2014 ஆம் ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக தொடங்கியிருக்கிறது. எனது முதல் புத்தகம் ‘விவேகானந்தர்’ கிழக்குப்பதிப்பகம் மூலம் இந்த ஆண்டு வெளிவந்திருக்கிறது. அடுத்தாற்போல் எனது கட்டுரைத் தொகுப்பு மின்னூல் ஆக வெளிவந்திருப்பது கூடுதல் சந்தோஷம். தொழில் நுட்ப வளர்ச்சியில் நானும் போட்டிபோட்டுக்கொண்டு முன்னேறுவது சந்தோஷமோ சந்தோஷம்.
இந்தத் தொகுப்பிற்கு ‘சாதாம்மிணியின் அலப்பறைகள்’ என்று பெயரிட்டுள்ளேன். சாதாரணப் பெண்மணி (அம்மணி என்றும் சொல்லலாம்!) என்பதைத்தான் சாதாம்மிணி என்று சுருக்கியுள்ளேன். என்னுடைய அனுபவத்தில் நான் கண்டவை, கேட்டவை தவிர என் வாழ்க்கையில் நிறைய தாக்கங்களை ஏற்படுத்திய என் அம்மா, அக்கா, என் பாட்டி, என் மாமா, எனது ஆசிரியர், எனது தோழி என்று பலரையும் பற்றி சொல்லியிருக்கிறேன். எனது மொழிப்புலமை(!) பற்றியும் சொல்லியிருக்கிறேன். படிக்க சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
மின்னூல்கள் வேண்டுமா? என்னதான் இருந்தாலும் கையில் புத்தகம் வைத்துக்கொண்டு வாசிப்பது போல வருமா? எனக்குப் பிடித்த பகுதிகளை கையில் பென்சில் வைத்துக்கொண்டு மின்னூலில் குறிக்க முடியுமா? என்று ஒரு நண்பர் முகநூலில் கேட்டிருந்தார். ரொம்பவும் சரி. எல்லா புத்தகங்களையும் வாங்குவது என்பது எல்லோராலும் முடியாத ஒன்று. வாங்கிய புத்தகங்களுக்கு வீட்டில் இடம் வேண்டும். இன்னொன்று நாம் ஆசை ஆசையாகச் சேர்த்துவைக்கும் புத்தகங்கள் நாளை என்ன ஆகுமோ? புத்தகங்களின் மேலும் பற்று வைத்துவிடுகிறோமே! ஆனால் மின்னூல் என்பது ஆண்டாண்டு காலமாக இருக்கும். விரைவில் பலரையும் சென்று அடையும். அந்தவகையில் மின்னூல்கள் என்ற தொழில்நுட்ப வளர்ச்சியை நிச்சயம் ஆதரிக்கிறேன்.
என்னை இந்த மின்னூல் உலகிற்கு அறிமுகப்படுத்திய திரு ஜோதிஜி அவர்களுக்கு, மின்னூலாக உருவாக்கத் துணை புரிந்த திரு இரவிசங்கர் அய்யாக்கண்ணு, திரு சீனிவாசன் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
-ரஞ்சனி நாராயணன்
மின்னூல் ஆக்கம் : கி. சிவகார்த்திகேயன் seesiva@gmail.com
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
அட்டைப் பட மூலம் – http://www.flickr.com/photos/horiavarlan/4329173343
அட்டைப்பட வடிவமைப்பு – ப்ரியமுடன் வசந்த் vasanth1717@gmail.com
உரிமம்: Creative Commons Attribution 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “சாதாம்மிணியின் அலப்பறைகள் epub”
கிண்டில் கருவிகள், செயலிகளில் படிக்க
Download “சாதாம்மிணியின் அலப்பறைகள் mobi”
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “சாதாம்மிணியின் அலப்பறைகள் A4 PDF”
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “சாதாம்மிணியின் அலப்பறைகள் 6 Inch PDF”
புத்தக எண் – 41
சென்னை
மார்ச்சு 4, 2014
அன்புள்ள திரு ஸ்ரீநிவாசன் அவர்களுக்கும், திரு ரவிசங்கர் அய்யாக்கண்ணு அவர்களுக்கும்,
அழகான முறையில் எனது மின்னூலை கொண்டுவந்ததற்கு முதலில் நன்றி.
மின்னூல் ஆக்கம் செய்த திரு கி. சிவகார்த்திகேயன் அவர்களுக்கும்,
அட்டைப்பட வடிவமைப்பு செய்த திரு ‘ப்ரியமுடன் வசந்த்’ அவர்களுக்கும் நன்றி.
அன்புடன்,
ரஞ்சனி
என் முதல் வாழ்த்துகளை இங்கே எழுதிவைக்கின்றேன். சிகரம் தொட வாழ்த்துகள்.
” புத்தகங்களின் மேலும் பற்று வைத்துவிடுகிறோமே! ஆனால் மின்னூல் என்பது ஆண்டாண்டு காலமாக இருக்கும். விரைவில் பலரையும் சென்று அடையும். அந்தவகையில் மின்னூல்கள் என்ற தொழில்நுட்ப வளர்ச்சியை நிச்சயம் ஆதரிக்கிறேன். ”
அருமையான முன்கூட்டிய விழிப்புணர்வுச் சிந்தனை!
வாழ்த்துக்கள்
அன்புடன்
தமிழ்த்தேனீ
[…] சாதாம்மிணியின் அலப்பறைகள் […]
[…] மின்னூல்கள் […]