fbpx

நூலாசிரியர் பேட்டி – கா. பாலபாரதி

Freetamilebooks குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள்!

முதலில் நான் என்னைப் பற்றி ஓரிரு விசயங்களைத் தர விழைகிறேன். நான் எனது இருபதாம் வயது முதலே, எப்படியாவது ஒரு கவிதை புத்தகமாவது வெளியிட வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால், கடும் முயற்சிக்குப் பிறகு எனது 24-ம் வயதில் எனது முதல் புத்தகத்தினை “ஒவ்வொரு வாசகனும் கவிஞனே” என்ற தலைப்பில் வெளிடிட்டேன். அதற்கு காரைக்குடியைச் சேர்ந்த சகோதரர் லெனின் அவர்காளோடு இன்னும் சிலரும் சேர்ந்து உதவினார்கள். ஆனால் என் பொருளாதர நிலைக்கு அப்பாற்பட்ட அந்த புத்தக வெளியீட்டுச் செயல், என்னை இன்னும் வறுமையில் தள்ளப் பார்த்தது. அப்போது லெனின் அவர்கள் உதவியதோடு மற்றும் அன்றி, அவர் மூலமாக freetamilebooks. வலைதளத்தைப் பற்றியும் அறிந்தேன். அன்றிலிருந்து சில நாட்களுல், எனது அதே புத்தகத்தை புகழுக்குறிய ப்ரீ தமிழ் ஈ புக்ஸ் வலைதளத்தில் வெளியிட உதவினார். ஏகப்பட்ட தரவிறக்கங்கள் நடந்தது. தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என பலர் படித்துவிட்டு கைப்பேசியில் அழைத்துப் பேசி வாழ்த்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து எனது 2-வது கவிதை நூலான ”தூரிகைச் சிதறல்” என்ற புத்தகமும் வெளியானது. ஆனால் அந்த புத்தகத்திற்காக நான் தமிழில் தட்டச்சு செய்யும்பொழுது இருவேறு மென்பொருளைப் பயன்படுத்தியதன் காரணமாகவோ என்னவோ தெரியவில்லை, எனது 2-வது புத்தகத்தில் சில தவறுகள் நேர்ந்தது. அதில் சில கவிதைகள் இடம் பெறாமல் போனது. நான் உடனே அதைப் பற்றி மதிப்பிற்குறிய சகோதரர் சீனிவாசன் அவர்களுக்கு மின்னஞ்சல் செய்தேன், உடனே அவர் எனக்கு பதில் அஞ்சல் அனுப்பியதோடு, அவர் குழுவிற்கு அதனைச் சரி செய்யுமாறு அவர் இட்ட அன்புக் கட்டளையின் குறிப்பையும் அனுப்பி இருந்தார். சொல்லபட்ட நேரத்திற்குள்ளாக சரி செய்யப்பட்டது. ஆயினும் கூட பி.டி.எப்(pdf) ல் உள்ள சில கவிதைகள் ஈ.பப்(epub) –லும் இதில் உள்ள சில கவிதைகள் அதிலும் இடம்பெறாமல் போய்விட்டது. மிகுந்த மனவருத்தம், இருந்தாலும் அது நான் தட்டச்சு செய்த விதத்தால் தான் ஏற்பட்டிருக்குமோ என்ற அய்யம், தொடர்ந்து குழுவினைரை தொந்தரவு செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தியது. ஆகையால் நான் அதனை அப்படியே விட்டு விட்டேன்.

ஆனால், அதே புத்தகத்தினைப் படித்த கொடைக்கானல் கொடைப் பண்மழை வானொலி நிலையத்தைச் சார்ந்த தோழர் மோகன் என்ற ஒருவர், என்னை கைப்பேசியில் அழைத்து ”கவிதையும் கானமும்” என்ற கவிதைகள் மற்றும் கவிஞர்கள் பற்றிய நிகழ்ச்சியில், இந்த முறை உங்களைத் தேர்வு செய்துள்ளோம் என்றும், பேட்டி கண்டு ஒலிபரப்பவும் செய்தனர். எனக்கு மிகவும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியும், தங்கள் மீதும் நமது வலைதளத்தின் மீதும் அளவுகடந்த நன்றியுணர்வும் பெருக்கெடுத்தது.
நான் தனி மனிதனாக சாதிக்கவோ அடையாளப்படுத்திக்கொள்ளவோ முடியாத பல விசயங்களை, எனக்கு எளிதாக்கித் தந்த பெருமை freetamilebooks.com என்ற நமது வலைதளத்தையே சேரும். கோடான கோடி நன்றிகள்!!!

எனது முயற்சிகள்:
என்னிடம் 300 வாட்ஸாப் எண்கள் உள்ளன. அவை அனைத்திற்கும், புதிதாக வெளியிடப்படும் புத்தகங்கள் அனைத்தின் அட்டைப் படம், link text, link address போன்றவற்றை copy செய்து அனுப்பி படிக்குமாறு வேண்டிக்கொள்வேன். நான் உறுப்பினராக உள்ள தமிழ் இலக்கிய பேரவைக் கூட்டங்களுக்குச் சென்று, நமது வலைதளத்தினைப் பற்றிய செய்திகளைச் சொல்லி அவர்களையும் அதனை பார்வையிடுமாறும், அதில் தங்களின் புத்தகங்களை வெளியிடுமாறும் கேட்டுக்கொண்டும் வருகின்றேன். பலபேர் அதற்கு தயாராகி வருகின்றனர் என்பதையும் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

எனது சக மாணவர்களிடமும், நண்பர்களிடமும் இதனைப் பற்றி சொல்லி அவர்களுக்குள் தூண்டுதலை உருவாக்கி வருகிறேன். அதன் விளைவு நாம் நினைப்பது போன்று அல்ல. நாம் நினைத்துப் பார்க்காத ஒன்று. நமது வளைதளத்தை நம்பி நிறைய நண்பர்கள் தனக்குள் இருக்கும் எழுத்தாளர்களை அடையாளம் கண்டுகொண்டுள்ளனர். தங்களாலும் எழுதமுடியும் என்ற தன்னம்பிகையை கொடுத்தும், அவர்களை எழுத்தாளர்களாகவும் ஆக்கிவரும் பெருமை நமது வலைதளத்தேயே சேரும்.

திறமையானவர்கள், புத்தகம் வெளியிட பொருளாதர வசதி இல்லாதவர்களிடமும் இதைப் பற்றி சொல்லி வருகிறேன். மேலும் அழகான வண்ணப் படங்களைப் பதிவிறக்கம் செய்து, அதன் மீது மனதை மயக்கும் சில வரிகள் மற்றும் சிறிய தத்துவங்களையும் எழுதி அதன் கீழ் freetamilebooks.com என்ற இனையதள முகவரியையும் மெல்லிய அளவில் கண்ணுக்குப் புலப்படுமாறு பதிவிட்டு வாட்ஸாப் நண்பர்களுக்கு அனுப்பத் துவங்கின்னேன். ஆனால், அப்பொழுது தான் நினைவு வந்ததது copyright செய்யப்பட்ட வண்ணப் படங்களில் பதிவிடுவதால் பிரச்சனைகள் வந்துவிடுமோ என்ற அய்யத்தில் அதனைக் கைவிட்டு, என்ன ஆகின்றது என்று பார்க்க, எனது பெயரையே குறிப்பிட்டு செயல்படுத்தி வருகிறேன்.

மேலும் நம் வளைதளத்தைப் பற்றி, வானொலியில் பேசிய நண்பரிடம் வானொலியில் ஒலிபரப்புமாறு கேட்டுகொண்டுள்ளேன். அவரும் அதற்கான நேரம் வரும்பொழுது கண்டிப்பாக என் மூலமாக தங்களை தொடர்புகொள்வதாக கூரியுள்ளனர்.

எனக்குத் தெரிந்த அளவிற்கு என்னால் என்ன முடியுமோ அதனை நான் தொடர்ந்து செய்து வருகிறேன், செய்து கொண்டே இருப்பேன் என்பதையும் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன். என் போன்ற ஏழைத் தமிழனின் கனவை நனவாக்கிய freetamilebooks.com வலைதள சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும எனது மனமார்ந்த நன்றிகள்!!!

மேலும் , என்னால் ஏதேனும் செய்யமுடியும் என்று தாங்கள் எண்ணினால், தயவுசெய்து கட்டளையிடுங்கள். தயாராக உள்ளேன். புகழடைந்த இரண்டு ஆண்டுகளுக்காகவும், புகழுக்குறிய மூன்றாம் ஆண்டிற்கான சேவைக்காகவும் எனது வாழ்த்துக்கள்!
—கா.பாலபாரதி—

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.