fbpx

FreeTamilEbooks.com – புது உரையாடல் களம் – அழைப்பு

நமது திட்டத்தின் பங்களிப்பாளர்கள், நூல் ஆசிரியர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்குபெற்று உரையாட ஒரு களத்தினை உருவாக்க நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன்.

http://dev.freetamilebooks.com ஐத் தொடங்கி, அங்கு புது நூல்களின் பங்களிப்புகளுக்கான உரையாடல்களை நிகழ்த்தி வந்தோம்.

ஆயினும் இது பங்களிப்பாளர்களுக்கான தளமாகவே இருக்கிறது.

பெருகி வரும் புது மின்னூல்களுக்கான வேண்டுகோள்களை ஆசிரியர்களே எழுதவும், நூல்களின் வளர்ச்சி நிலைகளைப் பார்வையிடவும், பங்களிப்பாளர்களுடன் நேரடியாக உரையாடவும், வாசகர்கள் தமது கருத்துகளை பகிரவும் எளிமையான ஒரு களத்தை தேடிக்கொண்டிருந்தோம்.

பல்வேறு Forum மென்பொருட்களை நிறுவி ஆய்வு செய்தோம். இறுதியில் கூகுள் வழங்கும் Forum சேவையே எளிதாகவும், தேவையான வசதிகளோடும் இருப்பதைக் கண்டோம்.

https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum

இங்கு நமது உரையாடல் களத்தைக் காணலாம்.

இங்கு உங்கள் அனைவரையும் இணைய வேண்டுகிறேன்.

புது மின்னூல் கோரிக்கைகளை இங்கு ஆசிரியர்களே நேரடியாக எழுதலாம்.
பங்களிப்பாளர்கள் தமது கருந்துகளையும் ஆக்களையும் எழுதலாம்.

இதன் மூலம் திட்டத்தின் அனைத்து ஆர்வலர்களையும் ஒரே இடத்தில் இணைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. திட்டத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி நிலைகள், புது யோசனைகள், புது பங்களிப்பாளர்கள் என அனைத்தையும் பொதுக் களத்தில் அனைவருடனும் உரையாடி முடிவு எடுக்கலாம்.

இதை இணையவழியிலேயே படிக்கும் ஒரு Forum ஆகக் கருதலாம். ஆயினும் எல்லா உரையாடல்களும் நமது மின்னஞ்சலுக்கு வருமாறும் செய்யலாம்.

8 MB வரையிலான கோப்புகளை இணைக்கலாம்.

இன்னும் பல்வேறு வசதிகள் உள்ளன.

உரையாடல் களத்தில் இணைந்து தமிழ் மின்னூல் உலகினுக்கான அடுத்த கட்ட வளர்ச்சிகளை உருவாக்குவோம் வாருங்கள்.

நன்றி

12 Comments

  1. raman selvaraj
    raman selvaraj March 5, 2016 at 2:46 am . Reply

    I am a creative person.
    I shall contribute to your service

    1. Sivamurugan Perumal
      Sivamurugan Perumal March 11, 2016 at 9:26 pm . Reply

      always welcome

  2. இராஜராஜசோழன்
    இராஜராஜசோழன் March 26, 2016 at 3:41 pm . Reply

    உங்களின் இந்த எண்ணம் தமிழ் வளர்ச்சிக்கு “ஆணிவேர்”ஆக விளங்கும்.

  3. kamatchimahalingam
    kamatchimahalingam May 4, 2016 at 7:59 am . Reply

    ஏற்கெனவே என் சில நினைவுகள் புத்தகம் இதில் மின்நூலாக வந்துள்ளது. chollukireen. word press.com இல் எழுதுகிறேன். என்பெயர் காமாட்சி மஹாலிங்கம். என்னுடைய அடுத்த வரைவு அன்னையர்தினப் பதிவுகள் குறித்து எந்தவரை முன்னேற்றமுள்ளது என்பது குறித்துத் தெரிந்து கொள்ள எழுதின மடலுக்கு இவ்விடம் எழுதும்படி மடல் வந்தது. தயவுசெய்து விவரம் தெரிவிக்கவும். சிரமத்திற்கு மன்னிக்கவும். அன்புடன் காமாட்சி மஹாலிங்கம்..மும்பை

  4. anu
    anu July 11, 2016 at 10:54 am . Reply

    great work.keep it up. all the very best to your services

  5. subashbose
    subashbose September 14, 2016 at 1:17 pm . Reply

    ஐயா!ஏழைத் தொழிலாளர்களுக்கு கட்செவிக் குழுமம் வாயிலாகப் புததகங்களைத் தட்டச்சு செய்து அனுப்பி வருகிறேன்.நான் ஒரு ஓய்வூதிய சங்கத் தலைவர்.குறிப்பாக ஐயா.முசிவலிங்கம் அவர்களின் புத்தகங்கள் எளிமையாக உள்ளன.எகா.கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.எனவே மின்னூல்களை இலவசமாகப் படிக்க எனக்கு அனுமதி வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  6. gopinath
    gopinath April 5, 2017 at 8:10 am . Reply

    புதிய வெளியீடுகளை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது

  7. ponnuraj k
    ponnuraj k January 9, 2019 at 6:15 am . Reply

    Have a nice day.
    vanakkam. I have not know Tamil typewrinting.
    Hence submit request in english.Soon I will learn Tamil typewrinting .
    I want two books.(please inform me the cost of books and how
    I remit to you.
    1-HOW BOLOG MAKKING IN TAMIL LANGUAGE *AUTHER MR ABDUL PASID.
    2-VALAI VADIVAKKAM IN TAMIL LANGUAGE *

    h

  8. Raghavanthambi
    Raghavanthambi August 10, 2019 at 12:34 pm . Reply

    i have sent my novel Vinnum Mannum. If it eligible to publish please inform me.
    thank you.

  9. imran hak
    imran hak April 15, 2020 at 9:02 am . Reply

    வணக்கம்,
    எனது பெயர் அ.இம்ரான் ஹக் நான் முதுகலை தமிழ் பயில்கிறேன் சிறுகதை மற்றும் கவிதைகள் தொடர்ந்து எழுதிவருகிறேன். மின்னஞ்சல் மூலமாக உங்கள் இலக்கிய பணியைக் கண்டேன் இலக்கிய படைப்புகள் மக்களை சென்றடையவும் நவீன கால மின்னணு உலகில் மொழி வளர்ச்சியடையவும் தாங்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

  10. C.Sivasubramanian
    C.Sivasubramanian May 28, 2022 at 5:26 am . Reply

    ஐயா, நான் சிற்பி சிவசுப்பிரமணியன். என் துறை சார்ந்த சில நூல்களை எழுதியுள்ளேன். அவற்றை எம்பட்டடு பிடிஎப் வடிவத்திலும் வேர்டுபைலாகவும் வைத்துள்ளேன். அவற்றை தங்கள் தொகுப்பில் இணைக்கவிரும்புகிறேன். வரும் காலங்களிலும் தொடர்ந்து எழுவேன். படித்து பாருங்கள. creative common
    என் யாரும் இதை பயன்படுதத்லாமென்றும. இது என்னுடைய சொந்த படைப்பு என்றும் உறுதியளிக்கிறேன்.

    நட்புடன்
    சிற்பி. ச. சிவசுப்பிரமணியன் திண்டுக்கல் தமிழ்நாடு , இந்தியா

Leave a Reply to raman selvaraj Click here to cancel reply.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.