fbpx

முதல் பிறந்தநாள் ! 100 நூல்கள் !

fte-logohttps://freetamilebooks.com/ – இன்று முதல் பிறந்த நாள் ! 100வது நூலை வெளியிடும் நாளும் கூட.

திட்டத்தின் சிறப்புகள்:

* சமகால நூல்களை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் தருதல் .
* இந்திய / தெற்காசிய மொழிகளில் முன்னோடி முயற்சி.
* முழுக்க தன்னார்வ, இலாப நோக்கற்ற, கூட்டு முயற்சித் திட்டம். விளம்பரம் கிடையாது. நன்கொடை கிடையாது.
* வெளியிட்ட ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் தரவிறக்கங்கள், ஏராளமான பின்னூட்டங்களைப் பெறும் நூல்கள்.
* மின்னூல் வெளியீட்டை அச்சு நூல் வெளியீடு அளவுக்குப் பெருமிதத்துக்கும் பொதுமக்கள் ஏற்புக்கும் உரிய ஒன்றாக மாற்றி வருவது.
* தமிழ் மின்னூல் வணிக முயற்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தது.
* கிசோர் முயற்சியில் கட்டற்ற உரிமத்தில் மின்னூல் படிப்பதற்கான iOS செயலி உருவாக்கியது.

முதல் 5 மாதங்களில் 12 நூல்களில் வெளியிட்டிருந்த நிலையில், சீனிவாசன் இந்த ஆண்டு வாரம் ஒரு நூலாக 52 நூல்கள் வெளியிடுவோம் என்று இலக்கு வைத்தார். முடியுமா என்று திகைத்தேன். இப்போது மொத்தம் 100 நூல்கள் வெளியிட்டிருப்பது மலைக்க வைக்கிறது !

சொக்கன், பாரா, பேயோன் போன்ற அறியப்பட்ட எழுத்தாளர்கள் தங்கள் மின்னூல்களை இங்கு வெளியிடத் தொடங்கியது பெரும் வெளிச்சத்தைத் தந்தது.

இன்னொரு புறம், ஜோதிஜி. திருப்பூர், ஏற்காடு இளங்கோ தங்கள் எல்லா நூல்களையும் மின்னூல்களாக வெளியிட்டது பெரும் உந்துதல். வலைப்பதிவர்கள், முகநூல் பயனர்கள் என்று பரவலான வட்டத்தில் நூல்களைக் கொண்டு சென்றது.

பிரியமுடன் வசந்த், ஜெகதீஸ்வரன், ரய் போன்ற வரைபடக் கலைஞர்கள் எண்ணற்ற அழகான அட்டைப்படங்களை வடிவமைத்துத் தந்து திட்டத்துக்குப் புது அழகு பாய்ச்சினார்கள்.

சிவமுருகன், பிரியா, ராஜி, ஜெயந்திரன், நித்யா, ஜீவகுரு முதலியோர் எண்ணற்ற மின்னூல்களை ஓய்வின்றி உருவாக்கித் தந்தார்கள்.

மு.சிவலிங்கம் ஒருங்குறி மாற்றத்திற்கு பெரிதும் உதவுகிறார்.

இத்திட்டம் குறித்த பட்டறை நடத்த தமிழ் இணையக் கல்விக்கழகம் இடமும் ஆதரவும் தந்தது.

இந்து, தினகரன், பிபிசி தமிழ் வானொலி ஆகிய ஊடகங்கள் திட்டத்தைப் பற்றி எழுதி ஊக்குவித்தன.

தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தொடக்கம் முதல் தனது நுட்ப, வள ஆதரவை வழங்கி வருகிறது.

மொட்டை மாடியில் துனி காயப்போடுவது தவிர மற்ற எல்லா வேலைகளுக்கும் நிரல் எழுதி பணிகளை முடுக்கி விடும் சீனிவாசன் பற்றி தனியே சொல்லத் தேவையில்லை 🙂 திட்டத்தை கருவாக்கி, உருவாக்கி, சீரிய முறையில் வழிநடத்தி வருவதும் சீனிவாசனே.

இத்திட்டம் அடுத்த கட்டத்துக்குச் செல்ல என்ன தேவை?

fte-fb-cover

* இன்னும் நிறைய தன்னார்வலர்கள் தேவை. படம் வரைதல், மின்னூல் உருவாக்குதல், நுட்பம், பரப்புரை என்று பல்வேறு பணிகள் செய்யலாம்.
* உங்களுக்குத் தெரிந்த எழுத்தாளர்களை மின்னூலாகத் தரக் கோருங்கள்.
* உங்கள் கருவியில் தமிழ் மின்னூல் படிக்க வசதி இல்லையென்றால், கருவி உற்பத்தியாளர்கிடம் நுகர்வோர் குறையைப் பதிவு செய்யுங்கள்.
* https://www.facebook.com/FreeTamilEbooks – இந்த முகநூல் பக்கத்தை விரும்புங்கள். உங்கள் நண்பர்களுக்கும் திட்டம் குறித்து தெரிவியுங்கள்.

நன்றி,

அ. இரவிசங்கர்

19 Comments

  1. Bhim Prabha Gandhi
    Bhim Prabha Gandhi July 26, 2014 at 3:02 pm . Reply

    வாழ்த்துக்கள் !!

  2. என். சொக்கன்
    என். சொக்கன் July 26, 2014 at 3:41 pm . Reply

    முதலில், வாழ்த்துகள். இது ஒரு மிகப் பெரிய, மிக முக்கியமான முயற்சி, நூறு ஆயிரமாகவும் பல்லாயிரமாகவும் மாறட்டும்!

    உங்களது பட்டியலில் ஒரு சேர்க்கை: முக்கியமாக, பிழை திருத்துவோர் தேவை. பல நூல்களில் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் மலிந்திருக்கக் காண்கிறேன். அவற்றைச் சரி செய்ய இயன்றால் மின்னூல்கள் தரமானவை என்ற பிம்பம் உறுதிப்படும்.

  3. வாழ்த்துகள்.

  4. இன்னொரு புறம், ஜோதிஜி. திருப்பூர்,

    கொடுக்கப்பட்ட இணைப்பு பா ராகவன் தளத்திற்கு செல்கின்றது. கவனிக்கவும். இனிய வாழ்த்துகள்.

  5. ஸ்ரீராம்
    ஸ்ரீராம் July 27, 2014 at 12:46 am . Reply

    வாழ்த்துகள்.

  6. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!!

  7. R.
    R. July 27, 2014 at 4:29 am . Reply

    Congrats….All the Best….Thanks a lot……

  8. விமலன்
    விமலன் July 27, 2014 at 2:52 pm . Reply

    வாழ்த்துக்கள் சார்,மின் நூலுக்கு படைப்புகள் அனுப்பலாமா?

  9. முதற்கண் என் அன்பார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    இந்தத் திட்டம் தொடங்கியதிலிருந்து நான் கவனித்து வருகிறேன். இதற்குள் நீங்கள் ஓராண்டைக் கடந்து விட்டீர்கள் என்பது வியப்பாக இருக்கிறது! மிக்க மகிழ்ச்சி!

  10. k.Natarajan
    k.Natarajan October 7, 2014 at 2:12 am . Reply

    செய்வன திருந்தச் செய் என்னும் திசையில் பயணிக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் / வாழ்க வளமுடன்

  11. ajmal
    ajmal October 16, 2014 at 4:48 pm . Reply

    நான் இந்த மாதிரி ஒரு வலை பகுதி க காத்து கொண்டு இருந்தேன் இப்பொழுதான் நல்ல பல புத்தகங்களை தமிழில் படிக்க முடிந்தது ரொம்ப ரொம்ப நன்றி

  12. dhinesh
    dhinesh November 1, 2014 at 3:34 pm . Reply

    naan intha thalam uruvanathu muthal amaithiyai anaithu noolgalaiyum padhithuvidum vasagan naan ithu arumayana muyarchi en manamarntha valthukal matrum naan migavum rasitha noolgal pulapada ulagil pulappatta keetrugal ithu arumayana thagavalgal udayathu

  13. dhinesh
    dhinesh November 1, 2014 at 3:37 pm . Reply

    irandaam aandhuku intha thalathai varaverkiren valga tamil valarga intha thalam

  14. சாமிக்கண்ணு அ.வெ.
    சாமிக்கண்ணு அ.வெ. December 10, 2014 at 4:45 pm . Reply

    இப்போதுதான் இவ் வலைப்பக்கத்தைப் பார்க்கிறேன். மிகச் சிறந்த முயற்சி ! முன்னேற்றம் காண வாழ்த்துகள் !!

  15. Vijay balakrishnan
    Vijay balakrishnan January 31, 2015 at 11:15 am . Reply

    wish u all the best…….the best website for Tamil ebooks I ever seen… easy to access …thank u very much

  16. SUJA
    SUJA September 28, 2015 at 9:05 am . Reply

    NALLA MUYARCHI.
    VALTHUKKAL.
    INNUM PALA PUTHAKANGALAI VASIKA KATHU KITAKKIROM 😉
    MEHULAVIN AMARARKAL PUTHAKAM KIDAIKUMA?

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.