உணவுதான் நம்மை உருவாக்கிருக்கிறது. நீங்கள் யார் என்று கேட்டால் அது உணவுதான். உண்மையில் நலவாழ்வு உணவைச்சார்ந்து இருக்கிறது. அது நோய்களைத் தீர்மானிக்கிறது. கிருமிகளை எதிர்க்க ஊட்டச்சத்து மிகுந்த உணவு தேவை. உடலின் சீரான வளர்சிதை மாற்றத்தை நம்முடைய சாப்பாடுதான் முடிவு செய்கிறது. இன்று மருந்துக்கடைகளில் குவியும் மக்களை அங்கே அனுப்பி வைக்கக் காரணம் உணவுமுறைதான்.
எதிர் வரும் காலங்களில் ஊட்டச்சத்து மருத்துவம் முக்கியமாக இருக்கும்.சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் சில நோய்களை தடுத்துக்கொள்ள முடியும். உதாரணமாக உயிர்ச்சத்து சி அதிகமுள்ள உணவுகள் சளித் தொல்லையை குறைக்க பரிந்துரைக்கப்படலாம். இதய நோய் புற்றுநோய் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கவும் சாப்பிடச் சொல்வார்கள்.
மனிதனின் முதல் உணவான தாய்ப்பால் கூட இன்று முழுமையாகக் கிடைப்பதில்லை. அழகு, வேலைச்சூழல் போன்றவை காரணமாக சொல்லப்படுகிறது. தாய்ப்பால் கிடைக்காத நிலை ஒருவரது வாழ்வு முழுமைக்குமான ஆரோக்கியக்கேட்டை கொண்டு வருகிறது. கொதிக்க வைத்த நீரைப் பருகுவதன் மூலம் டைபாய்டு உள்ளிட்ட நீர்வழி பரவும் நோய்களைத் தடுக்க முடியும்.
உணவு பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் போதுமான அளவு இல்லை. இப்போது அச்சு ஊடகங்கள், இணையங்களில் உணவு பற்றிய செய்திகள் இடம்பெற்று வருகின்றன. ஆனால் வாசிப்புப் பழக்கம் நம்மிடையே மிகக் குறைவாக இருக்கிறது. அதிக அளவு பாமர மக்களைச் சென்றடையும் ஊடகமாக தொலைக்காட்சி இருக்கிறது. ஆனால் தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள் தவறான உணவுப் பழக்கத்துக்கு இட்டுச்செல்கிறது. குளிர்பானங்கள், பொட்டலமிடப்பட்ட உணவுகளை வாங்குமாறு பிரபலங்களின் மூலம் தூண்டப்படுகிறது.இவை உடல்நலனுக்கு உகந்ததல்ல என்பது வெளிப்படை. ஏழைகள் பணத்தைக் கொடுத்து உடல்நலனையும் கெடுத்துக்கொள்கிறார்கள். முறையற்ற உணவுப் பழக்கத்தின் மூலம் ஒவ்வாமை, குடல்புண் போன்றவை அதிகரித்து விட்டன. குடல்புண் இருக்கும்போது ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருட்களை சாப்பிட்டாலும் குடல் முழுமையாக சத்துக்களை உட்கிரகிக்காது. இந்தியாவில் சத்துப்பற்றாக்குறை அதிகரிப்பதற்கு தவறான உணவுப் பழக்கமே காரணம். வாசகர்கள் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுக்க இந்த மென்நூல் ஒரு அறிமுகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
கே.சண்முகவேல்
அட்டைப்பட மூலம் – http://pixabay.com/en/adult-artistic-beauty-concept-diet-18992/

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
உரிமை : Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.
வெளியீடு : FreeTamilEbooks.com
மின்னூலாக்கம் – இராஜேஸ்வரி [email protected]
பதிவிறக்க*
ஆன்டிராய்டு (FBreader app), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “உணவும் உடல்நலமும் epub”
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “உணவும் உடல்நலமும் mobi”
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “உணவும் உடல்நலமும் A4 PDF”
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “உணவும் உடல்நலமும் 6 Inch PDF”
புத்தக எண் – 55
சென்னை
ஏப்ரல் 5 2014
நன்றி
Very Helpful Information with unaum udalnalaum
உணவு பற்றிய விழிப்புணர்வு நம்ஒவ்வொருவருக்கும் தேவை … ஆரோக்கிய வாழ்விற்கு உணவே ஆதாரம்…. >> கிளிக் சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்