பு வாதத்தை திருமுருகன் பயன்படுத்துகின்றார். இந்தவாதம் கூட ஒரு அடிமையை பார்த்து போலித்தனமான குரு சொல்வதை போல சொல்கிறார். இதை எப்படி கூறுவது என்றால் இஸ்ஸாமிய அடிப்படைவாதிகளிடம் பேசினால் உலகில் இவ்வளவு வன்முறை நடக்கிற்தே என்றால் அதற்கு அவர்கள் கூறுவது நாம் பூமிக்கு வந்தது இந்த வேலைக்கு அல்ல நாம் வந்த நோக்கம் வேற அதை செய்ய வேண்டும் அதுதான் மறுஉலகிற்கு உகந்தது. அப்படிதான் இவருடைய கருத்தும் எது நடந்தாலும் கண்டுகொள்ள கூடாது நாம் நம் இலக்கை நோக்கி பயணிக்கனும் என்பது. எதை பற்றியும் கண்டுகொள்ளக்கூடாது என்பது தான் அவரின் வாதமாக இருக்கிறது. ஈழ ஆதரவாளர்களிடம் சீமானோ, வைகோவோ எது பேசினாலும் சந்தேகம் வராது, ஆனால் கருணாநிதி எதாவது பேசினாலோ, ஈழத்திற்க்கு ஆதரவாக பேசினாலோ சந்தேகம் வரும். இது ஈழ ஆதரவாளர்களிடம் மட்டுமல்ல அனைத்து தமிழர்களிடமும் அந்தசந்தேகம் வரும்.ஆனால் வைகோவோ, சீமானோ பேசினால் அவர்கள் ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். இதுபோன்ற சூழலில் புலிப்பார்வை போன்ற ஈழ வரலாற்றை திரிக்கும் விடயங்களில், அல்லது ஈழவிடுதலையை அழிக்கும் செயல்களில் துணைபோவது, அது வைகோவாக இருந்தாலும் சீமானாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை ஈழவிடுதலையை நேசிக்கும் யாராலும் ஏற்றுகொள்ள முடியாது. இப்படிபட்ட நிகழ்வை அம்பலப்படுத்த திருமுருகன் ஏன் முன்வரவில்லை என்பதைதான் தான் நாம்ஆராய வேண்டும். இவர் ஏன் சீமானை எதிர்க்க முன்வரவில்லை என்பதில்தான் அடங்கிருக்கிறது இந்த ஒட்டுமொத்த இயக்கத்தை பற்றி நீங்கள் புரிந்துகொள்வதற்கான சூட்சமம்.

  1.11. சீமானை ஏற்கிறாரா திருமுருகன்?

 41. அதற்காக அவர் சீமானை அனைத்து இடங்களிலும் ஏற்றுக்கொள்கிறாரா என்றால் இல்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். உதாரணத்திற்க்கு இரண்டு சம்பங்களை கூறலாம். 2014 ஆகஸ்ட் மாதம் திருமுருகன் திடீரென்று எனக்கு போன் செய்தார், அப்பொழுது ஹரிகரன் [37], ஒரு பதிவு போட்டுள்ளான்[38] அதனை பார்த்திர்களா என்று கேட்டார். இல்லை, என்ன பதிவு என்று கேட்கும் போது, சீமானின் அலுவலகத்தில் ஏர்டெல் எண்கள் தான் உபயோகபடுத்துகிறார்கள் அதுசம்பந்தமாக ஒருபதிவு போட்டுள்ளான் அந்தப் பதிவை எடுக்கசொல்லலாமா? என்றுகேட்டார். “ஏன் எடுக்கசொல்கிறிர்கள்? ஹரி செய்திருப்பது நல்ல வேலை தானே அதை ஏன் எடுக்கணும்?” என்றேன். சரி சரி என்று கூறினார். இது ஏதோ பதிவை எடுக்க சொல்வதற்காக அல்ல. எங்கே நான் அந்த போஸ்டை எடுக்க சொல்லிவிடுவேனோ என பரிசோதித்து பார்க்க. இதில் இன்னொன்றும் அடங்கி உள்ளது நானோ திருமுருகனோ சொல்லி ஹரிகரன் ஒரு போஸ்டை எடுக்க முடியுமென்றால், அது போல ஒரு போஸ்டை போட சொல்ல முடியும் என்றும் கொள்ளலாம். சீமானை பற்றிய வலுவான ஆதாரத்தை ஹரி பதிவு செய்ததும், அதை பற்றிய கருத்தை அறிய என்னிடம் கேட்டு பார்க்கலாம் என்ற நோக்கில் தான் கேட்டிருக்கிறார்.

 42. இன்னோரு விடயமாக 2014 பிப்ரவரி 2ம் தேதி முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை ஏற்பாடு செய்தது நெடுமாறன் அய்யா, தோழர் மணியரசன். குடந்தை அரசன் போன்றோர். எதற்கு என்றால் வருகின்ற அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பது என்ற முடிவை எடுப்பது என்பதற்காக. அதாவது ஆலோசனை என்பது ஆதரிப்பதற்கான ஆலோசனை கூட்டம். முடிவு ஏற்கனவே எடுக்கபட்டது. இதில் மே பதினேழு இயக்கத்திற்கு அழைப்பு கிடையாது. திருமுருகன் என்னிடம் உமர் இது போன்று ஒரு ஆலோசனை கூட்டம் நடக்கிறது. நாம் போய் அதை மாற்றனும் என்றார், சரி நீங்கள் போய் வாருங்கள் என்றேன், அதற்கு அவர் நீங்களும் வாருங்கள் என்றார். நான் அவ்வளவு தூரம் பயணம் செய்யும் அளவிற்கு உடல்நிலை ஒத்துவராது என்று கூறினேன் இல்லை நாம் காரில் செல்லலாம் வாருங்கள் என்றார். சரி என்று நான், திருமுருகன், கொண்டல்[39], ஆகியோர் சென்றோம்,. அங்கே சென்ற பிறகு அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதற்கான கூட்டம் என்று தெரிந்தது. கூட்டத்தின் போக்கு அமெரிக்க தீர்மானத்தை விட்டால் நமக்கு வேறு வழியில்லை என்பது போல் போய் கொண்டு இருந்தது. நெடுமாறன் அய்யா என்ன முடிவெடுத்தாலும் அனைவரும் கட்டுபடுவது என்று பேசினார்கள். அப்பொழுது நான் எழுந்து பேசினேன். கடந்த ஆண்டு அமெரிக்க தீர்மானத்தை பற்றி அனைவருக்கும் வெவ்வேறு நிலைப்பாடு இருந்தது, ஆனால் இன்றைக்கு என்ன மாதிரி இருக்கிறது. அதை பற்றிய கருத்து என்பது என்ன? இனப்படுகொலை பற்றியா? போர் குற்றம் பற்றியா? என்று நான் விரிவாக பேசினேன், கடைசியில் இனப்படுகொலைக்கு என்று இருந்தால் தவறில்லை. ஆனால் போர்குற்றமாக இருந்தால் ஆதரிக்க முடியாது என்று பேசினேன்..

 43. அதற்கு பிறகு பேசியவர்கள் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என்று பேசினார்கள், அப்புறம் திருமுருகன் பேசினார், சீமானும் அதையே தான் பேசினார், கூட்டத்தின் முடிவு மாறியது. இதில் நான் பேச தொடங்கும் பொழுது முதலில் சீமானை பாராட்டிவிட்டு தான் பேசினேன். “2013 மார்ச் 4 தேதி பல்லாவரத்தில் நடைபெற்ற தொடர் முழக்க உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய தோழர் சீமான் அவர்கள் இந்த தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமலே எப்படி ஆதரிக்க முடியும் என்று பேசினார். அந்த கேள்வி இன்றும் பொருத்தமாக இருக்கிறது” என்று சொல்லி பேச ஆரம்பித்தேன். கூட்டம் முடிந்து வெளியில் வந்த திருமுருகன் “அவனையெல்லாம் (சீமானை) அங்கீகரிக்காதீர்கள்” என்றார். “இல்லை திரு போன வருடம் நடந்ததை வைத்து பேசினேன்.” என்றேன் “இல்லை இல்லை அவனை அங்கீகரிப்பது என்பது பெரிசு. அதுவும் நாம் அங்கீகரிக்ககூடாது. இப்ப கூட நீங்க பேசும் போதுமாற்றி பேசி இருப்பான், என்ன வென்று தெரியல இப்பொழுது பேசவில்லை” என்றார். அங்கு சீமான் செய்த செயல் நல்ல செயல். நான் பேசியது கூடஒரு செக்வைப்பது போல தான். அன்று என்ன பேசினார், இன்று நிலை என்ன என்பதும் அவருக்கு கேள்விகளை எழுப்பும். அதனால் தான் நான் அப்படி பேசினேன். அன்றைய நிகழ்வு குறித்து கொண்டல் ஒரு முறை இப்படி குறிப்பிட்டார். ”செஸ் போடு காயின் ஒண்ணு ஒண்ணா வெட்டுப்பட்டு விழற மாதிரி இருந்துச்சு, நீங்க ஒவ்வொருத்தரைப் பத்தியும் பேசுனது” ஆனால் அதை கூட நாம் ஆதரிக்க கூடாது என்று திருமுருகன் கூறினார். சீமானை நாம் பாராட்டக் கூடாது. ஆனால் சீமானை திட்டுவதில் அவருக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அதை யார் செய்வது என்பதில் தான் பிரச்சனை இருக்கிறது. நான் செய்தது என்பது தான் அங்கு பிரச்சனை. ஹரிகரன் செய்தால் ஏற்றுகொள்வார்.

  1.12. எளிய மனிதர் சொல்லித்தந்த பாடம்

 44. மீண்டும் ஆகஸ்ட் 25 ம் தேதி இரவு நடந்தவற்றைப் பார்ப்போம் அன்றைய தினம் , நான் ஒரு விடயத்தில் மிகதெளிவாக இருக்கிறேன். ஆக்ஸ்ட் 21ம் தேதி எனக்கு பேச வாய்ப்பு மறுக்கபடுகிறது. அதில் அருள் போன்றவர்கள் ஒரு இயக்கத்தின் ஒருங்கிணப்பாளர்களிடம் ஒன்றை சார்பாக அணுகும் பொழுது அந்த அமைப்பினுடைய ஜனநாயகத்தன்மை அங்கு அடிப்பட்டு போய்விடுகிறது. அன்றைக்கு அருள் பேசியதில் உங்கள் பதிவுக்கும் தில்லைகுமரன் லைக் போட்டுள்ளார், கலைக்கோவன் லைக்போட்டுள்ளான். தில்லைகுமரன் சொல்லிதான் நீங்கள் பதிவை போட்டீர்களா? என்று கேட்கிறார், மீண்டும் நான் அடிக்கடி சொல்கிறேன், திருமுருகன் பேசவாய்ப்பு கொடுக்கவில்லை என்று ஆனால் அதனை காதில் வாங்காமல் அவர் சொல்லிகேட்கிறீர்களா, இவர்சொல்லி கேட்கிறீர்களா ? என்ற தொணியில் மட்டும் பேசி ஒரு சிக்கலை தீர்க்காமல், அல்லது சரி செய்ய முற்படாமல் அதனை வளர்ப்பதிலேயே குறியாக இருந்தார். இதில் முக்கியமான விடயமாக திருமுருகனின் நேர்மை மீது சந்தேகம் இருக்கா என்று கேட்டார். இந்த கேள்விக்கு இரண்டு விதமாக பதில் சொல்லாம். ஒன்று நேரடியான பதில், இன்னொன்று அவர்கள் எதிர்பார்த்தபதில். அவர்கள் என்றால் திருமுருகன், லேனாகுமார், அருள்முருகன், பீரவீண் போன்றோர் எதிபார்த்தபதில்.. இதில் திருமுருகன் நேர்மையின் மீது சந்தேகம் இல்லை, என்று அவர்கள் எதிர்பார்த்த பதிலை கூறினேன். அதாவது திருமுருகன் நேர்மையின் மீது சந்தேகம் இல்லை என்று கூறினேன், ஏன் அப்படி கூறினேன் என்றால் ஒரு சிறுவயது சம்பவத்தை சொல்கிறேன். அதில் இருந்து இதை புரிந்துகொள்ளலாம்.

 45. மன்னார்குடி அருகில் இருக்கும் கூத்தாநல்லூர் என்னும் ஊரில் ஒருவர் ஹோட்டல் வைத்து இருந்தார். அவர் அருகில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்குவார், பணம் கொடுக்கும் போது தினமும் மளிகை கடைகாரார் பில் தரும் போது 5 ரூ 10 ரூ என அதிகப்படுத்திபில் கொடுப்பார், இது ஹோட்டல் கடைகாரருக்கு சந்தேகத்தை வர ஆரம்பித்தது. எனவே கடைகாரார் கொடுக்கும் பில்லை அவர் சேர்த்து வைத்து கொள்ள ஆரம்பித்தார். ஒருமாதத்திற்கு சேர்த்துவைத்து இருந்து கடைசியில் கணக்கு பார்க்கும் போது எல்லா பில்லும் தவறாக இருந்திருக்கிறது. ஒரு நாள் தவறவாக இருந்தால் சரி என்று விட்டுவிடலாம் ஆனால் எல்லா நாளும் தவறான கணக்கு என்றால் அது தெரிந்தே ஏமாற்றுவது. கையும் களவுமாக அந்த மளிகைக் கடைக்காரரை பிடிக்க வேண்டும் என்பதற்காக, படிக்காத அந்த ஹோட்டல் உரிமையாளர், அனைத்து பில்களையும் சேகரித்து, ஒரு மாதத்திற்கு பிறகு அவற்றை எடுத்துக் கொண்டு என் மச்சானிடம் முறையிட்டார். என் மச்சானும், அவற்றை பார்த்து விட்டு, தொடர்ந்து தவறு செய்த அந்த மளிகைக் கடைக்காரரை அழைத்து கேட்டபொழுது, தான் தவறு செய்ததை ஒத்துக்கொண்டு கூட்டுத்தொகையில் ஏமாற்றி திருடிய பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டார்.

 46. படிக்காத இந்த எளிய மனிதரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட விடயம், ஒருவர் தவறு செய்து அது தெரிய வந்தால், தான் செய்த தவற்றிலிருந்து தப்பிக்கவே முடியாத அளவிற்கு, அவர் மாட்டும் வரை, அவர் தவறு செய்கிறார் என்பதை நாம் காட்டிக்கொள்ளக்கூடாது என்பதாகும். ஆனால் அந்த தவறை திட்டமிட்டு செய்து இருக்கிறார் என்றால் உடனே கேட்டால் தெரியாமல் செய்துவிட்டேன் என்று தப்பித்து விடுவார்கள். அது போல திருமுருகன் செய்ய கூடிய தவறுகளை அவர் தெரியாமல் செய்துவிட்டேன் என்று கூறி தப்பித்துகொள்வார், அதனால் இவருக்கு தப்புவதற்கு வாய்ப்பு கொடுக்ககூடாது என்று திருமுருகன் செய்ததவறுகளை தொகுத்து அதற்கான ஆதாரங்களை கொண்டு திருமுருகனை அம்பலபடுத்துவது என்பதற்காக அன்று அவரின் நேர்மையின் மீது சந்தேகம் இல்லை என கூறினேன்.

 47. பிறகு அவரின் நேர்மையின் மீது சந்தேகம் இருந்ததா என்றால்... ஆம் இருந்தது 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து அவரின் மீது சந்தேகம் இருந்தது. அவர் தவறவானவர் என்று சந்தேகம் இருந்தது.. நான் 2014 ஆகஸ்டில் வெளியேறிய போதும் என்னிடம் ஆதாரம் இருந்தாலும் அதை அப்பொழுது வெளியிடாமல் அதற்கு பிறகும் திருமுருகன் மேற்கொள்ள விருக்கும் சில வேலைகள் நடைபெற இருந்ததாலும் அவர் தொடர்சியாக தவறு செய்ய வாய்ப்புகள் இருப்பதால் காத்திருந்தேன். என் வீட்டிற்க்கு வந்த போது நான் இதையெல்லாம் விரிவாகபேசவில்லை. அதில் முக்கியமானது தேர்தல் தொடர்பானது.

  1.13. 2014 பாராளுமன்றத் தேர்தலும் மே பதினேழும்

 48. மே பதினேழு இயக்கத்தை விட்டு நான் விலகிய பிறகு பல்வேறு தருணங்களில், மே பதினேழு இயக்கத்தின் தலைமையில் இருக்ககூடியவர்கள் உங்களிடம் பல்வேறு பொய்யான தகவல்களை கூறிவந்திருக்கிறார்கள். இதில் நான் வெளியேறிய பொழுது குறிப்பிட்ட காரணத்தை பற்றி புரிந்து கொண்டால் தான், எங்களுக்கிடையே நடந்த உரையாடலை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அது 2014 நடந்த பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பானதாகும். பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நான் கூற இருப்பது 2014 ஆம் ஆண்டில் நடந்த சம்பவங்களை பற்றியது. இதில் மாதம் மற்றும் தேதியை சேர்த்து குறிப்பிடுகிறேன். வேற ஒருவருடத்தில் நடந்திருந்தால் மட்டும் அந்த வருடத்தை தனியாக குறிப்பிடுகிறேன்.

  1.13.1. உதயகுமாருடன் நடைபெற்ற சந்திப்பு

 49. 2014 ஜனவரி மாதம் பொங்கல் சமயத்தில், நான், திருமுருகன், அருள், பிரவீன், லேனா ஆகிய ஐவரும் இடிந்தகரை சென்றிருந்தோம். அங்கு தோழர் உதயகுமாரை [40] சந்தித்தோம், எதற்காகவென்றால் அவர் அப்பொழுது ஆம்ஆத்மி கட்சியில் சேர்வதற்கான முயற்சியால் இருந்தார், கிட்டதட்ட அவர் அதற்கான முடிவினை எடுத்துவிட்டார் என்பதும் எங்களுக்கு தெரிந்திருந்தது. அதனால் அவரிடம் சென்று ஆம்ஆத்மி கட்சியில் சேரவேண்டாம், ஏனெனில் ஒருமாற்று அரசியல் வடிவமாக அல்லது முகமாக உதயகுமார் இருக்கின்றார். அவர் ஒரு இந்தியதேசிய கட்சியில் சேருவது என்பது இந்த மாற்று அரசியலை ஒட்டு மொத்தமாக அங்கு சென்று அடகுவைத்தது போலிருக்கும் என்று நாங்கள் கருதினோம். அதிலும் குறிப்பாக நாங்கள் அங்கு சென்று அவரிடம் பேசி கொண்டிருந்த போது, நான் ஆம் ஆத்மியில் இருக்ககூடிய / ஆம்ஆத்மி- யின் புரிதலின்மையை அவர்களின் பல்வேறு ஆவணங்களின் மூலமாக பேசினேன். மேலும் 2013ல் நாங்கள் ஆம்ஆத்மி கட்சியினரை குறிப்பாக அட்மிரல் ராமதாஸ் அவர்களை சந்தித்ததையும், அவருடனான சந்திப்பின் அடிப்படையில் பொதுவாக அவர்கள் தமிழர் சார்ந்த விடயங்களில் அவர்களுடைய அணுகுமுறை எப்படி இருந்தது என்பதை கண் கூடாக அன்று நாங்கள் கண்டிருந்தோம்.

 50. இதையெல்லாம் கூட உதயகுமாரிடம் பேசியிருந்தோம். அங்கு ஒரு இணக்கமான சூழல் இருந்தது என்று சொல்லமுடியாது, அவரும் அவருடைய நிலையைபற்றி தெரிவித்திருந்தார். நாங்கள் இதனையே திரும்ப திரும்ப வலியுறுத்தி கொண்டிருந்தோம். இவ்வாறாக போய்க் கொண்டிருந்தது. அங்கு அவரை சந்தித்தது என்பது ஆம் ஆத்மி கட்சியில் அவர் சேர கூடாது என்பதை சொல்வதற்காகதான். நான் இங்குதோழர் உதயகுமாரை பற்றி ஏன் பேசுகிறேன் என்றால், திருமுருகன் சமீபத்தில் கூறி கொண்டிருக்கும் பொய்களில் ஒன்று என்னவென்றால் நாங்கள் ஆம்ஆத்மியிடம் சென்று உங்களுக்கு ஆதரவளிக்க முடியாது என்று கூறினோம். தேவைபட்டால் அவர்களையே எழுதி கொடுக்க சொல்லமுடியும் என்றெல்லாம் பேசி இருக்கிறார். ஆகையால் தான் நடந்த சம்பவங்களை முழுமையாக சொல்லிவிடுகின்றேன், ஒவ்வொன்றாக.

  1.13.2. மனிதநேயமக்கள் கட்சி

 51. அதற்கு பிறகு பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரம் என்று நினைகின்றேன், அப்பொழுது மனிதநேய மக்கள் கட்சியின் தமிமுன்அன்சாரியையும்[41], ஹாரூன் ரசீது[42] , நான் சந்தித்தேன். அப்பொழுது ம.ம.க. தி.மு.க.வுடனான கூட்டணி உறுதியாகிவிட்டது. அது தேர்தல் நிலைப்பாடு குறித்தான சந்திப்பு அல்ல. மாறாக மனித நேய மக்கள் கட்சி எப்பொழுதுமே நமது போரட்டங்களில் துணை நிற்க கூடியவர்கள். ம.ம.க. அல்லது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், திமுக கூட்டணியின் காரணமாக அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பது குறித்தான நிலைபாட்டை எடுத்துவிட கூடாது என்பதற்காக, அவர்களை சந்திப்பதற்காக நான் சென்றிருந்தேன்.

 52. அப்பொழுது அவர்களிடம் நீங்கள் திமுக கூட்டணியில் இருந்தாலும், திமுக இதுகுறித்து ஆதரவு நிலைப்பாடு எடுத்தாலும், நீங்கள் நியாயம் சார்ந்து முடிவெடுக்க வேண்டும், கூட்டணி தர்மத்திற்கு கட்டுபட வேண்டியதில்லை என்றளவில் நான் பேசினேன். அப்பொழுது அவர்கள் இது தேர்தலுக்கான கூட்டணி மட்டும் தான். இதில் ஈழம் சார்ந்த நிலைபாடுகளோ அல்லது மற்ற விசயங்களிலோ எங்களுடைய கட்சி நிலைப்பாடு என்னவோ அதை தான் நாங்கள் எடுக்க போகிறோம். நாங்கள் டெசோவின் கூட்டணிக்குள் செல்லவில்லை, இது திமுகவிடனுனான தேர்தல் கூட்டணி மட்டும் தான் என்றனர்.

 53. அப்பொழுது அவர்கள் அநேகமாக எங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும், மூன்று தொகுதிகள் பேசி இருக்கிறோம், அதில் எங்களுக்கு மயிலாடுதுறை ஒதுக்கப்படும் என்று கூறினர். அப்பொழுது நாங்கள் பேசிகொண்டிருந்த பொழுது நான் தெளிவாக ஒருவிடயத்தை குறிப்பிட்டேன், ம.ம.க. சார்பில் ஒருவர் வெற்றி பெறுவதை நாங்கள் விரும்புகின்றோம், ஆனால் உங்களுக்கு ஆதரவு கொடுப்பதென்பது எங்களால் இயலாத காரியம் என்பதையும் குறிப்பிட்டேன். அவர்களும் அதை புரிந்துகொண்டார்கள். தி.மு.க கூட்டணியில் இருப்பதால் நாம் அவர்களை ஆதரிக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். அப்பொழுது நான், எங்கள் திறமை அல்லது வலு என்பது பிரச்சாரமல்ல மாறாக எங்களுக்கு தகவல் சார்ந்ததாகவும் இருக்கிறது , 2011 மற்றும் 2009 தேர்தலை கூட நாங்கள் அவ்வாறானவகையில் எதிர்கொண்டோம் என்று கூறினேன். அதனடிப்படையில் நாங்கள் ஆதரிக்க முடியாது என்பதை புரிந்துகொண்டு, சரி தொகுதி சார்ந்த தகவல்கள் ஏதேனும் எங்களுக்கு கொடுங்கள் என்றார். மூன்று தொகுதிகளில் எங்களுக்கு மயிலாடுதுறை ஒதுக்கப்படும் என்று நினைக்கின்றோம், (மற்ற இரண்டும் மத்திய சென்னை மற்றும் ராமநாதபுரம் என்று குறிப்பிட்டார் என்று நினைகின்றேன்,) அதில் மயிலாடுதுறை குறித்து தகவல்களை கொடுங்கள் என்று கேட்டார். நான் சரி என்று கூறினேன்.

 54. திமுக கூட்டணியில் இருந்தாலும் அவர்கள் ஏன் வெற்றி பெற வேண்டுமென்று நாங்கள் விரும்பினோம் என்பதையும் இங்கே கூறிவிடுகின்றேன். அப்படி என்றால் இதுதான் மற்ற கட்சிகளுக்குமான நிலைபாடா என்றால், இல்லை, நான் குறிப்பாக தமிழ்நாடு சட்டமன்றம் தொடர்பான ஒருவிடயத்தை மட்டும் குறிப்பிடுகிறேன். நம்முடன் அனைத்துவிடயங்களில் உடன்படாவிட்டாலும் கூட பல்வேறுதருணங்களில், பல்வேறுசூழல்களில், சிலபோராட்டங்களில் நம்முடன் சேர்ந்துபங்கெடுக்ககூடிய சிலதோழர்கள், தோழர் ஜவாஹிருல்லா[43], தோழர் மருத்துவர் கிருஷ்ணசாமி [44] மற்றும் தோழர் தனியரசு[45] ,ஆகியோர் ஆவர். சில நேரத்தில் அவர்களிடம் சென்று நாம் நமது சமூகம் சார்ந்த, தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளை பற்றி பேச முடியும், அதனை சட்டமன்றத்தில் ஒரு தீர்மானமாகவோ அல்லது விவாதமாகவோ எடுத்து செல்ல வாய்ப்பிருக்குமா என்று கேட்டிருக்கிறோம்.

 55. உதாரணத்திற்கு சிறப்பு முகாம் குறித்தோ அல்லது மூவர் தூக்கு குறித்தோ, இது போன்ற பல்வேறு விடயங்களில் அவர்கள் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவது குறித்து முயன்றிருக்கிறார்கள், நடத்தியும் இருக்கிறார்கள். நாம் தேர்தல் அரசியலில் நிற்கும் அமைப்பல்ல, ஆனால் நம் குரலாக சட்டமன்றத்தில் நம் தோழமை அமைப்புகள் இருந்தால், நாம் சொல்ல கூடியவற்றை அவர்கள் அங்கு பிரதிபலிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில், அவர்கள் வெற்றிபெற விரும்புகிறோம் என்பது மே பதினேழு இயக்கத்தின் பார்வையாக இருந்தது. இந்த அணுகு முறையை தான் நாம் கையாண்டு கொண்டிருந்தோம். அதனடிப்படையில் தான் ம.ம.க-விடம் அப்படி பேசி இருந்தோம்.

 56. அதற்கு பிறகு மார்ச் மாதம் முதல் வாரத்தில் நானும் திருமுருகனும், அமெரிக்க தீர்மானம் குறித்து வேறொரு செயல்பாட்டாளருடன் அவர்களை சந்திக்க நேர்ந்தது. அங்கு ம.ம.க. தலைமை குழு உறுப்பினர்கள் அனைவருமே இருந்தனர். குணங்குடி ஹனிபா, ஜவாஹிருல்லா, அப்துல்சமத்[46] , ஆருண்ரஷித், தமீம்அன்சாரி ஆகியோர் இருந்தனர் , இவர்களிடம் அமெரிக்க தீர்மானத்தை குறித்து பேசிகொண்டிருந்தோம். அமெரிக்கத் தீர்மானம் குறித்து பேசி முடித்து தேர்தல் பற்றி பேசும்பொழுது, உங்களுக்கு வேறு வழிகளில் எங்களால் உதவ முடியும் என்று திருமுருகன் குறிப்பிட்டிருந்தார்.

 57. அதற்கு பிறகு அநேகமாக மார்ச் மாதத்தின் மத்தியில் என்று நினைக்கின்றேன். அப்பொழுது மீண்டும் அவர்களை நானும் திருமுருகனும் சந்தித்த பொழுது அவர்களுக்கு மயிலாடுதுறை தொகுதி இறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் நாங்கள் அந்த மயிலாடுதுறை தொகுதி சம்பந்தமாக அவர்களுக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது. அப்பொழுது அவர் மயிலாடுதுறை தொகுதி உறுதியாய்விட்ட தருணத்தில் வந்து பிரசாரம் செய்ய முடியுமா என்று கேட்டிருந்தார். அப்பொழுது திருமுருகன் நாங்கள் நேரடியாய் இல்லை வேறொரு தோழர் மூலமாக சேர்ந்து பண்ணுகின்றோம் என்று கூறினார். அப்பொழுது சீர்காழியில் பாபு [47] என்றொரு தோழர் இருக்கின்றார், அவருடன் சேர்ந்து நாங்கள் பங்குபெற்று செய்கின்றோமென்று குறிப்பிட்டார். சீர்காழிபாபுவை அப்துல்சமது ஏற்கனவே அறிந்துவைத்திருந்தார். அவர் சீர்காழிபாபு-தானே, அவரிடமே அனுமதி உள்ளிட்ட விசயங்களை பேசிவிடுகின்றேன், நீங்கள் எப்பொழுது வருகிறீர்கள் என்று சொல்லுங்கள், அப்பொழுது பிரசாரத்திற்கு நம்முடைய தோழர்களும் பங்கேற்பார்கள் என்று அப்துல்சமது கூறினார்.

1.13.3. விடுதலை சிறுத்தைகள் கட்சி

 1. அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை நானறிந்து நேரடியாக அவர்களுடன் பேசியதாக நினைவில்லை. திருமுருகன் நேரடியாக மாவட்ட அளவிலே சில தோழர்களிடம் உரையாடி இருக்கிறார் என்று தெரியும். அப்பொழுது விசிக செந்தில் என்று நினைக்கின்றேன், அவர் திருமாவளவனுக்காக சிதம்பரத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று கேட்டுகொண்டார் என்று நினைக்கின்றேன். அதற்கு மேல் என்ன பேசினார்கள் என்பது எனக்கு தெரியவில்லை.

  1.13.4. SDPI

 2. அடுத்ததாக SDPI கட்சியினர் மார்ச் மாத இறுதியில் நேரடியாக அவர்கள் ஆதரவு கோரிய கடிதத்தினை எழுத்து மூலமாகவே கொடுத்தார்கள். ஆனால், அவர்கள் 37 தொகுதிகளில் திமுகவை ஆதரிப்பதால் அவர்களை நாம் ஆதரிக்க முடியாது என்று நானும் திருமுருகனும் பேசினோம்.

  1.13.5. மதிமுக

 3. மதிமுகவை பொருத்தவரை 2013 மார்ச்சில் இருந்தே பேசி வருகிறோம். அதாவது தேர்தல் கூட்டணி எல்லாம் முடிவாவதற்கு முன்பிருந்தே. 2013 வருடம் குறித்து இதே கடிதத்தில் பின்பு பேசுகின்றேன். 2014 பற்றி மட்டும் இப்பொழுது பேசுகின்றேன்.

  1.13.5.1. ஜான்சியிடம் திருமுருகன் பேசியவை

 4. இத்தகைய சூழலில் தான் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி அன்று திருமுருகன் அலுவலகத்திற்கு நான் சென்றிருந்தேன். அங்கு இருந்த Business Development Executive ஜான்சி என்னிடம் “சார் 10ம் தேதியில் இருந்து பத்து நாள் ஊர்ல இருக்கமாட்டேன். அதனால BNI மீட்டிங்-க்கு நீங்க போகணும்னு சொன்னாரு. அதனால நாளைக்கு வந்துருங்கன்னு சொன்னாரு. சார் எங்க போறாரு? BNI மீட்டிங் போகலாமா?” என்று கேட்டார்.

 5. இதில் BNI மீட்டிங் பத்தி நான் சொல்லிடறேன். எல்லாமே விரிவா இருக்கறது நல்லதுன்னு நினைக்கறேன். BNI –கறது ஒரு பிசினஸ் நெட்வொர்க் மாதிரியான ஒரு அமைப்பு.[48] அதில் பல்வேறு துறைகளில் வர்த்தகம் செய்து கொண்டிருக்க கூடியவர்த்தகர்கள் அந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு வாரமும் அந்த கூடம் நடைபெறும். அது ஒருவருக்கொருவர் வியாபார ரீதியாக உதவிக்கொள்ளுவதற்கான ஒரு கூட்டம். அந்த கூட்டத்தில் கண்டிப்பாக அந்த நிறுவனம் சார்ந்த யாரவது பங்கெடுக்க வேண்டும். அதில் விடுப்பு எடுக்க அனுமதி மிக குறைவு. குறிப்பாக முதல் விடுப்புக்கும் மூன்றாம் விடுப்புக்கும் இடையில் 180 நாட்களுக்கு மேற்பட்ட இடைவெளி இருக்க வேண்டும்.

 6. திருமுருகன் அதில் தனது நிறுவனத்தை பதிவு செய்திருப்பதால் இவரும் அதில் கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நடைபெறும். ஆனால் இரண்டு வாரங்கள் அவர் வெளியூர் செல்லவிருப்பதால் ஜான்சியை தனது நிறுவனத்தின் சார்பில் பங்கேற்க சொல்லி இருந்தார். ஜான்சி என்னிடம் கூறிய பொழுது இவர் எதற்காக அந்த முடிவை எடுத்தார் என்பதை நான் தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் அதை பற்றி நான் குறிப்பிடாமல் நான் ஜான்சியிடம் ”நீங்க மீட்டிங் போறது முக்கியம், கண்டிப்பா போய்ட்டு வாங்க. இது திருமுருகன் பத்து நாள் இல்லகறதுகுக்காக இல்ல, future-லயும் நீங்க போகவேண்டியது இருக்கும், போனீங்கன்னா உங்களுக்கு நிறைய பிசினஸ் கான்டக்ட்ஸ்-ம் கிடைக்கும். அதனால போய்ட்டு வரது ஒன்னும் தப்பில்ல”-னு கூறினேன்.

 7. அமைப்பில் ஒரு 15-20 நபர்களுக்கு தெரிந்தாலும் இங்கே இன்னொரு விடயத்தையும் நான் பகிர்கிறேன். அதற்கு ஒரு சிறு விளக்கத்தையும் கொடுத்து விடுகின்றேன். நான் திருமுருகன் அலுவலகம், நிறுவனம் சார்ந்த விடயத்தில், நிர்வாக ரீதியான விடயங்களிலும் நான் பங்கு பெற்றிருந்தேன். பல்வேறு தருணங்களில் அவருடைய வாடிக்கையாளர்களை சந்திப்பதை நானும் மேற்கொண்டிருந்தேன். அவர் நிறுவனத்தின் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களையும் நான் மேற்கொண்டிருந்தேன். நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருந்து வந்த சூழல் அது. அதனால் அவர் நிறுவனத்தை பற்றி எனக்கு தெரியும், அதில் பல்வேறு தருணங்களில் நான் உதவிக்கொண்டு வந்தேன். அதனடிப்படையில் தான் ஜான்சி என்னிடம் கேட்டது. ஜான்சியிடம் நீங்கள் தாராளமாக சென்று வாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.

  1.13.5.2. மல்லை சத்யாவுடன் நடைபெற்ற சந்திப்பு

 8. அன்று மதியம் திருமுருகன் கூறினார் அடுத்த நாள் மல்லை சத்யாவை சந்திக்க வேண்டும், சென்று வருவோம் என்று கூறினார். சரி என்று கூறினேன். அடுத்த நாள் மல்லை சத்யாவை சந்திப்பதற்காக நாங்கள் காரில் கிளம்பினோம். அதாவது ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று நான், திருமுருகன், அருள், பிரவீண் ஆகிய நால்வரும் சென்றோம். அன்று நாங்கள் மல்லை சத்யாவை மகாபலிபுரத்தில் அவரது தம்பியின் வீட்டில் சந்தித்தோம். நாங்கள் சென்றுவந்ததற்கான என்னுடைய லொக்கேசன் டேட்டா-வை இத்துடன்இணைத்துள்ளேன்.


  1.13.5.2.1. ராஜ்குமாருக்கு வழங்கிய மேலாண்மை சேவை

 9. அது என்னவென்று நான் இங்கே குறிப்பிட்டு விடுகிறேன். BNI சங்கத்தில் இருக்க கூடிய ஒருநண்பர் அழைத்திருந்தார். அவரின் பெயரை பயன்படுத்த அனுமதி கேட்காததால் இங்கே பயன்படுத்தவில்லை. அவரை "K" என்று வைத்து கொள்ளுங்கள். அந்த "K" என்பவர் அழைத்திருந்தார். எதற்காகவென்றால் 2013 ஜூலை முதல் நானும் திருமுருகனும் ஏற்கனவே எங்களுடைய நண்பர் ராஜ்குமாருக்கு நிர்வாகவியல் ஆலோசகர்களாக செயல்பட்டு கொண்டிருந்தோம். அது அவருடைய நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக, அதாவது Business Process Optimization, Standards செட் பண்ணுவது, என Management Consultant- ஆக செயல்பட்டு கொண்டிருந்தோம். நாங்கள் இந்த சமூக செயல்பாடுகளின் காரணமாக ஜனவரி மாதத்தில் இருந்து அந்த வேலையையும் முழுமையாக செய்ய முடியவில்லை. அதிலும் குறிப்பாக அமெரிக்க தீர்மானத்துக்கு எதிரான வேலைகள் என்பது ஒருபுறம் இருக்க, தொடர்ச்சியாக பொதுவேலைகள் இருந்ததால் வேலையை சரியாக செய்ய முடியவில்லை. அமெரிக்க தீர்மானத்துக்கு பிறகு பார்க்கலாம் என்றும் நானும் திருமுருகனும் பேசிக்கொண்டோம். மேலும் மார்ச் மாதம் அவரிடம் எங்களுக்கான மாதந்திர கட்டணத்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் கூறினேன், ஏனெனில் ஜனவரி மாதம் மற்றும் பிப்ரவரி மாதம் நாங்கள் அவருடைய நிறுவனம் சார்ந்த வேலைகளைச் செய்யவில்லை. ஆனால் அவர் பணத்தினை கொடுத்துவிட்டார். மார்ச் மாதம் செல்ல முடியாது என்பது தெரிந்ததினால் திருமுருகனிடம் நாம் மார்ச் மாத பணம் வாங்க வேண்டாம் என்று கூறினேன்.

 10. மார்ச் மாதம் ராஜ்குமாரை சந்திக்க திருமுருகன் சென்ற போது ராஜ்குமார் காசோலையை கொடுத்துவிட்டார், திருமுருகன் நீங்கள் உமரிடம் பேசுங்கள் என்று கூறினார். ராஜ்குமார் எனக்கு அழைத்தார், நான் 'இல்லை ராஜ்குமார், கடந்த மாதமே வேலை செய்யவில்லை, அதனால் வாங்குவது சரியாக இருக்காது, ஆகையால் இந்த மாதம் முடிந்தவுடன் நாங்கள் வேலை செய்கின்றோம், வேலை செய்தவுடன் நாங்கள் வாங்கிகொள்கின்றோம்" என்று கூறினேன். அதற்கு ராஜ்குமார், "இல்லை இல்லை ஓராண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் நான் பணத்தினை ஒதுக்கி வைத்துவிட்டேன், ஆகையால் நீங்கள் பணத்தினை வாங்கிகொள்ளுங்கள். உங்கள் வேலையை அதற்கு பிறகுகூட தொடர்ந்து செய்யுங்கள்" என்றார். ஒப்பந்தகாலத்திற்கு பிறகுகூட உங்கள் வேலையை நான் ஏற்றுகொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். நான் சரி என்று சொல்லி இருந்தேன். திருமுருகனும் அந்த காசோலையை வாங்கிவிட்டார். அப்பொழுது திருமுருகன் இதை செய்கிறேன், அதை செய்கிறேன் என்று சில உறுதிமொழியை கொடுத்திருப்பார் போலும். இதுதான் நடந்திருக்கிறது.

 11. பிறகு மார்ச் மாதமமும் முடிந்துவிட்டது. ஆனால் அதற்கு பிறகு எந்த வேலையும் நடக்கவில்லை எனும் அடிப்படையில் ராஜ்குமார் "K"-யிடம் அதை பற்றி பேசுகின்றார். "K"விடம் ஏன் பேச வேண்டும் என்றால் நாங்கள் ராஜ்குமார் நிறுவனத்திற்கு வேலை செய்தபொழுது அந்த நிறுவனத்திற்கான HR பாலிசி டிசைன் செய்ய வேண்டி இருந்தது அதற்கு K வின் உதவியை நாடி இருந்தோம். அவர் அந்த துறையை சார்ந்த அனுபவம் வாய்ந்தவர், அந்த துறையில் எக்ஸ்பெர்ட் என்பதால் அவர் எங்களுக்கு உதவி இருந்தார். ஏற்கனவே ராஜ்குமாருக்கும் அவரை பற்றி தெரியும் என்பதாலும் எங்கள் இருதரப்புக்கும் பொதுவான நண்பர் என்பதாலும் அவரிடம் ராஜ்குமார் பேசி இருந்தார். "K" திருமுருகனிடம் ஒரு மாதத்திற்கு மேல் வேலை எதுவும் நடக்கவில்லையே என்று ஒரு மணிநேரத்திற்கு மேல் உரையாடல் போய் கொண்டிருக்கும் என்று நினைகின்றேன். அப்பொழுது திருமுருகன் நாங்கள் அந்த வேலையை செய்து முடிக்காதற்கு காரணமே ராஜ்குமார் தான் என்று அவரிடம் பேசிகொண்டிருந்தார். நாங்கள் சரியாகத்தான் வேலையினை மேற்கொண்டோம். ராஜ்குமார்தான் அவற்றை நடைமுறைப்படுத்தாமல் விட்டுவிட்டார். அவரால்தான் அங்கு எவ்வித சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள இயலாமல் இருக்கிறது என்று ராஜ்குமார் மீது வரிசையாக குற்றச்சாட்டுகளை கூற ஆரம்பித்துவிட்டார் திருமுருகன்.

 12. இதுதான் திருமுருகனை சரியாக புரிந்துகொள்வதற்கான சூழல். நான் ஏற்கனவே சில சம்பவங்களை பட்டியல் இட்டிருக்கிறேன். திருமுருகன் மீது ஒருவர் குற்றம் சுமத்துகிறார் என்றால், அதில் திருமுருகன் மீது தப்பு இருந்தாலுமே குற்றம் சுமத்திய நபரையே குற்றவாளி ஆக்கிவிடுவார். இதுபல்வேறு சம்பவங்களில் தொடர்ச்சியாக நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். இந்த சம்பவத்திலும் அதுதான் நடந்தது. இது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை என்று அல்ல, அமைப்பு சார்ந்தது என்று அல்ல, தொழில் ரீதியாக கூட இது தான் செய்து கொண்டிருக்கிறார். அன்று "K" விடம் அது தான் பேசிகொண்டிருந்தார். அதற்கு பிறகு ராஜ்குமாருடன் மேனேஜ் மண்ட் கன்சல்டிங் வேலை நடக்கவில்லை. அதன்பின் உரையாடல் முடிந்த பின் நாங்கள் மூவரும் கிளம்பி மல்லை சத்யாவை சந்திக்க மகாபலிபுரம் சென்றோம்.

  1.13.5.2.2. மல்லை சத்யாவின் வீட்டில்

 13. மகாபலிபுரத்தில் மல்லை சத்யா வீட்டிற்குள் செல்வதற்கு முன், திருமுருகன் என்னிடம் "நீங்கள் எதுவும் பேசாதீர்கள், நான் பேசிக்கிறேன், இவருக்கு விசயத்தை வேற மாதிரி சொல்லணும் என்றார்". நான் எதுவும் சொல்லாமல் சரின்னு சொல்லிட்டு உள்ள போனேன். உள்ள மல்லை சத்யாவை சந்திச்சு பேசிட்டு இருந்தோம். பேசிட்டு இருக்கும்போது திருமுருகன் ஆரம்பிச்சாரு, "தோழர் நீங்கள் வெற்றி பெறுவதை நாங்கள் பெருமளவு விரும்புறோம் தோழர்" அப்படின்னு சொன்னாரு. அப்போ மல்லை சத்யா, "அப்போ வண்டியில ஏறிவிட வேண்டியது தானே என்று கூறினார் ", (அப்படியென்றால் பரப்புரை வண்டியில). அதற்கு திருமுருகன், இல்ல இல்ல தோழர், அது இல்ல எங்களோட STRENGTH என்பது வேற தோழர். நாங்கள் நேரடி ஆதரவு பிரசாரம் பண்றத விட, எதிர் பிரசாரம் தான் எங்களோட STRENGTH . அதனால நாங்க வந்து உங்களுக்கு எதிர் வேட்பாளர்களை அம்பலபடுத்தும் வேலையை நாங்கள் செய்யறோம். அது மூலமா உங்களுக்குத் தான் ஓட்டு விழும். 2009-ல காரைக்குடியிலும், 2011- ல கடையநல்லூரிலும் அததான் பண்ணி இருந்தோம். இப்போ உங்களுக்கு ஆதரவாவும் நாங்கள் இதையே பண்ணிடுறோம் என்று சொன்னாரு. அப்பொழுது பாலவாக்கம் சோமு அங்க இருந்தார்.

 14. உடனே மல்லை சத்யா பாலவாக்கம் சோமுவை அழைத்து மே-பதினேழு தோழர்கள் நமக்காக பண்றாங்க, என்ன பணம் கேட்கறாங்களோ கொடுத்திடுங்க அப்படின்னு சொன்னாரு. உடனே நான் கூறினேன், இல்ல தோழர் பணமெல்லாம் வேண்டாம், நாங்க யாருகிட்டயும் பணம்வாங்குறதா இல்ல என்று கூறினேன். இல்ல நீங்க பண்றதுன்னு ஒன்னு இருக்குல்ல அப்படினாரு. இல்ல தோழர் நீங்கள் இந்த கூட்டம் நடத்த அனுமதி, இந்த மாதிரி விசயங்கள பண்ணிகுடுங்க-னு திருமுருகன் சொன்னாரு. அப்போ மல்லை சத்யா, சரி டேவிட் பெரியார்[49], பண்றாரு அவரோட சேர்ந்தே பண்ணிடலாம்னு சொன்னாரு. டேவிட் பெரியார் என்பவர், திராவிடர் விடுதலை கழகத்தை சார்ந்தவர், அப்பொழுது திராவிடர் விடுதலை கழகத்தில் இருந்தவர். அவர் மல்லை சத்யாவிற்காக வேலை செய்து கொண்டிருந்தார். அப்புறம் மல்லை சத்யா திருமுருகனிடம் அவர் தம்பியை அறிமுகம் செய்து வைத்தார். பிறகு என்ன உதவி வேண்டுமானாலும் பாலவாக்கம் சோமுவிடமோ, தம்பியிடமோ கேளுங்கள் என்று கூறினார். இதில் என்ன சொல்றாருனா, பணம் வேணும்னா வாங்கிக்குங்க அப்படிங்கறது தான். இல்ல தோழர் நாங்க பாத்துகிறோம், நீங்கள் தலைவர்கிட்டயும் சொல்லிடுங்க என்று திருமுருகன் கூறினார் . தலைவர்-ங்கறது வைகோ. அவரும் கண்டிப்பா சொல்லிடுறேன் அப்படின்னு சொன்னாரு. அதன் பிறகு சிறிது நேரம் இருந்துவிட்டு நாங்கள் திருமுருகனின் அலுவலகத்திற்கு வந்துவிட்டோம்.

  1.13.6. சீமானுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடல்

 15. அங்கிருந்து கிளம்பிய பொழுது சீமானிடம் இருந்து திருமுருகனுக்கு அழைப்பு வந்தது, அது தேர்தல் பிரசாரம் பற்றி. “இந்த பாஜக காரனுகள விடகூடாது திரு, இந்த காங்கிரஸ்காரனை அடிச்சு நொறுக்கிறனும் திரு”என்று பேசிகொண்டிருந்தார். திருமுருகனும் கண்டிப்பா செய்யணும் தோழர் என்றார். நாம எங்காவது சேர்ந்து பண்ணலாமா-னு சீமான் கேட்டார். திருமுருகன் அதற்கு கண்டிப்பா தோழர், ஒன்று இல்ல இரண்டு தொகுதிகளில் சேர்ந்து பிரசாரம் பண்ணுவோம் தோழர் என்றார். சீமான் அதற்கு, இன்னும் ரெண்டு மூணு நாள்ல நானும் கிளம்பிவிடுவேன், அதற்குள் உங்கள் நிரலை பாத்துட்டு சொல்லுங்க, நாம சேர்ந்து பண்ணுவோம்-னு கூறினார். அந்த உரையாடல் முடிஞ்ச பின் திருமுருகன் எங்களிடம் சேர்ந்து பண்றதுல ஒன்னும் தப்புஇல்ல, காரைகுடியில H.ராஜா வீழ்த்தபட வேண்டிய முக்கியமான நபர். அவருக்கு எதிரா வேண்டுமானால் பரப்புரை செய்யலாம்-னு என்று கூறினார். அதாவது திருமுருகன் என்ன செய்ய வேண்டுமென்பதை ஒன்றாம் தேதிக்கு முன்பாகவே முடிவுசெய்துவிட்டார். தொடர்ச்சியா ஒன்றொன்றாக நடந்து கொண்டிருந்தது.

  1.13.7. தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

 16. சனிக்கிழமை ஐந்தாம் தேதி அன்று இரவு திருமுருகன் எனக்கு போன் செய்தார்,” உமர் நாளைக்கு ஆலோசனை கூட்டம் வைத்திருக்கிறோம், நீங்க வந்துருங்க என்று கூறினார். என்ன கூட்டம் என்று நான் கேட்டபொழுது, தேர்தல் குறித்து என்ன முடிவு எடுக்கணும்-கறத பற்றியான ஆலோசனை கூட்டம் என்று கூறினார். அதற்கு நான், இல்ல திரு என்னால வர முடியுமான்னு தெரியல என்று கூறினேன். அடுத்த நாள் வீட்டில்தான் இருந்தேன், கூட்டத்திற்கு போகவும் இல்லை, அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. ஏற்கனவே தேர்தல் தொடர்பான எல்லா நிலைபாடும் அவர் எடுத்துவிட்டார். அதற்கு மேல் ஆலோசனை கூட்டம் என்பது ஏமாற்று வேலையாகதான் பட்டது. மேலும் அப்பொழுது செல்வதற்கு என்னிடம் பணமும் இல்லை.

 17. பிறகு 6 ஆம் தேதி ஞாயிறு பகல் 12 மணிக்கு திருமுருகன் திரும்ப எனக்கு போன் செய்தார். “எல்லாரும் வந்துட்டாங்க உமர் நாங்க பேசிட்டு இருக்கோம் நீங்களும் வந்துடுங்க, ஒருமுடிவு எடுத்துவிடலாம்”என்றுகூறினார். அதற்கு நான் “அதான் எல்லாரும் வந்துட்டாங்கல, அப்புறம் நான் எதற்கு, நீங்களே முடிவெடுங்க,” என்று கூறினேன். அதற்கு திருமுருகன் “என்ன இப்படி பட்டும்படாம பேசுறீங்க, நீங்க வாங்க, நீங்க இல்லாம எப்படி முடிவெடுக்க முடியும்”என்றகேட்டார். இல்லை திரு எல்லாரும் இருக்கும் போது எல்லாரும் என்ன சொல்றாங்களோ அதைதான முடிவாக எடுக்கபோகிறோம் என்றேன். மீண்டும் திருமுருகன் நீங்கவாங்கனு சொன்னாரு. அதற்கு நான் திரு எங்கிட்டபணம் இல்லை என்றேன்.

 18. அதனால வருவதற்கான வாய்ப்பில்லைன்னு கூறினேன். அதற்கு திருமுருகன் நீங்க ஆட்டோ எடுத்துட்டு வாங்க, பணம் இங்க குடுத்திரலாம் என்று கூறினார். சரி என்று சொல்லிட்டு ஒரு ஆட்டோ எடுத்து கொண்டு சென்றேன், அன்று பிரவீன் ஆட்டோவுக்கு பணம் கொடுத்தார். இதுல இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன், நான் எப்பொழுதும் அமைப்பு சார்ந்த வேலைகள் எதற்குமே பணம் வாங்கியது கிடையாது, என்னுடைய சொந்த செலவில் தான் பண்ணுவேன். அன்றைக்கு கூட பிரவீன் பணம் கொடுத்ததை நான் கடனா தான் வைத்திருக்கிறேன். ஒரு நிகழ்வுக்கு நான் வருகிறேன் என்றால் அதற்கு நான்பணம் கேட்டதும் கிடையாது, அது மாதிரி நடந்துகிட்டதும் கிடையாது. அன்றைக்கு நான் பணம் வாங்குனது எங்கிட்ட பணம் இல்லங்கறதால.

 19. அன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் என்னை பேச சொன்னாங்க, நீங்க என்ன பேசுனீங்கன்னு தெரியாம நான் என்ன சொல்றது-னு கேட்டேன். என்ன பேசுனீங்கன்னு தொகுத்து சொல்லுங்க என்று கூறினேன். அப்புறம் தேர்தல் பரப்புரைபோறதுல இருக்குற தேவைகள் குறித்து சொன்னாங்க, அதனால என்ன பலன் இருக்குனு பட்டியல் இட்டாங்க. அதற்கு பிறகு நான் பேசினேன். அவர்கள் பலன் இருப்பதாக சொல்லி கூறிய காரணங்களை ஏன் ஏற்றுகொள்ள முடியாது என்பதை நான் வரிசையா கூறினேன். இறுதியில் தேர்தல் பரப்புரைபோக வேண்டாம் என்று நான் சொல்லி இருந்தேன். அப்புறம் அந்த கூட்டம் எந்த முடிவுக்கும் வராம இருந்துச்சு.

 20. அந்த கூட்டத்தில் தோழர் பூவலிங்கம் [50], அவர்கள் அவரோட கருத்து கூறினார். அதாவது வைகோ மற்றும் திருமா தோற்கணும் என்று அவர் தரப்பில் சில காரணங்களை பகிர்ந்தார், அவருக்கு வன்மம் எல்லாம் இதில் இல்லை. பிறகு நான் அவரிடம் “தோழர், செயல்பாட்டாளர்கள் தோற்கணும் என்பது நம் எண்ணம் அல்ல, எப்படி ஜவஹிருல்லா தோழரோ, கிருஷ்ணசாமி தோழரோ, தனி அரசு தோழரோ, நமக்காக பேசுவதற்கு வாய்ப்பிருக்கற மாதிரி இவர்களும் நமக்காக பேசுவார்கள் என்று தான் நாம் நம்புகிறோம். ஆனால் அதற்காக அவர்களுக்கு பரப்புரை செய்ய வேண்டும் என்பது கிடையாது” என்றேன். அதற்கு பிறகு என்னுடைய பேச்சை மறுத்து பேசுவதற்கான தர்க்கம் அங்கு எதுவும் இல்லை. அந்த கூட்டம் அத்துடன் முடிவு பெற்றது.

  1.13.8. என்ன செய்தாவது பரப்புரை செல்ல விரும்பிய திருமுருகன்

 21. அதன் பிறகு நாங்கள் கிளம்பி திருமுருகனோட அலுவலகத்திற்கு வந்துட்டோம். திருமுருகன் அப்புறம் தனியாக வந்து , “உமர் உங்களுக்கு பிடிக்கலையா, பிடிக்கலைனா நாம போக வேண்டாம்”என்றுகேட்டார். இதை நீங்கள் மிக நுணுக்கமா கவனிக்க வேண்டும். இந்த வார்த்தைகள், ஒரு மனிதனை வீழ்த்துவதற்கு பல்வேறு தந்திரங்களாக பயன்படுத்தப்படலாம், அதில் இது ஒன்று. பொதுவாக எமோசனல், அதாவது தனிப்பட்ட முறையில் அப்பீல் வைக்கறது. பெரும்பாலான நபர்கள் இந்தபர்சனல் அப்பீல்-ல விழுந்துருவாங்க. அது எவ்வளவு பெரிய உறுதியான ஆட்களாக இருந்தாலும் விழுந்துருவாங்க. இதை NEGOTIATION SKILLS என்று சொல்லுவாங்க.

 22. வியாபாரத்தில் தன்னுடைய நிலையை விட்டுக்கொடுக்காமல் அவர்களிடம் இருந்து தனக்கு வேண்டியதை பெற்றுகொள்வதற்கு பல்வேறு வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். அது போன்ற ஒரு NEGOTIATION SKILLS தான் இந்த பர்சனல் அட்டாக் என்பது. திருமுருகன் அதைத்தான் முயற்சித்தார். இது போன்ற விடயங்களில் எப்பொழுதுமே நான் விழமாட்டேன். ஆனால் இதை நான் எதற்கு சொல்கிறேன் என்றால் திருமுருகன் என்ன செய்தாவது பரப்புரை செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நான் அதுமாதிரி ஆலோசனை கூட்டத்தில் அனைவரின் முன்னிலையிலும் முரண்பட்டு மறுத்து பேசியது என்பது அது தான் முதல் முறையாக இருக்கும். அதற்கு முன் திருமுருகனுக்கும் எனக்கும் வேறு சில முரண்பாடுகளோ அல்லது வேறுபாடுகளோ இருந்தாலும் கூட மற்றவர்கள் முன்னிலையில் நாங்கள் பேசியது கிடையாது. திருமுருகன் அங்கு மறுத்து பேசவில்லை, ஆனால் அதற்கு பின் வந்து இப்படி பேசினார், எனக்கு தெரியும் இது போன்று அவர் ஒவ்வொன்றாக முன்வைப்பார் என்று.

 23. வைகோ தோற்று ரத்னவேல் ஜெயிச்சுட்டா நம்மால ஏத்துக்க முடியுமா உமர்-னு கேட்டார். அதாவது ரத்னவேல் என்பவர் திமுக-வின் சார்பாக நிற்க கூடியவர். அவர் இலங்கை அரசுடன், ராஜபக்சேவுடன் நெருக்கமாக இருக்ககூடியவர் என்பதை, நான் திருமுருகனிடம் முன்பே சொல்லி இருந்தேன். இது திமுகவின் வேலை, ஏனெனில் வைகோ தோற்க வேண்டும் என்று திமுக விரும்புகிறது, அதனால் தான் ரத்னவேலுவை நிறுத்தி இருக்கிறது. ரத்னவேலுவை பொறுத்தவரை வியாபார துறையில் உள்ளவர். அங்கு விருதுநகரில் வியாபார துறையில் மக்கள் பெருமளவில் இருப்பதால் அங்குள்ள சாதி சார்ந்த வாக்குகளையும் கணக்கில் வைத்து கருணாநிதி அதனை செய்திருக்கிறார் என்பது தெரிந்தது. அதனால தான் திருமுருகன் வைகோ தோற்று ரத்னவேல் ஜெயிச்சுட்டா நம்மால ஏத்துக்க முடியுமா உமர்-னு கேட்டார். நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை, பிறகு அவர் ”சரி உமர், நீங்க சொல்லுங்க, பிரசாரம் போறதுனா போகலாம் இல்லையென்றால் வேண்டாம்” என்றார்.

 24. இதில் ஏற்கனவே எல்லா முடிவையும் எடுத்துவிட்டார், நான் மட்டும் தான் அதற்கு முரண்பட்டு நிக்கறேன். மற்றவர்கள் கிட்ட தொடர்ச்சியாக பேசி அவர்களை ஏற்றுகொள்ள வைத்துவிட்டார். நான் மட்டும் தான் ஏற்றுகொள்ளாமல் முரண்பட்டு நிற்கிறேன் என்று என்னை CONVINCE பண்ணனும்கறதுக்காக இப்படி பேசுனார். இதற்கு முன்பே இது வழி தவறி போய்விட்டது என்பது தெரிந்தது. அது எப்படி வழி தவறி போனது, ஈழ விடுதலைக்கு எதிராய் எப்படி செயல்பட்டது என்பதை இக்கடிதத்தின் இன்னொரு பகுதியில் பேசுகின்றேன். அப்பொழுது இவர் முறை தவறி போய்விட்டார் என்பது தெரியும். இப்பொழுது தேர்தல் சம்பந்தமான விடயங்களை மட்டும் பேசிவிடுகிறேன் , இவர் செய்யும் ஒரு செயலுக்கு தடையாய் இருக்க வேண்டாம் என்பதற்காக, இதுகுறித்து நான் ஏதும் கூறவில்லை. பிறகு திருமுருகன் சரி பிரவீன் சிலது கேட்க வேண்டியது இருக்கு என்று கூறினார் அதை என்னவென்று பாருங்கள் என்றார்.

 25. ஒரு ஐந்து நிமிடம் கழித்து, பிரவீன் ஒரு பேப்பரை எடுத்து கொண்டு வந்தார். அந்த பேப்பரில் திருமுருகன் எந்தெந்த தொகுதியில் பரப்புரை செய்யவிருக்கிறார் என்னும் பட்டியல் இருந்தது. பரப்புரை பயணதிட்டம் அது. இதுவும் கூட அன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுவதற்கு முன்பே முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அங்கு ஆலோசனை கூட்டம் என்பது வெறும் கண்துடைப்பு வேலையாக தான் நடைபெற்றிருக்கிறது. மயிலாடுதுறைக்கும் கும்பகோணத்திற்கும் இடையேயான பயண நேரம் எவ்வளவு என்று கூட தெரியாத பிரவீன், ஐந்து நிமிடத்தில் பரப்புரை பயணத் திட்டம் எப்படி போடமுடியும்.? பிரவீன் கொண்டு வந்ததில் நான் சில திருத்தங்கள் செய்து இதில் இதை மாற்றுங்கள் என்று சில விசயங்களை திருத்தி கொடுத்திருந்தேன்.

  1.13.9. இயக்கத்தை கொலை செய்த திருமுருகன்

 26. இதில் பாருங்கள் தோழர்களே! ஒரு இயக்கம் என்பது அதனுடைய அர்த்தத்தினை மே பதினேழு இயக்கம்முழுமையாக இழந்ததினம் அது. ஒரு இயக்கம் என்பது பல்வேறு தனிநபர்கள் அல்லது அமைப்புகள் ஒத்த நோக்கதிற்காக ஒன்றுபட்டு செயலாற்றுவது, இதில் யாரையும் ஒரு தலைவராக கொள்ளாமல் அனைவரையும் சேர்ந்து முடிவெடுத்து, அந்த நோக்கத்தை நோக்கி பயணிப்பது தான் இயக்கம் என்று கூறுவார்கள். மே பதினேழு கூடஅப்படித்தான் உருவானது. மே பதினேழு இயக்கத்தின் அடிப்படைகள் குறித்து இன்னொரு இடத்தில பேசுகின்றேன். இப்பொழுது இயக்கம் என்னும் தன்மையை விட்டு விலகியதை பற்றி மட்டும் நான் பேசுகின்றேன். இயக்கம் என்னும் தன்மையை திருமுருகன் கொலை செய்த நாள் அது. இங்கு திருமுருகன் என்னும் ஒரு தனிநபர் தன்னுடைய விருப்பதிற்காக, தேர்தல் பரப்புரை என்ற வேலையினை தன்னுடைய தனிப்பட்ட விருப்பதிற்காக ஒட்டுமொத்த அமைப்பையுமே தன்னுடைய பேச்சாற்றலின் மூலமாக, தன்னுடைய வாததிறமையின் மூலமாக தனக்கேற்ப மாற்றி அமைத்து வைத்துள்ளார். கிட்டதட்ட ஒன்றாம் தேதியே அவர் இந்த முடிவை எடுத்துவிட்டார், 2-ம் தேதி ஜான்சி என்னிடம் சொல்கிறார் திருமுருகன் பத்துநாள் ஊரில் இருக்கமாட்டார் என்று, இங்க வந்து பார்த்தால் தேர்தல் பரப்புரை பயணதிட்டம் பிரவீன் போட்டு கொண்டு வருகிறார். இதுவும் ஆலோசனை கூட்டத்திற்கு முன்பே நடந்திருக்கிறது. ஏனென்றால் வந்து உட்கார்ந்த ஐந்து நிமிடத்திற்குள் பரப்புரை பயணதிட்டம் எல்லாம் போடவே முடியாது. அதற்கு பிறகு நான் கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன்.

  1.13.10. மே பதினேழின் தேர்தல் அறிக்கை

 27. பிறகு தேர்தல் பரப்புரை தொடர்பாக அடுத்த நாள், அதாவது ஏப்ரல் ஏழாம் தேதி நன்பகல் 12:48 க்கு திருமுருகன் ஒரு மின்னஞ்சலை அனுப்புகின்றார். அதன் பிறகு பலமாற்றங்களை செய்து தான் கீற்று இணையத்தளத்தில் எங்கள் அரசியல் நிலைப்பாடு என்று வெளியிட்டார்கள்.

  இப்பொழுது அமைப்பின் பல தோழர்கள் பேசிகொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள், எங்கள் அமைப்பின் நிலைப்பாடு கீற்று இணையத்தளத்தில் போய் பாருங்கள் என்று. அது ஏப்ரல் ஏழாம் தேதி நன்பகல் 12:48 வருகிறது, அந்த தேர்தல் அறிக்கையை திருமுருகன் எனக்கும், லேனாவிற்கும் , புருஷோத்தமனுக்கும், வளர்மதிக்கும் அனுப்பி இருந்தார். இது முதல்கட்ட அறிக்கை.

 28. அந்த அறிக்கையில் பிறகு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, அதன் பிறகு ஏப்ரல் 8-ம் தேதி திருமுருகன் குரூப் சாட்டில், MANIFESTO அதாவது தேர்தல் அறிக்கை தயாராகிவிட்டது என்று குறிப்பிடுகின்றார். அப்பொழுது அங்கிருக்க கூடிய தோழர் ஒருவர் ரத்தினவேலு குறித்து இதில் குறிப்பிடவில்லையே என்று கேட்கின்றார், அதற்கு திருமுருகன் ரத்தினவேலு பற்றி நாம் இப்பொழுது எதுவும் பேச வேண்டாம், ரத்தினவேலு பற்றி பேசினால் அது நாம் வைகோ-விற்கு ஆதரவானவர்களாக தெரிந்துவிடும், அதனால் நாம் இப்பொழுது பொதுவானவர்களாக NEUTRAL ஆனவர்களாக காட்டிகொள்ளலாம். WE WILL HANDLE SEPARATELY என்றும் குறிப்பிடுகிறார். இது எட்டாம் தேதி மாலை 6:12 க்கு நடைபெறுகின்றது.


 29. அந்த MANIFESTO குறித்து அவர் பதிவிட்ட சிறிது நேரத்தில் இதை யாருக்கும் வெளியில் அனுப்ப வேண்டாம் LET IT BE PRIVATE என்று குறிப்பிடுகிறார். அதை 6:34-க்கு குரூப் சாட்டில் குறிப்பிடுகிறார். முதலில் மே பதினேழின் தலைமைக் குழுவைச் சேர்ந்த வளர்மதி, லேனா, புருஷோத் ஆகியோரோடு எனக்கும் அந்த அறிக்கை அனுப்பப்பட்டது. அதன் பிறகு மே பதினேழு க்ருப் சாட்டில் இருக்கும் தோழர்களுக்கு அந்த அறிக்கை பகிரப்பட்டது. மே பதினேழை சாராத வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் என்று அவர் அங்குக் குறிப்பிடுகின்றார்.


 30. அதற்கு பிறகு எட்டாம் தேதி அன்று அந்த தீர்மானம் மற்றும் அறிக்கையினை பற்றி பல்வேறு விசயங்கள் பேசிகொண்டிருக்கும் பொழுது WE WILL START OUR CAMPAIGN FROM TOMORROW என்று குறிப்பிடுகின்றார்.


 31. அதற்கு பிறகு அந்த அறிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றது. அதற்கு பிறகு 8-ம் தேதி இரவு 10:54 க்கு தொடங்கி, ஒன்பதாம் தேதி நள்ளிரவில் அதாவது 1:17 மணிக்குள் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, நாளை நாம் நம்முடைய பரப்புரையை தொடங்குகிறோம் என்று திருமுருகன் குறிப்பிடுகின்றார்.


 32. அதாவது நள்ளிரவில் வளர்மதியுடன் உரையாடல் மேற்கொண்டிருப்பார் என்று தெரிகிறது. அதில் நான் சம்மந்தப்படவில்லை. நான் முதல் வரைவில் சிலமாற்றங்கள் செய்ததோடு சரி, அதில் மாற்றங்கள் என்பதை விட, என்ன விசயங்கள் விடுபட்டு போயிருக்கின்றன என்று மட்டும் தான் சேர்த்தேன். மற்றபடி நான் அதில் எதுவும் குறிப்பிடவில்லை. அந்த நேரத்தில் தொடர்ச்சியாக மாற்றங்கள் கொண்டு வந்து ஒன்பதாம் தேதி காலை இதனை தெரிவித்து பரப்புரைக்கு செல்கிறோம் என்றுகூறினார்.

 33. இதற்கு முன்பாக ஒரு சிறு விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும் என்று நினைக்கிறேன். அதாவது மார்ச் மாத இறுதியில் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக பல்வேறு தருணங்களில் நானும், திருமுருகனும் , அருளும் பேசிகொண்டிருக்கும் போதெல்லாம், நாம் 2009-இல் சிதம்பரம் என்ற ஒருவரை எதிர்த்து ஒட்டு மொத்தமாக அனைத்து ஈழ ஆதரவாளர்களும் பரப்புரை செய்ததன் விளைவு அந்த தேர்தல்களினுடைய முடிவில் தெரிந்தது என்று குறிப்பிட்டிருந்தேன்,. அது போல் இப்பொழுது அனைவருமே TR.பாலுவை எதிர்த்துபரப்புரை செய்யலாம். ஏனென்றால் TR.பாலு தான் இந்த மீத்தேன் திட்டத்தில் கொள்கை அளவு மாற்றத்தை கொண்டு வந்தவர் என்று தன் இணையத்திலேயே குறிப்பிட்டிருக்கிறார். 34. இந்த TR.பாலு-விற்கு எதிரான பிரச்சாரம் இரண்டு இடங்களில் பலன் தரகூடியது, முதலாவதாக ஒரு வேளை TR.பாலு தோற்றுவிட்டால், மக்கள் நலனுக்கு எதிராக எடுக்கப்படும் கொள்கை முடிவுகளில் பங்கெடுப்பவர் யாராக இருந்தாலும் மக்கள் தோற்கடிப்பார்கள், இரண்டாவது முக்கியமாக அய்யா நம்மாழ்வாருக்கு நாம் செய்யகூடிய உண்மையான அஞ்சலியாக இதுதான் இருக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தேன். அப்பொழுது அதை பற்றி எதுவும் முடிவு செய்யவில்லை, நான் அதன் பின்னர் தேர்தல் பரப்புரை வேண்டாம் என்றுதான் சொல்லிகொண்டு இருந்தேன். ஆனால் அன்று திமுக TR.பாலுவை பற்றி பேசும் பொழுது, திமுகவில் வேறு யாரை பற்றியும் நாம் பேசவில்லை.

 35. ஆனால், க்ருப் சாட்டில் ரத்தினவேலுவை பற்றி மட்டும் ஏப்ரல் 9-ம்தேதி 11:17 மணிக்கு அவர் அடித்த துண்டறிக்கையை காண்பித்து, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதாக இவர் குறிப்பிட்டு இருக்கிறார், இவரை நாம் அம்பலபடுத்த வேண்டும் என்று திருமுருகன் குறிப்பிட்டிருந்தார்.


 36. திமுகவை பொறுத்தவரை பல்வேறு நபர்கள் இருகிறார்கள் எப்படி வேண்டுமானாலும் அம்பலபடுத்தலாம், குறிப்பாய் TR.பாலு குறித்து முன்பே பலமுறை பேசியிருந்த பொழுது, TR.பாலு பற்றி செந்தில்[51] போன்றவர்கள் அவர்களாய் முன்வந்து பலவிடயங்களை செய்திருந்தார்கள்.

 37. ரத்னவேலுவிற்கு எதிராக முதல் நாள் வேண்டாம் என்று சொன்ன திருமுருகன் மிக நுணுக்கமாக, அடுத்தநாள் ரத்தினவேலுவை எதிர்க்க வேண்டும் என்று ஒருவிடயத்தை முன்வைத்து அதை வைகோவிற்கு ஆதரவாக பரப்புரை செய்வதற்காக மாற்ற தொடங்கினார். அதை தான் ஏப்ரல் 9-ம் தேதி 11:17 மணிக்கு WE SHOULD EXPOSE THIS GUY என்று கூறினார்.


 38. இந்த EXPOSE என்பது ரத்தினவேலுவை பற்றி குறிபிட்டது போல் திமுகவில் போட்டியிட்ட வேறு யாரை பற்றியும் குறிப்பிடவில்லை. அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். இதற்கு பிறகு தான் தேர்தல் பரப்புரை வேலைகள் பல இடங்களில் நடைபெறுகின்றன.

  1.13.11. தேர்தல் பரப்புரைகள்

 39. நாங்கள் மல்லை சத்யாவை சந்தித்துவிட்டு வந்த பிறகு காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் டேவிட் பெரியார் பரப்புரை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது கொண்டலை அவருடன் இனைந்து கொள்ள சொல்லி திருமுருகன் கூறினார். கொண்டல் மறைமலை நகர் பகுதியில் வசித்ததினால், அவர் வேலை நேரம் போக மற்ற நேரங்களில் மறைமலை நகர் பகுதியில் மல்லை சத்யாவிற்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டிருந்தார்.

 40. அப்பொழுது திருமுருகன் பத்தாம் தேதி அன்று பரப்புரை செய்வதாக ஏற்கனவே முடிவு செய்திருந்தார். ஆனால் பத்தாம் தேதி பரப்புரை போக இயலாமல் தொடர்ச்சியாய் மீத்தேன் ஆவணப் படவேலைகள் இருந்தன. 11 ம் தேதி அன்று காலை என்னிடம் போன் செய்து செய்யூர் அனல் மின்நிலையத்திற்கு எதிராக ஒருதுண்டறிக்கையை தயார்செய்து கொடுத்துவிடுங்கள், நாளை நான் பிரசாரம் கிளம்புகின்றேன். கிளம்பும் பொழுது முதலில் காஞ்சிபுரம் தொகுதியில் பிரச்சாரம் செய்துவிட்டுத் தான் கிளம்புகிறேன். பிறகு புதுசத்திரத்திலும் அதன்பிறகு செய்யூரிலும் பிரசாரம் செய்துவிட்டு மயிலாடுதுறை போகின்றேன் என்று குறிப்பிட்டார். சரி திரு என்று நான் கூறினேன். துண்டறிக்கையில் திமுக, அதிமுக, காங்கிரசுக்கு ஓட்டுபோடாதீர்கள் அப்படின்னுவர்ற மாதிரி பாத்துக்குங்க உமர் என்றார்.

  1.13.11.1. செய்யூர் துண்டறிக்கை

 41. அவர் கூறியவாறு மதிமுகவிற்கு நேரடியாக வாக்குகள் கேட்காமல், மதிமுகவை எதிர்த்து நின்ற கட்சிகளுக்கா உங்கள் ஓட்டு என்று கேட்டு, செய்யூறுஅனல்மின்நிலையத்திற்கானதுண்டறிக்கையினைநான்தயார்செய்துகொடுத்திருந்தேன்.[52]


  1.13.11.2. வைகோவிற்கு ஆதரவாக விருதுநகர் பரப்புரை

 42. இதே நேரத்தில் மதிமுகவிற்கு ஆதரவாக, கவனிக்கவும்!!! நான் செய்யூறு அனல் மின்நிலையத்திற்கு எதிரான துண்டரிக்கையினை தயார் செய்த அதே நேரத்தில், இவர்கள் மதிமுகவிற்கு ஆதரவாக பரப்புரை செய்வதற்காக ஒருகுழுவினை தயார் செய்திருந்தார்கள். ஒரு புத்தகமும் தயாரிப்பதற்கான ஒரு திட்டம் வைத்திருந்தனர். இதில் பல விடயங்களை பிரவீன் என்னிடம் கூறினார். அதாவது எனக்கு தெரிந்து தான் இது நடக்கிறது என்று நினைத்து அவர் கூறினார், அப்பொழுது அந்த புத்தகத்திற்கான செலவை ராஜேந்திரன் [53] ஏற்றுகொள்வதாகவும், . கிட்டதட்ட அறுபதாயிரம் ரூபாய்கள், ஆகும் என்றும் பிரவீன் குறிப்பிட்டிருந்தார்.

 43. இங்கு இன்னொன்றையும் சுட்டி காட்ட விரும்புகின்றேன். மே பதினேழு இயக்கத்திற்கான அலுவலகத்தினை பலபேர் பார்த்துகொண்டிருந்தனர், ராஜேந்திரன் தோழரும் அவருக்கு தெரிந்த இடத்தில் பார்த்திருந்தார். அநேகமாக லக்ஷ்மன் ஸ்ருதிக்கு எதிரில் உள்ள சாலையில் என்று நினைகின்றேன். அதற்கான முன் பணத்தையும் தானே கொடுத்து விடுவதாக கூறினார். ஆனால் திருமுருகன், “ராஜேந்திரன் வன்னியர்; பாமக ஆதரவாளர். அதனால் அவர் அலுவலகம் பார்க்க வேண்டாம். அவரிடம் பணமும் வாங்க வேண்டாம்” என்று மறுத்துவிட்டார். ஆனால் அதே ராஜேந்திரனிடம் மதிமுக பரப்புரைக்கான செலவுக்கு மட்டும் பணம் வாங்கிக்கொள்ள கூறினார் திருமுருகன். அமைப்பிற்கான அலுவலகம் ஏற்பாடு செய்யும் போது வன்னியராக இருந்த ராஜேந்திரன், மதிமுகவிற்கு உதவி செய்யும் போது மட்டும் வேறு சாதிக்கு மாறி விட்டார் போலும். மதிமுகவிற்காக தன்னுடைய நிலைப்பாட்டை எந்த அளவிற்கும் மாற்றி கொள்வதற்கு திருமுருகன் தயாராக இருந்தார். மேலும் ராஜேந்திரனால் அந்த பணம் ஏற்பாடு செய்ய முடியாத பட்சத்தில் மனோஜ் அந்த பணத்தை தருவான் என்று பிரவீன் கூறினார்.

 44. ஏப்ரல் 14-ம் தேதி அன்று விருதநகர் பிரச்சாரம் செல்வதற்காக ஐவர் சென்றனர். ஐவர் என்பது பன்னீர் [54] , விவேக், சபரி [55], மனோஜ் மற்றும் சுந்தரமூர்த்தி [56]. அவர்கள் அங்கு நேரடியாக மே பதினேழு பெயரில் பரப்புரையை முன்னெடுக்கவில்லை. அது மற்றவர்களுக்கு தெரியகூடாது என்று நினைத்திருந்தனர். அதனால் “கரிசல் மைந்தர்கள்” என்னும் பெயரில் புத்தகம் அடித்திருந்ததாக நான் அறிந்தேன்.

 45. கரிசல் மைந்தர்கள் குறித்து ஏற்கனவே நானும் திருமுருகனும் பேசி இருக்கிறோம். டெல்டா புலிகள்[57] அமைப்பை பற்றி அறிந்திருப்பீர்கள், அது மீத்தேன்-னுக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் பரப்புரை செய்து கொண்டிருந்தது, டெல்டா புலிகள் போன்று கரிசல் வேங்கைகள்-னு ஒரு அமைப்பை ஆரம்பிக்கலாம் என்று கூறினார். கரிசல் பகுதி சார்ந்த பிரச்சனைகளை பேசுவதற்கு இந்த அமைப்பினை பயன் படுத்திக்கொள்ளலாம் என்றார். கரிசல் பகுதி குறித்து பேசிய திருமுருகன் நாஞ்சில் பகுதி குறித்தோ, கொங்கு பகுதி குறித்தோ அல்லது தமிழ்நாட்டின் வேறு பகுதிகள் குறித்தோ இதுவரை பேசவில்லை. அவர் ஜனவரி மாதத்திலேயே இது குறித்து என்னிடம் பேசினார். ஏனெனில், கரிசல் பகுதி என்பது வைகோ போட்டியிடும் விருதுநகர் தொகுதியை உள்ளடக்கியது. வைகோவிற்கு ஆதரவாக பரப்புரை செய்ய வேண்டும் என்று சொன்னால், கண்டிப்பாக அமைப்புக்குள் எதிர்ப்பு எழும் என்பதால், வேறு பெயரில் பரப்புரை செய்வதற்காக ஜனவரி மாதத்திலேயே இதைப் பற்றி யோசித்து வைத்து விட்டார். அந்தப் பெயரில் தான் அவர் பரப்புரைக்கு இவர்கள் ஐவரையும் அனுப்பினார். அச்சிடப்பட்ட போது அது கரிசல் காட்டு மைந்தர்கள் என்னும் பெயரில் அச்சிடப்பட்டு விட்டது. அச்சிடப்பட்ட தகவல் பிரவீன் குறிப்பிட்டது.

 46. இதில் ஒரு விடயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும் தோழர்களே, தேர்தல் பரப்புரை செய்ய வேண்டும் என்று ஏப்ரல் 6-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றபொழுதே இவர்கள் முன் வைத்த பல்வேறு காரணங்களில் ஒன்று, பரப்புரைக்கு சென்றால் "மே பதினேழு இயக்கத்தை பல்வேறு மக்களிடம் அறிமுகம் செய்ய ஒருவாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்று குறிப்பிடிருந்தார்கள். ஆனால் விருதுநகர் தொகுதியில் மே பதினேழு பெயரில் கூட செய்யவில்லை, அப்பொழுது இவர்கள் முன்பு குறிப்பிட்ட காரணங்கள் எல்லாம் பொய்யாக புனையபட்ட காரணங்களாக தான் இருக்கின்றன. அதை தான் நாம் இன்று கண்கூடாக பார்க்கின்றோம். விருதுநகர் தொகுதியில் மே பதினேழு தோழர்களை வைத்து கொண்டு வேறொரு பெயரில் நாம் முன்னெடுத்தால், இவர்கள் குறிப்பிட்டது போல “மக்களிடம் அமைப்பிற்கு கிடைக்கும் அறிமுகம்” இல்லாமல் போய் விடாதா? பிறகுஏப்ரல் 14-ம் தேதி அன்று அங்கு ஐந்து பேர் போய் இறங்கிவிட்டார்கள்.

  1.13.11.3. பா... எதிர்ப்பு துண்டறிக்கை, பரப்புரை

 47. இதற்கு முன்பு தோழர் செந்தில் ஏப்ரல் 13-ம் தேதி அன்று பிஜேபி-கு எதிரான ஒரு துண்டறிக்கையை எனக்கு அனுப்பி இருந்தார். 48. நான் அதில் சில திருத்தங்கள் மட்டும் குறிப்பிட்டிருந்தேன். அது தயாராகிவிட்டது. இவர்கள் பிஜேபிக்கு எதிரான பரப்புரை என்று முன்பு சொன்னதால், செந்தில் அதை தயாரித்துவிட்டார். ஆனால் பிஜேபி –க்கு எதிரான பரப்புரை ஏப்ரல்-16 வரை நடக்கவே இல்லை.

 49. ஏப்ரல் 16-ம் தேதி அன்று கார்த்திக் GROUP CHAT –இல் தோழர்களே நாம் இதுவரை அறிக்கை மட்டுமே வெளியிட்டுள்ளோமே தவிர பிஜேபிக்கு எதிராக பிரச்சாரம் செய்யவில்லை எனவும், முடிந்த அளவு பாஜக-விற்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் என்று கூறினார். மே பதினேழு பலமே முகநூல் தான், ஆனால் அதில் கூட பாஜகவிற்கு எதிரான பிரச்சாரம் செய்யவில்லை என்றார்.


 50. ஆனால் ஏப்ரல் 14-ம் தேதி அன்றே வைகோவிற்கு ஆதரவாக பரப்புரை செய்ய ஒரு குழு அனுப்பபட்டுவிட்டது. ஆனால் மற்ற பகுதிகளில் பாஜகவிற்கு எதிரான பரப்புரைகள் மேற்கொள்ளபடவில்லை. திருமுருகன் மீத்தேன் ஆவனபட வேலைகளில் மூழ்கி இருந்ததால் அவராலும் பரப்புரைக்கு செல்ல முடியவில்லை. இதுதான் ஏப்ரல் 14-ம் தேதி வரையிலும் நடந்தது.

  1.13.11.4. கொண்டல் மேற்கொண்ட பரப்புரை

 51. ஆனால் கொண்டல் மறைமலைநகர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டிருந்தார். 13ம் தேதி அன்று பாண்டிச்சேரியில் திவிக தோழர்கள் காங்கிரஸ் நாராயணசாமி-க்கு எதிராக, அதற்கு முன்பிருந்துமே பரப்புரை செய்து கொண்டிருந்தனர். ஏப்ரல் 14ம் தேதி கொண்டல் பாண்டிச்சேரியில் அவர்களுடன் சென்று அந்த பரப்புரையில் பங்கெடுத்திருந்தார். அதனை கொண்டல் ஏப்ரல் 15 தன் முகநூலில் பதிந்திருந்தார், அது என்னவென்றால் "தமிழகத்தில் 39 தொகுதிகளில் செத்துவிட்ட காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டும் துடித்துகொண்டிருந்தது, தோழர்களுடம் சென்று அதை அடித்து நொறுக்கிவிட்டேன், மகிழ்ச்சியாக இருக்கின்றது. புதுவையில் மல்டி கலர் முடியழகனுக்கு இருக்கிறது ஆப்பு என்று குறிப்பிட்டிருந்தார்.[58]


 52. இதில் ஒரு விடயத்தை நாம் கவனத்தில் கொள்வோம், பின்பு இன்னொரு முறை அதை விரிவாக பேசுவோம். 39 தொகுதிகளில் செத்துவிட்ட காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டும் துடித்துகொண்டிருந்தது என்று குறிப்பிட்டிருந்தார், அதற்காக பாண்டிச்சேரியில் பரப்புரை செய்தேன் என்று குறிப்பிட்டிருந்தார். ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு கொண்டல் டேவிட் பெரியார் மற்றும் ரவிபாரதி [59] அவர்களுடன் சேர்ந்து தனக்கு முடிந்த நேரத்தில் பரப்புரை மேற்கொண்டிருந்தார்.

  1.13.11.5. திருமுருகன் மேற்கொண்ட பரப்புரை

 53. ஏப்ரல் 17ம் தேதி அன்று தான் திருமுருகன் பரப்புரைக்கு செல்ல முடிந்தது. ஆனால் ஏப்ரல் 14 முதல் ஐவர் குழு விருதுநகரிலே பரப்புரை மேற்கொண்டிருந்தது, திருமுருகன் மயிலாடுதுறைக்கு உட்பட்ட சீர்காழிபகுதியில் பரப்புரை செய்துகொண்டிருந்தார். மாலை 4 மணியிலிருந்து 6 மணிவரை பரப்புரை செய்தார். அப்பொழுது அவர் அங்கு போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்கு கேட்டார். இது பாஜகவை எதிர்த்து மட்டும் அல்ல, மனிதநேய மக்கள் கட்சிக்கு ஆதரவாகவும் வாக்கு கேட்டார், அப்பொழுது 4:15 மணிக்கு எனக்கு போன் செய்து நீங்கள் மமகவிடம் தகவல் தெரிவித்துவிடுங்கள், நான் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன் என்றார். எந்த இடத்தில் என்று சொல்லுங்கள் அதையும் சேர்த்து நான் அவர்களுக்கு சொல்லிவிடுகின்றேன் என்று கேட்டேன். சீர்காழி என்று குறும்செய்தி அனுப்பினார். நான் பிறகு ம.ம.க மற்றும் தமுமுகவை சேர்ந்த நான்கு பேருக்கு தோழர் ஜவஹருல்லா, தமிம்அன்சாரி, அப்துல்சமது, மற்றும் ஹாருன் ரஷீத் ஆகியோருக்கு குறும்செய்தி அனுப்பினேன். குறுஞ்செய்தியில் 'மே பதினேழு இயக்கம் சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை செய்து கொண்டிருகிறது' என்று அனுப்பினேன். அதில் சிலர் நன்றி என்று அனுப்பிருந்தனர்.

 54. அதன் பிறகு ஏப்ரல் 17ம் தேதி திருமுருகன் அங்கிருந்து கிளம்பி தஞ்சாவூர் சென்றுவிட்டார். தஞ்சாவூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் தோழர் பனசை அரங்கன் போட்டியிட்டார், அவருக்கு ஆதரவாக பரப்புரை செய்வதாகக் கூறி திருமுருகன் சென்றார். ஆனால் தோழர் பனசை அரங்கனுக்கு முன்கூட்டியே தம்முடைய வருகையை பற்றி பேசவில்லை. எவ்விதமான முன்ஏற்பாடுகளும் செய்யவில்லை. அதனால் பனசை அரங்கன் வாகன அனுமதியை பெற்று வைத்திருக்கவில்லை. அங்கு பரப்புரை செய்வதற்கான சூழலும் இல்லை. இவர் அங்கு சென்றார் என்பது உண்மை. 17ம் தேதி இரவு தஞ்சாவூரில் தங்கி இருந்தார். 18ம் தேதி பரப்புரை செய்வதாக கூறி இருந்தார், ஆனால் அதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் செய்யவில்லை.

 55. இவ்வளவிற்கும் ம.ம.கவிற்கு ஆதரவாக சீர்காழியில் பரப்புரை செய்வதை பலவாரம் முன்பே நாங்கள் பேசிவிட்டோம், யார் பெயரில் அனுமதி வாங்க வேண்டும் என்பதையும் அவர்கள் பார்த்துகொண்டார்கள். ஆனால் இங்கு தஞ்சாவூரில் அது நடைபெறவில்லை. உங்களுக்கு நன்றாக தெரியும் தோழர்களே மே பதினேழு இயக்கத்தை பற்றி மற்றவர்கள் ஆச்சரியபடும் விடயம் என்னவென்றால் ஒவ்வொரு விடயத்தையும் இவ்வளவு நேர்த்தியாக, PERFECT ஆக எப்படி செய்கின்றோம் என்பதைத் தான் பலர் ஆச்சரியபட்டும், பொறாமைபட்டும் கூட கேட்பார்கள். ஒருவிசயத்தை அவ்வளவு நுணுக்கமாக முன்கூட்டியே திட்டமிட்டு மிகதெளிவாக செயலாற்றுவோம். ஒரு இடத்தில் அனுமதி வாங்காமல் செல்வது என்பது மே பதினேழு இயக்கத்தின் இயல்பிலேயே இல்லை.

 56. ஆக அவர்களுக்கு தஞ்சாவூரில் பரப்புரை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. போகும் வழியில் தஞ்சாவூரில் தங்கிவிட்டார்கள். அப்படி தஞ்சாவூரில் பரப்புரை செய்ய வேண்டும் என்னும் நோக்கமிருந்திருந்தால், தனி வாகனத்திற்கு அனுமதி கிடைக்காவிட்டாலும், வேட்பாளர் தோழர் பனசை அரங்கனுடனே சேர்ந்து பரப்புரைக்குச் சென்றிருக்கலாமே. அப்படியெல்லாம் எதுவும் முயற்சிக்காமல், தங்குவதற்கு நல்ல விடுதி கிடைக்கும் என்பதற்காக தஞ்சாவூரில் தங்கிவிட்டு, அடுத்த நாள் கிளம்பி விருதுநகர் சென்றுவிட்டார்கள்.

 57. தஞ்சாவூரில் இருந்தபோது தோழர் சோழனிடம்[60] பேசும் பொழுது எனக்கு ஒரு கார் ஏற்பாடு செய்து கொடுங்கள் நான் ஸ்ரீ வில்லிபுத்தூர் போக வேண்டுமென்று திருமுருகன் கேட்கிறார் , உடனடியாக சோழன், ஸ்ரீ வில்லிபுத்தூர் என்றால் வைகோவிற்கு ஆதரவாய் பிரச்சாரம் செய்யவா என்று கேட்டார். இல்லை இல்லை, நாங்கள் மதுரை போய்விட்டு அங்கிருந்து திருநெல்வேலி போகிறோம் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக போகின்றோம் அதனால் அப்படி கூறினேன் என்றார். சரி தோழர் நான் பார்க்கிறேன் என்றார் சோழன். ஆனால் திருமுருகன் அதன் பிறகு சோழனிடம் அதுபற்றி பேசாமல் மறுநாள் அவரே ஒரு கார் ஏற்பாடு செய்துவிட்டு விருதுநகர் போய்விட்டார்.

 58. இந்த இடத்தில் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும், திருமுருகன் ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு என்று கேட்டவுடன், சோழன் வைகோவிற்கு ஆதரவானு கேட்ட உடனேயே அதையே மாற்றி சொல்லியிருக்கிறார். பொதுவா கடைசியா செல்லவேண்டிய இடத்தை தான் மொதல்ல சொல்லுவாங்க, அல்லது மொதல்ல செல்லவிருக்கிற இடத்த சொல்லுவாங்க, ரெண்டும் இல்லாம போறவழியில இருக்கிற இடத்தையா சொல்லுவாங்க?. மதுரை போய்ட்டு திருநெல்வேலிபோறதுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர்னு சொல்றது ஒரு சப்பைகட்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இதையெல்லாம் நான் எதற்கு கூறுகிறேன் என்றால், இவர் எந்த அளவிற்கு திட்டமிட்டு மதிமுகவிற்கு ஆதரவாக, குறிப்பாக வைகோவிற்கு ஆதரவாக செயல்பட்டுகொண்டிருந்தார் என்பதற்காக தான் இவ்வளவு விரிவாக குறிப்பிடுகின்றேன். அதனால் தான் சோழனிடம் மீண்டும் கார் பற்றி பேசாமல், இவர்களே அடுத்த நாள் அங்கு சென்றுவிட்டார்கள்.

  1.13.11.6. விருதுநகரிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சுந்தரமூர்த்தி

 59. இந்த நேரத்தில் ஏப்ரல் 19ம் தேதி அன்று, ஏற்கனவே மே பதினேழு சார்பில் அங்கிருந்த ஐவர் குழு அங்கு பரப்புரை செய்து கொண்டிருந்தது. ஏப்ரல் 19ம் தேதி அன்று ஒரு இடத்தில் சுந்தரமூர்த்தி மைக்கில் பேசிகொண்டிருக்கும் பொழுது காங்கிரசிற்கு எதிராக, மிகவும் கோபமாக பல்வேறு கருத்துகளை பேசி இருக்கின்றார். அப்பொழுது அங்கிருந்த மாணிக் தாக்கூரின் (காங்கிரஸ்வேட்பாளர்) ஆதரவாளர்கள் இவர்களை அடிக்க வந்துவிட்டார்கள். நீங்கள் யாருக்காக பிரச்சாரம் செய்கிறீர்கள், யாருடைய பேரில் அனுமதி வாங்கி இருக்கிறீர்கள், காங்கிரசை திட்டிகொண்டே இருகிறீர்கள் என்று அடிக்க வந்துவிட்டார்கள். அப்பொழுது அங்கு நடந்த சண்டையில் மதிமுக பேரில் அனுமதி வாங்கி இருக்கிறோம், மதிமுக-விற்குஆதரவாக-தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் என்று மே பதினேழு தோழர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர் . அங்கு ஒரு வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு நடைபெற்றிருக்கிறது. காவல்துறையும் அங்கு வந்துவிட்டது.

 60. அங்கு வைகோவிற்கு ஆதரவாய் பரப்புரை செய்தவர்கள் தேர்தல் விதி முறையை மீறிவிட்டார்கள், மற்றும் அது குறித்து வழக்கு பதிவு செய்யும் அபாயம் வந்தவுடன் இந்த ஐவரும் அப்பொழுது பேசி, இல்லை இல்லை நாங்கள் அப்படியெல்லாம் பேசவில்லை, வழக்கு எதுவும் பதிவு செய்துவிடாதீர்கள் என்பதாக பேசிவிட்டு, அதன் பின்னர் மதிமுகவிற்கு ஒட்டுகேளுங்கள், போகிறபோக்கில் காங்கிரசை விமர்சனம் செய்யுங்கள் ஆனால் எப்பொழுதும் திட்டி கொண்டிருக்காதீர்கள் என்று சொல்லப்பட்டது. அதன்பின்னர் இவர்கள் "போடுங்கம்மாஓட்டு பம்பர சின்னத்த பார்த்து" என்று பம்பரத்துக்கு ஆதரவாக தொடர்ச்சியாக பரப்புரை செய்துவிட்டு அங்கு இருந்து நகர்ந்துவிட்டார்கள். அந்த சம்பவத்தில் மதிமுகவினர் உதவிக்கு வரவில்லை. இதை திருமுருகன் தேர்தல்பரப்புரை எல்லாம் முடிந்த பிறகு என்னிடம் ஒருநாள் குறிப்பிட்டார். இந்த மாதிரி அவ்வளவு பிரச்சனை நடந்துச்சு மதிமுக காரங்க ஹெல்ப் கூட பண்ணலை. அவனுகளுகாக தான் பரப்புரைக்கு போனோம் என்று கூறினார். அன்று சுந்தரமூர்த்தியை வைத்துகொள்ள வேண்டாமென்று அங்கிருந்து உடனடியாக அனுப்பிவிட்டார்கள்.

 61. அடுத்த நாள் திருமுருகன் அங்கு சென்று சேர்ந்துவிட்டார். அடுத்த இரண்டு நாட்கள் சனி மற்றும் ஞாயிறு 19,20ம் தேதிகளில் ஏற்கனவே அங்கு இருந்த பன்னீர், சபரி, மனோஜ், விவேக்குடன் திருமுருகனும் வைகோவிற்கு ஆதரவாய் பரப்புரையினை மேற்கொண்டார். அதற்கு பிறகு அடுத்த நாள் கிளம்பி திருநெல்வேலி சென்றுவிட்டார், ஏனெனில் தோழர் சோழனிடம் ஏற்கனவே திருநெல்வேலி போகிறோம் என்று சொல்லியிருந்ததனால். பிறகு அவர் திருநெல்வேலியில் பரப்புரை பண்ணினேன் என்று சொல்லுகிறார்,

  1.13.11.7. திருமுருகன் அவிழ்த்து விட்ட புளுகு மூட்டை

 62. அது போல GROUP CHATஇல், நான் திருநெல்வேலில பிரசாரம் பண்ணினேன், சீர்காழில பண்ணினே என்று திருமுருகன் சொல்லி இருப்பார். விருதுநகரை பற்றி குறிப்பிடவில்லை, இரண்டு இடங்களை மட்டும் சொல்லி இருக்கார். இதுல திருநெல்வேலில பாத்தீங்கன்னா, அங்க ஆம்ஆத்மி கட்சி போட்டியிட்டது, மைபா போட்டிஇட்டார், அதில் தான் கூடங்குளம், இடிந்தகரையும் வருகின்றது. இதை GROUP CHATஇல் அவர். நாங்கள் முல்லைபெரியாறு, நியுற்றினோ, கூடங்குளம் தொடர்பாக , பிரசாரம் செய்ய முயற்சித்தோம் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று குறிப்பிடுகிறார். 63. திருநெல்வேலி தொகுதி கூடங்குளம் இருக்கும் பகுதி தான், இதில் பிரசாரம் செய்தேன் என்று ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார், அனுமதி கிடைக்கவில்லை என்று இன்னொரு இடத்தில் குறிப்பிடுகிறார். தஞ்சையில் அனுமதி கிடைக்கவில்லை என்று ஒரு இடத்தில் குறிப்பிடுகின்றார். தஞ்சை பிரச்சாரம் சோழனுக்கு தெரியும் என்று இன்னொரு இடத்தில் குறிப்பிடுகின்றார் இதிலிருந்தே பல்வேறு பொய்களை இவர் கட்டமைத்து கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்,. அதற்கு அடுத்த நாள், திருநெல்வேலியில் இருந்து கிளம்பி சென்னை வந்துவிட்டார்.

  1.13.11.8. சென்னையில் நடைபெற்ற பரப்புரைகள்

 64. இதில் ஏப்ரல் 19ம் தேதி நாம் பாஜகவிற்கு எதிராக பரப்புரை செய்யவில்லை என்று பேச்சு வந்த பொழுது, மே பதினேழு தோழர்கள் மூன்று பேர், சுசிந்திரன் [61] கார்த்திக் இன்னொரு தோழர் அவர்கள் மூவரும், ஏப்ரல் 19ம் தேதி மாலை ஒரு இரண்டு மணி நேரம் தி.நகர் பேருந்து நிலையத்தில் பாஜக-விற்கு எதிராக துண்டறிக்கையை கொடுத்தார்கள். [62] இதற்கு யாரிடமும் அனுமதி வாங்கவில்லை.


 65. இதில் இன்னொரு விடயம், அகிலாம்மா பற்றியது. இவர்களை உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும், பல்வேறு போராட்ட களங்களில் வந்து நிற்ககூடியவர், ஒரு மூத்த தோழர், எல்லா சமயங்களில் நம் சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் பெருமளவில் பங்கெடுக்க கூடியவங்க. ஏப்ரல் முதல் வாரத்திலிருந்தே கேட்டு கொண்டிருக்கிறார், நான் மத்திய சென்னை தொகுதியில் தயாநிதிமாறனுக்கு எதிராய் சுயேட்சையாய் போட்டியிடுகின்றேன், நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டுமென்று. அது குறித்து திருமுருகன் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு ஏப்ரல்-17 அன்றுகூடபேசினார், என்னப்பா நாங்க தயாநிதிமாறனை EXPOSE செய்யனும்னு நினைக்கிறோம், நீங்க அதுக்கு கூட ஹெல்ப் பண்ணமாட்டேங்குறீங்களேப்பா என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் இல்லம்மா, நிச்சயமாக தோழர்களை உங்களுக்கு ஆதரவாக பரப்புரை செய்யவர சொல்றேன்னு சொல்லிவிட்டு ஏப்ரல் 19ம் தேதி சுசிந்திரனிடம் , நீங்கள் சென்று அகிலாம்மாவை பார்த்துவிட்டு, அவரிடம் துண்டறிக்கை இருக்கும் அதைவாங்கிக்கொண்டு , இன்னொரு தோழரையும் அழைத்துக்கொண்டு நேரம் கிடைக்கும் பொழுது மத்திய சென்னைக்கு உட்பட்ட ஏதோ ஒரு பகுதியில் நீங்கள் துண்டறிக்கையை விநியோகியுங்கள் என்று கூறினேன். அவர் சரி என்றார். அதன் பிறகு சுசிந்திரன் அதை செய்தாரா என்று கேட்கவில்லை. ஆனால் இடையில் பாண்டிச்சேரிக்கு கொண்டல் சென்றதை தவிர, இரண்டாவது முறையும் தோழர்கள் சென்றார்கள் என்று நினைகின்றேன்.

  1.13.12. தேர்தல் பரப்புரைபகுப்பாய்வு.

 66. இதில் ஒட்டு மொத்தமாக நடந்த பரப்புரையை நீங்கள் பிரித்து பார்த்தால் அகிலம்மாவிற்காக நடைபெற்ற இரண்டுமணி நேரபரப்புரை , பாஜகவிற்கு எதிராக நடந்த இரண்டு மணி நேர துண்டறிக்கை பரப்புரை என்று மூன்று பேர் தான் செய்தார்கள், அதாவது 6 மனித மணி நேரங்கள், அதாவது6 MAN HOURS என்று குறிப்பிடுவோம். அகிலாம்மாவிற்கு ஒரு4 MAN HOURS நடைபெற்றிருகிறது. இது தவிர கொண்டல் காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பலமணி நேரங்கள் செய்திருக்கிறார், முழுமையான நேர அளவு எனக்கு தெரியவில்லை, மற்றும் கொண்டல் பாண்டிசேரிக்கு சென்றிருக்கிறார், மற்ற தோழர்களும் சென்றிருக்கின்றனர். திருமுருகன் சீர்காழியில் 2 MAN HOURS பரப்புரை செய்திருக்கின்றார். இதை தவிர்த்து பார்த்தால் விருதுநகர் தொகுதியில் ஐந்து பேர் ஐந்து நாள் பரப்புரை செய்திருக்கிறார்கள். அது 25 MAN DAYS , ஐந்தாவது நாள் சுந்தரமூர்த்தி கிளம்பிவிட்டார், ஆறாவது ஏழாவது நாள் திருமுருகன் அவர்களுடன் இணைந்துவிட்டார். அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது மொத்தம் 35 MAN DAYS விருதுநகர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளபட்டிருக்கிறது. திருமுருகன் சொன்னபடி திருநெல்வேலியில் பரப்புரை செய்திருந்தால் அது ஒருMAN DAY என்று வைத்துகொள்ளலாம்.

 67. இப்பொழுது நீங்கள் இந்த ஒட்டுமொத்த பரப்புரையையும் பிரித்துபாருங்கள் பாரதீய ஜனதாவிற்கு எதிராக 6 MAN HOURS , அகிலாம்மாவிற்கு 4 MAN HOURS , கொண்டல் (பாண்டி, காஞ்சிபுரம் – இது இன்னொருவருடன் இணைந்தோ, அல்லது சிறிய அளவிலோ செய்தது) - 3-4 MAN DAYS என்று வைத்துகொள்ளலாம். திருமுருகன் சீர்காழியில் செய்தது - 2 MAN HOURS விருதுநகர் மட்டுமே 35 MAN DAYS விருதுநகர் தவிர்த்து மற்ற பரப்புரை எல்லாம் சேர்த்து 5 MAN DAYS கூட வரவில்லை என்றால் இவர்கள் பரப்புரையின் நோக்கம் எதன் அடிப்படையில் கட்டமைக்கபட்டிருகிறது தோழர்களே ? 68. ஒரு அறிக்கையை வெளியிட்டோம் அதன் அடிப்படையில் தான் நாங்கள் செயல்பட்டோம் என்று குறிப்பிடுகிறார்கள், அந்த அறிக்கையில் தமிழகத்தில் இருக்ககூடிய பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிட்டிருந்தோம், செய்யூர் பகுதிக்கு துண்டறிக்கை தயார் செய்திருந்தோம் அது கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. செய்யூர் பகுதி மக்கள் பிரச்சனையை பற்றி பேசி இருந்தோம், தென் சென்னையில் மக்கள் பிரச்சனை பற்றி பேசவில்லை, மத்திய சென்னையில் மக்கள்பிரச்சனை பற்றி பேசவில்லை, பாண்டிச்சேரியிலும் மக்கள் பிரச்சனை பற்றி பேசவில்லை, விருதுநகரில் எந்த மக்கள் பிரச்சனை பற்றி பேசினார்கள் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.


  • விருதுநகரில் 35 MAN DAYS அளவுக்கு பரப்புரை செய்யும் அளவிற்கு இருக்கும் மக்கள் பிரச்சனைகளை விடவும், வேறு தொகுதிகளில் மக்கள் பிரச்சனைகள் இல்லையா ?

  • அறிக்கையில் குறிப்பிட்ட மக்கள் பிரச்சனை இருக்கும் இடங்களில் இவர்கள் எவ்வளவு மனித நாட்கள் ஒதுக்கி இருக்கின்றார்கள் ?


 1. இதில் கொண்டல் ஒரு தொகுதியில் மட்டும் காங்கிரஸ் துடித்து கொண்டிருந்தது என்று குறிப்பிடிருந்தார், இன்னொன்றையும் நாம் அறிவோம் பாண்டிசேரியை போலவே இன்னொரு தொகுதியில் காங்கிரஸ், பாஜகவிற்கு சமமான அளவில் வெற்றிவாய்ப்புடன் இருந்தது, அந்த தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரும் ஆகிவிட்டார். இங்கே நாராயணசாமி துடித்து கொண்டிருப்பது தெரிந்த கண்களுக்கு, பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் கண்ணுக்குதெரியவில்லையா ? விருதுநகரில் 35 மனித நாட்கள் பரப்புரை செய்தவர்கள் அங்கிருந்து 2 மணிநேர தொலைவில் இருக்கும் கன்னியாகுமரி தொகுதிக்கு சென்று 2-3 மனிதநாட்கள் பரப்புரை செய்திருக்கலாமே? அவர் கள்செய்யவில்லையே.

 2. ஆக இவர்களுக்கு இந்த தேசிய கட்சிகள் துடித்து கொண்டிருப்பதெல்லாம் பிரச்சனையாக தெரியவில்லை, இந்த தேர்தல் பரப்புரையில். மக்கள் பிரச்சனை பற்றி பேசுவதெல்லாம் இவர்களுக்கு காரணங்களாக இருக்கவில்லை. மதிமுக-விற்கு ஆதரவாக, குறிப்பாக வைகோவிற்கு ஆதரவாய் பரப்புரை செய்ய வேண்டுமென்பது மட்டுமே நோக்கமாக இருந்திருக்கிறது. இந்த ஒற்றை நோக்கதிற்காக, ஒவ்வொரு படியாக நகர்த்தி வந்திருகிறார்கள், அதனை ஏற்று கொள்ள வைப்பதற்காக. முதலில் மக்கள் பிரச்சனையை பற்றி பேசுவோம் என்று குறிப்பிட்டார்கள், ஆனால் மக்கள் பிரச்சனை பற்றி எத்தனை இடங்களில் பேசி இருக்கிறார்கள். இரண்டாவது மே பதினேழு இயக்கத்திற்கு, அறிமுகம் கிடைக்கும் என்றார்கள், ஆனால் இவர்கள் 35 மனித நாட்கள் பரப்புரை செய்த இடத்தில் மே பதினேழு பெயரில் செய்யவில்லை இது போன்று தொடர்ச்சியாய் வேறுவேறு காரணங்களுக்காக அறிக்கையினை வைக்கிறார்கள், அந்த அறிக்கைக்காக பரப்புரை செய்கிறோம் என்று கூறுகிறார்கள், இந்தந்த தொகுதிகளில் பரப்புரை செய்கிறோம் என்று கூறுகிறார்கள், பிறகு அந்த தொகுதிகளை எல்லாம் ஒதுக்கிவிடுகிறார்கள். கடைசியில் விருதுநகரில் மட்டும் பரப்புரை செய்கிறார்கள். மதிமுகவின் கிளை அமைப்பாக செயல்படுவதற்கு பதிலாக, உங்கள் அமைப்பை கலைத்துவிட்டு, நேரடியாக மதிமுகவில் இணைந்துவிடலாமே தோழர்களே. முக்காடு போட்டுக்கொண்டு பரப்புரை செல்லவேண்டிய தேவையின்றி, நேரடியாக பரப்புரையில் ஈடுபடலாமே.

 3. உங்களுக்கு இந்த இடத்தில் ஒரே ஒரு கேள்வி. திருமுருகன் விருதுநகர் செல்வது அவர்கள் நோக்கமாக இருக்கலாம், ஏன் சீர்காழியில் பரப்புரை செய்தார் ? அது முக்கியமான கேள்வி தோழர்களே, உங்களுக்கு இந்த கேள்வி எழுந்திருந்தால் சரியாக சிந்திக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த கேள்வியை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது மிகமிக முக்கியமான கேள்வி. இதற்கான பதிலை நான் கடைசியில் பேசுகின்றேன். ஏனெனில் சீர்காழி பரப்புரை மனிதநேய மக்கள் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை என்று கூறிகொண்டாலும் கூட, அங்கு அவர் விரும்பியது சீர்காழிபாபுவோடு சேர்ந்து பரப்புரை செய்ய வேண்டுமென்பது தான். சீர்காழி பாபு தேர்தல் பரப்புரை குறித்து அனுபவம் பெற வேண்டும் என்பதற்காகத் தான். இவர்கள் ஆலோசனை கூட்டத்தின் போது இதையும் முன்வைத்தார்கள், நம்முடைய தோழர்களுக்கு தேர்தல் பரப்புரையின் அனுபவம் கிடைத்துவிடும் என்று கூறினார்கள், இங்கும் மதிமுகவிற்கு ஆதரவாய் சென்ற ஐவர்குழுவிற்கும் அந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தான். ஒன்று சீர்காழி பாபுவோடு பரப்புரை செய்யவேண்டும், இன்னொன்று விருதுநகரில் மதிமுகவிற்கு ஆதரவாய் பிரசாரம் செய்ய வேண்டும், அதன்மூலமாக மே பதினேழு தோழர்களுக்கு தேர்தல் பரப்புரை அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தான். இது தான் நோக்கம்.

 4. ஆனால் இதை சுற்றி வளைத்து வேறேதோ முன் வைத்து, தம்முடைய விருப்பத்தை நிறைவேற்றி கொண்டார்கள். இவ்வளவையும் செய்து விட்டு, இந்த வேலைகள் இவர்கள் செய்தது யாரிடம் என்று பார்த்தால் ஒரு தேசிய இன விடுதலைக்காக வந்து நின்றஇளைஞர்களை தவறாய் வழி நடத்தி சென்று, தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தி இருக்கின்றார்கள். அதற்காக தேர்தல் பரப்புரையில் பங்கெடுக்க வேண்டாம் என்று குறிப்பிடவில்லை, அது வெளிப்படையான விவாதமாய் இருந்து அனைவரும் பேசி, எவ்வித நிர்பந்தமும் இல்லாமல், பொய் வாக்கு கொடுக்காமல் நடத்தி இருந்தால் அதனை ஏற்று கொள்ளலாம். ஆனால் இவர்கள் பரப்புரை குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு முன்பே முடிவை எடுத்துவிட்டு பிறகு பரப்புரைக்கு செல்வது என்பதே ஒரு தேசிய இனவிடுதலைக்காக வந்து நின்ற இளைஞர்களை, தமிழீழ விடுதலைக்காக வந்து நின்ற இளைஞர்களை தேர்தல் பரப்புரையில் போய் முடக்கி இருக்கிறார்கள்.

 5. அமர் [63], கூட ஒரு இடத்தில் குறிப்பிட்டார், தேசிய இன விடுதலைக்கு என்று வந்தவர்களை தேர்தல் அரசியலுக்குள் முடக்கும் எவனையும் விட்டு வைக்க முடியாது என்று.[64]


 6. தேசிய இன விடுதலைக்கு என்று வந்த இளைஞர்களை தன்னுடைய சுயலாபத்துக்காக இப்படி தேர்தல் அரசியலுக்குள் முடக்கும் திருமுருகனை அமர் ஏதாவது செய்து விட போகிறார். யாரேனும் திருமுருகனை அமரிடம் இருந்து காப்பாற்றுங்கள்.

 7. தோழர்களே, இதில் பாருங்கள் இன்றும் கூட, நாங்கள் மதிமுகவிற்கு ஆதரவாக பரப்புரை செய்யவில்லை என்று பொய் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், 2014 ஜூலை வரை கரிசல் வேங்கைகள் என்னும் பெயர் தெரிந்த நபர்களாக, அந்த அமைப்பு மே பதினேழின் Proxy என்பதை தெரிந்தவர்களாக, மே பதினேழு இயக்கத்தில் வெகு சிலரே இருந்தோம். திருமுருகன், நான், பிரவீன், செந்தில், பரப்புரைக்கு சென்ற ஐவர். ஆனால், ஆகஸ்ட் 15, 16 தேதிகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றபோது அனைவர் மத்தியிலும் கரிசல் வேங்கைகள் பெயரையும், விருதுநகர் பரப்புரை பற்றியும் விவேக் தான் அனைவரிடமும் கூறினார். ஆனால், இன்று அதே விவேக்கை பொய் சொல்லச் சொல்லி திருமுருகன் கூறியிருக்கின்றார்.

 8. அதே போல் விருதுநகரில் பரப்புரை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, செந்தில் பன்னீரிடம் தேர்தல் பிரச்சார புகைப்படங்களை பகிருங்கள் என்று group chatல கேட்டார். அதற்கு பதிலாக புகைப்படங்கள் போட வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று பன்னீர் பதில் கூறுகின்றார்.


 9. கிராமப்புறத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. முக்காடு போட்டுக்கிட்டு எங்கேயோ போயிட்டு வரான் என்று. அதுபோல், தேர்தல் பரப்புரை சென்றுவிட்டு அதைப் பற்றி வெளியில் தெரிந்து விடக்கூடாது என்று அப்பொழுதே ஆதாரங்களை மறைக்க வேண்டும் என்று உத்தரவுகளையும் இடும் உங்கள் தலைமை என்ன நோக்கத்திற்காக உங்களை விருதுநகருக்கு அனுப்பியது?

 10. அந்த தேர்தல் பரப்புரைக்கு போன தோழர்களை பார்த்து குறிப்பாக பன்னீர், மனோஜ், சபரி, விவேக், சுந்தரமூர்த்தி அவர்களை பார்த்து எனக்கு வருத்தம் தான் வருகின்றது. கிட்டதட்ட ஏழுநாட்கள், (சுந்தரமூர்த்தி 5 நாட்கள் ) அந்த தொகுதியில் பரப்புரை செய்துவிட்டு நாங்கள் பரப்புரை செய்யவில்லை என்று, இவர்கள் சொல்லுவதை கேட்டுகொண்டு கொஞ்சம்கூட கூச்சமில்லாமல், பச்சைபொய்யை புளுகுகின்றார்கள்.

 11. இவர்கள் செய்த செயல் நியாமானதாக நேர்மையானதாக இருந்தால் வெளிப்படையாக ஒப்புகொள்ள ஏன் தயங்க வேண்டும்? ஒரு வேளை, அது சட்டத்திற்கு புறம்பான காரியமாய் இருந்து, ஆனால் அதை செய்ய கூடிய தேவை இருந்து செய்திருந்தால் வெளிப்படையாய் கூறாமல் இருக்கலாம், தேர்தல் பரப்புரை சட்டத்திற்கு புறம்பானது இல்லையே? இது சனநாயக வழிமுறை தானே? இந்த சனநாயக வழிமுறை என்பது ஒவ்வொரு கட்சிக்கும், இயக்கத்திற்கும் அவர்கள் நிலைப்பாடு சார்ந்ததாய் இருக்கும், இங்கு இவர்கள் தன்னுடைய நிலைபாட்டை வெளிப்படையாக பேசமுடியாத அளவிற்கு தவறான நிலைபாட்டை எடுத்ததால் தானே, தான் செய்த வேலையை, தாம் செய்யவில்லை என்று பொய் சொல்ல வேண்டிய நிலைக்கு வந்திருக்கின்றனர்..

 12. எந்த நோக்கத்திற்காய் வந்தோமோ அந்த நோக்கத்தை விட்டு, வேறு ஒரு விடயத்தை செய்து விட்டு அதை பற்றி கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பொய் சொல்லுவது என்பது அறத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு, அதன் மீது ஏறி நின்று தான் இந்த பொய்யை உரக்க சொல்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையா தோழர்களே? விருதுநகர் பரப்புரையில் ஈடுபட்ட தோழர்கள் அனைவருக்கும் கண்கூடாக தெரியும், திருமுருகன் தான் செய்த தவறை மறைப்பதற்கு எப்படிப்பட்ட பொய்யையும் கூறுவார் என்று. இன்று அவர்களும் அவர் எடுத்த தவறான முடிவையும், தவறான செயலையும் மறைப்பதற்கு அவருடன் சேர்ந்து பொய் சொல்லும் நிலைக்கு வந்திருக்கின்றனர்.

 13. நான் இவ்வளவு விரிவாக அனைத்தையும் எழுதியதே, பரப்புரைக்குச் செல்லாத மற்ற தோழர்கள் உண்மையை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். அந்த ஐவரில் சபரி, சுந்தரமூர்த்தி, பன்னீர் ஆகியோரது போன்களில் இருந்து Location Data அவர்களது Google கணக்குகளில் பதிவாகும் என்பதை பலரும் அறீவீர்கள். குறிப்பிட்ட நாட்களில் அவர்கள் எங்கிருந்தார்கள் என்பதை அவர்களது Google கணக்கில் பாருங்கள். அவர்கள் கூறி வரும் பொய்யும், பொய் சொல்லத் தூண்டிய திருமுருகனின் நேர்மையற்றச் செயலும் தெரியவரும். மேலும், சுந்தரமூர்த்தியின் போனில் Automatic Call Recorder இயங்குகின்றது. அவர் பேசும் அனைத்து தொலைபேசி உரையாடல்களும் அவரது போனில் பதிவாகும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். குறிப்பிட்ட காலத்தில் அவர் பேசிய உரையாடல்களை முழுதும் கேளுங்கள், திருமுருகன் நிகழ்த்திய அயோக்கியத்தனமான நாடகம் புரிய வரும்.

 14. ஆனால் இன்னொரு கேள்வியும் கூட உங்களுக்கு எழலாம். சரி, நாம் பரப்புரை செய்தது வைகோவிற்கு ஆதரவாகத் தானே? நம்முடன் போராட்டக்களங்களில் நிற்கும் அகிலா அம்மாவிற்கு பரப்புரை செய்வது சரி என்றால், நம்முடன் போராட்டக் களத்தில் நிற்கும் வைகோவிற்கு பரப்புரை செய்வது மட்டும் எப்படி தவறாக இருக்க முடியும் என்று உங்களுக்கு தோன்றுகின்றதா தோழர்களே? சிறப்பு. இதுதான் நாம் அடுத்து பேசவிருக்கும் பகுதி.

  1.14.. பொய்யை தனது வழித்துணையாக்கிய திருமுருகன்

 15. இவர்கள் வைகோவிற்கு ஆதரவாக இங்கு பரப்புரையினை மேற்கொண்டவை குறித்து நாம் பேசும்பொழுது, ஏன் வைகோவை எதிர்க்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எழக்கூடும். வைகோவை ஏன் எதிர்க்க வேண்டும் என்று கூறுவதற்கு முன்பாக நான் வேறு சில விடயங்களை பேச விரும்புகின்றேன். இவற்றை பற்றி நீங்கள் புரிந்துகொண்டால், வைகோவை எதிர்க்க வேண்டிய அடிப்படை காரணங்களை புரிந்துகொள்ள முடியும். வேறு சில விடயங்கள் என்றால், இவர்கள் என்னை பற்றி கூறிய பல பொய்களில் ஒன்றை முதலில் பார்ப்போம். நான் மே பதினேழு இயக்கத்தை விட்டு வெளியேறிய பின்னர் 2014 அக்டோபர், நவம்பர் மாதங்களில் என்னைப் பற்றி இவர்கள் மேற்கொண்ட பொய் பரப்புரை என்னவென்றால் "நான் ஈழ விடுதலை தொடர்பாக எந்த வேலையும் செய்யவில்லை, அமைப்பை விட்டு வெளியேறிய பிறகு ஈழவிடுதலை விவகாரங்களை விட்டு விலகிவிட்டேன், நான் நேர்மையாளனாக இருந்திருந்தால் அமைப்பை விட்டு வெளியேறிய பின்னரும் ஏதேனும் வேலை செய்திருக்க வேண்டும் அல்லவா " என்று ஒரு அயோக்கியத் தனமான அவதூறு வாதத்தினை இவர்கள் முன்வைத்தனர். இது பச்சை பொய், ஏனென்றால் நான் ஈழம் தொடர்பாக என்ன வேலை செய்து கொண்டிருந்தேன் என்பது இவர்களுக்கு நன்றாக தெரியும். நான் என்ன வேலை செய்து கொண்டிருந்தேன் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லையே தவிர இவர்களுக்கு நன்றாக தெரியும். ஒரு வேலையை செய்துவிட்டு கேமராவிற்கு முகம் காட்டினால் தான் வேலை செய்ததாக அர்த்தமா? கேமராவை பார்த்ததும் ஓடி வந்து நிற்பதற்கோ அல்லது கேமரா இருக்கும் பக்கமே திரும்பி நிற்பதற்கோ நான் ஒன்றும் தயாநிதி மாறனோ, நரேந்திர மோடியோ அல்லது திருமுருகன் காந்தியோ இல்லையே.

  1.14.1. .நா. விசாரணைக் குழுவும் (OISL) சாட்சியங்களும்

 16. அந்தக் காலகட்டத்தில் நான் செய்த ஒரு வேலையை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அமெரிக்க தீர்மானம் 2013 இல் கொண்டுவரப்பட்ட பொழுது அதில் பல்வேறு பிரிவுகள் ஈழவிடுதலைக்கு எதிராக இருந்தன, இதனை நீங்கள் நன்றாக அறிவீர்கள். அதில் சர்வதேச விசாரணையை தடுக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் அந்த அமெரிக்க தீர்மானத்தின் மூலமாக தொடர்ச்சியாக மேற்கொள்ளபட்டு வந்தன. மூன்றாவது தீர்மானம் 2014 ஆண்டில் வந்தபொழுது அதில் ஐ.நா.வினுடைய மனித உரிமை ஆணையாளர் அலுவலக விசாரணை என்ற ஒன்றை வைத்து இருந்தனர். அது தான் OISL அதாவது OHCHR-INVESTIGATION-ON-SRILANKA என்று கூறுவார்கள். இந்த விசாரணை குழு அமைக்கப்பட்ட பொழுது நவனிதம்பிள்ளை அவர்கள் அதற்கு சில Mandate, அதாவது எவற்றை எல்லாம் விசாரிக்க வேண்டும், எந்த எந்த காலகட்டத்தில் நடைபெற்றதெல்லாம் விசாரிக்க வேண்டும் என்று OISL க்கான guidelines ஐ உருவாகினார்.[65]அதில் என்ன கூறபட்டிருகின்றது என்றால், "காலகட்டம்" என்பது 2002 முதல் 2011 வரையிலான குற்றங்கள் விசாரிக்கபட வேண்டும் என்று கூறியிருந்தார்கள். மேலும், தேவைபட்டால் இந்தகாலகட்டதிற்கு அப்பாற்பட்ட குற்றங்களையும் கணக்கில் எடுத்துகொள்ளலாம் என்று அந்த விசாரணை குழுவிற்கான Mandate ஐ வரையறுக்கும் பொழுது குறிப்பிடிருந்தார். இதனை மிக முக்கியமான விடயமாக நான் பார்த்தேன்.

 17. இந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்பதை நாம் நன்றாக அறிந்துள்ளோம், இதுவெறும் கண்துடைப்பு வேலை என்பதும் நன்றாக தெரியும். இருந்தாலும், இந்த நிகழ்வு நடைபெறும் பொழுது, முழுமையாக அணைத்து ஆதாரங்களையும் ஐ.நா.வில் சமர்ப்பித்துவிடலாம், ஒரு குற்றம் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பணி நடக்கும் பொழுது , அது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் அளிப்பது முக்கியமான வேலை. அவர்கள் அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது இரண்டாம் பட்சமாக இருக்கட்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், கொடுக்கப்பட்ட ஆதாரத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அடுத்த நகர்வினை நாம் மேற்கொண்டு நியாயம் பெற முயற்சிக்க முடியும்.

 18. அவர்கள் கொடுத்த வரையறைகுள் இல்லாமல் மேலும் சில விஷயங்களை சேர்த்து கொள்ளலாம் என்பதாக கருதி " ஈழ இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கு" குறித்த ஆதாரங்களை சமர்பிக்கலாம் என்று ஒரு முடிவினை எடுத்து நார்வேயில் இருக்ககூடிய நண்பர் விஜய்யுடன் இனைந்து இந்த வேலையினை தொடங்கினோம். இதில் இந்தியா குறித்தான ஆதாரம் மட்டுமின்றி வேறு சில வேலைகளையும் நான் செய்து கொண்டிருந்தேன். இதில் தோழர் விஜய்க்கு என்னிடம் இருந்த பல்வேறு ஆதாரங்களை அனுப்பினேன்,


 19. அவர் அவரிடம் உள்ள ஆதாரங்களை எடுத்துக்கொண்டார். இன்னும் பல்வேறு தோழர்கள் அதில் பங்கெடுத்திருந்தார்கள். இது எல்லாமே நான் அமைப்பை விட்டு வெளியேறிய பிறகு நான் தனிநபராக செயலாற்றிய நிகழ்வு. இதில் ஈழவிடுதலையின் மீது அக்கறைகொண்ட பல்வேறு தனிநபர்கள் பங்கு கொண்டனர். நார்வே விஜய் அவற்றிக்கான ஆதாரங்களை சமர்ப்பித்தார். இந்த ஆதாரங்கள் தொகுப்பது தொடர்பாக அக்டோபரில் தொடர்ச்சியான பணிகளில் ஈடுபட்டு இருந்தோம். இந்த ஆதாரங்கள் அதிகபட்சமாக பத்து பக்கத்திற்குள் அடங்க வேண்டும் என்று ஐ.நா. அறிவுறுத்தி இருந்தார்கள், அதனால் பல்வேறு ஆதாரங்களை திரட்டி இருந்தாலும் கூட சில பகுதிகளை தவிர்த்து விட்டு தான் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த ஆதாரங்கள் கூட இதில் இனைத்திருகிறேன். [66]

  1.14.2. ஈழப்படுகொலையில் இந்தியாவின் பங்கு குறித்த புத்தகம்

 20. இந்த வேலையை நாங்கள் அத்துடன் முடிப்பதாக இல்லை, ஏனெனில் பத்து பக்கம் என்பது மிகமிக சிறிய வடிவம், ஆகையால் இது குறித்து இன்னும் விரிவாக பதிய வேண்டும் என்பதற்காக " இந்தியா குறித்தான முழுமையான ஆதாரங்களை நூலாக வெளியிடுவதற்காக நானும் தோழர் விஜய்யும் தொடர்ச்சியான வேலைகளில் ஈடுபட்டுகொண்டிருக்கிறோம். இந்த புத்தகத்தை இன்னும் சிலமாதங்களில் வெளியிட கூடும் என்று எதிர்பார்கிறேன். நான் இந்த வேலையை மேற்கொண்டு வருகிறேன் என்று திருமுருகனும், அருள் முருகனும் லேனா குமாரும் நன்கு அறிவார்கள். ஆனால் இதனை அறிந்து கொண்டே என்னை பற்றி பொய் பரப்புரையை மேற்கொண்டதிலிருந்து இவர்கள் என்னை பற்றி ஒரு தவறான பிம்பத்தை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் செயல்பட்டு வந்தார்கள் என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள முடியும் இதனை நீங்கள் புரிந்து கொண்டால், இவர்கள் அடுத்தடுத்து என்ன செய்தார்கள் என்பதை மிக எளிதாக புரிந்துகொள்ள முடியும். இவர்கள் யார் என்பதையும் எளிதாக புரிந்துகொள்ள முடியும்.

 21. இந்தியா குறித்த அந்த புத்தகத்தில் நானும் தோழர் விஜய்யும் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, இதில் நாங்கள் பல்வேறு விஷயங்களை பார்த்தோம், ஏனெனில் இந்தியா -இலங்கை-ஈழம் குறித்து மிகவும் மேம்போக்காக பலரும் பலவிதமான தவறான கருதுருவாக்கத்தில் சிக்கி கொண்டிருக்கிறார்கள் என்பதை தான் நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டியிருகின்றது. உதாரனத்திற்கு இந்தியாவின் பங்கு என்பது 2009 இல் இருந்தா, 2002 இல் இருந்தா, 2000 இல் இருந்தா அல்லது 1983 இல் இருந்தா என்று பல்வேறு விஷயங்கள் அலசப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த விஷயங்களை நானும் தோழர் விஜய்யும் 1939 இல் இருந்தே இந்தியாவின் பங்கு குறித்த பல்வேறு ஆதாரங்களை திரட்டிவந்திருகின்றோம்.

  1.14.2.1. சென்னையில் நேரு ஆற்றிய உரை

 22. 1939 இல் ஜூலை 25 அன்று நேரு சென்னை மெரினா கடற்கரை கூட்டம் ஒன்றில் பேசும்பொழுது குறிபிடுகின்றார் [67] . I do not consider Ceylon as a foreign country at all. In fact, it is practically joined up with India. Any person who looks at the map can realize that it is not conceivable in any scheme of things, political or even economic, for India and Ceylon to be cut away from each other. They cannot be, certainly Ceylon cannot be. So far as we are concerned, it is (Plantation workers problem) one of the many problems; but for Ceylon it is a great problem. If the two countries are isolated, it would mean a great misfortune to Ceylon. There is no reason why they should be separated.

 23. அதாவது "இலங்கையை நாங்கள் இன்னொரு நாடாக பார்க்கவில்லை " என்று குறிப்பிடுகின்றார். தாம் இன்னொரு நாடாக பார்க்கவில்லை என்று அவர் குறிப்பிட்டால், இலங்கையை அவர் இந்தியாவின் ஒரு பகுதியாகவே கருதிகிறேன் என்று வெளிப்படையாகவே தெளிவாக தெரிவிக்கின்றார்.

  1.14.2.2. காந்தி - ஜெயவர்த்தனே சந்திப்பு

 24. இதே காலகட்டத்தில் நடைபெற்ற இன்னொரு சந்திப்பையும் பார்ப்போம். 1940, மார்ச் 20 அன்று காந்தியை இலங்கையில் இருந்து வந்த குழு ஒன்று சந்தித்தது. 1983 ஜூலையில் இனப்படுகொலையை நடத்திய JR ஜெயவர்த்தனாவும் அந்தக் குழுவில் ஒருவர். காந்தியை சந்தித்துவிட்டு வந்தபின்பு அந்தக் குழுவினர் அளித்த பேட்டி இது: "We asked him what Ceylon could expect from a free India. Many in Lanka prefer to remain as Dominion in the British Empire than to be free and run the risk of being exploited by India which could easily swamp Lanka. Gandhiji laughed and said: `Ceylon has nothing to fear from a free India.'''[68]

 25. இந்தப் பேட்டியிலும், சந்திப்பிலும் இருந்து அறிந்துகொள்ளக் கூடிய முக்கியமான விஷயம், இந்தியாவின் மீதான பார்வை இலங்கையில் இருந்தவர்களுக்கு எப்படி இருந்தது என்பதே. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தால், இந்தியா இலங்கையை ஆக்கிரமித்து விடும்; அதனால், முழுமையான சுதந்திரமாக இல்லாமல் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட ஆட்சி மாற்றம் மட்டும் போதும் என்றொரு எண்ணமும் இலங்கையில் இருத்த பலருக்கும் இருந்திருக்கின்றது. இந்தியா தம்மை ஆக்கிரமித்துவிடும் என்னும் அச்சம் இன்றும் கூட இலங்கையில் பலருக்கு இருக்கின்றது. இந்தியாவின் அகண்ட பாரதம் கனவும், இலங்கை மக்களின் இந்தியாவின் மீதான அச்சமுமே இந்திய-இலங்கை உறவினை அன்று முதல் இன்றுவரை வழிநடத்தி வந்திருக்கின்றன.

  1.14.2.3. நேருவும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும்.

 26. மாறி வரும் உலகச் சூழலில் எல்லைகளை விரிவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை அறிந்து, அகண்ட பாரதக் கனவானது, வேறு வடிவம் எடுக்கின்றது. அதனை நேரு வேறு வார்த்தைகளில் குறிப்பிடுகின்றார். [69]
  When the British Empire fades away, where will Ceylon go? She must associate herself, economically at least, with larger groups and India is obviously indicated. Because of this, it is unfortunate that many of the leaders of Ceylon should help in creating barriers between India and Ceylon. They do not seem to realize that India can do well without Ceylon in the future to come, Ceylon may not be able to do without India

 27. ஆனால், இலங்கையில் இருக்கக்கூடிய சிங்கள மக்களுக்கு வேறொரு பார்வையும் இருக்கின்றது. இந்தியா இலங்கையை ஆக்கிரமித்து விடும் என்றொரு பயமும் அவர்களுக்கு இருந்திருக்கின்றது; இருந்து வருகின்றது. அந்த நேரு தான் இந்தியாவின் முதல் பிரமதராகவும் , முதல் வெளியுறவுதுறை அமைச்சராகவும் அமர்கின்றார். அவர் தான் இந்தியாவின் வெளியுறவு கொள்கையை வடிவமைக்கின்றார். பாடபுத்தகத்தில் ஆசிய ஜோதி என்றும், அணி சேரா நாடுகளின் தலைவர் என்றும் நேருவை வர்ணித்திருபார்கள். ஆனால் அவர் இந்தியாவின் வெளியுறவு கொள்கையை வடிவமைத்த போது அவருக்கும் அகண்ட பாரதம் என்றகனவு இருந்தது, அது ஆர்.எஸ்.எஸ்.க்கு மட்டும் சொந்தமானது இல்லை, நேருவிற்கும் சொந்தமானது.

 28. நேருவுடைய இந்த கருத்து தான் இந்தியாவின் வெளியுறவு கொள்கையாக உருவெடுத்துள்ளது. இதனால் தான் அவர் காஷ்மீரை ஆக்கிரமித்தார், சில இடங்களை ஆக்கிரமித்து தம்முடன் இணைத்து கொண்டார், சில இடங்களில் பொம்மை அரசாங்ககளை நிறுவினார். உதாரணத்துக்கு நேபாளும், பூடானும் அம்மாதிரியான பொம்மை அரசாங்களை கொண்டது. அங்கு இந்திய அரசு சொல்படி கேட்டு நடக்கும் அரசாங்கம் ஒன்றை நிறுவி இந்தியா பார்த்துக்கொண்டது. 1949 ஆகஸ்ட் 8 அன்று கையொப்பமான இந்திய-பூடான் நட்புறவு ஒப்பந்தத்தின் இரண்டாம் விதி இரு நாடுகளின் நிர்வாக நடைமுறைகளை குறிக்கின்றது. அந்த விதியில் கூறியிருப்பது
  The Government of India undertakes to exercise no interference in the internal administration of Bhutan. On its part the Government of Bhutan agrees to be guided by the advice of the Government of India in regard to its external relations. [70]

 29. பூடான் அரசு தனது வெளியுறவுக் கொள்கைகளை இந்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மேற்கொள்ள ஒப்புக்கொள்கின்றது என்று அந்த விதி குறிப்பிடுகின்றது. பூடான் தனி நாடு என்றாலும் கூட தன்னுடைய வெளியுறவுக் கொள்கையை தானே தீர்மானிக்க முடியாதவாறு இந்தியா பார்த்துக்கொண்டது. பூடான் போன்று நேரடியாக இல்லாவிட்டாலும், தமது அண்டை நாடுகளான நேபாள், பங்களாதேஷ், இலங்கை, மாலத்தீவு, பர்மா ஆகியவற்றை தமது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே இந்தியா கையாண்டு வந்திருக்கின்றது.

 30. இதே போன்ற ஒருநிலை தான் இந்தியாவிற்கு இலங்கையிலும் தொடர்ச்சியாக இருந்து வந்திருகின்றது. எப்பொழுதெல்லாம் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக இலங்கை அரசு செயல்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் இந்திய வெவ்வேறு வழிகளில் செயல்பட்டு அந்த அரசாங்கங்களை கவிழ்ப்பதோ, அல்லது அந்த அரசாங்கங்களை மாற்றி வேறு ஒரு அதிபர்களை கொண்டு வந்துள்ளது. இதுதான் வரலாற்றில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது. இதன் அடிப்படையில் தான் இந்தியாவின் தலையீடு என்பது எல்லா காலகட்டங்களிலுமே இருந்துவந்திருக்கின்றது.

 31. இது போன்று இந்தியா தொடர்ச்சியாக இலங்கையில் தன்னுடைய மூக்கை நுழைப்பதென்பது தமிழர்களை காக்க வேண்டும் என்பதற்காகவோ, தமிழர்களின் பால் விருப்பம் கொண்டோ அல்ல, மாறாக தம்முடைய அகண்ட பாரதம் என்ற கனவில் ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தான் என்பதை மிக எளிதில் புரிந்து கொள்ளக்கூடும். இந்திய அரசினுடைய நோக்கங்களை முழுமையாக புரிந்து கொள்ளாத பலரும், 1980 களில் தமிழ் போராளிக் குழுக்களுக்கு இந்திய அரசு ஆயுதப் பயிற்சி அளித்தது, ஈழத்திற்கு ஆதரவாகத்தான் என்று தவறாக கருதுகின்றனர். ஆனால், அனைத்து காலகட்டத்திலும் இந்தியாவின் நகர்வுகள் ஈழத்திற்கு எதிராக, ஒருங்கிணைந்த இலங்கையைக் காக்க, தன்னுடைய அகண்ட பாரத கனவு சிதையாமல் இருப்பதற்காகவே இருந்திருக்கின்றன; இருந்து வருகின்றன.

  1.14.2.4. இந்தியா அளித்த ஆயுதப் பயிற்சியின் பின்னணி

 32. போராளிக் குழுக்களுக்கு பயிற்சி அளித்தது குறித்தும், இந்திய ராணுவத்தை இலங்கைத் தீவிற்கு அனுப்பியது குறித்தும் கருத்து தெரிவித்த இந்திய உளவுத்துறை ரா (RAW) வின் தலைவராக இருந்த (AK Verma) AK வர்மா, முடிவுகள் எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டன என்று ஒரு பேட்டியில் தெரிவித்த வார்த்தைகள் இவை.

  The Indian reactions were guided by its political and strategic interests which required that while Sri Lanka must remain a united country, it should be advised against seeking a military solution to the ethnic problem through internal and external resources.[71]

 33. இந்தியாவின் நோக்கம் ஒருங்கிணைந்த இலங்கையைக் காக்க வேண்டும் என்பதாக இருந்தது; அதன் அடிப்படையில் இந்தியாவின் நகர்வுகள் இருந்தன என்று குறிப்பிடுகின்றார். மேலும் வெளிச் சக்திகள் இலங்கையில் நுழைவதை அனுமதிக்கூடாது என்று தெரிவிக்கின்றார்.

 34. அந்த வெளிச்சக்திகள் எவை என்பதை ரா (RAW) வின் தலைவராக இருந்ததோடு மட்டுமின்றி போராளிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பையும் மேற்கொண்டிருந்த சந்திரன் என்கின்ற S. சந்திரசேகரன் ஒரு நிகழ்வில் வெளிப்படையாகவே குறிப்பிடுகின்றார். அப்பொழுது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு பற்றி ஒருவர் கேள்வி எழுப்பியவுடன், “இலங்கைப் படைகளை தாக்குவதற்காகவே உங்களுக்கு பயிற்சி அளித்தோம். தமிழ் ஈழம் குறித்தோ, அரசியல் தீர்வு குறித்தோ நாங்கள் எப்பொழுதுமே உங்களுக்கு உறுதி அளிக்கவில்லை” என்று கூறுகின்றார்.
  Early part of this year I participated in a lecture given by a former RAW chief Chandran who without any hesitation told us that India didn’t like the heavy US involvement in Sri Lanka in the early part of the Eighties and wanted to teach a lesson to Sri Lanka thereby providing arms trainings to Tamil Groups. According to him, India’s sole intention was to have their strong presence in Sri Lanka. When he was asked by the Tamils in the audience about the political solution for Tamils, his reply was “Did we ever mention political solution during the training?”.   He continued “We gave you training to attack Sri Lankan forces and but never mentioned about Tamil Eelam or a political solution to you”. So straight from the horse’s mouth, the RAW chief confirmed that India had used the Tamil discontent to get to Sri Lanka, leaving most of us in the audience who had willingly participated in this experiment, feeling angry and betrayed.[72]

 35. ஈழத்திற்கு எதிரான நிலைப்பாடு இந்திய அரசின் அனைத்து மட்டத்திலுமே தொடர்ச்சியாக இருந்து வருகின்றது, இந்திய அமைதிப் படை என்னும் பெயரில் அனுப்பப்பட்ட இந்திய ராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவில் (10th Para Troops) இருந்து யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்குள் இறக்கப்பட்டு, விடுதலைப் புலிகளோடு நடைபெற்ற சண்டையில் மிக மோசமாக தோல்வியுற்று அங்கிருந்து தப்பி ஓடிய சித்தார்த் சாட்டர்ஜி,[73] (ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான்-கி-மூனின் மருமகன் இவர். தற்பொழுது ஐ.நா.வில் பணியாற்றுகின்றார்[74] ) 2000 ம் ஆண்டு மே மாதத்தில் island பத்திரிக்கையில் Sri Lanka – God Abandoned? என்னும் தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையில்[75] இப்படிக் குறிப்பிடுகின்றார்.

  We must stand by the Government and the people of Sri Lanka at this hour of need, and support them in the fullest measure, even if it means committing our own forces once again to safe guard the territorial integrity of a nation state, and a member of SAARC. I appeal to the Prime Minister and the Parliament, not to abandon Sri Lanka.


 1. இலங்கையின் ஒருங்கிணைந்த நிலப்பரப்பை காக்க இந்தியா தனது படைகளை அனுப்பியேனும் உதவ வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். இப்படிக் கட்டுரை எழுத வேண்டிய அளவிற்கு அப்பொழுது என்ன நடந்தது என்று பார்ப்போம்.

  1.14.2.5. இலங்கையைக் காக்க களமிறங்கிய வாஜ்பாய்.

 2. 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ம் தேதி அன்று ஆனையிறவு படைத்தளம், இலங்கை ராணுவத்தை வீழ்த்தி, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அடுத்த வாரம் யாழ்ப்பாணம் நகரத்தை முற்றுகையிடும் நிலைக்கு பிரிகேடியர் பால்ராஜ் தலைமையில் விடுதலைப் புலிகள் முன்னேறினர். அன்றைய நிலையில் யாழ்ப்பாணம் கோட்டையில் நிலைகொண்டிருந்த இலங்கை ராணுவத்தினர் 40000 பேரும் தப்பிக்க வழியின்றி இருந்தனர். இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்க, தனது ராணுவத்தினர் 40000 பேரையும் பாதுகாப்பாக மீட்டுத் தருமாறு இந்தியாவை வேண்டுகின்றார். [76]

 3. சந்திரிகாவின் இந்த வேண்டுதலுக்குப் பிறகு இந்திய அரசில் ஒரு வெளிப்படையான மாற்றம் ஏற்படுகின்றது. அதாவது 1991 இல் இருந்து 2000 ஆம் ஆண்டு வரை, இந்தியா நேரடியாக இலங்கை விவகாரத்தில் பங்கெடுப்பதாக இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தது, ஆனால் அதே காலகட்டத்தில் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதெல்லாம் நடைபெற்றுகொண்டுதான் இருந்தது. 2000 ம் ஆண்டு , மே முதல் வாரத்தில் என்ன நடைபெற்றது என்பதை நாங்கள் எழுதும் புத்தகத்தில் விரிவாக பதிகின்றோம். மே 7, 2000 அன்று தொடங்கி நடைபெற்ற சில நிகழ்வுகளை இங்கு பட்டியலிடுகின்றேன். பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, இந்திய விமானப் படைத் தளபதி AY டிப்னிசை (AY. Tipnis) 6 நாள் அதிகாரப்பூர்வமான பயணமாக, மே 7, 2000 அன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கின்றது.[77]

 4. அவர் இலங்கை சென்று வந்த பின்பு தான் ஈழத்திற்கு எதிரான இந்தியாவின் நகர்வுகள் வேகமெடுக்கின்றன. இலங்கைக்கு ராணுவ உதவிகளையும் பொருளாதார உதவிகளையும் இந்தியா வழங்கத் தொடங்கியது. மூன்று உளவுத்துறை அதிகாரிகளோடு, வெளியுறவுத்துறை இணைச் செயலர் ஆகியோரோடு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஜூன் மாதத்தில் கொழும்பு சென்றார். அப்பொழுது இலங்கைக்கு 500 கோடி ரூபாய் ஆயுதங்கள் வாங்குவதற்கு கடனாக வழங்கியதோடு மட்டுமின்றி, ஒருங்கிணைந்த இலங்கையை ஆதரிக்கிறோம் என்று வாஜ்பாயியின் செய்தியையும் சுமந்துச் சென்றார்.[78][79]

  1.14.2.6. வாஜ்பாய் அரசு அளித்த ஆயுதங்கள்

 5. வெளிப்பேச்சுக்கு நாங்கள் இலங்கைக்கு ராணுவத் தளவாடங்கள் கொடுக்க மாட்டோம் என்று அறிவித்த இந்திய அரசாங்கம் பல்வேறு தாக்குதல் ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியது.


 1. இது போன்று பல்வேறு ஆயுத தளவாடங்களை பா.ஜ.க. அரசு கொடுத்த பொழுது அந்த கூட்டணியில் ம.தி.மு.க.வை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர் என்பது மிக முக்கியமானது.

 2. இப்போது வைகோ தொடர்ச்சியாக வாஜ்பாய் எந்த ஆயுதமும் கொடுக்கவில்லை என்றொரு பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதனை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அது இந்தியா செய்த உதவியினை "இல்லை" என்று கூறும் ஒரு பொய் பிரச்சாரத்தினை வைகோ தொடர்ச்சியாக செய்துவந்திருக்கிறார். நீங்கள் வைகோவின் பேச்சினை கவனமாக கவனித்தீர்கள் என்றால் மிக நன்றாக புரிந்துகொள்ள முடியும். அவர் ஒவ்வொரு முறை பேசும் பொழுது இந்தியாவை குற்றம் சுமத்துவது போல் பேசுவார். “இந்தியா அனைத்து உதவிகளையும் செய்தது, ராடார் கொடுத்தது, ஆயுதங்கள் கொடுத்தது" என்பார்.

 3. இதில் உங்களுக்கு நான் பலமுறை பல வகுப்புகளில் சொல்லியிருகிறேன் “ஒருவர் என்ன பேசுகிறார் என்பதை விடவும் , எதை பேசாமல் இருக்கிறார்" என்பதிலிருந்து அவரை பற்றி நாம் முழுமையாக புரிந்துகொள்ள முடியும்" என்று. வைகோவின் விடயத்திலும் நீங்கள் அதனை கவனிக்க வேண்டும். அவர் ராடார் கொடுத்ததை வெளிப்படையாக பேசுவார், கப்பல் கொடுத்ததை பற்றி பேசமாட்டார், அதிநவீன ஆயுதங்கள் கொடுத்ததை பற்றி பேசமாட்டார். மீண்டும் மீண்டும் ராடார் வழங்கியதை மட்டுமே பேசுவார்.

 4. சரி, பேசாமல் போனால் தான் என்ன? என்று நீங்கள் நினைகிறீர்களா? இதில் தான் அடிப்படையில் இந்திய அரசிற்கு ஆதரவான சூட்சுமம் இருப்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர் இந்தியா, ராடார் கொடுத்தது என்று கூறும்போது, இந்திய அரசிற்கு வெளிப்படையாக அதரவு அளிப்பவர்கள் பதில்வாதம் என்னவாக இருக்கும் என்றால் – விடுதலைபுலிகள் அமைப்பினர் விமானங்களை இயக்க கூடிய திறன் பெற்றுவிட்டனர், அவர்கள் விமானபடையினை கட்டமைத்து விட்டார்கள் அதனால், இந்தியாவின் எல்லைகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இருகின்றது, அதனால் இந்தியா ராடார் கொடுத்திருக்கின்றது. ராடார் என்பது ஒரு கண்கானிப்புகருவி தான், அதற்கு மேல் அதை பயன்படுத்தி தாக்குதல் நடத்த முடியாது என்று இந்திய அரசிற்கு ஆதரவாக பேசக்கூடியவர்கள் கூறுவார்கள். இங்கு வைகோ ராடார் மட்டும் என்று குறிபிடுவதன் மூலம் எதிர்தரப்பினை சேர்ந்தவர்கள் பதில் தருவதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்துகின்றார். அவர்களால் பதில் கொடுக்க முடியும்.

 5. இதுவே, போர்க்கப்பல்கள் கொடுத்தார்கள் என்றோ, பீரங்கிகள் கொடுத்தார்கள் என்றோ கூறினாலோ, இந்திய அரசிற்கு ஆதரவாக வெளிப்படையாக பேசுபவர்கள் இதுபோன்று எந்த ஒருவாதத்தினையும் வைக்க முடியாது. இந்த வகையான ஆயுதங்கள் தான் - (கப்பலும், பீரங்கிகளும், துப்பாகிகளும்) மக்களை அழிப்பதற்கு பயன்படக்கூடியவை, ஆகவே இவர் தொடர்ச்சியாகவே தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக்கொண்டு இந்திய அரசிற்கு ஆதரவான குரலை தான் ஒலித்து வந்திருக்கிறார்.

 6. இதில் முதல் பலன், இந்தியா இலங்கைக்கு செய்த உதவிகள் குறித்த தகவல்கள் மக்களுக்கு முழுமையாக சென்று சேராது, இரண்டாவது பலன், இந்திய அரசு தரப்பில் மக்கள் மனதில் ஏற்றுகொள்ளக்கூடிய ஒரு பதிலையும், அவர் ராடார் கொடுத்ததை நியாயபடுத்தும் பதிலையும் ஒன்று சேர சென்று சேர்பதற்கான ஒரு சூழழையும் உருவாக்கிவிடுகின்றார்.
  1.15.1. இனப்படுகொலையைக் கூர்மைப்படுத்திய இந்தியா

 7. இப்படி செய்து கொண்டிருந்த வைக்கோவை பற்றி இன்னும் தெளிவாக புரிந்துகொள்வதற்கு 2008 இல் ஒரு சம்பவம் நடைபெற்றது. அதாவது 2007 செப்டம்பரில் இந்தியா மேலும் இரண்டு கப்பல்களை இலங்கை அரசிற்கு கொடுக்கின்றது. Varaha என்ற கப்பலையும் Vigraha என்ற கப்பலையும் இலங்கை அரசாங்கத்திற்கு ஒருவருட கால லீஸ்க்கு கொடுக்கிறது, அது ஒவ்வொரு வருடம் நீடிக்கப்படும் என்ற ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்படுகின்றது[80]. அந்த கப்பல் சென்னையில் நிலைநிறுத்தபட்ட கப்பல். இதனை சென்னையில் வைத்து கொடுத்தால் இங்கே எதிர்ப்புகள் எழக்கூடும் என்பதற்காக அந்த கப்பலை விசாகபட்டினத்திற்கு கொண்டு சென்று, அங்கே வைத்து கோத்தபய ராஜபக்சேவிடம் கொடுத்தார்கள்.

 8. அந்த கப்பல் தான் விடுதலைபுலிகள் அமைப்பின் கடைசி இரண்டு கப்பல்களை அழிப்பதற்கு மிக பெரும் பங்காற்றியது. அதிலும் குறிப்பாக விடுதலைபுலிகள் அமைப்பின் கப்பலை இலங்கை, ஈழ கடற்பரப்பில் இருந்து 1860 மைல்கள் தொலைவிற்கு விரட்டிச்சென்று அங்கு வைத்து அழித்தது. அதற்கு பிறகும் இந்திய அரசாங்கங்கள் வழங்கிய கப்பல்களின் வேலை நிறைவடையவில்லை, இலங்கை-ஈழ கடற்பரப்பில் அந்த கப்பல்கள் நிறுத்தப்பட்டு விடுதலைபுலிகள் அமைப்பிற்கு வேறு எந்த உதவியும் வந்துவிடாமல் இருப்பதற்கும், அங்கு இருக்கும் மக்களுக்கான உணவுகள் வந்துவிடாமல், மருந்துகள் வந்துவிடாமல் தடுக்ககூடிய வேலையை செய்துவந்தன. குண்டுகள் போட்டு மட்டுமல்ல, உணவின்றியும், மருந்தின்றியும் தமிழர்கள் சாக வேண்டும் என்னும் நோக்கில் இனப்படுகொலையை கூர்மைப்படுத்தும் வேலையைத்தான் இந்திய அரசு அப்பொழுது செய்தது.

  1.15.2. பொன்சேகாவிற்கு சிவப்புக் கம்பளம் விரித்த இந்தியா

 9. அந்த காலகட்டத்தில் தான், அந்த கப்பல் மக்களுக்கு தேவையான உதவிகளை தடுத்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தான் 2008 மார்ச் 9ஆம் தேதி அன்று இலங்கை இராணுவத்தை சேர்ந்த சரத்பொன்சேகா இந்தியாவிற்கு வருகின்றார்.[81], அப்போது இந்தியா அவருக்குசிவப்புக் கம்பளம் விரித்து முழு அரசு மரியாதை கொடுத்து வரவேற்றது. அதுவரை இந்தியாவை குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்காத விடுதலைபுலிகள் அமைப்பினர் அப்பொழுது மிககடுமையான ஒரு அறிக்கையினை வெளியிட்டார்கள்.[82]

 10. India doing another historical blunder என்று குறிப்பிட்டார்கள். "இன்னொரு வரலாற்று தவறை இந்தியா செய்கின்றது" என்று கண்டித்து இந்திய அரசிற்கு ஒரு கடிதத்தை அனுப்பினார்கள். அதை அனுப்பிய உடனேயே, அடுத்த நாளே தமிழ்நாட்டின் C.P.I. கட்சியை சார்ந்த தா.பாண்டியன் இந்திய அரசை எதிர்த்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அடுத்த நாள் பல போராட்டங்கள் தமிழகம் எங்கும் நடத்தப்பட்டன.[83] சென்னையில் ஐயா பழ.நெடுமாறன் தலைமையிலும், பா.ம.க.வின் மருத்துவர் ராமதாஸ் அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் அவர்களும் போராட்டங்கள் நடத்தினார்கள்..

 11. அதற்கு பிறகு மார்ச் 19 ஆம் தேதி அன்று இந்திய பாராளு மன்றத்தில் ம.தி.மு.க.வை சேர்ந்த பொள்ளாச்சி கிருஷ்ணன் உரையாற்றும்பொழுது " நீங்கள் சரத்பொன்சேகாவிற்கு அளித்த வரவேற்ப்பு கண்டிக்கப்பட வேண்டியது. அதனால் நீங்கள் கொடுத்த ராடார்களை திரும்ப பெற்றுகொளுங்கள் " என்று பேசினார்.[84]

 12. அதற்கு அடுத்த நாள் வைகோ ஒரு அறிக்கையினை வெளியிட்டார், அந்த அறிக்கையிலும் அதனையே தான் குறிபிட்டார் " நீங்கள் இலங்கைக்கு அளித்த ராடாரை திரும்ப பெற்றுகொள்ளுங்கள்" என்றார். இதனை அவர் எழுதிய "குற்றம்சாட்டுகின்றேன்" புத்தகத்திலும் வந்திருக்கிறது.

  1.15.3. வார்த்தைகளின் அரசியலும், வைகோவின் உண்மை முகமும்.

 13. இதனை நீங்கள் பாருங்கள் தோழர்களே. அந்த காலகட்டத்தில் மக்களுக்கான உதவிகள் பெற முடியாமல், இந்திய அரசு வழங்கிய கப்பல் தடுத்து கொண்டு இருகின்றது, அந்த கப்பலை திரும்ப பெற்றுகொளுங்கள் என்று இவர் கூறவில்லை, மாறாக ராடாரை திரும்ப பெற்றுக்கொளுங்கள் என்றுதான் கூறுகின்றார். கோரிக்கையின் முக்கியத்துவம் குறித்து உங்களுக்கு மீண்டும் விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கின்றேன். சரியான கோரிக்கை வைக்க வேண்டியதன் அவசியம் குறித்து, சரியான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பல இடங்களில் உங்களிடம் பேசி இருக்கின்றேன்.

 14. இனப்படுகொலை என்று பேசாமல் போர்க்குற்றம் என்று பேசுவது எவ்வளவு அயோக்கியத்தனமோ அந்த அளவிற்கு அயோக்கியத்தனமானது கப்பல் பற்றி பேசாமல், ரேடார் பற்றி மட்டுமே பேசுவது. இதன் மூலம் தொடர்ச்சியாக ராடார் பற்றி மட்டுமே இவர் பேசுவதன் மூலம் கப்பல்களை பற்றியும், பல்வேறு தாக்குதல் ஆயுதங்கள் பற்றியும் பேசாமல் இருப்பதன் மூலம் என்ன செய்ய வருகிறார் என்றால் " இந்தியா ராடார் மட்டும் தான் வழங்கியது” என்ற விஷ கருத்தினை இங்கிருக்க கூடிய மக்கள் மனதில் விதைக்கும் வேலையினை இவர் செய்து வந்திருக்கின்றார். அப்படி என்றால் இவர் யார்? இந்த கேள்விக்கான விடையில் தான் ஈழவிடுதலையின் அடுத்தகட்ட நகர்வு இருக்கிறது தோழர்களே!

 15. உங்களுக்கு மிக நன்றாக தெரியும் வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை என்று அதுவும் சர்வதேச அரசியலில் ஒருவருடைய நிலைபாட்ட வார்த்தைகளில் இருந்து தான் புரிந்துக்கொள்ள முடியும், அதனால் தான் 2009 மே மாதத்தில் தமிழீழ விடுதலைபுலிகளை நீங்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள் என்று சர்வதேசம் கூறியபொழுது, இந்திய அரச தரப்பிலிருந்து We lay down our arms என்று வார்த்தைகளை குறிப்புகளாக அனுப்பிய பொழுதும் கூட புலிகள் அந்த வார்த்தையின் அரசியலை புரிந்துக்கொண்டு We silence our guns என்று பதிலளித்தார்கள், நாங்கள் ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்றுதான் குறிப்பிட்டார்கள். அப்படிப்பட்ட வார்த்தைகளின் முக்கியத்துவம் தெரிந்தவர்கள் கையிலெடுத்திருக்கக் கூடிய ஈழப்பிரச்னையை இன்று வைகோ வேறு வார்த்தைகளில் இந்திய அரசிற்கு ஆதரவாக செயல்படுத்துகின்றார்.

 16. கப்பல்கள் நின்று மக்களுக்கான உணவுப் பொருட்கள் வரவிடாமல் தடுத்துக்கொண்டு இருக்கும் பொழுது, கப்பல்களை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அவர் கூறியிருந்தால் அது சரியான வாதமாக இருந்திருக்கும், ஆனால் ரேடாரை திரும்பப் பெறுங்கள் என்று அவர் கூறியது “நானும் இந்த போராட்டகளத்தில் இருக்கிறேன்” என்ற அடையாள அறிக்கையாக தான் அது இருந்தது. அப்படியானால் வைகோவிற்கு ஈழ போராட்டத்தில் என்ன பங்கு என்று உங்களுக்கு தோன்றுகின்றதா?

 17. 2000 ஆம் ஆண்டு முதல் வைகோவின் செயல்பாடுகளை எடுத்துப்பாருங்கள் தோழர்களே அவர் தமிழர் தரப்பின் குரலாக இருப்பதாக தெரியும். ஆனால் தமிழர் தரப்பில் நின்றுகொண்டு இந்திய தரப்பின் குரலாகத்தான் ஒலித்திருக்கிறார். இந்தியா கப்பல் கொடுத்த போது ரேடார் மட்டும் தான் கொடுத்தது என்றவர் கூறினார். முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். இவர் முழுக்கப்பலையே தனது பொய்யின் மூலம் மறைப்பவர். அப்படியானால் ஏன் இவர் புலிகளை ஆதரித்து பேசுவதை போல் ஒரு நாடகத்தை போட வேண்டும் என்று உங்களுக்கு தோன்றலாம். இவரை இந்திய அரசு இயக்குகின்றதா என்றும் தோன்றலாம்.

 18. எப்பொழுதுமே அரசுகள் தமக்கு எதிராக போராடக்கூடிய தளத்திலிருந்தே ஒருவரை வளர்த்துவிடும், எதற்காகவென்றால் எப்பொழுதெல்லாம் தேவைப்படுகின்றதோ அப்பொழுது அவரை பயன்படுத்தி அந்த போராட்டகளத்தை மட்டுப்படுத்துவதற்கு, கட்டுப்படுத்துவதற்கு. பிற்காலத்தில் யாரேனும் தம்மை குற்றம் கண்டுபிடித்து விட்டால், தப்பிப்பதற்காகவே அவ்வப்போது சில உண்மைகளை சிறு முனகலாக வெளிப்படுத்துவார்கள். அப்படிப்பட்ட ஒரு முனகலை வைகோவும் 2009 ஏப்ரல் கடைசி வாரத்தில் கப்பல் குறித்து தெரிவித்தார்.


 19. அவர் எழுதிய “குற்றம் சாட்டுகிறேன்” புத்தகம் முழுவதும் தேடினாலும் ராடார் பற்றி மட்டும்தான் பல்வேறு வார்த்தைகள் இருக்கும். கப்பல்கள் குறித்தோ, ஹெலிகாப்டர்கள் குறித்தோ, ஏவுகணைகள் குறித்தோ, மற்ற தாக்குதல் ஆயுதங்கள் குறித்தோ 2009 ஏப்ரலுக்கு முந்தைய காலகட்டத்தில் ஒரு வார்த்தை கூட இடம்பெற்றிருக்காது. வைகோவையும் அப்படித்தான் இந்திய அரசு பயன்படுத்தி வந்திருக்கின்றது. இந்த செயல்பாடுகளை வைத்து பாருங்கள். உச்சகட்டமாக இந்திய அரசிற்கு எதிராக ஒலிக்க வேண்டிய குரலை சிறிது மட்டுப்படுத்தி இவர் ஒரு குரலை வைப்பார். இதுதான் தமிழர் தரப்பின் கோரிக்கை என்று சர்வதேச அளவில் புரிந்துக்கொள்ளப்படும். ஆனால் இந்திய அரசின் குரலைதான் இந்த இடங்களில் ஒலித்து வந்திருக்கின்றார்.

 20. இதுமட்டுமல்ல இவர் 2009 –க்கு பிறகும் கூட இதே போன்ற நிலையினை தான் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். உதாரணத்திற்கு ஒன்றாக, உங்களுக்கு தெரிந்த ஒரு நிகழ்வை, நீங்களும் பங்கெடுத்த நிகழ்வை பற்றியும், அதில் வைகோ செய்த அயோக்கியத்தனத்தையும் குறிப்பிடுகின்றேன். 2014 பிப்ரவரி 26 அன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே தினத்தில் உலகம் முழுவதும் புலம்பெயர் அமைப்புகள் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை கோரி பல்வேறு நிகழ்வுகளை நடத்தினர். சென்னையில் அந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி புலம்பெயர் அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மதிமுக அதனை ஒருங்கிணைத்தது.

 21. அப்பொழுது நடைபெற்ற நிகழ்வுகள் அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றுத் தீர்மானமாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவும், சரியான கோரிக்கையை முன்னிறுத்துவதாகவும் முன்னெடுக்கப்பட்டவை. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பதாகைகளில் (Placards) பயன்படுத்த வேண்டிய வாசகங்களை வைகோ என்னிடம் கேட்டிருந்தார். உங்களுக்கு தெரியும், பல போராட்டங்களுக்கு பதாகைகள், பேனர்கள், கோரிக்கைகள், முழக்கங்கள், அறிக்கைகள் ஆகியவற்றிற்கான உள்ளடக்கம் (Content) நான் எழுதிக்கொடுப்பவை என்று. அதன் அடிப்படையில் பதாகைகளுக்கான வாசகங்களை வைகோ அனுப்பச் சொல்லியிருந்தார். நானும் அவற்றை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி, மின்னஞ்சலில் அனுப்பினேன்.

 22. ஈழப்போராட்டத்தின் பல்வேறு விடயங்களையும் நினைவூட்டுவதாகவும், அடுத்தக் கட்ட நகர்வுகள், கோரிக்கைகள் ஆகியவற்றையும் உள்ளடக்குவதாக நான் வாசகங்களை எழுதியிருந்தேன். அவற்றுள், அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராகவும் சில வாசகங்களை எழுதியிருந்தேன். ஆனால், ஆர்ப்பாட்டம் நடைபெறும்பொழுது கவனித்தால், பிடிக்கப்பட்டிருந்த பதாகைகளில் அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிரான வாசகங்கள் மட்டும் இல்லை. Conspicuous by one’s absence என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். இல்லாமல் இருப்பதன் மூலம் கவனிக்கப்படுவது. அங்கும், அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிரான பதாகைகள் மட்டும் இல்லை என்பதால், வைகோவின் போலியான முகத்திரை எளிதில் புலப்பட்டது.


 23. ஈழத்தை உண்மையாக நேசிப்பவராக இருந்தால், ஈழக்கோரிக்கையில் நேர்மையானவராக இருந்தால், ஈழ விடுதலைக்கு எதிரானது அமெரிக்கத் தீர்மானம் என்று தெரிந்தும், அமெரிக்கத் தீர்மானத்தை அம்பலப்படுத்தும் பதாகைகளை நீக்கச் சொல்லியிருப்பாரா அவர்? 2013 பிப்ரவரியில் ஐ.நா. அலுவலக முற்றுகைப் போராட்டத்தின் போது கைதாகி மண்டபத்தில் இருந்தபோது, அமெரிக்க துணைத்தூதரகத்தில் இருந்து வைகோவிற்கு போன் வந்ததும், மார்ச் 4 இலங்கைத் தூதரக முற்றுகைக்கான கோரிக்கை திரிக்கப்பட்டதும், அதனை எதிர்த்து கண.குறிஞ்சிக்கு நான் பதிவு எழுதியதும் [85], விவேக் உள்ளிட்ட பலருக்கு நினைவிருக்கும் என்று நினைக்கின்றேன். அதனுடைய தொடர்ச்சியாகத்தான், 2014 பிப்ரவரியில் அமெரிக்கத் தீர்மானத்தில் அவருடைய மென்போக்கு வெளிப்பட்டதை புரிந்துகொள்ளுங்கள்; வைகோவை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

 24. அப்படியானால் எண்பதுகளில் அவர் ஈழத்திற்கு சென்று வந்தாரே என்று நீங்கள் நினைக்கலாம். அதுதான் இந்த தொழிலுக்கான முதலீடு தோழர்களே. 80-களில் புலிகளை ஆதரித்து செயல்பாடுகள் செய்துவிட்டு பிறகு தான் ஒரு அளவிற்கு வளர்ந்த பிறகு இந்த முதலீட்டை பயன்படுத்தி தனக்கு தேவையான லாபத்தை பெறுவதற்கு அனைத்தையும் செய்ய தொடங்கிவிடுவார்கள். இதைத்தான் வைகோவும் செய்து வந்திருக்கின்றார். இவை அனைத்தையுமே நான் அவரின் செயல்பாடுகளில் இருந்து தான் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட வைகோவை ஆதரித்து தான் நீங்கள் தேர்தல் பரப்புரை செய்தீர்கள். அப்படியென்றால் வைகோவை இதற்கு முன்பு போராட்டகளங்களுக்கு அழைத்த போது நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று என்னிடம் நீங்கள் கேட்கலாம். இவரைப் பற்றிய முழுமையான தகவல்களை நான் 2013 இறுதியில் இருந்துதான் அறியத் தொடங்கினேன். திருமுருகனுக்கும் இவரைப் பற்றி தெரியும். ஆனால், திருமுருகன் தனது சுயலாபத்திற்காக இவரை ஆதரிக்கும் முடிவில் இருக்கின்றார். என்ன சுயலாபம் என்பதை இறுதியில் பேசுகிறேன்.

  1.16. எனது வீட்டில் நடைபெற்றவைதொடர்ச்சி.

 25. தோழர்களே நாம் மீண்டும் ஆகஸ்ட் 25ம் தேதி எனது வீட்டில் நடைப்பெற்ற நிகழ்வுக்கு வருவோம். அன்று எனது வீட்டிற்கு வந்தவர்களிடம் ஒருவிசயத்தை கூடுதலாக பேசினேன் அது ஜான்சி திருமுருகனின் பயணத்திட்டம் பற்றி என்னிடம் கூறியது. இதனை நான் சொன்னவுடன் திருமுருகன் பதில் பேசமுடியாமல் அது இல்லை என்றும் அதற்கு பின் அருள்முருகன் அந்த விசயத்தை பற்றி பேச தயாராக இல்லை. இப்படி ஒரு கிடுக்குபிடியான விடயம் மாட்டிக்கொண்டது என தெரிந்தவுடன் திருமுருகன் மிகமோசமாக பேச தொடங்கிவிட்டார். தான் பேச கூடிய ஒவ்வொருவார்த்தையையும் கணக்கிட்டு அது எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் எனபேசக் கூடிய திருமுருகன், அன்று பேசிய வார்த்தைகள் அனைத்தும் என்னை உளவியல் ரீதியாக சிதைக்க வேண்டும், என் மனதை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பேசினார். பிறகு அவர்களிடம் பேச எனக்கு விருப்பமில்லை. வீட்டிற்க்கு வந்தவர்களை கழுத்தை பிடித்து தள்ளுவது நாகரீகம் ஆகாது என்ற காரணத்தால் அவர்களாக செல்லும் வரை அமைதிகாத்தேன். அதன் பின்னர் அவர்கள் கிளம்பிசென்றார்கள்.

 26. அதற்கு அடுத்த நாள் மாலை 3 1/2 மணியளவில் எனது வீட்டிற்க்கு சில தோழர்கள் வந்தனர் மனோஜ், விவேக், சரவணன் [86], கவுதம்[87] , கார்த்திக் ஆகிய 5 தோழர்கள் வந்தனர். அவர்கள் நான் வெளியேறியதை பற்றி பேசுவதற்காக வந்தனர் என்று தெரிந்தது. அவர்கள் வந்தவுடன் நான் கூறியது, நான் எதுவும் பேசவிரும்பவில்லை, இப்பொழுது நான் எது பேசினாலும் தவறாக போய்விடும், தவறாக பிரச்சாரம் செய்யப்படும். நான் அமைப்பை உடைக்க முயற்ச்சிக்கிறேன் என குற்றம் சுமத்துவார்கள். அதனால் நான் எதுவும் பேச விரும்பவில்லை என கூறினேன். அப்பொழுது ஒன்றை மட்டும் கூறினேன் நான் வெளியேறியதற்கு நான் எழுதிய காரணம் மட்டுமல்ல வேறு சில காரணங்களும் இருக்கு தேவை வரும் போது பேசுவேன் என்று கூறினேன், அவர்களுடன் நான் பேசிக்கொண்டு இருக்கும்போது அருள் எனக்கு போன் செய்தார். அப்பொழுது நான் அமைப்பில் மீண்டும் சேருவதற்கான எண்ணமில்லை, அதனை நான் கடிதமாக தருகின்றேன் என்றும் கூறினேன். உடனடியாக அருள் பேஸ்புக்கில் எழுதபோகிறீர்களா என்று கேட்டார். இல்லை நான் கடிதமாக தருகின்றேன் என்று கூறினேன். உடனே போனை வைத்துவிட்டார். பிறகு வீட்டிலிருந்த தோழர்கள் கிளம்பி சென்றுவிட்டார்கள்.

 27. அதற்கு பிறகு இந்த ஐவர் மட்டுமல்லாது மற்ற தோழர்களும் திருமுருகனின் அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார்கள். (அப்பொழுது 20 பேர் வந்தார்கள் என அருள் என்னிடம் மறுநாள் கூறீனார். அவர்களிடம் தலைமைக் குழுவினர் இல்லாமல் நீங்களே பேசிக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டோம் எனவும் கூறீனார்.) பிறகு அனைவரும் சரவணனின் அறையில் கூடி இருக்கிறார்கள். அப்பொழுது பிரவீன் கூறியது அவர்தான் (உமர்) போய்விட்டார் அதை விட்டுவிடுங்கள் என்று கூறீருக்கிறார். அப்பொழுது சுசிந்திரன் சற்று கோவமாக பேசிருக்கிறார். அப்பொழுது பிரவீன் எழுந்து இன்னொரு அறைக்கு சென்று திருமுருகனுக்கு போன் செய்து இருக்கிறார். இங்கு நிலமை சரியில்லை நீங்கள் வாருங்கள் எனறு கூறி இருக்கிறார்.

 28. இந்த தலைமைகுழுவை சேர்ந்தவர்கள் இல்லாமல் நீங்களே பேசிக்கொள்ளுங்கள் எனக்கூறிவிட்டு தலைமை குழுவை சேர்ந்த பீரவினை அனுப்பிவிட்டு நிலைமை மோசமானவுடன் திருமுருகன் உடனே வந்து அமர்ந்திவிட்டார். அப்பொழுது அங்கு எதுவும் பேசினால் தப்பாகிவிடும் என்பதால் தோழர்களை அமைதிபடுத்த முயன்றிருக்கிறார். அங்கு என் வீட்டிற்க்கு வந்த தோழர்களை தவிர வில்லிவாக்கம் சிவா [88], வில்லிவாக்கம் கார்த்திக் [89], சுசீந்திரன் உட்பட நிறைய தோழர்கள் இருந்தனர். அப்பொழுது பேசிய திருமுருகன், ”உமர் நம்மை விட்டு போனது நமக்கு பெரிய இழப்பு, இந்த இழப்பை அவ்வளவு சாதரணமாக சரி செய்ய முடியாது. அவரை சாதரணமாக விட்டுவிட முடியாது எனவே அவரை அமைப்புக்கு கொண்டுவர நாம் தொடந்து முயற்சிப்போம். அவர் மீண்டும் அமைப்பில் சேர்ந்துவிடுவார் என நம்புவோம். அவருடைய உடல்நிலையை கவனித்துக்கொண்டு 6 மாதம் கழித்து அவரை அமைப்பில் கொண்டுவர முயற்ச்சிப்போம். அதை அவரை வைத்து சொல்லவைப்போம், அது மட்டுமல்லாமல் அவர் தன்னுடைய நிலையை வெளிப்படையாக சொல்லிவிட்டார். என் நிலையைப்பற்றி சொல்வதற்க்கு ஒருவாய்ப்பும் தரவில்லை” என்றும் அந்த கூட்டத்தில் சொல்லிருக்கிறார்.

 29. இதை கவனியுங்கள் தோழர்களே! இதில் திருமுருகன் குற்றவாளி, என்னை பேசவே விடாமல் சர்வாதிகாரி போல் அவர் நடந்துவிட்டு, அவருடைய தவறை சுட்டிக்காட்டி நான் வெளியேறியதும் தன்னுடைய நிலையை சொல்ல வாய்ப்பு தரவில்லை என்று தான் பாதிக்கப்பட்டவன் போல் நாடகம் நடத்தியிருக்கின்றார். தன்னுடைய நிலைப்பாட்டை, என்னை பேசவிடாமல் சர்வாதிகாரி போல் நடந்து கொண்டது ஏன் என்று அவரை பதிவு எழுத வேண்டாம் என்று நான் சொன்னேனா? முகநூலில் அவரை எழுத வேண்டாம் என்று தடுத்தது யார்? தான் தவறு செய்ததை மற்றவர்கள் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்று குற்றவாளியே பாதிக்கப்பட்டவனாக மாறி நாடகம் நடத்தும் கலை. கருணாநிதிக்கு அடுத்து திருமுருகனுக்கு தான் கைவந்திருக்கிறது. இவ்வாறு கூறி அந்த கூட்டத்தை முடித்துவிட்டார். திருமுருகனின் வார்த்தைகளை நம்பி நான் மீண்டும் உங்கள் இயக்கத்தில் இணைவேன் என்று எதிர்பார்த்து சுசிந்திரன் எனக்கு ஒரு செய்தி அனுப்பினார். சுசிந்திரன் அனுப்பியிருக்கும் இந்த வார்த்தைகள் தான் அன்று திருமுருகனால் அங்கிருந்த தோழர்களிடம் சொல்லப்பட்டது.


  1.16.1. லேனா, அருள், திருமுருகன்நாடகக் குழு.

 30. அதற்கு அடுத்த நாள் எனது வீட்டுக்கு லேனாவும் அருளும் வந்தனர். அப்பொழுது லேனா, ஜான்சி என்னிடம் பேசிய விடயத்தைப் பற்றி பேசினார். அதாவது, "ஆலோசனை கூட்டத்திற்கு முன்பே திருமுருகன் தேர்தல் பிரச்சாரம் செல்ல வேண்டும் என்ற முடிவினை எடுத்து விட்டாலும் கூட, அது நல்ல விஷயமாக இருக்கும் பொழுது, இது போன்ற விஷயங்களை நாம் கண்டு கொள்ள வேண்டியதில்லை" என்று கூறினார். அதாவது, அமைப்பில் ஜனநாயகத் தன்மை இல்லை என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்ளவே தயாராக இல்லை. இவர்கள் குறிப்பிடக் கூடிய ஒருங்கிணைப்பாளர் என்ன தவறு செய்திருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாக பேசினார். அதற்குப் பிறகு லேனா "நீங்கள் மீண்டும் இயக்கத்துக்கு வர வேண்டும். இதனை பெரிதுபடுத்த வேண்டாம். உங்களைப் போன்ற இன்டலெக்சுவல்கள் இயக்கத்துக்கு தேவைப்படுகிறது" என்று குறிப்பிட்டார். அப்பொழுது அருள் "தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த நீங்கள் விலகுவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதிலும், குறிப்பாக தொடர்ச்சியாக நீங்கள் பயிற்சி அளிக்க வேண்டும். நீங்கள் ஒரு ஆறு மாதம் வேண்டுமானால் ஓய்வினை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு நீங்கள் இயக்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து செயலாற்றுங்கள். இங்கிருக்கக் கூடிய தோழர்களுக்கான பயிற்சிகளை நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்" என்றெல்லாம் கூறினார்.

 31. இதில், இரண்டு விஷயங்களைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். ஒன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று அவர் குறிப்பிட்டது. அதாவது, இந்த மே பதினேழு இயக்கத்தில் 5 பேர் தலைமைக் குழுவில் இருந்தாலும், (ஐவர் என்பது திருமுருகன், நான், லேனா, அருள், புருஷோத்தமன் ஆகிய ஐவரும் தான்.) இதில் First among the equals என்பதாக அந்த ஐவரில் ஒருவரை முதன்மைப்படுத்தும் விதத்தில் திருமுருகனை முன்னிலைப்படுத்தி இந்த அமைப்பினுடைய செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. திருமுருகனைத்தான் தலைமை ஒருங்கிணைப்பாளராக நாம் குறிப்பிட்டிருந்தோம். இதில், வேறு யாருமே இன்னொருவர் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. யாரோ ஒருவர் செயலாற்றட்டும், மற்றவர்கள், பின்னால் இருந்து அவர்களுக்கு பக்க பலமாக இருக்கலாம் என்றுதான் செயல்களை மேற்கொண்டிருந்தோம்.

 32. ஆனால், அன்று அருள் பேசியது என்பது முந்தைய தினம் திருமுருகன் பேசியதன் தொடர்ச்சி தான் அது. திருமுருகன், உங்களிடம் அதாவது, மே பதினேழு இயக்கத்தின் தோழர்களிடம் பேசியதனுடைய தொடர்ச்சியாக இவர் இங்கே பேசுகிறார். அதாவது, என்னையும் ஒரு தலைமை ஒருங்கிணைப்பாளராக குறிப்பிடும் வகையில், அதாவது, "திருமுருகனும் நானும் First two among the equals - இந்த ஐவரில் நாங்கள் இருவரும் முதன்மையானவர்கள், அதற்குப் பின்பு மற்ற மூவரும்" என்பதாகக் குறிப்பிடுகிறார்கள். இதெல்லாம் எதற்காகச் செய்கிறார்கள் என்றால், "அவ்வளவு உயரிய பொறுப்பில் இருந்த, பொறுப்பு வகித்த உமரை நாங்கள் கைவிட விரும்பவில்லை" என்று மே பதினேழு இயக்கத்தினுடைய தோழர்களிடம் பொய் சொல்லி, அமைப்பில் வேறு ஏதேனும் பிளவு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக நடத்திய நாடகம்தான் இது.

 33. இரண்டாவது விடயம், அவர் குறிப்பிட்ட பயிற்சி என்பது. அப்பொழுது நான். “அமைப்பை விட்டு வெளியேறி விட்டாலும், என்னுடைய வேலை என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கப் போகிறது. இப்பொழுது கூட நான் அமைப்பை விட்டு வெளியே வந்த அடுத்த நாளே நான் ஈழம் விடுதலை சார்ந்த பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளத் தொடங்கி விட்டேன். தற்பொழுது ஐ.நாவினுடைய மனித உரிமை கமிஷன் நடத்தும் அந்த விசாரணைக்கான சாட்சியங்களை முறையான வழியில் பதிவு செய்வதற்கான செயல்பாட்டினை நான் மேற்கொண்டிருக்கிறேன்" என்பதை அவர்களிடம் கூறினேன். "இதனோடு மட்டுமின்றி சில மாதங்களுக்குப் பிறகு நான் பலருக்கும் பயிற்சிகளை அளிக்க முடிவு செய்திருக்கிறேன். இந்தப் பயிற்சி என்பதை நான் ஒரு தனிநபராக இருந்து செய்யவிருக்கிறேன். எந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் வேண்டுமானாலும் அந்த பயிற்சியில் பங்குபெறலாம் என்பதாகத்தான் நான் திட்டம் வகுத்திருக்கிறேன். அதன் அடிப்படையில், உங்கள் அமைப்பின் தோழர்கள் வந்தாலும் எனக்கு பயிற்சி அளிப்பதற்கு எவ்வித தயக்கமும் இருக்கப் போவதில்லை, நான் பயிற்சி அளிக்கத் தயார்" என்று கூறினேன். சரி என்று கூறி அவர்கள் அன்று கிளம்பிச் சென்றார்கள்.

 34. அதற்கு அடுத்த நாள், மீண்டும், லேனாவும், அருளும், பிரவீனும், மனோஜூம் எனது வீட்டுக்கு வந்தார்கள். அப்போது, அவர்கள் ஒரு கடிதத்தினை கொண்டு வந்திருந்தார்கள். அந்தக் கடிதத்தினை என்னிடம் கொடுப்பதற்கு முன்பு பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது "மீண்டும் அமைப்பில் சேர வேண்டும்" என்று கேட்டார்கள். "நான் அமைப்பில் சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை" என்று கூறினேன். அந்தக் கடிதத்தினை காண்பித்தார்கள், அந்தக் கடிதம் மிகத்தெளிவாக, அவர்கள் நடத்தக்கூடிய நாடகத்தின் ஒரு அங்கமாகதான் இருந்தது.

 35. அந்தக் கடிதத்தில், "தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த உமர் இன்னொரு தலைமை ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் மீது சிலகுற்றங்களை சுமத்தியிருக்கின்றார்" என்பதாகத் தொடங்கி, நானும் திருமுருகனும் ஆகஸ்ட் 18 அன்று பேசிய சில விஷயங்களைப் பற்றியும், அப்பொழுதே திருமுருகனுக்கு நான் அமைப்பை விட்டுவிலகிவிடுவேன் என்ற எண்ணம் இருந்ததைப் பற்றி பதிவு செய்திருந்தார்கள். பிறகு நான் அமைப்பை விட்டு விலகியது, அவர்கள் வந்து என்னிடம் பேசியதில் சிலவற்றை பதிவு செய்திருந்தார்கள். ஆனால், இதில் மிக முக்கியமான பல விடயங்கள் விடுபட்டிருந்தன.

 36. 25-ம் தேதி இரவு திருமுருகன் என் வீட்டில் வைத்து நடந்து கொண்ட விதம் குறித்து எவ்வித பதிவும் அந்தக்கடிதத்தில் இல்லை. அப்போது நான் லேனாவிடம் "திருமுருகன் அன்று பேசியதைக் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்" என்று கேட்டேன். அதற்கு லேனா "திருமுருகன் வார்த்தைகளை அப்படியே திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று கூறினார். தேவை என்றால் நேரில் வந்து உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றும் கூறினார்" என்று கூறினார்.. நான், "தேவையில்லை" என்று மட்டும் கூறிவிட்டுவிட்டேன்.

 37. அந்தக்கடிதத்தில் நான் சொல்லாத சில விஷயங்களை எழுதியிருந்தார்கள். அதாவது, நான் அமைப்பில் சேர ஒத்துக் கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்கள். நான் பயிற்சியளிக்க ஒத்துக் கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்கள். நான் அமைப்பில் சேருவதாக ஒத்துக்கொள்ளவில்லை, பயிற்சி அளிப்பதற்கு ஒத்துக்கொண்டிருந்தேன். அதில் இந்தத் திருத்தத்தை மட்டும், அதாவது அமைப்பில் சேருவதற்கு நான் ஒத்துக்கொண்டதைப் பற்றி எழுதியிருந்ததை அடித்துவிட்டேன். பிறகு, நான் அமைப்பைவிட்டு விலகுவதாக திருமுருகனுக்கே சந்தேகம் இருந்தது என்று எழுதும் போது, வார்த்தைகளை திரித்து வேறு மாதிரி எழுதியிருந்தார்கள். அதை அடித்து விட்டு சரியான வார்த்தைகளை எழுதினேன்.

 38. அதற்கு மேல், முக்கியமான விடயம் விடுபட்டிருப்பதைப் பற்றி நான் பெரிது படுத்திக்கொள்ள விரும்பவில்லை. ஏனெனில், அந்தக் கடிதத்தை சற்றே சிந்தித்துப் பார்க்கக் கூடிய ஒருவர் படித்துப் பார்த்தால் தெரியும், இதில் மிகப் பெரிய விடயம் விடுபட்டிருக்கிறது என்று. என்ன இருந்தாலும், இதற்கு மேல் இவர்களை சந்திக்க விருப்பமில்லை என்பதால், அத்துடன் அதை முடித்துக்கொள்ளும் நோக்கத்தில், அந்தக் கடிதத்தை "நான் படித்துப் பார்த்தேன், நடந்தவற்றைதொகுத்திருக்கின்றார்கள்" என்று கையொப்பமிட்டுக் கொடுத்துவிட்டேன்.

 39. அந்த கடிதம் முழுமையாக அனைத்து உண்மையையும் பேசவில்லை என்றாலும், இவர்கள் அம்பலபட்டு போவதற்க்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கும், ஏனெனில் இவர்கள் அடுத்து செய்யவிருக்கும் முக்கியமான செயல்கள் நடைப்பெறும் வரை காத்திருப்பது என முடிவு செய்தேன். இவர்கள் நான் கொடுத்த கடிதத்தை வைத்துகொண்டு என்ன செய்வார்கள் என எனக்கு தெரியும். நான் நினைத்து போலவே மே பதினேழு இயக்க தோழர்கள் சிலரை மட்டும் வைத்துக்கொண்டு அவர்களிடம் உமரை ஒரு தலைமை ஒருங்கிணைப்பாளராக வைத்து இருந்தோம் அவர் யாரிடமும் சொல்லாமல் குற்றசாட்டை வைத்துவிட்டு சென்றுவிட்டார். அதனால் இனி யாரும் அவரிடம் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று ஒரு தரப்பினரிடமும். இன்னொரு தரப்பு தோழர்களிடம் இதை எதை பற்றியும் பேசாமல்அவர் 6 மாதத்திற்கு பிறகு வந்துவிடுவார் என லாலி [90], உள்ளிட்ட தோழர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். அடுத்த கட்ட தோழர்களிடம் நாம் என்ன கோரிக்கைக்காக வந்தோமோ அந்த கோரிக்கையை அடையும் வரை போராடுவோம். நடுவில் இதுபோன்ற தடைகள் வந்தால் நாம் அதனை பெரிதுபடுத்த வேண்டாம். நமக்கு கோரிக்கை தான் முக்கியம் என்றும் பேசியிருக்கிறார்கள்.

  1.16.2. கொண்டலின் பெயரில் வெளியான ஒப்புதல் வாக்குமூலம்

 40. இவர்கள் இப்படித் தான் நடந்து கொள்வார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும் என்பதால், அவர்கள் நடத்தும் நாடகத்தை வேடிக்கை மட்டும் பார்க்கலாம் என்று நான் இவர்களைப் பற்றி வேறு எதுவும் பேசவில்லை. இவர்கள் யார், இவர்களின் பின்னணி என்ன, இவர்களின் நோக்கம் என்ன ஆகியவற்றை அம்பலப்படுத்துவதற்கு ஏதுவாக இவர்கள் 2015 ல் தொடர்ச்சியாக சில செயல்களை மேற்கொண்டபின்பு, அவற்றையும் தொகுத்து, ஒரு பதிவாக வெளியிட முடிவெடுத்து, 2015 மே மாதத்தில் சிறு குறிப்புகளை நான் முகநூலில் வெளியிட்ட பொழுது, என்னுடைய பதிவொன்றில், கொண்டலின் பெயரில் ஒரு பதில் வெளியிடப்பட்டது. இவர்கள் நடத்திய நாடகத்தை இவர்களே ஒரு ஒப்புதல் வாக்குமூலமாக கொண்டலின் பெயரில் ஒரு பதிவாக வெளியிட்டனர். கொண்டலின் பெயரில் வெளியான பதிவின் கடைசி பத்தியை பாருங்கள். [91] 41. கொண்டலின் பெயரில் வெளியான இந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் அவர்கள் தெரிவித்திருக்கும் முக்கியமான பகுதிகள்.

 1. அவர்கள் கூறியிருக்கும் முதல் ஒப்புதலை பார்ப்போம். நான் எந்த வித காரணமும் இல்லாமல் வெளியேறினேன் என்று கூறினால், உங்கள் அமைப்பின் தலைமை நான் வெளியேறிய போது நடந்தவற்றை உங்களிடம் முழுமையாகக் கூறவில்லை என்று அர்த்தம்.

 1. இப்படி எதைப் பற்றியுமே உங்களிடம் தெரிவிக்காமல், உங்கள் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர், ஒருவரிடம் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு மோசமாக நடந்து கொண்டதை பற்றியும் உங்களிடம் தெரிவிக்காமல் இருந்த உங்கள் அமைப்பின் தலைமைக்கு இருந்த சிக்கல் தான் ஒப்புதல் வாக்குமூலத்தின் இரண்டாம் தகவல். என் மீது உங்களுக்கு இருந்த மதிப்பு.

 2. இந்த மதிப்பை சீர்குலைக்காமல் விட்டால், தாங்கள் அம்பலமாகிவிடுவோம் என்பதற்காக என் மீதான மதிப்பை சீர்குலைப்பதற்காக, உங்கள் அமைப்பின் தலைமை அவிழ்த்து விட்ட புளுகு மூட்டைதான், அமைப்பைவிட்டு வெளியேறிய பிறகு நான் எந்த வேலையும் செய்யவில்லை என்னும் பொய்ப்பிரச்சாரம். அந்தப் புளுகு மூட்டைதான் ஒப்புதல் வாக்குமூலத்தில் நான்காவது பகுதியில் இருக்கின்றது. நான் எந்த வேலையும் செய்யவில்லை என்று இவர்கள் கூறுவது எப்படி பொய் என்பதை பத்தி எண்கள் 157 முதல் 161 வரை எழுதியிருக்கின்றேன். படித்திருப்பீர்கள்.

 3. இவர்களுடைய ஒப்புதல் வாக்குமூலத்தின் மூன்றாம் பகுதி நான் அமைப்பை முடக்க முயன்றேன் என்னும் அவதூறு. இந்த அவதூறு மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படை நோக்கமே என் மீது இருக்கும் மதிப்பை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான். என் மீதான மதிப்பை சீர்குலைக்கவேண்டும், அதன் மூலம் தான் செய்த தவறுகள் குறித்து யாரும் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்று, முதலில், அமைப்பில் இருந்து வெளியேறிய பிறகு நான் எந்த வேலையும் செய்யவில்லை என்ற பொய்யையும், அடுத்ததாக அமைப்பை உடைக்கவும், முடக்கவும் முயன்றேன் என்னும் அவதூற்றினையும் பரப்பத் தொடங்கினார்கள். இந்த அவதூற்றினை எப்படியெல்லாம் மேற்கொண்டார்கள் என்பதை இந்தக் கடிதத்தின் மூன்றாவது பகுதியில் பேசுகின்றேன். நான் வெளியேறிய போது நடைபெற்றவற்றை முதலில் பேசி முடித்து விடுகின்றேன்.

 4. ஈழவிடுதலை என்ற கோரிக்கைக்காக ஒன்று சேர்ந்த நாம் ஈழவிடுதலைக்கு எதிராக நடைபெறும் செயல்களை கண்டு கொள்ளாமல், வைகோ போன்றவர்கள் தொடர்ச்சியாக ஈழவிடுதலைக்கு எதிராக செயல்பட்டு வருவதை கண்டிக்காமல், இப்பொழுது சீமானும் செயல்பட்டு கொண்டிருப்பதை கண்டிக்க முன்வராமல் இருக்கும் இவர்கள் நாளைக்கு ஈழ விடுதலைக்கு எதிரான செயல்களை செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?. அதைபற்றி இரண்டாம் பகுதியில் விரிவாகபேசுகிறேன்.

 5. ஈழ விடுதலைக்கு எதிரான இவர்களுக்கு வேண்டியவர்கள் தவறு செய்தாலும் அதனை கண்டிக்க முன்வரவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கோரிக்கை சார்ந்து ஒன்று சேர்ந்த நாம் அந்த கோரிக்கை நிறைவேறுவதற்கான வழிமுறைகளை குறித்து சிந்தித்து இருக்கிறோமா? மே பதினேழு இயக்கத்தின் அடிப்படை நோக்கம் என்பது எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது?. இந்நிலையில் நான் மே பதினேழு இயக்கத்தில் இணைந்த சம்பவத்தையும் கூறியாக வேண்டும்.

  1.17. மே பதினேழில் நான் இணைந்த நோக்கம்.

 6. 2011 ம் ஆண்டு தமிழக மீன்வர்கள் மிக கொடுரமான முறையில் சிங்கள கடற்படையால் கொலை செய்யப்பட்டனர். வேதராண்யம் ஆறுகாட்டுதுறையை சேர்ந்த மாற்றுதிறனாளி மீனவர் ஒருவரை கழுத்தில் சுருக்குபோட்டு கடலில் இழுத்துச் சென்று சிங்களக் கடற்படை கொலை செய்தது [92] இந்நிலையில், இது தொடர்பாக டுவிட்டரில் ஒரு போராட்டம் தொடங்கியது, #TNFISHERMAN என்ற ஹேஷ் டாக்கை பயன்படுத்தி தொடர்ச்சியாக மீனவர் பிரச்சனையை டுவிட்டரில் இயங்க கூடிய தோழர்கள் எழுததொடங்கினர். பின்னர் இந்த விடயம் பரவிபெரும் தீயாக வளர்ந்த்த. தோழர்கள் TBCD [93], Paviraksha [94], kavi_rt [95], ஆகியோர் ஆரம்பகட்ட உரையாடலில் பங்கெடுத்தனர். பின்னர் இந்த ஹேஷ் டாக் ஒருபோராட்டவடிவமாக மாறியது. [96], அதில் நானும் பங்கெடுத்தேன், அந்த போராட்டம் வெறும் டுவிட்டரோடு முடிந்துவிடமால் இருக்க அடுத்த கட்டமாக இங்குள்ள போராடும் இயக்கங்கள், அரசியல் கட்சிகள், ஆகியோரிடம் ஒத்த கருத்தினை ஏற்படுத்தி நீதிமன்றத்தின் மூலமாகவும் இந்த விடயத்தை தீர்வினைக் கொண்டு வர வேலை செய்துகொண்டு இருந்தோம். இந்த வேலையினை நாங்கள் செய்த பாங்கு பலரையும் கவனிக்க வைத்தது.

 7. இந்த காலகட்டத்தில் தான் பத்திரிக்கையாளர் TSS மணியை [97] , ஒரு முறை ஒரு பொது இடத்தில் சந்தித்த போது அங்கு திருமுருகனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதற்கு பிறகு மேலும் சில இடங்களில் நானும் திருமுருகனும் சந்தித்துக் கொண்டோம் அப்பொழுது 2011 மே 18ம் தேதி அன்று சென்னை மெரினா கடற்கரையில் பேஸ்புக் நண்பர்கள் இணைந்து ஒருநினைவேந்தல் நடத்தற்காக ஒன்று கூடினர், [98] அப்பொழுது நானும் அங்கு இருந்தேன். அங்கு வந்திருந்த தோழர் செந்தில் என் தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டார். அந்த நினைவேந்தல் முடிந்து சென்ற பிறகு சிலநாட்கள் கழித்து செந்தில் என்னை தொடர்பு கொண்டு மே 18 ம் தேதி நடைப்பெற்ற நினைவேந்தல் போன்று மிகப்பெரிய நினைவேந்தலை மே பதினேழு இயக்கம் நடத்தலாம். சுமார் ஒரு லட்சம் பேரை திரட்டலாம் எனவும் அதற்காக ஒரு ஆலோசனை கூட்டம் இருக்கிறது வாருங்கள் என்றார்.

 8. செந்தில் என்னை அழைப்பதற்கு முன்பு மே பதினேழு இயக்கத்தில் சில விடயங்கள் பேசிக் கொண்டிருந்ததாக சமீபத்தில் அறிந்தேன். 2011 மே மாதத்தில் திருமுருகன் அங்கிருந்த தோழர்களிடம் பேசியிருக்கின்றார். "உமர் பண்றது தாங்க work. அந்த மாதிரி தான் நாமளும் பண்ணனும். மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக எவ்வளவு அழகாக வேலை செய்கிறார். அவரை நம்ம இயக்கத்துல சேக்குறதுக்கு நாம முயற்சி பண்ணனும். முதலில் நினைவேந்தலுக்கு கூப்பிடுவோம். மெதுவா நம்ம இயக்கத்துல சேர்க்க முயற்சி பண்ணுவோம். அவர் வந்தா நம்ம அமைப்பு எங்கயோ போயிரும்." என்று திருமுருகன் சில தோழர்களிடம் கூறியிருக்கின்றார்.

 9. செந்திலின் அழைப்பின் பேரில் நான் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெடுத்தேன். அப்பொழுது நினைவேந்தல் எப்போது நடத்துவது, எப்படி நடத்துவது என ஆலோசித்து கொண்டு இருந்தோம். நினைவேந்தலுக்கு உரிய அனைத்து விஷயங்களையும் அன்று ஆலோசனை செய்து முடிவு செய்திருந்தோம். அப்பொழுது துண்டறிக்கை போடவேண்டும் துண்டறிக்கையில் யாருடைய எண் போட வேண்டும் என வரும்போது உடனே லாலி எனது எண்ணை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றார்.அதற்கு திருமுருகன் பதிலேதும் சொல்லவில்லை. பிறகு மறுநாள் திருமுருகன் எனக்கு போன் செய்து உங்கள் எண்ணை பயன்படுத்திக் கொள்ளவா என்றார், பொதுவான காரியத்திற்காக தான் என்பதால் நானும் சரி என்றேன். பிறகு சரி என்று என் எண்ணை பயன்படுத்தி கொண்டார். அது மே பதினேழு இயக்கத்தின் துண்டறிக்கையாக இருந்தது. திருமுருகனுடைய எண்ணும், எனது எண்ணும் இருந்தது.[99]


 10. அங்கு மே பதினேழு இயக்கத்தின் முந்தைய உறுப்பினர்கள் இருந்தும் கூட என்னுடைய எண்ணை பயன்படுத்தியதை யாரும் தவறாக எண்ணவில்லை. எனினும் திருமுருகன் நினைத்தது இது சம்பந்தமாக தொலைப்பேசி வந்தால சிறப்பாக கையாள வேண்டும், நிகழ்வு சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக என் எண்ணை பயன்படுத்தி கொண்டார். நானும் சரி என்று சொன்னேன். துண்டறிக்கையில் எனது எண் பயன்படுத்தப்பட்டதால் ஏதேனும் தொலைபேசி வந்தால் நானும் மே பதினேழு இயக்க உறுப்பினராகவே பேச வேண்டியதாகியது.

 11. ஒரு முறை நினைவேந்தல் சம்பந்தமாக திருவொற்றியூர் பகுதியில் உள்ள அமைப்புகளிடமும் தோழர்களிடமும் அறிமுகபடுத்தும் பொழுது தோழர் லாலி என்னை மே பதினேழு இயக்கத்தில் இருந்து வந்திருக்கிறார் என்று அறிமுகப்படுத்தினார். ஆனால் நான் மே பதினேழு இயக்கத்தில் இல்லை, இவர் ஏன் இப்படி குறிப்பிடுகிறார் என நினைத்து மற்றவர்கள் முன் இதை கேட்க வேண்டாம் என விட்டுவிட்டேன். ஆனால் தொலைபேசியில் பேசும்போது மே பதினேழு இயக்கத்தின் உறுப்பினராகவே பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது. நினைவேந்தல் முடிந்த பிறகு, ஒரு முறை திருமுருகன், “மே பதினேழு இயக்கம் ஈழ விடுதலையை சாத்தியப்படுத்துவதற்கான வேலைகளை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளது” என்று கூறினார். நானும் தொடர்ந்து மே பதினேழு இயக்கத்தின் வேலைகளில் பொறுப்பெடுத்து முன்னெடுக்கத் தொடங்கினேன். இப்படியாக தான் நான் மே பதினேழு இயக்கத்தில் இணைந்தேன் அதற்கு பிறகு பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வந்தேன். மே பதினேழு இயக்கத்தின் அடிப்படைநோக்கமாக நான் பார்ப்பது.

நிறைய அடிப்படை நோக்கங்கள் இருந்தாலும் ஈழவிடுதலையை பொறுத்தவரை இவையே முதன்மை நோக்கமாக இருந்தன.

 1. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் வைகோவும், சீமானும் ஈழவிடுதலைக்கு எதிராக செயல்பட துவங்கும் பொழுது மே பதினேழு இயக்கம் அதனை முறியடிக்காமல் சீமானை பற்றியோ, வைகோவை பற்றியோ பேசாமல் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது என்று ஈழவிடுதலைக்கு எதிரான செயலுக்கு துணைப்போக தொடங்கியது. இதனால் நான் இயக்கத்தைவிட்டு வெளியேற முடிவெடுத்தேன்.

 2. இது மட்டுமல்ல இதற்கு முன் பல்வேறு இடங்களில் மே பதினேழு இயக்கம் ஈழ விடுதலைக்கு எதிரான செயலில் ஈடுபட தொடங்கியதையும் நான் அறிந்திருந்தேன். முழுமையாக இவர்களை அம்பலப்படுத்த வேண்டும். இவர்கள் ஈழ விடுதலைக்கு எதிரான சக்திகள் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும், இவர்களுடைய உண்மையான நோக்கம் என்னவென்பதையும் சேர்த்து சொல்ல வேண்டும் என்பதால், அவர்களாக அம்பலப்படும் வரை அனைத்து விடயங்களையும் பேச வேண்டாம் என்று முடிவு செய்து, 2014 ஆகஸ்டில் நடந்த சம்பவங்களை மட்டும் சொல்லிவிட்டு வெளியேறினேன்.

 3. இவர்கள் ஈழ விடுதலைக்கு எதிரானவர்கள் என்பது முன்பே தெரியுமா என்றால் ஆம் தெரியும். 2013 டிசம்பர் மாதத்தில் இருந்து தெரியும். இவர்களை பற்றி அம்பல்படுத்த வேண்டிய காலத்திற்காக காத்துகொண்டு இருந்தேன். இவர்கள் எப்படி ஈழவிடுதலைக்கு எதிராக செயல்ப்பட்டார்கள் என்பதை பிறகு பேசவிருக்கின்றேன்.

 4. அதற்கு முன்பாக, ஒரு விடயத்தை மட்டும் கூடுதலாக பேச விரும்புகின்றேன். ஏற்கனவே மே பதினேழு இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் இருந்தாலும் என்னுடைய திறமையின் காரணமாக எனது எண்ணை பயன்படுத்த வேண்டும் என திருமுருகன் பயன்படுத்தினார். அதுபோல பலருடைய திறமையும் உழைப்பையும் பயன்படுத்தினார். அதெல்லாம் நான் தவறு என்று கூட கருதவில்லை. சமூகத்திற்காக செய்யகூடிய வேலை என்பதால் அனைவரும் சேர்ந்தே செய்துகொண்டு இருந்தோம்.

 5. அப்படிபட்ட சூழலில் தான் சரவணன் தங்கப்பா என்னும் தோழர் மே பதினேழு இயக்கத்தில் செயலாற்றிகொண்டு இருக்கும்பொழுது மீத்தேன் எடுக்கும் திட்டத்தினால் ஏற்படும் ஆபத்தை பற்றி ஆவணப்படம் எடுக்கபோவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாது பேஸ்புக்கிலும் மீத்தேன் குறித்த செய்திகளுக்காக ஒருபக்கத்தையும் ஆரம்பித்தார் [100] , ஒரு ஆவணப்படத்திற்கான வேலையினை தன்னிச்சையாக அவரே தொடங்கினார். இந்த வேலைகள் நடந்து முடியும் தறுவாயில் மே பதினேழு இயக்கம் அதனை தன்னுடைய வேலையாக எடுத்துக்கொண்டு செய்தது. அதற்கு பிறகு உங்களுக்கு நன்றாகவே தெரியும் “பசுமைவிகடன்” இதழில் சரவணின் பேட்டி வெளியானவுடன் திருமுருகனின் நிலைமாறியதை அறிவீர்கள். [101]


 6. அதற்கு பிறகு, அதாவது 2014 ஜூன் மாதத்தில் இருந்து உங்கள் ஓவ்வொருவரிடமும் சரவணன் தவறாவனர் என்று தனித்தனியாக அமர்ந்து சரவணனை பற்றி அவர் தவறாவனர், அவர் அப்படி செய்திறார், இப்படி செய்கிறார் என புகார் வாசித்தது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும் தோழர்களே.

 7. நான் இந்த இடத்தில் ஒரு கேள்வியை மட்டும் உங்களிடம் வைக்க விரும்புகிறேன். நான் அமைப்பில் இருந்து வெளியேறிவுடன் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக திருமுருகன் பொய் சொல்லி புலம்பினாரே, இப்பொழுது சரவணனுக்கு தனது நிலையை விளக்க ஒருவாய்ப்பை திருமுருகன் அளித்தாரா தோழர்களே? ஒவ்வொருவரிடம் தனித்தனியாக சென்று பேசியவர். ஒருகூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தாரையும் அழைத்து, சரவணனையும் அழைத்து, சரவணன் மீது இந்த குற்றசாட்டுகளை நான் முன் வைக்கிறேன் சரவணன் அதற்கு பதில் கூற வேண்டும் என்று கூறினால் அது நியாயமானதாகவும் ஜனநாயக பூர்வமாக இருந்திருக்கும். ஆனால் திருமுருகன் சரவணனுக்கு வாய்ப்பு அளிக்காமல், தோழமை என்ற உணர்வை மதிக்காமல் அதனை காலில் போட்டு மிதித்துவிட்டு சரவணனைப் பற்றி புகார் வாசித்தாரே, அவரின் உழைப்பில் இவர் ஏறி அமர்ந்து கொண்டு தன்னை முன்னிலைப் படுத்திக்கொண்டு சரவணனின் மீது பல்வேறு அவதூறுகளை அள்ளிவீசி இன்று சரவணனும் உங்கள் அமைப்பிலிருந்து வெளியேறிவிட்டார்.

 8. இப்பொழுது மே பதினேழு இயக்கம் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் மூலம் எப்படி ஈழவிடுதலைக்கு எதிராக செயல்படுகிறது எனபதை விரிவாக பட்டியலிடுகிறேன் தோழர்களே.

  பகுதி 2 . ஈழ விடுதலைக்கு எதிரானது மே பதினேழு இயக்கம்

  2.1. பிரேமன் (Bremen) மக்கள் தீர்ப்பாயத்தில் இந்தியாவைக் காப்பாற்றிய திருமுருகன்.

 9. மே பதினேழு இயக்கம் ஈழ விடுதலைக்கு எதிராக செயல்படுகிறது என்பதற்கான ஆதாரங்களை நான் இங்கே வரிசையாக அளிக்க இருக்கின்றேன் அதில் முதலாவதாக 2013-ஆம் ஆண்டு ஜெர்மனியின் ப்ரேமென் நகரில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தில் ஈழ விடுதலைக்கு எதிரான நகர்வுகளை திருமுருகன் மேற்கொண்டிருந்தார் என்பதை குறித்து இங்கு பேசுகின்றேன்.

 10. அவர் எப்படி ஈழவிடுதலைக்கு எதிராக செயல்பட்டார் என்று கூறுவதற்கு முன்பு ப்ரேமெனில் நடைபெற்ற மக்கள் தீப்பாயம் தொடர்பாக நான் முன் வைத்த குற்றச்சாட்டுகளும், திருமுருகன் முன்வைத்த குற்றச்சாட்டுகளும் குறித்து முதலில் பேசிவிடுகின்றேன். ப்ரேமென் தீர்ப்பாயம் குறித்து நான் யாரிடமும் இதுவரை முழுமையாக பேசவில்லை.

 11. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தோழர் கார்த்திக் மே பதினேழு இயக்கத்திலிருந்து அவர் விலகிய பின்பு மே பதினேழின் செயல்பாடுகளின் மீது சந்தேகம் கொண்டு பலவற்றை என்னிடம் கேட்டார். அப்பொழுது பிரேமன் தீர்ப்பாயம் குறித்து அவர் என்னிடம் கேட்டபொழுது சுருக்கமாக ஒரே ஒருவரியில் சொல்லியிருந்தேன், திருமுருகன் தனது வேலையை சரியாக செய்யவில்லை என்று மட்டும் குறிப்பிட்டிருந்தேன். இது பற்றி தெரிந்த பின்பு என்னைப் பற்றி திருமுருகன் கூறியதை அவருடைய வார்த்தைகளிலேயே இங்கு பதிவு செய்கின்றேன்.

 12. ப்ரேமெனில் நடைபெற்ற தீர்ப்பாயத்தில், எனக்கு இந்தியாவிற்கு எதிரான ஆதாரங்களை சமர்பிக்கும் பொறுப்பும், ஐ.நாவிற்கு எதிரான ஆதாரங்களை சமர்பிக்கும் பொறுப்பு உமருக்கும் அளிக்கப்பட்டது. நான் எனது வேலையை சரியாக செய்துவிட்டேன், இந்தியா குறித்த ஆதாரங்களை விசாரிப்பதற்கு இன்னொரு அமர்வு தேவை என்று தீர்ப்பாயத்தில் கூறியிருக்கிறார்கள். ஆனால் உமர் தனது வேலையை சரியாகச் செய்யவில்லை. தீர்ப்பாயத்தினுடைய தீர்ப்பு இணைய தளத்தில் இருக்கின்றது. அங்கே சென்று பாருங்கள்.ஐ.நா. குறித்து அவர்கள் எதுவுமே குறிப்பிடவில்லை. அதனால் உமர் தான் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்யவில்லை என்று திருமுருகன் தன்னை காத்துக் கொள்வதற்காக என் மீது பொய்யாக குற்றம் சுமத்தியிருக்கிறார்.

  2.1.1. தன்னுடைய தவறை மறைக்க டப்ளின் தீர்ப்பாயம் குறித்து பொய் சொன்ன திருமுருகன்.

 13. இவருடைய குற்றச்சாட்டுக்கு பதில் சொல்வதற்கு முன்பு நான் ஒரு காணொளியை உங்களுக்கு பார்க்கும்படி அறிவுறுத்த விரும்புகின்றேன். [102] [103], அது நாங்கள் 2013 டிசம்பரில் ஜெர்மனியில் மக்கள் தீர்ப்பாயத்தின் முதல்கட்ட தீர்ப்பு வெளிவந்த பின்பு அளித்த பேட்டி.அது தமிழ்நெட் இணையதளத்திலும் வெளிவந்தது. அதில் இந்தியா குறித்து ஏன் உறுதியான தீர்ப்புவரவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்ட பொழுது, அதற்கு அவர் அளித்த பதிலை நீங்கள் பாருங்கள்.

 14. டப்ளின் (Dublin) தீர்ப்பாயத்தில் முதலில் போர்குற்றம் (War Crimes), மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் (Crimes Against Humanity) நடைபெற்றது என்று தான் தீர்ப்புவந்தது. இனப்படுகொலை (Genocide) குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். டப்ளின் தீர்பாயத்தின் அடுத்த அமர்வாக ப்ரேமெனில் நடைபெற்ற அமர்வில் இனப்படுகொலை நடைபெற்றது என்று அறிவித்திருக்கிறார்கள். அதே போல் டப்ளின் தீர்ப்பாயத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் பங்களிப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்கள். இரண்டாவது அமர்வில் இப்பொழுது அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் பங்கிருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். எனவே இந்தியா குறித்து இப்பொழுது முதன்முறையாக விசாரித்திருக்கிறார்கள், அடுத்த அமர்வில் இந்தியா குறித்து உறுதியாக தீர்ப்புவரும் என்று திருமுருகன் தெரிவித்திருக்கின்றார்.

 15. ஏற்கனவே பல சம்பவங்களில் நாம் திருமுருகனை பற்றி பார்த்ததை நீங்கள் நினைவில் கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். திருமுருகன் தன் மீது தவறிருக்கும் பட்சத்தில் அதனை ஒத்துக்கொள்ளாமல் வேறு விஷயங்களை பேசுவது என்பதை தனது தவறை மறைக்கும் முயற்சியாக அவர் செய்வார் என்பதை பல்வேறு சம்பவங்களின் வழியாக நீங்கள் பார்த்திருப்பீர்கள், இங்கும் கூட அது போன்ற ஒரு வேலையை தான் அவர் முயன்றிருக்கின்றார். இந்த ப்ரேமென் தீர்பாயத்தின் தீர்ப்பு குறித்தோ அல்லது அங்கு ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டது குறித்தோ நான் பேசுவதற்கு முன் டப்ளின் தீர்ப்பாயம் குறித்து சிறிது பேசிவிடுகின்றேன். அப்பொழுது தான் திருமுருகன் சொல்லும் பொய்யை குறித்து உங்களால் புரிந்துக்கொள்ள முடியும்.

 16. 2010 ஆம் ஆண்டு டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் போர்குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் இலங்கையில் நடைபெற்றது என்று தீர்ப்பு கூறினார்கள்[104] அது உண்மை, ஆனால் அங்கு விசாரணை நடைபெற்றது இவை இரண்டிற்கும் தான். [105] இனப்படுகொலைக்கான விசாரணை என்று அங்கு வழக்கு நடைபெறவில்லை. Tamils Against Genocide (TAG)என்றஅமைப்பை சேர்ந்த தோழர் ஜனனி தன்னுடைய வாதத்தை வைக்கும்போது அவர் இதனை நீங்கள் போர்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று மட்டும் சுருக்கி பார்க்கக்கூடாது. இதனை இனப்படுகொலை என்றுதான் பார்க்கவேண்டும் என்று வாதிட்டார். அதனடிப்படையில் அங்கு கொடுக்கப்பட்ட ஆதாரங்களை எல்லாம் ஆராய்ந்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பு, இலங்கை அரசின் மீது சுமத்தப்பட்ட போர்குற்றம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றது என்பதனை தீர்ப்பாக அறிவித்தார்கள், [106] மேலும் இனப்படுகொலை நடைபெற்றதா என்பதை குறித்து விசாரிப்பதற்கு தனி அமர்வு வேண்டும் என்றும் கூறியிருந்தார்கள். இதில் இனப்படுகொலை குறித்து விசாரிக்கப்பட்டு, பிறகு நேரம் போதவில்லை என்றோ அல்லது ஆதாரம் போதவில்லை என்றோ நீதிபதிகள் அந்த அறிவிப்பை கொடுக்கவில்லை. மாறாக அங்கு போர்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து தான் ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டிருந்தன. அங்கு கொடுக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் அளித்த தீர்ப்பை தனக்கு ஆதரவாக திரிக்க முயன்றதை தான் திருமுருகன் செய்திருக்கிறார்.

 17. இரண்டாவதாக அவர் இங்கிலாந்து மற்றும் அமேரிக்கா குறித்து பேசுகின்றார். டப்ளின் தீர்ப்பாயத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து குறித்து பேசப்பட்டவை என்னவென்றால் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைபுலிகள் மீது கொண்டு வந்த தடையை பற்றி ஒரு வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கை தோழர்கள் விராஜ் மென்டிஸ்சும் (Viraj Mendis), ஜூட்லால் ஃபெர்ணான்டோவும் (Jude Lal Fernando) Crime of peace (அமைதியை சீர்குலைக்கும் குற்றம்) என்ற தலைப்பில் அங்கு சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்கள். [107] அமைதி உடன்படிக்கையில் ஒரு தரப்பு ஈடுபட்டிருக்கும் பொழுது அந்த தரப்பை தீவிரவாதி என்று அறிவிப்பது அமைதியை சீர்குலைப்பதாகும் என்பதாக வாதங்களை வைத்திருந்தார்கள்.

 18. இந்தCrime of peace என்பது ஐ.நா சபை உருவாவதற்கு முன்பிருந்து கூட பேசப்பட்டு வருகின்றது. ஐ.நா சபை உருவாக்கப்பட்ட பிறகு இந்த Crime of peace என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் அதனை வேறு வார்த்தைகளில் கூறினார்கள். குற்றத்தினுடைய தன்மைக்கு ஏற்ப போர்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம், இனப்படுகொலை குற்றம் என்று வரையறுத்தார்கள். அதனால் இந்த டப்ளின் தீர்ப்பாயத்தில் இருந்த நீதிபதிகளும் இந்த Crime of peace என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். ஒருவேளை Crime of peace என்ற வார்த்தையை நாங்கள் ஏற்றுக்கொண்டால், நாளை அரசுகளும் கூட அவர்களுக்கு எதிராக போராடக்கூடிய அமைப்புகளின் மேல் Crime of peace என்ற வார்த்தையை பிரயோகிக்க வாய்ப்பு ஏற்படும். அதனால் இதை Crime of peace என்று கூற முடியாது என்று நீதிபதிகள் கூறினார்கள். ஆனால் அதே சமயம் ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைபுலிகள் மீதான தடைவிதிக்கப்பட்ட வழக்கில் அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் பங்கிருக்கிறது என்று தீர்ப்பு வழங்கினார்கள் .

 19. இந்த தகவல்களை எல்லாம் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நான் விராஜ் மென்டிஸ்சிடம் பேசி உறுதிசெய்து கொண்டேன். இவை இணையதளங்களில் கூட இருக்கின்றது. நீங்களும் படிக்கலாம். நான் இது குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று தோழர் விராஜ் மென்டிஸ்சிடம் பேசினேன் அவர் கூறியது என்னவென்றால் டப்ளின் தீர்ப்பாயத்தில் அமெரிக்காவிற்கு எதிராகவும் இங்கிலாந்திற்கு எதிராகவோ முழு அளவிலான குற்றச்சாட்டுகளோ விசாரணைகளோ நடைபெறவில்லை. அங்கு அமைதி உடன்படிக்கை காலத்தில் தடைவிதிக்கப்பட்டது குறித்து தான் விசாரணை நடைபெற்றது. ப்ரேமென் அமர்வில் தான் இங்கிலாந்து குறித்தும் அமெரிக்கா குறித்தும் முதன் முறையாக முழுமையான ஆதாரங்கள் பதிவானது என்றவர் தெரிவித்தார்.

 20. டப்ளினில் அமெரிக்கா குறித்தோ, இங்கிலாந்து குறித்தோ முழுமையாக விசாரிக்கப்படவில்லை, ஆனால் ப்ரேமெனில் முதல் முறையாக விசாரித்த போதே இங்கிலாந்து குறித்தும் அமெரிக்கா குறித்தும் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி அந்த இருநாடுகளும் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் பங்காளிகள் தான் என்று முதன் முறையாக ப்ரேமென் தீர்ப்பாயம் கூறியிருக்கின்றது [108] (Page 38) என்றும் விராஜ்மென்டிஸ் கூறினார். இவை தான் நடைபெற்றது தோழர்களே.

 21. இங்கு திருமுருகன் தன்னை காப்பதற்காக இந்தியா குறித்து முழுமையான தீர்ப்புவரவில்லை, அதற்கு தான் காரணம் என்பது வெளியில் தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் வேறு சில பொய்களை சொல்லி தப்பித்துக்கொள்ள முயன்றார். அப்படியென்றால் இவர் எப்படி ஆதாரங்களை சமர்பிக்காமல் இருப்பதற்கான வேலையை செய்தார் என்பதை விரிவாக பார்ப்போம் அப்பொழுது நீங்கள் திருமுருகன் யாரால் இயக்கப்படுகின்றார், அவருடைய நோக்கம் என்ன, அவர் எப்படி ஈழவிடுதலைக்கு எதிரானவர், எந்த அளவிற்கு ஈழவிடுதலைக்கு எதிராக செயல்படுகின்றார் என்பதையெல்லாம் நீங்கள் புரிந்துக்கொள்ள முடியும்.2.1.2. பிரேமன் தீர்ப்பாயத்திற்கான அழைப்பு.


 1. 2013 அக்டோபர் மாத இறுதியில் அமெரிக்காவில் இருக்கும் இளந்தமிழர் அணியைச் சேர்ந்த தோழர் சாகுலிடம் [109] , இருந்து எனக்கு போன் வந்தது. அப்பொழுது டிசம்பரில் ஒரு கருத்தரங்கம் நடைபெற இருக்கின்றது. அந்தக் கருத்தரங்கிற்கு இந்தியாவில் இருந்து ஒருவர் வரவேண்டும் என ஐரோப்பாவில் இருக்கும் சிலர் எதிர்பார்க்கின்றனர். உங்களுடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வர முடியுமா என்று கேட்டார். எனக்கு சில நாட்களில் குடலிறக்க அறுவை சிகிச்சை நடைபெற இருக்கின்றது. என்னால் பயணிக்க முடியுமா என்று தெரியவில்லை. மருத்துவரிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று கூறினேன். கேட்டுவிட்டு சொல்லுங்கள்; ஆனால் நீங்கள் வந்து திரும்பிச் செல்லும்வரை உங்களுடைய பயணமும், பங்கேற்பும் யாருக்கும் தெரியக்கூடாது; உங்களை அழைப்பது பிரபுகண்ணனுக்கு [110], தெரியும்; உங்கள் அமைப்பில் இதனைப்பற்றி தெரிவிக்காதீர்கள் என்று சாகுல் கூறினார். சரி சாகுல் என்று நான் கூறினேன்.

 2. அடுத்த நாள் திருமுருகனை சந்தித்த பொழுது சாகுலிடம் இருந்து போன் வந்தது குறித்தும், நாங்கள் இருவரும் பேசியது குறித்தும் கூறினேன். என்ன கருத்தரங்கம் என்று தெரியாமல் முடிவெடுக்க வேண்டாம் என்று பேசினோம். சாகுல் குறிப்பிடும் நிகழ்வு குறித்து யாரிடம் விசாரிப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்த போது, ஜெயா தோழரிடம் கேட்போம் என்று திருமுருகன் கூறினார். சரி நீங்கள் கேட்டுவிட்டு சொல்லுங்கள் என்று கூறினேன். ஜெயா தோழர் யார் என்று உங்களில் சிலருக்கு மட்டும் தெரியும்; மற்றவர்களுக்கு தெரியாது என்பதால் அவரைப் பற்றி சில வரிகள். தோழர் ஜெயா எனப்படும் ஜெயச்சந்திரன் ஒரு பத்திரிகையாளர். தமிழ்நெட் இணையத்தின் ஆசிரியர். [111], சிலர் அவரை ஜெயா தோழர் என்று அழைப்பார்கள்; பெரும்பாலானவர்களுக்கு அவர் ஜெயா அண்ணா.

 3. நவம்பர் 5 ம் தேதியன்று மாலை எனக்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என மருத்துவர் கூறியிருந்தார். நான் மருத்துவமனையில் அன்று காலையில் அனுமதிக்கப்பட்டேன். மதியம் திருமுருகன் மருத்துவமனைக்கு வந்திருந்தார். நாங்கள் பொதுவாக சில விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது அங்கிருந்த தோழர் கார்த்திக்கையும் மற்றவர்களையும் சற்று வெளியே இருக்கும்படி திருமுருகன் கூறினார். அனைவரும் வெளியேறிய பிறகு திருமுருகன், ஜெயா தோழரிடம் தான் பேசியது குறித்து தெரிவித்தார். டப்ளின் தீர்ப்பாயத்தின் தொடர்ச்சி டிசம்பர் முதல் வாரத்தில் ஜெர்மனியில் நடைபெற உள்ளது. அதில் இனப்படுகொலையில் பங்கெடுத்த நாடுகள் குறித்தும் விசாரணை நடைபெற இருக்கின்றது. இந்தியாவின் பங்களிப்பு குறித்து ஆதாரங்களை சமர்ப்பிக்க உங்களை (உமர்) அழைத்திருக்கின்றனர். உங்களுக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதால், தனியாக பயணம் செய்ய முடியாது; பயணத்தின் போது பெட்டியையும் தூக்கக்கூடாது. அதனால், நானும் (திருமுருகன்) வருகிறேன் என்று ஜெயாவிடம் கூறினேன். அவர் சரி என்று கூறினார். அதனால் நாம் இருவரும் சேர்ந்து செல்வோம் என்று திருமுருகன் கூறினார். சரி திரு, நான் வீட்டிற்கு சென்றவுடன் ஆதாரங்களைத் திரட்டுவதையும் தொகுப்பதையும் தொடங்கிவிடுகிறேன் என்று கூறினேன். பிரபுகண்ணன் அல்லது சாகுல் பேசினால், நான் ஜெயாவிடம் பேசிவிட்டேன் என்று சொல்லுங்கள் என்றும் திருமுருகன் கூறினார்.

 4. பிறகு, திருமுருகன் ரூ. 20000/- பணத்தினை என்னிடம் கொடுத்து உங்களுடைய மருத்துவ செலவுகளுக்கு வைத்துக்கொள்ளுங்கள்; இது இயக்கத்தின் சார்பில் செய்யும் உதவி என்று கூறினார். நான் வேண்டாம் என்று மறுத்தேன். அப்பொழுது எங்களுக்கிடையே நடைபெற்ற உரையாடல்.


உமர்: இல்லை திரு. எனக்கு பணம் வேண்டாம்.

திருமுருகன்: அவசர தேவைகளின் போது இயக்கம் உதவ வேண்டும். உங்களுக்கு இந்த நேரத்தில் பணம் தேவைப்படும் என்று தெரியும். அதனால் வாங்கிக்கொள்ளுங்கள்.

உமர்: இயக்கம் உதவ வேண்டும் என்று நான் எதிர்பார்த்ததில்லையே திரு.

திருமுருகன்: உங்கள் கம்பெனி வித்த பணத்திலிருந்து இயக்கத்துக்கு எவ்வளவு கொடுத்திருக்கீங்க? இது ஒன்னும் பெரிய பணமில்லையே வாங்கிக்குங்க.

உமர்: இயக்கம் எனக்கு திரும்பக் கொடுக்கும்ன்னு எதிர்பார்த்து நான் இயக்கத்துக்கு செலவு பண்ணலையே திரு. நான் அந்த நோக்கத்தில் தான் இயக்கத்துக்கு பணம்கொடுத்தேன்னு நினைக்கிறீங்களா?

திருமுருகன்: அப்ப நம்ம பசங்க யாராவது நாளைக்கு அடிபட்டு hospital ல இருந்தா, இயக்கம் உதவக்கூடாதுன்னு சொல்றீங்களா?

உமர்: கண்டிப்பா உதவனும். ஆனா, அந்த உதவியை அவங்க விரும்பினால் மட்டும் தான் செய்யணும். நான் இயக்கத்திடம் இருந்து உதவி எதிர்பார்க்கலை திரு.

திருமுருகன்: உங்ககிட்ட இப்ப பணமில்லன்னு தெரியும். இதை நீங்க கடனா வச்சிக்கிங்க. உதவியா வேணாம்.


 1. நான் சரி என்று கூறி அதனை கடன் என்னும் அடிப்படையில் பெற்றுக்கொண்டேன். பிறகு வெளியில் காத்திருந்தவர்களை உள்ளே அழைத்தோம். அவர்கள் வந்த பிறகு நாங்கள் இருவரும் பொதுவான பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். இஸ்ரேல் மற்றும் யூதர்கள் மீதான லூயி ஆர்பரின் (Louise Arbour) கருத்து, HARPP Project, ஹைத்தி நிலநடுக்கம், 2004 இந்தியப் பெருங்கடல் சுனாமி, அமெரிக்கா உருவாக்கும் புதுவகை ஆயுதங்கள் என்று எங்களுடைய உரையாடல் நீண்டுகொண்டே சென்றது. மாலை 4 அளவில் திருமுருகனும் மற்றவர்களும் கிளம்பினர்.

 2. சிறிது நேரம் கழித்து அருள் மருத்துவமனைக்கு வந்தார். அப்பொழுது அவரிடம் ப்ரேமனில் நடைபெற இருக்கும் தீர்ப்பாயம் குறித்தும், அதில் இந்தியாவின் இனப்படுகொலைப் பங்கு குறித்து விசாரிக்க இருப்பதையும், நானும், திருமுருகனும் பங்கேற்பது குறித்தும் தெரிவித்தேன். நான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குச் சென்றதும், அந்த வேலையினை தொடங்குகின்றேன் என்றும் கூறினேன். அப்பொழுது நாங்கள் இருவரும் ஆதாரங்களைத் திரட்டுவதற்கு, என்னவெல்லாம் செய்யலாம் என்றும் பேசிக்கொண்டிருந்தோம். பழ. நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் எழுதிய புத்தகங்களையும் பாருங்கள் என்று அருள் கூறினார். வைகோவையும் சந்திக்கலாம் என்று நான் கூறினேன். சிறிதுநேரம் கழித்து அருளும் கிளம்பினார்.


 1. அறுவை சிகிச்சை முடிந்து நான் வீட்டிற்குச் சென்ற பின்பு பிரபுகண்ணன் போன் செய்து, என்னுடைய உடல் நிலை குறித்தும், நான் ஐரோப்பா வருவது குறித்தும் கேட்டார். “நான் தனியாக பயணம் செய்ய முடியாது என்பதால் தானும் வருவதாக ஜெயா தோழரிடம் பேசியதாகவும், ஜெயா தோழரும் ஜூட் லால் பெர்னாண்டோவிடம் பேசுவதாக தெரிவித்ததாக, திருமுருகன் சொல்லச் சொன்னார்” என்று நான் கூறினேன். “ஜெயா அண்ணாவிடம் பேசிவிட்டாரா? அப்படியென்றால் சரி. நீங்கள் ஜுட் லால் பெர்னாண்டோ விடம் பேசுங்கள். அவர் மற்ற தகவல்களை உங்களுக்கு கூறுவார்” என்று பிரபு கண்ணன் கூறினார். இந்த உரையாடல்களில் இருந்து பிரபு கண்ணனை திருமுருகன் திட்டமிட்டு கழற்றி விட்டிருக்கிறார் என்பது எனக்கு அப்போது தெரியாது.

  2.1.3. தீர்ப்பாயத்திற்கு ஆதாரங்களைத் திரட்டும் பணிமுதல் கட்டம்.

 2. இந்தியாவின் பங்கு குறித்த ஆதாரங்கள் என்னென்ன திரட்ட வேண்டும் என்பதை நவம்பர் 13-ம் தேதியன்று நான் குறித்து வைத்து அதனை அசோக்குமார் [112], மோகன் [113], மேக்ஸ்வின், [114] திருமுருகன் ஆகியோருக்கும் பகிர்ந்தேன். [115] 3. இதுதவிர, சிறுசிறு வேலைகளாக சில தோழர்களுக்கு அதனை பிரித்தும் கொடுத்தேன். அசோக்குமாரிடம் செப்டம்பர் 12 2013 அன்று நிருபமா ராவ் எங்கிருந்தார் என்பதை கண்டறியச் சொல்லியிருந்தேன். இதனை நான் கூறியது என்பது அன்றைய தினம் பிரேசிலில் நடைபெற்ற ஒரு இலங்கை அரசு விழாவில் இருந்த பெண்மணி நிருபமாராவ் போன்று இருந்ததால் தான்.


  ஒரு வேளை நிருபமா ராவ் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார் என்றால், இந்தியா இலங்கை அரசுக்கு ஆதரவாக எந்த தளத்திலெல்லாம் வேலை செய்கிறது என்பதற்கான இன்னுமொரு ஆதாரமாக இது இருக்கும் என்பதால் தான். அசோக் குமார் அதுகுறித்து தேடிவிட்டு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்பதை தெரிவித்திருந்தார். 4. இதே காலகட்டத்தில் மோகனிடம் யஷ்வந்த் சின்ஹா இந்திய பாராளுமன்றத்தில் 2013 மார்ச்சில் பேசிய உரையின் காணொளி பதிவினை கண்டறியச் சொல்லியிருந்தேன். அவர் அந்த காணொளியைக் கண்டுபிடித்து, அதனுடைய எழுத்து வடிவ உள்ளடக்கத்தையும் கூட பகிர்ந்திருந்தார்.

 5. இன்னொரு புறத்தில், தோழர் சரவண பிரபுவிடம் [116] என்.டி.டி.வி. நிதின் கோகலே எழுதிய புத்தகமான Srilanka - From War to Peace என்ற புத்தகத்தை [117], PDF வடிவிலோ அல்லது e-book ஆகவோ கிடைக்குமா என்று பார்க்கச் சொல்லியிருந்தேன். அந்த புத்தகம் பத்திரிகையாளர் அதிஷாவிடம் [118] இருக்கிறது. அவர் ஒருபதிவினை இட்டிருக்கிறார். என்று சரவணபிரபு கூறினார் பிறகு நான் அதிஷாவிடம் பேசினேன். அவர் அந்தப் புத்தகம் முன்பு படித்தது, இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்றார். பிறகு அதற்கு அடுத்த நாள் அந்தப் புத்தகம் தன்னிடம் கைவசம் இல்லை என்றும் அதிஷா கூறினார்.

  2.1.3.1. வைகோவை சந்திக்க முயற்சி.

 6. அதே கால கட்டத்தில் நவம்பர் 13 அன்று ஜூட் லால் பெர்னாண்டோவிடம் மக்கள் தீர்ப்பாயம் குறித்து முதன்முறையாக உரையாடினேன். அப்பொழுது அவர் இந்தத் தீர்ப்பாயத்தில் இந்தியா குறித்த ஆதாரங்களை அளிப்பதற்காக உங்களை அழைத்திருக்கின்றோம் என்று கூறினார். மேலும், ஆதாரங்களை தொகுக்கும் பொழுது இந்தியாவினுடைய கொள்கை முடிவுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதைப் பற்றி நீங்கள் எடுத்து வையுங்கள் என்றும் கூறினார். நீங்கள் சமர்ப்பிக்க இருக்கும் ஆதாரத்தின் சுருக்கத்தினை நவம்பர் 25-ம் தேதிக்குள் அனுப்பினால் நன்றாக இருக்கும். ஏனெனில், அந்தத் தீர்ப்பாயத்தில் நீதிபதிகளாக பங்கேற்க விருப்பவர்களுக்கு முன்கூட்டியே ஆதாரங்களை கொடுக்க விருக்கிறோம் என்றும் கூறினார். மேலும், இந்தத் தீர்ப்பாயம் குறித்த பத்திரிகை செய்தியினை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று கூறினார். அதன்படி, அடுத்த நாள் தீர்ப்பாயம் குறித்த பத்திரிகை செய்தியையும் அனுப்பினார். [119]


 7. நான் பிரவீனுக்கு ஃபோன் செய்து அந்த பத்திரிகை செய்தியை எடுத்துக்கொண்டு சென்று வைகோவிடம் கொடுத்து சந்திப்பதற்கான நேரத்தையும் கேட்டு வரச்சொன்னேன். நவம்பர் 15-ம் தேதி பிரவீன் அந்தப் பத்திரிகை செய்தியை வாங்கிச் சென்று வைகோவின் உதவியாளர் பிரசாந்திடம் கொடுத்தார். பிரசாந்திடமிருந்து எனக்கு அழைப்பு வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை என்ற பொழுது, அதற்கு அடுத்த நாள் அவரிடம் பேசினேன். அப்பொழுது பிரசாந்த் கூறினார். அந்தச் செய்தியினை நான் ஐயாவிடம் கொடுத்துவிட்டேன். ஐயா ஒன்றும் சொல்லவில்லை என்றார். அப்பொழுது நான் கூறினேன், இல்லை ஐயாவை சந்திக்க வேண்டும், நீங்கள் கேட்டுச் சொல்லுங்கள் என்று கூறினேன். சரி என்று பிரசாந்த் கூறினார்.

  2.1.3.2. .நா.வின் பங்கு குறித்து ஆதாரங்கள் திரட்டச் சொன்ன திருமுருகன்.

 8. அடுத்த நாள் காலையில் திருமுருகன் எனக்கு ஃபோன் செய்து “நான் ஜெயாவிடம் பேசினேன் ஐ.நா தொடர்பாகவும் இந்த தீர்ப்பாயத்தில் விசாரித்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தேன். அவரும் சரி என்று கூறினார். உங்களை ஐ.நா. வின் பங்கு தொடர்பாக வேலை செய்யச் சொன்னார். அதனால் நீங்கள் ஐ.நா தொடர்பான ஆதாரங்களை திரட்டுங்கள்; இந்தியா தொடர்பான வேலைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறினார். “ஐ.நா குறித்து என்னிடம் அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. அதனை ஒரு அறிக்கையாக தயாரிப்பது தான் தேவை. அதனால் அதிக நேரம் தேவைப்பட போவதில்லை. சரி, நீங்கள் உங்கள் வேலையைத் தொடருங்கள்” என்று நான் திருமுருகனிடம் கூறினேன்.

 9. அதற்குப் பிறகு அருள் எனது வீட்டிற்கு வந்தார், அப்பொழுது அருளிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, வேலைகளை நான் பிரித்துக்கொடுத்ததை பற்றியும், பிறகு திருமுருகன் என்னிடம் ஐ.நா குறித்து வேலை செய்யச் சொல்லியிருக்கிறார் என்று சொன்னதையும் கூறினேன். அதில் அசோக்குமாரிடம் நிருபமாராவ் குறித்து கண்டறியச் சொன்ன தகவலைப் பற்றி கூறிவிட்டு அந்த புகைப்படத்தையும் காட்டினேன். அப்பொழுது அருள் கூறினார், இல்லை இல்லை இது நிருபமாராவ் இல்லை. வேறுயாரோ ஒரு பெண்மணி. என்று கூறினார்.

 10. சரி, இந்தியா குறித்து திரு பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். நான் ஐ.நா தொடர்பான வேலைகளை பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினேன். மேலும், வைகோவை சந்திப்பதற்கு நேரம் கேட்டும் அவர் எதுவும் பதில் சொல்லவில்லை என்றும் அருளிடம் கூறினேன்.

  2.1.3.3. என்னை சந்திப்பதை தவிர்த்த வைகோ

 11. சில நாட்களுக்கு பிறகு திருமுருகன் போன் செய்து வைகோ மாலை 4 மணிக்கு வரச் சொல்லியிருக்கின்றார். 4 Frames Preview தியேட்டரில் திரைப்படம் பார்க்க வருகின்றார். திரைப்படம் 4 மணிக்கு முடியும். நாம் அவரை சந்திக்கலாம் என்று கூறினார். நானும் அன்று மாலை 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அங்கு சென்றேன். திருமுருகனுக்கு போன் செய்த போது அவர் எடுக்கவில்லை. அதனால், அருகில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று கொண்டிருந்த ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு சென்று அங்கு காத்திருந்தேன். சில நிமிடங்களில் திருமுருகன் போன் செய்து எங்கிருக்கிறீர்கள் என்றார். ஆர்ப்பாட்டத்தில் என்றவுடன் திருமுருகன் அங்கு வந்து சேர்ந்தார். “வைகோ படம் முடிந்து சென்றுவிட்டார். இன்னொரு நாள் சந்திக்கலாம் என்று கூறினார்" என்று திருமுருகன் கூறினார். எனக்கு வைகோவின் மீது சந்தேகம் ஏற்பட்ட முதல் புள்ளி இதுதான். என்னை சந்திப்பதை ஏன் அவர் தவிர்க்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு இடத்தில் கூட்டத்தில் பேசிவிட்டு, அடுத்த இடத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு செல்லும் வழியில், தன்னுடைய பேச்சில் கூடுதலாக சேர்ப்பதற்கான தகவல்களை, வாகனத்தில் செல்லும்போதே எனக்கு போன் செய்து கேட்டுப் பெற்றிருக்கக்கூடிய வைகோ, பிரேமன் செல்வதற்கு முன் ஏன் என்னை சந்திப்பதை தவிர்த்தார் என்பதை சிந்தியுங்கள் தோழர்களே.

  2.1.4. விசா பெறுவதில் இருந்த சிக்கல்

 12. இதே காலகட்டத்தில் விசா தொடர்பான வேலைகள் இருந்தன. இந்த வேலையில் பிரபுகண்ணனும், விராஜ்மெண்டிசும் உதவினர். ஏற்கனவே தீர்ப்பாயத்தில் நான் பங்கெடுப்பது குறித்து முன்னரே முடிவெடுக்கப்பட்டிருந்ததால், எனது விசாவிற்கான கடிதம் உள்ளிட்ட பலவற்றையும் நவம்பர் 19 ஆம் தேதி அன்று விராஜ் அனுப்பினார்.


 13. திருமுருகன் என்னுடன் வருவது என்பது பின்னர் தான் முடிவானதால், அவருக்கான கடிதம் சில நாட்களுக்குப் பிறகு நவம்பர் 22 அன்று தான் விராஜால் அனுப்பப்பட்டது.


 14. விசா கோரிச் சென்ற பொழுது எனக்கு விசா கிடைப்பது கடினம் என்று பயண ஏற்பாட்டாளர் கூறினார். ஏனெனில், என்னுடைய வங்கிக் கணக்கில் பணம் இல்லை. திருமுருகனுக்கு அந்த சிக்கல் இல்லை என்றும் அவர் கூறினார். அதனால் மீண்டும் விராஜிடம் பேசிய போது, விராஜ் ஜெர்மனியில் இருக்கக் கூடிய ஒரு எம்.பியிடம் இருந்து உங்களுக்கு விசா அளிக்க கடிதம் வழங்கிறோம். அதை வைத்து நீங்கள் விசா பெற்றுக்கொள்ளலாம் என்று அந்த வேலையையும் செய்தார்.

 15. இந்நிலையில் நவம்பர் 26 ம் தேதி அன்று நானும், ஜுடும் தீர்ப்பாயம் குறித்து பேசினோம். அப்பொழுது இந்தியா தொடர்பாக முன் வைக்கக்கூடிய தகவல்களில், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்களை குறித்து நீங்கள் பேசினால் நன்றாக இருக்கும் என்று ஜுட் கூறினார்.

 16. நவம்பர் 27 அன்று திருமுருகனுக்கு விசா கிடைத்தது. ஆனால், எனக்கு விசா தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை.


 17. விசா கிடைத்த தகவலை திருமுருகனிடம் கூறிவிட்டு முந்தைய நாள் ஜுடும் நானும் பேசியது குறித்து திருமுருகனிடம் பேசினேன். “ஜுட் பேசும் போது ஐ.நா. தொடர்பாக எதுவும் பேசவில்லை. ஐ.நா. தொடர்பாகவும் ஆதாரங்களை அளிக்க வேண்டும் என்பதற்கு ஜெயா ஒத்துக்கொண்டார் தானே. நீங்கள் ஜெயாவிடம் பேசுகிறீர்களா” என்று திருமுருகனிடம் கேட்டேன். அதற்கு அவர்” நீங்கள் ஜூடிடம் பேசுங்கள், இந்தியாவின் பங்கு ஐ.நா வரை உள்ளது; ஐ.நாவையும் சேர்த்து விசாரிப்பது நல்லது என்று அவரிடம் சொல்லுங்கள், அவர் ஒத்துக்கொள்வார்” என்றார்.

 18. 27-ம் தேதி இரவு நான் ஜூடிடம் பேசினேன். இந்தியா குறித்த ஆதாரத்தையும் சேர்த்து ஐ.நாவையும் விசாரிப்பது சரியாக இருக்குமல்லவா. ஏனென்றால் இந்தியாவின் பங்கு ஐ.நா வரை நீண்டிருக்கிறதல்லவா என்றேன். நீங்கள் அதனை தொடரலாம், ராஜதந்திரரீதியில் இந்தியாவின் உதவிகளை எந்த இடத்தில் வேண்டுமானாலும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம் என்று கூறினார்.

 19. அடுத்த நாள் நவம்பர் 28 அன்று எனக்கும் விசா கிடைத்தது.


 20. 28-ம் தேதி விசா கிடைத்தவுடன் நான் அவற்றை எடுத்துக்கொண்டு திருமுருகனை சந்திக்கச் சென்றேன். அப்பொழுது, நீங்கள் இந்தியா குறித்து என்ன ஆதாரங்களை தொகுத்திருக்கிறீர்கள் என்று திருமுருகனிடம் கேட்டேன். நான் எதுவும் வேலை செய்ய முடியவில்லை என்று திருமுருகன் கூறினார். சரி அப்படியானால் நான் இந்தியா குறித்த வேலைகளை தொடர்கிறேன் என்று கூறினேன்.

  2.1.5. ஆதாரங்களைத் திரட்டும் பணியும், துண்டிக்கப்பட்ட இணைய இணைப்பும்

 21. நவம்பர் 29-ம் தேதி சில தோழர்களை சந்திப்பதற்கு அவர்களிடம் தகவல் தெரிவித்துவிட்டு, 29-ம் தேதி காலையில் அமெரிக்க தீர்மானம் குறித்த பதிவு ஒன்றினை எழுதி வெளியிட்டேன் [120] , நான் பதிவினை வெளியிட்ட சில நிமிடங்களில் எனது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனால், எனது வீட்டிற்கு அருகில் இருந்த வீட்டில் இணைய இணைப்பு இருந்தது. அங்கு துண்டிக்கப்படவில்லை. அதனால் எனது வீட்டில் இருந்து என்னால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. இந்தியாவின் பங்கு குறித்த தகவல்களை திரட்ட முடியாத படி எனது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது. அன்று மாலை தி.நகரில் இருக்கும் ஒரு காஃபிடேயில் மோகனையும், கொண்டலையும் சந்தித்தேன். அப்பொழுது கொண்டலிடம் என்ன தகவல்கள் திரட்ட வேண்டும் என்று அவரிடமும் கூறினேன். அசோக்குமாரிடமும் ஃபோனில் சில வேலைகளைச் கூறினேன். பிறகு மோகனிடமும் சில வேலைகளைச் கூறியிருந்தேன். சரவணன் தனது Data Card ஐ அப்பொழுது கொடுத்தனுப்பினார். எனது வீட்டிற்கு வந்தபின்பு சரவணனின் Data Card ஐ பயன்படுத்தி இணைய இணைப்பை ஏற்படுத்தி, எனது மின்னஞ்சலை திறந்தேன். அடுத்த சில நிமிடங்களில் Data Card லும் இணையம் துண்டிக்கப்பட்டது. எனது மின்னஞ்சல் திறக்கப்படுவதை வைத்து எனது இணைய இணைப்பு துண்டிக்கப்படுகின்றது என்பதை புரிந்து கொண்டேன்.

 22. இதே காலகட்டத்தில் நாங்கள் ஜெர்மனி செல்வதற்கான பயணச் சீட்டிற்கான பணத்தினையும் ஜெர்மனியில் தங்கியிருக்கும் பொழுது சாப்பாடு உள்ளிட்ட தங்கல் செலவுகளையும் ஜூட், விராஜ் உள்ளிட்ட தோழர்கள் பார்த்துக் கொள்வதாக தெரிவித்திருந்தார்கள். ஆனாலும், அங்கே ஏற்படக் கூடிய மற்ற செலவுகளுக்கும் பயணத்திற்கான பொருட்களை வாங்குவதற்கும் பணம் தேவைப்பட்டது. என்னிடம் பணம் இல்லை, தன்னிடமும் பணம் இல்லை என்று திருமுருகன் கூறினார். அதனால் ராஜராஜன் [121] தனது தொழிலுக்காக வைத்திருந்த 50,000 ரூபாயை கடனாக கேட்டுப் பெற்றேன். நாங்கள் சென்று வந்த பின்பு அமைப்பிடமிருந்து அதனை திரும்பத் தருகின்றோம் என்றும் ராஜராஜனிடம் தெரிவித்தேன். அந்தப் பணத்தை வாங்கி பிரவீன் தான் எங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கினார். இந்திய ரூபாயை யூரோவாகவும் மாற்றிக் கொடுத்தார்.

 23. நவம்பர் 30-ம் தேதியன்றும், டிசம்பர் 1 தேதியன்றும் எனக்கு இணைய இணைப்பு வேலை செய்யவில்லை. அதனால் எனக்கு இந்தியா குறித்த ஆதாரங்களை திரட்டுவதற்கான வாய்ப்பே இல்லாமல் இருந்தது. டிசம்பர் 1-ம் தேதி இரவு திருமுருகனிடம் பேசும் பொழுது, "ஏன் திரு, என்னோட கனெக்ஷன் மட்டும் கட்டாகியிருக்கு, உங்களுக்கு கட்டாகவில்லை" என்று கேட்டேன். திருமுருகன் தெரியவில்லை என்று கூறினார். எனக்கு இணையம் துண்டிக்கப்பட்டிருந்த 3 நாட்களிலும் திருமுருகனின் அலுவலகத்திலும், வீட்டிலும் இணைய இணைப்பு இருந்தது.

 24. திருமுருகனிடம் எதுவும் சொல்லாமல் அவருடைய அலுவலகத்துக்குச் சென்று அங்கு வேலையை தொடரலாம் என்று நினைத்து 2-ம் தேதியன்று திருமுருகனின் அலுவலகத்துக்குச் சென்றேன். நான் உள்ளே நுழையும் போது அவருடைய அலுவலகத்தில் வேலை செய்யும் ரவி "சார் இன்டெர்நெட் கனக்சன் வேலை செய்யலை" என்று கூறினார். பிறகு, நானும் திருமுருகனும் கிளம்பி திருமுருகனின் நண்பர் ஒருவருடைய அலுவலகத்துக்குச் சென்றோம். எங்களோடு மேக்ஸ்வின்னும் வந்தார்.

 25. அந்த நண்பரின் அலுவலகத்தில் சென்று என்னுடைய மின்னஞ்சலை திறந்தால், அங்கும் இணையம் துண்டிக்கப்படலாம் என்று கருதி, எனது மின்னஞ்சலில் இருக்கும் தகவல்களை வேறு இடத்தில் இருந்து எடுக்க முயற்சிக்கலாம் என்று எண்ணி, என்னுடைய மின்னஞ்சல் முகவரியையும் அதனுடைய நுழைவுச் சொல்லையும் மோகனிடம் கொடுத்து எனது மின்னஞ்சலில் டிராஃப்டில் இருக்கக்கூடிய அனைத்தையும் மேலும் ppt-sl என்னும் லேபிலில் இருக்கக்கூடிய மின்னஞ்சல்கள் அனைத்தையும் ஒரு புதிய மின்னஞ்சலுக்கு அனுப்பும்படி கூறினேன். அவரும் ஒரு புதிய மின்னஞ்சலை தன்னுடைய அலுவலகத்தில் உருவாக்கினார். அதனுடைய முகவரியையும் நுழைவுச்சொல்லையும் எனக்கு குறுஞ்செய்தியாக அனுப்பினார்.

பிறகு என்னுடைய மின்னஞ்சலை திறந்து தொடர்புடைய அனைத்தையும் புதிய மின்னஞ்சலுக்கு அனுப்பினார். 1. நாங்கள் திருமுருகனின் நண்பரது அலுவலகத்தில் எங்களுடைய வேலையைத் தொடங்கிய 1 மணி நேரத்தில் அங்கும் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது. அலுவலகத்தை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, உளவுத்துறை காவலர்கள் அந்தப் பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். நான் எங்கெல்லாம் சென்று வேலை செய்கிறேன் என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பது புரிந்தது. அதற்கு மேல் இந்தியாவிலிருந்து எந்த வேலையையும் செய்ய முடியாது என்று முடிவு செய்து, ஜெர்மனியில் வேலையை தொடரலாம் என்று அடுத்த நாள் கிளம்புவதற்கு உரிய வேலைகளை மேற்கொண்டோம். ஆனால், அன்று மாலை திருமுருகனின் அலுவலகத்தில் இணைய இணைப்பு கிடைத்து, அங்கு அவரது அலுவலக வேலை தொடர்ந்தது.

  2.1.5.1. எங்கள் பயணமும், அருளின் கோபமும்

 2. டிசம்பர் 4-ம் தேதியன்று இரவு விமான நிலையத்துக்குச் சென்ற பொழுது, எங்களை வழியனுப்புவதற்கு அருணும் [122], அருளும் வந்தனர். அதில், அருண் திருமுருகனின் அலுவலகத்திலிருந்து கிளம்பிவிட்டார். அருள் விமான நிலையம் வரை வந்தார், பிரவீனும் வந்திருந்தார். விமான நிலையம் சென்று சேர்ந்தவுடன், எனது அலைபேசியை அருளிடம் கொடுத்து அவரை எனக்கு வரும் அழைப்புகளை கையாள கூறினேன். அவர் எனது ஃபோனை வாங்கிக் கொண்ட சில நிமிடங்களில் என்னிடமும் திருமுருகனிடமும் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். அவர் அப்படிச் சென்றது ஏன் என்றால், அவருக்கு திருமுருகன் மீதும் என்மீதும் கோபம் இருந்தது. இந்தியாவின் பங்கு குறித்த ஆதாரங்களை திரட்டும் வேலையில் அவரை பங்குகொள்ள வைக்கவில்லை என்ற கோபத்தினால், தான் புறக்கணிக்கப்படுகிறோம் என்று கருதி, திருமுருகன் தவறிழைக்கிறார் என்று எண்ணி எங்களிடம் சொல்லிக்கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்..


 1. திருமுருகன் எப்படி தவறு செய்கிறார் என்று புரியாவிட்டாலும், ஏதோ தவறு செய்கிறார் என்று புரிந்ததனால்தான் அருள், விமான நிலையத்தில் அப்படி நடந்து கொண்டார். அதற்கு பிறகும் கூட சில நாட்கள் மட்டுமே என்னுடைய அலைபேசியை வைத்திருந்தவர், பிறகு அதனை பிரவீனிடம் கொடுத்துவிட்டார். ஜெர்மனியில் இருந்து நாங்கள் அவரை தொடர்பு கொண்டபோதும் கூட அவர், தன்னுடைய போனை எடுத்து எங்களிடம் பேசவில்லை. டிசம்பர் 15 அன்று நடைபெற்ற மரணதண்டனைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கூட ஒரு ஓரமாக அமர்ந்து இருந்து விட்டு சென்று விட்டார். வேலைகளில் பொறுப்பெடுத்துக் கொள்ளவில்லை. திருமுருகனோடு முரண்படும்போது அதனை வெளிப்படுத்தினால் என்ன நடைபெறும் என்பதை அருளின் பிந்தைய மாற்றங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம். திருமுருகன் தவறு செய்கிறார் என்று எனக்கு தெரிந்த உடன், அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்து, திருமுருகனின் உண்மையான நோக்கத்தைக் கண்டறிந்தேன். பிரேமன் தீர்ப்பாயத்தில் திருமுருகன் தவறு செய்கிறார் என்று அறிந்த அருளும், நானும் எப்படி நடந்து கொண்டோம்; அதனுடைய விளைவுகள் என்ன என்பதை இக்கடிதத்தை முழுமையாக படித்தபின்பு சிந்தியுங்கள்.

  2.1.6. தீர்ப்பாயத்தின் முதல் சில நாட்கள்.

 2. பிறகு நாங்கள் விமானத்தில் கிளம்பி ஜெர்மனி சென்று சேர்ந்தோம். நாங்கள் அங்கு சென்ற பின்பு விராஜ் எங்களை வரவேற்றார். அப்பொழுது இங்கிலாந்து குறித்த ஆதாரங்களை அவர் எங்களிடம் கொடுத்தார். மேலும், தீர்ப்பாயத்தின் முதல் நாள் வந்து அமர்ந்து தீர்ப்பாயம் எப்படி நடைபெறுகிறது என்பதையும் பாருங்கள் என்றும் கூறினார். எங்களுக்கு அங்கு ஒரு சிறிய ஹோட்டலில் அறைகள் ஒதுக்கப்பட்டன. அறைகளும் சிறியதாக இருந்ததால், எனக்கும் திருமுருகனுக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. நாங்கள் அங்கு சென்று எங்களுடைய வேலைகளைத் தொடங்கினோம். தீர்ப்பாயத்தின் முதல் நாள் தீர்ப்பாயம் எப்படி நடைபெறுகிறது என்பதைப் பார்த்தோம். அப்பொழுது இங்கிலாந்து குறித்த ஆதாரத்தினை தோழர்கள் விராஜூம், ஃபில் மில்லரும் வழங்கினர்.

 3. அங்கிருந்த நீதிபதிகள் அவர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு விராஜூம் மிக நீண்ட விளக்கத்தினை அளித்தார். அதனடிப்படையில் பார்க்கும் பொழுது தீர்ப்பாயம் மிக விரிவாக அனைத்து விஷயங்களையும் அலசுகிறது என்பது எங்களுக்குப் புரிந்தது.

 4. நாங்கள் அங்கு இருந்த போது ஜூடும், விராஜும் எங்களை சந்தித்தனர். அப்பொழுது, சென்னையில் இருந்து பேராசிரியர் ராமு மணிவண்ணன், தீர்ப்பாய நிகழ்வுகளை பார்க்க விரும்புவதாகவும், அதற்காக ஜெர்மனி வருவதாகவும் மின்னஞ்சல் அனுப்பியிருக்கின்றார் என்று தெரிவித்தனர். உடனடியாக திருமுருகன், “ராமு மணிவண்ணன் இந்திய உளவுத்துறையை சேர்ந்தவர். அவர் வந்தால், எங்கள் உயிருக்கு ஆபத்து. அவர் இருக்கும்போது, நாங்கள் ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாது” என்று கூறினார்.

 5. அதற்கு ஜூட், “இங்கு இரண்டு வகையில் ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியும். ஒன்று Public Session. மற்றொண்டு In Camera Session. இந்த public sessionல் நீங்கள் பேசுவதை நீதிபதிகள், பார்வையாளர்கள், இணையம் என்று அனைத்திலும் பார்க்க முடியும். இன்னொன்று In Camera Session. அதில், உங்களுடைய சாட்சியம் கேமராவில் பதிவு செய்யப்படும். அதே நேரத்தில் நீதிபதிகளும் அவற்றை கேட்பார்கள். வேறு யாரும் உங்களுடைய சாட்சியங்களை பார்க்கவோ, கேட்கவோ முடியாது. கேமரா பதிவுகளும் பொது வெளியில் வெளியிடப்படாது. நீங்கள் விரும்பினால், In Camera Sessionல் சாட்சியமளிக்கலாம். அப்படி சாட்சியமளிக்கும் போது உங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது” என்று கூறினார்.

 6. அதற்கு திருமுருகன் ”நாங்கள் எங்கள் சாட்சியங்களை எப்படி வழங்குகிறோம் என்பதை முடிவு செய்துவிட்டு சொல்கிறோம். ஆனால், ராமுமணிவண்ணன் வராமல் இருப்பதற்கு ஏதாவது செய்யுங்கள்” என்றார். பிறகு விராஜ், பேராசிரியர் ராமு மணிவண்ணனுக்கு அவருடைய வருகையை வேண்டாம் என்று குறிக்கும் விதமாக ஒரு மின்னஞ்சலை அனுப்பியதாக குறிப்பிட்டார்.

 7. இங்கிலாந்து வழக்கு முடிந்து நாங்கள் அறைக்குத் திரும்பிய பின்பு எங்களுடைய வேலைகளை தொடர்ந்தோம். ஆனால், அதுவரை இந்தியா குறித்த ஆதாரங்களை விராஜூக்கோ அல்லது ஜூடுக்கோ அனுப்பவில்லை. அதனால், விராஜ் எனக்கு தொடர்ச்சியாக போன் செய்து கொண்டிருந்தார். நீங்கள் ஆதாரங்களை அனுப்புங்கள் என்று கூறிக்கொண்டிருந்தார். தீர்ப்பாயத்தின் 2-ம்நாள், டிசம்பர் 8 ஆம் தேதி, மாலை 4.30 மணிக்கு, நான் எனது வேலையினை முடித்துவிட்டு ஐ.நா குறித்த ஆதாரங்களை என்னுடைய மின்னஞ்சலுக்கே அனுப்பிக்கொண்டேன்.

 8. அனுப்பிவிட்டு திருமுருகனின் அறைக்குச் சென்றேன். அங்கு திருமுருகன் இன்னும் வேலை முடியவில்லை. சற்று காத்திருங்கள், இருவரின் ஆதாரத்தையும் சேர்ந்து அனுப்பிவிடுவோம் என்று கூறினார்.

 9. நானும் சரி என்று அவருடைய அறையிலேயே காத்திருந்தேன். ஆனால், அவர் பவர் பாய்ன்டில் உட்கார்ந்து டிசைன் செய்து கொண்டிருந்தார். மணி 7.30 ஆனது. பிறகு சாப்பிடப் போவோம் என்றார். நாங்கள் தங்கியிருந்த விடுதியில் இரவு உணவு இல்லாததால் நாங்கள் இருவரும் வெளியே சென்று ஒரு உணவகத்தில் எங்களுடைய இரவு உணவை உட்கொண்டு விட்டு மீண்டும் அறைக்குத் திரும்பினோம். 8.30 மணி ஆனது. மீண்டும் திருமுருகன் பவர் பாய்ன்டை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தவுடன் எனக்கு கோபம் வந்து திருமுருகனிடம் கேட்டேன்.

 10. நாம் எதற்காக இங்கு வந்திருக்கின்றோம். அவர்கள் ஆதாரங்களை இன்னும் அளிக்கவில்லை என்று தொடர்ச்சியாக ஃபோன் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இங்கு உட்கார்ந்து பவர் பாய்ன்டில் ஒவ்வொரு கலராக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். ஆதாரங்களை ஒரு வேர்ட் ஃபைலில் போட்டு அனுப்பி விட்டு இரவு முழுவதும் பவர் பாய்ன்டில் வேலை செய்து கொண்டிருங்கள். நாம் ஆதாரங்களை இப்பொழுது கொடுத்தால் தான் நீதிபதிகள் அவறை படித்து விட்டு நாளை வந்து வழக்கை விசாரிப்பதற்கு அவர்களுக்கு தகவல்கள் இருக்கும். இதனால் இப்பொழுது அனுப்புவோம் என்று திருமுருகன் திரட்டிய தகவல்களை கேட்டேன்.

 11. நான் அவ்வளவு கோபமாக பேசி திருமுருகன் கேட்டதில்லை. கொஞ்ச நேரம் பொறுங்கள் நான் முடித்து விடுகிறேன் என்று கூறி விட்டு 9.30மணிக்கு தான் வேலையினை முடித்துவிட்டதாக கூறினார்.

  2.1.7. நாங்கள் சமர்ப்பித்த ஆதாரங்கள்..

 12. பிறகு அவரது கணினியில் எனது மின்னஞ்சலை திறந்து, நான் ஏற்கனவே எனது மின்னஞ்சலுக்கே அனுப்பப்பட்ட இந்தியா-ஐ.நா. குறித்த எனது ஆவணத்தை, பதிவிறக்கி PDF ஆக மாற்றி, இரவு 9:35க்கு ஜூட் லால் பெர்னாண்டோ விற்கு அனுப்பினேன்.


 13. பிறகு அடுத்தடுத்த மின்னஞ்சல்களில் பெட்ரி அறிக்கை, அந்த அறிக்கையின் மறைக்கப்பட்ட பகுதிகள், ஜான் எலியாசனின் அறிக்கை ஆகியவற்றையும் அனுப்பினேன். 14. பிறகு திருமுருகனை, அவர் தொகுத்திருக்கும் தகவல்களை அனுப்ப கூறினேன். அவர் எனது மின்னஞ்சலில் இருந்தே அவர் தொகுத்த தகவல்களையும், நோர்வே அறிக்கையையும் இரவு 9:49 க்கு அனுப்பினார்.


 15. திருமுருகன் நார்வே அறிக்கை தவிர்த்து, ஆதாரம் என்று சமர்ப்பித்தது இந்த ஒரு ஆவணம் மட்டுமே. இதனைத் தான் ஜூட் நீதிபதிகளுக்கு அனுப்பியிருந்தார். டிசம்பர் 9 அன்று காலையில் நாங்கள் தீர்ப்பாயத்தில் எங்கள் வாதங்களை முன்வைத்த போது, ஆதாரம் என்று அளிக்கப்பட்டவை 2 ஆவணங்கள் மட்டுமே.

 1. India-UN-Complicity-May17Movement.pdf - Umar (PDF) [123]

 2. Indian-Complicity in Eelam Tamil Genocide-VER-1-0.docx - Thirumurugan) [124]


இந்த ஆதாரங்களுக்கு துணையாக நாங்கள் கொடுத்தவை (Supporting Documents)

 1. Petrie Report [125]

 2. Blacked out Portions of Petrie Report (PDF) [126]

 3. Jan Eliasson Report (Rights Up Front Report) )[127]

 4. Pawns of Peace - Norway Report [128] 1. ஜெர்மனியில் இருந்தபொழுது நாங்கள் ஆதாரங்கள் அனுப்புவதற்கு சில மணி நேரங்கள் முன்பு திருமுருகன், மே பதினேழு இயக்கத் தோழர்கள் பலரிடமும் பல்வேறு தகவல்களை தொகுத்து அனுப்பச் சொல்லியிருக்கின்றார். கொண்டல், ரதீஷ்[129], முத்துக்குமார்,[130] நியாயத்தராசு [131] உள்ளிட்டவர்களிடம் அந்த வேலைகளை அவர் சொல்லியிருக்கிறார். அவர்களில் சிலர் சில தகவல்களை கொடுத்திருக்கின்றனர். டிசம்பர் 8 அன்று நாங்கள் ஆதாரங்களை அனுப்பிய பிறகு கொண்டல், ரதீஷ், முத்துக்குமார் ஆகியோர் தங்களிடம் கேட்கப்பட்ட தகவல்களை எனக்கும் திருமுருகனுக்கும் அனுப்பியிருந்தனர். நாங்கள் ஆதாரங்களை அனுப்பிய பிறகுதான், கொண்டல், ரதீஷ், முத்து ஆகியோர் தகவல்கள் அனுப்பியிருந்தாலும், தாமதமாக தகவல்களை அனுப்பியதற்கு அவர்கள் எந்த விதத்திலும் காரணம் இல்லை. திருமுருகன் அவர்களிடம் இந்த வேலைகளை ஒப்படைத்ததே மிகவும் காலம் தாழ்த்தி என்பதால் அவர்களுக்கு கிடைத்த குறுகிய நேரத்திற்குள் அனைத்தையும் முடித்து அனுப்பினர்.


 2. நான் என் அறைக்குச் சென்று படுத்து விட்டேன். அடுத்த நாள் காலையில் எழுந்து நானும் திருமுருகனும் கிளம்பி தீர்ப்பாயம் நடைபெறும் இடத்துக்குச் சென்றோம். இடையில் எங்களை அழைத்துச் சென்ற நண்பர், ஜூட் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றார். அப்பொழுது அங்கு ஜூடை பார்த்த பொழுது திருமுருகன் கூறினார். எங்களுக்கு 6 மணி நேரமாவது தேவைப்படும் என்றார். ஜூட் சிரித்துக் கொண்டே நேரமாகிறது என்று கூறினார்.

  2.1.8. தீர்ப்பாயத்தில் நடைபெற்றவை

 3. நாங்கள் தீர்ப்பாயம் நடக்கும் இடத்துக்கே சென்றோம். அப்பொழுது நியாயத்தராசு, திருமுருகன் கேட்ட சில தகவல்களை அனுப்பியிருப்பதாக தெரிவித்தார். ஜூடும் அடுத்த காரில் வந்து சேர்ந்தார். நீதிமன்ற அறைக்கு வெளியே நின்று ஜுட், “நீங்கள் எந்த முறையில் சாட்சியம் வழங்கப் போகிறீர்கள்? Public Sessionஆ? In Camera Sessionஆ?” என்றார Public Session தான் என்று நான் கூறினேன்.

 4. சிறிது நேரத்தில் தீர்ப்பாயம் தொடங்கியது. தீர்ப்பாயம் தொடங்கியவுடன் திருமுருகன் எனக்கு பதட்டமாக இருக்கிறது. நான் வெளியே நிற்கின்றேன். நீங்கள் தொடங்குங்கள், நான் சிறிது நேரத்துக்குப் பிறகு சேர்ந்து கொள்கிறேன் என்று கூறினார்.

 5. சரி என்று நான் அமர்ந்து எனது வாதத்தை தொடங்கினேன். வாதத்தை தொடங்கிய சில நிமிடங்களில், நீதிபதிகளில் தலைமையாக இருந்த டெனிஸ் ஹாலிடே (Denis Halliday) [132], கூறினார், "நீங்கள் அளித்த அறிக்கையில் இருப்பவற்றை பற்றி இங்கே பேச வேண்டாம். இவற்றை நாங்கள் படித்து விட்டோம். நேரம் குறைவாக இருக்கிறது. அதினால், நீங்கள் அளித்த அறிக்கையில் இல்லாத கூடுதல் தகவல்களை பேசுங்கள், " என்று கூறினார். நான் சித்தார்த் சேட்டர்ஜியை இந்தியா எப்படி பயன்படுத்தியது. சித்தார்த் சேட்டர்ஜி என்பவர் யார், அவருக்கும் பான் கி மூனுக்கும் என்ன உறவு என்பதையெல்லாம் விரிவாக பேசி விட்டு எனது வாதத்தை நேரம் கருதி முடித்துக் கொண்டேன். பிறகு திருமுருகன், தனது வாதத்தைத் தொடங்கினார்.

 6. அவர் தொடங்கிய சிறிது நேரத்தில் சாதிகள் குறித்தும், பார்ப்பனர்கள் குறித்தும் பேசத் தொடங்கினார். அப்பொழுது நீதிபதிகளில் ஒருவரான டாக்டர் மாங்க் ஜர்னி (Dr. Maung Zarni) [133], இங்கு எதற்கு இதைப் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இந்தியாவின் பங்கு குறித்து பேசுங்கள். என்று குறுக்கிட்டார்.

 7. உடனே திருமுருகன் “இந்தியாவின் பங்கைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டுமென்றால், இந்தியாவைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டுமென்றால் சாதிகளைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். சாதிகளையும் பார்ப்பனர்களையும் புரிந்து கொண்டால்தான், நீங்கள் இந்தியாவைப் பற்றி புரிந்துகொள்ள முடியும். அதனால், சாதிகளைப் பற்றியும், பார்ப்பனர்களைப் பற்றியும் பேச வேண்டிய தேவை இருக்கிறது” என்று கூறிவிட்டு சாதிகளைப் பற்றியும் பார்ப்பனர்களைப் பற்றியும் பேசத் தொடங்கினார்.

 8. நீண்ட நேரம் அவர் சாதிகள், பார்ப்பனர்கள் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பதை பார்த்து டெனிஸ் ஹாலிடே குறுக்கிட்டு உங்களுடைய நேரம் முடிந்து விட்டது. நீங்கள் இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று கூறினார். நேரம் குறைவாக இருக்கிறது என்று கேட்ட போது, உங்களுக்கு 30 நிமிடம் தான் பேசுவதற்கு வாய்ப்பு. நீங்கள் எழுத்து பூர்வமாக கொடுப்பவற்றை வைத்து நாங்கள் மற்றவற்றை புரிந்து கொள்வோம். உங்களுக்கு பேசுவதற்கு கொடுத்த நேரம் முடிந்து விட்டது என்று கூறினார்.

 9. அப்படியானால், ஒரேயொரு காணொளியை மட்டும் இங்கு ஒளிபரப்புவதற்கு அனுமதி கொடுங்கள். ஏனெனில் அது இந்திய பாராளுமன்றத்தில் ஒரு முன்னாள் அமைச்சர் பேசிய பேச்சு. அதில் இந்தியா செய்த உதவிகள் குறித்து விரிவாக அதில் இருக்கின்றன என்று நான் கூறினேன். அவர் சரி என்று கூறினார்.

 10. யஷ்வந்த் சின்காவின் காணொளியை நாங்கள் போட்டு சில நிமிடங்கள் [134], ஓடியிருந்தது. முதல் சில நிமிடங்கள் அவர் பாலச்சந்திரனின் புகைப்படம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். இந்தியாவின் பங்கு குறித்து அவர் பேசும் பகுதி அந்தக் காணொளி யின் கடைசி சில நிமிடங்களில்தான் வரும். காணொளியின் தொடக்கத்தில் இந்தியாவின் பங்கு குறித்து எதுவும் இல்லை என்பதால், டாக்டர்டெனிஸ்ஹாலிடே”இத்துடன்நிறுத்திக்கொள்ளுங்கள், இன்னும்பல்வேறுவிசாரணைகள்பாக்கியிருக்கின்றன. இவற்றைப்பற்றியேநேரத்தைசெலவிடமுடியாது. நீங்கள்எழுத்துப்பூர்வமாககொடுத்தவற்றைகூடுதல்தகவல்களுக்குபார்த்துக்கொள்கின்றோம். ஐ.நா. என்னும் அமைப்பு எப்படி சிதைவுண்டிருக்கிறது என்று நீங்கள் எடுத்தரைத்தது மிகவும் சிறப்பாக இருந்தது. உங்களுக்கு நன்றி” என்றுகூறி அந்த பகுதியை நிறைவு செய்தார்.

 11. எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. தீர்ப்பாயத்தின் முதல் நாளில் இங்கிலாந்து குறித்து பல மணி நேரங்கள் விசாரணை நடைபெற்றது. ஆனால், இந்தியாவுக்கும், ஐ.நா.விற்கும் அரை மணி நேரம் தான் ஒதுக்கியிருக்கிறார்கள் என்பது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

 12. நாங்கள் வாதத்தை முடித்துவிட்டு வெளியில் வந்த போது ஜூட் எங்களை சந்தித்தார். நேரம் போதவில்லையே என்று ஜூடிடம் கூறினோம். தீர்ப்பாயத்தின் முதல் நாளில் நிறைய நேரம் ஒவ்வொரு வழக்குக்கும் எடுத்துக்கொண்டதால், இரண்டாம் நாள் முதல் நேரம் குறைவாக ஒதுக்கப்பட்டது என்று கூறினார். இன்றும் கூட இரண்டு இடங்களில் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதனால் தான் நேரம் ஒதுக்க முடியவில்லை. நான் டென்னிஸ் ஹாலிடேயிடம் பேசுகிறேன் என்றார்.

  2.1.9. இந்தியாவைக் காக்க, திருமுருகன் செய்த திருட்டுத்தனம்

 13. சிறிது நேரம் கழித்து இன்னொரு விசாரணை முடிவுற்ற பின்பு டென்னிஸ் ஹாலிடே வெளியில் வந்தார். அப்பொழுது எங்களிடம் அவர் பேசினார். என்னிடம் அவர் பேசத்தொடங்கிய உடனேயே கூறினார். நீங்கள் சித்தார்த் சேட்டர்ஜியைப் பற்றி குறிப்பிட்டீர்கள் அல்லவா, சித்தார்த்சேட்டர்ஜி எனக்கு ஜூனியராக வேலை செய்தவர் தான் என்றார். நாங்கள் சித்தார்த் சேட்டர்ஜியைப் பற்றியும் ஐ.நா பற்றியும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது டென்னிஸ் ஹாலிடே, நீங்கள் இந்தியா குறித்து தொடங்கிவிட்டு பிறகு ஐ.நாவுக்குச் சென்றுவிட்டீர்களே, இந்தியா குறித்து பேசவில்லையே என்று குறிப்பிட்டார்.

 14. அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஐநா குறித்த ஆதாரங்களை சமர்ப்பிப்பதாகத் தான் எனக்கு வேலை பிரிக்கப்பட்டதாக திருமுருகன் கூறியிருந்தார். இங்கு ஐ.நா குறித்த ஆதாரங்களை பேசியதே தேவையில்லை என்று டெனிஸ் ஹாலிடே கூறியது எனக்கு மிகவும் அதிர்சியாக இருந்தது. அதற்கு பிறகு நான் தீர்ப்பாயம் ஏற்பாடு செய்தவர்களிடமும் அத்துடன் தொடர்புடைய மற்றவர்களிடம் பேசியபோது தான் எனக்குப் புரிந்தது, இந்த அமர்வில் ஐ.நா குறித்த விசாரணையே இல்லை.

 15. இந்தத் தீர்ப்பாயத்தை ஏற்பாடு செய்தபோது என்னென்ன குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன என்று தீர்ப்பாயத்தின் வலைத்தளத்தில் இருப்பதை பாருங்கள்.[135]


 16. இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களைத் திரட்டி, அவற்றை சமர்ப்பித்து வாதிடுவதற்கு தான் பலரையும் அங்கு அழைத்திருக்கின்றனர். இனப்படுகொலையின் பங்காளிகள் என்ற வகையில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிரான ஆதாரங்களைத் தான் அங்கு எதிர்பார்த்திருக்கின்றனர். ஐ.நா.வின் பங்கு குறித்து இந்த அமர்வில் குற்றம் சுமத்தப்படவும் இல்லை; ஆதாரங்களை அளிக்க யாரையும் அழைக்கவும் இல்லை. இந்தியா குறித்த ஆதாரங்களை நான் திரட்டாமல் இருப்பதற்கு திருமுருகன் கையாண்ட மிக மோசமான அயோக்கியத்தனமான நாடகம் தான், ஐ.நா குறித்த வேலையினை எனக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறியது என்பது எனக்குப் புரிந்தது.

 17. இந்தியாவிற்கு எதிரான ஆதாரம் என்னும் பெயரில் திருமுருகன் சமர்ப்பித்த இந்திய அரசின் தற்காப்பு (Defence Argument) வாதத்தைப் பற்றி சிறிது நேரத்திற்கு பிறகு பேசுகின்றேன். முதலில், ஐ.நா. குறித்த வேலை என்று சொல்லி திருமுருகன் நடத்திய நாடகம் எவ்வளவு அயோக்கியத் தனமானது என்பதை முதலில் பேசுவோம்.

 18. திருமுருகன் ப்ரேமென் மக்கள் தீர்ப்பாயத்தில் ஐ.நா குறித்து நீங்கள் ஆதாரங்களை பதிவு செய்யுங்கள் என்று என்னிடம் ஜெயாவின் பெயரை பயன்படுத்தி பொய் சொல்லியிருக்கிறார் என்பது எனக்குத் அப்பொழுது தெரிந்தது. இதுபொய் என்றும், ஏன் இப்படி செய்தார் என்று நான் அப்பொழுது கேட்டிருந்தால், திருமுருகன் ஏதேனும்ஒரு நாடகம் நடத்தி, வேண்டுமென்று செய்யவில்லை என்பது போல் ஒரு நாடகத்தை அரங்கேற்ற முயல்வார் என்று தெரிந்ததால், இவர் தவறானவர் என்றால் தொடர்ச்சியாக தவறுகள் செய்வார். அப்பொழுது அவருடைய செயல்பாடுகளின் அடிப்படையில் முடிவுகளையும் ஆதாரங்களையும் வைத்து அம்பலப்படுத்துவோம் என்று நான் முடிவு செய்திருந்தேன்.

 19. அதற்குப் பிறகு தொடர்ச்சியாக ஈழவிடுதலைக்கு எதிரான அவரது நகர்வுகள், செயல்பாடுகள் மிகத்தெளிவாக அவரை அடையாளம் காட்டின. அவற்றைப் பற்றி நான் தொடர்ச்சியாக இக்கடிதத்தில் பேசத் தான் போகின்றேன். அதற்கு முன்பாக இவர் கூறிய பொய்யினுடைய தன்மை எத்தகையது, இது எவ்வளவு நயவஞ்சகமான செயல் என்பதையெல்லாம் நாம் பார்ப்போம். இவர், ஜெயாவின் பெயரைப் பயன்படுத்தி அந்தப் பொய்யைச் சொல்லியிருந்தார் என்பதால் ஜெயாவிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம் என்று நான் கருதினேன். ஆனால், முதலிலேயே ஜெயாவிடம் கேட்காமல் இவர் தொடர்ச்சியாக தவறு செய்கிறார் என்னும் நிலையில் அவரிடம் கேட்பது நல்லது என்பதால் காத்திருந்தேன்.

 20. இந்த ஆண்டு 2015, ஏப்ரல் மாதத்தில் தோழர் ஜெயாவிடம் பேசினேன். அப்பொழுது அவர் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டார். ஜூட் மற்றும் விராஜ் உள்ளிட்டவர்கள் இந்தியா குறித்து தான் ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டுமென்று விரும்பினார்களே தவிர, ஐ.நா குறித்து சமர்ப்பிக்க வேண்டும் என்று விரும்பவில்லை என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். அதற்குப் பிறகு அவர் தெரிவித்த தகவல், ஐ.நா குறித்து திருமுருகன் என்னிடம் பேசவே இல்லை என்று மிக உறுதியாக தெரிவித்தார்.

 21. ஒருபுறம், தோழர் ஜெயா உறுதியாக திருமுருகன் ஐ.நா. குறித்து தன்னிடம் பேசவில்லை என்று மறுத்து விட்டார். அப்படியானால், ஐ.நா குறித்த விசாரணை இருக்கிறது என்று இவர் கூறியிருப்பது குறித்து அந்த தீர்ப்பாயத்தினை ஏற்பாடு செய்த தோழர்களிடமும் பேசி உறுதி படுத்தி விடுவோம் என்று விராஜிடம் 2015 ஏப்ரலில் பேசினேன். விராஜூம் தெளிவாகவே குறிப்பிட்டார், நாங்கள் ஐ.நா குறித்து விசாரணை நடத்துவதற்கு எண்ணவில்லை. நீங்கள் இந்தியா குறித்து தான் ஆதாரங்கள் கொடுக்க வேண்டும் என்று விரும்பினோம். அதற்காகத் தான் உங்களை அழைத்திருந்தோம் என்று குறிப்பிட்டார்.

 22. ஆக, ஐ.நா குறித்த ஆதாரங்களை நீங்கள் தொகுத்தால் போதுமானது என்று திட்டமிட்டு திருமுருகன் கூறியது, இந்தியா குறித்த ஆதாரங்களை நான் தொகுத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் என்று புரிகிறது. இல்லாத ஒரு வேலையை செய்யச் சொன்னதே எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை செய்யாமல் இருப்பதற்காகத் தான்.

 23. இது இத்துடன் முடியவில்லை. நான் பிறகு பிரபுகண்ணனிடமும் பேசினேன். பிரபுகண்ணன் மிகத்தெளிவாக இன்னொரு விடயத்தைச் கூறினார். அது என்னவென்றால், இந்தத் தீர்ப்பாயத்தில் இந்தியாவிற்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்காக உங்களை அழைத்திருந்தார்கள். உங்களுக்கு உடல்நிலையில் சிக்கல் இருப்பதால் துணைக்கு வருவதற்குத் தான் திருமுருகனை ஏற்பாடு செய்திருந்தார்கள். திருமுருகன் உங்களுடன் வந்தால் கூட நீங்கள் தான் இந்தியா குறித்த ஆதாரங்களை திரட்டுகிறீர்கள் என்று தான் ஜூட், விராஜ் உள்ளிட்டவர்கள் தொடங்கி, நாங்களும் கூட அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தோம். இப்படிப்பட்ட குழப்பம் நடந்திருப்பதே எங்களுக்குத் தெரியாது. திருமுருகன் இப்படி செய்தது ஏன் என்றும் புரியவில்லை என்று பிரபுகண்ணன் கூறினார்.

 24. அப்படியென்றால், திருமுருகன் திட்டமிட்டு பிரபுகண்ணனை இந்த உரையாடலில் இருந்து நீக்கிவிட்டு, தான் ஜெயா தோழரிடம் எல்லாம் பேசிவிட்டது போல் என்னிடம் பல்வேறு பொய்களை சொல்லி வந்திருக்கிறார். இதன் மூலம் இந்தியா குறித்த ஆதாரங்களை திரட்டும் வேலை நடைபெறாமல் இருப்பதை முழுமூச்சாக செய்து வந்திருக்கின்றார்..

 25. இதற்குப் பிறகு இரண்டாம் கட்டமாக இன்னொரு வேலையையும் செய்தார். நீங்கள் அதையும் கவனியுங்கள். நவம்பர் 28-ம் தேதி நான் அவரிடம், இந்தியா குறித்து நீங்கள் என்ன ஆதாரங்களை திரட்டியிருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு தனக்கு நேரமில்லை என்று திருமுருகன் கூறினார். பிறகு நான் செய்கிறேன் என்று அவரிடம் கூறினேன் என்று பத்தி 282 ல் குறிப்பிட்டேன். பிறகு, எனது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது குறித்தும் பத்தி 283 ல் இருந்து 288 வரை கூறியிருந்தேன். இந்தியா குறித்த வேலையினை நான் தொடங்க இருக்கும் போது எனது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது என்பது, நான் இந்தியா குறித்த வேலையினை செய்கிறேன் என்பது திருமுருகனுக்கு மட்டும்தான் அப்பொழுது தெரியும். நாங்கள் இருவரும் 28ம் தேதி அன்று நேரில் சந்தித்தபோது தான் இதனை பேசினோம். இந்தியா குறித்த வேலையை நான் செய்கிறேன் என்று போனில் கூறவில்லை. 29ம் தேதி அன்று மாலையில் தான் இன்னும் சில தோழர்களுக்கு தெரியும். அப்படியென்றால் எனது இணைய இணைப்பை துண்டிப்பதற்கு திருமுருகன் தான் தகவல் கொடுத்திருப்பார் என்று எனக்கு எண்ணத் தோன்றுகின்றது. ஏனென்றால், நவம்பர் 29, 30, டிசம்பர் 1 ஆகிய நாட்களில் எனக்கு என்னுடைய வீட்டில் இணைய இணைப்பு வேலை செய்யவில்லை, ஆனால் திருமுருகனுக்கு வேலை செய்து கொண்டிருந்தது. அவரும் இந்தியா குறித்து வேலை செய்வதாகக் கூறினார், அவருக்கு இணைய இணைப்பு துண்டிக்கப்படவில்லை. ஆனால் இந்தியா குறித்து நான் வேலை செய்ய முயன்ற பொழுது என்னுடைய இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த நாள் நான் வேறு இடங்களில் சென்று வேலை செய்யலாம் என்று சென்ற போது என்னோடு திருமுருகனும் இருந்தார். அந்த நேரங்களிலும், நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்பொழுதும் திருமுருகனின் இணைய இணைப்பு, நான் அவரது அலுவலகத்தில் இருந்த நேரத்தில் துண்டிக்கப்பட்டிருந்தது மற்ற நேரங்களில் வேலை செய்தது. அப்படியானால், இணைய இணைப்பை துண்டிப்பது என்பது நான் இந்தியா குறித்த ஆதாரங்களை திரட்டி விடக் கூடாது என்னும் ஒரு நோக்கம் மட்டும் தான் இருந்திருக்க முடியும்.

 26. அப்படியென்றால், திருமுருகன் மிகத்தெளிவாக இந்தியா குறித்த ஆதாரங்கள் அங்கு சமர்ப்பிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான் இவ்வளவு வேலைகளையும் செய்திருக்கிறார் என்று தெரிகிறது. இந்த நயவஞ்சக செயல், எவ்வளவு மோசமானது, அயோக்கியத்தனமானது என்பதை நாம் 2008-2009ல் நடந்த சில சம்பவங்கள் மூலம் புரிந்து கொள்வோம்.

  2.1.9.1. கருணாநிதியும், திருமுருகனும்.

 27. 2008-லிருந்து தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் ஈழத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த இனப்படுகொலை போரை நிறுத்தக்கோரி பெருமளவில் நடைபெற்றன அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வைத்த கோரிக்கை போரை நிறுத்து என்பதாகத்தான் இருந்தது. அப்பொழுது கருணாநிதி அதனை திசைதிருப்பும் விதமாக அதாவது அந்த போர் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற நோக்கோடு செய்த செயல் என்னவென்றால் அங்கு போரில் காயம்படும் மக்களுக்கு மருத்துவ பொருட்களுக்காக நீங்கள் நன்கொடைகளை கொடுங்கள் என்று தமிழக மக்களிடம் அவர் கூறினார்.

 28. உடனடியாக மக்களும் பெருமளவில் முன்வந்து நன்கொடைகளை வழங்கினார்கள். இதில் இரண்டு விடயங்கள் இருக்கின்றன, முதல் விடயம் இவர் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க விரும்பினாரா என்பது தான், ஏனென்றால் அதற்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து உணவு, மருத்துவப் பொருட்களை அனுப்புவதற்காக நெடுமாறன் ஐயா முயற்சி மேற்கொண்ட பொழுது முதல்வராக இருந்த கருணாநிதி அதை தடுத்தார். உணவுப் பொருட்கள் அனுப்பக் கூடாது என்று அந்த கப்பலுக்கான அனுமதியை மறுத்தார், அப்பொழுது நெடுமாறன் ஐயா உண்ணாவிரதம் இருந்ததெல்லாம் கூட உங்களுக்கு நினைவிலிருக்கும்.

 29. அப்படி உணவுப் பொருட்கள் அனுப்ப விரும்பாத கருணாநிதி, மருந்துப் பொருட்கள் அனுப்ப விரும்பாத கருணாநிதி இங்கு மருந்துப் பொருட்கள் அனுப்ப பணம் கொடுங்கள் என்று கூறுகிறார் என்றால், போரை நிறுத்து என்று எழும் கோரிக்கையை கைவிட வைப்பதற்காக தான். மக்கள் வைக்கும் அடிப்படை கோரிக்கையே போரை நிறுத்து என்பது தான். அதாவது அங்கு ஒருவன் வெட்டிக்கொண்டிருக்கிறான், சுட்டுக்கொண்டிருக்கிறான், கொலை செய்துக்கொண்டிருக்கின்றான் அப்படி கொலை செய்பவனை நிறுத்துங்கள் என்று மக்கள் கோரிக் கொண்டிருக்கின்றார்கள், கருணாநிதி என்ன செய்தார் என்றால் அவன் வெட்டுவதை பற்றி நான் ஒன்னும் பேச முடியாது, அவன் கொல்வதை பற்றி எதுவும் பேச முடியாது, வெட்டுப்பட்டு வருபவனுக்கு மருந்தினை நான் கொடுக்கின்றேன் என்று அந்த வெட்டுவதையும், கொல்வதையும் தொடர்ந்து நடைபெறுவதற்காக இங்கே இந்த கோரிக்கையை அவர் வராமல் பார்த்துக் கொண்டார்.

 30. அவருடைய அந்த வேலை என்பது அங்கு இனப்படுகொலை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காகத் தான் இப்படி திசை திருப்பினார். அதே போன்ற ஒரு வேலையை தான் திருமுருகனும் ப்ரேமனில் செய்தார்.இந்தியா குறித்த ஆதாரங்களை சமர்பிப்பதற்காக என்னை அழைத்த பொழுது நீங்கள் ஐ.நா. குறித்து வேலை செய்யுங்கள் என்று தோழர் ஜெயா சொல்லிவிட்டார் என்று கூறி, இந்தியா குறித்த வேலையை நான் பார்க்கக் கூடாது என்பதில் அவ்வளவு நயவஞ்சகமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு இந்தியா குறித்த ஆதாரங்களை நான் திரட்டுவதை தடுத்தார். இரண்டாவது கட்டமாக இணைய இணைப்பினை துண்டிக்கும் வரையிலும் சென்றார்.

 31. சரி இவர் சமர்பித்த ஆதாரமாவது இந்தியாவை குற்றம் சுமத்தியிருந்ததா என்று பார்த்தால் அதுதான் இல்லை தோழர்களே, அது முழுக்க முழுக்க இந்திய அரசு தரப்பின் வாதமாகத்தான் அங்கே சமர்பிக்கப்பட்டது. அப்பொழுது அந்த ப்ரேமன் தீர்ப்பாயத்தில் இந்தியாவையும் ஒரு குற்றவாளியென்று நிருபித்து தீர்ப்புவந்திருந்தால் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய, தற்பொழுது தொடர்ந்துக் கொண்டிருக்கும் இனப்படுகொலையை தடுப்பதற்கான அழுத்தமாக அது இருந்திருக்கும். ஆனால் திருமுருகன் இந்த இனப்படுகொலை தொடர்ந்துக் கொண்டிருப்ப்பது தொடர வேண்டும் என்று விரும்பியதால் தான் இந்தியாவிற்கு எதிரான ஆதாரங்கள் சமர்பிக்கப்படக் கூடாது என்று திட்டமிட்டு இந்த நயவஞ்சகச் செயலை செய்திருக்கிறார். இவர் சமர்பித்த ஆதாரம் என்ற பெயரில் இருக்கும் குப்பையை பார்ப்போம்.

  2.1.9.2. திருமுருகனின் இந்திய அரசு சார்பிலான வாதம்

 32. திருமுருகன் ஆதாரம் என்னும் பெயரில் சமர்ப்பித்த இந்திய அரசின் வாதத்தை இப்பொழுது பார்ப்போம். அவர் கொடுத்த அறிக்கையின் பக்கம் 1 ல் முன்னுரை இருக்கின்றது. முன்னுரையில், “இந்திய ஆளும் வர்க்கத்தின் சாதியப் பார்வையில் இருந்து இந்த விடயத்தை பேசப்போகிறோம்" என்று தொடங்குகின்றார்.


 33. இதில் இந்தியாவில் சாதிகளின் வரலாற்றுப் பின்னணி குறித்து இரண்டு பக்கங்களில் பேசுகின்றார். தமிழ்நாடும், இந்தியப் பார்ப்பனியமும் குறித்து ஒருபக்கம் அளவிற்கு பேசுகின்றார். தமிழகத் தமிழர்களும், ஈழத்தமிழர்களும் என்று இரண்டு பத்திகள் பேசுகின்றார். மலையகத் தமிழர்கள் பிரச்னை, ஒப்பந்தம், எதிர்வினைகள் குறித்து ஒன்றரை பக்கங்கள் பேசுகின்றார். விக்கிபீடியாவிலிருந்து காப்பி-பேஸ்ட் செய்து, கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து 2 பக்கங்களுக்கு மேல் பேசுகின்றார். மீனவர்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் குறித்து அரைபக்கம் பேசுகிறார். இந்திய இலங்கை ஒப்பந்தம், இந்திய அமைதிப்படையின் கொலைகள் என்று 4 பக்கங்களுக்குபேசுகின்றார். ராஜீவ்காந்தி கொலை, அந்த வழக்கு என்று ஒன்றரை பக்கங்கள் அளவிற்கு பேசுகின்றார். இப்படி 14 பக்கங்கள் முடிவுற்ற பிறகு தான் முக்கியமான பகுதி வருகின்றது. பக்கம் 15 ல் அவர் தனது வாதத்தைத் தொடங்குகின்றார். வாதத்தை இரு பிரிவுகளாக வைத்திருக்கின்றார். முதல் பகுதி இந்திய அரசின் நோக்கம், இரண்டாம் பகுதி இந்திய அரசின் செயல்பாடுகள்.

 34. இந்திய அரசின் நோக்கம் குறித்து அவர் கொடுத்திருக்கும் தலைப்பை பாருங்கள். Why India wanted to destroy LTTE & Eelam Nation. விடுதலைப் புலிகளையும், ஈழம் என்னும் தேசத்தையும் அழிக்க ஏன் இந்தியா விரும்பியது என்று குறிப்பிடுகின்றார்.

  இந்த வாக்கியத்தைப் படிக்கும் போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பேசியது போல் தோன்றுகின்றதா? நாங்கள் புலிகளை அழிக்கத் தான் உதவினோம்; மக்களைக் கொல்வதற்கு அல்ல என்று காங்கிரஸ்காரர்கள் பேசுவதைப் போலவே, திருமுருகனும் தனது வாதத்தை தொடங்குகின்றார். இனப்படுகொலை நடத்த விரும்பியது என்று குறிப்பிடாமல், புலிகளை அழிக்க விரும்பியது என்று குறிப்பிடுவதன் மூலம், இனப்படுகொலை என்று பேசிக்கொண்டிருப்பவர்களிடம், இந்தியா போர் என்ற அளவில் தான் பங்கேற்றது; இனப்படுகொலையில் அல்ல என்று கூறமுயல்கின்றார். தலைப்பிலேயே இனப்படுகொலையை போர் என்று சுருக்குபவர் அடுத்து பட்டியலிடும் காரணங்களை பாருங்கள்.


 35. அதிகாரத்தில் இருந்த பார்ப்பனர்கள், இந்திய அமைதிப் படையின் தோல்வி, ராஜீவ் கொலை, சோனியாவின் தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கம், முன்னேறிய ஈழ தேசம், தமிழ்நாட்டு தமிழர்களின் சமூக, அரசியல் வளர்ச்சியை கட்டுப்படுத்துதல் என்று 8 காரணங்களைப் பட்டியலிடுகின்றார். 8 காரணங்களை கூறியிருந்தாலும் பார்ப்பனர்களும், பார்ப்பனிய அதிகார வர்க்கமுமே முதன்மையாக அவர் முன்வைக்கின்றார்.

 36. ஆனால், மிக முக்கியமான காரணமான புவிசார் அரசியல் காரணங்களை (Geo political reasons) பேசாமல் தவிர்க்கின்றார். தீர்ப்பாயத்திற்கு வந்திருந்த நீதிபதிகள் அனைவரும் சர்வதேச அளவில் பெரும் அறிஞர்கள்; புவி சார் அரசியல் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்பவர்கள். அவர்களிடம் இந்தியாவிற்கு இனப்படுகொலையை நடத்துவதற்கான நோக்கம் புவி சார் அரசியல் சார்ந்தது என்று கூறியிருந்து அதற்கான தரவுகளையும் அளித்திருந்தால், மிக எளிதாக இந்தியாவின் நோக்கத்தைப் புரிந்து கொண்டிருப்பார்கள்.

 37. எங்கோ இருக்கும் அமெரிக்காவும், எங்கோ இருக்கும் இங்கிலாந்தும், இலங்கையில் இனப்படுகொலை நடத்துவதற்கு புவி சார் அரசியல் காரணமாக இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இங்கேயே இருக்கும் இந்தியாவிற்கு புவி சார் அரசியல் காரணம் என்றால் நீதிபதிகளுக்கு புரியாமலா போயிருக்கும்?

 38. அல்லது திருமுருகன் தான் புவி சார் அரசியல் குறித்து அறியாதவரா? புவி சார் அரசியல் குறித்து அறிந்திருந்தும், திருமுருகன் அதனை காரணமாக முன் வைக்காததன் நோக்கம், இந்தியாவிற்கு எதிராக நீதிபதிகள் தெளிவான முடிவினை எட்டிவிடக் கூடாது என்பது தவிர என்ன இருக்க முடியும்? ஒருவர் என்ன பேசுகிறார் என்பதை விடவும், எதை பேச மறுக்கிறார் என்பதிலிருந்து அவருடைய அரசியலையும், நோக்கத்தையும் புரிந்து கொள்ள முடியும். புவிசார் அரசியல் குறித்து, இங்கு நீட்டி முழக்கி முழங்கி விட்டு, முக்கியமான இடத்தில் அதை பேசாமல் விடுவது என்பது இந்தியாவைக் காப்பதற்கு அன்றி வேறு எதற்கு தோழர்களே? நீதிபதிகள் இந்தியா குறித்து எந்த முடிவிற்கும் வந்து விடக் கூடாது என்று பார்ப்பனர்கள், பார்ப்பனியம் என்று குழப்பி விட்டு, இந்தியாவை காப்பாற்றி விட்டார்.

 39. அடுத்ததாக இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து அவர் பேசுவதை பாருங்கள்

 40. பக்கம் 15 ல் இருக்கும் 9 தகவல்களையும் பாருங்கள். இந்தியா கண்காணிப்பு கருவிகள் கொடுத்தது; இந்தியா பயிற்சி கொடுத்தது; அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின், ராணுவ பயிற்சிகளுக்கும், ஆயுதங்கள் கொடுத்ததற்கும், கப்பல் கொடுத்தற்கும் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; இந்தியா ஒரு கப்பலும் கொடுத்தது என்று பட்டியலிடுகின்றார். இந்தியா என்னன்ன ஆயுதங்கள் கொடுத்தது என்று கூறாமல், அமெரிக்கா ஆயுதம் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; சீனா கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதைத் தான் முதன்மையான வாதமாக வைக்கின்றார். இந்த வாதமும் கூட இந்திய அரசு ஆதரவு அதிகாரிகள் பேசும் வார்த்தைகள் என்பதை நீங்கள் கவனித்தீர்களா தோழர்களே? தனது பகுதி என்று கருதப்படும் பகுதியில் வேறு நாட்டு ராணுவ உதவி வருகிறதே என்று இந்திய அரசு அதிகாரிகள் அலறுவது போலவே திருமுருகன் அலறுகிறார்.

 41. அமெரிக்காவின் ராணுவ பங்களிப்பை இந்தியா எதிர்க்கவில்லை என்று கூறுவது, இந்தியா ராணுவ ரீதியாக தாக்குதல் ஆயுதங்களை கொடுக்கவில்லை; அமெரிக்கா தான் கொடுத்தது என்று மறைமுகமாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றார்.


 42. இந்தியா அளித்த கப்பலை பற்றி ஒருவரியில் குறிப்பிடும் போது கூட தனது இந்திய அரசின் எஜமானர்களை காக்கும் விதமாகத் தான் பேசுகின்றார். வரிசை என் 8 ல்இந்தியாகொடுத்த கப்பல் கடல்புலிகளை எதிர்கொள்ள (counter) பயன்பட்டது என்று கூறுகின்றார். ஆனால், உண்மை வேறு. அந்தக் கப்பல் கடல்புலிகளின் கப்பலைஅழிக்க (destroy) பயன்பட்டது. Counter என்னும் வார்த்தைக்கும், Destroy என்னும் வார்த்தைக்கும் மிகப்பெரும் வித்தியாசம் இருக்கின்றது தோழர்களே.


 43. தமிழர்கள் தனித்த தேசிய இனத்தவர் (Ethnic Nationalities) என்று குறிப்பிடாமல், மதச்சிறுபான்மையினர் (Religious Minorities) என்று குறிப்பிட்ட அமெரிக்க தீர்மானம் எப்படி அயோக்கியத் தனமானதோ அதே போன்று தான் திருமுருகனின் இந்த வார்த்தை பயன்பாடும் தோழர்களே.

 44. Counter என்னும் வார்த்தை இருதரப்புக்கு இடையில் சண்டை நடைபெறும் போது ஒரு தரப்பு இன்னொரு தரப்பை எதிர்கொள்ளும் நிலையை குறிப்பது. அந்தச் சண்டையின் முடிவில் வேண்டுமானால் அழிப்பு (destroy) நிகழலாம். ஆனால், Counter என்னும் வார்த்தையை திருமுருகன் பயன்படுத்தியதன் மூலம், புலிகள் இந்திய இலங்கைப் படைகளை தாக்க வந்தார்கள்; அப்பொழுது அதனை counter செய்வதற்காக இந்தக் கப்பல் பயன்படுத்தப்பட்டது என்று கூறவருகின்றார். மீண்டும் அவர் போரில் தான் இந்தியா உதவியது என்னும் தனது வாதத்தை இங்கும் தொடர்கின்றார். ஆனால், உண்மையில், புலிகளின் கப்பல் இந்திய-இலங்கை படைகளை எதிர்கொள்ளாமல், சர்வதேச கடல் எல்லையில் பாதுகாப்பாக நிலைகொண்டிருந்தது. இலங்கைத் தீவில் இருந்து 1860 கடல் மைல்கள் விரட்டிச்சென்று தான் புலிகளின் கப்பல் அழிக்கப்பட்டது. இனப்படுகொலையை போர் என்று திரிக்கும் திருமுருகன், இந்திய அரசை காப்பதற்காகத்தான் அப்படி பேசுகிறார் என்று புரிகின்றதா தோழர்களே?

 45. அடுத்தடுத்த பக்கங்களிலும் இதுபோன்ற வாதங்கள் இந்திய அரசை காப்பாற்றும் நோக்கில் தான் இடம் பெற்றிருக்கின்றன. இதுவரை திருமுருகன் இந்த ஆவணத்தை (?) உங்களிடம் கொடுக்கவில்லை. இப்பொழுது, நான் பொதுவெளியில் இதனை வெளியிட்டிருக்கின்றேன். நீங்கள் இதனை முழுமையாக படித்துப்பார்த்து திருமுருகனின் உண்மை முகத்தை அறிந்துகொள்ளுங்கள்.

 46. தீர்ப்பாயத்திற்கு வந்திருந்த நீதிபதிகள் ஒவ்வொரு விடயத்தையும் முழுமையாக சரிபார்த்த பின்பே ஏற்றுக்கொண்டனர். ஒரு தகவலைக் கூறி அதற்கான ஆதாரம் என்று ஏதேனும் இணையச் சுட்டியை கொடுத்தால் கூட, அவர்கள் அந்த இணையதளத்திற்கு சென்று, குறிப்பிட்ட தகவல் அதில் இருக்கிறதா என்று சரி பார்த்தனர். தவறான தகவல்கள் எதனையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. ஆனால், திருமுருகன் கொடுத்த இந்த ஆவணத்தில் எவ்வளவு தவறான தகவல்கள், தவறான தேதிகள் இருக்கின்றது என்று பாருங்கள், 2008 ல் நடைபெற்ற சம்பவத்தை 2009 ல் நடைபெற்றது என்று பேசுவது போன்ற தவறான தகவல்கள் இருக்கின்றன என்பதையும் நீங்களே பாருங்கள். அப்படிப்பட்ட தவறான தகவல்களை அவர் தவறுதலாக கொடுத்திருப்பார் என்று எண்ணுகின்றீர்களா? அல்லது இந்தியாவின் பங்கு குறித்து நீதிபதிகள் உறுதியான முடிவிற்கு வந்துவிடக்கூடாது என்று உள்நோக்கத்தோடு தவறான அளிக்கப்பட்டனவா என்பதை நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.

 47. இந்த ஆவணம் இப்படிப்பட்ட தவறான தகவல்களோடும், தவறான வாதங்களோடும், முக்கியமான தகவல்கள் இல்லாமலும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்னும் நோக்கில் தான், நான் இந்தியாவின் பங்கு குறித்த தகவல்களை திரட்டக் கூடாது என்று ஜெயா தோழரின் பெயரை பயன்படுத்தி பொய்சொல்லியிருக்கின்றார். இப்பொழுது சொல்லுங்கள் தோழர்களே. இப்படிப்பட்ட அயோக்கியத் தனமான செயலை, ஈழவிடுதலைக்கு எதிரான செயலை செய்த இவர் ஈழவிடுதலையின் பால் நேர்மையாக நிற்பவரா? ஜெயா தோழரின் பெயரை பயன்படுத்தி பொய் சொல்லும் அளவிற்கு துணிந்துவிட்ட இவர் வாயிலிருந்து உண்மை வரப்போகிறதா என்ன? ஏற்கனவே 35 மனித நாட்கள் பிரச்சாரம் செய்துவிட்டு, பிரச்சாரமே செய்யவில்லை என்று உங்களையும் பொய் சொல்லச் சொன்னவர் இன்னும் என்னென்ன பொய்களை சொல்லியிருப்பார்?

 48. இப்படிப்பட்ட அயோக்கியத் தனமான செயலை தான் செய்யும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் இது தெரிந்துவிடக்கூடாது என்னும் நோக்கில்தான், பேராசிரியர் ராமு மணிவண்ணன் தீர்ப்பாயத்தின் நிகழ்வுகளுக்கு வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றார். ராமு மணிவண்ணன் வந்தால் எங்கள் உயிருக்கு ஆபத்து என்று ஒரு பெரிய குண்டை போட்டவுடன் ஜூட் லாலும், விராஜும் வேறு வழியின்றி அவரை வரவேண்டாம் என்று தெரிவித்துவிட்டனர்.


 1. நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஏற்பாடு செய்பவர்கள், மக்கள் தீர்ப்பாயத்திற்கான அழைப்பு கொடுக்கும்போதே, யார் மீதெல்லாம் வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றதோ, அவர்கள் தரப்பில் இருந்து வாதிடுவதற்கும் அழைப்பும் வாய்ப்பும் வழங்குவார்கள். அதன்படி 2010 ல் டப்ளினில் நடைபெற்ற தீர்ப்பாயத்தில் இலங்கை அரசிற்கும் தம்முடைய தரப்பை எடுத்துரைத்து வாதிட அழைப்பு அனுப்பினார்கள். இலங்கை அரசுத் தரப்பிலிருந்து இல்லாமல், இந்திய அமைதிப் படையில் இருந்த கப்பல் படை அதிகாரி வாசன் (Commodore R.S. Vasan) இலங்கை அரசின் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு வாதிட்டார். 1. அதேபோல் 2013 லும் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு அனுப்பினார்கள். ஆனால், நான்கு நாடுகளுமே அதிகாரப்பூர்வமாக யாரையும் அனுப்பவில்லை. மக்கள் தீர்ப்பாயத்திற்கு பதிலும் அனுப்பவில்லை. இந்தச் சூழலில், குற்றம் சுமத்தப்படும் தரப்பின் வாதங்களும் கேட்கப்பட வேண்டும் என்னும் அடிப்படையில், Amicus Curiae (நடுநிலை அறிவுரையாளர்) யாக Dr. Iain Atack அவர்களை தீர்ப்பாயம் நியமித்தது. அவர் Amicus Curiae ஆக இருந்தாலும் கூட, நான்கு நாடுகளின் Defence வாதங்களுக்காகத்தான் நியமிக்கப்பட்டார். அவருடைய வாதங்களும் நான்கு நாடுகளின் தற்காப்பு (Defence) வாதமாகத்தான் இருந்தது. (Page 13) [136] 1. Amicus Curiae இந்தியாவின் சார்பில் வைத்த முதல் வாதத்தைப் பாருங்கள் தோழர்களே. விடுதலைப் புலிகள் இயக்கம், இந்திய சட்டப்படி தடை செய்யப்பட்ட இயக்கம் என்று கூறிவிட்டு, இலங்கையில் நடைபெற்றது விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக நடைபெற்ற போர் என்று இந்திய அரசின் சார்பில் Amcus Curiae யால் வாதிடப்பட்டது. திருமுருகன் வைத்த வாதத்தை மீண்டும் நினைவுப்படுத்திப்பாருங்கள் தோழர்களே. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியா விரும்பியது; அங்கு போர் மட்டுமே நடைபெற்றது என்பதைத்தான் திருமுருகனுடைய ஆவணத்தின் முக்கிய பகுதியான 14 ம் பக்கம் பேசுகின்றது. Amicus Curiae யின் வாதமும், குற்றம் சுமத்துபவரின் வாதமும் எப்படி தோழர்களே ஒரே அலைவரிசையில் இருக்க முடியும்? 1. ஜெயலலிதாவின் வழக்கில் பவானி சிங் செயல்பட்டது போல், தீர்ப்பாயத்தில் திருமுருகன் செயல்பட்டிருக்கின்றார். இந்திய அரசிற்கு எதிராக வாதிடுவதாக வெளியில் காட்டிக்கொண்டு, இந்திய அரசை காக்கும் வாதத்தைதான் திருமுருகன் தீர்ப்பாயத்தில் வைத்திருக்கின்றார். 2010 ல் இலங்கை அரசின் வாதத்தை வைப்பதற்காக வாசன் அனுப்பப்பட்டார். 2013 ல் இந்திய அரசின் வாதத்தை வைப்பதற்காக திருமுருகன் அனுப்பப்பட்டிருக்கின்றார். இந்திய உளவுத்துறை எந்தளவிற்கு ஊடுருவியிருக்கிறது என்பதை பாருங்கள் தோழர்களே. எந்த பாதிக்கப்பட்ட இனத்தின் நியாயத்திற்கும், நீதிக்காகவும் ஒரு இயக்கம் போராடியதோ, அந்த இயக்கத்தை வைத்தே அதே இனத்தின் குரல்வளையை ஏறி மிதிக்கும் செயலை நடத்தியிருக்கின்றது இந்திய உளவுத்துறை. தன்னுடைய சுயலாபத்திற்காக இப்படி அடிப்படை நோக்கத்தையே காவு கொடுக்கத் தயாராக இருக்கும் திருமுருகன் போன்ற அறமற்ற நபர்கள் இருக்கும் வரை இந்திய உளவுத்துறை எவ்வித இடையூறும் இன்றி, ஈழப்போராட்டத்தை நசுக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டுதானிருக்கும்.

 2. அன்றைய தினம் எங்களுடைய வாதங்கள் முடிவுற்று, மாலை நீதிபதிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றோம். அங்கு ஜுட், விராஜ் உள்ளிட்ட அனைவருமே இருந்தனர். நீதிபதிகள் கருத்தரங்கு அறை ஒன்றில் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தனர். அவ்வப்பொழுது ஜூட் வெளியில் வந்து , அங்கிருந்த சாட்சிகளிடம் கூடுதல் தகவல்கள் ஏதும் தேவை என்றால் வாங்கிச் சென்று கொண்டிருந்தார். எங்களிடமும் வந்து சுருக்கமாக ஒருபக்க அளவில் இந்தியா குறித்த தகவல்களை கொடுங்கள் என்றார். சில நிமிடங்களில் அதனை தயார் செய்து விட்டு ஜூடிடம் அதனைக் காண்பித்தேன். சரி நான் இதனை கொண்டு சென்று நீதிபதிகளிடம் கொடுக்கிறேன் என்று கூறினார். அப்பொழுது அவரிடம்நான், யஸ்வந்த் சின்ஹாவின் பாராளுமன்ற உரை முக்கியமானது; நீதிபதிகள் அதை முழுமையாக பார்க்கவில்லை; எனவே அந்த காணொளியை இங்கு அவர்களிடம் காண்பியுங்கள் என்று கூறினேன். அதற்கு ஜூட், நான் காண்பிக்கின்றேன் அந்த காணொளியையும், வேறு ஏதேனும் ஆவணங்கள் இருந்தால் அவற்றையும் கொடுங்கள் என்று கூறினார்.

 3. அவர் கொடுத்த பென்ட்ரைவில், நான் யஷ்வந்த் சின்ஹாவின் காணொளி, [137], OCHA அறிக்கை [138], பிரணாப் முகர்ஜியின் அறிக்கை [139] ஆகியவற்றையும் copy செய்து கொடுத்தேன். அப்பொழுது திருமுருகன், “Peace Talks period பத்தி ஒரு file இருக்கிறது; அதையும் copy செய்து கொடுத்துவிடுங்கள்.” என்று கூறினார். Indian Support to the Srilankan Regime: From Peace Talks to End of War என்னும் தலைப்பில் அவரது மடிக்கணினியில் இருந்த இருந்த அந்த fileஐ copy செய்து கொடுத்துவிட்டு, “இதை நேற்று அனுப்பவில்லையா திரு?” என்றுகேட்டேன். என்னுடைய மின்னஞ்சலில் இருந்து அவர் தயாரித்தவற்றை அவரே தான் அனுப்பினார். அனைத்தையும் அனுப்பிவிட்டார் என்று நினைத்துக்கொண்டிருந்த போது, இன்னொரு file இருக்கிறது என்று வாதங்கள் முடிவுற்ற பின்பு ஒரு fileஐ கொடுக்கின்றார். இவர் தொடர்ச்சியாக தவறு செய்து கொண்டிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். ”ரதீஷ் data அனுப்புறதுக்கு லேட்டாயிருச்சு. அதசேர்த்து காலையில எடுத்துட்டு வந்தேன். ஜுடிடம் அங்கு கொடுக்கமுடியவில்லை” என்று திருமுருகன் கூறினார். சிறிது நேரத்திற்கு பிறகு நாங்கள் எங்கள் அறைக்குச் சென்றோம். (தீர்ப்பாயத்தில் வாதங்கள் நிறைவுற்ற பின்பு கொடுக்கப்பட்ட இந்த file மின்னஞ்சலில் இல்லாததால், என்னால் இங்கு இணைக்க இயலவில்லை.)

  2.1.10. முதல்கட்ட தீர்ப்பு

 4. டிசம்பர் 10 ஆம் தேதியன்று ப்ரேமனில் முதல்கட்ட தீர்ப்பு வெளியானது அதில் இந்தியாவும் ஈழ இனப்படுகொலையில் குற்றவாளியாக இருக்கும் என்று நம்புகின்றோம். ஆனால் இந்தியா குறித்த தீர்ப்பை நாங்கள் நிறுத்தி வைக்கின்றோம், ஏனெனில் கூடுதல் ஆதாரங்கள் தேவைப்படுகின்றன என்பதாக தீர்ப்பினை வழங்கியிருந்தார்கள் [140]


 5. இங்கிலாந்து குறித்தும் அமேரிக்கா குறித்தும் வெளிப்படையாக இவர்கள் இனப்படுகொலையில் பங்காளிகள் என்று அறிவித்த இந்த தீர்ப்பாயம் இந்தியா குறித்து அப்படி அறிவிக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது, அதற்கு காரணம் திருமுருகன் என்ற போதிலும் கூட இதனை சரிசெய்வதற்கு அடுத்ததாக என்ன செய்யலாம் என்பது குறித்து சிந்தித்தேன். அப்பொழுது ஜூட் எங்களிடம் நீங்கள் சென்று தீர்பாயத்தினுடைய செயலாளர் கியானியிடம் பேசுங்கள் என்று கூறினார். நாங்களும் மதிய உணவின் போது கியானியிடம் பேசினோம், அப்பொழுது கியானி கூறியது நாங்கள் இந்தியா குற்றவாளியில்லை என்று தீர்ப்பு கூறவில்லை. ஆனால் இன்னும் கூட ஆதாரங்கள் கூடுதலாக இருந்தால் அவற்றை ஆராய்ந்துவிட்டு இன்னொரு அமர்வில் அது குறித்து தீர்ப்பு வழங்க இயலும், அதனால் நீங்கள் ஆதாரங்களை திரட்டி எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் இன்னொரு அமர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க முடியும் என்று கூறினார்.

 6. அவர் பேசும் போது மிகத் தெளிவாகவே குறிப்பிட்டார். நீங்கள் கொடுத்த ஆதாரங்கள் போதுமானவை அல்ல, இவற்றை வைத்துக் கொண்டு இந்தியாவின் மீது குற்றம் சுமத்தி நாங்கள் தீர்ப்பு வழங்க முடியாது. அதனால் கூடுதல் ஆதாரங்கள் தேவைப்படுகின்றன என்று மிகத்தெளிவாகவே குறிப்பிட்டார்.

 7. திருமுருகன் உங்களிடம் பல்வேறு தருணங்களில் தன்னுடைய தவறை மறைப்பதற்காக கூறக் கூடிய ஒரு வார்த்தை உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அது “எங்களுக்கு போதுமான நேரம் கொடுக்கப்படவில்லை” என்று கூறியிருப்பார். நேரம் கொடுக்கப்படவில்லை என்றாலும் கூட எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று தான் கியானியும் எங்களிடம் பதிவு செய்தார் அதற்கு பின்பு ஜூடிடம் அன்று மாலை சந்தித்து பேசிக் கொண்டிருந்த பொழுது, ஜூட் குறிப்பிட்டார் நீங்கள் கியானியிடம் பேசியதை ஒரு மின்னஞ்சலாக எனக்கு அனுப்பி வையுங்கள் நான் அதனை அவருக்கு அனுப்பி வைக்கின்றேன். அதனால் அடுத்த அமர்வு தொடர்வதற்கான ஒரு வழியாக இது இருக்கக் கூடும் என்று கூறினார்.

 8. அடுத்த நாள் திருமுருகன் முதலில் வளர்மதிக்கு ஒரு கடிதம் எழுதினார், அதில் கியானியிடம் பேசியது சுருக்கமாக குறித்து இந்த கடிதத்தை அப்படியே அனுப்பலாமா என்று கேட்டார்.


 9. வளர்மதி அதில் சில வார்த்தைகளை மாற்றி அனுப்பியிருந்தார் அதற்கு பிறகு டிசம்பர் 11 ஆம் தேதியன்று என்னுடைய மின்னஞ்சலில் இருந்து ஜூடிற்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பினோம் அந்த மின்னஞ்சலின் கடைசி பத்தியில் கியானிக்கான கடிதமும் அதில் இருந்தது, அதில் கடைசி பத்தியில் மிகத் தெளிவாக அவர் கூறியதை வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டிருந்தோம். அவர் கூறியது என்னவென்றால் நீங்கள் கூடுதல் ஆதாரங்களை திரட்டித் தாருங்கள் இந்த ஆதாரங்கள் போதுமானவை அல்ல என்று கூறினார். அதனை நாங்கள் எப்படி குறிப்பிட்டிருந்தோம் என்றால் உங்களின் அறிவுத்தலின்படி கூடுதல் தகவல்களை தொகுக்கத் தொடங்கியிருக்கின்றோம் என்று எழுதியிருந்தோம்.


 10. based on your advise we have started to organise additional information, that might be required for your analysis என்று அந்த கடிதத்தை அனுப்பியிருந்தோம், இது ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தான். இந்தியா குறித்து ஆதாரங்களை முழுமையாக அங்கு சமர்பிக்கவில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம் இது.

 11. இந்த ஒப்புதல் வாக்குமூலத்தையே திருமுருகன் தான் வளர்மதியுடன் பேசி அதை உருவாக்கியும் அனுப்பினார் ஏனெனில் கியானி மிகத்தெளிவாக குறிப்பிட்டு விட்டார் நீங்கள் கொடுத்த ஆதாரங்கள் போதுமானவை இல்லையென்று, ஆக திருமுருகன் இந்த தீர்ப்பாயத்தில் என்ன நடைபெறக் கூடாது என்று விரும்பினாரோ அது நடைபெறவில்லை, அதாவது இந்தியா குறித்து, இந்தியாவை குற்றவாளியென்று ஒரு தீர்ப்பு வந்துவிடக் கூடாது என்று விரும்பினார்.

 12. அதனை தான் ஒவ்வொரு படியாக செயலாற்றி வந்தார் முதலில், உமர் தனியாக செல்ல முடியாது அவர் அறுவைச்சிகிச்சை மேற்கொண்டிருப்பதால் பெட்டி தூக்க முடியாது நானும் கூட வருகிறேன் என்று கூறினார், அடுத்தது என்னிடம் உங்களை ஐ.நா. பற்றிய வேலையை செய்ய கூறினார்கள் என்று தோழர் ஜெயாவின் பெயரை பயன்படுத்தி பொய் கூறினார். அதற்கு பின்பு இந்தியா குறித்து நானும் வேலை செய்கிறேன் என்று கூறிய பொழுது என்னுடைய இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது. இவர் ஆதாரங்கள் என்ற பெயரில் இந்திய அரசின் வாதத்தை அங்கு சமர்பித்தார். அதனால் இந்தியா ஒரு குற்றவாளி என்று நீதிபதிகளால் ஒரு முடிவுக்கு வர இயலாமல் போய்விட்டது. இதனை திருமுருகன் தான் விரும்பிய படி இந்திய அரசை காப்பாற்றும் வேலையை மிகச் சிறப்பாக தன்னுடைய நயவஞ்சக செயல்களின் மூலம் நிறைவேற்றிவிட்டார். இவர் ஈழ விடுதலையை சாத்தியப்படுத்தக் கூடிய வேலையை முன்னெடுப்பவர் என்று இனியும் நீங்கள் சொல்லப் போகிறீர்களா தோழர்களே? ஒரு ஆக்கபூர்வமான வேலையினை, முக்கியமான தோழர் ஒருவரின் பெயரை பொய்யாக பயன்படுத்தி, அந்த வேலை நடைபெறாமல் தடுத்து நிறுத்திய இவரா நேர்மையானவர் என்று கூறுகின்றீர்கள் தோழர்களே? தான் முழுமையாக ஆதாரங்களை அளித்து விட்டேன்; நேரமில்லாத காரணத்தால் தான் இந்தியாவும் இனப்படுகொலையில் பங்காளி என்று தீர்ப்பு வரவில்லை என்று உங்களிடம் பொய் கூறிய திருமுருகனின் முகத்தில், கியானிக்கு அனுப்பிய மின்னஞ்சலை தூக்கி எறியுங்கள் தோழர்களே. பெட்டி தூக்க வந்தவர் பெட்டி மட்டும் தூக்கியிருந்தால், இவ்வளவு பின்னடைவு ஏற்பட்டிருக்காது சிந்தியுங்கள் தோழர்களே. இத்துடன் இது முடிவுறவில்லை, தொடர்ந்தது அவரது ஈழ விரோத நிலைப்பாடும், செயல்பாடும்.


 1. திருமுருகனின் ஈழ விரோத நிலைப்பாட்டையும், செயல்பாட்டையும் விரிவாக பார்க்கும் முன் தற்பொழுது எழக் கூடிய இரு கேள்விகளை கவனத்தில் கொள்வோம். அப்படி இந்தியாவைக் காக்க வேண்டும் என்று செயல்படும் திருமுருகன் ஒரு தொலைகாட்சி விவாதத்தில், இந்தியாவை பொறுக்கி நாடு என்று குறிப்பிட்டாரே. இந்தியாவைக் காக்கச் செயல்படுபவர் எப்படி இந்தியாவை இப்படி குறிப்பிடுவார் என்று உங்களுக்குத் தோன்றலாம். முதன் முறையாக 2013 மார்ச்சில் திருமுருகன் அப்படி குறிப்பிட்டார். வைகோ பற்றி பேசும்போது பத்தி எண் 200 ல் நான் குறிப்பிட்டேன். அரசுகள் தமக்கு எதிரான தளத்தில் இருந்தும் ஒருவரை தன்வயப்படுத்தி, போராட்டத்தை மட்டுப்படுத்துவற்கும், கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தும் என்று. அதேபோல் தான் திருமுருகனும் இந்தியாவிற்கு எதிராக போராட்டக் களத்தில் பேசி, ஆக்கபூர்வமாக நடைபெறும் நகர்வுகளை முடக்கும் வேலையை செய்திருக்கின்றார். இப்படி பேசுவதுதான் திருமுருகனின் இந்திய ஆதரவு தொழிலுக்கான மூலதனம். தன்னுடைய இந்திய ஆதரவு நிலை அம்பலமாவது தெரிந்தால், தன்னுடைய முதலீட்டை உறுதிபடுத்திக் கொள்வதற்காக இன்னும் உரக்கப் பேசுவார் இந்தியாவை குற்றம் சுமத்தி; ஆனால், திரைமறைவில் இந்தியாவை காக்கும் அனைத்து வேலைகளையும் செய்வார். ப்ரேமனில் இவ்வளவு அயோக்கியத்தனமாக நடந்து கொண்டவர் இந்தியாவைக் காப்பதற்கன்றி வேறேதெற்கு?


 1. இன்னொரு கேள்வியும் இங்கு எழலாம். இந்தக் கேள்வியை திருமுருகன் தனது தவறுகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பதற்காக எழுப்புவார். தோழர் ஜெயாவின் பெயரை பயன்படுத்தி திருமுருகன் பொய் சொல்லியிருந்தால், தமிழ்நெட்டில் 2015 ஆகஸ்ட் 16 அன்று திருமுருகனின் காணொளியை [141] எப்படி வெளியிட்டிருப்பார்கள்? தமிழ்நெட்டில் இதற்கு முன்பு 2015 ஜனவரி 6 அன்று வெளிவந்த தியாகுவின் பேட்டியையும் [142], அது வெளியான பின்னணியையும் பார்த்தால், இந்தக் கேள்விக்கான விடை கிடைக்கும்.


Leaders should enlighten gullible masses, not hide behind them என்று தலைப்பிடப்பட்டு தியாகுவின் பெட்டி வெளியானவுடன், திருமுருகன் கோபம் கொண்டு, எப்படி தியாகுவின் பேட்டியை தமிழ்நெட் வெளியிடலாம் என்று தோழர் ஜெயாவிடம் கேட்டார். அதற்கு தோழர் ஜெயா அளித்த பதில் இது “தமிழ்நெட் ஒரு ஊடகம். பலதரப்பட்ட நபர்களிடம் இருந்தும் செய்திகளை வழங்குவதுதான் எங்களுடைய வேலை. அதன் அடிப்படையில் அமெரிக்கத் தீர்மானத்தால் மாற்றங்கள் ஏற்படும் என்று பேசிய ஒருவரே, ஆட்சி மாற்றத்தால் இலங்கையில் எந்தத் தீர்வும் கிடைக்காது என்று பேசியிருப்பது முக்கியம். அதனால்தான் அந்தப் பேட்டி வெளிவந்தது” என்று ஜெயா தோழர் கூறியதற்கு பின்பு திருமுருகன் பேசுவதற்கு ஏதுமில்லை. தியாகுவின் பேட்டியை தமிழ்நெட் வெளியிட்டதால், தியாகுவின் அமெரிக்கத் தீர்மான ஆதரவு நிலைப்பாட்டினை தோழர் ஜெயா ஆதரிக்கவில்லை. தற்பொழுது. தமிழ்நெட்டில், திருமுருகனின் பேட்டி வெளியாகியிருப்பதும் அதே அடிப்படையில் தான். LLRC ஐ ஆதரித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பற்றி, திருமுருகன் பேசியிருப்பதால், LLRC ஐ ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதனை வெளிப்படுத்துவதற்கான குரல் தற்பொழுது வேறு எதுவும் இல்லை என்பதனால், இந்தப் பேட்டியை ஒரு ஊடகம் என்னும் அடிப்படையில் தமிழ்நெட் வெளியிட்டிருக்கும். அதற்காக தோழர் ஜெயாவின் பெயரை திருமுருகன் பொய்யாக பயன்படுத்தியதையும், அதன் மூலம் ஆக்கப்பூர்வமான வேலைகளை தடுத்து நிறுத்தியதையும் தோழர் ஜெயா ஏற்றுக்கொள்ளவில்லை. திருமுருகன் கூறிய பொய்யை தோழர் ஜெயாவிடம் தொடர்பு கொள்ள முடிந்தவர்கள், கேட்டு தெளிவு பெறலாம். திருமுருகன் கூறும் சப்பைக்கட்டு வாதங்களை புறம் தள்ளி நேரடியாக கேட்டு உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.


2.1.11. நோர்வேயிலும் இந்தியாவை காத்த திருமுருகன்.

 1. ப்ரேமெனில் மக்கள் தீர்ப்பாயம் நிறைவுற்ற பின் நாங்கள் நோர்வே சென்றோம். அப்பொழுது விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன் திருமுருகன் “உமர். நார்வே ல யாராவது நம்ம present பண்ணுன evidence பத்தி கேட்டாங்கன்னா, எதுவும் பேசாதீங்க. அவங்களுக்கு அடுத்து அமெரிக்க தீர்மானத்திற்கான மூடு செட் பண்ணனும். இதை பேச ஆரம்பிச்சா இதையே தான் பேசிட்டு இருப்பாங்க. அப்புறம் அமெரிக்க தீர்மானம் எதிர்ப்பில்லாமல் அமெரிக்கா நினைச்ச மாதிரி நிறைவேறிரும்” என்று கூறினார். திருமுருகனின் மீதான சந்தேக விதை மிக ஆழமாக விழுந்த தருணம் அது. அமெரிக்க தீர்மானம் எதிர்க்கப்பட வேண்டியது என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. ஆனால் ப்ரேமெனில் இந்தியா குறித்த ஆதாரத்தினை முழுமையாக சமர்பிக்கவில்லை, குறிப்பிட்ட நேரத்தில் சமர்பிக்கவில்லை. அதை குறித்து நீதிபதிகள் படிப்பதற்கான வாய்ப்புகளும் இல்லை. இவை அனைத்தையும் திட்டமிட்டு செய்த திருமுருகன் குறைந்தபட்சம் தகவல்களையாவது மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்றால் அதனையும் கூட வேண்டாம் என்று தடுக்கின்றார் என்றவுடன் இவர் நிச்சியமாக தவறான நபர் என்று எனக்கு புரிந்தது. ஆனால், அவர் தவறானவர் என்று தெரிந்துகொண்டதை காட்டிக்கொள்ளக்கூடாது என்றும் நினைத்துக்கொண்டேன். அதனால் இவர் சொல்வதை எதிர்த்து எதுவும் பேசாமால் இவர் சொல்லுவதை அப்படியே கேட்டு கொள்வோம் என்று நினைத்து கொண்டேன்.

 2. நோர்வே சென்று இறங்கிய பின்பு ஒஸ்லோ (Oslo) நகரில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு நாங்கள் இருவரும் சென்றிருந்தோம். கூட்டத்தின் பொழுது அங்கிருந்த தோழர் கண்ணன் எழுந்து என்னை நோக்கி ஒரு கேள்வியினை கேட்டார். அப்பொழுது தோழர் பிரபுகண்ணனும் அங்கிருந்தார். தோழர் கண்ணன் என்னிடம் சமீபத்தில் நடந்து முடிந்த மக்கள் தீர்ப்பாயத்தில் இந்தியாவின் மீது குற்றச்சாட்டினை தோழர் திருமுருகனும், தோழர் உமரும் பதிவு செய்திருக்கின்றனர். அதில் தோழர் உமர் தன்னுடைய தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி பல்வேறு தகவல்களை திரட்டியிருப்பார். அவர் அப்படி திரட்டிய தகவல்கள் என்ன? அதனை எப்படி திரட்டனார் என்பதையும் இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். திருமுருகன் இதனை எதிர்பாத்து இருந்திருக்கின்றார். அங்கு இதைபற்றி கேட்பார்கள் என்று முன்பே எதிர்பார்த்தனால் தான் விமானத்தில் ஏறியவுடன் இதைபற்றி பேசாதீர்கள் என்று கூறியிருந்தார்.

 3. நான் எழுந்து தோழர் கண்ணனுக்கு பதில் கூறினேன். இன்றைய தினம் இந்த கூட்டத்திற்கு வேறு சிறப்பு அழைப்பாளர் ஒருவர் வந்திருக்கின்றார். நான் இதைபற்றி பேச தொடங்கினால் நீண்ட நேரம் பேசவேண்டியிருக்கும். சிறப்பு அழைப்பாளரினுடைய நேரம் இதனால் குறைந்துவிடும். அதனால் அவர் பேசட்டும். நான் இன்னொரு நாள் இதுகுறித்து பேசுகின்றேன் என்று கூறினேன். ஆனால் தோழர் கண்ணன் எழுந்து “சிறப்பு அழைப்பாளர் இருப்பது தெரியும். அவரும் நீங்கள் பேசுவதை கேட்க ஆவலாகதான் இருப்பார். அதனால் நீங்கள் இதுகுறித்து விரிவாக பேசவேண்டும்” என்று கூறினார். உடனடியாக திருமுருகன் எழுந்து “இன்றைய தினம் சிறப்பு அழைப்பாளர்களுக்கான நேரம். நாங்கள் வேறொரு தருணத்தில் பேசுகின்றோம். இங்கு கூடியிருக்ககூடிய கூட்டத்தின் அடிப்படையில் மட்டும் இந்த கூட்டம் நடைபெறட்டும். இதில் வேறு விடயங்கள் பேசவேண்டாம்” என்று கூறி அதனை தட்டிகழித்துவிட்டார்.

 4. இதில் இந்தியா மீதான குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களை அளிப்பதற்கு என்னை தான் அழைத்திருக்கிறார்கள் என்று தோழர் கண்ணனுக்கு தெரியும். அதன் அடிப்படையில் நான்தான் இந்த தகவல்களை, ஆதாரங்களை திரட்டியிருப்பேன் என்னும் எண்ணத்தில் தான் அவர் அப்படி கேட்டார். ஆனால் திருமுருகன் இடையில் புகுந்து “பெட்டிதூக்க” வருவதாக கூறிக்கொண்டு என்னை இந்தியா குறித்த ஆதாரங்களை திரட்ட வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, பிறகு அவரும் எதுவும் செய்யவில்லை என்று தெரிந்து, நான் செய்கிறேன் என்ற பொழுது, என்னுடைய இணைய இணைப்பை தடைசெய்யப்பட்டு ,என்று இவ்வளவும் அங்கு அம்பலப்பட்டுவிடும் என்பதுனால் தான் ஆதாரங்கள் குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று அங்கு தடுத்துவிட்டார். அதற்கு பிறகு நோர்வேயில் நடைபெற்ற வேறு சில கூட்டங்களிலும் கூட இந்தியா மீதான குற்றச்சாட்டு குறித்தோ, நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் நடைபெற்ற நிகழ்வு குறித்து எந்தவித உரையாடலும் நடைபெறாமல் போயிற்று.

  2.1.12. டெல்லியிலும் இந்தியாவின் பங்கு பற்றி பேசாத திருமுருகன்.

 5. நாங்கள் நோர்வேயில் இருந்து ஜெர்மனி சென்றபிறகு அங்கிருந்து டெல்லி வந்தடைந்தோம். டெல்லி வந்தவுடன் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பினையும் ஏற்பாடு செய்திருந்தோம். அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதலில் திருமுருகன் பேசினார். அதற்கு பிறகு பத்திரிக்கையாளர் ஜெர்னைல் சிங், SDPI கட்சியை சேர்ந்த ரபீக் முல்லாவும் அதற்கு பிறகு நானும் பேசினோம். அன்றைய தினம் பல பத்திரிக்கையாளர்கள் வந்திருந்தார்கள். சந்திப்பு தொடங்குவதற்கு சில நிமிடம் முன்பு அப்பொழுதைய மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் ராஜினாமா செய்துவிட்டார் என்று செய்தி கிடைத்தவுடன் பெரும்பாலான பத்திரிக்கையாளர்கள் பாரளுமன்றத்திற்கும், காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கும், சோனியாகாந்தி இல்லத்திற்கும் சென்றிருந்தனர். அதனால் இங்கு மிக குறைவான பத்திரிக்கையாளர்களே இருந்தனர்.

 6. அப்பொழுது திருமுருகன் மேம்போக்காக சில விடயங்களை மட்டும் பேசினார். இதில் இந்தியாவின் பங்கு குறித்து எதுவும் பேசவில்லை. கடைசியாக நான் பேசியபொழுது, நான் சிவசங்கர் மேனன் தொடர்பான ஒரு விடயத்தை மட்டும் முன் வைத்தேன். என்ன மாதிரியான ஆதாரங்கள் நாங்கள் கொடுத்தோம் என்று ஒவ்வொரு பிரிவாக பேசிவிட்டு, பிறகு அந்த ஆதாரங்களில் விரிவாக சிவசங்கர் மேனன் மே 15 ஆம் தேதி கூறியவற்றை பற்றி நான் சற்றுவிரிவாக பேசினேன். அதற்கு பிறகு சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கான பதில்களையும் அளித்தவுடன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிறைவுற்றது.

 7. டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் காணொளிப் பதிவுகள் மே பதினேழு இயக்கத்தின் வலைப்பூவிலும்[143], Youtube சேனலிலும் [144] வெளியிடப்பட்டிருந்தன. ஆனால், சில மாதங்களுக்கு முன்னால், வலைப்பூவும், Youtube சேனலும் நீக்கப்பட்டிருக்கின்றன. அவை இரண்டையும் திடீரென நீக்கப்பட்டிருப்பதன் பின்னணி குறித்து எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றை பிறகு பேசுகின்றேன். ஆனால், இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு மட்டுமின்றி மே பதினேழு இயக்கத்தின் அனைத்து காணொளிப் பதிவுகளும் செந்திலிடம் back up இருக்கும். அவர் இங்கு நான் குறிப்பிடும் காணொளிகளை மட்டுமாவது பொதுவெளியில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கின்றேன். ஏனெனில் திருமுருகனின் செயல்பாடுகளை அம்பலப்படுத்துவற்கு அந்தக் காணொளிகள் முக்கியமானவை.

 8. பத்திக்கையாளர் ஜெர்னைல் சிங் மற்றும் ரபீக் முல்லாவும் சென்ற பிறகு திருமுருகன் வந்து என்னிடம் “நீங்க பாட்டுக்கு எல்லாத்தையும் பேசிடீங்க. அங்க ஒரு IB (Intelligence Bureau – இந்திய உளவுத்துறை) காரன் உட்கார்ந்திருந்தான், அத பார்த்தீங்களா? நீங்க யாரு உட்கார்ந்திருக்காங்கனே பார்க்காம பேசுறீங்க. அதனால தான் நான் டீடைல் (Detail) எதுவுமே இல்லாம பேசினேன்” என்று கூறினார். இதில் ஆச்சிரியமூட்டும் விடயம் என்னவென்றால் ஒரு வேளை அன்று IB இலிருந்து ஆட்கள் வரவில்லை என்று வைத்துகொள்வோம். ‘IB காரன் இருக்கும் பொழுது நான் பேசியது தவறு என்று திருமுருகன் கூறுகின்றார் என்றால் IB காரன் இல்லாமல் இதனை பேசியிருந்தால் சரி என்று பொருள்படலாம்.’ IB இல்லாத சூழலில் பேசி அது பத்திரிகையில் வெளிவந்தால் அது IB காரர்களுக்கு தெரியாமல் போய்விட போகின்றதா என்ன ? அதிலும் எந்த அமைப்பு நடத்தியது என்று போட்டு தானே பத்திரிகையில் வெளியிடுவார்கள் ?

 9. இங்கே இந்தியாவின் பங்கு குறித்த செய்திகள் வெளியாக கூடாது என்பதற்காக என்னென்ன காரணங்களை கற்பிக்க முடியோ அனைத்தையும் கற்பிக்க திருமுருகன் தலைபட்டுவிட்டார் என்பது மிக நன்றாக புரிந்தது. அதிலும் அந்த நபர் IB காரன் என்பது திருமுருகனுக்கு எப்படி தெரியும் என்பது அடுத்த கேள்வி. நாம் அந்த கேள்விக்குள் செல்ல வேண்டாம். திருமுருகன் தொடர்ச்சியாக இந்திய அரசின் மீதான ஆதாரங்கள் வெளியாகாமல் தடுத்துக்கொண்டிருக்கும் வேலையினை எப்படி மேற்கொண்டார் என்பதை மட்டும் பார்ப்போம்.

 10. அன்றைய தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு குறித்த செய்தி தினமணி பத்திரிகையில் வெளியானது. திருமுருகன் பேசிய தகவல்கள் எதுவும் செய்தியாக வெளியிடும் அளவிற்கு News Value இல்லை என்பதால், நான் பேசியவை திருமுருகன் பேசியதாக வெளியாகியிருந்தது. ஊடகங்களில் பெயர் மாறி வெளியாவது அடிக்கடி நடக்கக்கூடியது தான். ஆனால், நான் பேசிய காணொளியையும், திருமுருகன் பேசிய காணொளியையும் செந்தில் வெளியிட்டால், இந்தியாவைக் காக்க தொடர்ந்து முயலும் திருமுருகனின் உண்மை முகம் தெரியவரும்.

 11. பிறகு தீர்ப்பாயம் குறித்த தகவல்களை ஆம்ஆத்மி கட்சியினரிடம் தெரிவிக்கலாம் என்று எண்ணி தோழர் உதயகுமார் மூலம் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்திப்பதற்கான ஏற்பாட்டினை செய்தோம். அப்பொழுது தோழர் உதயகுமார் முதலில் அட்மிரல் ராமதாசை சந்தியுங்கள் அதன் மூலம் கேஜ்ரிவாலை சந்தியுங்கள் என்று தெரிவித்திருந்தார். நாங்கள் அட்மிரல் ராமதாசை சந்தித்தோம். மிக சில நிமிடங்கள் தான் அந்த சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது நான்தான் அவரிடம் பேசினேன். இந்தியா குறித்த ஆதாரங்கள் அங்கு சமர்ப்பிக்கப்பட்டன. இந்தியாவிற்கும் இதில் பங்கிருக்கிறது என்பதை நாங்கள் நம்புகின்றோம் என்று நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்திருக்கின்றது. இதனை பற்றி நீங்கள் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்று கூறினேன். அப்பொழுது பல்வேறு அதிகாரிகளும் அமைச்சர்களும் இதில் நேரடியாக பங்கு பெற்றதற்கு ஆதாரம் இதில் இருக்கிறது என்று கூறினேன். யார் அவர்கள் என்று அட்மிரல் ராமதாஸ் கேட்டார். அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் MK நாராயணனும், வெளியுறவு செயலாளர் சிவசங்கர மேனன்னும் இதில் முக்கிய பங்காற்றியவர்கள் என்று கூறினேன். உடனே அட்மிரல் ராமதாஸ் “Who are the Ministers ?” என்று கேட்டார். அதற்கு நான் ”பிராணப் முகர்ஜி, அவர் ராணுவ ரீதியிலான வெற்றிகள் ஒரு அரசியல் வாய்ப்பினை வழங்குகின்றன என்று அதிகார பூர்வமாகவே அறிவித்திருக்கிறார்”என்றேன். இது தவிர இன்னும் பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றன என்றேன். அதற்கு அட்மிரல் ராமதாஸ் “அச்சா ! பிரணாப்முகர்ஜி ” என்று கூறிவிட்டு, நீங்கள் கொடுத்திருக்ககூடிய இந்த தீர்ப்பினை நான் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் கொடுத்துவிடுகிறேன். அவருடைய உதவியாளரிடமும் நான் சொல்லிவிடுகிறேன். நீங்கள் சென்று பார்க்க வேண்டும் என்று கூறுகின்றேன். ஆனால் இன்று நாங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக இருக்கின்றோம். மாலையில் அரவிந்த் கேஜ்ரிவால் துணைநிலை ஆளுனரை சந்திக்க இருக்கின்றார். அதனால் உங்களை சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை. நீங்கள் அவருடைய உதவியாளரிடம் பேசுங்கள். சந்திக்க முடிந்தால் நீங்களும் அவரிடம் தெரிவியுங்கள். நானும் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் இது குறித்து பேசுகின்றேன். நாங்கள் இந்த தீர்ப்பினை வைத்துகொள்கின்றோம். இதனை எப்பொழுது மக்களிடம் எடுத்து செல்வது என்பதை நாங்கள் முடிவு செய்துகொள்கிறோம். அனேகமாக பாராளுமன்ற தேர்தலுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் பிரச்சாரம் செய்ய தமிழ்நாட்டிற்கு வருவார். அப்பொழுது இது குறித்து பேச வாய்ப்பிருக்கின்றது என்று கூறினார். பிறகு நாங்கள் அரவிந்த் கேஜ்ரிவால் உதவியாளர் தொலைபேசி எண்ணை வாங்கிகொண்டு அவரிடம் நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினோம்.

 12. வெளியில் வந்தவுடன் திருமுருகன் “நீங்கள் யாருடைய பெயரையும் குறிப்பிடாதீர்கள். இந்தியா பங்கெடுத்தது என்று மட்டும் கூறுங்கள். விரிவான தகவல்கள் எதையும் இவர்களிடம் கூறாதீர்கள். மாலை அரவிந்த் கேஜ்ரிவாலை சந்திக்கும் பொழுதுகூட எதையும் பேசிவிடாதீர்கள்” என்று கூறினார். பத்திரிகையாளர் சந்திப்பிலும் இவர் ஆதாரங்களைப் பற்ற பேசவில்லை, நான் பேசிய போதும் IB காரன் இருக்கிறான் பெசாதீர்கள் என்றார். அட்மிரல் ராம்தாசிடம் பிரணாப் முகர்ஜியைப் பற்றி சொன்னவுடன் விரிவான தகவல்களை கூறாதீர்கள் என்கிறார் இவர் நிச்சியமாக எந்த தகவல்களையும் வெளியிடுவதற்கு அனுமதிக்க போவதில்லை என்பது தெரிந்தது. ஆனால் அவரை மீறி நான் ஏதேனும் பேசினால். இவரை அம்பலப்படுத்துவதற்கான ஆதாரம் சிக்காமல் போய்விடும் என்பதால் அமைதி காப்பது என்று முடிவெடுத்தேன். அன்று மாலை அரவிந்த் கேஜ்ரிவாலை சந்திப்பதற்கு சென்றோம். ஆனால் அவர் துணை நிலை ஆளுனரை சந்திக்க சென்றுவிட்டதால் அன்று சந்திப்பு நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

 13. இதனை குறித்து தோழர் உதயகுமாரிடம் 2015 ஜனவரி மாதம் சந்தித்த பொழுது அட்மிரல் ராமதாசுடன் நடைபெற்ற உரையாடல் குறித்து தெரிவித்திருந்தேன். அந்த உரையாடலில் இருந்து நான் புரிந்துகொண்டது, ஆம்ஆத்மி கட்சியும் தேர்தலை மையப்படுத்தி மட்டுமே சிந்திக்கின்றது. இனப்படுகொலையில் இந்தியா குறித்து தமிழகத்தில் பேசப்படுவதை விடவும் வட இந்தியாவில் பேசப்பட வேண்டியது முக்கியம் என்பதுனால் தான் அவர்களை சந்தித்தோம். ஆனால் அவர்கள் அதனை அங்கு பேசாமல் இங்கு வாக்கு வாங்குவதற்காக மட்டும் பேசுவதற்கு தான் தயாராக இருக்கிறார்கள். அதிலும் இந்த இனப்படுகொலையில் அதிகாரிகள் யாரும் பங்குபெற்றது பற்றி கவலை அவர்களுக்கு இல்லை. அமைச்சர்கள் யார் என்பதில் தான் கவனம் இருக்கின்றது என்பதையெல்லாம் நான் கவனித்திருந்தேன் என்று தோழர் உதயகுமாரை சந்தித்த பொழுது கூறினேன்.

 14. நாங்கள் டெல்லியில் அட்மிரல் ராமதாசிடமும், ராம் விலாஸ் பாஸ்வான் கட்சியின் அலுவலகத்திலும் அந்த தீர்ப்பின் நகலை கொடுத்தோம். ஆனால் இந்தியா குறித்த ஆதாரங்கள் என்று எதுவும் அவர்களிடம் கொடுக்கவில்லை. அதை பற்றி எதுவும் பேசவும் வேண்டாம் என்று திருமுருகன் கூறினார். அது அங்கு மட்டுமில்லை, சென்னை வந்த பிறகும் கூட ஆதாரம் என்று எதையும் யாரிடமும் கொடுக்கவில்லை.

  2.1.13. தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு.

 15. ஜனவரி மாதம் மத்தியில் ஜுட் தொடர்புகொண்டு உங்களுடைய ஆதாரங்களின் பட்டியலை இதில் இணைத்திருக்கிறேன். சரி பார்த்துகொள்ளுங்கள் என்று ஒரு மின்னஞ்சலை அனுப்பினார். அதில் நாங்கள் தீர்ப்பாயத்திற்கு முந்தைய தினம் அனுப்பிய ஆதாரங்களும், தீர்ப்பாயத்தில் எங்கள் வாதங்கள் முடிவுற்ற பிறகு அன்று இரவு விரலியில் (Pen Drive) கொடுத்த ஆதாரங்களும் பட்டியலிடப்பட்டிருந்தன. அதனை திருமுருகன் சிறிது மாற்றங்கள் செய்து மின்னஞ்சல் வழியாக ஜூடுக்கு அனுப்பினார். [145] திருமுருகன் உங்களிடம் கூறிய பொய்யை சற்று நினைவுப்படுத்திப் பாருங்கள். ஐ.நா.விற்கு எதிரான ஆதாரங்களை அளிக்கும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டதாக உங்களிடம் கூறியிருந்தார் அல்லவா? நான் அளித்த சாட்சியம் எந்தத் தலைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பையும், இணையத்திலும் (page 60) [146] பாருங்கள்.

  “இந்தியாவின் பங்கு” (Indian Complicity) என்னும் தலைப்பின் கீழ் தான் என்னுடைய சாட்சியம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை கவனித்தாலே போதும், திருமுருகன் வாயிலிருந்து உண்மையே வராது என்பதை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ளலாம்.

 16. அப்பொழுது ஜூடுயிடம் பேசியபொழுது தீர்ப்பில் இந்தியா குறித்து என்ன கூறவிருக்கிறார்கள் என்று கேட்டதற்கு, இறுதி தீர்ப்பு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி வரவிருக்கின்றது. முதல்கட்ட தீர்ப்பில் என்ன வந்ததோ அதுதான் இரண்டாம்கட்ட தீர்ப்பிலும் வரும் என்று கூறினார். அப்படியென்றால் இந்தியா குறித்து மேலும் ஆதாரங்கள் கொடுக்க வாய்ப்பிருக்கிறதா என்று நான் கேட்டபொழுது. இப்பொழுது அதற்கு வாய்ப்பில்லை. இந்தியா குறித்து தனி அமர்வு வேண்டுமென்றால் வைக்கலாம். அதற்கு நீங்கள் ஆதாரங்களை தொகுக்க ஆரம்பியுங்கள். நீங்கள் பிப்ரவரி 15ம் தேதிக்குள் ஆதாரங்களைத் தொகுத்து கொடுத்தால், நீதிபதிகளிடம் அதனை அனுப்புவதற்கு வசதியாக இருக்கும் என்றும் கூறினார்.


 17. மேலும் அவர் இப்பொழுது வர கூடிய இறுதி தீர்ப்பினை தமிழகத்தில் இருக்க கூடிய ஊடகங்களின் வழியாக பரவலாக கொண்டு சேர்க்க வழி செய்யுங்கள் என்று கூறினார். சரி என்று அவரிடம் கூறிவிட்டு திருமுருகனிடம், ஜூடிடம் கூறியதை பற்றி சொல்லிவிட்டு, “இந்தியா குறித்த ஆதாரங்களை நான் திரட்ட தொடங்குகின்றேன். ஊடகங்களுக்கும் இந்த இறுதி தீர்ப்பு குறித்த செய்திகளை சொல்ல தொடங்குவோம்” என்றேன். அதற்கு திருமுருகன், “தீர்ப்பு வரும் பொழுது சொல்லுவோம், இந்தியாவிற்கு எதிரான ஆதாரங்களை தொகுக்கும் வேலையை வளர்மதியும், ராதிகாவும் [147] செய்யட்டும். நீங்கள் அமெரிக்க தீர்மான வேலைகளையும், தமிழர் தீர்மானம் தொடர்பான வேலைகளையும் பாருங்கள்.” என்றார்.

  2.1.13.1. ஊடகங்களில் தீர்ப்பாயம் தொடர்பான நிகழ்ச்சிகள்

 18. அந்த காலகட்டத்தில் ஜனவரி 21 ஆம் தேதியன்று நான் புதிய தலைமுறைக்கு இந்த தீர்ப்பு வரவிருக்கின்றது என்ற செய்தியினை தெரிவித்தேன். பிறகு புதிய தலைமுறையில் இருந்து எனக்கு போன் செய்து இந்த தீர்ப்பு பற்றி, அந்த தீர்ப்பாயம் பற்றியெல்லாம் பல தகவல்களை கேட்டார்கள். அவற்றை எல்லாம் நான் கூறினேன். மேலும் இந்த தளங்களில் எல்லாம் இது குறித்து கூடுதல் விவரம் இருக்கும் என்று அவற்றையும் கூறினேன். உங்களுக்கு நன்றாகவே தெரியும் அனைத்து தகவல்களையும் நீங்கள் கூறாதீர்கள் என்று அடிக்கடி திருமுருகன் கூறுவார் என்று. அன்றும் அது தான் கூறினார் “நீங்க பாட்டுக்கு அந்த சைட்டில் இருக்கும் இந்த சைட்டில் இருக்கும்னு சொல்லிறீங்க. எப்பொழுதுமே நம்ம கிட்ட இருக்கிற எல்லா தகவல்களை குடுக்க கூடாது” என்று கூறினார். அதற்கு பிறகு புதிய தலைமுறையில் தீர்ப்பு குறித்து ஒரு நேரலை நகழ்ச்சி நடத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது என்று புதிய தலைமுறையில் இருந்து கூறினார்கள். அப்பொழுது நான் அது குறித்து விவாதிப்பதற்கு என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு நீங்கள் வாருங்கள் என்று என்னிடம் கூறினார்கள். நானும் சரி என்று கூறினேன்.

 19. இது நடந்த பொழுது நான் திருமுருகனின் அலுவலகத்தில் இருந்தேன். அப்பொழுது திருமுருகன் “நீங்கள் சென்று இந்த நேரத்தில், இந்த இடத்தில் குண்டு விழுந்தது. இதனால் இத்தனை பேர் இறந்தார்கள் என்று தகவல்கள் சொல்லி கொண்டிருக்காதீர்கள். அடுத்தது அமெரிக்க தீர்மானம் வரவிருக்கின்றது. அந்த தீர்மானம் தமிழர்களுக்கு எதிரானது என்று மட்டும் பேசுங்கள், தீர்மானம் எப்படி ஆபத்தானது என்பது மட்டும் பேசுங்கள், தமிழர்களின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்க வேண்டும் என்று மட்டும் பேசுங்கள். இந்த தீர்ப்பாயத்தில் தீர்ப்பு வந்திருக்கின்றது என்று மட்டும் சொல்லிவிடுங்கள். தீர்ப்பை பற்றி விரிவாக பேச வேண்டாம்” என்று கூறினார். அப்பொழுது எனக்கு திருமுருகனை பார்க்கும் பொழுது இவ்வளவு மோசமான ஒரு நபருடனா நான் இவ்வளவு நாள் பயணம் செய்திருக்கிறேன் என்று தோன்றியது. சரி இப்பொழுது முரண்பட்டு பேசினால் உடனடியாக இவரை கையும் களவுமாக பிடிக்க கூடிய வாய்ப்பு இல்லாமல் போய்விடும். பிறகு இவர், தான் தவறே செய்யாவில்லை என்பது போல நாடகமாட தொடங்கி விடுவார் என்பதுனால் அவர் சொல்வதை அப்படியே செய்வோம் என்று புதிய தலைமுறையின் அன்றைய நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்.

 20. புதிய தலைமுறை தொலைகாட்சியில் அன்றைய தினம் மக்கள் தீர்ப்பாயத்தில் தீர்ப்பு நேரலையில் வெளியாகியது. அதனை ஒட்டி நடைபெற்ற கலந்துரையாடலில் நான் தீர்ப்பு குறித்து பேசினேன், சர்வதேச நகர்வுகள் குறித்தும் விரிவாக பேசினேன். ஆனால் இந்தியாவின் பங்கு குறித்து பேசவில்லை. சர்வதேச நகர்வு குறித்து மிக விரிவாக பேசியதால் அங்கிருந்த பலரும், பல்வேறு செய்தியாளர்களும் அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் பார்த்தனர். நான் நிகழ்ச்சி முடித்து வந்தவுடனே கிட்டத்தட்ட அனைத்து செய்தியாளர்களும் வந்து அந்த கலந்துரையாடல் அறையில் என்னுடன் ஒரு உரையாடலை நடத்தினார்கள். அப்பொழுது நேர்பட பேசு நிகழ்ச்சி தொகுப்பாளர் குணா வந்து “உமர் நீங்க பேசிட்டு வாங்க ஒரு விடயம் பேச வேண்டும்” என்றார். சரி என்று சொல்லிவட்டு இவர்களிடம் பேசி முடிந்தவுடன் குணாவை சென்று சந்தித்தேன்.

 21. அப்பொழுது குணா மக்கள் தீர்ப்பாயம் குறித்து சில விடயங்களை கேட்டார். பிறகு நேர் பட நிகழ்ச்சிக்கு இன்று வேறு ஒரு தலைப்பை ஏற்பாடு செய்து விட்டோம். ஆனால் இப்போது இதனை பற்றி ஒரு நேர்பட பேசு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யாலாம் என்று நினைக்கின்றோம். யாரை கூப்பிடலாம் என்று கேட்டார். நான் இப்பொழுது வந்துவிட்டேன். இரவும் நான் வந்தால் நன்றாக இருக்காது. நீங்கள் திருமுருகனை கூப்பிடுங்கள் என்றேன். அதற்கு அவர் நீங்களே பேசுங்கள் என்று குணா கூறினார்.

 22. நான் திருமுருகனுக்கு போன் செய்து நேர் பட பேசு நிகழ்ச்சிக்கு உங்களை அழைக்கிறார்கள் என்றேன். அதற்கு அவர் கேப்டன் தொலைக்காட்சியில் இன்று மரண தண்டனை தொடர்பாக ஒரு விவாதத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கு என்னை அழைத்திருக்கிறார்கள் என்று கூறினார். பிறகு குணாவிடம் தெரிவித்த போழுது அவர் நீங்கள் கேப்டன் தொலைகாட்சிக்கு போய் விட்டு திருமுருகனை இங்கு வர சொல்லி முயற்சி செய்து பாருங்கள் என்றார்.

 23. இதனை திருமுருகனிடம் கூறினேன். அதற்கு அவர் சரி நான் கேப்டன் தொலைக்காட்சியின் ஆசை தம்பியிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்றார். பிறகு ஆசை தம்பியிடம் பேசி விட்டு அந்த மரணதண்டனை குறித்த விவாதத்தை சேர்த்து ப்ரேமென் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு குறித்தும் அந்த விவாதத்தில் விவாதமாக வைத்து கொள்ளலாம் என்று ஆசை தம்பி கூறியதை அடுத்து நான் கேப்டன் டிவி க்கு செல்வது என்றும் திருமுருகன் புதிய தலைமுறைக்கு செல்வது என்றும் அங்கு முடிவெடுத்தோம். பிறகு நான் புதிய தலைமுறை அலுவலகத்தில் இருந்து கிளம்பி திருமுருகனின் அலுவலகத்திற்கு சென்றேன். அங்க சென்றவுடன் நிகழ்ச்சி எப்படி இருந்தது என்றார். மிக நன்றாக இருந்தது. அங்கிருந்த அனைவருமே அதனை வரவேற்றார்கள். மிக நன்றாக இருந்தது என்று கூறினார்கள் என்றேன். சரி என்று கூறினார்.

 24. மாலையில் நான் கேப்டன் தொலைகாட்சிக்கு கிளம்புவதற்கு முன்பு திருமுருகனின் அலுவலகத்தின் படியில் வைத்து “புதிய தலைமுறையில் இருந்த செய்தியாளர்கள் அனைவரும் இந்தியா குறித்து என்ன ஆதாரங்களை வைத்தீர்கள்” என்று கேட்டார்கள். அப்பொழுது அதனை பற்றி எதுவும் நான் சொல்லவில்லை. ஆனால் இப்பொழுது கேப்டன் டிவி யில் பேச போகிறேன் என்று கூறினேன். கிட்டத்தட்ட படியில் இருந்து வெளியேறிய நேரத்தில் நான் அதனை கூறினேன். திருமுருகனுக்கு அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை. அதனால் அன்று இரவு புதிய தலைமுறைக்கு சென்ற பொழுது அவரும் இந்தியாவின் பங்கு குறித்து பேச வேண்டிய ஒரு நெருக்கடி உருவானது. ஆனால் அதிலும் அவர் முழுமையாக பேசவில்லை.

 25. நான் கேப்டன் தொலைகாட்சியில் கிளிநோச்சி நகரம் கைப்பற்றப்பட்ட விதம் குறித்து மிக விரிவாக பேசினேன். அதில் இந்தியாவின் பங்கு குறித்தும் மிக விரிவாக பேசினேன். இப்படி நான் பேசிகொண்டிருந்த பொழுது திருச்சி வேலுச்சாமி குறுக்கிட்டதால் அந்த நிகழ்ச்சி சற்று குழப்பமாக முடிந்தது. அதனால் அடுத்த நாள் மீண்டும் அதே தலைப்பில் ஒரு விவாதத்தினை ஏற்பாடு செய்கிறோம் என்று தெரிவித்திருந்தார்கள். அதற்கு திருமுருகனை வர சொல்லியிருந்தார்கள். அடுத்த நாள் திருமுருகன் சென்று பேசும் பொழுதும் இந்தியாவின் பங்கு குறித்து சிறிய அளவில் தான் பேசினார். ஆனால் அதற்கு பிறகு இந்தியாவின் பங்கு குறித்து எங்கும் பேசுவதில்லை என்பதாக மிக தீவிரமாக இருந்தார்.

  2.1.14. ஜூட் லால் பெர்னாண்டோ அளித்த இன்னொரு வாய்ப்பையும் திட்டமிட்டு சிதைத்த திருமுருகன்.

 26. ப்ரேமனில் நாங்கள் சமர்ப்பித்த ஆவணங்களை ராதிகாவிற்கு அனுப்புங்கள் என்று 2014 ஜனவரி மாதத்தின் இறுதியில் திருமுருகன் தெரிவித்தார். அவற்றை வைத்துக் கொண்டு, வளர்மதியுடன் சேர்ந்து ராதிகா மேற்கொண்டு ஆதாரங்களை தொகுக்கும் வேலையைச் செய்வார் என்று கூறினார். நானும், அவற்றை ராதிகாவிற்கு அனுப்பி வைத்தேன். சில நாட்களுக்கு பிறகு “ராதிகாவிற்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன என்று கூறினார். அதனால், உங்கள் வீட்டிற்கு வருவார். நீங்கள் அவருடன் அமர்ந்து எப்படி ஆதாரங்களை திரட்டுவது என்று கூறுங்கள்” என்று திருமுருகன் கூறினார்.

 27. அன்று மாலை ராதிகா எனது வீட்டிற்கு வந்தார். நானும் ராதிகாவும் உட்கார்ந்து இந்தியா குறித்த ஆதாரங்களை எப்படி தொகுப்பது, என்ன தகவல்கள் எல்லாம் இடம் பெற வேண்டும் என்பதை பற்றி விரிவாக பேசினோம். அதன் அடிப்படையில் பல்வேறு தகவல்களை ஒரு குறிப்பாக மின்னசலிலே பதிவு செய்துகொண்டோம். அவற்றை ராதிகாவிற்கு மின்னஞ்சலிலும் அனுப்பினேன்.

  அனுப்பிய பிறகு இன்னும் பல ஆதாரங்களை திரட்டி அவற்றையும் நான் அனுப்புகின்றேன். அவற்றை வைத்து கொண்டு இன்னொரு நாள் நாம் தொடர்வோம் என்றேன். அதற்கு அவர் சரி என்று கூறினார்.

 28. அதற்கு அடுத்த நாள் திருமுருகன் என்னிடம் “அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்கர்கள் மிக பெரிய அளவிற்கு லாபி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அதனால் இப்பொழுது அனைத்து கட்சியினரையும் சந்தித்து பேச வேண்டிய தேவை இருக்கின்றது. நீங்கள் கொஞ்சம் அதை பார்ப்பது நல்லது” என்று கூறினார். அதற்கு நான் இந்தியாவின் ஆதாரம் குறித்து வேலையை தொடங்கியிருக்கிறோம் திரு என்றேன். இல்லை நீங்கள் அதனை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விடுங்கள். இப்பொழுது நாம் அமெரிக்க தீர்மானத்தை எதிர்கொள்ளாவிட்டால் மிக பெரிய ஆபத்தாக வந்து நிற்கும். ஒட்டுமொத்தமாக இந்த போராட்டத்தை முடக்கி விடுவார்கள். நீங்கள் தான் அதனை பேச முடியும் என்று கூறினார்.

 29. அப்பொழுது மிக தெளிவாக தெரிந்தது. இவர் நிச்சியமாக இந்தியா குறித்து எந்த ஆதாரத்தையும் திரட்டுவதற்கு எந்த இடத்திலும் அனுமதிக்க போவதில்லை. ராதிகாவிற்கு என்னுடைய உதவி தொடர்ச்சியாக தேவை என்பதால், எனக்கு வேறு வேலைகளைக் கொடுத்து, ராதிகாவோடு சேர்ந்து வேலை செய்ய இயலாத நிலையை உருவாக்கி, அதன் மூலம் இந்தியாவிற்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்படாமல், இந்தியாவை காக்கும் வேலையை செய்வதற்காக எனக்கு வேறுவேறு வேலைகள் கொடுப்பார் என்று தெரிந்தது. முதலில் ப்ரேமெனுக்கு நாங்கள் செல்வதாக இருந்தபொழுதே நான் இந்தியா குறித்த ஆதாரங்களை திரட்ட கூடாது என்பதற்காக இல்லாத ஒன்றை (ஐ.நா குறித்தான) ஆதாரங்களை தொகுக்க கூறினார். பிறகு நான் இந்தியா குறித்த ஆதாரங்களை திரட்டவில்லையா என்று கேட்டு நான் செய்கிறேன் என்ற சொன்னபொழுது, என்னுடைய இணைய இணைப்பினை துண்டிக்கப்பட்டது. இப்படி செய்தவர் இங்கும் இதனை செய்யாமல் இருப்பதற்கு அமெரிக்க தீர்மானம் என்னும் ஒரு பூச்சாண்டியை கையில் எடுத்திருக்கிறார் என்று தெரிந்தது. அதிலும் ஜுட் லால் கூறிய பிப்ரவரி 15 என்னும் கடைசி தேதி கடக்கும் வரை, ஏதாவது காரணங்கள் கூறிக்கொண்டிருப்பார் என்று தெரிந்தது.

 30. அப்பொழுது, அமெரிக்கத் தீர்மானம் மட்டுமின்றி தமிழர் தீர்மானத்திற்கான வேலையினை நான் தொடர்ந்து வந்தேன். எனக்கு அப்பொழுது இருந்த Trigeminal Neuralgia என்னும் நரம்பியல் சிக்கலுக்கான மருத்துவ சிகிச்சைக்காக பெங்களுருவில் இருக்கும் NIMHANS மருத்துவமனைக்கு நான் பிப்ரவரி 1 அன்று சென்றிருக்க வேண்டும். ஆனால், தமிழர் தீர்மானம் உள்ளிட்ட வேலைகளுக்காக பெங்களுரு செல்வதையும் கூட அப்பொழுது தள்ளிப்போட்டிருந்தேன். ஏற்கனவே, பத்தி எண்கள் 83 - 86 ல் குறிப்பிட்டிருந்த ராஜ்குமாரின் நிறுவனத்திற்கான நிர்வாகவியல் ஆலோசனைப் பணிகளையும் கூட மேற்கொள்ள வில்லை. அந்த அளவிற்கு பிப்ரவரி மாதத்தில் தொடர்ச்சியான சமூகப் பணிகள் நிறைந்திருந்தன. முருகதாசன் நினைவு நாளில் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற ஐ.நா. அலுவலக முற்றுகைக்கான அனைத்து content வேலைகள், UAPA சட்டத்திற்கு எதிரான ஆலோசனைக் கூட்டம், தமிழர் தீர்மானம் தொடர்பாக தொடர் உரையாடல், அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக பல்வேறு கட்சியினரை சந்திப்பது, மக்கள் உரிமை பத்திரிகையில் தொடர் கட்டுரை, முகநூலில் அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிரான தொடர் பதிவுகள் என்று இன்னும் இன்னும் பல வேலைகளும் நிறைந்திருந்தன.

 31. இப்படி சென்றுகொண்டிருந்த பொழுது ராதிகா சில நாட்களுக்கு பிறகு ஒரு குறுஞ்செய்தியினை அனுப்பினார். அதில் “இந்த வேலையினை தொடங்கியிருக்கிறோம். இதை செய்ய விருப்பமில்லை என்றால் நேரடியாக சொல்லிவிடுங்கள்” (If you guys are not interested make it clear) என்கிற ரீதியில் அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய அதே வார்த்தைகள் சரியாக நினைவு இல்லை. ஆனால் சற்று கோபமாக தான் அனுப்பியிருந்தார். அதில் என்னையும் திருமுருகனையும் குறிக்கும் விதமாக ‘you guys” என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு நான் பதில் அனுப்பினேன். அதிலும் மிக சரியாக வார்த்தைகள் எனக்கு நியாபகம் இல்லை. அதில் இரண்டும் விடயங்களை குறிப்பிடிருந்தேன். அது என்னவென்றால் “Probably the problem lies with me” என்று கூறிவிட்டு, கடைசியாக நான் கூறியது “I’m finding it difficult to juggle everything”. இதில் juggle everything என்று குறிப்பிட்டது நன்றாக நினைவிருக்கின்றது. ஏனெனில் அப்பொழுது பல்வேறு வேலையினை திருமுருகன் எனக்கு கொடுத்திருந்தார். நீங்கள் செய்யாவிட்டால் அதனை செய்ய முடியாது என்பதாக கூறி கொடுத்திருந்தார். அந்த வேலைகளை நான் ஒத்துக்கொண்டதால், problem lies with me என்று குறிப்பிட்டிருந்தேன்.

 32. இந்தியாவிற்கு எதிரான ஆதாரங்களை திரட்டுவதற்கு நிச்சையமாக அவர் நேரம் கொடுக்க மாட்டார். வேறுவேறு வேலையினை சுமத்திகொண்டே இருப்பார் என்று தெரிந்தது. அதனால் சரி அமெரிக்க தீர்மான வேலைகளை செய்வோம் என்று அது தொடர்பான வேலைகளை தொடர்ச்சியாக செய்து கொண்டிருந்தேன். இதில் ராதிகா சம்பந்தப்பட்டது என்பது எனக்கு ஒரு வகையில் நல்லது என்று தெரிந்தது. எப்படியென்றால் இது போன்ற ஒரு வேலையினை தொடங்கி அதனை தொடர முடியாமல் இருப்பது போன்ற ஒரு சிக்கல் இருப்பதை நானும் திருமுருகனும் தவிர்த்த இன்னொரு நபருக்கும் அந்த விவரம் தெரிந்திருப்பது நல்லது என்பதால் சில காலத்திற்கு பிறகு திருமுருகனின் அனைத்து பின்னணியையும் கண்டறிந்து எழுதும் பொழுது இதுவும் ஒரு ஆதாரமாக இருக்கும் என்று நான் ராதிகாவின் பங்கேற்பை ஒரு நல்ல விடயமாக தான் நான் நினைத்தேன்.

 33. இப்படி முதலில் ப்ரேமெனில் சென்று ஆதாரங்களை சமர்ப்பிபதற்கான வாய்ப்பு வந்த பொழுதும் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் செயல்பட்டு நடைபெற விடாமலும், ஆதாரங்களை தொகுக்கப் படாமல் செய்தார். இரண்டாவது முறை ஜூடு இந்தியா குறித்து தனி அமர்வு வைக்கலாம் நீங்கள் ஆதாரங்களை தொகுத்து கொடுங்கள் என்று கூறிய பொழுது, நான் அந்த வேலையினை தொடங்கிய உடன், இல்லை நீங்கள் அமெரிக்க தீர்மானத்தை பாருங்கள் என்று கூறி இங்கும் ஆதாரங்களை தொகுக்கும் வேலையினை நடைபெறாமல் இருப்பதற்கான அனைத்து சூழலையும் உருவாக்கினார். இப்படி தொடர்ச்சியாக செயல்பட்ட திருமுருகன் அதற்கு பிறகும் ஈழவிடுதலைக்கு எதிராக மேற்கொண்ட செயல்களையும் பட்டியலிடுகிறேன் தோழர்களே.

  2.2. போப்பின் (Pope) இலங்கைப் பயணமும், திருமுருகனின் இரட்டை வேடமும்

 34. 2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் போப் இலங்கைக்கு பயணம் செய்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.[148] மே பதினேழு இயக்கம் கூட 2014 நவம்பர் மாதத்தில் இந்த வருகைக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தியதையும்[149] , அதில் நீங்கள் பலர் பங்கேற்றிருப்பதையும் நினைவில்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.


 35. ஆனால், இதில் திருமுருகனின் இரட்டை வேடம் உங்களுக்குத் தெரியாது. ஏற்கனவே, நான் பத்தி 59-ல் குறிப்பிட்டிருக்கக் கூடிய, முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு நாங்கள் மேற்கொண்ட பயணம் பற்றி, படித்திருப்பீர்கள். அப்பொழுது, அங்கு நடைபெற்ற கூட்டம் முடிந்த பின்பு ஒருவர் வந்து என்னிடம் பேசினார். அவர் தன்னை கிருத்தவ பாதிரியார் குமார் என்று அறிமுகம் செய்துகொண்டார்.

 36. "நீங்கள் நன்றாக பேசினீர்கள். உங்களுடைய உரையில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, போப் இலங்கைக்கு போவதாக ஒரு பயணத் திட்டம் இருக்கின்றது. அதை தடுத்து நிறுத்துவதற்கு நீங்கள் உங்கள் அறிவைப் பயன்படுத்தி ஒரு கடிதத்தை எழுதிக் கொடுத்தால், அதனை இங்கு தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பாதிரியார்களும் ஒருங்கிணைந்து கையொப்பமிட்டு மனுவாக போப்பிற்கு அனுப்பி வைக்கின்றோம். நீங்கள் கடிதம் எழுதி கொடுக்க முடியுமா?" என்று கேட்டார்.

 37. நான் சரி என்று கூறிவிட்டு அவருடைய மின்னஞ்சல் முகவரியை வாங்கிக்கொண்டேன். அது முடிந்து வந்ததற்குப் பிறகு இது பற்றி திருமுருகனிடம் கூறினேன், "Father குமார் என்பவர் பேசினார். இலங்கைக்கு போப்பை செல்ல வேண்டாம் என்று கோரி ஒரு கடித்ததினை பல்வேறு பாதிரியார்களும் இணைந்து அனுப்புவதற்கு ஒரு கடிதத்தினை தயார் செய்து தரச்சொல்லிக்கேட்டார்" என்று கூறினேன். அதற்கு திருமுருகன் உடனடியாக, "இல்லை, இல்லை வேண்டாம். அவர் ரா(RAW)-வினுடைய ஆளாக இருப்பார். உளவுத்துறை இப்படித்தான் செயல்படும்" என்றுகூறினார்.

 38. உங்களுக்கு நன்றாகத் தெரியும். பல்வேறு தருணங்களில் பல்வேறு அமைப்புகளுக்கு, தனிநபர்களுக்கு, இயக்கங்களுக்கு நாம் பல்வேறு தகவல்களையும், அதனை கடிதங்களாகவோ, கட்டுரைகளாகவோ எழுதிக் கொடுத்திருக்கிறோம். அங்கெல்லாம், நாம் நம் பெயரை எதிர்பார்த்து அதனை செய்யவில்லை. மாறாக, ஒரு நிகழ்வு நடந்தால் போதும் என்பதற்காக தான் நாம் செய்தோம். கடிதம் எழுதிக் கொடுப்பது போன்ற வேலையினை, பெரும்பாலும் நான் செய்திருக்கிறேன், சில வேளைகளில் திருமுருகன் செய்திருக்கின்றார். சில நேரங்களில் கொண்டல் கூட செய்திருக்கின்றார். அது போன்ற ஒன்றுதான் இந்த ஃபாதர் கேட்டதும் கூட.

 39. இந்தக் கடிதத்தினை நாம் எழுதிக்கொடுப்பதின் மூலம் போப்பின் வருகை உறுதியாகத் தடைபடுமா என்று தெரியவில்லை. ஆனால், ஒரு முயற்சியை மேற்கொள்வதில் எந்தத்தவறும் இல்லை. பல்வேறு தருணங்களில், மாணவர்கள் சில கோரிக்கை மனுக்களை எழுதிக்கேட்டபோது கூட நாம் எழுதிக்கொடுத்தது அந்த அடிப்படையில் தான்.


 40. அதே போன்று இங்கு எழுதிக் கொடுத்திருந்தால், ஒரு வேளை இந்த முயற்சி வெற்றி பெற்றால் இந்த ஈழ விடுதலைப் போராட்டத்தில் அது ஒரு பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய செயலாக இருக்காது என்று நமக்கு நன்றாகத் தெரியும்.

 41. அப்படி ஒரு முயற்சியினை திருமுருகன் சர்வ சாதாரணமாக, "இது ரா (RAW)-வினுடைய வேலையாக இருக்கும், நீங்கள் இதனைச் செய்யாதீர்கள்" என்று கூறிவிட்டு, அதற்குப் பிறகு அதே போப் செல்வதைக் கண்டித்து ஒரு போராட்டம் செய்கிறார். இது எப்படி என்றால் ஆக்கபூர்வமாக நடைபெறும் ஒரு வேலையை செய்யமாட்டேன் என்று கூறிவிட்டு ஆனால், பிறகு வேறு யாரும் குறை சொல்லிவிடுவார்களோ என்று ஒரு அடையாள போராட்டத்தை செய்திருக்கிறார். இது ஒரு இரட்டை வேடம் கொண்ட ஒரு நாடகம் தோழர்களே. இவர் இந்திய அரசை காக்கும் வேலையை மட்டுமல்ல, ஈழத்திற்கு ஆதாரவான எந்த வேலைகளும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதில் மிகமுனைப்பாக செயல்படத் தொடங்கினார் என்பது தெரிந்தது.

  2.3. தமிழர் தீர்மானத்தை குழி தோண்டி புதைத்த திருமுருகன்.

 42. 2014-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மே பதினேழு இயக்கம் தமிழர் தீர்மானம் ஒன்றினை வெளியிட்டது உங்களுக்கு அது நன்றாகத் தெரியும். [150] , அந்தத் தீர்மானத்தை குப்பைத் தொட்டிக்கு அனுப்பிய முழுப்பங்கும் திருமுருகனையேச் சாரும். அதிலும், அதைக் குப்பைத் தொட்டிக்கு அனுப்புவதற்கு அவர் கையாண்ட விதம் ஏற்கனவே ப்ரேமென் தீர்ப்பாயத்தில் இந்தியா குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்காமல் இந்தியாவின் அரசுத்தரப்பு வாதத்தை சமர்ப்பித்தது போன்ற குயுக்தியான வழிமுறையை தான் இங்கேயும் பின்பற்றியிருந்தார். நடந்தவற்றை வரிசையாகக் கூறுகின்றேன்.

  2.3.1. தீர்மானம் உருவாக்கம்

 43. இப்படிப்பட்ட ஒரு தீர்மானம் தயாரிக்க வேண்டும் என்பதை 2013-ம் ஆண்டிலிருந்தே நான் கூறிவந்துள்ளேன். தமிழர்களின் கோரிக்கைகளை ஒரு தீர்மானமாக உருவாக்கி, உலகெங்கும் இருக்கும் அனைத்துத் தமிழர்களும் ஒருமித்த குரலில், “தமிழர்களின் தீர்மானம் இது, இதனை சர்வதேசம் அங்கீகரித்து, இதன் அடிப்படையில் தமிழர்களுக்கு தீர்வு வழங்கவேண்டும்” என்று சர்வதேசத்தை கோருவதற்கான ஒரு வடிவமாக இதனை முன்னெடுக்கலாம் என்று கூறி வந்தேன். அப்பொழுது இது தொடர்பாக பல்வேறு ஈழ ஆதரவு செயல்பாட்டாளர்களிடமும் பேசிவந்தோம். அனைவருமே, "இது மிகச்சிறப்பான நகர்வாக இருக்கும், இதனை நாம் செய்வது முக்கியமானது" என்று கருத்து தெரிவித்தனர். அதனடிப்படையில் பல்வேறு தோழர்களுடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் இந்தத் தீர்மானத்தினை உருவாக்கி அதனை "தமிழர்களின் ஒற்றைக்குரலாக முன்வைப்போம்" என்று முடிவு செய்தோம். அந்தத் தீர்மானத்தினை தயாரிக்கும் முதல் கட்டப்பணியினை நான் ஏற்றுக்கொண்டேன். அதாவது, தீர்மானத்தில் என்னென்ன விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற அடிப்படை, இதை ஒருBase Draft என்பதாகவைத்துக்கொள்ளலாம் என்று கூறினேன். இந்த Base Draft-ஐ [151] நான் அடுத்த நாளே உருவாக்கினேன்.

 44. அதனை தோழர் பிரபுகண்ணனிடம் கொடுத்து அவரிடம் பல்வேறு ஈழ ஆதரவு செயல்பாட்டாளர்களின் பெயர்களையும் கூறி, அவர்கள் அனைவருக்கும் இதனை அனுப்பிவிடும்படி கூறினோம். நீங்களே எனது வீட்டில் இருந்து அனுப்பி விடுங்கள் என்று பிரபுகண்ணன் கூறினார். நானும், திருமுருகனும்அப்பொழுது (2013 டிசம்பரில்) பிரபுகண்ணனோடு அவரது வீட்டில் தான் இருந்தோம்.

 45. இந்தத் தமிழர் தீர்மானம் தொடர்பான தொடர்பாடல்களுக்காகவே ஒரு தனி மின்னஞ்சல் முகவரி (tamilparithi70@gmail.com) ஒன்றினையும் ஏற்கனவே ஜெர்மனியில் இருந்த பொழுது உருவாக்கியிருந்தோம். அப்பொழுது அங்கு அந்த மின்னஞ்சல் முகவரியை நாங்கள் திறப்பதற்கான சூழல் இல்லாததால், பிரபுகண்ணனின் வீட்டில் இருந்த அவரது கணினியில், அவரது மின்னஞ்சலை அவர் திறந்து தந்தார். இது நடந்தது டிசம்பர் 16, 2013 அன்று. திருமுருகன் அங்கு உட்கார்ந்து அந்த base draft-ஐ இணைத்துவிட்டு, எங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு மின்னஞ்சல் முகவரிக்கும், வேறு பல்வேறு செயல்பாட்டாளர்கள் குறிப்பாக, ஜெயா தோழர் உள்ளிட்ட செயல்பாட்டாளர்களையும் அதில் இணைத்து பிரபுகண்ணன் மின்னஞ்சலில் இருந்து திருமுருகன் ஒரு மின்னஞ்சலை அனுப்பினார். அந்த மின்னஞ்சல் அனுப்பபட்டதின் அடுத்த கட்டமாக திருமுருகன் என்ன செய்தார் என்றால், அதற்கு சில நாட்களுக்குப் பிறகு ஏற்கனவே உருவாக்கிய tamilparithi70மின்னஞ்சலைத் திறந்து அதில் பிரபுகண்ணனை மட்டும் நீக்கி விட்டு மற்றவர்களுக்கு அதே மின்னஞ்சலை அனுப்பினார். இந்த உரையாடல்களில் பிரபுகண்ணன் இருக்க வேண்டாம் என்று திருமுருகன் அன்று முடிவு செய்தார்.

 46. இதையே தான் அவர் ப்ரேமென் தொடர்பான விடயத்திலும் செய்தார். முதலில் பிரபுகண்ணன் மூலமாகத் தான் எனக்கு அழைப்பு வந்தது. பிறகு திருமுருகன் நேரடியாக நான் ஜெயாவிடம் பேசிக் கொள்கிறேன் என்று பிரபுகண்ணனை ஒதுக்கி விட்டார். "இது போன்ற ஒரு தீர்மானம் உருவாக்கும் வேலை நடைபெறுகின்றது" என்று பிரபுகண்ணனுக்கும் தெரியும். ஆனாலும் பிரபுகண்ணனை அந்த மின்னஞ்சல் குழுமத்திலிருந்து நீக்கி விட்டு மற்றவர்கள் அதில் இருந்தோம்.

 47. இந்தத் தீர்மானத்தின் இரண்டாம் வரைவை செய்து தருவதாக குமரவடிவேல் குருபரன் ஒப்புக்கொண்டிருந்தார். நாங்கள் இரண்டாம் வரைவைக் கோரி குருபரனுக்கு தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டிருந்தோம். பிறகு அந்தத்தீர்மானத்தில் அடுத்த கட்டமாக குருபரன் பல்வேறு மாற்றங்களை, ஐ.நா.வின் மொழிகளில் சில விஷயங்களையும் சேர்த்து அவர் ஒரு தீர்மானத்தினை 2014, ஜனவரி 7 ல் மாற்றி அமைத்துத் தந்தார் [152]

 48. ஆனால் அவர் அனுப்பிய மாற்றங்களை tamiparithi70 என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவில்லை. தோழர் விஜய் தான் அந்த மாற்றங்களை கொண்ட தீர்மானத்தை tamiparithi70 மின்னஞ்சலுக்கு அனுப்பினார். குருபரன் மேற்கொண்ட மாற்றத்தில் பொதுவாக்கெடுப்பு குறித்து வெளிப்படையான வாசகம் இல்லை அதே நேரத்தில் ஒருங்கிணைந்த இலங்கை குறித்தும் குறிக்கப்பட்டிருந்தது. இந்த மாற்றங்கள் மீதும், தீர்மானத்தில் இருக்கும் மற்ற விஷயங்கள் குறித்தும் அந்த மின்னஞ்சலில் தொடர்ச்சியான உரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டேயிருந்தன.


 49. அப்போது 2014-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாங்கள் இடிந்தகரை சென்றுவிட்டு வந்த பின்பு, நான் இரண்டு நாட்கள் திருநெல்வேலியில் கூடுதலாகத் தங்கியிருந்தேன். ஒருநாள் விருதுநகர் சென்றேன்.. அடுத்த நாள் திருநெல்வேலியில் தங்கியிருந்தேன். விருதுநகரில் நான் எடுத்துக்கொண்ட ஒரு மாத்திரை எனக்கு மயக்கத்தை அதிகப்படுத்தி, என்னுடைய கண் பார்வையை மங்கலாக்கியது. என்னால் படிக்க முடியவில்லை. அன்றைய தினம் tamilparithi70 மின்னஞ்சலை என்னுடைய நுழைவுச்சொல்லை லேனாவின் வீட்டில் அமர்ந்துகொண்டு சிபியிடம் [153] , கூறி திறந்து பார்த்து படிக்க கூறினேன். சிபி திறந்து பார்த்து மின்னஞ்சலில் இருப்பதைப் படித்தார். பிறகு, நான் அவரிடம் பதில் அளிக்க கூறினேன். "எனக்கு இன்று பதில் அளிக்கும் சூழல் இல்லை. ஓரிரு நாட்களில் பதிலளிக்கிறேன் என்று மட்டும் அனுப்பிவிடு” என்றேன். சிபியும் அப்படியே அனுப்பினார்.. ஏனென்றால், இந்த உரையாடலில் நான் பதில் சொல்ல வேண்டும். நான் மின்னஞ்சலை பார்க்கவில்லை என்றோ பதில் சொல்லவில்லை என்றோ எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதால், எனக்கு ஏற்பட்டிருந்த சிக்கல்களைக் கூட பொருட்படுத்தாமல் தினமும் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதை, ஒரு வேலையாக, மிக முக்கியமான வேலையாக வைத்துக்கொண்டிருந்தேன்.

 50. அப்பொழுது அந்தத் தீர்மானத்தில் நாங்கள் முடிவு செய்த விடயம் என்னவென்றால், ஈழத்தில் இருக்கக் கூடிய தமிழர்களும், புலம் பெயர் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்மானமாக அது இருக்க வேண்டும். அதே நேரத்தில், தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வான தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு குறித்த நடைமுறையும், சர்வதேச விசாரணை இனப்படுகொலைக்கானதாகவும், இடைக்கால நிர்வாக சபை அமைப்பது உள்ளிட்டவை மிக முக்கியமாக அதில் இடம் பெற வேண்டும் என்பதை நாங்கள் அனைவரும் ஒப்புக்கொண்டிருந்தோம்.

 51. இதில், பொதுவாக்கெடுப்பு என்பதை வெளிப்படையாகக் கூறுவதற்கு ஈழத்திலிருக்கக் கூடிய தமிழர்களுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. அது என்னவென்றால், இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 6-வது சட்டத் திருத்தம்[154] , இலங்கையின் குடிமக்கள் யாரேனும், தனி நாடு குறித்து பேசினால், அவர்களுடைய கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்பது சட்ட விதிமுறையில் இருக்கின்றது. அதனால், பொதுவாக்கெடுப்பு என்பது வேண்டும், அதே நேரத்தில் அது வெளிப்படையாக இருக்கக் கூடாது என்றொரு சிக்கலும் இருந்தது.

 52. இதனை கவனத்தில் கொண்டு அந்தத் தீர்மானத்தில் இவற்றை உள்ளடக்குவதற்கான அனைத்து வேலைகளையும் நாங்கள் மேற்கொண்டு வந்தோம். அப்பொழுது, ஒருமுறை தோழர் ஜெயா என்னை தொடர்பு கொண்டார்.. அப்பொழுது அந்த தீர்மானம் குறித்து நாங்கள் இருவரும் விரிவாகவும் பேசினோம். அதில் நான் மிகத்தெளிவாக இருந்தேன். பொது வாக்கெடுப்பு என்பது இல்லாமல் ஒரு தீர்மானத்தினை வெளியிட முடியாது என்பதில் நான் மிக உறுதியாகவே இருந்தேன். அவரும் பொது வாக்கெடுப்பு வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதே நேரத்தில் அதனை எப்படி உள்ளடக்குவது என்பதெல்லாம் குறித்து எங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் நடந்து கொண்டிருந்தது.

  2.3.2. மன்னார் மாவட்ட ஆயர் தீர்மானத்தை வெளியிட்டார்.

 53. அம்மின்னஞ்சல் சங்கிலியிலிருந்த அனைத்து தோழர்களுமே இது குறித்து தான் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருந்தோம். இறுதியாக, அது ஒரு வடிவம் பெற்று 2014 மார்ச் மாதம் 5-ம் தேதியன்று மன்னார் மாவட்டத்தினுடைய ஆயர் மரியாதைக்குரிய ராயப்ப ஜோசப்பு அவர்கள் அதனை வெளியிட்டார் [155] , இதில் வேறு யாருடைய பெயரும் இடம் பெறவில்லை. மன்னார் மாவட்ட ஆயருடைய தீர்மானமாக, அவர் முன் மொழிந்த தீர்மானமாக தான் அது வெளியிடப்பட்டது. அந்தத் தீர்மானத்தினை அவர் சர்வதேச நாடுகள் அனைத்திற்கும் அனுப்பியும் வைத்தார். "இது தான் தமிழர்களின் கோரிக்கை, இதனை நீங்கள் தீர்மானமாக நிறைவேற்றித் தாருங்கள். அமெரிக்கா கொண்டு வரும் அயோக்கியத் தீர்மானத்தை அல்ல" என்று கோரியிருந்தார். அவர் 2014-ல் பல்வேறு நாடுகளுக்கும் மின்னஞ்சல் அனுப்பினார். இது குறித்து தமிழ்நெட்டிலும் கூட செய்திவெளியானது.

  2.3.3.தமிழ்நாட்டில் தீர்மானத்திற்கான ஆதரவு.

 54. அதற்குப் பிறகு இது குறித்து இங்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழீழ ஆதரவுக்கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களிடம் ஒப்புதல்பெற்று அவர்களையும் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ளச் சொல்லிக்கேட்டு இதனை வெளியிடலாம் என்று மே பதினேழு இயக்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. மன்னார் மாவட்ட ஆயர் வெளியிட்டதில் வட்டுக்கோட்டை தீர்மானத்தைப் பற்றிய மேற்கோள் அதில் இல்லை. ஆனால், நாம் வெளியிடக் கூடிய தீர்மானத்தில் அதனையும் இணைத்துக் கொள்வோம் என்று நினைத்தேன். திருமுருகன் அப்பொழுது, இது குறித்து குருபரனிடம் பேசிவிட்டு முடிவெடுங்கள் என்று கூறினார். தோழர் குருபரனிடம் நான் மின்னஞ்சலில் கேட்டேன்.


 55. அப்பொழுது அவர், "அப்படியே வட்டுக்கோட்டை தீர்மானம் என்று குறிப்பிடாமல் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட கொள்கைகளை ஏற்றுக்கொள்வதாக நீங்கள் குறிப்பிடலாம், அதில் எந்தவிதச் சிக்கலும் இருக்காது" என்றுஅவர் தெரிவித்தார். பிறகு இதனையெல்லாம் உள்ளடக்கி தீர்மானத்தில் மாற்றங்கள் செய்தேன்.மார்ச் மாதம் 16-ம்தேதி நாம் தி.நகர் பள்ளியில் ஒரு கருத்தரங்கத்தினை நடத்தி அந்தத் தீர்மானத்தினை வெளியிட்டோம். [156]

 56. இந்த தீர்மானம் குறித்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை மார்ச் 23 அன்று நடத்தினோம். [157], அந்தக் கருத்தரங்கில் மற்ற கட்சிகள், அமைப்புகளின் ஆதரவுகளோடு வெளியிடுவோம் என்று முனைந்தோம். பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடுவதற்கு முன்பு மார்ச் 22 ஆம் தேதியன்று இரவு 11 மணியளவில் நானும் திருமுருகனும் ஆர்காட் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது மே பதினேழு இயக்கத்தின் முன்னாள் தோழர் ராஜாராம்[158] , கூட எங்களை சந்தித்து பேசிவிட்டு சென்றார்.

 57. அவர் சென்ற பின்பு, நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது “ப்ரேமெனில் இந்தியா குறித்து தீர்ப்பு முழுமையாக வெளிவராததற்கு வைகோவின் பங்கு இருக்கிறது” என்று கூறினேன். அதற்கு திருமுருகன் “அவர் நம்மளை சந்திக்கவில்லை என்பதுனால மட்டும் எப்படி நீங்கள் சொல்ல முடியும்” என்று கேட்டார். “அப்போ அவர் 2000 த்துல தமிழின மக்களுக்கு ஆதரவா இருந்தார்னு சொல்லுறீங்களா திரு” என்று கேட்டேன். “நீங்கள் ஏன் திரும்ப 2000 பத்தியே பேசுறீங்க” என்று கேட்டார். “அதுனால தான் திரு அவர் அப்படியிருக்கிறார். 2000 க்கு பிறகு அவர் எதுவும் பேசவில்லை. இன்று தீர்மானத்துக்கும் அவர் ஆதரவ தர மறுக்கிறார்” என்றேன். அதற்கு “இல்லை ஆதரவை நான் வாங்கிக்கிறேன், நீங்கள் தீர்மானத்தை மட்டும் பாருங்கள். ஆதரவு வாங்கும் வேலையெல்லாம் நானே பார்த்துகிறேன்” என்றார். சரி என்று நானும் வந்துவிட்டேன். அடுத்த நாள் நான் அவரை சமாதானபடுத்தும் விதத்தில் “தோழமையுடன் தமிழ் செல்வன்” பதிந்த ஒரு நிலை தகவலை பதிந்தேன். அப்பொழுது தீர்மானமாவது வெளிவரட்டும் என்பதற்காக எந்த விதமான சண்டையும் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். அப்பொழுது அந்த தீர்மானத்தினை பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து வெளியிட்டோம்.[159] 58. அதற்கு ம.தி.மு.கவின் ஆதரவு இருந்ததாக கூறினார் ஆனால் ம.தி.மு.கவில் இருந்து யாரும் வரவில்லை. திருமுருகனின் வார்த்தையை மட்டும் அடிப்படையாக வைத்து ம.தி.மு.க ஆதரித்தது என்று நாம் போட்டு கொண்டோம்.

  2.3.4. தனது ஈழ விரோத செயல்பாட்டை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திய திருமுருகன்

 59. தமிழர் தீர்மானத்தைப் பொறுத்தவரை முதல் கட்டமாக தீர்மானத்தை ஈழத்தில் இருந்து மன்னார் மாவட்ட ஆயர் ஜோசப் ராயப்பு வெளியிட்டார். அதற்கு அடுத்த இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் இருக்க கூடிய பல்வேறு அமைப்புகளின் ஆதரவைபெற்று தமிழ்நாட்டிலும் வெளியிட்டோம். மூன்றாம் கட்டமாக புலம்பெயர் நாடுகளில் செயல்படும் ஈழத்தமிழர் இயக்கங்களின் ஒப்புதலையும் இதற்கு பெறவேண்டும் என்ற முயற்ச்சியினை இதற்கு மேற்கொண்டோம். அப்பொழுது தோழர் ரதீஷ்குமார் இந்த வேலையினை மேற்கொண்டார். தோழர் கிருஷ்ணா சரவணமுத்துவிடம் [160] ஒரு மின்னஞ்சலை அனுப்பினார்.

 60. இந்த உரையாடல்கள் tamilparithi70 மின்னஞ்சலில் அல்லாமல், எங்களுடைய மின்னஞ்சல் முகவரிகள் மூலமாகவே நடைபெற்றன. அப்பொழுது நடைபெற்ற மின்னஞ்சல் உரையாடல் மிக முக்கியமானது தோழர்களே. அதனை சற்று கவனியுங்கள் நான் அதனை ஒவ்வொரு பகுதியாக இங்கு இடுகின்றேன். புலம்பெயர் அமைப்புகளிடம் ஆதரவு பெற வேண்டும் என்று ரதீஷ் போட்டவுடன், திருமுருகன் அங்கு வந்து தனது கருத்தை பதிவு செய்தார். இது மிக முக்கியமானது. அதற்கான ஆதரவு பெற்றால் நல்லது என்று நிறைவு செய்தார்.
  உடனடியாக கிருஷ்ண சரவணமுத்து பல்வேறு ஈழ ஆதரவு இயக்கங்களிடம் பேசிவிட்டு, புலம்பெயர் அமைப்புகள் இதனை ஏற்றுகொள்கிறார்கள் என்று தகவலை தெரிவித்தார்.

 61. அடுத்தது ஈழத்தில் இருக்ககூடிய TNPF தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடைய ஆதரவும் இதற்கு இருக்கிறது. வெளியிடலாம் என்று கிருஷ்ணா குறிப்பிட்டார். அதே நேரத்தில் அவர் ஒரு கருத்தை தெரிவித்தார். TYO – Canada தமிழ் இளையோர் அமைப்பு, கனடா இந்த தீர்மானத்தில் Referendum என்ற ஒரு வார்த்தையை கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று கூறுகிறார்கள். பொதுவாக்கெடுப்பிற்கான நடைமுறைகள் அதில் பட்டியலிடப்பட்டிருந்தாலும் கூட பொதுவாக்கெடுப்பு என்ற வார்த்தை கண்டிப்பாக இடம்பெற வேண்டும் அப்பொழுது தான் ஆதரிக்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.


 62. அப்பொழுது நான் பொதுவாக்கெடுப்பு என்ற வார்த்தையை நேரடியாக பயன்படுத்தும் பொழுது அது ஈழத்தில் இருக்க கூடியவர்களுக்கு சிக்கல் ஏற்படும். ஏனெனில் அது 6 வது சட்டதிருத்ததிற்கு எதிரானதாக இருக்கும். இதனை நீங்கள் TNPF டம் கேளுங்கள். அவர்களுக்கு சரி என்றால் நாம் இதனை மேற்கொண்டு எடுத்து செல்லலாம் என்று கூறினேன். இந்த மின்னஞ்சலை நான் அனுப்பிய நேரம் 25 ஆம்தேதி மாலை 7 மணி 9 நிமிடத்திற்கு.

 63. உடனடியாக திருமுருகன் எனக்கு போன் செய்து, இப்பொழுது இருக்கும் தீர்மானத்தை ஜெயா கேட்டார். நீங்கள் அவருக்கு அனுப்பிவிடுங்கள். எனக்கும் ஒரு காப்பி(Copy) அனுப்பிவிடுங்கள் என்று கூறினார். நானும் சரி என்று திருமுருகனுக்கும், விஜய்க்கும் மின்னஞ்சல் அனுப்பி ஜெயா தோழருக்கு அனுப்பிவிடுங்கள் என்று குறிப்பிட்டு உடனடியாக அந்த மின்னஞ்சலை 25 ஆம் தேதி மாலை 7 மணி 11 நிமிடத்திற்கு அனுப்பிவிட்டேன்.


 64. சில நிமிடங்களிலேயே கிருஷ்ணா சரவணமுத்து பதிலளித்தார். TNPF க்கு Referendum என்னும் வார்த்தையில் சிக்கல் இருப்பதாக கூறவில்லை. அவர்களும் அதனை சரி என்று தான் கூறினார்கள் என்று தெரிவித்தார். அப்படியென்றால் இந்த திருத்தத்தை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என்று நான் Reply All என்பதற்கு பதிலாக அதனை Reply மட்டும் க்ளிக் செய்து கிருஷ்ணாவுக்கு பதில் அளித்திருந்தேன். சிறிது நேரத்திற்கு பிறகு கிருஷ்ணா எனக்கு பதில் அனுப்பியிருந்தார் “சகோதரரே அது எனக்கு மட்டும் தான் வந்திருக்கிறது என்று”. அப்பொழுது நான் வெளியில் சென்றுவிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு மின்னஞ்சலை திறந்து பார்த்தேன். அப்பொழுது கிருஷ்ணாவின் பதில் வந்திருந்தது. அதே நேரத்தில் (இரவு 9:46க்கு) திருமுருகன் அடுத்த தகவலை அதில் பதிந்திருந்தார். அது தான் நஞ்சு.

 65. அது என்னவென்றால் “ஜெயா தோழர் இந்த தீர்மானத்தை இன்னும் வலுவானதாக மாற்ற வேண்டும் என்று கூறினார். நாளைக்குள் அதனை தந்துவிடுவதாக உறுதியளித்திருக்கிறார். அதனால் அவர் பதில் அளிக்கும் வரை காத்திருப்போம்” என்று கூறினார்.

 1. உடனடியாக கிருஷ்ணாவும் பதிலளித்தார். ஓ... இப்பொழுது இதில் ஜெயா தோழர் சம்பந்தப்படுவது மிக முக்கியமானது. அவர் அவருக்கான நேரத்தை எடுத்து கொள்ளட்டும். கண்டிப்பாக அவருடைய பதிலை பெற்ற பிறகு நாம் தொடருவோம் என்று கூறினார். ஏனெனில் ஜெயா தோழரின் பங்களிப்பு முக்கியம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.


 2. இங்கே புலம்பெயர் அமைப்பினுடைய ஆதரவும், ஈழத்தில் இருக்ககூடிய அமைப்பின் ஆதரவும் ஒரு சேர கிடைக்கும் என்ற சூழல் வந்தவுடன் இது அடுத்த கட்டத்துக்கு நகர கூடாது என்று திட்டமிட்டு, யாருடைய பெயரை பயன்படுத்தினால் அனைவரும் அதற்கு பிறகு யாரும் செயலாற்ற மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டு தோழர் ஜெயாவின் பெயரை பயன்படுத்தி இந்த தீர்மானத்திற்கான ஆதரவை பெறும்முயற்சியினையும், தீர்மானத்தினை இன்னும் பரவலாக எடுத்து செல்லும் முயற்சியினையும் அப்படியே தடுத்து நிறுத்திவிட்டார். சரி அடுத்த நாள் வந்துவிடும் என்று தான் நானும் கூட நினைத்து கொண்டேன். இவர் தோழர் ஜெயாவுடன் பேசியிருப்பார் என்று தான் நினைத்துகொண்டேன். அதற்கு பிறகு அது குறித்து எந்த விதமான நகர்வுகளும் இல்லை.

 3. 2014 மே மாதம் 27 ஆம் தேதியன்று நான் இன்னொரு தகவல் பேசும் பொழுது நான் “அப்படியென்றால் தமிழர் தீர்மானம் குறித்து என்ன? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ?” என்று கேட்டேன். அன்று எங்களுக்குள் ஒரு வாக்குவாதம் நடைபெற்றது. அன்று மிக கோபமாக “தமிழர் தீர்மானம் பற்றி எல்லாம் இனிமேல் பேசாதீர்கள். அது எல்லாம் ஒன்றும் நடக்காது” என்று கூறினார். நான் ஒன்றும் பேசாமல் வெளியே வந்துவிட்டேன். அப்பொழுது நினைத்தேன் தோழர் ஜெயாவிடம் பேச வேண்டும் என்று. இவர் உண்மையிலேயே தோழர் ஜெயாவிடம் பேசி விட்டு தான் ப்ரேமனிலும், தமிழர் தீர்மான விடயத்திலும் ஜெயாவினுடைய பெயரை பயன்படுத்தினாரா அல்லது அவரிடம் பேசாமலேயே அவருடைய பெயரை பயன்படுத்தி இந்த வேலைகளை நடைபெறாமல் செய்திருக்கிறாரா என்று தெரிந்து கொள்ள நினைத்தேன். ஆனால் ஜெயாவிடம் உடனடியாக பேச வேண்டாம், முழுமையாக அனைத்து தகவல்களும் தெரிந்த பிறகு அவரிடம் பேசுவோம் என்று நான் முடிவு செய்து கொண்டேன்.

 4. இந்த ஆண்டு 2015, ஏப்ரல் மாதத்தில் நான் தோழர் ஜெயாவிடம் பேசினேன். அப்பொழுது நான் “தோழர் தமிழர் தீர்மானம் தொடர்பாக, நீங்கள் ஏதாவது மாற்றி தருகிறேன் என்று திருமுருகனிடம் கூறினீர்களா” என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லையே ”நாங்க தான் அந்த தீர்மானத்தையே தமிழ் நெட்டில் வெளியிட்டுடோமே” என்றார். வெளியிட்டதுக்கு பிறகு அதில் ஏதாவது மாற்றம் இருந்தால் அதனை நாங்கள் வெளிப்படையாகவே அறிவிப்போம். மாற்றம் பண்ணி தருகிறோம் என்றெல்லாம் நாங்கள் நிறுத்த மாட்டோம். அப்படி சரி செய்து தரேன்னு நான் பேசவில்லை என்றார். ஜெயா தோழர் உறுதியாக மறுத்துவிட்டார், திருமுருகன் தன்னிடம் இது குறித்து பேசவே இல்லை என்றும் தெரிவித்தார். அப்பொழுது எனக்கு திருமுருகன் ஜெயா தோழரின் பெயரை தவறாக பயன்படுத்தி இருக்கிறார் என்று உறுதியாக தெரிந்தது.

 5. ஏனெனில் அந்த தீர்மானத்தில் இருக்க வேண்டிய முக்கியமான பகுதிகள் குறித்து நானும் ஜெயா தோழரும் தான் பேசியிருக்கிறோம். நேரடியாகவே பேசியிருக்கிறோம். அப்படி இருக்கையில் இதனை இன்னும் வலுவாக்க வேண்டும் என்று எப்படி கூறியிருப்பார் என்று எனக்கு 2014 மே மாதத்தில் திருமுருகனிடம் பேசிய பின்பு தான் தோன்றியது. இந்த இடத்தில் ஒரு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பினை ஜெயா தோழரின் பெயரை பயன்படுத்தி தடை செய்திருக்கிறார் என்றால் இவருடைய செயல் எப்படிப்பட்ட அயோக்கியத்தனம் நிறைந்தது?. இவரா தமிழீழ விடுதலைக்காக போராட போகிறார் ? நீங்கள் இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான செயல்களை மேற்கொள்ளும் ஒருவரை நம்பி தான் தோழர்களே மே பதினேழு இயக்கம் நேர்மையான இயக்கம் என்று கூறி கொண்டிருக்கின்றீர்கள். ஜெயா தோழரின் பெயரை பயன் படுத்தி ஒன்றல்ல இரண்டு தருணங்களில் தமிழீழ விடுதலைக்கான முன் நகர்வினை முறித்து கொண்டிருக்கின்றார். இப்படி பட்ட அயோக்கியச் செயலை அம்பலப்படுத்துவதற்கான அனைத்து ஆதாரங்களையும் சேகரிக்க வேண்டும் என்று பொறுமையாக காத்து கொண்டிருந்தேன்.

 6. ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்பதற்காக tamilparithi மின்னஞ்சலை திறந்து அதிலிருந்து உரையாடல்களை screenshot எடுக்கலாம் என்று நான் 2015ஏப்ரலில் முயன்ற போது தான் தெரிந்தது, திருமுருகன் அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உரிய கடவுச்சொல் தொடங்கி அனைத்து தகவல்களையும் மாற்றிவிட்டார் என்று. (சில வாரங்களுக்கு முன், தமிழர் தீர்மானத்தை உருவாக்கிய குழுவில் இருந்த தோழர் ஒருவரிடம் இருந்து இங்கிருக்கக்கூடிய சில screenshot களைப் பெற்றேன்) சரி தமிழர் தீர்மானத்தின் base draft பிரபுகண்ணனின் மின்னஞ்சலில் இருக்கும், அவரிடம் இருந்து பெறலாம் என்று கருதி 2015 மே மாதத்தில் அவருக்கு போன் செய்தேன். பிரபு கண்ணன் தனது மின்னஞ்சலை திறந்து பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்து விட்டார். ஏனெனில், அவருடைய மின்னஞ்சல் கணக்கிலிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல் SentMail ல் இல்லை. வேறு எந்த folder களிலும் கூட இல்லை. குறிப்பிட்ட தேதியை கொடுத்து தேடிப்பார்த்தும் கூட, அதற்கு முந்தைய பிந்தைய வாரங்களிலும் தேடி பார்த்தும் அந்த base draft இல்லை. அது முழுமையாக அழிக்கப்பட்டிருந்தது.

 7. அப்படியென்றால் திருமுருகன், பிரபுகண்ணனின் மின்னஞ்சல் கணக்கில் இருந்து மின்னஞ்சலை அனுப்பிவிட்டு, அப்பொழுதே பிரபுகண்ணனின் மின்னஞ்சல்களை அழித்திருக்கின்றார். திருமுருகன் இந்த அளவிற்கு வஞ்சகமாய் செயல்களை மேற்கொள்வதை பார்க்கும் பொழுது, அவரது ரத்தம், சதை, நாடி, நரம்பு, எல்லாம் அயோக்கியத்தனம் நிறைந்திருப்பது போல் தான் எனக்கு தெரிகின்றது. இவரா ஈழவிடுதலைக்கு நேர்மையாக போராடுபவர் என்று கூறுகின்றீர்கள்? ஆக்கபூர்வமான செயல்களை முறியடிப்பதற்கு, ஜெயா தோழரின் பெயரை ஒருவர் பொய்யாக பயன்படுத்துகிறார் என்று தெரிந்தாலே போதும், அவர் யாரால் இயக்கப்படுபவர் என்று கூறிவிடலாம். என்னிடம் தோழர் ஜெயாவின் பெயரை இரண்டு முறை பொய்யாக பயன்படுத்தியவர், இன்னும் எத்தனை எத்தனை இடங்களில் இப்படி செய்தாரோ? ஜெயா தோழரின் பெயரை பயன்படுத்தி பொய் சொன்னவர் உங்களிடம் மட்டும் உண்மையா சொல்லிவிடப் போகிறார்?


 1. யாருடைய பெயரை பயன்படுத்தினால், மற்றவர்கள் மறுபேச்சு பேசாமல் கேட்டுக்கொள்வார்களோ, யாருடைய பெயரை பயன்படுத்தினால், மற்றவர்களால் எளிதில் தொடர்பு கொள்ள முடியாதோ, யாருடைய பெயரை பயன்படுத்தினால், அவரை தொடர்பு கொண்டாலும், நீங்கள் இப்படிச் சொன்னீர்களா என்று சரிபார்க்க மாட்டார்களோ, இவற்றையெல்லாம் விட யாருடைய பெயரை பயன்படுத்தினால், உண்மை தெரிய வந்தாலும், பயன்படுத்தப்பட்ட பெயரை வெளியில் சொல்ல முன்வரமாட்டார்களோ, அவரது பெயரை பயன்படுத்தி ஆக்கபூர்வமான வேலைகளை தடுக்கும் அயோக்கியத்தனமான செயலை மேற்கொள்ளும் திருமுருகன், ஜெயா தோழரின் பெயரை நான் பொதுவெளியில் பயன்படுத்தமாட்டேன் என்ற எண்ணத்தில்தான் தொடர்ந்து தவறுகள் செய்வதற்கு ஜெயா தோழரின் பெயரை பயன்படுத்தியிருக்கின்றார். திருமுருகன் கூறிய பொய்களை நீங்கள் உங்களுக்குத் தெரிந்த தொடர்புகளின் மூலம் (திருமுருகன் மற்றும் அவரது அடிப்பொடிகள் தவிர்த்து) ஜெயா தோழரிடம் சரிபார்த்து கொள்ளுங்கள். ஏனெனில், திருமுருகன் இப்பொழுது கூட, அடுத்த பொய்யாக “ஜெயா தோழரிடம் இப்பொழுதுதான் பேசினேன்; உமரிடம் அப்படியெல்லாம் நான் சொல்லவே இல்லை என்று கூறினார்; உமர்தான் பொய் சொல்லியிருக்கின்றார்” என்று ஜெயா தோழரை யாரும் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்னும் எண்ணத்தில் இன்னும் அடுக்கடுக்கான பொய்களை அள்ளி விடுவார்.


 1. ஆக்கபூர்வமான வேலைகளைத் தடுப்பதற்காக ஜெயா தோழரின் பெயரை பயன்படுத்தி பொய் சொன்ன திருமுருகன், நேர்மையானவர் என்று நம்புவதும், எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டும் என்று நம்புவதும் ஒன்றுதான்.


2.4. ராஜபக்சேயின் வருகையும், இந்தியாவைக் காக்க அலறித்துடித்த மே பதினேழும்

 1. 2௦14 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக ராஜபக்சே இந்தியாவிற்கு வர இருப்பதை எதிர்த்து மே பதினேழு இயக்கம் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை 2௦14 மே 25 ஆம் தேதியன்று வள்ளுவர் கோட்டத்தில் நடத்தியது.[161], அப்பொழுது அங்கு வந்திருந்த பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் பேசினார்கள். அங்கு பேசிய பலரும் ராஜபக்சேவை அழைத்தது தவறு, ராஜபக்சே கொடுங்கோலன் என்கிற ரீதியில் தான் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தை சேர்ந்த தோழர் கெளதம்[162] பேச வந்தார். அவர் மிக அழகாக, அறிவு பூர்வமாக தனது கருத்தினை பதிந்தார்.

 2. சார்க் (SAARC) நாடுகளின் தலைவர்களை அழைக்கின்றோம், அதன் அடிப்படையில் ராஜபக்சே வையும் அழைத்திருக்கின்றோம் என்று இந்திய அரசிற்கு ஆதரவாக செயல்படும் நபர்கள் பேசிக் கொண்டிருந்த பொழுது அதற்கான் மறுப்பாக தோழர் கெளதம் சார்க் அமைப்பினுடைய விதிகளை மேற்கோள் காட்டி, அந்த விதிகளின் படி ராஜபக்சேவை அழைத்தது தவறு என்று மிக அழகாக வாதிட்டார்.

 3. இதை தான் மே பதினேழு இயக்கம் தனது அடிப்படை நோக்கமாக கொண்டிருந்தது. அதாவது ஒரு அறிவுபூர்வமான பார்வையினை கொண்ட சமுதாயமாக வர வேண்டும் என்று விரும்பியது. இந்த அறிவுபூர்வமான பார்வையை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். மக்களும் அறிவு பூர்வமாக மாற வேண்டும் என்பது தான் மே பதினேழு இயக்கத்தினுடைய செயல்பாடாக இருந்தது. அதன் அடிப்படையில் தான் நாம் செயல்பட்டு கொண்டிருந்தோம். அங்கு பேசிய தோழர் கெளதம் அது போன்ற ஒரு பார்வையினை தான் மிக அழகாக வைத்தார். அப்பொழுது இவர் பேச பேச தொடர்ச்சியாக இந்தியா செய்த தவறுகள், இந்தியா செய்து கொண்டிருக்கும் தவறுகள் அம்பலமாகி கொண்டிருந்தன. அங்கு கூடியிருந்த தோழர்களுக்கு இருந்த பார்வையை மாற்ற கூடிய பேச்சாக தோழர் கௌதமினுடைய உரை இருந்தது.

 4. அது கண்டு பொறுக்க முடியாத அருள், வேகமாக வந்து என்னிடம் “நிறுத்திர சொல்லிறவா” என்று கேட்டார். அன்று மிக தெளிவாகவே எனக்கு புரிந்தது. மக்களுக்கு அறிவு பூர்வமான விடயம் போக கூடாது என்று மிக தெளிவாக இவர்கள் இருக்கிறார்கள் என்று புரிந்தது. நான் அதற்கு தலையை மட்டும் ஆட்டினேன். அவர் உடனடியாக சென்று கௌதமை தொட்டு, போதும் நிறுத்தி கொள்ளுங்கள் என்று கூறினார். மே பதினேழு இயக்கம் தனது Youtube சேனலில் தோழர் கௌதமின் உரையையும் ஏற்றியிருந்தது. சிறப்பாக பேசிக் கொண்டிருந்த கௌதமை நிறுத்தச் சொல்லி அருள் சொல்வது அந்தக் கானொளியில் மிகத் தெளிவாக தெரியும். உங்கள் அமைப்பின் youtube சேனல் நீக்கப்பட்டிருப்பதால், அந்தக் காணொளி தற்பொழுது இணையத்தில் இல்லை. தோழர் செந்தில் தன்னிடம் இருக்கும் backup லிருந்து இந்தக் காணொளியை பதிவேற்றினால், ஒரு அறிவுபூர்மான உரையை தடுத்து, அதன மூலம் இந்தியாவை காக்க இவர்கள் முயன்றது நன்றாக தெரியும். பிரேமன் மக்கள் தீர்ப்பாயத்தின் போது திருமுருகன் மீதான கோபத்தை வெளிகாட்டிய அருள், அதற்கு பிறகு எப்படி மாற்றப்பட்டிருக்கிறார் என்பதை கவனியுங்கள்.

 5. அந்த மிக முக்கியமான உரையை நிறுத்த சொன்னதற்கு இவர்கள் கூறிய காரணம் “மற்றவர்களும் பேச வேண்டும், இந்த ஆர்பாட்டம் மிக நீண்ட நேரமாக போய் கொண்டிருக்கிறது. முடித்து கொள்வோம்” என்று கூறினார்கள். ஆனால் அதற்கு பிறகு திருமுருகன் தான் பேசினார். நான் அதனை குறிப்பிடுவதற்கு முன்பு இன்னொரு சம்பவத்தை குறிப்பிட்டுவிடுகிறேன். கௌதமின் உரை பாதியில் முடிக்கப்பட்டவுடன் அங்கிருந்த தோழர் ஒருவர் (பெரும்பாலான போராட்டங்களில் பங்கெடுக்க கூடிய தோழர் அவர் எப்பொழுதுமே கோரிக்கை அடிப்படையில், கோரிக்கை சரியாக இருந்தால் வந்து பங்கெடுக்க கூடிய தோழர் அவர். நீங்களும் பல இடங்களில் அவரை பார்த்திருப்பீர்கள்.) அவர் கெளதமின் உரை பாதியில் முடிக்கப்பட்டதை பார்த்தவுடன் கோபம் கொண்டு என்னிடம் வந்து சண்டை போட்டார். “அந்த பையன் எவ்வளவு அழகாக பேசிட்டு இருக்கிறான் நீங்கள் எதற்கு பாதியில் நிறுத்த சொன்னீங்க” என்று கோபப்பட்டார். அதற்கு நான், இல்லை தோழர் நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது அதனால் நிறுத்த வேண்டியதா போயிற்று என்றேன். அதற்கு அவர் “என்ன நேரம் குறைவா போச்சு ? இங்க இருக்கிறவன் எல்லாம் என்ன பேசினான்? இந்த பையன் பேசிறத விடயத்தை கேட்க தான் எல்லாரும் இங்கே உட்கார்ந்திருக்கிறோம். நீங்கள் இப்படி செய்தீர்கள் என்றால் நீங்களும் மற்ற அமைப்பு மாதிரி தான் இருக்குறீங்க” என்று மிக கடுமையாக திட்டிவிட்டு போய் அமர்ந்து கொண்டார்.

 6. அதற்கு பிறகு திருமுருகன் வந்து பேசினார். திருமுருகன் பேசியதை செந்தில் வெளியிட்டால் பாருங்கள் தோழர்களே. சீமான் பேசியது போன்றிருக்கும். சீமான் பேசுவதில் வெறும் ஆவேசம் இருக்கும் உள்ளடக்கம் இருக்காது. திருமுருகன் அன்று பேசியதிலும் “ராஜபக்சே அன்று அழைத்ததில் எப்படி தவறு என்பதை பற்றி எந்தவிதமான தர்க்கமும் இல்லை, தகவலும்இல்லை” மேலோட்டமாக பேசக்கூடிய சாதாரணமான பேச்சு. சற்று சத்தம் எழுப்பி கோபமாக பேசிவிட்டால் போதும் என்பதாக தன்னுடைய பாணியை மாற்றி கொண்டு சீமான் போல பேசிவிட்டு சென்றார்.

 7. அன்று கெளதம்பேசி திருமுருகன் பேசாமல் இருந்திருந்தால் கூட குடி முழுகி போயிருக்காது. ஏனென்றால் கௌதமின் உரை அவ்வளவு சிறப்பானது. ஆனால் அப்படிப்பட்ட உரையை மக்கள் கேட்க கூடாது என்று விரும்புவதாக தான் மே பதினேழு இயக்கம் மாறுகிறது. இப்பொழுது யோசித்து பாருங்கள் தோழர்களே. அதன் பிறகு எங்காவது தோழர் கெளதம்மிற்கு வாய்ப்பு அளிக்கப்படிருக்கிறதா என்று.? ஏன் தோழர்களே ?? கௌதமுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவர் ஆதாரங்களை எடுத்து வெளியில் வைத்து, மற்றவர்கள் இந்தியாவினுடைய உண்மை முகத்தை புரிந்துகொள்வார்கள் என்று அச்சமா ?

 8. இதில் இன்னொரு விடயத்தையும் கூட நீங்கள் கவனிக்கலாம் தோழர்களே. அன்று ராஜபக்சே வந்தவுடன் அதற்கு எதிராக ஆர்பாட்டம் செய்த மே பதினேழு இயக்கம் இந்த வருடம் இலங்கையினுடைய அதிபர் மைத்திரி பால சிறிசேனா இந்தியாவிற்கு வந்தபொழுது எந்த எதிர்ப்பும் காட்டவில்லையே. இலங்கையினுடைய அதிபரை இந்தியாவுக்கு அழைத்தால் ஒவ்வொரு முறையும் பிரதமரின் இல்லத்தை முற்றுகையிடுவேன் என்று கூறிய திருமுருகனின் இம்மீடியட் பாஸ் (Immediate Boss) வைகோவும் மொளனம் காத்து பதுங்கிகொண்டாரே. அப்படியென்றால் இனப்படுகொலை என்பதே நடக்கவில்லை, அதில் மைத்திரி பாலசிறிசேனாவுக்கு பங்கு இல்லை என்று கூற வருகிறார்களா ? சிந்தியுங்கள்தோழர்களே.

  2.5. .சிதம்பரத்தைக் காக்க குட்டிக்கரணம் அடிக்கும் திருமுருகன்.

 9. 2014 ஆகஸ்டில் நானும், திருமுருகனும் லதனுடன் பேசிகொண்டிருந்தோம். நாங்கள் பேசிக்கொண்டிருந்த போது பிரவீனும், அருளும் உடனிருந்தனர். லதனை பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.[163] , தற்பொழுது ஐரோப்பிய கூட்டமைப்பில் விடுதலைபுலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்திக்கொண்டிருக்க கூடிய தோழர். அதற்கு முன்பாகவே அவர் தோழர் ராஜீவனுடன் சேர்ந்து வெள்ளைகொடி படுகொலைகள் தொடர்பான ஒரு வழக்கினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கின்றார்.[164] அந்த வழக்கில் இலங்கை அரசின் “பலித்தகொஹன்னா” (Palitha Kohono) மீது குற்றம் சுமத்தி பல்வேறு ஆதாரங்களுடன் அந்த வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

 10. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒருவர் மீது வழக்கு தொடுக்க வேண்டுமென்றால் குற்றம் சுமத்தப்படும் நபர் ரோம் உடன்படிக்கையில் (Rome Statute) கையெழுத்திட்ட, ரோம் உடன்படிக்கையை சட்டபூர்வமாக ஏற்று கொண்ட நாட்டினுடைய குடிமகனாக இருந்தால் மட்டுமே அது நடைமுறை சாத்தியம். அப்படியில்லை என்றால் அதற்கு வேறு வழி ஒன்று உண்டு. ஐ.நாவினுடைய பாதுகாப்பு சபை மூலமாக வழக்கினை தொடுத்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கினை ஏற்றுகொள்வார்கள். இந்த வெள்ளைகொடி படுகொலையில் பலர் தொடர்பு கொண்டிருந்தால் கூட அவர்கள் அனைவரும் இந்திய குடிமகனாகவோ, இலங்கை குடிமகனாகவோ இருப்பதால் இந்த இருநாடுகளும் ரோம் உடன்படிக்கையை சட்டபூர்வநடைமுறைக்கு உடன்படுத்தாதாலும் [165] அவர்கள் மீது நேரடியாக வழக்கு தொடர வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றது ஆனால் “பலித்தகொஹன்னா” ஆஸ்திரேலியாவின் குடியுரிமையும் பெற்றிருக்கின்றார். அதனால் ரோம் உடன்படிக்கையை சட்டபூர்வ நடைமுறைக்கு உடன்படுத்திய ஆஸ்திரேலிய குடிமகன் மீது வழக்கு தொடுப்பதில் எவ்விதசிக்கலும் இல்லை.“பலித்தகொஹன்னா” மீது ஆதாரங்களை திரட்டி வழக்கு தொடுப்பது என்பது தோழர் லதணும், ராஜீவனும் சாத்தியப்படுத்திருக்கின்றனர்.

 11. 2009, மே 18 அன்று வெள்ளைக் கோடி ஏந்தி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட குற்றத்தில், பலித்த கொஹனா தவிர மேலும் பலரும் கூட ஈடுபட்டிருக்கின்றனர். வெள்ளைக் கொடி ஏந்தி வருபவர்கள் கொல்லப்பட மாட்டார்கள் என்ற வாக்குறுதியை அளித்த அனைவருமே இதில் குற்றவாளிகள். இந்தச் சம்பவத்திலோ, அல்லது அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற வேறு சம்பவங்களிலோ காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருக்கின்றது. அந்தத் தொடர்புகளை சுட்டிக்காட்டி, அவர் மீதும், இந்தியாவில் இருக்கக்கூடிய மற்றவர்கள் மீதும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வாய்ப்பிருக்கிறதா என்று ஆராயலாம் என்று எண்ணிக்கொண்டு பலித்த கொஹனா தவிர மற்றவர்கள் மீதும் வழக்கு பதியும் வாய்ப்புகள் இருக்கின்றனவா என்று நான் லதனிடம் பேசத் தொடங்கினேன். நான் லதனிடம் கூற தொடங்கியதும் உடனடியாக திருமுருகன்,”நாம் மீண்டும் மீண்டும் சர்வதேசம் விதிக்கும் நடைமுறைகளில் சிக்கிகொள்ள வேண்டாம், நாம் நம்முடைய வேலையை மட்டும் பார்ப்போம்” என்று கூறி வேறுவிடயங்களை பேச தொடங்கிவிட்டார். இதனை தோழர் லதனும் கவனித்திருக்கின்றார்.

 12. ஏனென்றால் அன்று லதனுடன் மேற்கொண்ட அந்த உரையாடல் என்பது மிக முக்கியமான உரையாடல். அந்த வெள்ளைகொடி படுகொலைகள் மீது முறையாக விசாரணை நடைபெற்றால் அதில் தமிழ்நாட்டை சேர்ந்த பலரும் கூட சிக்கப்படுவார்கள். இதற்கான ஒரு சட்டப்பூர்வ வழி இருக்கின்றதா என்று ஆராயலாம் என்று நான் லதனிடம் பேச தொடங்கிய உடனே திருமுருகன் அதனை மறுத்து பேசி வேறு விடயங்களை பற்றி பேச தொடங்கிவிட்டார். வேறு விடயங்களை பற்றி பேச தொடங்கினாலும் அதனை ஆக்கப்பூர்வமாக பேச தொடங்கினாரா என்றால் இல்லை. அன்று எல்லாம் இவருடைய சொந்த பிரச்சனைகள் சம்பந்தமாக தான் அவரிடம் பேசி கொண்டிருந்தார். ஈழ விடுதலை சார்ந்து அல்லது ஈழ இனப்படுகொலைக்கான நியாயம் கோரி முன்னெடுக்க கூடிய ஆக்கப்பூர்வமான விடயம் எதுவும் இல்லை. அது நியாயம் கோரி நடைபெறகூடிய ஒரு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பிற்கான பேச்சினை நான் தொடங்கிய உடனே அப்படியே நிறுத்திவிட்டார். இதனை தோழர் லதனும் கவனித்திருக்கின்றார். திருமுருகன் அவ்வளவு துடித்து உரையாடல் அந்தத் திசையில் செல்லாமல் இருக்க வேண்டும் என்று குட்டிக்கரணம் அடித்தது எல்லாம், ப.சிதம்பரத்தின் மீது எந்த வழக்கும் பதிவாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான். 2009 ல் ப.சிதம்பரத்தை எதிர்த்து தேர்தலில் பரப்புரை மேற்கொண்ட திருமுருகன் இன்று அதே ப.சிதம்பரத்தை காக்க முனைவது ஏன் என்பதை கடைசியில் பேசுகின்றேன்.

  2.6. இந்திய அரசின் உளவியல் போரின் கூட்டுக் குற்றவாளி திருமுருகன்

 13. புலிப்பார்வை படம் எவ்வளவு ஆபத்தான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இங்கே தயாரிக்கப்பட்டு வருகின்றது என்று நான் இந்த கடிதத்தின் ஆரம்பத்தில் விரிவாக பேசியிருக்கின்றேன். அதனால் இங்கு நான் அந்த திரைப்படத்தை பற்றி பேசவில்லை. மேலும் கத்தி திரைப்படமும், சிங்கள முதலீட்டாளர்களின் கைகளுக்குள் தமிழ் திரைத்துறையை கொண்டு சென்று சேர்க்கும் ஒரு முயற்சியாகத் தான் மேற்கொள்ளப்பட்டது. அந்த திரைப்படங்களை ஒட்டிமே பதினேழு இயக்கம் மேற்கொண்ட செயல்களை பற்றி மட்டும் நான் இங்கு பேசுகின்றேன். எப்பொழுதுமே அரசுகள் மக்கள் மனதில் நஞ்சை விதைப்பதற்கு மக்கள் மத்தியிலிருந்தே ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக தான் அந்த கருத்தினை விதைக்கும் அதுபோன்று இந்த புலிப்பார்வை படத்திற்கு ஆதரவாக சீமானையும் வைகோவையும் களமிறக்கியது.

 14. உங்களுக்கு ஒரு நிகழ்வு நினைவிருக்கும் தோழர்களே காமன்வெல்த் மாநாடு தொடர்பாக 2013-ல் தியாகு உண்ணாவிரதம் இருந்த பின்பு மே பதினேழு இயக்கத்தின் சார்பில் ஒரு கட்டுரை புருஷோத்தின் பெயரில் வெளியிடப்பட்டது. அதில் ட்ரோஜன் குதிரையும் தமிழர்களும் என்ற அந்த கட்டுரையில் [166], திமுக எனும் ட்ரோஜன் குதிரையை சினானாக சிலர் இருந்து உள்ளே கொண்டுவந்து சேர்த்துவிட்டனர் என்று திருமுருகன் பொங்கி இருந்தார். அப்பொழுது அவ்வளவு பொங்கிய திருமுருகன் இங்கு ட்ரோஜன் குதிரையை போல பலமடங்கு பலம் வாய்ந்த இந்திய உளவுத் துறையினுடைய செயல்பாடு சர்வசாதாரணமாக உள்ளே வரும் பொழுது ஏன் கோபம் கொள்ளவில்லை?

 15. ஏனெனில் இவரும் அந்த செயல் திட்டத்தின் ஒரு அங்கம். இதை எதிர்ப்பது போல் ஒரு வேடம் மட்டும் தான் இட்டார். உங்களுக்கு நன்றாக தெரியும் 2014 பிப்ரவரி மாதத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக ஒரு கூட்டம் நடைபெற்றபொழுது அங்கு சென்று பேசி அந்த கூட்டத்தை அமெரிக்க தீர்மானத்திற்கு எதிரானதாக மாற்றினோம் அப்படிப்பட்ட நாம் இங்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஒரு தெளிவற்ற கோரிக்கையை முன் வைத்திருந்தாலும் கூட தெளிவானவராக தன்னை அறிவித்துக்கொள்ளும் திருமுருகன் ஏன் அங்கு கோரிக்கை தவறு என்று வலிமையாக வாதாடவில்லை. இதிலிருந்து நீங்கள் புரிந்துகொள்ளுங்கள் அவர் இத்திரைப்படம் வரவேண்டும் என்றுதான் விரும்பினார். உதட்டளவில் பெயரளவில் அதை எதிர்க்கிறோம், புறக்கணிக்கிறோம் என்று பேசிவிட்டு திரைப்படத்திற்கு எதிராக செயலாற்றாமல் இருப்பதற்காகவே தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பிற்குள் சென்று பதுங்கிகொண்டார். இந்த செயலும் கூட இந்திய உளவுத் துறையின் வழிகாட்டுதலில் திருமுருகன் மேற்கொண்டது தான்.

  2.7. இனப்படுகொலைப் பங்காளியுடன் திருமுருகன் மேற்கொண்ட சந்திப்பு

 16. தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைப் போரில் பங்காளியாக இருந்த ஒரு இனப்படுகொலையாளி 2014 அக்டோபரில் சென்னைக்கு வந்தார். அவர் யார் என்பதை இக்கடிதத்தின் கடைசியில் குறிப்பிடுகின்றேன். திருமுருகனுக்கும், அந்த இனப்படுகொலையாளிக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. அந்தச் சந்திப்பிற்கு பிறகு, திருமுருகன் என்னென்ன செய்தார் என்பதை இப்பொழுது பார்ப்போம். நீங்கள் அனைவரும் அக்பர்-பீர்பால் கதைகள் பலவற்றை படித்திருப்பீர்கள். அவற்றுள் ஒரு கதையில், அக்பர் ஒரு கோடு வரைந்து, அந்தக் கோட்டை அழிக்காமல் அதை சிறியதாக்க முடியுமா என்று கேட்பார். பீர்பால், அதை விட பெரிய கோட்டை வரைந்து, அக்பர் வரைந்த கோட்டை சிறியதாக்குவார். அது போன்ற ஒரு நகர்வோடு, பல்முனை நோக்கங்களை நிறைவேற்ற திருமுருகன் களமிறங்கினார்.

 17. தமிழ் ஈழ இனப்படுகொலையில் சர்வதேச சதி என்னும் தலைப்பில் மே பதினேழு இயக்கம் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சென்னை தியாகராய நகர் பள்ளியில் கருத்தரங்கம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. [167] அந்தக் கருத்தரங்கிலும், அதற்கு பின்பும், இனப்படுகொலையாளியோடு உரையாடியவற்றை நடைமுறைப்படுத்தினார் திருமுருகன். கருத்தரங்கு தொடர்பாக நடைபெற்றவற்றை ஒவ்வொன்றாக பதிகின்றேன்.

 18. கருத்தரங்கம் குறித்து பல்வேறு பதிவுகளை, பல்வேறு தோழர்களும் பதிவிட்டு வந்தீர்கள். அதில் கொண்டல் அமெரிக்கா குறித்து வெளியிட்டிருந்த தகவல்களைப் பார்த்து நான் கூட அதைப் பாராட்டி ஒரு நிலைத் தகவலும் இட்டேன்.[168]

  கொண்டல் நன்றியும் கூடச் சொல்லியிருந்தார். நன்றியை எதிர்பார்த்து நான் செய்யவில்லை. ஆனால், அவர் வந்து நன்றி கூறியது அவருடைய நல்லெண்ணம்.

 19. அதே நேரத்தில், பன்னீர் இந்தியாவின் பங்கு குறித்து ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டது 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியப் பாராளுமன்றத்தில் டி.ராஜா இனப்படுகொலை என்று பேசிய பொழுது தி.மு.க அதனை எதிர்த்துப் பேசியது என்று குறிப்பிட்டிருந்தார். நான் அந்தப் பதிவை பார்த்தவுடன் அதில் சென்று ஒரு பின்னூட்டம் இட்டேன். "2009 டிசம்பர் மாதத்தில் ஈழம் குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறவில்லை. தேதிகளை சரி பார்த்துக்கொள்ளுங்கள்" என்று இட்டேன். உடனடியாக, பன்னீர் Chatக்கு வந்து, "ஒரு கட்டுரையில் அதைப் படித்தேன். அதனால் தான் போட்டேன்" என்றார்.

 20. அதற்கு நான் பதிலளித்தேன். "தகவல்களை கொடுக்கும் பொழுது தேதியும் நேரமும் மிக முக்கியமானவை. தேதியின் அடிப்படையில் தான் சர்வதேச அளவில் என்ன நகர்வுகள் நடைபெற்றிருக்கின்றன என்று புரிந்து கொள்ள முடியும். நீங்கள் கொடுக்கக்கூடிய தகவல் தவறாக இருந்தால் ஒட்டுமொத்த தகவலும் தவறானது என்று கருதக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அதனால் தவறான தகவல்களை பதிவிடாதீர்கள்" என்றேன். "சரி வேறு தகவல் இருந்தால் கொடுங்கள்" என்றார். நான் அவருக்கு சில மின்னஞ்சல்களை அனுப்பினேன்.


 21. அவற்றில் ப்ரேமெனில் நான் சமர்ப்பித்த வாதங்களும் அடக்கம். நான் சமர்ப்பித்த வாதங்களில் இந்தியா ராஜதந்திர உதவியில் இலங்கைக்கு 2009-ல் எப்படி உதவியது என்பது குறித்தது. "மற்ற தகவல்கள் திருவின் லேப்டாப்பில் இருக்கும், பார்த்து எடுத்துக்கொள்ளுங்கள், திருவிடம் கேளுங்கள்" என்றும் கூறினேன். அவர் திருமுருகனிடம் கேட்டிருப்பார் என்று தான் நினைக்கின்றேன்.

  பிறகு, பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் அவர் பேசினார். இதில், நீங்கள் திருமுருகனின் திருட்டுத்தனத்தை பல்வேறு வகைகளில் புரிந்துகொள்ள முடியும்.

  2.7.1. திருமுருகன் வரைந்த பெரிய கோடு

 22. முதலில், மனோஜுக்கும் கொண்டலுக்கும் இனப்படுகொலையில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் பங்கு குறித்து பேச 50 நிமிடங்களும், 30 நிமிடங்களும் கொடுத்தவர்கள் பன்னீருக்கு 10 நிமிடம் கூட கொடுக்கவில்லை. அவருக்கான நேரத்தில் முதல் 2 நிமிடம் லேனா பேசிக்கொண்டிருந்தார்.[169] பிறகு பன்னீர் வந்து பேசத் தொடங்கியவுடன் 8 நிமிடங்களில் ஒரு துண்டுச்சீட்டை நீட்டுகிறார்கள். துண்டுச் சீட்டைப் பார்த்தவுடன் பன்னீர் பதட்டமடைந்து என்ன பேசுவது என்று தெரியாமல் பேச்சை விரைவாக முடித்துக் கொள்கின்றார். அங்கு ஆய்வுகளை சமர்ப்பிப்பதற்காக பன்னீர் வந்திருக்கிறார் என்றால், அந்த ஆய்வுகளை சமர்ப்பிப்பதற்கான முழுமையான நேரம் கொடுக்கப்பட வேண்டும். மற்றவர்களுக்கு முழுமையான நேரம் கொடுத்துவிட்டு இதற்குக் குறைவான நேரம் கொடுக்கிறார்கள் என்றால் இந்த ஆய்வினை சமர்ப்பிக்கக் கூடாது என்பது தான் முதல் நோக்கம். அதிலும், காலச்சுவடு பத்திரிகையை எடுத்து வைத்துக்கொண்டு அதனுடைய லே-அவுட்டில் புகைப்படங்களுக்கு ஒதுக்கப்படும் இடத்தின் அளவில் இருக்கும் அரசியல் குறித்தெல்லாம் பேசும் திருமுருகன், ஒரு கருத்தரங்கத்தில் ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒதுக்கும் நேரத்தில் இருக்கும் அரசியல் தெரியாமலா, இந்தியாவின் பங்கு குறித்து பேசும் பன்னீருக்கு குறைவான நேரம் ஒதுக்குகின்றார்?

 23. அதற்காக அமெரிக்காவோ, பிரிட்டனோ இனப்படுகொலையில் பங்காளிகள் இல்லை என்று நான் கூறவில்லை. அந்தப் பங்காளிகளை பற்றி நீட்டி முழக்கி பேசிவிட்டு, இன்னொரு பங்காளியைப் பற்றி சுருக்கமாக பேசினால், பார்ப்பவர்களின் மனதில் என்ன தோன்றும்? அமெரிக்காவும், பிரிட்டனும் தான் பெருமளவில் இனப்படுகொலையில் பங்களித்திருக்கிறார்கள், இந்தியாவின் பங்கு மிகச் சிறிய அளவில் தான் இருந்திருக்கின்றது என்று தானே எண்ணத்தோன்றும். அதனைத்தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் மெதுவாக செய்தார்.

 24. இந்த நேர அரசியலை விடவும் மிக முக்கியமாக நான் பார்ப்பது, இந்தியாவின் பங்கு குறித்த தலைப்பில் பேச பன்னீரை தேர்ந்தெடுத்ததில் இருக்கும் அரசியலைத் தான். இந்தியாவின் பங்கு குறித்த பல்வேறு ஆதாரங்களையும் நான் தொடர்ச்சியாக மேக்ஸ்வின்னுக்கு அனுப்பி வந்திருக்கிறேன். சொல்லப்போனால், திருமுருகனுக்கு என்ன தெரியுமோ, எனக்கு என்ன தெரியுமோ அந்த அளவுக்கு மேக்ஸ்வின்னுக்குத் தெரியும். அதுவும் இல்லாமல் மேக்ஸ்வின் இயல்பாகவே இதுபோன்ற தகவல்களை தேடி எடுக்கக்கூடியவர்.


 25. பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்துக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும், அதாவது இந்தியா குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பியிருந்தால் அதனை மேக்ஸ்வின்னுக்குத் தானே கொடுத்திருக்க வேண்டும். அல்லது கவுதமுக்குக் கொடுத்திருக்க வேண்டும். பன்னீருக்கு கொடுத்தது எந்த அடிப்படையில்? இங்கே நான் பன்னீரை திறமையற்றவர் என்று கூறவில்லை, பன்னீருக்கு வேறு ஒரு திறமை இருக்கின்றது. இந்த ஆய்வுகளை மேற்கொள்வதும் அவற்றை வழங்குவதுமான வேலைக்கு திறமையானவர்கள் மேக்ஸ்வின்னும், கவுதமும். அவர்களைப் பயன்படுத்தாமல் பன்னீரை பயன்படுத்துவது என்பதே முழுமையான தகவல்கள் பதியப்படக்கூடாது. அப்படியே பதிந்தாலும் அங்கு வந்து பேசுவதற்கு முழுநேரம் கொடுக்கப்படக்கூடாது என்பது தான். மேக்ஸ்வின்னை நாங்கள் வெளியில் அடையாளம் காட்ட விரும்பவில்லை. அதனால்தான், அன்று அவரைப் பேசச் சொல்லவில்லை என்றும் திருமுருகன் ஒரு சப்பைக்கட்டுக் காரணம் கூறலாம். ஆனால், அந்த வாதம் அடிப்படையிலேயே தவறானது. ஏனென்றால், 2014 ஐ.நா. அலுவலக முற்றுகையின் போது, ஐ.நா. அலுவலர்களுடன் பேச்சு நடத்த மேக்ஸ்வின்னைத்தான் நாங்கள் அழைத்துச் சென்றோம். மேக்ஸ்வின்னோ, கவுதமோ வாய்ப்பு கிடைத்தால், முழுமையாக இந்தியாவிற்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி விடுவார்கள். அது நடைபெறக் கூடாது என்னும் நோக்கில்தான் அவர்களுக்கு அன்றைய தினம் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 26. மூன்றாவதாக, ஒன்று நடக்கிறது பாருங்கள் தோழர்களே. பன்னீர் பேசும் பொழுது இந்தியாவினுடைய நிலைப்பாடு எப்படி இருந்தது என்பதை பேசுகிறார். வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ரேடியோ நிலையம் அமைக்கும் போது அதை இந்தியா எதிர்க்கிறது என்று கூறுகின்றார். அமெரிக்காவினுடையை தலையீடை எதிர்த்து இந்தியா , தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கிறது என்கிறார். பிறகு அமெரிக்காவின் ஆலோசனைப்படிதான் இந்தியா செயல்பட்டதாக கூறுகின்றார்.

 27. அப்படியென்றால், அதற்கு முன்பு அமெரிக்காவை எதிர்த்தவர்கள், எதிர்த்து சில வேலைகளைச் செய்தவர்கள் இங்கு அமெரிக்காவின் ஆலோசனைப்படி செய்கிறார்கள் என்றால் என்ன மாற்றம் ஏற்பட்டது என்பதை விரிவாகப் பேச வேண்டும் அல்லவா? இதில் இன்னொரு சூட்சுமமும் இருக்கிறது. அமெரிக்காவின் ஆலோசனைப்படி என்று கூறுகிறார்கள். அப்படியானால், இந்தியா தன்னிச்சையாக இந்த ராணுவ உதவிகளை, இந்த இனப்படுகொலைப் போரில் பங்கெடுத்ததை செய்யவில்லை என்று கூற வருகிறார்களா.? அமெரிக்கா எஜமானராக இருந்து உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்தியா செய்தது என்று சொல்ல வருகிறார்களா? அப்படிச் சொன்னால், இனப்படுகொலை செய்யவேண்டும் என்னும் நோக்கமெல்லாம் இந்தியாவிற்கு கிடையாது; அமெரிக்கா சொன்னதால்தான் செய்தார்கள் என்று நீங்கள் கூறுவதாக அர்த்தம். இனப்படுகொலை நடத்த வேண்டும் என்னும் நோக்கம் இந்தியாவிற்கு இல்லை என்று நீங்கள் கூறுவதாக அர்த்தம்.

 28. இனப்படுகொலையை நடத்துவதற்காக இந்தியா கப்பல் கொடுத்ததை, விடுதலைப் புலிகள் தாக்க வந்தபோது எதிர்கொள்வதற்காக இந்தியா கப்பல் கொடுத்ததாக தீர்ப்பாயத்தில் திரித்த திருமுருகன், இனப்படுகொலையை போராக சுருக்கிய திருமுருகன், பன்னீர் மூலம், அந்தக் கப்பலையும் கூட அமெரிக்காவின் ஆலோசனைப்படி தான் கொடுத்தது என்று பொய் சொல்லச் சொன்ன அயோக்கியத்தனத்தை என்ன வார்த்தை கொண்டு அழைப்பீர்கள் தோழர்களே? 2000-ல் இந்தியா செய்த உதவிகள் பலமட்டத்தில் இருக்கின்றன. இராணுவ உதவிகளாக, பொருளாதார உதவிகளாக, ராஜதந்திர உதவிகளாக, இராணுவத் திட்டமிடலாக இருக்கின்றன. அதையெல்லாம் குறிப்பிடாமல் அமெரிக்கா ஆலோசனையின் பேரில் இந்தியா உதவி செய்தது என்பதன் மூலம் இந்தியா தன்னிச்சையாக செயல்படவில்லை என்பதாக கட்டமைக்க முயல்கிறீர்களா?

  2.7.2. குற்றவாளிகளை காப்பதற்காக திருமுருகன் நடத்திய நாடகம்

 29. நீங்கள் நடத்திய கருத்தரங்கத்தில், இன்னொரு வேலையையும் திருமுருகன் செய்தார். ஐ.நா.வின் விசாரணைக் குழு சாட்சியங்களைக் கோரி இருந்த காலம் அது. சாட்சியங்களை அனுப்ப கடைசி தேதி என்று அக்டோபர் 31 ஐ குறிப்பிட்டிருந்தார்கள். அந்த விசாரணைக் குழுவும், ஐ.நா.வும் நம்பிக்கையற்றதாக இருந்தாலும், சாட்சியங்கள் அங்கு பதிவாக வேண்டியது மிக மிக முக்கியமானது. பத்தி எண்கள் 158 முதல் 161 வரை சாட்சியம் அளிக்கும் வேலையில் நான் பங்கெடுத்ததையும், அளிக்கப்பட்ட சாட்சியங்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று கோரவும் வாய்ப்பிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன்.

 30. இது தவிர உங்களிடம் பல வகுப்புகளில், சிட்னியில் இருக்கும் ICEP அமைப்பு [170] இலங்கை அரசுக்கு எதிரான சாட்சியங்களை பதிவு செய்திருப்பதையும், அந்த சாட்சியங்களைக் கொண்டு, வேறு நீதிமன்றங்களில் வழக்கு நடத்த முடியும் என்று நான் குறிப்பிட்டிருக்கின்றேன். ஆப்ரிக்காவில் இருக்கும் சாட் (Chad) தேசத்தின் முன்னாள் அதிபர் ஹிஸேன் ஹாப்ரே (Hissene Habre) மீது பெல்ஜியம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சாட்சியங்களும் அளிக்கப்பட்டு, [171] செனகலில் (Senegal) தஞ்சமடைந்த அவரை கைது செய்யச் சொல்லி பெல்ஜியம், ஆப்ரிக்க ஒன்றியத்திற்கு நெருக்கடி கொடுத்ததையும், அந்த அழுத்தத்தின் அடிப்படையில், சாட் தேசத்தில் நடைபெற்ற குற்றங்களை விசாரிக்க செனகலில் நீதிமன்றம் அமைக்கப்பட்டதையும்[172] பல முறை நான் உங்களுக்கு எடுத்துக்கூறி, ஈழ இனப்படுகொலையில் பங்கெடுத்தவர்கள் மீதும், இதுபோல் ஆதாரங்களையும், சாட்சியங்களையும் பதிவு செய்வதன் அவசியம் குறித்து பலமுறை பல கூட்டங்களிலும் உங்களிடம் பேசியிருக்கின்றேன்.

 31. ஈழ இனப்படுகொலையில் பங்கெடுத்தவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு செய்வதற்கான ஒரு வழிமுறை உருவாக்கப்பட்டபோது, எவ்வளவு சாட்சியங்களை அதில் பதிவு செய்ய வைக்க முடியுமோ அதனை செய்வதுதான், ஈழ விடுதலையை உண்மையாக நேசிப்பவர்கள் செய்யக்கூடிய செயல். ஆனால், உங்களுடைய கருத்தரங்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்கு எதிராக பேசி, இலங்கை அரசுக்கு எதிரான சாட்சியங்கள் பதிவாகாமல், விடுதலைப் புலிகளுக்கு எதிரான பொய் சாட்சியங்கள் மட்டும் பெருமளவில் பதிவாகும் சூழலை திருமுருகன் உருவாக்கினார். இப்படிப்பட்ட செயலால் பயனடையப்போவது தமிழர்களா? இல்லை தமிழர்களை அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் இலங்கை, இந்திய அரசுத் தரப்புகளா தோழர்களே? திருமுருகன் செய்யும் வேலையின் பயன் யாருக்கு கிடைக்கிறது என்பதை வைத்தும் நீங்கள் திருமுருகனின் நேர்மையற்ற தன்மையையும், அவருடைய நோக்கத்தையும் புரிந்து கொள்ளலாம் தோழர்களே.

 32. சாட்சியங்கள் முறையாக பதிவானால், இனப்படுகொலையை நடத்தியதில் நேரடியாக ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி, இனப்படுகொலைக்கான சதித்திட்டத்தை தீட்டியவர்களும் கூட குற்றவாளிகளாக சேர்த்து விசாரிப்பதற்கான சூழல் வரும். திருமுருகனை சந்தித்த இனப்படுகொலைப் பங்காளியும் மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்படும் என்பதால்தான், திருமுருகன் சாட்சியங்களை பதிவு செய்வதை எதிர்த்து நகர்வுகளை மேற்கொள்கிறார் என்பது புரிகின்றதா தோழர்களே?

 33. உங்கள் அமைப்பின் Youtube சேனல் நீக்கப்பட்டிருப்பதால், இன்னும் முழுமையாக பேசக் கூடிய வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றது. ஆனால், உங்கள் வலைப்பூவும், Youtube சேனலும் நீக்கப்பட்ட பிறகும், கருத்தரங்கில் மனோஜ் பேசிய உரை, 2015 ஜூன் 14 ம் தேதி அன்று முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதால்,[173] கருத்தரங்கத்தின் அனைத்து உரைகளையும் இந்தக் கடிதம் வெளியான பிறகு செந்தில் பதிவேற்றம் செய்வார் என்று எதிர்பார்க்கிறேன். ஈழப்போராட்டத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட செந்தில், ஈழப்போராட்டத்திற்கு எதிராக செயல்படும் திருமுருகனின் உண்மை முகம் வெளியில் தெரிய அனைத்துக் காணொளி களையும் வெளியிட்டு உதவுவார் என்று எதிர்பார்க்கின்றேன்.

  2.7.3. கருத்துத் திரிப்பு அடியாளாக செயல்படும் திருமுருகன்.

 34. திருமுருகன் பலமுறை கருத்துருவாக்க அடியாட்கள் குறித்து பேசியிருப்பார். ஆனால், அவரே கருத்துத் திரிப்பு அடியாளாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். கருத்தரங்கத்தின் தொடர்ச்சியாக நீங்கள் புத்தகச் சந்தைக்கு சென்று புத்தகம் வெளியீட்டீர்கள். அதில் அமெரிக்காவின் பங்கு, இங்கிலாந்தின் பங்கு, ஐ.சி.ஜி.ன் பங்கு என்று புத்தகங்களை வெளியிட்ட நீங்கள் [174] , இந்தியாவின் பங்கு குறித்து ஏன் புத்தகம் வெளியிடவில்லை தோழர்களே ?.

 35. அமெரிக்காவின் பங்கு குறித்தும், இங்கிலாந்தின் பங்கு குறித்தும், ஐ.சி.ஜி-ன் பங்கு குறித்தும் புத்தகம் எழுதிய தோழர்கள் கொண்டலும் மனோஜூம், விவேக்கும் ஒரு இடத்தில் வேலை செய்து கொண்டு அல்லது தொழில் செய்து கொண்டு தமக்கான வருமானத்தை அதிலிருந்து பெற்றுக் கொண்டு அமைப்புக்கும் பணம் கொடுத்து, கிடைக்கும் நேரத்தில் இந்த வேலையை செய்திருக்கிறார்கள். முக்கியமான வேலை தான், அதை நான் மறுக்க முடியாது, மறுக்கவும் கூடாது. ஆனால், பன்னீர் அப்படி இல்லையே தோழர்களே. மே பதினேழு இயக்கத்தின் அதிகாரபூர்வமற்ற சம்பளப் பட்டியலில் இருக்கக் கூடிய 3 நபர்களில் அவரும் ஒருவர் அல்லவா? அவருக்குத் தொடர்ச்சியாக மாதா மாதம் உதவித் தொகை மே பதினேழு இயக்கம் கொடுத்துக் கொண்டிருந்தது அல்லவா? முழு நேர ஊழியராகத் தானே அவர் மே பதினேழு இயக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு முழ நேர ஊழியர் ஏன் புத்தகம் கொண்டு வரவில்லை?

 36. அதிலும், ப்ரேமெனில் மக்கள் தீர்ப்பாயத்தில் சென்று ஆதாரங்களை சமர்ப்பித்தோம் என்று பொய் கூறிக் கொண்டிருக்கின்ற உங்களுக்கு அந்த தார்மீகக் கடமை இல்லையா? ப்ரேமனில் இங்கிலாந்து அரசின் பங்கு குறித்து ஆதாரங்கள் வழங்கிய பிறகு, தோழர் பில் மில்லர் மேலும் பல ஆதாரங்களை சேகரித்து அவற்றை Britain’s Dirty War என்னும் தலைப்பில் தனி புத்தகமாக [175] கொண்டு வந்தார். அப்பொழுது, மே 17 க்ருப் சாட்டில் கொண்டல், இதை தினமும் எழுதலாமா என்று கேட்டார்.


 37. அப்பொழுது கொண்டல் பேசியதற்கு பின்பு, பில் மில்லரின் இந்தப் புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து, கூடுதலாக விராஜும், பில் மில்லரும் எங்களிடம் ஜெர்மனியில் நேரில் வழங்கிய பிரிட்டனின் முழுமையான ஆதாரத்தையும், 1948 முதலான காலகட்டத்தில் இருந்து பிரிட்டனின் பங்கு அவர்கள் ஆதாரத்தில் இருந்தது; அது தவிர நாங்கள் ஜெர்மனி சென்று சேர்ந்த தினத்தன்று, விராஜ் பிரிட்டனின் பங்கு 1833 ல் இருந்து எப்படியெல்லாம் இருந்தது என்று விவரித்தார், அவற்றில் இருந்தும் சிலவற்றை சேர்த்து மனோஜ் தனி புத்தகமாக கொண்டு வந்தார். அது வரவேற்க வேண்டிய செயல். ஆனால், இந்தியாவின் பங்களிப்பு குறித்து புத்தகமாக கொண்டு வருவதற்கான எந்த முயற்சியும் உங்கள் தலைமை ஏன் எடுக்கவில்லை என்பதை சிந்தித்திருக்கின்றீர்களா தோழர்களே?

 38. சமீபத்தில் உங்கள் அமைப்பில் சிலர் அந்தக் கேள்வியும் எழுப்பினீர்கள் என்பதும் எனக்கு தெரியும். அப்பொழுது உங்கள் தலைமை என்ன பதில் சொன்னது என்பதை சற்று நினைவுப் படுத்திப் பாருங்கள் தோழர்களே. “ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கு ஒரு முறையும் மக்கள் தீர்ப்பாயம் நடைபெறும். 2016 ல் அடுத்த முறை தீர்ப்பாயம் நடைபெறும் வரை இந்தியாவின் பங்கு குறித்து புத்தகம் வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட்டால், தீர்ப்பாயத்தில் இந்தியா தப்பிவிடும். அதனால் தான், நாம் புத்தகம் வெளியிடவில்லை.” என்று உங்கள் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கூறியிருக்கின்றார். இது எவ்வளவு கிறுக்குத்தனமான வாதம் என்று கூட புரியாமல், உங்களில் சிலர் வேகவேகமாக தலையை ஆட்டியிருக்கின்றீர்கள். அரசின் ஆவணங்களும், அறிக்கைகளும் Material Documents. வகையைச் சார்ந்தவை. அவற்றை எந்தக் காலத்திலும் யாராலும் மறுக்க இயலாது. அதனை வெளியிட்டால் இந்தியா தப்பிவிடும் என்று பொய் கூறுவது, இந்தியாவின் பங்கு பற்றிய உண்மை மக்களுக்கு சென்று சேர்ந்து விடக் கூடாது என்பதற்காகத் தான். இப்படி பொய் மீது பொய் சொல்லி இந்தியாவின் பங்கை மக்கள் அறிந்துவிடாமல் செய்யும் திருமுருகன், இந்திய உளவுத்துறையால் இயக்கப்படுபவர் அல்லாமல் வேறு யாரால் இயக்கப்படுபவர் தோழர்களே?

  2.7.4. ஒவ்வொரு ஊரிலும் திருமுருகன் வரைந்த பெரிய கோடு.

 39. இதனுடைய தொடர்ச்சியாக அடுத்தடுத்து நீங்கள் பல்வேறு ஊர்களிலும் இந்தக் கருத்தரங்கத்தின் தொடர்ச்சியை நடத்திக் கொண்டு வந்தீர்கள். அங்கு மனோஜ் பங்கு பெற முடியாத இடத்தில் சபரியை வைத்து இங்கிலாந்தின் பங்கைப் பேசிய நீங்கள், பன்னீரை அதற்குப் பிறகு திருப்பூரிலோ, கோவையிலோ, ஈரோட்டிலோ, கரூரிலோ, திருச்சியிலோ வேறு எங்குமே பேச வைக்கவில்லையே, ஏன்? சரி பன்னீர் இல்லை என்றால் வேறு யாரையாவது வைத்து இந்தியா குறித்து பேசியிருக்க வேண்டுமே. அதுவும் செய்யவில்லையே ஏன்?

 40. தோழர்களே, இதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு நீங்கள் செய்யக்கூடிய வேலைகளின் விளைவுகள் என்ன என்பதனை பாருங்கள். உங்கள் கருத்தரங்கத்தை பார்ப்பதற்காக, கருத்தரங்கத்தில் கருத்துகளை கேட்பதற்காக வந்திருக்கக்கூடிய ஒரு பொதுவான நபர் உங்கள் கருத்தரங்கம் முடிந்தபின் என்ன நினைத்துக்கொள்வார். "முழுக்க முழுக்க அமெரிக்காவும், இங்கிலாந்தும், ஐ.சி.ஜி-ம் சேர்ந்து நடத்தியது ஈழப்படுகொலை, இதில் இந்தியாவிற்கு பங்கில்லை" என்பதாகத் தானே அவர் மனதில் பதியும்.

 41. இந்தப் படுகொலையில் பல்வேறு சக்திகள் இணைந்து ஈடுபட்டு தமிழின அழிப்பை மேற்கொண்டிருந்த பொழுது அனைவரையும் பற்றிப் பேசுவது தான் அடிப்படை நேர்மை தோழர்களே. இதில் ஒருவரை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களை பற்றி அதிகமாக பேசுகிறோம் என்றால், நீங்கள் யாரை விடுகிறீர்களோ, அவர்களை காப்பாற்ற முயல்கிறீர்கள் என்று அர்த்தம் தோழர்களே.

 42. ஊர் ஊராகச் சென்று அமெரிக்கா, இங்கிலாந்து, ஐ.சி.ஜி குறித்து விளக்கிய நீங்கள், இந்தியா குறித்து விளக்காததனுடைய விளைவு என்னவென்று திருச்சியில் நேரடியாக கருத்தரங்கத்திற்கு வந்திருந்த ஒரு தோழர் கூறினார். அங்கு நிகழ்வு முடிந்த பின்னர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார். "அமெரிக்காவும், இங்கிலாந்தும் இவ்வளவு பெரிய வேலையை பண்ணியிருக்குது" என்று. "அப்போ இந்தியா எதுவுமே பண்ணவில்லையா" என்று கேட்ட போது, "இந்தியா ரேடார் கொடுத்திச்சி. இந்தியாவும் பண்ணிச்சு ரேடார் கொடுத்திச்சில்ல" என்றிருக்கிறார். அவருக்கு இந்தியா கப்பல் கொடுத்ததும், எம்.ஐ. 17 ஹெலிகாப்டர் கொடுத்ததும், பீரங்கி கொடுத்ததும், களமுனையில் நின்று இந்தியா போரிட்டதும் அவருக்குத் தெரியவில்லை.

 43. அப்படியென்றால் உங்களுடைய விளைவு இதை நோக்கியா? இதற்காகத் தான் கொண்டலும், விவேக்கும், மனோஜூம் தங்களுடைய உழைப்பைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்களா?. அவர்கள் செய்யக்கூடிய வேலை முழுமையடைவது என்பது இந்தியாவின் பங்கையும் பற்றி பேசும்போது தான் முழுமை அடையும். இந்தியாவின் பங்கைப் பற்றி பேசாவிட்டால் அவர்கள் பேசுவதும் தவறான திசையில் தான் செல்லும் தோழர்களே. இதில் தான் திருமுருகன் தனது இந்திய சார்பு நிலையை வெளிப்படுத்துகின்றார். இப்பொழுது சொல்லுங்கள் தோழர்களே, திருமுருகன் யாருடைய தூண்டுதலின் கீழ் யாருடைய பின்னணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று.


2.8. புலிகளின் தடை நீக்கமும், திருமுருகனின் அரசியலும்.

 1. தமிழீழ விடுதலை புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையினை எதிர்த்து தோழர்கள் லதனும், ராஜீவனும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கினை தொடுத்திருந்தனர். அந்த வழக்கின் தீர்ப்பு 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் நாள் வெளியானது. அந்த தீர்ப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நடைமுறையில் தவறானதாகும் என்று வெளியானது. அந்த தீர்ப்பில் மேலும் பல்வேறு கருத்துகளை நீதிபதிகள் அவர்களின் கண்டுபபிடிப்புகளாக அதாவது (Findings , Observations) என்பதாகவும், தீர்ப்பாகவும் அதாவது Verdict ஆகவும் கொடுத்திருந்தனர். அவற்றுள் மிக முக்கியமான ஒன்றாக ஐரோப்பிய ஒன்றியத்தில் விதிக்கப்பட்ட தடை, இந்தியாவினுடைய அறிக்கைகளின் அடிப்படையில், இந்தியாவின் நிர்பந்தத்தின் பெயரில் விதிக்கப்பட்டது. அதில் இந்தியாவின் பங்கு இருக்கின்றது என்பதனை அந்த தீர்ப்பில் நீதிபதிகள் சுற்றிகாட்டியிருந்தனர். [176]


 1. அதற்கு பிறகு ஐரோப்பிய ஒன்றியம் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்திருக்கின்றது. தற்பொழுது வேறு ஒரு காரணத்தை கூறி மீண்டும் விடுதலை புலிகள் மீது தடையினை புதிதாகவும் இட்டிருக்கின்றது. இவற்றுக்கு எதிராகவும் தோழர்கள் தற்பொழுது வழக்கினை தொடுத்திருக்கின்றார்கள்.

ஆனால் இதில் மிக முக்கியமான ஒரு விடயமாக நான் பார்ப்பது, முதன் முதலாக இந்தியாவினுடைய பங்கு ஒரு நீதிமன்றத்தால் உறுதிபடுத்தப்பட்ட ஒரு நிகழ்வு 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்த தீர்ப்பை குறித்தது மே பதினேழு இயக்கம் என்ன செய்தது என்று சற்று சிந்தித்து பாருங்கள் தோழர்களே. தீர்ப்பு வெளியானவுடன் தோழர் லதனை வாழ்த்தி திருமுருகன் ஒரு பதிவிட்டிருந்தார். சில வரிகள் மட்டுமே தோழர் லதனை பாராட்டியிருந்தார். அதற்கு பிறகு தமிழ்நெட்டில் (Tamilnet) தோழர் ராஜீவனின் பேட்டி வெளியாகியிருந்தது. [177],அதனையும் தமிழாக்கம் செய்துமே பதினேழு இயக்கம் சார்பில் வெளியிட்டிருந்தீர்கள் [178]


 1. இதில் நுணுக்கமாக பார்த்தால் தீர்ப்பின் முக்கியமான விடயத்தை பற்றி திருமுருகன் பேசவில்லை என்பதை நீங்கள் கவனிக்கலாம். மிக முக்கியமான விடயம் என்பது இந்தியாவின் பங்கு குறித்தது. “அது தான் நாங்கள் தோழர் ராஜீவனின் பேட்டியை போட்டிருந்தோமே என்று நீங்கள் சிந்தித்தால்” அது உங்களை ஏமாற்றுவதற்காக செய்த வேலை. தோழர் ராஜீவனின் பேட்டி வேறு ஒரு பார்வையை வைத்தது. அது தீர்ப்பில் இருக்க கூடிய இந்தியாவின் பங்கு குறித்து பேசவில்லை. அது இன்னொரு பகுதியை மட்டும் அலசிய ஒரு பேட்டி. அதனால் அந்த பேட்டியை மட்டும் வெளியிட்டுவிட்டு இந்தியாவின் பங்கு குறித்து திருமுருகன் எதுவுமே பேசவில்லை என்பதனை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.


 1. சரி பேசாவிட்டால் தான் என்ன என்று நீங்கள் சிந்திக்கிறீர்களா? தோழர்களே சற்று சிந்தித்து பாருங்கள். 2009 இல் இனப்படுகொலை முடிந்து சில மாதங்களுக்கு பிறகு டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஈழத்தில் நடைபெற்றது போர்குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்று தீர்ப்பினை கூறி, இனப்படுகொலை நடந்ததுக்கான சாத்திய கூறுகளும் உள்ளன அவற்றை பற்றியும் விசாரிக்க வேண்டும் என்று தனது தீர்ப்பில் வெளியிட்ட பொழுது, [179], இங்கிருந்த ஊடகங்கள் அதை பேசவில்லை என்று மே பதினேழு இயக்கம் ஊர்ஊராக சென்று கருத்தரங்கள் நடத்தி கூட்டங்கள் போட்டு அந்த தீர்ப்பை பற்றி எடுத்துரைத்தது. 1. அது தான் மே பதினேழு இயக்கத்தின் ஆரம்ப கட்டவேலை. மக்களுக்கு எந்த செய்தியை கொண்டு செல்ல வேண்டுமோ அதனை அந்த வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான். டப்ளின் தீர்ப்பாயம் பற்றி அறியத் தராதவர்கள் என்று இங்கிருக்கும் பல அமைப்புகளை நீங்கள் குற்றம் சுமத்துகிறீர்களே, ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையில் இந்தியாவின் பங்கைப் பற்றி அறியத் தராத குற்றத்தை செய்யும் திருமுருகனின் இந்தச் செயலை நீங்கள் என்ன வார்த்தை கொண்டு குறிப்பீர்கள் தோழர்களே? 1. தோழர் லதன் மற்றும் ராஜீவனுடைய உழைப்பினால் விளைந்த அந்த நீதிமன்ற தீர்ப்பு என்பது இந்தியாவின் பங்கை உறுதிபடுத்திய ஒன்று. அந்த தீர்ப்பை பற்றி ஊர் ஊராக சென்று பேசாவிட்டாலும் கூட, குறைந்தபட்சம் முகநூலிலாவது எழுதியிருக்கலாம் அல்லவா? மற்றவற்றை பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக எழுதும் திருமுருகன் இதை பற்றி எழுதுவதற்கு மட்டும் பாவம் நேரமில்லையோ ? சரி அது தான் எழுதவில்லை அதற்கு பிறகு நீங்கள் ஊர் ஊராக சென்று கருத்தரங்கங்கள் போடுகிறீர்களே அங்கெல்லாம் என்ன பேசுகின்றீர்கள் தோழர்களே ? ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகள் மீது தடையினை விதிப்பதற்கு அமெரிக்கா காரணம் என்று பேசுகின்றீர்கள். நன்று !! இந்தியாவின் பங்கு பற்றி நீதிமன்றத்தில் தீர்ப்பாக வெளி வந்ததே அதை பற்றி பேசினீர்களா ? ஏன் தோழர்களே இந்தியா பற்றி பேசுவதற்கு மட்டும் இவ்வளவு தயக்கம் ? இப்பொழுது தெரிகின்றதா ?? திருமுருகன் யாருடைய கட்டுபாட்டில் வேலை செய்கின்றார் என்று ?. இந்தியா குறித்து ஆதாரங்கள் வெளியானால் அதை பற்றி இருட்டடிப்பு செய்ய வேண்டும். ஆதாரங்கள் முன்வைப்பதற்கான வாய்ப்புகள் முன் வந்தால் அவற்றில் அனைத்து தகிடு தத்தோம்களையும் செய்து ஆதாரங்களை சமர்ப்பிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு எதிராக ஒரு போராட்டமோ, ஒரு மனநிலையோ தோன்றினால் அதனை சீர்குலைக்க வேண்டும். இது தான் திருமுருகனின் செயல்பாடாக இருக்கிறது தோழர்களே


2.9. புலிகளின் மரபை சிதைத்த வைகோவும், திருமுருகனும்.


 1. தமிழீழ விடுதலை போராட்டத்தில் தனது இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கு அவர்களுடைய தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி முதல் 27 தேதி வரை மாவீரர் வாரமாக தமிழீழத்தை நேசிக்க கூடிய அனைவரும் கடைப்பிடித்து வருவது விடுதலை புலிகள் தொடங்கி வைத்த ஒரு மரபு. இன்று வரையிலும் அது அப்படியே தான் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த மாவீரர் வாரம் என்பது அந்த விடுதலை போரில் உயிர்நீத்த அனைத்து வீரர்களுக்கும் அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக விடுதலை புலிகள் அறிவித்திருந்தார்கள். அந்த காலகட்டத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் எந்த கொண்டாட்டங்களும் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தார்கள். [180], அதனை கடைபிடித்தும் வந்தனர். இது முதன் முதலில் இந்த விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த முதல் உயிர் தியாகம் செய்த போராளி சங்கரின் நினைவாக நவம்பர் 27 ஆம் தேதி மாலை 6 மணி 5 நிமிடத்திற்கு அவர் இறந்ததை நினைவு படுத்தும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்தின உரையும் கூட தமிழீழ தேசிய தலைவர் நிகழ்த்துவார். [181] பொதுவாகவே ஒரு ராணுவ வீரருக்கு தனது எதிரியை வீழ்த்த வேண்டும் என்ற வேட்கை அதிகமாவதற்கு தன்னுடன் போரிட்ட சக போராளி, தோழன் தன் கண் முன்னே இறப்பதை கண்டு கோபம் கொண்டு, அந்த ராணுவ வீரன் தன்னை வேகப்படுத்தி எதிரியை வீழ்த்துவதற்கு உதவி செய்யும். இது தான் பல்வேறு ராணுவத்தில் பார்த்து வரக்கூடிய செயலாக இருக்கிறது. தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திலும் கூட முதல் விடுதலை போராளியினுடைய மரணத்தினை நினைவு கொள்ளும் விதமாக தான் புலிகள் அதனை கடைபிடித்து வந்தார்கள். இந்த வாரத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்பதை அவர்கள் மிகுந்த கட்டுப்பாடுடன் கடைபிடித்து வந்தார்கள்.


 2. மாவீரர் வாரம் என்பதை சில தரப்பினர் தமது வசதிக்கேற்ப மாவீரர் மாதம் என்றெல்லாம் கூறியது உண்டு. 2௦12 ஆம் ஆண்டு கனடாவில் இளையராஜா இசை கச்சேரி நடத்த போவதாக இருந்த பொழுது நாம் தமிழர் கட்சியினுடைய கனடா கிளை இளையராஜாவை அங்கு வரக் கூடாது இது மாவீரர் மாதம் என்று கூறிய கூத்தெல்லாம் நடந்தது. [182], இவர்களின் தேவைக்கேற்ப வாரத்தினை மாதம் என்று மாற்றியதெல்லாம் உண்டு. ஆனால் தொடர்ந்து இந்திய அரசாங்கம், இந்திய உளவுத்துறை, வட இந்திய ஊடகங்கள் என்ன கட்டமைக்க முயன்றன என்றால், அது விடுதலை புலிகள் இயக்கத்தினுடைய தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை தான் மாவீரர் நாளாக, மாவீரர் தினமாக கொண்டாடுகின்றனர் என்று பல ஆண்டுகளாகவே கட்டமைத்து வருகின்றனர். ஆனால் தமிழீழத்தை நேசிக்க கூடிய மக்கள் அந்த பொய் பரப்பலை முறியடிக்கும் விதமாக அந்த வாரத்தில் கொண்டாட்டங்கள் ஏதுவுமின்றி தான் கடைபிடித்து வந்தனர்.

 3. ஆனால் 2014 ம் ஆண்டு இந்திய உளவுத்துறையின் செயல் திட்டத்தை அப்படியே ஏற்று கொண்டு வைகோ ஒரு அறிக்கை விட்டார். என்னவென்றால் தலைவர் பிரபாகரனுடைய 6௦ ஆவது பிறந்தநாள் வருகிறது இதனை மிக சிறப்பாக கொண்டாட வேண்டும். இதனை கேக்வெட்டி கொண்டாடுங்கள், பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள், இனிப்பு கொடுத்து கொண்டாடுங்கள் என்று கூறினார். [183]

 4. தலைவர் அவர்கள் மிக தெளிவாக அறிவுறுத்தியிருந்தார்கள். சங்கர் எனது மடியில் இருந்து கடைசி மூச்சை சுவாசித்து கொண்டிருந்த பொழுது எனக்கு பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்ற எண்ணமே எழவில்லை. [184] , அதனால் அதற்கு பிறகு நான் பிறந்தநாளையே கொண்டாடுவதில்லை என்று ஒரு மரபாகவே வைத்திருந்தார்கள். தலைவருடைய பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்பதனை விடுதலைப் புலிகள் இயக்கமும், தமிழீழ மக்களும் ஒரு மரபாகவே வைத்திருந்தனர். ஆனால் வைகோ கூறுவது போல் 60 ஆவது பிறந்தநாள் என்பது சிறப்புமிக்கது என்றால் ஈழமக்கள் தெளிவாக 60 ஆவது பிறந்தநாளை குறிக்கும் விதமாக செடிகளை நட்டும், மக்களுக்கு செடிகளை கொடுத்தும், மரக்கன்றுகளை கொடுத்தும் அதனை கடைபிடித்தார்கள். அது போன்ற ஒன்றையாவது செய்திருக்கலாம்.

 5. ஆனால் இவர் இந்திய உளவுதுறை இத்தனை ஆண்டு காலம் என்ன திட்டமிட்டதோ அதனை அப்படியே செய்வதற்கு ஒரு அறிக்கையினை வெளியிட்டார். வைகோ அவ்வாறு அறிக்கை வெளியிட்டவுடன், பா.ஜ.க.வின் H.ராஜா அது எப்படி பிரபாகரனின் பிறந்தநாளை தமிழகத்தில் கொண்டாடலாம்? கொண்டாட விட மாட்டோம் என்றார். [185] , பதிலுக்கு இவர் நாங்கள் கொண்டாடியே தீருவோம், அதிலும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியே தீருவோம் என்று மாற்றி அங்கு அந்த மாவீரர் வாரத்தில் ஒரு கொண்டாட்டமான மனநிலையை ஏற்படுத்தி விட்டார். வைகோவிற்கும் H. ராஜாவிற்கும் இடையே நடைபெற்ற இந்த அறிக்கைப் போரை, சொல்லிவைத்துக் கொண்டு நடத்தும் நாடகம் போல் இருக்கிறது என்று ராதிகா குறிப்பிட்டார்.

 6. வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூரும் வாரத்தில், இனிப்புகள் வழங்குவதும், பட்டாசு வெடிப்பதும் War of Perception” இன் ஒரு அங்கம் தான். இது மக்களுடைய மனதில் ஒரு உளவியல் மாற்றத்தை ஏற்படுத்துவது. இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் விடுதலை புலிகள் கடைபிடித்து வந்த மரபை, அவர்கள் கட்டிகாத்து வந்த பாரம்பரியத்தை உடைத்தெறிய கூடிய ஒரு செயல். இந்த விடுதலை போராட்டத்தில் விடுதலை புலிகளை மிஞ்சி எவனும் இல்லை.. ஆனால் வைகோ இப்படி அறிவிப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது ? அவர் அப்படி அறிவித்தவுடன் பலரும் அதனை அப்படியே ஏற்று கொண்டு கொண்டாட்டத்தில் இறங்கினர். இது ஒரு அறிவுபூர்வமான செயல்பாட்டினை மேற்கொள்ளும் ஒரு நபராக இருந்தால், வைகோ செய்வது தவறு என்று உடனே சுட்டி காட்டியிருக்க வேண்டும். ஆனால் மே பதினேழு இயக்கமும் வைகோவின் நிலைப்பாட்டில் தான் இருந்தது தோழர்களே. உங்களிடம் கேக்வெட்டி கொண்டாடுங்கள், அதனை முகநூலில் பதியுங்கள் என்று அறிவுரை கூறியிருந்தார்கள். வெகு சிறப்பாக கொண்டாடுவது என்னும் திட்டத்தில், இதற்கென தனி டீ-சர்ட் தயாரித்து, இந்திய உளவுத்துறையின் செயல்திட்டத்தை நிறைவேற்றி, புலிகள் உருவாக்கி கடைப்பிடித்து வந்த மரபை உடைத்தெறிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்கள்.

 7. இதே காலகட்டத்தில் நவம்பர் 25 ஆம் தேதியன்று நான் வைகோவின் அறிக்கையினை பார்த்தேன். அதை பார்த்ததும் எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு தவறான ஒரு செயல் நடைபெறுகிறது. அதற்கு அடுத்த நாள் நடைபெற்ற அந்த கூட்டத்தில் திருமுருகனும் வைகோவும் ஒரே மேடையில் ஏறி பேசுகின்றார்கள். [186] , அதில் திருமுருகன் ஒரு வேளை கொண்டாட்டம் கூடாது என்று கூறினாலோ அல்லது வேற யாரேனும் இங்கு ஒரு வாய்ப்பு கிடைக்கின்றது என்று எடுத்துக் கொண்டு ‘கொண்டாட்டம் கூடாது’ என்று கூறினால் அதை கடைசியாக பேச இருக்கும் வைகோ அதன் அனைத்தையும் கடந்து சென்று தான் சொல்ல விரும்புவதையும் சொல்லி இந்த கொண்டாட்டங்ககளை நடத்துவதற்கான சூழலை உருவாக்கி விடுவார் என்று எனக்கு தோன்றியது.

 8. அதனால் நான் உங்கள் இயக்கத்தினுடைய அடுத்த கட்ட ஒருங்கிணைப்பாளரான கொண்டலிடம் இது குறித்து பேசினேன். நான் அவரிடம் பேசும் பொழுது “விடுதலை புலிகள் காத்து வந்த மரபை மீறுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.” திருமுருகன் என்ன பேசினாலும் வைகோ அதனை மறுத்து பேசிவிட்டு சென்று விடக்கூடும். அது போன்ற ஒரு இடத்தில் திருமுருகன் ஏறுவது தவறான செயல் என்று கூறினேன். கருணாநிதி செய்யும் எந்த ஒரு செயலானாலும் அது ஈழ ஆதரவாளர்களிடம் சந்தேகத்துடன் தான் பார்க்கப்படும். ஆனால் வைகோவோ, சீமானோ ஏதேனும் ஒன்றை செய்தால் அதனை அவர்கள் அப்படியே ஏற்று கொள்வார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழலில் இவர்கள் தவறு செய்யும் பொழுது, கருணாநிதி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதை விட இவர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டுவது தான் மிக முக்கியமானது. இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் எங்களுடைய இலக்கு வேறு என்று சொல்லிக் கொண்டிருக்க போகிறீர்கள் என்று கொண்டலிடம் கேட்டேன். கொண்டல் எதற்கும் பதில் சொல்லாமல் சரி தோழர் நான் இதை பற்றி பேசுகிறேன் என்று மட்டும் கூறினார். (கொண்டலுக்கு நான் போன் செய்ததை முக்கியமான தொலைபேசி உரையாடல் 1 என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் பேசுவோம்)

 9. எனக்கும் நன்றாக தெரியும் அதற்கு மேல் கொண்டலால் பேச முடியாது என்று. பிறகு கொண்டல் உங்கள் இயக்கத்தில் பேசியிருக்கின்றார்.. ஏனென்றால் நான் பேசியதினுடைய நியாயத்தை அவர் ஏற்று கொண்டதால், மற்ற தோழர்களிடமும் பேசி அவர்களும் ஏற்று கொண்டதால் கடைசி நேரத்தில் நீங்கள் கொண்டாட வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டீர்கள். ஆனால் முதலில் கொண்டாட சொல்லி அனைவரிடமும் சொல்லிய நீங்கள் கொண்டாட வேண்டாம் என்று முடிவெடுத்ததை அனைவரிடமும் சொல்லவில்லை. அதனால் தோழர்கள் அடுத்த நாள் அனைவருக்கும் இனிப்புகள் குடுத்து அதனை முகநூலிலும் பதிந்திருந்தனர். [187]


 1. இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் இந்த War of Perception னை நடத்துவதற்கு இந்திய அரசு, இந்திய உளவுத்துறை, வைகோ இணைந்து இதனை மேற்கொள்ளும் பொழுது, அறிவுப்புரட்சி செய்ய வந்தோம் என்று கூறி கொள்ளும் மே பதினேழு இயக்கமும் அதனுடன் சேர்ந்து நிற்பது அறிவுப்புரட்சியா தோழர்களே?

2.10. .நா. முற்றுகையும், ஊத்தி மூடிய திருமுருகனும். 1. முருகதாசன் ஜெனீவாவில் ஐ.நா முற்றத்தில் தீக்குளித்த பிப்ரவரி 12 தேதியை நாம் ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு தனி தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு கோரியும், ஐ.நாவின் தோல்வியை சுட்டிகாட்டியும் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றோம். இதனை 2013 ஆம் ஆண்டு தொடங்கினோம். இதனை தொடங்கும் பொழுது ஒவ்வொரு ஆண்டும் இதனை விரிவாக செய்ய வேண்டும், உலகம் முழுவதிலும் இருக்கும் நாடுகளில் எல்லாம் அனைத்து ஐ.நா அலுவலங்களில் பிப்ரவரி 12 ஆம் தேதியன்று முற்றுகையிடப்பட்டு முருகதாசன் கோரிய நீதியினை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்தோம். 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் சில நகரங்களில் நடைபெற்ற அந்த முற்றுகை போர் [188] 2014 ஆம் ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றது. சென்னையிலும், டெல்லியிலும், நியூயார்க்கிலும், ஆஸ்திரேலியாவிலும் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது [189]


 2. நீங்கள் மே பதினேழு இயக்கத்தின் சாதனை என்று பலவற்றை நினைத்து கொண்டிருக்கலாம் ஆனால் மே பதினேழு இயக்கத்தின் சாதனைகளுள் மிக முக்கியமானது 2014 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் நடைபெற்றது. அது எப்படி முக்கியமானது என்றால் உங்களில் பலருக்கு நன்றாக தெரியும் நான் பல வகுப்புகளில் ஒரு நபரை பற்றி கூறியிருக்கின்றேன். அவர் ஒரு பத்திரிக்கையாளர். பெயர் மேத்யூ ரசல் லீ (Matthew Russel Lee). அவர் இன்னர்சிட்டி பிரஸ்(Inner City Press) பத்திரிக்கையின் நிருபர். [190] , அவர் தொடர்ச்சியாக ஐ.நா விவகாரங்களை கவனித்து வருபவர். ஐ.நா வின் உள்ளே நடக்கும் தகவல் பரிமாற்றங்களை கூட அவர் பல நேரங்களில் வெளிக்கொண்டு வருபவர். அவரும் தொடர்ச்சியாக ஈழபடுகொலையில் ஐ.நா வின் பங்கு குறித்து பேசி வருபவர். அப்படிப்பட்டவர் நியூயார்க்கில் இருக்கின்றார். அதனால் நீங்கள் ஐ.நா அலுவலகம் முற்றுகையிடும் பொழுது அவரை சந்திக்க வாய்ப்பு கிடைதால் அவரிடம் இதை பற்றி எடுத்து கூறுங்கள் என்று அமெரிக்காவில் இருக்கும் தோழர்களிடம் நான் 2௦13 ஆம் ஆண்டே எடுத்து கூறியிருந்தேன்.


 3. 2013 இல் அங்கு போராட்டம் நடைபெற்றது ஆனால் மேத்யூ ரசல் லீ யை சந்திக்க இயலாமல் போய் விட்டது. ஆனால் 2014 ஆம் ஆண்டு போராட்டத்தின் பொழுது மேத்யூ ரசல் லீயை சந்திக்க முடிந்தது. அவர் அந்த போராட்டத்தை ஒரு செய்தியாக்கி, [191] , [192]அதனை பல்வேறு இடங்களில் அறியச்செய்தார். அது மட்டுமல்ல அதற்கு பிறகு அவர் எழுத கூடிய ஒவ்வொரு கட்டுரையிலும், ஒவ்வொரு செய்தியிலும் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா முற்றுகை போராட்டம் பற்றி ஒரு வரி குறிப்பிடுவார். “Tamils Slanting Slogans against Ban Ki Moon” என்று குறிப்பிடுவார். இப்படி தொடர்ச்சியாக ஐ.நா விற்கு எதிராக தமிழர்கள் போராடுகின்றனர் என்ற ஒரு செய்தியினை அவர் பதிவு செய்து கொண்டு வந்தார். அதற்கு அடிப்படையாக அமைந்த போராட்டம் மிக முக்கியமானது.
 1. அப்படிப்பட்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நியூயார்க் போராட்டத்தை இந்த ஆண்டு நடைபெற விடாமல் திருமுருகன் செய்தார். உங்களுக்கு நன்றாகவே தெரியும் அதற்கு அவர் என்ன காரணம் கூறினார் என்பதும் உங்களுக்கு தெரியும். அமெரிக்காவில் இருப்பவர்கள் மே பதினேழு இயக்க உறுப்பினர்கள் இல்லை; அவர்கள் எல்லாம் வெறும் ஆதரவாளர்கள் என்று கூறினார்.

இவ்வளவு நாள் மே பதினேழு இயக்கத்துக்காக போராடியவர்களை திருமுருகன் கூறிய பொய்யை எதிர்த்து அவர்கள் கேள்வி கேட்டதனால், உடனடியாக அவர்கள் மே பதினேழு இயக்க உறுப்பினர்கள் இல்லை என்று கூறி ஒரே நாளில் அவர்களை அமைப்பை விட்டு விலக்கிய திருமுருகனை பார்க்கும் பொழுது ஒரே கையெழுத்தில் ஒன்றே முக்கால் லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பிய ஜெயலலிதாவின் முகம் [193] உங்களுக்கு நினைவில் வந்து செல்கின்றதா தோழர்களே? இவ்வளவு நாட்கள் உறுப்பினர்களாக இருந்தவர்களை, ஒரு புதிய விதியை காரணம் காட்டி, அதன் அடிப்படையில் அவர்கள் உறுப்பினர்கள் இல்லை என்று கூறுவது எந்தவகையிலும் சனநாயகமான செயல் இல்லை. ஏற்கனவே இருக்கும் உறுப்பினர்களை வைத்துக்கொண்டுதான் புதிய விதிகளை உருவாக்க முடியும். தனக்கு பிடிக்காதவர்களை வெளியேற்றுவதற்காகவே தனக்கு ஏற்றாற்போல் விதிகளை உருவாக்கும் திருமுருகனின் சர்வாதிகாரப் போக்கு குறித்து மூன்றாம் பகுதியில் பேசுவோம்.

 1. இப்பொழுது ஐ.நா. முற்றுகைப் போராட்டம் குறித்து பேசுவோம். அது அத்துடன் நிற்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் மட்டும் அந்த போராட்டம் நடைபெற்றது. அப்படியென்றால் இந்த போராட்டம் தொடங்கியதின் அடிப்படை நோக்கமே இந்த ஆண்டு சிதைக்கப்பட்டு விட்டது தோழர்களே. உலகம் முழுவதும் எடுத்து செல்வோம் என்று தொடங்கப்பட்ட போராட்டம் மூன்றே ஆண்டுகளில் ஒரே ஒரு நகரில் நடக்கும் நிலைக்கு வந்து விட்டதே. அதிலும் இங்கு கூட பார்த்தீர்கள் என்றால் இந்த போராட்டத்தின் பொழுது ஐ.நா அலுவலகத்திற்குள் ஐ.நா அலுவலர்களை சந்தித்து பேசிய காணொலி உங்கள் இயக்கத்தால் வெளியிடப்பட்டது.


 2. அந்த காணொளியை பார்க்கும் பொழுது அதில் திருமுருகன் அயோக்கியத்தனமான நோக்கத்துடன் பேசியவை தெளிவாக தெரிகின்றன. தற்பொழுது உங்கள் அமைப்பின் Youtube சேனல் நீக்கப்பட்டிருப்பதால், செந்திலுடன் இருக்கும் backup ல் இருந்து பதிவேற்றம் செய்யச் சொல்லி அதில் திருமுருகனின் தவறான நோக்கத்தை புரிந்துகொள்ளுங்கள். ஐ.நா. அலுவலகத்தில் பேசும்பொழுது திருமுருகன் குறிப்பிடுகின்றார் “ஜான் எலியாஸ் இன் அறிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெளி வந்தது” என்று. கடந்த ஆண்டு என்றால் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளிவந்தது என்று கூறுகிறார். ஆனால் தோழர்களே அந்த அறிக்கை 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளிவந்தது. [194] , தவறாக இவர் கூறுகின்றார். அப்படி என்றால் இவருக்கு அது தெரியவில்லை என்று அர்த்தம் அல்லது தெரிந்தும் பொய் சொல்லுகின்றார் என்று அர்த்தம்.


 3. 2014 ஆம் ஆண்டு ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டத்திற்கு அடிப்படையில் அந்த போராட்டத்திற்கான கோரிக்கை மனுவில், கடிதங்களில் நாம் சுட்டி காட்டிய விடயம் என்னவென்று உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கின்றேன். அதே ஜான் எலியாசின் அறிக்கையை அடிப்படையாக வைத்து 2014 ஆம் ஆண்டிற்கான அனைத்து மனுக்களும், செய்திகளும் கட்டமைக்கபட்டன. அதில் ஜான் எலியாசின் அறிக்கை ஐ.நா செய்த தவறுக்கு பரிகாரமாக ஐ.நாவின் உள்ளக மறுசீரமைப்பு (Restructuring) செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு பரிந்துரையை கூறியிருக்கின்றது என்று நாம் குறிப்பிட்டிருந்தோம். [195], பரிகாரமாக ஐ.நாவிற்குள் மறுசீரமைப்பு நடைபெறுகிறது என்றால், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் என்ன என்ற ஒரு கேள்வியினை நாம் எழுப்பி இருந்தோம். பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரம் என்பது என்னவென்றும் கூட நாம் அதில் குறிப்பிட்டிருந்தோம். [196], அதற்கு பிறகு ஒரு ஆண்டு கழித்து இவர் பேசும் பொழுது அந்த அறிக்கையே ஏதோ 2014 ஆம் ஆண்டு தான் வந்தது போல பேசுகின்றார். அப்படியென்றால் கடந்த ஆண்டு எழுதப்பட்ட கடிதம் எதன் அடிப்படையில் எழுதப்பட்டது?


 4. இதற்கும் மேலாக அவர் அந்த அறிக்கையில் இருப்பதாக மேலும் பல பொய்களையும் கூறுகின்றார். இங்கே இவர் இல்லாத ஒன்றை பற்றி பேசுவதன் மூலம், அந்த வெளியான தேதியை பற்றி தவறாக குறிப்பிடுவதன் மூலம், இந்த அறிக்கையை பற்றி இவருக்கும் ஒன்றும் தெரியவில்லை என்ற ஒரு அர்த்தத்தை எடுத்து கொள்ளலாம் அல்லது தெரிந்தும் அதை பற்றி பொய் சொல்லுகின்றார் என்று அர்த்தப்படுத்தி கொள்ளலாம். இது என்ன வகை என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் தோழர்களே.


 5. ஆனால் நான் இன்னொரு விடயத்தையும் இங்கே பேச விரும்புகின்றேன். பெரும்பாலான மட்டங்களில் ஐ.நா தொடர்பான விடயங்களில் மே பதினேழு இயக்கம் தான் நிபுணத்துவம் பெற்ற ஒரு இயக்கம் என்ற பெயர் இருக்கும் பொழுது, இப்படி தவறான தகவல்களை இவர் கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது, மே பதினேழு இயக்க தோழர்களும் கூட இதனை தான் உண்மை என்று ஏற்று கொள்ள கூடிய சூழல் ஏற்படும். அப்படி ஏற்பட்டால் அமைப்பில் இருக்க கூடிய மற்றவர்களும் இது போன்ற தவறான தகவல்களையே பேசத் தொடங்குவார்கள். அதன்பிறகு என்னவாகும்?. சிந்தியுங்கள் தோழர்களே. இப்படி தவறான தகவல்களை பரப்புவதால் யாருக்கு லாபம் கிடைக்கும்? எந்த நோக்கத்திற்காக ஒரு போராட்டம் தொடங்கப்பட்டதோ, தொடங்கிய மூன்றாவது ஆண்டே, இதனை ஊத்தி மூடிவிட்டார். ஈழ விடுதலையை உண்மையாக நேசித்திருந்தால், இது போன்ற அயோக்கியத்தனமான செயல்களை செய்வாரா?

2.11. கருணாநிதியின் உண்ணாவிரத நாடகமும், திருமுருகனின் கருத்துத் திரிப்பு நாடகமும். 1. திருமுருகன் 2015 ஏப்ரல் மாதம் 27-ம் தேதியன்று கருணாநிதியின் 3 மணி நேர உண்ணாவிரத நாடகத்தைப் பற்றி ஒரு பதிவினை இட்டிருந்தார்.[197] , நீங்களும் கூட, "ஆகா, எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார்" என்று நினைத்திருப்பீர்கள். அங்கே இருக்கிறது War of Perceptions, நுணுக்கமான நகர்வு. முதலில் அவர் என்ன எழுதியிருந்தார் என்பதைப் பார்த்து விடுவோம். 1. 2009-ம் ஆண்டு சர்வதேச அழுத்தத்தின் காரணமாக இலங்கை போர் நிறுத்த அறிவிப்பிற்கு தயாராகியிருந்தது என்று முதல் தகவலைக் குறிப்பிடுகின்றார். இரண்டாவது தகவல், அப்பொழுது இலங்கைக்குச் சென்று வந்த பிரணாப் முகர்ஜி சென்னையில் வந்து கருணாநிதியைச் சந்தித்து இதனைச் சொல்லிவிட்டுச் சென்றார் என்று குறிப்பிடுகின்றார். மூன்றாவது தகவலாக, இலங்கை அரசு அறிவிப்பை வெளியிட்டவுடன் இவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் என்பதாகக் குறிப்பிடுகின்றார்.


 2. இதில் கருணாநிதி நாடகம் நடத்தினார் என்பது நன்றாகத் தெரியும். இதனுடைய உண்மைத் தன்மை என்ன என்பதனை முதலில் பார்க்கலாம். திருமுருகன் எழுதியிருப்பது வேறு, உண்மைத் தன்மை என்பது வேறு.
2.11.1. உண்ணாவிரத நாடகம் – பின்னணி

 1. பிரணாப் முகர்ஜி அந்த கால கட்டத்தில் மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஏப்ரல் மாதம் 23-ம் தேதியன்று அவர் ஹிலாரி கிளின்டனிடம் பேசியது கூட மேற்கு வங்கத்திலிருந்து தான். அவர் மேற்கு வங்கத்தை விட்டு வேறு பகுதிக்கு, டெல்லிக்கு வந்து ஒரு கேபினட் கூட்டத்தில் மட்டும் கலந்து கொண்டு மீண்டும் மேற்கு வங்கத்துக்குச் சென்று விட்டார். அவர் இலங்கைக்குச் செல்லவேயில்லை. இன்னொரு புறத்தில் எம்.கே.நாராயணனும், சிவசங்கரமேனனும் ஏப்ரல் மாதம் 24-ம்தேதியன்று கொழும்புவிற்குச் சென்றனர். அங்கு மகிந்த ராஜபக்சேவிடம் அவர்கள் பேசிய பொழுது, "இந்தியாவில் தேர்தல் நெருங்குவதால் ஒரு போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றினை நீங்கள் கொடுத்தால் தான் இங்கு தேர்தலில் வாக்குகள் வாங்குவது எளிதாக இருக்கும்" என்று பேசினர். [198]
 1. அதனடிப்படையில் மகிந்த ராஜபக்சேவும் அதற்கு ஒப்புக் கொண்டு, "ஏப்ரல் 26-ம் தேதியன்று நான் கேபினட் கூட்டத்தைக் கூட்டுகின்றேன். கூட்டி விட்டு ஏப்ரல் 27-ம் தேதியன்று அறிவிப்பினை வெளியிடுகின்றேன்" என்று குறிப்பிட்டார். அதனை ஏற்றுக் கொண்ட எம்.கே. நாராயணனும், சிவசங்கர மேனனும் சென்னைக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்து, "போர் நிறுத்த அறிவிப்பினை மகிந்த ராஜபக்சே கொடுப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்" என்று கூறிவிட்டு அவர்கள் டெல்லிக்குச் செல்கின்றார்கள்.


 2. அப்பொழுது, ஞாயிற்றுக்கிழமையன்றுஅதாவது, 26-ம் தேதி இலங்கையில் கேபினட் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, கருணாநிதி முடிவெடுக்கின்றார். அடுத்தநாள் உண்ணாவிரதம் இருந்து அதில் தனது வாக்குகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கருதினார். இது சிவசங்கரமேனனுக்குத் தெரியவந்தவுடன், சிவசங்கரமேனன் உடனடியாக கொழும்புவுக்கு பேசுகின்றார். பேசி ஐந்து நிமிடங்களில் பதில் பெற்று, அவர்கள் அந்த அறிவிப்பை 27-ம் தேதி மதியம் வெளியிடுவதற்கு மகிந்த ராஜபக்சே ஒத்துக் கொள்கின்றார். [199]

 1. அதன்படி கருணாநிதி 27-ம் தேதி காலையில் உண்ணாவிரதம் தொடங்குகின்றார். மதியத்தில் மகிந்த ராஜபக்சே, "கனரக ஆயுதங்களை உபயோகிப்பதில்லை" என்ற அறிவிப்பினை வெளியிடுகின்றார். கருணாநிதியும் அந்த உண்ணாவிரதத்தை கைவிடுகின்றார். இது தான் நடந்தது.

 2. இதில் இடையில் ப. சிதம்பரம் கருணாநிதியிடம் பேசியிருக்கின்றார். மன்மோகன்சிங்கும் பேசியிருக்கின்றார். இதே விடயத்தை திருமுருகன் திரித்தது எப்படி, திரித்ததனால் இந்திய அரசுக்கு என்ன லாபம் என்பதைப் குறித்து பிறகு பேசுகிறேன். இடையில் முக்கியமான விடயம் ஒன்றைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். அது என்னவென்றால், திருமுருகனின் Immediate boss வைகோ இந்த விடயத்தை எப்படிப் பார்க்கிறார் என்பது.

2.11.2. உண்ணாவிரத நாடகம் – வைகோவின் கருத்து

 1. நாங்கள் 2014-ம்ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி அன்று உச்ச நீதிமன்றத்தில் எழுவர் விடுதலைக்கான தீர்ப்பு வந்த போது நானும், திருமுருகனும் வை.கோ.வின் வீட்டிற்கு சென்றிருந்தோம். அங்கு பேசிக் கொண்டிருக்கும் போது கருணாநிதியின் உண்ணாவிரதம் பற்றி வை.கோ.விடம் பேசத் தொடங்கியதும், நான் கூறியது, "கருணாநிதி உண்ணாவிரதம் இருந்ததற்கான முழுமையான தகவல்களும், உண்ணாவிரதம் இருந்தது என்பதே நாடகத்திற்கு தான் என்பதற்கான முழுமையான தகவல்களும் விக்கிலீக்சில் இருக்கின்றன" என்று குறிப்பிட்டேன்.

 2. அப்பொழுது வைகோ, "அப்படி அல்ல, அன்று அவர் உண்ணாவிரதத்தைத் தொடங்கி விட்டார். தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவில் தான் போய் அமர்ந்தார். உடனடியாக, உண்ணாவிரதம் இருந்த விடயம் மேடத்துக்கு தெரிஞ்சிரிச்சி. உடனே மேடம்..." என்று அவர் சொல்லி விட்டு, மெதுவாக, "சோனியா, சோனியா" என்று குறிப்பிட்டு விட்டு தொடர்ந்தார்.


 1. "மேடம் உடனடியாக கோபம் வந்து மன்மோகன்சிங்கிடம் பேசியிருக்கிறார். அவர் என்ன உண்ணாவிரதம் உட்கார்ந்திட்டாரே.. நிறுத்தலைன்னா நடக்கறதே வேற அப்படின்னு சொல்லியிருக்காங்க. உடனே மேடம் பேச்ச கேட்டுகிட்டு மன்மோகன் சிங் கருணாநிதிட்ட பேசி மேடம் கோபமா இருக்கிறாங்க, உடனே நீங்க உண்ணாவிரதத்த நிறுத்துங்க என்றார் அதனால் தான் கருணாநிதி உண்ணாவிரதத்தை நிறுத்தினார்" என்று வைகோ கூறினார்.

 2. இதில் கவனியுங்கள் தோழர்களே, பல இடங்களில் அடுக்கு மொழிகளில் சோனியாவைப் பற்றி அப்படியெல்லாம் பேசுபவர் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் போது மேடம் என்று தான் குறிப்பிடுகிறார். அது மரியாதைக்குரிய விடயம் என்று நீங்கள் நினைக்கலாம். இல்லை, அங்கு அவர் குறிப்பிட்டது ஒரு எஜமான விசுவாசத்தைத் தான் காட்டுகின்றது. அவரது உடல்மொழியும் கூட, தன்னுடைய பெருமதிப்பிற்குரிய எஜமானரை குறிப்பிடும்போது, எவ்வளவு பவ்யமாக இருக்குமோ அப்படி இருந்தது. OPS போல் தரையில் விழவில்லையே தவிர, அதே பவ்யத்தை காட்டினார். இனப்படுகொலையை நிகழ்த்திய ஒரு பெண்மணியை இவர் எஜமானராக கருதுகிறார் என்றால், இவர் யார்?

2.11.3. இந்திய அரசிற்கு எதிரான வலுவான ஆதாரம்

 1. இதில், சரி திருமுருகன் எழுதியது சரியான தகவலாக இல்லாமலே இருக்கட்டும். இதிலென்ன பெரிய திசை திருப்பல் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இந்த விவகாரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால். அதாவது, போர் நிறுத்தப்பட்டதாக, மகிந்த ராஜபக்சேவின் அறிவிப்பு, சர்வதேச அளவில் இந்தியாவை ஒரு குற்றவாளியாக நிறுத்தக் கூடிய அறிவிப்பு. இதைப் பற்றி விரிவாகவே பேசுவோம் தோழர்களே.


 2. இந்த நிகழ்வு அதாவது, இந்திய அரசின் சார்பில் எம்.கே.நாராயணனும், சிவசங்கர்மேனனும் இலங்கை அரசிடம் பேசி போர் நிறுத்தம் செய்வதாக அல்லது கனரக ஆயுதங்களை உபயோகிப்பதில்லை என்று ஒரு அறிவிப்பினை வெளியிடச் செய்தது என்பது இந்தியாவிற்கும் இந்த இனப்படுகொலையில் பங்கு இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கான ஒரு மிக முக்கிய ஆதாரம். இது எப்படி ஆதாரம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஒரு குற்றத்துக்கான தண்டனை எப்படி வழங்கப்படுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.


 3. ஒரு நபர் இன்னொருவர் மீது காரை மோதி அவரைக் கொலை செய்தார் என்றால், காரை மோதியவர் இறந்து போனவர் மீது ஏற்கனவே முன் விரோதம் இருந்து அவரைக் கொலை செய்யும் நோக்கில் காரை ஏற்றி மோதி இருந்தால், அவருக்கு தண்டனை அதிகமாக இருக்கும். அப்படி இல்லாமல் இருந்து சாலையில் செல்லும் போது கவனக்குறைவாலோ அல்லது வேறு காரணத்தாலோ அவர் மீது ஏற்றியிருந்தால் அப்பொழுது தண்டனை குறைவாக இருக்கும். அது விபத்து என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தண்டனை அதிகமாகக் கொடுக்கும் பொழுது அவருக்கு (குற்றவாளிக்கு) குற்றமிழைக்கும் நோக்கம் இருந்தது என்பதை நிரூபித்திருப்பார்கள். அதாவது, குற்றம் இழைக்கும் நோக்கத்தோடு ஒருவர் ஒரு தவறு செய்தால் அவருக்கு தண்டனை அதிகம்.


 4. இதே பாணியில் தான் சர்வதேச அளவில் இனப்படுகொலைக்கான குற்றங்களுக்கான தண்டனைகளை வழங்கும் பொழுதும் அந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர், இந்தக் குற்றத்தின் மூலம் மக்கள் கொல்லப்படுவார்கள், இந்த மக்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் (criminal intent) இருந்து அதனை செய்திருந்தார் என்றால் அவருக்கு இனப்படுகொலை சட்டப்படி தண்டனை உண்டு. இங்கே இந்தியாவுக்கு அப்படிப்பட்ட குற்றமிழைக்கும் நோக்கம் (Mens rea), கிரிமினல் இன்டென்ட் இருந்தது என்பதை இந்த நிகழ்வு எடுத்துரைக்கின்றது. எப்படி என்றால், இலங்கையில் ஒரு போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்தது என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகின்றது. இந்தியா செய்த அந்த முயற்சியை, இந்தியாவை ஆளுகின்ற காங்கிரஸ் கட்சிக்கு வேறு நோக்கம் கொண்டதாக இருந்தாலும் கூட, இந்தியாவால் ஒரு போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இருந்தது என்பதை இது காட்டுகின்றது.

 5. ஒரு போரை தடுப்பதற்கான அதிகாரம் இருந்தும், தடுக்க விரும்ப வில்லை என்பது இந்தியாவிற்கு குற்றம் இழைக்கும் எண்ணம், குற்றம் இழைக்கும் நோக்கம் இருந்தது என்பதை நிரூபிக்கக் கூடிய ஒரு ஆதாரம் இது. இதனை தான் தோழர் நார்வே விஜய் ஐ.நா.வில் சமர்ப்பித்த அறிக்கையிலும், தன்னுடைய முடிவுரையில் இரண்டாவது பத்தியில் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருப்பார்.


 1. ஆக, இந்தியாவைக் குற்றவாளியாக நிருபிக்கப்பட்டு தண்டனை வாங்கிக் கொடுக்கக் கூடிய ஒரு நிகழ்வான இதனை மக்கள் மனத்திலிருந்து திருப்ப வேண்டும், மாற்ற வேண்டும், மறக்கடிக்க வேண்டும் என்ற நோக்கம் வைகோவிற்கும் திருமுருகனுக்கும் இருந்திருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விடயம், இந்திய அரசு குற்றவாளி என்று நிரூபணம் செய்யக்கூடிய அதே நேரத்தில் இதே நிகழ்வை வைத்து ப.சிதம்பரத்தையும் தண்டிக்க முடியும். ஏனெனில், அந்த கேபினட் கூட்டத்தில், இந்த முடிவை எடுப்பதற்கு மிக முக்கயமான காரணமே ப.சிதம்பரம்தான். மகிந்த ராஜபக்சேவிடம், MK நாராயணன் பேசும்போது குறிப்பிடுவது, “தொடர்ந்து இனப்படுகொலை நடைபெற்றால், தமிழ்நாட்டில் ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்”. அப்பொழுது நடைபெற இருக்கும் தேர்தலில், இந்தக் கோபத்தினால் பாதிக்கப்படப்போவது தான்தான் என்பதால் தான் ப.சிதம்பரத்திற்கு போர் நிறுத்த அறிவிப்பு தேவைப்படுகின்றது. அதனால்தான் இந்திய அரசு தற்காலிக போர் நிறுத்தத்திற்கு முயற்சிக்கின்றது. ப.சிதம்பரம் தண்டிக்கப்படுவது வைகோவிற்கும், திருமுருகனுக்கும் உவப்பானதாக இல்லை.


 2. அதனால் தான், வைகோ "கருணாநிதி உண்ணாவிரதத்தை கைவிட்டதற்கு அந்தப் போர் தொடர்பான எதுவும் காரணமில்லை. சோனியாவின் கோபம் தான் காரணம்" என்று கூறுகின்றார். திருமுருகன் ஒரு படி மேலே போய், "சர்வதேச அழுத்தத்தின் காரணமாக அந்தப் போர் நிறுத்தம் வந்தது" என்று வாதிடுகின்றார். ஆனால், ஏப்ரல் 24 அன்று அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இலங்கை மறுப்பு தெரிவித்தது என்பதையும், இந்திய அதிகாரிகளின் வருகைக்குப் பிறகே எதுவும் சொல்ல முடியும் என்று இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்காவிடம் கூறியதையும் [200] பார்த்தால் கூட இந்தியாவின் தலையீடு மட்டுமே போர் நிறுத்த அறிவிப்புக்கு காரணம் என்பது தெரியும். இப்படி மிக முக்கியமான ஒரு ஆதாரத்தை திசை திருப்புவதற்காக தவறான தகவல்களை சொல்வதன் மூலம் இந்தியாவை காப்பாற்றக் கூடிய ஒரு முயற்சியைத் தான் திருமுருகன் மேற்கொண்டு வருகின்றார்.


 3. இது War of Perception என்பதின் ஒரு பகுதியாக நடைபெறுகின்றது. ஒரே நேரத்தில் மக்களினுடைய பார்வையை மாற்றக் கூடியதாக இது நடைபெறாது. படிப்படியாக ஒவ்வொரு விடயத்திலும் மக்களுடைய எண்ணங்களை மாற்றுவது அல்லது குழப்புவது என்பதாக தான் War of Perception நடைபெறும். இப்படி தான் திருமுருகன் நடத்தியிருக்கக் கூடிய War of Perception ஒவ்வொரு கட்டத்திலும் மக்களுடைய மனங்களில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கில் செய்து வந்திருக்கிறார். இப்படிப்பட்ட கருத்துத் திரிப்பு அடியாளாக செயல்படும், திருமுருகனை நேர்மையாளர் என்றா சொல்வீர்கள் தோழர்களே?


2.12. இந்தியாவிற்கு எதிராக யாரும் போராடாமல் தடுக்கும் திருமுருகன்


 1. இந்திய உளவுதுறையின் செயல்பாடுகளை தொடர்ந்து மேற்க்கொண்டு வரும் மே பதினேழு இயக்கம். தற்பொழுது புதிதாக ஒரு வாதத்தை முன் வைக்கிறது, அதாவது குற்றவாளியிடம் கோரிக்கை வைப்பது கோரிக்கையை கைவிடுவதற்க்கு சமம் என்று கூறுகிறார்கள். [201] அதனால், இந்தியாவிடம் கோரிக்கை வைக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். ஆனால் இதே நிலையை இதற்கு முன் மே பதினேழு எடுத்ததா என்று பார்க்க வேண்டும். ஈழப்படுகொலையில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் ,ஐ.நா ஆகியவை கூட்டுக் குற்றவாளிகள். இதில் இலங்கை முதன்மை குற்றவாளி. மேலும் பல்வேறு குற்றவாளிகள் இருக்கிறார்கள். இதில் மே பதினேழு இயக்கத்தினர் இந்தியாவிடம் கோரிக்கை வைக்கக் கூடாது என்று கடந்த ஒர் ஆண்டாக கூறி வருகின்றனர். ஆனால் அதற்கு முன்பு இந்தியாவிடம் கோரிக்கை வைத்து தான் போராடி இருக்கிறார்கள். உதாரணத்திற்கு சில சம்பவங்களை நான் பட்டியல் இடுகின்றேன்.


2.12.1. இந்தியப் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர உறுதியளித்த திருமுருகன்


 1. 2012 ஆம் ஆண்டு லண்டன் நகரில் பிரிட்டீஷ் தமிழ் ஃபோரம் (BTF) நடத்திய ஒரு மாநாடு நடைப்பெற்றது. அந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்தும், ஈழத்தில் இருந்தும், புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்தும் பல்வேறு தமிழ் தலைவர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் வந்திருந்தனர். அவர்கள் கூடி முடிவெடுத்து பல்வேறு தீர்மானங்களை வடிவமைத்தனர். அங்கு வடிவமைத்த தீர்மானங்களை அந்தந்த நாட்டின் பாரளுமன்றத்தில் நிறைவேற்ற ஒவ்வொவரும் முயல வேண்டும் என்பதை கேட்டுக் கொண்டனர். இன்னும் சொல்லப் போனால் மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் தான் முதலில் இந்த தீர்மானத்தை இந்திய பாராளுமனறத்தில் நிறைவேற்ற தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து நாங்கள் நிறைவேற்றுவோம். இதே போன்று ஒரு நிலைப்பாட்டினை மற்ற நாடுகளில் உள்ள தோழர்களும் எடுக்க வேண்டும் என்று கூறினார். அனைவரும் அதனை ஏற்றுக் கொண்டனர். பிறகு மாநாடு முடிந்த பின் BTF அமைப்பில் இருந்து ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்கள். அதில் அவர்கள் மிக தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்கள். இந்த கோரிக்கைகளை உங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நீங்கள் முயற்சி எடுப்பீர்கள் என நம்புகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த மின்னஞ்சலையும் இணைத்துள்ளேன்.


 1. அவர்கள் அனுப்பிய கடிதத்தின் நகலும் இணைக்கப்பட்டுள்ளது. [202] தீர்மானங்கள் என்னன்ன நிறைவேற்றப்பட்டது என்றும் இங்கு இருக்கின்றது. [203] 1. தீர்மானங்களை பாருங்கள் மிக தெளிவாக இருக்கும் இனப்படுகொலைக்கான விசாரணை என்பதும், பொதுவாக்கெடுப்பும் என்று தெளிவாக குறிக்கப்பட்டு இருக்கும். ஆக 2012 ல் மே பதினேழு இயக்கம் இந்த நிலைப்பாட்டில் தான் இருக்கின்றது. அதாவது இந்திய பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற பட வேண்டும் அதன் ஊடாக சர்வதேச அரங்கில் ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்பதுமாக இருக்கிறது. இந்த நிலைப்பாடு இத்துடன் நிறைவடையவில்லை, தொடர்ச்சியாக இந்த நிலைப்பாட்டை தான் மே பதினேழு இயக்கம் கைக்கொண்டு வந்திருக்கிறது.

2.12.2. மாணவர் போராட்டமும், இந்தியாவை நோக்கிய கோரிக்கைகளும் 1. உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும், 2013 மார்ச் மாதத்தில் தொடங்கிய மாணவர் போராட்டம் என்பது உலகளவில் ஒரு பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அந்த மாணவர் போராட்டத்தில் முதல் நிலை என்பது மார்ச் 8 ம் தேதி லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் தொடங்கியது, அதற்கு முன்பு மார்ச் 3ம் தேதி முதல் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தோம். அந்த போராட்டத்தின் கோரிக்கைகளை வடிவமைக்க மே பதினேழு இயக்கம் தான் உதவியது என்று அனைவருக்கும் தெரியும், அந்த கோரிக்கைகளில் மூன்றாவது கோரிக்கையை பாருங்கள்.[204] 1. சர்வதேச விசாரணையும், பொதுவாக்கெடுப்புமே ஒரே தீர்வு, ஆகவே இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையும், தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பும் கோரி ஐ.நாவில் ஒரு தீர்மானத்தை இந்தியா கொண்டு வர வேண்டும் என்று 3 வது கோரிக்கை உள்ளது.


 2. இந்த தீர்மானத்தை மாணவர்களுக்கு பரிந்துரைத்தது மே பதினேழு இயக்கம் என்பதை நிச்சயம் மறுக்கப் போவது இல்லை. ஆனால் இப்பொழுது குற்றவாளியிடம் கோரிக்கை வைக்க கூடாது என்று கூறுகிறார்கள் என்றால் 2013 இதே குற்றவாளியிடம் தானே கோரிக்கை வைத்து இருக்கின்றோம். அப்படியென்றால் மாணவர் போராட்டம் தவறு என்று சொல்கிறார்களா? இல்லை அப்பொழுது இந்தியாவைப் பற்றி தெரியாது இப்பொழுது தான் தெரிந்தது, இந்த குற்றவாளியிடம் கோரிக்கை வைப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஒரு வேளை திருமுருகன் கூறலாம்.2.12.3. இங்கிலாந்து, இந்தியா என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா 1. மேலும் ப்ரேமெனில் (ஜெர்மனியில்) நடைபெற்ற தீர்ப்பாயத்திற்கு பிறகு தமிழ்நெட்டில் ஒரு பேட்டியளித்தோம். அதை இந்த காணொளியில் பாருங்கள். [205] பனிரெண்டாவது நிமிடத்தில் அவர் பேசுகிறார் ஐ.நா என்பது ஒரு தனித்த அமைப்பு அல்ல அது பல்வேறு நாடுகளில் கூட்டமைப்பு. ஐ.நாவில் எப்படி தீர்மானம் வருமென்றால் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த நாடுகள் எல்லாம் சேர்ந்து ஐநாவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றும். அது போல் ஒவ்வொரு நாட்டில் உள்ள தமிழர்கள் எல்லாம் அந்தந்த நாட்டில் உள்ள பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அதற்கான போராட்டம் செய்ய வேண்டும், நார்வேயில் உள்ளவர்களும், ஜெர்மனியில் உள்ளவர்களும், இங்கிலாந்தில் உள்ளவர்களும், அவரவர் நாட்டில் பாராளுமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்ற முயல வேண்டும் என்று கூறுகிறார். இனப்படுக்கொலை குற்றவாளி இங்கிலாந்திடம் கோரிக்கை வைத்தால் கோரிக்கையை உயர்த்தி பிடிப்பதாம், இன்னொரு இனப்படுகொலை குற்றவாளி இந்தியாவிடம் கோரிக்கை வைத்தால் கோரிக்கையை கைவிடுவதாம். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?

 1. இது தான் திருமுருகன் தொடர்ச்சியாக இருந்த நிலைப்பாடு. அதன் பிறகு இந்த திருமுருகன் என்ற தனிநபர் இந்திய உளவுத்துறையின் கைகளுக்கு சென்றபிறகு இந்த கோரிக்கையே தவறு என்று திரிக்க ஆரம்பிக்கிறார். இல்லை இல்லை நாங்கள் இங்கிலாந்தை தான் சொன்னோம் இந்தியாவை சொல்லவில்லை என்று திருமுருகன் சொல்கிறார் என்றால் நாங்கள் தமிழ்நெட்டிற்கு பேட்டியளித்தது என்பது பிரேமென் தீர்ப்பாயத்தில் முதல் கட்ட தீர்ப்பு வந்த பிறகு. அதன் இறுதி தீர்ப்பு என்பது 2014 ஜனவரி மாதம் 22 அன்று வெளியானது.

2.12.4. குற்றவாளியிடம் மே பதினேழு இயக்கம் வைத்த கோரிக்கைகள்

 1. அதற்கு அடுத்த நாள் கேப்டன் தொலைகாட்சியில் அவர் பேட்டியளித்தார் அதற்கான காணொளி இங்குள்ளது [206], அதன் 7 நிமிடம் 15 வது நொடியில் இங்குள்ள தமிழ்நாட்டு கட்சிகளுக்கு நாங்கள் கூறுவதென்றால் ஐ.நா சபையில் சர்வதேச விசாரணைக்கு தீர்மானங்கள் கொண்டு வாருங்கள் என்று கூறுகின்றோம். நாங்கள் இந்த தீர்மானத்தை கொண்டு வாருங்கள் என்று தானே கேட்கிறோம் என்று இந்திய அரசிடம் தான் கோரிக்கை வைத்துள்ளார்.


 2. ஆக இந்திய அரசிடம் கோரிக்கை வைத்தது என்பது முன்னரும் வைத்திருக்கிறார் பிரேமென் தீர்ப்பாயத்தில் தீர்ப்பு வந்த பிறகும் வைத்திருக்கிறார். ப்ரேமென் தீர்ப்பாயத்தில் முதன்முதல் இந்திய உளவுதுறையின் செயல் திட்டங்களுக்கு ஏற்ப செயல்படுகிறார். அதற்கு பிறகு உடனடியாக மாற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற தொடங்குகின்றார்


 3. அதற்கு பிறகு கூட பாருங்கள் 2014 பிப்ரவரி மாதத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைப்பெற்ற அந்த அமெரிக்க தீர்மான ஆதரவான கூட்டத்தில் நான் பேசியதை முன்னரே கூறி இருக்கின்றேன். அதில் தீர்வாக என்ன சொன்னோம் என்று சொன்னால், முதலில் நான் பேசியது, நாம் இந்திய அரசை நெருக்கி இந்த தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்று நான் கூறினேன். சிறிது நேரத்திற்கு பிறகு பேசிய திருமுருகனும் அதை தான் கூறினார். அதனை அங்கு இருந்தவர்களும் ஏற்றுக் கொண்டனர். ஆக 2014 பிப்ரவரியிலும் இந்திய அரசிடம் தான் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்தின் அடிப்படையில் பிப் 20 தேதி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அதிலும் இந்திய அரசை நோக்கி தான் கோரிக்கை இருந்தது.


 4. கோரிக்கை சரியாக இல்லையென்றால் மே பதினேழு இயக்கம் அந்நிகழ்விற்க்கு செல்லாது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் திருமுருகன் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, பேசியும் இருக்கிறார். ஆக இது போன்று தான் அனைவரும் இந்தியாவிடம் கோரிக்கையை வைத்து கொண்டு இருந்தோம். கோரிக்கை வைத்து இந்திய அரசு அதனை நிறைவேற்ற கோரி வந்தோம். மே பதினேழு இயக்கமும் இப்படி கோரிக்கை வைத்து கொண்டு இருந்தது. ஆனால் 2014 ல் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இந்திய அரசிடம் கோரிக்கை வைக்க கூடாது, குற்றவாளியிடம் கோரிக்கை வைப்பது கோரிக்கையை கைவிடுவதற்க்கு சமம் என்ற வாதத்தை வைக்க தொடங்கியது.


 5. அது வரை “இந்தியா குற்றவாளி என்பது தெரியாதா உங்களுக்கு”. ஆனால் இந்த வாதம் கூட தவறான வாதம் என்று நான் கூறுகிறேன். இதற்கு இன்னொரு சம்பவத்தை கூறுகிறேன் பாருங்களேன். அமெரிக்க அரசு தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி தடை விதித்தது. 2014 மே மாதத்தில் மெரினாவில் நடைபெற்ற நினைவேந்தலில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை பாருங்கள்
 1. புலிகள் மீதான தடையை நீக்கு என அமெரிக்க அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதில் தெளிவாக அமெரிக்கா என்று குறிப்பிட்டுள்ளனர், அங்கு புலிகளுக்கு தடைவிதித்த குற்றவாளி அமெரிக்கா. குற்றவாளியிடமே கோரிக்கை வைத்து தவறை சரி செய்ய சொல்கிறது. ஆனால் இங்கு குற்றவாளி இந்தியாவிடம் கோரிக்கை வைக்கக் கூடாது என்பது என்ன வித அரசியல் தோழர்களே? இங்கு மட்டுமல்ல உலகத்தில் நடைபெறும் போராட்டம் அனைத்திலும் குற்றவாளியை எதிர்த்து குற்றவாளியிடம் தான் கோரிக்கை வைக்கப்படுகின்றன. மீத்தேன் போராட்டமென்றால் திட்டத்தை ரத்து செய் என்று குற்றாவளியிடம் தான் கோரிக்கை வைக்கிறோம்.


 2. இடிந்தகரையில் அணுஉலையை அமைத்த இந்திய அரசை எதிர்த்து அந்த அணுஉலைகளை மூடவேண்டும் என குற்றவாளியான இந்திய அரசிடம் தானே கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள். ஆக குற்றவாளியிடம் கோரிக்கை வைப்பது என்பது கோரிக்கையை எங்கும் கைவிடுவது அல்ல.

2.12.5. இந்தியாவை அம்பலப்படுத்தவும் மறுக்கும் திருமுருகன்


 1. உங்கள் அமைப்பின் தலைமை, தமது எஜமானர்களான இந்திய உளவுத்துறையின் விருப்பத்திற்கு ஏற்ப கோரிக்கைகளை மாற்றி மற்றவர்களை திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார்கள். சரி இந்தியாவை அம்பலபடுத்த வேண்டுமென்றால் அதற்கான வாய்ப்பு ஜெர்மனி நகரின் பிரேமெனில் நடைப்பெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் ஆதாரங்களை முன் வைக்க ஒரு வாய்ப்பு இருந்ததை இந்திய உளவு துறையுடன் இணைந்து அந்த வாய்ப்பினை குழி தோண்டி புதைத்து விட்டு இந்தியாவிற்க்கு எதிரான ஆதாரங்களே பதியாமல் பார்த்து கொண்டாரே இந்த திருமுருகன். இவரா இந்தியாவை அம்பலபடுத்துவதை பற்றி பேசப் போகிறார்? அம்பலபடுத்த இருக்கும் ஒரு வாய்ப்பை மறுத்து விட்டு அமெரிக்காவிற்க்கும், ஆப்பிரிக்காவுக்கும் அழைத்து சென்றா போராட்டம் நடத்த முடியும்? நாம் இருக்கும் இடத்தில் தான் போராட்டம் நடத்த முடியும். சீமான் கூறினாரே “லைக்கா”வை எதிர்க்க வேண்டுமென்றால் லண்டனில் போய் போராடுங்கள் என்று, அது போல இந்தியாவை எதிர்க்க வேண்டுமென்றால் ஐரோப்பாவிற்க்கு போய் போராட்டம் நடத்த வேண்டுமென்று திருமுருகன் கூறுகிறாரா?


 2. அம்பலப்படுத்துவது என்பது இங்கு போராட்டம் நடத்தினால், சர்வதேசம் எங்கும் அதை கொண்டு சேர்க்கும் வலிமை நமக்கு இருக்கின்றது. ஐ.நா. முற்றுகையின் போது அப்படிதானே செய்து வந்திருக்கிறோம். பல்வேறு நாடுகளின் அரசுகளும் அதனை செய்து வருகின்றது. இங்கு இருக்கக் கூடிய தூதரங்களின் வேலை விசா வழங்குவது மட்டும் தான் வேலை என்று நினைக்கிறீர்களா தோழர்களே? இல்லை. மாறாக அந்த நாட்டில், அந்த மாநிலத்தில், என்ன நடைபெறுகிறது என்பதை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் என்பதை அறிந்த்திருப்பீர்கள். அமெரிக்காவினுடைய அந்த தூதரக நடவடிக்கை எல்லாம் வீக்கி லீக்ஸ்சில் வெளியானேதே, அதில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் எவ்வளவு விரிவாக அலசபட்டுள்ளது என்பது உங்களுக்கு விளங்கும்.


 3. ஜனவரி 2009 ம் ஆண்டிற் குரிய ஒரு வீக்கிலீக்க்ஸ் கேபிளை நான் மேற்கோள் காட்டுகின்றேன் [207] , அதாவது பிரணாப் முகர்ஜி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்கின்றார். அவர் சென்ற பிறகு அங்கிருந்த, அதாவது கொழுபம்பில் உள்ள அமெரிக்காவின் தூதர், இந்தியாவின் தூதரை அழைத்து பிரணாப் முகர்ஜி வந்ததற்க்கு காரணம் தமிழ் நாட்டில் நடக்கும் போராட்டங்களா என்று கேட்கிறார். தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் தான் இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்தி இருக்க முடியும் என்று அவர்களுக்கு தெரியும். ஆக தமிழ் நாட்டில் அழுத்தம் இல்லை என்பது தான் பல்வேறு நாடுகளுக்கு செய்தியாக சொல்லப்பட்டது. தமிழ்நாட்டில் அழுத்தம் இல்லை என்ற செய்தி இப்பொழுதும் வர வேண்டும் என்பதற்காகத்தான் திருமுருகன், முக்கியப் போராட்டக் களமான தமிழகத்தில் இந்தியாவை எதிர்த்து எந்தப் போராட்டமும் நடைபெற்றுவிடக் கூடாது என்று முனைந்து வருகின்றார்.

 4. இன்னொரு சம்பவத்தையும் நான் குறிப்பிடுகின்றேன் 2013 ஜப்பானில் இருந்த தமிழர்கள் அங்கிருந்த ஜப்பான் வெளியுறவு அமைச்சகத்திற்கு எதிரில் போராடுகிறார்கள் [208]

 5. அப்பொழுது அங்கிருந்த அதிகாரி தெளிவாக கேட்கிறார் 2009 இல் தமிழ்நாடு எதுவும் செய்யவில்லையே ஏன்? 2ஜி ஊழலா ? அப்பொழுது இருந்த அரசாங்கம் செயல்படாமல் இருக்க தான் அந்த 2ஜி ஊழல் உருவாக்கப்பட்டதா? என்று கேட்கிறார், ஜப்பானில் இருந்த ஒரு அதிகாரிக்கு கருணாநிதி அரசாங்கம் செயல்படமால் இருந்தது என்பது வரை தெரிந்து வைத்து இருக்கிறார் என்பது இங்கிருந்து குறிப்புகள் சென்று கொண்டு இருக்கின்றன என்பதாகும். ஆக இங்கு இந்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினால் இங்குள்ள பிற நாட்டின் தூதரங்கள், இந்திய அரசை எதிர்த்து போராட்டம் நடைபெறுகிறது என தங்கள் நாட்டுக்கு தகவல் தந்திருக்கும் தானே? இது இந்தியாவை அம்பலபடுத்துவது ஆகாதா?

 6. இது போல தான் 2013 மார்ச் மாதத்தில் மாணவர் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்தது. மார்ச் 22 ம் தேதி அமெரிக்காவின் ராபர்ட் பிளேக் ஒரு பேட்டியளித்து இருந்தார் [209] அந்த பேட்டிகுறித்து உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த பேட்டி பற்றி நானும் பேசியிருக்கிறேன், திருமுருகனும் பேசி இருக்கிறார். ராபர்ட் பிளேக்னுடைய பேட்டி என்னவாக இருந்தது என்றால், அமெரிக்கா கொண்டு வந்த அந்த தீர்மான உருவாக்கத்தில் ஒவ்வொரு பகுதியிலும் இந்தியாவின் பங்கு இருந்தது என்று கூறிப்பிட்டு இருந்தார். மார்ச் 21ம் தேதி வரை அப்படி பேசாத அமெரிக்கா திடீரென்று மார்ச் 22ம் தேதி பேச காரணம், அமெரிக்கா எதுவும் செய்யவில்லை என்று அர்த்தமா? இல்லை! அமெரிக்காவும் செய்தது, இந்தியாவும் செய்தது என்பது தான் அதன் அர்த்தம். ராபர்ட் பிளேக் பேச காரணம், தமிழகத்தில் அமெரிக்காவுக்கான எதிர் மனநிலை கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த எதிர் மனநிலை தமக்கு ஆபத்து என்பதால் ராபர்ட் பிளேக் அப்படி ஒரு பேட்டி கொடுக்கிறார். ஆனால் அவர் பேசியதன் உள்ளீடு என்ன? அதாவது நீங்கள் அமெரிக்காவை எதிர்த்து போராடுகிறீர்கள், இந்தியாவை எதிர்த்து போராடுங்கள் என்று தன்னுடைய அரசாங்கத்தை காப்பாற்றி கொள்வதற்காக தான் அந்த பேட்டியை கொடுத்துள்ளார். இது போல தான் திருமுருகனும் இந்தியாவை எதிர்த்து போராடாதீர்கள் என்று கூறுகிறார். ராபர்ட் பிளேக்கும் அவ்வாறு கூறுகிறார். அதாவது தத்தம் நாட்டை எதிர்த்து போராடாதீர்கள் என்று இருவரும் கூறுகிறார்கள்.

 7. இவர் தம் நாட்டை ஆதரித்து பேசுபவர் சரி, அம்பலபடுத்தவாவது செய்தார் என்றால் அதுவும் இல்லை .தற்போது ”துவக்கம்” என்ற பெயரில் ஒரு குறும்படம் எடுக்கப்பட்டது.[210] , அதை மே பதினேழு இயக்கத்தால் வழி நடத்தப்படும் பாலசந்திரன் மாணவர் இயக்கம் எடுத்ததகாக இவர்கள் செய்தி வெளியிட்டுள்ளார்கள். அந்த குறும்படத்தை பார்க்கத் தொடங்கியவுடன் நல்ல முயற்சி என்று நினைத்துக் கொண்டு பார்க்க தொடங்கினேன். மிகச்சரியாக 3 ஆம் நிமிடத்தில் எனது நினைப்பில் கொள்ளிகட்டையை வைத்தனர். அதில் ஈழத்தில் நடைப்பெற்ற இனப்படுகொலைக்கு காரணம் யார் யார் என்று ஒரு பட்டியல் சொல்கிறார்கள் அதில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள் ஈழப்படுகொலையை நடத்தின என்று கூறுகிறார்கள்.
 1. ஏன் அதில் இந்தியா பங்கெடுக்க வில்லையா? இந்த காணொளி எதற்காக எடுக்கப்பட்டது? விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தானே? அந்த இனப்படுகொலை குறித்து அம்பலபடுத்துவதற்க்கு தானே? அதில் இந்தியாவை சேர்க்கவில்லை என்றால் அந்த குறும்படத்திற்கான ஸ்கிரிப்படை எழுதினது மே பதினேழு இயக்கமென்றால் திட்டமிட்டு மறைக்கிறது என்று சொல்லலாம். இல்லை நாங்கள் எழுதவில்லை அவர்களே எழுதினார்கள் என்றால் அவர்களுக்கு அந்த செய்தி போகவில்லை என்று தானே அர்த்தம்.? அதாவது இந்தியா ஒரு இனப்படுகொலையை நடத்தியது என்ற செய்தி அந்த மாணவர்களுக்கு போய் சேரவில்லை. அப்ப என்ன தான் பண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள் மே பதினேழு இயக்கத்தின் மூலமாக? இதை எல்லாம் சிந்தித்து பாருங்கள் தோழர்களே உங்களுக்கு தெளிவாக புரியும் ப்ரேமென் தீர்ப்பாயத்தில் தொடங்கி இதுவரை இந்திய உளவுத்துறையின் கட்டுபாட்டில் இருந்து இந்திய உளவுத்துறையின் வழிகாட்டலில் இந்தியாவை காப்பதற்காகவும் செயல்படுகிறார்கள் என்பது புரியும்.

2.12.6. இந்தியாவிற்கு எதிராக போராடினால், கெட்ட வார்த்தை சொல்லி திட்டும் மே பதினேழு

 1. இலங்கை ராணுவத்தின் 58 வது படைப்பிரிவின் தலைவராக இருந்து, இனப்படுகொலையை நடத்திய சவேந்திர சில்வாவிற்கு இந்திய அரசின் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் M.Phil பட்டம் வழங்குவதற்கான பயிற்சி 2015 ஜனவரி முதல் நடைபெற்று வருகின்றது. [211] இதனைக் கண்டித்து, இந்திய அரசிற்கு எதிராக உலகத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் 2015 மார்ச்சில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியது. [212] ஆர்ப்பாட்டம் முடிவுற்ற அடுத்த நாள், அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழர் அம்பத்தூர் மணிக்கு, கந்துவட்டி, கட்டபஞ்சாயத்து கும்பல்கள் பாணியில், நள்ளிரவில் போன் செய்து, “எல்லா வன்னியரும் ஒண்ணா சேந்துட்டீங்களா? எதுக்குடா ..... இந்தியாவை எதிர்த்து போராட்டம் பண்ணுறீங்க?” என்று மிகவும் மோசமான கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டியிருக்கின்றார் உங்கள் அமைப்பின் அநாகரீக பேர்வழி ஹரிஹரன். இதனை முக்கியமான தொலைபேசி அழைப்பு இரண்டு என்று வைத்துக்கொள்வோம். இன்னும் விரிவாக பேச வேண்டிய விடயம் இது. சிறிது நேரத்திற்கு பிறகு பேசுவோம்.


 2. 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டக் களத்தில் இருக்கும் தோழர் அம்பத்தூர் மணி, இந்தியாவிற்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தால், உங்கள் அமைப்பிற்கு ஏன் எரிகிறது தோழர்களே? இந்தியாவை எதிர்க்கக்கூடாது என்று திருமுருகன் போகும் இடமெல்லாம் பேசியும், இந்தியாவை எதிர்த்து ஒரு போராட்டம் நடைபெற்று விட்டதே என்று கோபமா? ஆர்ப்பாட்டத்தை நடத்திய உலகத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினரை திட்டாமல், அம்பத்தூர் மணியை ஏன் ஹரிஹரன் திட்ட வேண்டும் என்று தோன்றுகின்றதா தோழர்களே? இதற்கான விடையை நீங்கள் அறிந்தால், இந்திய அரசு இயந்திரத்தின் அங்கமாக திருமுருகன் இருப்பது தெரியவரும். இந்த விடையை அறிவதற்கு இன்னும் சில சம்பவங்களைப் பார்த்தால் உங்களுக்கு புரியும். இந்திய அரச இயந்திரத்தின் அங்கமாகிவிட்ட திருமுருகனும், மே பதினேழும் சமூக மாற்றத்திற்கும் எதிரானதாக இருக்கின்றது.

  பகுதி 3. மே பதினேழு கட்டப்பஞ்சாயத்துக் கும்பல்


3.1. ஆணாதிக்கத் திமிர் பிடித்த மே பதினேழு தலைமை. 1. ஈழ விடுதலைக்கு எதிராக செயல்படும் மே பதினேழு இயக்கம் பற்றி முழுமையாக புரிந்து கொண்டால் தான் அது எப்படி சமூக மாற்றத்திற்கு எதிரானது என்பதும் புரியும். அதனால், மே பதினேழு இயக்கம், அதனுடைய தலைமை, எப்படி ஆணாதிக்க சிந்தனையுடன் இருக்கிறது என்பதையும் நாம் பார்த்து விடுவோம் தோழர்களே. உங்களுக்கு சார்லஸ் அந்தோனியை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மே பதினேழு இயக்கத்தில் 2011இல் ஒரு ஒருங்கிணைப்பாளராக செயலாற்றியவர். இந்த சார்லஸ் அந்தோனி, எழுத்தாளர் மீனா கந்தசாமி [213] அவர்களை 2011 செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு அவர்கள் இருவரும் மங்களூரில் குடும்பம் நடத்துவதற்காக அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அங்கே சென்ற பிறகு தான் சார்லஸ் அந்தோணி எவ்வளவு கொடூரமான நபர் என்பது எழுத்தாளர் மீனா கந்தசாமிக்கு தெரிய வந்தது. சார்லஸ் அந்தோணிக்கு கோபம் வரும் போதெல்லாம் கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து மீனா கந்தசாமியை அடிப்பதும் துன்புறுத்துவதுமாக மிகவும் மோசமாக நடந்து கொண்டிருக்கிறார். இதனை பற்றி மீனா கந்தசாமி, அவுட்லுக் பத்திரிகையில் ஒரு கட்டுரை கூட எழுதியிருக்கிறார். [214]


 2. இவ்வளவு கொடூரமாகவும் ஒரு மனிதன் இருக்க முடியுமா ? அதுவும் மார்க்சியம் படித்தவன், பெரியாரியம் படித்தவன், இப்படி இருக்க முடியுமா என்பது ஆச்சர்யமாக இருக்கும். அப்படிப்பட்ட இந்த ஆணாதிக்கத் திமிர் பிடித்த சார்லஸ் அந்தோணியின் கொடுமைகளில் இருந்து, சில மாதங்களிலேயே மீனா கந்தசாமி அந்த திருமண பந்தத்திலிருந்து விலகி வந்துவிட்டார். அப்பொழுது இது குறித்து மீனா கந்தசாமி எழுதிய கட்டுரை வெளியானவுடன், பல்வேறு தரப்பிலிருந்தும் மே பதினேழு இயக்கம் ஏன் சார்லஸ் அந்தோணியை ஆதரிக்கிறது என்பது பற்றியும் ஒரு கேள்வி வந்தது. அப்பொழுது ஒரு முறை ஆலோசனை கூட்டத்தில் நான் இந்த பேச்சினை தொடங்கினேன். தொடங்கியவுடன் லேனா குறுக்கிட்டார். அவர் அடித்தார் என்பதெல்லாம் அவருடைய தனிப்பட்ட விடயம். அவருடைய குடும்ப விடயத்தை பற்றியெல்லாம் நாம் இங்க பேச கூடாது என்று கூறிவிட்டார். அப்பொழுது திருமுருகன் அவர்கள் திருமண உறவு முறிந்துவிட்டது; அந்தப் பஞ்சாயத்திற்கு நான், வளர்மதி, கீற்று ரமேஷ் ஆகியோர் தான் சென்றிருந்தோம். தற்பொழுது சார்லஸ் அந்தோனியும் அமைப்பில் கிடையாது; அதனால் பேச வேண்டாம் என்று கூறினார்.


 3. ஆனால் மே பதினேழு அமைப்பின் சார்பாக சார்லஸ் அந்தோணி பற்றி எந்த விதமான வெளிப்படையான ஒரு அறிக்கையோ அறிவிப்போ வரவில்லை. அதிலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில், மே பதினேழு இயக்கத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக (MP) நியமிக்கப்பட்ட ஒருவர், அமைப்பில் இல்லையென்றால் வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும். அப்பொழுது பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமிக்கு ஆதரவாகமே பதினேழு இயக்கம் நின்றிருந்திருக்க வேண்டும். சார்லஸ் அந்தோனி இவ்வளவு மோசமானவன் என்றும் இவன் மே பதினேழு இயக்கத்தில் எந்த அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டான் என்றும், எத்தன அடிப்படையில் இயக்கத்தினுடனான உறவு முறிந்து விட்டது என்றும் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அதனை செய்யவில்லை. அதற்கு பிறகும் கூட சார்லஸ் அந்தோனி 2014 ம் ஆண்டு மீனா கந்தசாமியின் தந்தை மீது பொய் வழக்கு புனைந்து அவரை கைது செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டான். அதை பற்றி மீனா கந்தசாமி கூட எழுதியிருக்கிறார். [215] ஒரு பாதிக்கப்பட்ட சக தோழரான மீனா கந்தசாமிக்கு நியாயம் கேட்டு கூட குரல் எழுப்ப மறுத்தது மே பதினேழு இயக்கம்.


 4. அதற்கு பிறகு நான் மே பதினேழு இயக்கத்தில் தொடர்ச்சியாக பெண்கள் பற்றிய புரிதலினை பல்வேறு தருணங்களில் பல்வேறு கூட்டத்தினில் பேசியிருக்கிறேன். எடுத்துகாட்டாக 2014 ஜனவரி மாதத்தில் காரைக்கால் கூட்டு வன்புணர்வுக்கு எதிர்வாக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்த பொழுது, ஆலோசனைக் கூட்டத்தில் அங்கு பல்வேறு தோழர்களுக்கும் பெண் உடல் குறித்தும், பெண்ணின் உடல் மீது அந்த பெண்ணை தவிர வேறு எவருக்கும் உரிமை இல்லை என்பது பற்றியும் நான் பேசியதை இங்கு இருக்க கூடிய பல தோழர்கள் அறிவீர்கள் என்று நினைக்கின்றேன். அதற்கு பிறகு கூட மார்ச் மாதத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக, பாலியல் வல்லுறவுக்கு எதிரான தொடர் பிரச்சாரத்தினை மேற் கொண்ட போது தோழர் ராதிகா சுதாகர் அதற்கான வாக்கியங்களை உருவாக்கி இருந்தார்.
  இப்படியாக நாம் செய்து கொண்டிருந்தோம்.


 5. ஆனால் அதற்கு பிறகு பார்த்தால் தோழர்களே, மே பதினேழு இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த வளர்மதி, 2014 ம் ஆண்டு மே மாதத்தில் அவருடைய காதலியை ஒரு வாக்கு வாதத்தின் போது அடித்து விட்டார். இது தொடர்பாக வளர்மதியின் முன்னாள் காதலியின் உறவினரான ஆதித்தன் என்பவர் எனக்கு போன் செய்து வளர்மதி இவ்வாறு நடந்து கொண்டது பற்றி பேசினார். என்ன இருந்தாலும் வளர்மதி அவர் காதலியினை அடித்தது தவறு அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை என்பதை மிக தெளிவாக குறிப்பிட்டேன். மேலும், நான் அவரிடம் கூறியது. இதனை முதலில் இரு குடும்பங்கள் அளவில் பேசி சரி செய்ய முயலுங்கள். ஒரு வேளை அப்படி சரி செய்ய முடியவில்லை என்றால் மூன்றாம் நபர் அது பற்றி பேசுவது சரியாக இருக்கும் என்று நான் குறிப்பிட்டேன். அவரும் அதனை சரி என்று குறிப்பிட்டிருந்தார் இது சம்மந்தமாக வேறு சில தோழர்கள் பேசிய பொழுதும் நான் இதையே குறிப்பிட்டிருந்தேன்.


 6. ஆனால் இந்த பிரச்சனைக்காக ஆதித்தன் உள்ளிட்ட பலர் திருமுருகனிடம் போன் செய்து கேட்ட போது திருமுருகன் மிக எளிமையாக "உலகத்தில் ஆயிரம் விடயம் நடக்கிறது, அத்தனை பற்றியும் நான் பேசிக் கொண்டிருக்க முடியாது” என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார். ஒரு பெண்ணை ஆண் அடிப்பது என்பது அந்த ஆணுடைய ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு தான். இங்கு அப்படி அடித்த சார்லஸ் அந்தோனி, வளர்மதி பற்றி பேச வேண்டாம், அது அவர்களுடைய தனிப்பட்ட விடயம் என்றும், உலகில் பல நடக்கின்றன அத்தனை பற்றியும் பேச முடியாது என்று கூறும் மே பதினேழு இயக்கத்தின் தலைமையின் சொற்களை கேட்பதற்கு இப்போது தந்தை பெரியார் இருந்திருந்தால், தனது கைத்தடியை கொண்டல்ல, மாறாக தனது செருப்பை கழற்றி அடித்திருப்பார்.


 7. இந்த வளர்மதி பற்றி நான் பேச மாட்டேன் என்று கூறும் திருமுருகன், வளர்மதிக்காக எதுவும் செய்யவில்லை என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறாக சிந்தித்து கொண்டிருக்கிறீர்கள் தோழர்களே. ஆதித்தன் வளர்மதி விஷயத்தில் நியாயம் கேட்பதற்காக போன் செய்து பேசினார் என்பதற்காக, ஆதித்தனுக்கு எதிராக இவர் மேற்கொண்ட பிரச்சாரம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? ஆதித்தன் தமிழ்நெட் இணையத்திற்கு சில நேரங்களில் சில கட்டுரைகளை அனுப்பி கொண்டிருக்கிறார். உடனடியாக திருமுருகன் என்ன செய்தார் என்றால் லதனிடம் ஆகஸ்ட் 2014 ல், "ஆதித்தன் இங்கு உளவு வேலையினை செய்து வருகின்றார். ஒவ்வொருவரிடமும் சென்று நீங்கள் எதற்கு தமிழ் ஈழத்திற்காக போராட வேண்டும் என்ற கேள்வியினை கேட்டு வருகின்றார். இவருடன் தமிழ்நெட் குழு எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என்று ஜெயா தோழரிடம் கூறி விடுங்கள்" என்று கூறினார்.


 8. இயல்பாகவே ஈழத்து இளைஞர்களுக்கு ஒரு கேள்வி இருக்கும். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இந்த உணர்வு, ஈழத்தின் மீதான ஆதரவு என்பதும், எப்படி இவ்வளவு உணர்வு பூர்வமாக செயல்படுகிறார்கள் என்ற ஒரு ஆர்வம் இருக்கும். அதனையே தான் அவர் கேட்டிருகின்றார். ஆனால் திருமுருகன் இதனை பயன்படுத்தி ஆதித்தன் உளவுத்துறையை சார்ந்தவர் தமிழ்நெட்டோடு எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என்றும் கூறி விடுங்கள் என்று லதனிடம் குறிப்பிடுகின்றார். இப்படி இவர் செய்தது என்பது ஆணாதிக்கத் திமிர் பிடித்த மொடாக்குடி வளர்மதிக்காக என்று நீங்கள் பார்க்க வேண்டிய நேரத்தில், இந்த மொடாக்குடி வளர்மதிக்காக திருமுருகன் செய்த மற்ற வேலைகளையும் பார்க்க வேண்டும்.


 9. கடந்த 4 ஆண்டுகளாக வளர்மதிக்கு பல்வேறு வகைகளிலும் பொருளாதார ரீதியாக உதவி வருபவர் திருமுருகன் தான். புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கு போன் செய்து, “வளர்மதி என்றொரு தோழர் இருக்கின்றார். அவர் மிக முக்கியமாக வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார். நீங்கள் அவரிடம் பேசுங்கள்” என்று திருமுருகன் கூறுவார். புலம்பெயர் தமிழர்களும், வளர்மதிக்கு அடுத்து போன் செய்வார்கள். அவர்களிடம், நிதி அனுப்பச் சொல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார் வளர்மதி. இது மட்டுமின்றி சென்னையில் இருக்கக்கூடிய பல்வேறு நண்பர்களிடம், நேரடியாக வளர்மதியின் வங்கிக் கணக்கை கொடுத்து அவ்வப்போது நிதி அனுப்பச் சொல்லியிருக்கின்றார். மே பதினேழு இயக்கத்தின் உறுப்பினர்களிடமும், வளர்மதிக்கு உதவச் சொல்லியிருக்கின்றார். இப்படி செய்து கொண்டிருந்த திருமுருகன் 2013 ல் இருந்து ஏதேனும் ஒரு வகையில் மே பதினேழு இயக்கத்திற்கு நன்கொடையாக வந்த பணத்தையும் எடுத்து வளர்மதிக்கு கொடுத்திருக்கிறார்.


 10. 2013 நவம்பரில், இயக்கத்தின் பணத்தையே (ரூ. 39.500- ) அனுப்பிருக்கின்றார். இங்கிருந்த தோழர்களிடம் டெல்லியில் நடைபெறும் கருத்தரங்கத்திற்கு என்று காரணம் கூறியிருக்கின்றார். ஆனால், டெல்லியில் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு மொத்த செலவே ரூ. 10000/- ஐ தாண்டாது. மன்றத்திற்கான வாடகை, Flex Back Drop, பார்வையாளர்களுக்கான தேநீர் என்று அனைத்துமே பத்தாயிரத்திற்குள் அடங்கிவிடும். இந்த நிகழ்வை காரணமாக வைத்து வளர்மதிக்கு ரூ. 30,000/- அளவிற்கு கூடுதலாக கொடுத்திருக்கின்றார்.
 11. அதிலும், அந்தக் காலக்கட்டத்தில்தான் ஜெர்மனி செல்வதற்கு பணம் இல்லை என்று நான் வேறு இடங்களில் கடன் கேட்டுக் கொண்டிருந்தேன். அமைப்பில் பணம் இல்லை என்று பொய் சொல்லி, இந்தக் குடிகாரன் குடிப்பதற்காக பணம் அனுப்பியிருக்கின்றார். இனத்திற்கான நீதியைக் கோரி, ஜெர்மனியில் நடைபெறும் ஒரு நிகழ்விற்கு செல்வதற்கு பணம் இல்லை என்று கூறிவிட்டு, ஒரு குடிகாரன் குடிப்பதற்கு இயக்கத்தின் பணத்தை எடுத்து அனுப்பும் திருமுருகனின் முதன்மை விருப்பமும், செயல்பாடும், இனத்திற்கான நீதியை நோக்கியா? குடிகாரனின் குடிவெறிக்கு ஊற்றிக் கொடுப்பதை நோக்கியா?


 12. அதிலும், 2014 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, வளர்மதிக்கு குடிக்க பணம் இல்லையென்றால், உடனடியாக மே ப