பயத்தோடு வாழ பழகிக் கொள்

ஜோதிஜி திருப்பூர்

மின்னஞ்சல் - powerjothig@yahoo.com

கட்டுரை - கட்டுரை

வெளியீடு: .ஸ்ரீனிவாசன் http://FreeTamilEbooks.com

மின்னஞ்சல் - tsrinivasan@gmail.com

எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே.

உரிமை Creative Commons License

This eBooks is licensed under a Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License

http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US

You are free to:

Share — copy and redistribute the material in any medium or format

The licensor cannot revoke these freedoms as long as you follow the license terms.

Under the following terms:

Attribution — you must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use.

Non Commercial — you may not use the material for commercial purposes. http://deviyar-illam.blogspot.in/

No Derivatives — If you remix, transform, or build upon the material, you may not distribute the modified material.

No additional restrictions — You may not apply legal terms or technological measures that legally restrict others from doing anything the license permits. At the end of the book, add the contents from the page.

Free Tamil EBooks

எங்களைப் பற்றி

http://freetamilebooks.com/about-the-project/

உள்ளே 1. இன்னும் எத்தனை பேருடா இருக்கீங்க? 27

 2. அப்பாவாக மாறும் போது நீ உணர்வாய்? 39

 3. ஆசைமரம் 43

 4. இனிய நினைவுகள் 51

 5. ஈக்கள் மொய்க்கும் உலகம் 59

 6. உண்டு உறங்கி விடு. செரித்து விடும். 71

 7. ஐந்து வலைத்ததும் வளையாததும் 82

 8. கற்றுக் கொண்டால் தப்பில்லை 94

 9. நாலும் புரிந்த நாய் வயது 108

 10. ஐந்தில் கற்றதும் பெற்றதும் 116

 11. அங்கீகாரமும்அவஸ்த்தைகளும் 121

 12. பாவம் அப்பாக்கள் 126

 13. இதுவும் கடந்து போகும் 130

 14. வலைபதிவுகள் வரப்பிரசாதம் 138

 15. காதோடு பேசலாம் வாங்க. 143

 16. இந்தியாவிற்குள் உள்ளதா தமிழ்நாடு? 152

 17. தமிழ்நாடு - அறிவாளிகளின் உலகம் 163

 18. நீயும் பொம்மை நானும் பொம்மை 171

 19. தண்ணீரில் விளையாடிய நாடுடா இது? 178

 20. மாற்றத்திற்கு ஆசைப்படு 191

 21. இட ஒதுக்கீடு - ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை 198

 22. தர்மபுரி - வன்முறையும் வன்மமும் 213

 23. சாதிப் பொங்கலில் சமத்துவச் சர்க்கரை. 231

 24. பொருளாதாரத்தினால்(மட்டுமே) அழியும் சாதிகள் 254

 25. மதமாற்றம் --- விளிம்பு நிலை மனிதர்கள். 269

 26. அரசியல் அதிகாரம் -- பயத்தை உருவாக்கு 276

 27. சமச்சீர் கல்வி ரமா சாபமா? 286

 28. ஊரெல்லாம் பெட்ரோல் வாசம் 298

 29. கூடங்குளம் -- உண்மைக்கும் பொய்க்கும் நடுவில் 310

 30. கச்சத்தீவு - உண்மைகளும் எதார்த்தமும் 321

 31. 500 336தேவியர் இல்லம் திருப்பூர் http://texlords.wordpress.com/என்ற பெயரில் வேர்ட்ப்ரஸ் ல் 2009 ஜுலை மாதம் எழுதத் தொடங்கினேன. கடந்த நான்கு ஆண்டுகளாக ப்ளாக்கரில் தேவியர் இல்லம் http://deviyar-illam.blogspot.com/ என்ற பெயரில் எழுதி வருகின்றேன்.

அனுபவம், செய்திகள், கட்டுரை, சமூகம், பயணக்கட்டுரை, ஆன்மீகம், நெடுங்கதை, தமிழ்நாட்டு அரசியல், இந்திய அரசியல், சர்வதேச அரசியல், ஈழம் சார்ந்த வரலாறு, தமிழர் வரலாறு, குழந்தைகள் குறித்த தொடர் நினைவலைகள் என்று அனைத்து தரப்பு விசயங்களையும் எனக்குத் தெரிந்த மொழியில் எழுதி வந்துள்ளேன்.

2013 ஆம் ஆண்டு என் முதல் புத்தகம் வெளியானது. 4 தமிழ் மீடியா வெளியிட்டார்கள். அந்தப் புத்தகத்தின் பெயர் டாலர் நகரம். திருப்பூர் வாழ்வியல் குறித்து அலசும் அனுபவத் தொடர் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு. இந்தப் புத்தகம் தமிழின் முக்கிய இதழான ஆனந்த விகடன் வருடந்தோறும் அவர்கள் வெளியிடும் இயர்புக்கில் 2013 ஆம் ஆண்டின் சிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாக தேர்ந்து எடுத்தார்கள். அடுத்து கல்வி குறித்து எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு புத்தக வடிவில் வர காத்துக் கொண்டிருக்கின்றது.

அமெரிக்காவில் இருந்து வெளி வந்து கொண்டிருக்கும் வலைத்தமிழ் இணைய பத்திரிக்கையில் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்ற தொடர் வாரந்தோறும் (2014) வெள்ளிக்கிழமை அன்று திருப்பூர் தொழிலாளர்களைப் பற்றி அலசும் வாழ்வியல் தொடராக கடந்த 19 வாரங்களாக வந்து கொண்டிருக்கின்றது. இதுவும் புத்தமாக மாற வாய்ப்புண்டு.

கடந்த 2014 நவம்பர் வரைக்கும் நான் எழுதிய தலைப்புகளின் எண்ணிக்கை 682, வந்த விமர்சனங்களின் எண்ணிக்கை 11,500. தேவியர் இல்லம் வலைபதிவை பார்வையிட்ட பார்வையாளர்கள் படித்த பக்கங்களின் எண்ணிக்கை 10 லட்சம்.

கடந்த இருபது வருடங்களாக திருப்பூரில் ஆய்த்த ஆடை ஏற்றுமதி துறையில் பணியாற்றி கடந்த ஐந்தாண்டுகளாக ஒரு நிறுவனத்தில் பொது மேலாளராக (GENERAL MANAGER) உற்பத்தித் துறையில் பணியாற்றிவருகின்றேன்.

மனைவி பெயர் மாதவி. இளங்கலை வணிகவியல் பட்டதாரி. எனக்கு தோழியாக, என் எழுத்துக்கு வாசகியாக குடும்பத்தின் இல்லத்தரசியாக இருக்கின்றார். எங்கள் இரட்டைக்குழந்தைகளின் பெயர் தர்ஷிணி, துர்க்கா தேவி, கடைக்குட்டியின் பெயர் சங்கரி தேவி. முறையஆறாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகள் மூவருக்கும் என் எழுத்து, இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பது, நான் எதைக்குறித்து எழுதுகின்றேன் போன்ற அனைத்து விபரங்களும் மிக நன்றாகவே தெரியும்.

மூவரும் என்னை எழுத்தாளன் என்று என்னை ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் அவர்கள் கணினி பயன்படுத்தும் நேரத்தை நான் கடன் கேட்பதே அவர்களுக்குண்டான பிரச்சனை. மூவரில் இருவருடன் சமூகத்தைப் பற்றி இங்குள்ள அரசியல் அவலத்தைப் பற்றி அலசி ஆராய்வதே என் பொழுது போக்குகளில் ஒன்று. அந்த அளவுக்கு அவர்களை சக நண்பர்களாக மாற்றுவதில் வெற்றி அடைந்துள்ளேன். எப்போது போல என் மனைவி அவள் சின்னவட்டத்தை வெளியே வராமல் இன்னமும் அடம் பிடித்துக் கொண்டிருக்க குழந்தைகள் மூவருடனும் சேர்ந்து அவரை கலாய்ப்பதே எங்களின் முக்கிய பொழுது போக்காக உள்ளது.

நான் வாழ்ந்து வந்த வாழ்க்கை, நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை, இதன் வழியே நான் பார்த்த சமூகம் இதன் மூலமாக பெற்ற பாடங்கள், நான் பெற்ற தாக்கம் மற்றும் நான் உணர்ந்து கொண்டவைகளை இங்கே கட்டுரைகளாக “பயத்தோடு வாழ பழகிக் கொள்” என்ற பெயரில் உங்களுக்கு தொகுத்து கொடுத்துள்ளேன். ஒவ்வொரு கட்டுரைக்கும் கீழே நான் எழுதிய தேதியை குறிப்பிட்டு உள்ளேன். அதன் மூலம் அந்த சம்பவம் நடந்த காலத்தை உங்களால் ஒப்பிட்டுக் கொள்ள முடியும்.

இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளிலும் நீங்களும் வாழ்ந்து இருக்கக்கூடும். சமூகம் சார்ந்த கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய பிரச்சனைகளஅனைத்தும் உங்கள் வாழ்க்கையோடு மட்டுமல்ல உங்கள் தலைமுறையின் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடிய அம்சமாகும்.

நடுத்தரவர்க்கத்தின் அங்கத்தினரான நாம் ஏதோ ஒன்றுக்காக பயந்து தினந்தோறும் நம் இருப்பை காப்பாற்றிக் கொள்ளத்தான் போராடிக் கொண்டே இருக்கின்றோம். எத்தனை சமூகமசார்ந்த பிரச்சனைகள் நம்மைச் சுற்றி நடந்தாலும் நமக்கு அது நடக்கும் வரையிலும் நாம் அனைத்தையும் செய்திகளாகவே பார்த்து பழகி விட்டோம். இது தான் நம் வாழ்க்கையின் எதார்த்தம்.

உணர்ந்து படியுங்கள். உங்கள் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை மறக்காமல் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

நட்புடன்

ஜோதிஜி திருப்பூர்.

09.12.2014

JOTHI GANESAN

E Mail – texlords@gmail.com2013 ஆம் ஆண்டு. நவம்பர் மாதம் என்று தான் நினைகின்றேன். துல்லியமாக அந்த நாள் என் நினைவில் இல்லை. அதுவொரு ஞாயிற்றுக் கிழமை. மனைவியும் குழந்தைகளும் மதிய தூக்கத்தை நிம்மதியாக அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். எப்போதும் போல என் இணையப் பயணம் தொடங்கியது. நான் திருப்பூரில் பணிபுரியும் சூழலில் என்னால் முழுமையாக எழுத முடிவதும், அதிக நேரம் இணையத்திற்கு ஒதுக்க முடிவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் எழுதப்பட்டது தான் என் அனைத்து வலைபதிவு கட்டுரைகளும் என்பதை நான் உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை தானே?

காரணம் தேவியர்கள் தூங்கிய பின்பு தான் கணினி என் கைக்கு வரும். அப்போது தான் சீனிவாசன் உருவாக்கி இருந்த மின் நூல் தளம் குறித்து அவர் அறிமுகப்படுத்தி எழுதிய வாசகங்கள் என் கண்களுக்கு தென்பட்டது.

தமிழ் மொழி குறித்து, அதன் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கான சிந்தனைகளை எங்கு படித்தாலும் எவர் எழுதி இருந்தாலும் அதனை என் முகநூலில், கூகுள் ப்ளஸ்ல் பகிர்ந்து விடுவதுண்டு.

யாரோ ஒருவரின் கண்களுக்கு தென்படும் எங்கிருந்து உதவிக்கரம் கிடைக்கும் என்றே நம்மால் யூகிக்க முடியாது அல்லவா? அதிர்ஷ்டவசமாக சீனிவாசன் அவர் அலைபேசி எண் கொடுத்து இருந்தார்.

தினந்தோறும் நான் பணிபுரியும் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான பேர்களை கையாளுவதால் புதிய நபர்களுடன் உரையாடுவது என்பது எனக்கு எப்போது இயல்பான காரியம். உள்ளூர் எண் என்பதால் பேசிவிடலாம் என்பதற்காக அவரை அழைத்தேன். ஆச்சரியம் என்னவென்றால் சீனிவாசனின் சென்னை அலுவலகம் வாயிலாக அப்போது அவர் இருந்த அமெரிக்காவிற்கு அந்த அழைப்பு சென்றது

நான் பேசிய சில நிமிடங்களில் நீண்ட நாள் பழகியவர் போல அவர் பேசிய பேச்சுக்கள் எனக்கு நம்பிக்கை அளித்தது. அப்போது அவர் உருவாக்கியிருந்த மின் நூல் தளம் என்பது அவருக்கு பாதி நம்பிக்கையை தான் கொடுத்து இருந்தது. அவர் பேச்சில் சற்று சோர்வு தெரிந்தது. அவரின் குடும்ப பின்புலத்தையுமவிசாரித்த பின்பு நிச்சயம் இவருக்கு நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டும் என்று என் மனதில் தோன்றியது.

உற்சாகத்துடன் அவர் செயல்பாடுகளை பாராட்டினேன். என் வார்த்தைகள் அவருக்கு இனம் புரியாத உற்சாகத்தை தந்து இருக்க வேண்டும் என்பதை அவர் தொடர் உரையாடலின் வாயிலாக புரிந்து கொண்டேன். நான் உங்கள் பின்னால் இருப்பேன்’ என்று உறுதியளித்தேன்.

எனக்கு கணினி சார்ந்த தொழில் நுட்பங்கள் எதுவும தெரியாது. அதில் ஆர்வமும் இல்லை. ஒரு மணி நேரத்தில் ஆயிரம் வார்த்தைகள் என்றாலும் அசராமல் குழந்தைகள் தொந்தரவை பொறுத்துக் கொண்டு மனதில் ஓடும் ேகமான யோசனைகளை டைப்படிக்க மட்டும் தான் தெரியும். அதன்படி என் நெருக்கடியான பணிச்சூழலுக்கிடையே சீனிவாசனுக்கு அளித்த வாக்குறுதியின்படி என் முதல் மின் நூலை தயாரித்துக் கொடுத்தேன்.

ஈழம் -- வந்தார்கள் வென்றார்கள்” டிசம்பர் 19 2013 அன்று வெளியிடப்பட்டது.

ஒரு ாரியம் தொடங்கி முடியும் வரைக்கும் அது என்னைப் பொறுத்தவரையிலும் முதல் பிரசவ சமாச்சாரம் தான். ஒவ்வொரு காரியத்தையும் முழு அர்ப்பணிப்புடன் தொடங்குவேன். ஒவ்வொரு நாளும் புதிய நாளாகத் கருதுவேன். அதையே தொடர்வேன்.

சீனிவாசன் என் விருப்பத்தை சரியாக நிறைவேற்றினார். ன் முதல் மின் நூலுக்கு நான் எதிர்பார்க்காத வரவேற்பு கிடைத்து. வலைபதிவு மூலம் எனக்கு நெருக்கமான தொடர்பில் இருந்த பலருக்கும் மின் நூல் தளத்தை தெரியப்படுத்துவதில் என்னால் முடிந்த அளவுக்கு செயல்படுத்தி காண்பித்தேன்.

நான் சீனிவாசனிடம் கொடுத்த வாக்குறுதியின் படி என் தேவியர் இல்லம் வலைபதிவில் வெளியான கட்டுரைகளை தொகுத்து அடுத்தடுத்து நான்கு மின் நூல்களை அளித்தேன். எல்லா நூல்களுக்கும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பு கிடைத்து. இது போதும் என்று நிறுத்தி விட்டேன்.

ஆனால் தொடர்ந்து மின் நூல் தளத்தில் வெளியாகிக் ொண்டிருந்த ஒவ்வொரு மின் நூல்களையும் ஒரு வாசகனாக கவனித்துக் கொண்டே வந்தேன். வெகுஜன எழுத்தாளர்கள் என்கிற ரீதியில் மின் நூல்தளத்திற்கு ஆதரவு தருகின்றோம் என்கிற வகையில் உள்ளே வந்தவர்களின் உண்மையான முகத்தையும் கவனித்துக் கொண்டே தான் வந்தேன்.

தளம் தொடங்கி ஒரு வருடம் முழுமையாக முடிந்து அந்த வெற்றியைக் கொண்டாடியவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்ததோடு சமீபத்தில் வெளியான இதில் பங்கெடுத்த இளையர் குழுவினர் பட்டியலைப் பார்த்த போது எனக்கு ஆச்சரியம் அதிகமானது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொருவரும் கணினி சார்ந்த துறையில் தான் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். மென்பொருள் துறையில் வேலை நெருக்கடி இருந்த போதிலும் அடிப்படையில் ஒருவித சுகவாசிகளாக மாறிவிடும் பலரையும் பார்த்த காரணத்தினால் இந்த தள ஆக்கத்திற்காக உழைத்த அத்தனை பேர்களின் முழு விபரத்தையும் படித்து முடித்த போது ஆச்சரியமாக இருந்தது.

இத்தனை பேர்கள் இதற்குப் பின்னால் இருக்கின்றார்களா? என்று எண்ணம் என்னுள் உருவானது.

இவர்களின் கடந்த ஒரு வருட உழைப்பிற்கு நம்மால் முடிந்த ஒரு உதவியைச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. சீனிவாசனிடம் பேசினேன்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கும் பல ஆயிரம் தமிழர்களைப் போல இதில் பட்டியலிட்டுள்ள ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினர் ஒத்துழைப்போடு தங்கள் நெருக்கடியான பணிச்சூழலுக்கிடையே தங்களால் முடிந்த பணியைச் செய்து உள்ளார்கள்.

இதில் உள்ள அத்தனை ேர்களுக்கும் குடும்ப கடமைகள் உள்ளது. பொருளாதார சவால்கள் உள்ளது. கடுமையான பணிச்சூழலில் தங்களை தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். தாங்கள் வாழும் போது ஏதாவது ஒன்றை தாங்கள் வாழும் சமூகத்திற்கு ஒழுங்காக செய்து கொடுத்து விட்டு நகர்ந்து விட வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளனர். அவரவருக்கு தெரிந்த வகையில் ஏதோவொரு வகையில் தங்கள் சமூகப் பணியை சிறப்பாகவே செய்து உள்ளனர்.

ஒருவர் உருவாக்கப்பட்ட படைப்பு என்பது காகித வடிவில் இருந்தால் கூட காலம் மறந்து விட வாய்ப்புள்ளது. ஆனால் இணையம் என்பது இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்களை சந்தித்தாலும் யாரோ ஒருவரின் படைப்பு மற்றொருவர் பார்வையில் படத்தான் போகின்றது. தமிழ் மொழி அழிந்து விடப் போகின்றது போன்ற கூக்குரல்களைத் தாண்டியும் வணிக ரீதியான சாத்தியக் கூறுகள் இந்த மொழியை வாழ வைத்துக் கொண்டு தான் இருக்கப் போகின்றது. இந்தக் குழுவினர் உழைப்பில் வெளி வந்துள்ள அத்தனை மின் நூல்களும் இந்தத் தளம் வாயிலாக யாரோ ஒருவர் கண்ணில் பட்டுக் கொண்டே தான் இருக்கப் போகின்றது.

இன்னும் நாலைந்து தலைமுறைகள் கழித்து ஒரு இளைஞர் ஒரு மின் நூல் புத்தகத்தை தரவிறக்கம் செய்து வாசிக்கும் போது இந்தக் குழுவில் உள்ளவர்களின் முகமோ முகவரியோ தெரியாத போதும் கூட வாசித்த பின்பு அவர்கள் அடைந்த ஆத்மதிருப்தி இவர்களின் வாரிசுகளுக்கு ஆசிர்வாதமாக வந்து சேரப் போகின்றது என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன்.

இந்த மின்நூல் தளத்தை உருவாக்கியவர், உருவாக்க காரணமாக இருந்தவர், ஆக்கப் பூர்வமான செயல்பாட்டின் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர், குழு உருவாக காரணமாக இருந்தவர், குழுவிற்கு வழிகாட்டியாக இருந்தவர், தள மேம்பாட்டிற்காக தொடர்ந்து தங்கள் உழைப்பை வழங்கிக் கொண்டிருப்பவர்கள் என்று அத்தனை உள்ளங்களும் எனது ஐந்தாவது மின் நூலான பயத்தோடு வாழ பழகிக் கொள் என்ற இந்த மின் நூலை காணிக்கையாக்குகின்றேன். என் மின் நூலை வாசிக்க வந்த உங்களுக்கு இளையர் பட்டாளத்தை அறிமுகம் செய்து வைப்பதில் பெருமிதம் அடைகின்றேன்.

நன்றி.

http://freetamilebooks.com/

முதல் ஆண்டில் மகத்தான சாதனை செய்துள்ள இளையர் கூட்டம்.1. பிரியா

இவர் IIT Mumbai ல் பணிபுரிகிறார். priya

பங்களிப்புமின்னூலாக்கம்

மின்னஞ்சல்priyacst@gmail.com

2. இராஜேஸ்வரி raji

ஆஸ்திரேலியாவில் வாழும் கணிணி வல்லுனர். முன்னாள் கல்லூரி ஆசிரியர். பங்களிப்புமின்னூலாக்கம்

மின்னஞ்சல்sraji.me@gmail.com

3. து. நித்யா

சென்னை Cognizant ிறுவனத்தில் பணிபுரியும் கணிணி வல்லுனர். nithya

பங்களிப்புமின்னூலாக்கம், தமிழில் கணிணி நூல் எழுதுதல்

மின்னஞ்சல்nithyadurai87@gmail.com

4. சிவமுருகன் பெருமாள் sivamurugan

அமெரிக்க வாழ் கணிணி நிபுணர்

பங்களிப்பு – மின்னூலாக்கம்

மின்னஞ்சல்sivamurugan.perumal@gmail.com

5. கிஷோர்

சிங்கப்பூர் வாழ் iOS நிபணர்

பங்களிப்புFreeTamilEbooks க்கு iOS மென்பொருள் உருவாக்கம்

மின்னஞ்சல்ukisho@gmail.com

ஜெயேந்திரன் சுப்பிரமணியம் Jayendran

சொந்த ஊர் ஈரோடு மாவட்டதில் உள்ள வெள்ளோட்டாம்பரப்பு. சோனா பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு தற்பொழுது ஒரு தனியார் மென்பொருள் சேவை நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பூனேயில் பணியாற்றிவருகிறார் . பொழுதுபோக்கு திரைப்படங்கள் பார்ப்பது , பாடல்கள் கேட்பது, தொழில்நுட்பம் பற்றி இணையத்தில் உலாவுதல், புத்தகங்கள்(ஆங்கிலம் மற்றும் தமிழ் புதினங்கள்) படிப்பது. தற்பொழுது freetamilebooks.com இல் பங்களிக்கிறார்.

பங்களிப்புமின்னூலாக்கம்

மின்னஞ்சல்vsr.jayendran@gmail.com

ப்ரியமுடன் வசந்த் vasanth

அரபு நாட்டில் வசிக்கும் வரை கலைஞர்

பங்களிப்புஅட்டைப்படம் உருவாக்கம்

மின்னஞ்சல்vasanth1717@gmail.com

ஜெகதீஸ்வரன்

ஜெகதீஸ்வரன், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூரில் பிறந்தவர். தற்போது கணினி மென்பொருள் எழுதுனனாக சென்னையில் பணியாற்றி வருகிறார். இணைய இதழ்களிலும் வலைப்பூக்களிலும் கதை, கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர். விக்கிப்பீடியாவில் பொன்னியின் செல்வன் புதினம் தொடர்பான நாற்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை மற்றும் திரைப்பட வாழ்க்கை, பேட்வுமன், பேட்கேர்ள் போன்ற பல கட்டுரைகளையும் எழுதியுள்ளர். சோழர், பொன்னியின் செல்வன், பேட்மேன் என சில வார்ப்புருக்களை வடிவமைத்துள்ள இவர், விகடன் குழும இதழ்களின் அட்டைப் படங்களையும், பொன்னியின் செல்வன் கதைமாந்தர்களின் ஓவியங்களையும் பதிவேற்றியுள்ளார்.

https://ta.wikipedia.org/s/2c3w

பங்களிப்புஅட்டைப்படம் உருவாக்கம்

மின்னஞ்சல்sagotharan.jagadeeswaran@gmail.com

லெனின் குருசாமி lenin

காரைக்குடியில் வாழும் வரைகலைஞர். M.Sc முடித்து விட்டு தற்பொழுது Sun Creations – Powered by Open Source (Printing, Designing and Cyber Cafe centre) மையத்தை இயக்கி வருகிறார்.

பங்களிப்புஅட்டைப்படம் உருவாக்கம்

மின்னஞ்சல்guruleninn@gmail.com

மு. சிவலிங்கம்

OLYMPUS DIGITAL CAMERA

ஒரு தமிழகத்தைச் சேர்ந்த கணினி சார் தொழில்நுட்ப எழுத்தாளர். இந்திய அரசின் தொலைத்தகவல் தொடர்புத் துறையில் 33 ஆண்டு காலம் பொறியாளராகப் பணியாற்றி 2007 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்ற இவர் கணிதம், தமிழ் இலக்கியம், தொழிலாளர் சட்டம், மனிதவள மேம்பாடு மேலாண்மை, கணினிப் பயன்பாட்டு அறிவியல் போன்ற பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். இவர் கணினி தொடர்பான பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டு பல ஆய்வுக் கட்டுரைகளையும் படித்துள்ளார்.பல ஆண்டுகளாக கணிணி துறை நூல்களை தமிழில் எழுதி, பலரும் கணிணி துறையில் நுழைய ஆசிரியராக இருப்பவர்.

https://ta.wikipedia.org/s/2k9o

பங்களிப்புபல்வேறு எழுத்துருக்களில் வரும் மின்னூல்களை ஒருங்குறியாக்கம் செய்தல்

மின்னஞ்சல்musivalingam@gmail.com

11. மனோஜ் குமார் manoj

கோவையில் உள்ள வரை கலைஞர்

பங்களிப்புஅட்டைப்படம் உருவாக்கம்

மின்னஞ்சல்socrates1857@gmail.com

12. கலீல் ஜாகீர்

விழுப்புரத்தைச் சேர்ந்த கட்டற்ற மென்பொருள் ஆர்வலர். ஆன்டிராய்டு மென்பொருள் உருவாக்குபவர்khaleel

பங்களிப்புஆன்டிராய்டு செயலி உருவாக்கம்

மின்னஞ்சல்jskcse4@gmail.com

13. . இரவிசங்கர

புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழ் விக்கிபீடியா பங்களிப்பாளர். ravi

பங்களிப்புfreetamilebooks.com வலைத்தள மேலாண்மை, திட்ட ஒருங்கிணைப்பு, பரப்புரை.

மின்னஞ்சல்ravidreams@gmail.com

14. .சீனிவாசன்

சென்னையில் வாழும் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர். shrini

பங்களிப்புமின்னூலாக்கம், மின்னூல் வெளியீடு, பரப்புரை

மின்னஞ்சல்tshrinivasan@gmail.com

நன்றி

பயத்தோடு வாழ பழகிக் கொள் அட்டைப்படம் உருவாக்கியவர்

திரு. மனோஜ் குமார். Manoj penworks

மின் நூலில் பயன்படுத்தியுள்ள (சில) படங்கள்

https://www.facebook.com/oochappan

இதுவரையிலும் வெளிவந்துள்ள என் மின் நூல்கள்

 1. ஈழம் -- வந்தார்கள் வென்றார்கள்

ஈழம் என்ற நாடு என்று உருவானது என்பதில் தொடங்கி தமிழர்கள் எப்படி அரசியல் அதிகாரத்தை விட்டு துரத்தப்பட்டார்கள் என்பது வரைக்கும் உண்டான சரித்திர நிகழ்வுகளை அலசும் தொடர்.

http://freetamilebooks.com/ebooks/ezham-vandhargal-vendrargal/

தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 26,924

வெளியிட்ட தினம் 19.12.2013

 1. வெள்ளை அடிமைகள்

இந்தியாவில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பத்தாண்டுகளில் படிப்படியாக மேலைநாடுகளுக்கு இந்தியா எப்படி அடகு வைக்கப்பட்டது ன்பதைப் பற்றியும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பராம்பரியம் உள்ள தமிழர்களின் வரலாற்றை அலசும் தொடர்

http://freetamilebooks.com/ebooks/white-slaves/

தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 6,458

வெளியிட்ட தினம் 29.01.2014 1. தமிழர் தேசம்

தமிழ் மன்னர்களான சேர சோழ பாண்டியர்களின் வரலாற்றுக்கதையை சுருக்கமாக பேசி, நான் பிறந்த இராமநாதபுரம் மாவட்டம் படிப்படியாக எப்படி மாறியது என்பதை சரித்திர பின்புலத்தில் அலசும் தொடர்.

http://freetamilebooks.com/ebooks/tamilar-desam/

தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 7631

வெளியிட்ட தினம் 28.02.2014

 1. கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு

தமிழ்நாடு மற்றும் இந்தியா இது தவிர நான் வாழ்ந்து கொண்டிருக்கும் திருப்பூரில் நான் பார்த்து வந்து கொண்டிருக்கும் சுற்றுப்புற சீர்கேடுகளைப் பற்றி அனுபவத் தொடர் வாயிலாக அலசும் தொடர். மேலும் எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாட்டை உருவாக்கப் போகும் மரபணு மாற்றம் குறித்து பேசியிருக்கின்றேன். முழு விபரங்களைப் படிக்க தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்களேன்.

http://freetamilebooks.com/ebooks/konjam-soru-konjam-varalaru/

தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 10,928

வெயிட்ட தினம் 27.03.2014 1. இன்னும் எத்தனை பேருடா இருக்கிங்க?

தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புதுவயல் என்ற ஊர். எனது பிறப்பும் கல்லூரி படிப்பு வரைக்கும் வளர்ந்ததும் அங்கே தான். புதுவயலைச் சுற்றிலும் அறுபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உண்டு சுற்றியுள்ள கிராமங்களுக்கு புதுவயல் தான் தலைநகரம்.

ஊரின் எல்லைப்புறத்தில் எங்கள் வீடு உள்ளது. வீட்டுக்கருகே இருந்த சரஸ்வதி வித்தியாசாலை பள்ளிக்கூடத்தில் தான் எட்டாவது வரைக்கும் படித்தேன். மற்றொரு பள்ளிக்கூடமான இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாமவகுப்பு முடித்தேன். கல்லூரிப்படிப்பு காரைக்குடி அழகப்பச் செட்டியார் கலைக்கல்லூரியில் பயின்றேன்.

நான்காம் வகுப்பு வரைக்கும் எப்படி படித்தேன்? எப்படி வளர்ந்தேன் என்று இன்று என்னால் யோசிக்க முடியவில்லை. ஆனால் ஐந்தாம் வகுப்பு முதல் நடந்த சில சம்பவங்கள் இன்றும் என் நினைவில் உள்ளது.

முதல் நான்கு வகுப்புகளும் தரையிலேயே அமர வைத்துவிட்டு ஐந்தாம் வகுப்பு நுழைந்தவர்களைத் திடீர் என்று பெஞ்சில் அமர வைத்தால் எப்படி இருக்கும்? பைக்கட்டுகளை (பாடப்புத்தகங்கள்) வைத்துக் கொள்ள அறை போன்ற அமைப்பு எங்கள் மேஜையில் இருந்தது.

இது தான் ஐந்தாம் வகுப்பு. இனி இங்கே தான் நீங்கள் வர வேண்டும்” என்று வகுப்பாசிரியர் சொன்னதும் நான் முதல் ஆளாக ஓடி வந்து முதல் வரிசையில் உள்ள முதல் பெஞ்ச் இடம் பிடித்ததோடு என்னுடன் படித்த மற்ற இருவரான கோவிந்த ராஜனுக்கும், அனந்த ராமனுக்கும் இடம் பிடித்த மகிழ்ச்சியை இன்றும் கூட என்னால் உணர முடிகின்றது.

நாங்கள் மூவரும் வித்தியாசமான கூட்டணி. முதல் மூன்று ரேங்க் எடுக்கும் நாங்கள் ஒன்றாகத்தான் இருப்போம். எங்கள் கூட்டணியை எந்தச் சக்தியால் பிரித்து விட முடியும்?

எங்கள் வீட்டில் இருந்து அடுத்தச் சந்தில் தான் பள்ளிக்கூடம் இருந்தது. காலை ஒன்பது மணிக்கு பள்ளி தொடங்கும் போது வெளியே கட்டி வைத்துள்ள இரும்பு கம்பியைத் தட்டி ஓசை எழுப்புவார்கள். அந்த மணி சப்தம் எங்கள் வீட்டுக்கு கேட்கும். மணி அடித்ததும் தான் நாங்கள் வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும். நாங்கள் என்றால் நான், தம்பி, அக்காக்கள் என அத்தனை பேர்களும் ஒன்றாக கிளம்புவோம். என்னையும் சேர்த்து என்னுடன் கூடப்பிறந்தவர்கள் 13 பேர்கள். ஒரு சகோதரி சிறுவயதிலேயே இறந்து விட்டார். மீதி 12 பேர்கள். பெரிய குடும்பம். வசதிகளுக்கு பஞ்சமில்லை. நடுத்தரவர்க்கத்தின் அடுத்த கட்ட மேம்பட்ட நிலை. வயல், வீடு, சொந்தத் தொழில் என்று பணப்புழக்கத்திற்கு பஞ்சமில்லை. அதே போல தாத்தா மற்றும் பாட்டியின் உத்தரவின்படி வருடம் தோறும் குழந்தை பெறுவதை அப்பா மட்டுமல்ல எங்களுடன் கூட்டுக்குடித்தனமாய் இருந்த சித்தப்பாக்களும் தங்கள் கடமையாக வைத்திருந்தார்கள். இததவிர வீட்டில் பணிபுரியும் வேலை ஆட்களையும் சேர்த்தால் ஒவ்வொரு பொழுக்கும் நாற்பது பேருக்கும் சமைக்கும் அளவுக்கு வீடே எப்போதும் கல்யாண வீடு போல இருக்கும்.

தினந்தோறும் பள்ளியின் முன்னால் உள்ள மகிழம்பூ மரத்தடித்தடியில் புளியங்கொட்டை வைத்து ஆடும் ஆட்டம் களைகட்டி விடும். என்றைக்கோ ஒரு நாள் அம்மாவிற்கு தெரியாமல் பள்ளி நேரம் தொடங்குவதற்கு முன்னால் சென்று பை நிறையசம்பாரித்துவந்து விடுவதுண்டு. நான் போட்டுள்ள கிழிந்த டவுசரின் உள்ளே இருக்கும் பையில் விளையாடி ஜெயித்த புளியங்கொட்டை நிரம்பி வழியும். பிரசவ வயிறு போல் தனியாகத் தெரியும். என் உடன் படித்த சகோதரி உதவிக்கு வருவார். வீட்டுக்கு வந்து அப்பாவிடம் போட்டுக் கொடுக்காமல் இருக்க அவருக்குலஞ்சம்” கைமாறி எனது பெருத்த டவுசர் பை சிறிதாக மாறிவிடும்.

எங்கள் பள்ளிக்கு சுற்றிலும் உள்ள கிராமத்தில் இருந்து தான் பெரும்பான்மையான மாணவர்கள் வருவார்கள்.

அவர்கள் அத்தனை பேர்களும் ஏதோ ஒரு வகையில் கதாநாயகனாகத்தான் எனக்குத் தெரிந்தார்கள். எல்லாம் தெரிந்தது போல் பேசும் அவர்களின் பேச்சுக்களும், அவர்கள் நேற்று பார்த்த திரைப்படத்தின் சாகசமும் குறித்து என்னால் கேட்கத் தான் முடியும்.

ிரை அரங்கத்திற்குச் சென்று படம் பார்ப்பது என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அப்பாவின் கண்டிப்பு அப்படிப்பட்டது.

எங்கள் வீட்டில் இருந்து நான்கு சந்துகள் தாண்டி டூரிங் டாக்சி இருந்தது. அதன் பெயர் ஜெய செல்வாம்பிகை. கருவேல மரங்கள் நிறைந்த இடத்தஅழித்து டெண்ட் கொட்டாய் போன்ற வடிவத்தை உருவாக்கியிருந்தார்கள். படம் தொடங்குவதற்கு முன், படம் ஆரம்பிக்கப் போகின்றது என்பதற்கு அறிகுறியாக சில தனிப்பட்ட பாடல்கள் வைத்திருப்பார்கள். மாலை வேலையில் ஒலிக்கும் அந்த மாதிரியான பாடல்களை இன்று கேட்கும் போது ஊர் ஞாபகம் எனக்கு வந்து விடும். சீர்காழி கோவிந்த ராஜன், டிஎம்ஸ் ன் பக்தி பாடல்களை மட்டும் தான் நான் மட்டுமல்ல என் சகோதர, சகோதரிகளும் கேட்க முடியும். படம் பார்ப்பது என்பது எங்கள் அப்பாவைப் பொறுத்த வரையிலும் தடை செய்யப்பட்ட ஒன்று.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி தொடங்கும் முன் வீட்டில் உள்ள அத்தனை பேர்களையும் பள்ளிச்சீருடைக்கு துணி எடுப்பதற்காக ஊரில் உள்ள துணிக்கடைக்கு அழைத்துச் செல்வார். காவல்துறை அணிவகுப்பு போலவே நடக்கும். மொத்த கூட்டத்தையும் அழைத்துக் கொண்டு ஊரில் கடைத் தெருவின் வழியே பிரேமா ஸ்டோர் என்ற கடைக்கு அழைத்துசசெல்வார். அங்கே யாரும் எதுவும் பேசக் கூடாது. அமைதியாய் வரிசையாய் நிற்க வேண்டும்.

ஒவ்வொருவரின் அளவு பார்த்து துணிக்கடையில் பணிபுரிபவர் டர் டர் என்று நீல நிற கனமான துணியை கிழித்து எடுத்து ஒவ்வொன்றையும் அவரவர் பெயர் சொல்லி தனியாக எடுத்து வைப்பார்.

இந்த நிறம் தான் பள்ளியின் உடை. எடுக்கப்படும் கனமான பள்ளிச் சீருடை துணியென்பது சாக்கு போல இருக்கும். வீட்டில் இருந்து நாங்கள் செல்வதற்கு முன்பே தம்பி அங்கே அனுப்பி வைக்கப்படுவான். அந்தத் துணிக்கடையில் தகவல் சொல்லி விடுவான். பிறகென்ன அந்தச் சின்னப் பிரேமா ஸ்டோர் எங்கள் வீட்டு உறுப்பினர்களின் மொத்த கொள்ளவும் தாங்க வேண்டுமே?

பிரேமா ஸ்டோர் கடையின் முன்னால் உள்ள தையல்காரரிடம் அடுத்து அளவு கொடுக்க வரிசையாக நிற்க வேண்டும். “செல்வி” தையல்காரரிடம் அளவு காட்ட அட்டென்ஷன் பொஸிஷனில் ஒவ்வொருத்தராக வந்து நிற்க வேண்டும். அப்பா ஒவ்வொருவரையும் வரிசையாக அழைப்பார். அவர் அழைத்த நபர் மட்டும் தையல்காரரிடம் போய் நின்று அளவு கொடுக்க வேண்டும். சகோதரிகளுக்கு பாவாடை என்றாலும் அதே தான். எங்களுக்கு டவுசர் என்றாலும் அதே தான்.

துவைக்கும் போது தான் அம்மா கதறுவார்ஏண்டா தூங்கும் போது மூத்திரமவந்தால் எந்திரிச்சு தொலைக்க வேண்டியது தானே? பொணம் மாதிரி கணக்குது” என்பார்.

என்ன செய்வது பயத்திற்குத் தெரியுமா? மூத்திரம் என்பதும் மலம் என்பதும். எதைக் கேட்டாலும் குற்றம். எங்கு நின்றாலும் குற்றம் என்ற போது வளர்ந்து வாலிபனாக வந்த போதும் கூட அப்பா அனைவரையும் பயத்தில் தான் வைத்திருந்தார்.

எங்களுக்கு பள்ளிப் பாடங்களை படிப்பது மட்டும் தான் தலையாயக் கடமை. சகோதரிகள் படிப்பில் மணியாய் இருந்தார்கள். இது தவிர படிக்காத எங்களை அப்பாவிடம் காட்டிக் கொடுப்பதிலும் கில்லாடியாய் இருந்தார்கள். அப்பா இரவு வீட்டுக்குள் ுழைந்தவுடன் அனைவரும் அவர் முன்னால் போய் நிற்க வேண்டும். ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டே வருவார்.

வருகை பதிவேடு முடிக்க ட்ரம்ஸ் சிவமணி கச்சேரி நடக்கும். அப்பா அடிக்க ஓங்கும் போது அடுத்த அறையில் உள்ள நெல் கொட்டி வைக்க பயன்படுத்தும் குதிருக்குள் போய் ஒன்றன் பின் ஒன்றாக ஒளிந்து கொள்வோம். ஆனால் அப்பா துழாவிக் கொண்டு வந்து விடுவார். அவர் காலால் துலாவி அதற்கு மேல் கையில் வைத்துள்ள குச்சியால் இனம் கண்டு பதுங்கு குழிக்குள் இருக்கும் எங்களை வெளியே இழுத்து விடுவார். தீர்ப்பு உடனே வாசிக்கப்படும்.

எங்களின் எந்த அழுகையும் ெளியே கேட்காது. எதற்கும் எவர் ஆதரவு கரம் கிடைக்காது. காரணம் அப்பாவின் முன்கோபம் அப்படிப்பட்டது. எங்களின் படிப்பு முக்கியம் என்றால் அதைவிட முக்கியம் தினசரி எங்களுக்கு அப்பாவால் வழங்கப்படும் வேலைகள். அதனை முடித்தே ஆக வேண்டும்.

எங்களுக்கு பள்ளி ஆண்டு விடுமுறை என்றால் வீட்டு வேலைகள் பார்க்கப்பட வேண்டும் என்று அர்த்தம். எங்கள் கடைக்குச் செல்ல வேண்டும் ஒட்டடை கம்புகளுடன் சென்று கடையின் ஆதி முதல் அந்தம் வரைக்கும் சுத்தப்படுத்த வேண்டும். கடைக்குப் பின்னால் உள்ள தோட்டத்தில் உள்ள தேவையற்ற செடிகளை வெட்டி சுத்தப்படுத்த வேண்டும். எங்கள் வீட்டில் ஒரு மிதிவண்டி உண்டு. ஆனால் நாங்கள் எடுத்து அதனை ஓட்ட அனுமதி கிடைக்காது. வீட்டுக்கும் கடைக்கும் ஒரு கிலோ மீட்டர் என்றாலும் நடந்தே தான் செல்ல வேண்டும்.

எங்களுக்கு கிடைக்காத சைக்கிளை சபித்துக் கொண்டே நடந்து வருவோம். எங்கள் வயல் மணியாரம்பட்டி என்ற கிராமத்தில் இருந்தது. எங்கள் வீட்டில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும் நடந்து தான் செல்ல வேண்டும். வயலுக்குச் சென்று நாற்று நட்டவர்களின் கணக்கு வாங்கி வரவேண்டும். அப்பா வாங்கியுள்ள கடன்கார்களுக்கு மாதந்தோறும் கட்ட வேண்டிய வட்டிப் பணத்தைக் கொண்டு போய் கொடுக்க வேண்டும். அம்மா தினந்தோறும் சமையலறையில் அல்லாடிக்கொண்டுப்பார். விறகடுப்பு தான். திருவண்ணாமலை தீபம் போல அடுப்பு எறிந்து கொண்டே இருக்கும்.

அடுத்தடுத்து பிறந்த குழந்தைகளின் அழுகுரல்களை அரவணைத்து அழுகையை நிறுத்துவது அக்காக்கள் மட்டுமே. சகோதரிகளின் சின்னச்சின்ன ஆசைகள் சிறகடித்து பறக்குமே தவிர அது தீர்க்கப்படாத ஒன்றாகவே இருக்கும். ஓவ்வொரு வாரமும் சந்தைகக்கு வருகின்ற கிளிப்,டேப்,பவுடர் டப்பா போன்ற சமாச்சாரங்கள் மாட்டி கையில் தூக்கி வருகின்ற அந்த வயதான பெரியவர் தான் அவர்களின் கதாநாயகன். சகோதரிகளுக்கு வீட்டு வாசல்படியைத் தாண்ட அனுமதியில்லை.

ஒவ்வொரு நாளும் மாலை பள்ளிவிட்டு திரும்பியதும் எங்களுக்கு வழங்கப்படும் காபிக்கு நாங்கள் வைத்த பெயர் வங்காள விரிகுடா. அரை லிட்டர் பாலில் மூன்று லிட்டர் தண்ணீர். சற்று தூக்கலான கருப்பட்டி. இன்னும் கொஞ்சம் ஊற்றுமா என்று கேட்கும் தம்பி தான் அன்றைய வில்லன்.

என்னுடன் படித்த ஒவ்வொரு நண்பர்களுக்கும் ஒவ்வொரு விதமான பட்டப்பெயர்கள். ஒருவன் பெயர் பலாப்பழம். காரணம் அவன் அப்பா சந்தையில் பலாப்பழக்கடை வைத்திருந்தார். பலாப்பழக்கடை ரவி கையில் வைத்துள்ள சின்னக்கத்தியை காட்டியே எங்களை மிரட்டியே காரியம் சாதிப்பான்.

என் ஜாதிக்காரன் என்ன செய்வான் தெரியுமில்ல? என்ற பன்னீர் செல்வம் எழுதாத வீட்டுப்பாடத்தை என்னை வைத்து எழுதி வாங்கி விடுவான். இலங்கையில் இருந்து அகதியாய் உள்ளே வந்த நண்பனின் பெயர் சிதம்பரம். அவன் பேசும் அரசியல் பேச்சுகளும் கேட்பதற்கு சுவராசியமாய் இருக்கும்.

அவர்கள் சொல்லும் திரைப்படச்சமாச்சாரங்கள் முடிவுக்கு வரும் போது என் பையில் இருக்கும் பத்துப்பைசா அவன் கைகளுக்கு போய்விடும். ஆனால் இத்தனையும் மீறி எங்கள் அத்தனை பேர்களுக்கும் ஒரு கனவுக் கன்னி பள்ளியில் இருந்தார். எங்கள் மேஜைக்கு அருகே அன்புக்கரசி பார்க்கும் பார்வையில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். எனக்கு புரிந்தால் தானே? எனக்கு அவளின் பார்வை புரிந்த போது என்னுடைய இரண்டாவது ரேங்க் அவளிடம் சென்றுருந்தது. என்னுடன் கூடப் பிறந்தவர்கள் வருடந்தோறும் அடுத்தடுத்து ள்ளிக்கு வந்த காரணத்தினால் எப்போதும் என் வகுப்பாசிரியர் என்னிடம் நக்கலாக கேட்ட கேள்வி இன்றும் என் நினைவில் உள்ளது.

வருடந்தோறும் ஒவ்வொரு ஆளா வர்றீங்க? இன்னும் எத்தனை பேருடா இருக்கிங்க? . ( ஜுலை 14 2009)

 1. அப்பாவாக மாறும் போது நீ உணர்வாய்?

அப்பாவாக இருந்து பார்? அப்போது உன் அப்பாவின் உண்மையான நிறைகுறைகள் உனக்குப் புரியவாய்ப்பு கிடைக்கும்” என்று என் நண்பன் அறிவுரை சொல்வான். அவன் சொல்லும் போது அதன் வீர்யம் புரியவில்லை. இன்று மூன்று பெண் குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கும் போததான் என் அப்பா பெற்ற வலியும் வேதனைகளையும் என்னால் உணர முடிகின்றது.

இன்று கூட்டுக் குடித்தன வாழ்க்கை என்பது சிதைந்து போய் விட்டது. ஆனால் நான் கல்லூரி வரைக்கும் முதல் பத்தொன்பது வருடங்கள் கூட்டுக் குடித்தன வாழ்க்கையில் தான் வாழ்ந்தேன். வளர்ந்தேன். வீட்டை ிட்டு வெளியே வந்து சமூகத்தைப் பார்த்த போது உலகத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாமல் புதிய பிறவி கண்ட குழந்தை போல் மலங்க மலங்க விழிக்கத்தான் முடிந்தது. கல்லூரி படிப்பு, தட்டெழுத்து, சுருக்கெழுத்து, இன்னும் பலவற்றை கற்று வைத்து இருந்த வித்தைகள் ஏதும் என்னை கை தூக்கி விடவில்லை. முக்கியமாக மனிதர்களை புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களில் சராசரிக்கும் கீழே இருந்த காரணத்தால் ஒவ்வொரு இடத்திலும் அதிக அடி வாங்க வேண்டியதாக இருந்தது.

மனிதர்களின் தந்திரங்களை புரிந்து கொள்ளத் தெரியவில்லை. அவர்கள் செயல்படுத்தும் மார்த்திய செயல்பாடுகளை கற்றுக் கொள்ள முடியவில்லை. வித்தியாசங்களை உணர்ந்து கொள்ளத் தெரியாமல் தடுமாறினேன். வெளிப்படையாக பேசும் பழக்கமும், இயல்பாக இருந்த முன் கோபமும் ஒவ்வொரு சமயத்திலும் என்னை கீழே இழுத்து விட்டுக்கொண்டேயிருந்தது.

மாற்றவும் முடியவில்லை. என்னமாற்றிக்கொள்ளும் சூழ்நிலையில் வாழவும் அதிர்ஷடம் நெருங்கி வரவே இல்லை. அப்போது தொடங்கியது தான் என் அப்பாவின் மேலே உள்ளே வெறுப்பு?

அப்பா?

இந்தச் சொல்லின் அர்த்தம், மகத்துவம் போன்றவற்றை முழுமையாக உணரத் தொடங்கியது முப்பத்தி மூன்று வயதில் தான். அப்போது தான் எங்கள் முதல் இரட்டைக் குழந்தைகள் பிறந்தார்கள். அவர்கள் வளரும் போது என் வாழ்க்கை மாறியது. வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுக்கத் தொடங்கியது.

காரணம், ஊரில் வாழ்ந்த முதல் பத்தொன்பது வருட வாழ்க்கையில் வீட்டில் வாய் திறக்கும் இரண்டே தருணங்கள், ஒன்று பாடங்கள் படிக்கும் போது, மற்றொன்று சாப்பிடும் போது. வீட்டில் உறுப்பினர்கள் அதிகம் என்பதால் என்ன சண்டை? எப்போது? எதனால் வருகின்றது? என்பதைத் தடுக்க அப்பா போட்ட சட்டத்தினால் வீட்டுக்குள் அமைதியாகவே வெளியுலகம் தெரியாமலேயே வளர்க்கப்பட்டோம்.

சின்னச்சின்ன பறிமாறல்கள், உரசல்கள் இருந்தாலும் எட்டப்ப சகோதரிகள், இரவு கடையை மூடிவிட்டு அப்பா வந்ததும் மறக்காமல் சொல்லிவிட்டுத்தான் படுக்கவே செல்வார்கள். வாங்கிய குட்டுகளும், வரும் கண்ணீர்க்கும் அங்கு ஆறுதல் தேட முடியாது. காரணம் இரவு பத்து மணி என்பது வீட்டில் இரண்டாவது ஜாமம். அம்மா என்பவள் வரிசையாகக் குழந்தை பெற்றுக்கொடுக்கும் இயந்திரம். அனைத்து வீட்டு வேலைகளையும் மறுக்காமல் அலுக்காமல் செய்து முடிக்க வேண்டிய வேலைக்காரி, சின்னம்மாக்களின் அவவ்போது தந்திரங்களைப் புரிந்து கொள்ளத் தெரியாமல் நடு இரவில் திடும் திடும் என்று அப்பா கொடுக்கும் அடி, உதைகளை வாங்கிக்கொண்டு அப்போது பிறந்து இருக்கும் தம்பியோ தங்கையையோ அழவிடாமல் வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயச் சூழ்நிலையில் இருந்தார். மனித உணர்வுகள் என்பதை என்னவென்றே அறியாத ஜீவன்.

அப்பா தூங்க வந்த பிறகு குண்டூசி சத்தம் கூட வீட்டுக்குள் கேட்கக்கூடாது. அவர் ுறட்டை மட்டும் எதிரொலி போல வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும். எத்தனை மணிக்கு அம்மா தூங்குவார்? என்று தெரியாது. ஆனால் அவர் மாட்டுத் தொழுவத்தில் பால் கறந்து கொண்டுருக்கும் போது காலை ஐந்து மணிக்குள் இருக்கும்.

கிராமம் போல இருந்த எங்கள் ஊர் நான் கல்லூரி படிப்பு படித்து முடிப்பதற்குள் சிறிய நகரமாக மாறியது. சில அரிசி ஆலைகள் இருந்த ஊரில் நூற்றுக்கணக்கான அரிசி ஆலைகள் உருவானது. ஆட்களின் முகமும் அவரவர்களின் வசதிகளும் ஊதிப் பெருக்கத் தொடங்கியது. அப்பாவால் தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை. காலப் போக்கில் உருவான கருத்து வேறுபாடுகள் சித்தப்பாக்களின் குடும்பம் தனியாக பிரிந்து சென்றது. சொத்துக்கள் பிரிக்கப்பட்டது. நாங்கள் அத்தனை பேர்களும் கல்லூரி படிப்பு முடித்ததும் வெவ்வேறு திசைக்கு பயணமானோம். எங்கள் குடும்பத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் எந்த சிபாரிசும் இன்று அவரவர் திறமையில் அரசுப் பணியில் சேர்ந்தனர். வெவ்வேறு துறைகள். நான் மட்டும் விதிவிலக்காக மேற்கொண்டு படிக்க பிடிக்காமல் திருப்பூர் வந்து சேர்ந்தேன். அதன் பிறகே என் உண்மையான வாழ்க்கை தொடங்கியது.

இந்தச் சமூகத்தை, மனிதர்களை முதன் முறையாக உற்று நோக்க ஆரம்பித்தேன். அப்பா என்னில் உருவாக்கி வைத்துருந்த பிம்பங்களை, வார்ப்புகளை உடைக்கும் பணியும் தொடங்கியது. திருப்பூர் வந்து பத்தாண்டுகள் கழிந்த பிறகு என் திருமணம் நிகழ்ந்தது.

(ஜுலை 3 2009, வலைபதிவில் எழுதப்பட்ட முதல் பதிவு)3.ஆசை மரம்.

" இவனை நம்மால் அடக்கமுடியாது " என்று குடும்பத்தினர் ஓதுங்கியிருந்த போது தான் அக்கா மூலமாக மாமனார் என்ற தெய்வரூபம் என்னைத் தேடி நான் தங்கியிருந்த திருப்பூர் வீட்டுக்கு வந்தார். என்னுடைய கொள்கைகள், நோக்கங்கள் அத்தனையும் புரிந்து கொண்டு மற்றொரு அப்பாவாக மாறினார். என் திருமணமும் திரைப்படக் காட்சிகளைப் போலவே நடந்து முடிந்தது.

முந்தைய மூன்று தலைமுறைகளில் எவருக்கும் இல்லாத இரட்டைக் குழந்தைகள் வந்து சேர மொத்த என் சிந்தனைகளும் மாறத் தொடங்கியது. ஏன் எதற்கு அழுகை? எப்போது இவர்களுக்குப் பசிக்கும்? ஒருவருக்குக் கழுவி முடிக்கும் போது அடுத்தவருக்குக் கழுவி விடத் தொடங்கிய போது தான் எனக்குள் இருந்த அத்தனை அழுக்குகளும் கலைந்து போகத் தொடங்கியது. இரண்டு கைகளிலும் நிறைந்து இருந்த அந்தச் சின்ன உருவங்கள் என்னுடைய அத்தனை மாயப் பிம்பங்களையும் கலைத்துப் போட்டது.

சட சடவென்று ஒவ்வொன்றாக மாறத் தொடங்கியது. காட்டாறு போல் ஓடிக்கொண்டுருந்த என் வாழ்க்கையை நதியாய் மாற்றத் தொடங்கினர். முதல் மூன்று வருடங்களும் அலுவலக வேலைகளுடன் வேறு எந்த வெளியுலகமும் தெரியாத வாழ்க்கையாய் என்னை ஆக்ரமித்து இருந்தனர். மூன்றாவது வந்தவள் தொழில் மற்றும் வாகன யோகத்தையும் சேர்த்துக் கொண்டு வர அப்போது தான் பிறந்த ஊருக்குச் செல்லும் பழக்கம் உருவானது. அதுவரைக்கும் அத்தனை பேர்களும் திருப்பூருக்கு வந்து போய்க் கொண்டுருந்தனர்.

தொடக்கத்தில் ராக்கோழி கணக்காய் இரவு முழுக்கப் பேரூந்தில் பயணித்துக் கண் எரிச்சலோடு அந்த அதிகாலை வேளையில் வீட்டுக்குள் நுழைவேன். அரைக் குறை தூக்கத்துடன் அம்மா கேட்கும் முதல் கேள்வி.......

வாடா........ எப்ப மறுபடியும் திருப்பூருக்கு போகப்போறே?

காரணம் உள்ளே இருந்த கூட்டாளிகளுடன் சேர்ந்து மறுபடியும் கால்கள் நகராமல் இருந்து விடுவேனோ என்ற பயம். அப்பா உடனே ஒத்து ஊதுவார். உடன்பிறப்புகள் நக்கலுடன் நகர்ந்துவிடுவார்கள். ஆனால் மனதிற்குள் இருக்கும் ஆசையை வெளியே எவரும் காட்டிக் கொள்ளமாட்டார்கள்.

காரணம் மறுபடியும் பூதத்தைப் பாட்டிலுக்குள் அடக்க முடியாது என்று அவர்களுக்குத் தெரியும்.

அவர்கள் கெஞ்சும் போது மிஞ்சி ஓட்டம் பிடித்தேன். இன்று இருக்க எண்ணம் இருக்கிறது. இரண்டு நாளைக்கு மேல் இருந்து விடாதே என்று சொல்லக்கூடிய தொழிலும் இருக்கிறது.

காரைக்குடியில் இருந்து அரை மணி நேரம் பயணம். ஊரின் எல்லைக்குள் நுழையும் போதே அந்தப் பாலம் தென்படும். பாலத்தைத் தாண்டும் போதே பக்கவாட்டில் இருந்த புளிய மரத்தைப் பார்ப்பேன். பேய் பிசாச என்று கிளப்பி விட்டு எங்களை அந்தப் பக்கம் வர விடாமல் தடுத்த அக்கா அண்ணன்களின் லீலைகள் இப்போது புரிந்து கொள்ள முடிகின்றது. .

அரிசி ஆலையைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும் இல்லாத ஊர். சுற்றிலும் உள்ள 60க்குமமேற்பட்ட கிராமத்திற்குக் கடைத்தெரு உள்ள ஒரு ஊர். அந்த அளவிற்குத் தான் மக்களின் எண்ணமும் வளராமல் இருந்தது. உள்ளே நுழையும் போதே எதிரே வரும் நபர்களின் முகம் ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்துக் கொணடே நடந்து செல்வேன்,. ஒவ்வொருவர் வாயிலும் ஒவ்வொரு விதமான வரவேற்பு. சட்டைக்குள் கைவிட்டு எடுக்கக் காத்திருககும் சிலரைத்தாண்டி உள்ளே நடந்து செல்ல வேண்டும்.

ஓடித்திரிந்த தெருக்கள், உட்கார்ந்து அரட்டை அடித்த பாலம், நாள் முழுக்க அமர்ந்து இருந்த பஞ்சாயத்து போர்டு குட்டிச்சுவர்கள் என்று அத்தனையும் அனாதையாய் இருக்க, பழகிய எவரையும் இன்று காணவில்லை.

நடந்து சென்று கொண்டிருக்கின்றேன். கடைத் தெருவில் உள்ள கற்பக விநாயகர் திருக்கோயில். எதிரே குளம். சுற்றிலும் நூற்றுக்கும் குறைவான கடைகள். ஓரமாய் ஒதுங்கி வேறொருபுறம் சென்றால் ராவுத்தர் தெரு. மீன்கடை, இறைச்சிக்கடை. தொட்டு தொடங்கி மூச்சுபபிடிக்க ஓடினால் பழைமை வாய்ந்த சாக்கோட்டை, பெயரில் தான் கோட்டை இருக்கிறதே தவிர மொத்த குடும்பமே நூறு இருக்குமா என்று ஆச்சரியம். ஆலமர வரிசையில் மறைந்து கொண்டு இருக்கும் மஞ்சுவிரட்டு பொட்டலும் நடக்கும் களேபரத்தை அடக்கும் காவல் நிலையும் இப்போது அமைதியாய் இருக்கிறது.

இதனையும் தாண்டிச் சென்றால் நூற்றாண்டுகளைத் தாண்டி இருக்கும் பெரிய மற்றும் சிறிய கோவில்.

சிறிய கோவிலைத்தாண்டி குழந்தைகளுடன் பெரிய கோவிலுக்குள் நுழைகின்றேன். கோவில். பிரகாரத்தில் மூச்சு விட்டால் படபடக்கும் பறவைகளில் இரைச்சல். இருட்டுக்குள் நடந்து ந்தால் சுத்தம் செய்யாத முடை நாற்றம்.

உடன் படித்தவன் ஐயராக இருக்க முகம் எங்கும் முதுமை பெற்ற தோற்றம். அருகில் பேசச் சென்றாலும் ஏதோ ஒரு தயக்கம். புரியாமல் குழந்தைகளுடன் ஒவ்வொன்றாகத் தொட்டுப் பார்த்துக் கொண்டு நகர்கின்றேன். குழந்தைகளுக்குக் கிடைத்த சுதந்திரத்தில் ......வென்ற இரைச்சல் அந்தக் கோவில் முழுக்க நிரம்பி வழிகின்றது. கூட்டம் இல்லாமல், வருமானம் இல்லாத வரிசையில் வாழ்ந்து கொண்டுருக்கும் அக்கிரகாரத்தைச் சுற்றி வரும்போதே எங்கள் வயலுக்குச் செல்லும் பாதையில் கிராமத்துப் பள்ளிச் சிறுவர்கள் சந்தோஷமாய்ப் பைக்கட்டு தூக்கிக் கொண்டு நடந்து வந்து கொண்டுருக்கிறார்கள்.

மழை வரும் போல் இருக்கிறது. மண் வாசனை நாசியை நெருடுகிறது. கோவிலுக்கு எதிரே மண்டபத்தில் அமர்ந்து கொண்டு சுத்தமான அந்தப் பெரிய குளத்தை உற்று பார்த்துக் கொண்டுருக்கின்றேன். பக்கத்தில் உள்ள அத்தனை கிராமங்களும் குடிநீர் எடுக்கக் கூட்டமாய் வந்த தருணங்கள் மனதில் வந்து போகின்றது. படித்துறையில் அடம்பிடிக்கும் குழந்தைகளை அடக்கி அழைத்து வரும் போது எதிரே வந்தவர் புவியியல் ஆசிரியர். பூமிக்கும் வானத்துக்கும் கோபப்படும் அவர் இன்று கஞ்சி ஊத்தாத மருகளை அண்டிக் கொண்டு அடங்கி வாழ்ந்து கொண்டுருப்ப்தை கண்ணீருடன் பேசினார். குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்குச் சமாளித்துக் கொட்டிக் கிடந்த மணலில் காலை சரட்டிக் கொண்டு அவர்களின் ஓட்ட வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓட முடியாமல் மூச்சு வாங்குகிறேன்.

தேர்முட்டியைக் கடந்து சென்ற போது கரையான் அரித்த ஓலைகளால் போர்த்தி வைக்கப்பட்ட சின்னத்தேர் பெரியதேர் இரண்டு சிருங்காரமாய் நிற்கிறது. தடவிப் பார்த்துக் கொண்டுருக்கின்றேன். டவுசருடன் மட்டும் வந்த திருவிழாவும், போட்டுருந்த புதுச்சட்டையில் ஒளித்து வைத்த பலூனை மறந்து செய்த களேபரம் நினைவுக்கு வருகிறது. வாங்கிய அடியில் துடைக்காத மூக்குச்சளியை நினைத்து இப்போது உறுத்தலாய் இருக்கிறது. நான் பார்த்த பல வருட திருவிழாக்கள் ஒவ்வொன்றாக நினைவில் வந்து போகின்றது. வெட்டுப்பட்ட ஆட்டுத் தலையும், வெட்டியும் அடங்காமல் துடித்த உயிர் கோழிகளும் சிதறடித்த ரத்த மண் வாசனையைத் தடவிப் பார்க்கின்றேன். தொடர்ச்சியாகக் குழந்தைகளின் கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கிறது. பதில் என்று ஏதோ ஒன்று வந்து கொண்டு இருக்கிறது. மனம் முழுக்க வெறுமையாக இருக்கிறது.

ஊரின் மற்றொருபுறம் கார் வந்து நிற்க ரயில் நிலையத்தைக் கண்டவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஓடுகிறார்கள். மேட்டை கடக்க ரயில் தண்டாவளத்தை ஓட்டி கண்களுக்கு எட்டிய வரைக்கும் தெரிந்த கண்மாய்த் தண்ணீர் இப்போது உட்கார்ந்து கழுவினால் கூடப் போதாத அளவிற்கு வற்றிப் போய் உள்ளது. இதை நம்பி மற்றொரு புறத்தில் இருந்த பல ஏக்கர் வயல்காடுகள் குடியிருப்புக்கு அளந்து கொண்டு இருக்கின்றார்கள். அருகே ரயில் நிலையம். மயிலாடுதுறை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் வருகைக்காகச் சில பேர்கள் காத்துக் கொண்டுருக்கிறார்கள். பழகிய சில பெரியவர்களின் வாயில் இருந்து அளவான புன்னகை..

ஆனால் பெயரில் மட்டும் தான் எக்ஸ்பிரஸ். எக்ஸ் ஒய் இசட் என்று கத்திக் கொண்டே ரயில் ஓடும் வேகத்திற்கு நாமும் ஓடிவிடலாம்.

இந்த ரயில் பாதை நடைமேடையில் தான் பல மணி நேரம் தவம் போல் அமர்ந்து படித்த கல்லூரிப்பாடங்களும் குளிக்க வந்த பெண்களின் காமப் பாடங்களையும் பார்த்த ஞாபகம். மாதவன், கோவிந்தராஜன் சேர்ந்த கூட்டணிகள் இறுதி வரைக்கும் உடையாமல் இருந்தது. அவர்கள் தொழில் நுட்பக்கல்லூரிக்குள் நுழைய் எங்கள் தடமும் மாறிவிட்டது.

ரயில் நடைமேடைகளைக் கடந்து நெஞ்சி முள் குத்தாமல் ஜாக்கிரதையாகக் கால்கள் வைத்து வேலி தாண்டிய வெள்ளாடு போல் வந்தால் அருகே உள்ள பூங்காவிற்குள் நுழையலாம். பழைய தகரங்களைக் கோர்த்து உள்ள நடுநாயக நடைமேடைகளும், எப்போதும் விழும் என்று காத்து இருக்கும் பட்டுப் போன மரங்களுக்கும் இடையே என்னுடைய முக்கியமான மரம் ஒன்று உண்டு. குழந்தைகளின் கைபிடித்து அந்த இடத்தைத் தேடி அலைந்து கடைசியில் கண்டு கொண்டேன். கால் நூற்றாண்டு காலம் ஆனாலும் முதல் காதல் உருவாக்கிய நினைவுச் சின்னம் இருக்கின்றதா என்று ஆசையுடன் பார்த்தேன்.

தாவரத்தின் பட்டை மறைத்து ஆணியால் கீறப்பட்ட இரண்டு பெயர்களில் அவள் பெயர் மறைந்து விட்டது. என் பெயர் மட்டும் மெலிதாகத் தெரிந்தது. அதன் அருகில் குழந்தைகள் தங்களின் பெயரை ஆணியால் செதுக்கிக் கொண்டுருந்தார்கள்..

(செப்டம்பர் 28 2010)

4.இனிய நினைவுகள்

பூங்காவில் இருந்து குழந்தைகளை வெளியே அழைத்து வர முடியவில்லை. மரங்களும் அருகே தெரிந்த பொட்டல் காடுகளும் உள்ள இடங்களைப் பார்த்ததும் அவர்களுக்கு வேறொரு உலகத்தைப் பார்த்தது போல் இருந்துருக்கலாம். வீட்டுப் பாடங்களும் விளையாட முடியாத சோகங்களும் இன்று முடிவுக்கு வந்தது போலிருந்தது . அவர்கள் போட்டுருந்த செருப்புகள் எங்கோ அனாதையாய் கிடக்க அவர்களின் ஓட்டமும் கத்தலும் மரங்களில் இருந்த பறவைகளைப் படபடக்க வைத்தது.

பூங்காவை ஓட்டியிருந்த நண்பன் முருகேசனின் வீட்டின் முன்புறம் அவனின் தங்கை வெளியே நின்று கொண்டு எவருக்கோ எதிர்பார்த்து காத்துக் கொண்டுருப்பது தெரிந்தது.

பூங்காவில் இருந்த சறுக்கு மர தகரத்தில் நீட்டிக் கொண்டுருந்த துருப்பிடித்த கம்பிகள் என்னை யோசிக்க விடாமல் தடுக்கக் குழந்தைகளைப் பிரித்து வண்டிக்குள் அடைத்து கிளம்பினேன். நாங்கள் பயணித்த தெருவின் இறுதிப் பகுதி பங்களா ஊரணித் தெரு. நடுநாயகமாகக் குளம் அருகே ஆலமரம். எப்போதும் போல மரத்தின் கீழே பிள்ளையார் சிலை. ஒவ்வொரு பகுதிகளுக்கும் இருக்கும் வெட்டி ஆபிசர்களைப் போல இந்தச் சந்துக்குள் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. பிள்ளையார் சிலைக்குப் பின்புறமாக வந்தால் இரவு நேரம் தவிர எப்போதும் சீட்டாடி கோஷ்டிகள் நிறையப் பேர்கள் இங்கே இருப்பார்கள்.

ஊரில் ஒவ்வொரு சந்தின் பெயரும் வினோதமான பெயர்க்காரணமாக இருக்கும்.. நடுவீதி, நடராஜபுரம்,கீழப் பெருமாள் கோவில், மேலப்பெருமாள் கோவில், யெமு வீதி இப்படித் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒரு நீண்ட சந்தில் அதிகபட்சம் இருபது வீடுகள் இருக்கலாம். அடுத்தத் தெருவுக்குப் பிரிக்கும் பாதைகள் எனபது ஒரு முழு வீட்டின் அளவு. மொத்தத்தில் ஒரு வீட்டின் மொத்த அளவு முடியுமபோது இடையில் உள்ள சந்து பிரிந்து அடுத்த வீட்டுக்குத் தொடக்கமாக இருக்கும். முழுவீட்டையும் சந்தின் வழியே நான்கு புறமும் சுற்றி வரும் போது லேசாக மூச்சு வாங்கும்.

குழந்தைகள் அருகே கட்டி வைக்கப்பட்டு இருந்த கைப்பந்து வலையுடன் ஒன்றிப் போயிருந்தார்கள்.பார்த்துப் பழகிய சிலர் கண்களுக்குத் தெரிந்தார்கள். அப்போது என் பார்வையில் பட்டது எதிரே இருந்த வள்ளிக்கண்ணு வீடு. என்னுடைய பள்ளித் தோழி. அறிமுகம் இல்லாதவர்கள் பார்க்கும் முதல் பார்வையில் இவள் மனநலம் குன்றியவளோ? என்று தோன்றக் கூடும். எப்போதும் எதையாவது தின்று கொண்டு இருக்கும் வள்ளிக்கண்ணு. ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டுருக்கும் போதே மாவு அரைக்கும் எந்திரம் போல அவள் மட்டும் கமுக்கமாகத் தின்று கொண்டுருப்பாள். .

வள்ளிக்கண்ணுக்கு 18 வயதில் திருமணம் ஆகி 26 வயதுக்குள் வரிசையாகப் பெற்றெடுத்த நாலைந்து பெண் குழந்தைகளுடன் இப்போது விதவை கோலத்துடன் தனியாகத் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார். மிகப் பெரிய கோட்டை போன்ற வீட்டில் அவளும் குழந்தைகளும் கூட ஒரு வயதான வேலைக்கார பாட்டியுடன் சத்துணவு பணியாளராக வாழ்க்கையைக் குழந்தைகளுக்காகக் கடத்திக் கொண்டுருக்கிறார்..

வள்ளிக்கண்ணுவுக்கு டிப்பு மண்டையில் ஏறாது என்று உணர்ந்த அவளின் பாட்டி சேர்த்து வைத்து இருந்த நகைகளைக் காட்டி எவனோ ஒருவனின் தலையில் கட்டி வைத்து விட்டார். கட்டியவனின் கல்லீரல் கழுதை போல் சுமந்து ஒரு நாள் ரத்தமாகத் துப்பியது, அன்று தான் அந்த மொடாக்குடியனின் மற்ற வண்டவாளங்களும் தண்ட வாளத்தில் ஏறத் தொடங்கியது.

வள்ளிக்கண்ணுவின் அப்பா பர்மாவில் மற்றொரு குடும்பத்துடன் இருக்க, இங்கே காத்திருந்த வள்ளிக்கண்ணுவின் அம்மா கண்கலங்கிக் கொண்டே போய்ச் சேர்ந்துவிடப் பாட்டி தான் வள்ளிகண்ணுவை வளர்க்க வேண்டியதாகி விட்டது. ஜாதி, சமூகம், இனம் என்பதற்கெல்லாம் மேலானது பணம் என்ற வஸ்து. பங்களாளி சண்டையில் பெரிய வீடு இப்போது நீதிமன்ற தீர்ப்புக்காகக் காத்துக் கொண்டுருக்கிறது. சொத்தில் சம்மந்தப்பட்டவர்களின் அனுமதியுடன் முகப்பில் மட்டும் இருந்து கொள்ள வள்ளிக்கண்ணுவுக்கு அனுமதி கிடைத்து நண்டு சிண்டுகளுடன் ாழ்ந்து கொண்டுருக்கிறார்.

கைநிறைய காசு இருந்தால் அவர் நம்மவர். இல்லாவிட்டால் யார் அவர்? இது தான் இன்றைய சமூக மொழி.

அம்மா இல்லாத குறை போக்க அதிகச் செல்லம் கொடுத்து வளர்ந்த வள்ளிக்கணணுக்கு வெகுளித்தனம் அதிகம். ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டுருக்கும் போது "டேய் கணேசா கடலை அச்சு வேண்டுமாடா?" என்று கேட்டவளை எப்படி மறக்க முடியும்?.

சுற்றியுள்ள அத்தனை பகுதிகளிலும் இது போன்ற பிரமாண்ட வீடுகள் தான்.. முதல் இருபது வருட வாழ்க்கையில் அவஸ்ய தேவைகளைத் தவிர்த்து வெளியே எங்குமே சென்றது இல்லை. நான் பார்த்த ஊர்களை எளிதில் பட்டியலிட்டு விடலாம்.

கண்டணூர், கோட்டையூர், காரைக்குடி, தேவகோட்டை,, ஆர்,எஸ்,மங்கலம்,திருவாடனை,பிள்ளையார்பட்டி,,கல்லல், திருப்பத்தூர், கோனாபட்டு, கண்டரமாணிக்கம் கீழச்சீவல்பட்டி கீழப்பூங்குடி கானாடுகாத்தான் பள்ளத்தூர், கோட்டையூர் என்று எண்ணிக்கைகளுக்குள் அடக்கி விடலாம். அரசாங்க ஊழியர்களுக்குத் தண்டனைப்பகுதி என்று சொல்லப்பட்ட பிரிக்கப் படாத இராமநாதபுர மாவட்டத்தில் தான் பிறந்தேன். பசும்பொன் என்று மாறி இன்று சிவகங்கை மாவட்டம் என்று வந்து நின்றுள்ளது.

பெயர்கள் மாறியதே நான் பார்த்தவரைக்கும் மிகப் பெரிய மாறுதல்கள் கால் நூற்றாண்டு காலத்தில் ஒன்றுமே நிகழவில்லை. செட்டிநாடு எப்படி உருவானது?

சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினத்தில் இந்தச் சமூக மக்களின் வாழ்க்கை தொடங்கியதாக வரலாறு சொல்கிறது. காலமாற்றத்தில் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னர் அளித்த காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிய 9 கிராமங்களில் தொடக்கத்தில் குடியேறினர்.

இன்று பொதுப் பெயராக மொத்தமாகச் செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் போன்ற ஊர்களை அடிப்படையாகக் கொண்டு சுற்றிலும் உள்ள 96 கிராமங்களில் பரவி வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

வியாபார நிமித்தமாக மன்னர் காலங்களில் வைசியர் குலம் என்று தொடங்கி இருக்க வேண்டும். வர்ணாசிர்மம் என்ற வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள உழுத்துப் போன சமாச்சாரங்கள் இங்குத் தேவையில்லை. மொத்தத்தில் தொழில் அடிப்படையில் இந்த ஜாதி மூலக்கூறுகள் ருவாகியிருக்க வேண்டும். ஆனால் இதில் ஆச்சரியம் ஒன்று உண்டு.

தொடக்கத்தில் ஒவ்வொரு தனி மனிதர்களும் தாங்கள் செய்து கொண்டுருந்த ஒவ்வொரு தொழில் அடிப்படையில் உருவான சமூக அமைப்பில் உருவான சாதிகள் கிமு நாலாம் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு வரைக்கும் ஏறக்குறைய பத்து நூற்றாண்டுகள் கோலோச்சிய புத்த சமண மதங்கள் முன்னிலையில் இருந்தாலும் இந்த ஜாதி மூலக்கூறு மட்டும் கவனமாகச் சிதையாமல் தொடர்ந்து வந்து கொண்டுருந்தது.

மன்னர்களுக்கு உதவும் வகையில் வைசியர் குலத்தில் உருவானது தான் இந்தச் செட்டி என்ற சொல்லாக வந்துருக்க வேண்டும். இதில் உள்ள பல கிளைநதிகளை முதன் முதலாகத் திருப்பூருக்குள் வந்த போது தான் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஏறக்குறைய 60 நகரத்தார் கிராமங்கள். 9 விதமான கோவில்களின் அடிப்படையில் 12 ஆம் நூற்றாண்டில் பிள்ளையார்பட்டியை அடிப்படையாக் கொண்டு நிலை பெற்று உருவான சமூக மக்கள். ஒவ்வொரு விதமான பாரம்பரியம்.

சிங்கப்பூர் முருகன் கோவிலில் முன்புறம் உள்ள அந்தச் சிறிய கல்வெட்டை உற்று கவனித்தால் 1859 ஆம் ஆண்டு அங்கு வாழ்ந்த பெருமக்களின் சேவையை நமக்கு உணர்த்தும். அங்கு மட்டுமல்ல மலேசியாவில் உள்ள பினாங்கு பகுதியில் உள்சிவன் கோவிலை சுற்றி வரும் போது நாம் இருப்பது வெளிநாட்டிலா இல்லை தமிழ்நாட்டின் ஒரு பகுதியா என்று நம்மைத் திகைப்படைய வைக்கும்.

பர்மா வரைக்கும் சென்று பொருள் ஈட்டிய சமூகம் , இது எந்த அளவிற்கு இருந்தது தெரியுமா?

ஈழத்தில் சுதந்திரம் வாங்கிய காலகட்டத்தில் கொழும்புச் செட்டி என்ற தெருவில் நடந்த நிதி ஆதார பரிவர்த்தனைகளை நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அன்றைய காலகட்டத்தில இலங்கையின் மொத்த நிதி ஆதாரத்தில் 90 சதவிகித பங்களிப்பு நம்மவர்களின் கையில் தான் இருந்தது. உச்சக்கட்டமாக இன்றைய அண்ணாமலை பல்கலைக்கழகத்தினஅண்ணாமலை செட்டியார் தன்னிடம் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைவித்த நெல்லை விற்பதற்குப் பயன்படுத்திய நாடு இலங்கை. தமிழ் நாட்டில் இருந்து நெல் அரிசி மூட்டைகளை இலங்கைக்குக் கொண்டு செல்ல தனியாகவே கப்பல்கள் வைத்து இருந்தது ஆச்சரியத்தின் உச்சம்.

இன்று அத்தனவீடுகளும் பாழடைந்து கிடக்கின்றது. தேக்கு மர கதவுகளும், பெல்ஜியத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்த அலங்காரங்களும் பொலிவிழந்து போய்விட்டது. 150 ஆண்டுகள் கடந்ததும் இன்று ஒரு சுவரில் கூட நான் விரிசலை பார்த்தது இல்லை. முட்டைச் சாற்றைக் குழைத்து முழுமையான அர்ப்பணிப்பும் கலைநுணுக்கமாய்க் கட்டிய மொத்த வீட்டின் வாரிசுகளும் புலம் பெயர்ந்து எதையோ தேடி எங்கேயோ வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

வாழ்வின் கடைசிக் கட்டத்தில் வாழும் பெரியவர்களுக்கு இவ்வளவு பெரிய வீட்டில் ஏக்கமான நினைவுகளைத் தவிர வேறொன்றும் துணையில்லாமல் துணிவே துணையாக வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

வள்ளல் அழகப்பர் இல்லையென்றால் அவர் உருவாக்கிய கல்லூரிகள் இல்லையென்றால் வரப்பட்டிக்காட்டு வாசியாக என்னைப் போன்ற பலரின் வாழ்க்கையும் முடிந்து போயிருக்கும்.

சமூகக் காவல்ர்களை நினைத்துக் கொண்டுருந்த போது எதிரே கீனா சானா என்றழைக்கப்பட்ட கிறுக்குச் சண்முகம் வந்து கொண்டுருந்தான்.

பள்ளித் தோழன். பத்தாம் வகுப்பை மூன்று முறை எழுதியும் தேறமுடியாமல் தவித்தவன் . இப்போது பார்த்துக் கொண்டுருக்கும் வேலை கிராமத்து டாக்டர்.

( செப்டம்பர் 28 2010)5.ஈக்கள் மொய்க்கும் உலகம்

குடும்பத்தின் கூட்டுக் குடித்தன வாழ்க்கை முடிவுக்கு வந்த போது ஒன்பதாம் வகுப்பு அறிமுகமாயிருந்தது. வரவு செலவுகள் ஒன்றாகவும் வாழும் இடம் தனியாகவும் பேசி முடிவு செய்துருந்தார்கள். அந்தப் பெரிய கடைத் தெருவில் குறிப்பாகப் பேரூந்து நிலையத்திற்கு அருகே பெரிய வீட்டு வாழ்க்கை எனக்குப் பல விதங்களில் உதவியாய் இருந்தது. .

நாங்கள் சென்ற புதிய வீட்டுக்கு அடுத்த வாசல் தட்டெழுத்துப் பயிலகம். இதற்குப் பின்னால் ரொட்டிக் கடை.. சாயங்காலம் என்றால் ரொட்டிக்கடையில் இருந்து விதவிதமான வாசனைகள் வந்து கொண்டுருக்கும். அருகே உள்ள சிறிய பாலத்தில் கூட்டணி அமைத்த நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டு வருகிற போகிற மக்களை அளவெடுப்பதோடு ரொட்டிக்கடையில் அனைவரும் சேர்ந்து வாங்கிய வெஜிடபிள் பப்ஸ் தினறு திருப்தியாய் நகர்ந்து விடுவதுண்டு. பேரூந்து நிலையம். அருகில் உள்ள காரணத்தால் வந்து இறங்கும் அத்தனை பேர்களும் பாலத்தில் அமர்ந்துருக்கும் எங்களைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். பலரின் திட்டுக்களும் பாவாடை தாவணிகளின் தரிசனமும் இங்கிருந்து தான் தொடங்கியது.

பெயர் தான் பேரூந்து நிலையமே தவிர ஊரில் உள்ள பிச்சைகாரர்கள் கூடும் இடம். ஒரே ஒரு தகர டப்பா கூரை. அதுவும் யாரோ ஒரு புண்ணியவான் தானமாகக் கொடுத்த இடம். யூ வடிவ ஒரு குட்டிச் சுவரை சுற்றி வந்து ஒவ்வொரு பேரூந்தும் சற்று நேரம் நின்று விட்டு நகரும்., இந்தக் குட்டிச் சுவருக்குள் சுற்றி வர சோம்பேறிப் பட்டுக்கொண்டு மேட்டுக்கடை பக்கமாகத் திருப்பிக் ொண்டு தனியார் பேரூந்துகள் நகர்ந்துவிடும். இதனால் பலரும் எப்போதும் மேட்டுக்கடை அருகே வந்து நின்றுவிடுவார்கள்.

கனத்த மழையென்றால் ஜனங்கள் முழங்கால் தண்ணீரில் சந்தையில் வாங்கிய நண்டு மீன்களுடன் கப்பு வாடையைக் கடத்திக் கொண்டுருப்பார்கள். டவுன் பஸ் வரும் போதே ட்டிக் கொண்டு வரும் ஓட்டுநர் ஒரு வினோதமான ஒலியை தொடர்ச்சியாக எழுப்பிக் கொண்டே வருவார். அதற்குள் அங்குக் கூடியிருக்கும் மொத்த கூட்டமும் முண்டியடித்துக் கொண்டு தயாராய் இருப்பார்கள். உள்ளே நுழையும் போதே பாதிப்பேர்கள் ஓடும் வண்டியில் ஏற் முயற்சிக்க ஓரே களேபரமாஇருக்கும். பேரூந்து நின்றதும் பலரும் டயர் வழியே கால் வைத்து ஏறிக் கொண்டுருப்பார்கள். பார்க்க சுவராஸ்யமாக இருக்கும்,

அருகில் உள்ள அத்தனை கிராம மக்களுக்கும் குறிப்பிட்ட இந்தப் பேரூந்துக்களை விட்டால் வேறு வழியில்லை. ஒவ்வொரு புதன் கிழமையும் சந்தை நடக்கும். தொடக்கத்தில் கடைத்தெருவுக்குள் இருந்த சந்தை பிறகு வில்லுடையார் பொட்டலுக்கு மாற்றினார்கள். இந்தப் பொட்டல் என்பது கருவேலக்காடும் காலையில் மலஜலம் கழிப்பவர்கள் வந்து கூடுமிடம். ஒரு ஓரமாக இருந்த மைதானத்தில் அவசரமாகக் கீற்று கொட்டைகளை உருவாக்கி சந்தை என்று உருவாக்கியிருந்தார்கள்.

அன்று தான் சுற்றியுள்ள அத்தனை