http://commons.wikimedia.org/wiki/File:DRM-free.svg
http://commons.wikimedia.org/wiki/File:Day_against_drm_2012_poster.png
DRM பற்றிய நேற்று முகநூலில் நடந்த ஒரு உரையாடலின் பதிவு இங்கே.
https://www.facebook.com/nchokkan/posts/10152996743878292
பங்கு பெற்றோர் –
என்.சொக்கன்
http://commons.wikimedia.org/wiki/File:என்._சொக்கன்.JPG
இரவி
http://ta.wikipedia.org/wiki/படிமம்:Ravi.png
சீனிவாசன்
DRM என்கிற Digital Rights Managementக்கு எதிரான தினம் இன்று.
நான் DRM ஆதரவாளனாக இருந்தேன். இப்போது அதிலிருந்து கொஞ்சம் விலகி, ‘இலவசம் Or DRM’ என்ற நிலைக்கு வந்துள்ளேன்.
அதாவது, மின்னூல்கள் (என் கருத்துகள் அனைத்தும் தமிழ் மின்னூல்களைப்பற்றியவை, ஆங்கில மின்னூல்களைப்பற்றி எனக்கு ஞானமில்லை) இலவசமாக வழங்கப்படவேண்டும், அல்லது DRM கட்டுப்பாட்டுடன் வரவேண்டும். DRM இல்லாமல் நூலை விற்றால் அது நிச்சயம் எழுதியவர், பதிப்பிப்பவருக்குப் பலன் தராது என்பது என் கருத்து.
இது மிகவும் பத்தாம்பசலித்தனமான கருத்துதான். ஆனாலும் விரிவாகச் சொல்கிறேன்.
DRM இல்லாத ஒரு மின்னூலை வாசகன் ஒழுக்கமாகப் பயன்படுத்துவான் என்பதில் எனக்குச் சற்றும் நம்பிக்கை இல்லை. என் கணிப்பு, இந்த விஷயத்தில் (மின் பிரதிகளைக் குற்றவுணர்ச்சியின்றிப் பயன்படுத்துவது) 99.99% திருடர்கள்தான், நான் உள்பட.
அந்தக் கருத்தில், மின்னூல்கள் இலவசமாகமட்டுமே வழங்கப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன். விலை உள்ள மின்னூல்களுக்கு DRMபோன்ற கட்டுப்பாடு மிக அவசியம். சுய ஒழுக்கம் சிறிதும் பயன்படாது.
அதனால், என்னுடைய நூல்களில் சிலவற்றை இலவச மின்னூல்களாக வழங்க ஒப்புகிறேன், அதைத் தாண்டி, விலையுள்ள மின்னூல்களை நானே வெளியிட்டுள்ளேன், என் நண்பர்கள் வெளியிட்டுள்ளார்கள். இவர்கள் எல்லாரிடமும் நான் சொல்லும் விஷயம், தமிழில் மின்னூல்களைக் காசு கொடுத்து வாங்கும் பழக்கமே அத்தனை சுலபத்தில் வராது, வந்தாலும் அதை யாரிடமும் பகிராமல் நேர்மையாகப் பயன்படுத்தும் ஒழுக்கம் வராது, அதனால் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் இதை வைத்துச் ”சம்பாதிப்பது” இயலாது.
சுருக்கமாக, மின்னூல்கள் = இலவசமாகத் தரவேண்டியவை, சில பத்து ரூபாய்களுக்குமேல் வருமானம் தராதவை, எதிர்பார்க்கக்கூடாதவை என்பது என் தீர்மானம். You will be very disappointed if you think like ‘பத்தாயிரம் பேர் ஆளுக்கு ரெண்டு ரூபாய் கொடுத்து என் புக்கை வாங்கினா…’, அந்தப் பத்தாயிரம் பேர் தமிழ் இணையத்தில் இல்லை, இருக்கிற சில நூறு பேரும் இலவச மின்னூல்களை விரும்புகிறவர்கள், தமிழில் உண்மையாகக் காசு கொடுத்து வாங்கி மின்னூல்களை வாசிப்போரின் எண்ணிக்கை Pathetic நிலையில் உள்ளது 😉 அதை வளர்க்க இயலாது என்பது என் உறுதியான நம்பிக்கை. நம் (99.99% பேர்) ஜீனில் புத்தகங்களுக்காகச் செலவழிப்பது என்கிற குணமே இல்லை. மின் புத்தகம் என்றால் அது இன்னும் ஒரு படி கீழே.
I will be happy to be proven wrong. ஆனால் இந்த விஷயத்தில் எனக்குக் கிஞ்சித்தும் நம்பிக்கை இல்லை, முக்கியமாக, (நான் உள்பட) தமிழர்கள்மீது 😉
பின்குறிப்பு:
இதைப் படித்துக் கோபப்பட்டு “நான் மின்னூல்களைக் காசு கொடுத்துதான் வாங்குகிறேன்” என்று பின்னூட்டம் இடவேண்டாம். நீங்கள் அதிசயப் பிறவிகள், வணங்கப்படவேண்டியவர்கள். மீதமுள்ள 0.01%ல் வருகிறவர்கள்.
நான் “யாரும் வாங்கமாட்டார்கள்” என்று சொல்லவில்லை “வாங்குபவர்கள் எண்ணிக்கை போதாது” என்கிறேன். ரெண்டும் வெவ்வேறு.
========
சீனிவாசன், DRM பற்றி நீங்கள் பகிர்ந்த (எழுதிய?) தமிழ்க் கட்டுரையை வாசித்தேன். அருமையான வாதங்கள்.
http://www.kaniyam.com/drm/
எனக்கு ஒரு கேள்விதான், பரப்புதல் மிகச் சுலபமாக இருக்கும் இணையத்தையும், பரப்புதல் ஓரளவு சிரமமாக இருக்கும் Physical Booksஐயும் ஒப்பிடுவது சரியா?
DRM இல்லாத ஒரு மின்னூலை வாசகன் ஒழுக்கமாகப் பயன்படுத்துவான் என்பதில் எனக்குச் சற்றும் நம்பிக்கை இல்லை. என் கணிப்பு, இந்த விஷயத்தில் (மின் பிரதிகளைக் குற்றவுணர்ச்சியின்றிப் பயன்படுத்துவது) 99.99% திருடர்கள்தான், நான் உள்பட.
அந்தக் கருத்தில், மின்னூல்கள் இலவசமாகமட்டுமே வழங்கப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன். விலை உள்ள மின்னூல்களுக்கு DRMபோன்ற கட்டுப்பாடு மிக அவசியம். சுய ஒழுக்கம் சிறிதும் பயன்படாது.
அதனால், என்னுடைய நூல்களில் சிலவற்றை இலவச மின்னூல்களாக வழங்க ஒப்புகிறேன், அதைத் தாண்டி, விலையுள்ள மின்னூல்களை நானே வெளியிட்டுள்ளேன், Pradeep Kumar வெளியிட்டுள்ளார், Anand Raghav மூலம் ஒரு நண்பர் வெளியிடவுள்ளார், Sankaranarayanan Devarajanகூட வருங்காலத்தில் விலையுள்ள மின்னூல்களை வெளியிடக்கூடும். இவர்கள் எல்லாரிடமும் நான் சொல்லும் விஷயம், தமிழில் மின்னூல்களைக் காசு கொடுத்து வாங்கும் பழக்கமே அத்தனை சுலபத்தில் வராது, வந்தாலும் அதை யாரிடமும் பகிராமல் நேர்மையாகப் பயன்படுத்தும் ஒழுக்கம் வராது, அதனால் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் இதை வைத்துச் சம்பாதிப்பது இயலாது.
சுருக்கமாக, மின்னூல்கள் = இலவசமாகத் தரவேண்டியவை, சில பத்து ரூபாய்களுக்குமேல் வருமானம் தராதவை, எதிர்பார்க்கக்கூடாதவை என்பது என் தீர்மானம்.
I will be happy to be proven wrong. ஆனால் இந்த விஷயத்தில் எனக்குக் கிஞ்சித்தும் நம்பிக்கை இல்லை, முக்கியமாக, (நான் உள்பட) தமிழர்கள்மீது
=========
இரவி –
/பரப்புதல் மிகச் சுலபமாக இருக்கும் இணையத்தையும், பரப்புதல் ஓரளவு சிரமமாக இருக்கும் Physical Booksஐயும் ஒப்பிடுவது சரியா?//இதே போல் வழமையாக நாம் எதை ஒழுக்கம், திருட்டு எனக் கருதுகிறோம் என்பதையும் இணைய ஊடகத்துக்கு ஏற்ப மறுவரையறை செய்ய வேண்டும். இணையத்தில் இரு பயனர்களுக்கு இடையே வகோப்புகளைப் பகிர்தல் என்பது அடிப்படைச் செயற்பாடு.
ஒழுக்கம், திருட்டு என்பனவெல்லாம் அடிப்படையான கருதுகோள்கள். கற்பு, கொலை என்பன போல. இதில் பெரிய சந்தை உள்ள ஆங்கில மின்னூல்களுக்கு ஒரு வரையறை, சிறு சந்தை உள்ள தமிழ் நூல்களுக்கு ஒரு வரையறை என்றெல்லாம் இல்லை. இணைய ஊடகத்தைப் பற்றிப் பேசும் போது இங்கு எல்லாமே மின் தரவு தாம்.
என்.சொக்கன் –
என் நூலுக்கு நான் பெறும் தொகை ஐந்து ரூபாய் என்றால், அதைத் தருபவர்மட்டுமே அதை வாசிக்கவேண்டும் என்று நான் விரும்புவேன், ஓரிருவருடன் (அச்சு நூல்போல) அதை அவர் பகிர்ந்துகொள்ளலாம். அதற்குமேல் பகிர்ந்துகொள்வது எனக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறதே.
Anti-DRM போராளிகள் எல்லாரும் இந்த விஷயத்தைமட்டும் கருதுவதே இல்லை 5 ரூ கொடுத்துவிட்டு 500 பேர் வாசிப்பதை நான் எப்படி ஊக்கப்படுத்த இயலும்?
சீனிவாசன் –
அச்சு நூலிலும் நூலகங்கள், பழைய புத்தக கடைகள், xerox கடைகள், scan செய்து இணையத்தில் வெளியிடுவார் என நட்டம் தரும் பல கூறுகள் உள்ளன.
என்.சொக்கன் –
உண்மைதான். ஆனால் இணையத்தில் அது அரை நொடியில் $0 செலவில் நிகழும், அச்சு நூலில் சில மணி நேரங்கள், சில ரூபாய்கள் செலவாகும். ஆகவே, பரப்பலுக்கு ஓர் இயல்பான தடை அங்கே உள்ளது. இங்கே யாரும் அதிகச் சிரமமின்றிப் பரப்பலாம்.
By the way, நூலகங்கள், பழைய புத்தகக் கடைகள் இரண்டும் legal ways to resell/ distribute books. அவற்றை ஜெராக்ஸ், ஸ்கான் செய்து வெளியிடுகிற illegal waysஉடன் இணைக்கவேண்டாமே.
சீனிவாசன் –
Anti drm போராளிகள் போராடுவது காசு கொடுத்து மின்னூல் வாங்குபவர்களின் உரிமைக்காகத்தான். ஒருமுறை வாங்கினால் 8 முறை மட்டுமே படிக்க விடுவது, குறிப்பிட்ட மென்பொருள், அல்லது வன்பொருளில் மட்டுமே படிக்க வைப்பது என்ற நிலையைத்தான் எதிர்க்கிறோம். உதாரணமாக நான் e ink கிண்டில் கருவியில் படிப்பதை விரும்புகிறேன். Newshunt ல் மின்னூல் வாங்கினாலும் கிண்டில் கருவியில் படிக்க முடியாது. மேலும் பெரிய கூட்டுக்குடும்பத்தில் உள்ளோருக்கும்கூட பகிர முடியாது. பணம் கொடுக்கும் வாசகருக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடுகள்? ஒரு MP3 பாடல் cd வாங்கினால் அவர்கள் தரும் மென்பொருள், வன்பொருளில் தான் கேட்க வேண்டும். மொபைல், காரில் கேட்க இயலாது என்பது போன்ற கட்டுப்பாடு இது.
பொதுவாக பல வெளிநாட்டு மக்கள் பணம் தந்து வாங்கும் கலாச்சாரம் கொண்டவர்கள். பல தமிழர்களும் நேர்மையாக பணம் தந்து வாங்குவதைக் காண்கிறேன். அனைவருமே நேர்மையாக மாற சற்று காலம் ஆகலாம். அதுவரை பல்வேறு புது முன்னோடி முயற்சிகள் தேவை. உங்களது குறு நூல்கள், குறைந்த விலை நூல்கள் போன்ற பல்வேறு புது முயற்சிகள் மட்டுமே ஒரு கலாச்சார மாற்றத்திற்கான விதைகள். ஊக்கமுடன் உங்கள் பல்வேறு புது முயற்சிகளையும் சோதனைகளையும் தொடருங்கள்.
இரவி –
அச்சு நூல்கள் போலவே ஒவ்வொரு நூலாக விற்று அதில் உள்ள உரிமைத் தொகையை வைத்து பொருள் ஈட்டுவது என்று இணைய ஊடகத்தைக் குறுக்கத் தேவை இல்லை. இணையத்தில் பல்வேறு வணிக மாதிரிகளுக்கான சாத்தியங்கள் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு, நீங்கள் இலவசமாகத் தந்த ஒரு நூலுக்கு பலர் பன்மடங்கு நன்கொடை தந்து வாங்கியது. எல்லாரும் எல்லாரில் எல்லா நூலுக்கும் இப்படி வாங்க மாட்டார்கள் என்பது அறிவேன். ஆனால், இது ஒரு சாத்தியத்துக்கான எடுத்துக்காட்டு மட்டுமே.
என்.சொக்கன் –
என் நூலுக்கு நான் பெறும் தொகை ஐந்து ரூபாய் என்றால், அதைத் தருபவர்மட்டுமே அதை வாசிக்கவேண்டும் என்று நான் விரும்புவேன், ஓரிருவருடன் (அச்சு நூல்போல) அதை அவர் பகிர்ந்துகொள்ளலாம். அதற்குமேல் பகிர்ந்துகொள்வது எனக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறதே.
Anti-DRM போராளிகள் எல்லாரும் இந்த விஷயத்தைமட்டும் கருதுவதே இல்லை 5 ரூ கொடுத்துவிட்டு 500 பேர் வாசிப்பதை நான் எப்படி ஊக்கப்படுத்த இயலும்?
அதனால்தான் நான் இனி இலவச மின்னூல்களைமட்டுமே எழுத விரும்புகிறேன். 5 ரூ தரவேண்டாம், 0 ரூ தாருங்கள், எத்தனை பேர் வேண்டுமானாலும் வாசியுங்கள், எனக்கு எதிர்பார்ப்பு இல்லை, ஆகவே ஏமாற்றம் இல்லை. அம்மட்டே
இரவி –
//Anti-DRM போராளிகள் எல்லாரும் இந்த விஷயத்தைமட்டும் கருதுவதே இல்லை 5 ரூ கொடுத்துவிட்டு 500 பேர் வாசிப்பதை நான் எப்படி ஊக்கப்படுத்த இயலும்?// முதலில் 500 பேருக்குப் பகிரப் போகிறார்கள், இல்லாவிட்டால் அவர்கள் 500 பேரும் காசு கொடுத்து வாங்குவார்கள் என்ற ஊகமே தவறு. ஒரு பேச்சுக்கு 500 பேர் இலவசமாகப் படிக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இந்த 500 பேரில் 1% வீதம் பேர், அதாவது 5 பேர் உங்கள் இரசிகராக மாறினாலும் எதிர்காலத்தில் உங்கள் எழுத்தைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்க வாய்ப்புண்டு. இப்படிப் பூட்டி வைப்பதன் மூலம், உங்களுக்குப் பெரிய வருமானமும் இல்லை. நீங்கள் எழுதியதைப் படிக்கவும் ஆள் இல்லை என்கிற போது, பூட்டி வைத்த உங்கள் உழைப்பின் மூலம் என்ன சாதிக்கிறீர்கள்? முதலில் மக்களை வகை தொகையில்லாமல் இலவசமாகவேனும் படிக்க வைத்து வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க வேண்டியது எழுத்தாளர்களின் கடமையும் கூட. அந்தப் பணியைத் தான் நூல்கங்கள் செய்கின்றன. இப்படிப் பழகுவதற்கான வாய்ப்பே தராமல், வாங்க ஆள் இல்லை என்றால் எங்கிருந்து ஆட்கள் வருவார்கள்?
என்.சொக்கன் –
நானும் உங்கள் பக்கம்தான் வருகிறேன் (இலவசமாக நூல் வழங்குதல்), ஆனால் அதன்மூலம் வாசிப்போர் அதிகரிப்பார்கள் என்று நான் நம்பவில்லை.
நூலகங்கள் பல தலைமுறைகளாக உள்ளன, நூல் வாங்குவோர் சதவிகிதம் அதிகரிக்கவில்லை.
இரவி –
//அதை வளர்க்க இயலாது என்பது என் உறுதியான நம்பிக்கை. நம் (99.99% பேர்) ஜீனில் புத்தகங்களுக்காகச் செலவழிப்பது என்கிற குணமே இல்லை. மின் புத்தகம் என்றால் அது இன்னும் ஒரு படி கீழே.// 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நூல்கள் விற்றதை விட இப்போது பல மடங்கு விற்பனை ஆகிறது. இணையத்தில் எழுதும் முன்னணி எழுத்தாளர்களின் குண்டு குண்டு நூல்களை வாங்கிச் சேர்க்க ஆள் இருக்கிறார்கள். இதற்குப் பின்னே தமிழர்களின் வாங்கும் திறன், பொருளாதார வாய்ப்புகள் கூடி வருவது ஒரு முக்கிய காரணம். எதிர்காலத்தில் இந்நிலை மேம்படும் போது மின்னூல்களுக்கான சந்தையும் கூடும். ஆங்கில நூல்கள் விற்பதற்குப் பின்னேயுள்ள பொருளாதாரக் காரணியும் இது தான்.
https://en.wikipedia.org/wiki/Maslow%27s_hierarchy_of_needs
என்.சொக்கன் –
இதே கருத்துப்படி திரைப்படங்களும் யூட்யூபில் இலவசமாக வெளியிடப்படவேண்டும் என்று சொல்வீர்களா? அவற்றுக்குத் தியேட்டர் என்ற Distribution Channel உள்ளது, அது DRMக்கு இணை என நான் நினைக்கிறேன்.
இரவி –
DRM வேண்டாம் என்பதும் விலை வேண்டாம் என்பதும் ஒன்று அல்ல. தாராளமாக உரிய விலை வைத்து ஆனால் DRM கட்டுபாட்டுகள் இல்லாமல் வெளியிடலாம்.
என்.சொக்கன் –
தமிழ் மின்னூல்கள் அதிகம் விற்றால் நானும் மகிழ்வேன். பார்ப்போம்.
புரிகிறது. நம் கருத்து வேறுபாடு இந்த ஒரே ஒரு விஷயத்தில்மட்டும்தான்: DRM இன்றி விலை வைப்பது வீண் என்பது என் கருத்து.
இரவி –
//DRM இன்றி விலை வைப்பது வீண் என்பது என் கருத்து// DRM வைத்தும் பெரிய விற்பனை இல்லை என்கிற போது அதை ஏன் திறந்து வைக்கக் கூடாது என்பது தான் என் கேள்வி.
How to stop piracy:
1 Create great stuff
2 Make it easy to buy
3 Same day worldwide release
4 Fair price
5 Works on any device –
https://twitter.com/kimdotcom/status/288199968932630528
என்.சொக்கன் –
ஆயிரம்தான் இருந்தாலும் அது என் உழைப்பல்லவா? அதற்குச் சிறு பதில் மரியாதையேனும் நான் எதிர்பார்ப்பதில் என்ன தவறு? குறைந்தபட்சம் ஒரு காஃபியேனும்?
இன்னும் அச்சு நூல் வடிவு பெறாத என் நூல்களே 20க்குமேல் உள்ளன. அவை அனைத்தையும் ஒவ்வொன்றாக இலவசமாகத் தந்துவிடுவேன். ஆனால் அதற்கு மனம் வர நாளாகும்.
இரவி –
//DRM இன்றி விலை வைப்பது வீண் என்பது என் கருத்து// எடுத்துகாட்டுக்கு, உங்கள் பிள்ளைகள் எழுதிய சிறுவர் கதைகள் மின்னூலை எடுத்துக் கொள்வோம். ஒரு பேச்சுக்கு, 50 பேர் அதைக் காசு கொடுத்து வாங்கி இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நிச்சயம், உங்களுக்குப் போட்ட காசும் வந்திருக்காது. இதையே DRM இல்லாமல் பரப்பினால் 5000 பேர் தரவிறக்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். எது உங்கள் பிள்ளைகளுக்குக் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும்? நீங்கள் உழைப்புக்கான பலனாக பணத்தை மட்டும் பார்க்கிறீர்கள் (அதாவது, குறிப்பிட்ட நூல்களுக்கு மட்டும். நீங்கள் இலவசமாக நூல்கள் தரும் வெகு சில எழுத்தாளர்களில் ஒருவர். அதைப் பாராட்டுகிறேன்) நான் அடிப்படை மாந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வது கூட உழைப்புக்கான பலன் என்றே கருதுகிறேன்.
எப்பவும் போல, இதை நான் சொல்லியே ஆகணும். உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு. 🙂
என்.சொக்கன் –
அந்தச் சிறுவர் நூல்கள் ஐம்பதுகூட இதுவரை வி்ற்கவில்லை என்பதுதான் உண்மை முதல் நூலுக்காக ஓவியருக்குத் தந்த பணமே எனக்கு மீளவில்லை.
ஆனாலும் நான் அவற்றை இலவசமாகத் தர விரும்பவில்லை. காரணம், வாங்கிய முப்பது(?) பேரை ஏமாற்றுகிறவனாகிறேன்.
அதற்குப் பதில் 4 புது சிறுவர் நூல்கள் எழுதி இலவசமாக வெளியிட்டுவிடுவேன். அது எனக்கு மகிழ்ச்சி.
பண எதிர்பார்ப்புடன் எழுதிய நூல்களுக்குப் பணத்தைதான் பலனாக எதிர்பார்க்கிறேன் பண எதிர்பார்ப்பு இல்லாமல் (இப்போதுமுதல்) எழுதுபவற்றை நான் இலவசமாகத் தரத் தயார், அவ்வளவுதான் மேட்டர்!
இன்னொரு விஷயம், இப்போது நான் பேசுகிற எவையும் கசப்பில் பேசுபவை அல்ல. மி(எ)ன்னூல் வாங்காத சமூகம் வேஸ்ட் என்ற தொனியில் இவற்றை வாசிக்கவேண்டாம் .
இரவி –
//பண எதிர்பார்ப்புடன் எழுதிய நூல்களுக்குப் பணத்தைதான் பலனாக எதிர்பார்க்கிறேன் பண எதிர்பார்ப்பு இல்லாமல் // நிச்சயம், உங்கள் பிள்ளைகள் பணத்தை எதிர்பார்த்து அக்கதைகளை எழுதி இருக்க மாட்டார்கள். இன்னும் நிறைய பேர் அவர்களின் கதையைப் படிக்கிறார்கள் என்றால் பெற்றோர்களாக நீங்களும் மகிழத் தான் செய்வீர்கள்.
//ஆனாலும் நான் அவற்றை இலவசமாகத் தர விரும்பவில்லை. காரணம், வாங்கிய முப்பது(?) பேரை ஏமாற்றுகிறவனாகிறேன்.// ஏன், இந்த அளவுக்கு அறத்தைச் சிக்கலாக்குகிறீர்கள் என்று புரியவில்லை அப்படியே, தயக்கமாக இருந்தால் வாங்கிய முப்பது பேருக்கும் ஒரு மடல் போட்டு விட்டு, ஒரு பெற்றோராக உங்கள் பிள்ளைகளின் எழுத்தை அனைவரும் படிக்கும் வகையில் இலவசமாக வெளியிடுகிறேன் என்று கூறி வெளியிடுங்கள். இல்லை, அதே விலையோடு DRM இல்லாமல் வெளியிடுங்கள். இது ஏற்கனவே வாங்கியவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும்.
என்.சொக்கன் –
ஆம், என் மகள் இதை என்னிடம் நேரடியாகவே சொன்னாள். அதுதான் நியாயமாகவும் தோன்றுகிறது. ஆனால் எனக்கு மனம் வரவில்லை. என்ன செய்வது?
காரணம் என்ன என்று யோசித்தால், ஓவியர்களுக்குப் பணம் தந்தது நானல்லவா?
//அதே விலையோடு DRM இல்லாமல் வெளியிடுங்கள்// இது நல்ல யோசனை. ஆனால், தமிழில் இது சாத்தியமா? எங்கே? எப்படி?
இரவி –
DRM வேண்டும் என்பவர்கள் பெருமளவு பணத்தைக் குறி வைத்தே செய்கிறார்கள். ஆனால், DRM வேண்டாம் என்பதில் பணம் அல்லது விலை ஒரு பொருட்டே இல்லை. அல்லது, அது ஒரு பெரும் உரையாடலின் ஒரு பகுதி மட்டுமே. பல்வேறு சுதந்திரங்கள், அடிப்படை மாந்த இயல்புகள், பண்பாட்டுக்கு வளர்ச்சிக்கு எதிராக இருப்பதாலேயே DRM வேண்டாம் என்று கோருகிறோம்.
நேரம் கிடைக்கும் போது கட்டாயம் http://www.feedbooks.com/book/2750/free-culture படியுங்கள். காப்புரிமம், DRM தொடர்பான உங்கள் பார்வை மாறும்.
என்.சொக்கன் –
நான் DRMமில் இனி நூல்கள் வெளியிடப்போவதில்லை, சொல்லப்போனால் (ஒரு பதிப்பாளராக) விலைக்கு மின்னூல்கள் வெளியிடும் எண்ணமே எனக்கு இனி இல்லை.
ஆகவே, தனிப்பட்டமுறையில் நான் DRMக்கு வக்காலத்து வாங்கவில்லை.
இரவி –
https://support.google.com/books/partner/answer/3309439?hl=en
ஒரு படைப்புக்குப் பணத்தையும் தாண்டிய எதிர்பார்ப்புகள் உண்டு என்பதைச் சுட்டவே உங்கள் பிள்ளைகள் நூல்களை ஒரு எடுத்துக்காட்டுக்காக கூறினேன். உடனே அவற்றின் DRMஐ நீக்க வேண்டும் என்றோ இலவசமாகத் தர வேண்டும் என்றோ எதிர்பார்க்கவில்லை. இனி வரும் உங்கள் நூல்கள் DRM காப்பின்றி நீங்கள் தருவதை வரவேற்கிறேன்.
//ஓவியர்களுக்குப் பணம் தந்தது நானல்லவா?// உங்கள் பிள்ளைகளின் கற்பனைக்கு உருவத்தைத் தந்ததை ஏன் நீங்கள் அவர்களுக்குத் தரும் ஒரு பரிசாகக் கருதக்கூடாது?
என்.சொக்கன் –
கூகுள் ப்ளேயில் நூல்களுக்கு Non DRM Option உண்டு என்பதே எனக்கு இப்போதுதான் தெரியும்.
அங்கே என் நூல்கள் அனைத்துக்கும் DRM Optionஐ நீக்கிவிட்டேன். நன்றி!
இரவி –
DRMக்கு எதிரான பரப்புரை வெற்றி ! வெற்றி !
என்.சொக்கன் –
ஓவியர்களுக்குப் பணம் தந்தபோது, லாபம் வராவிட்டாலும், அந்தப் பணம் குறைந்தபட்சம் அதே அளவில் திரும்ப வரவேண்டும் என்ற எண்ணத்துடன் தந்தேன். அந்த எண்ணத்தை இனி மாற்ற இயலாது
ஆகவே, அந்தப் பணம் திரும்ப வரும்வரை (அதாவது, forever) அந்த நூல்கள் நிச்சயம் இலவசமாக வராது.
நான் செலவழித்தது சிறு தொகைதான். ஆனால் அது திரும்பவேண்டும் என்ற எதிர்பார்ப்பை மாற்றிக்கொள்ள இயலவில்லை. மன்னிக்கவும்! ‘Sorry to disagree’.
நேரம் கிடைக்கும்போது Kindleலில் உள்ள என் (ஆங்கில) நூல்களுக்கும் DRM Optionஐ எடுத்துவிடுகிறேன்.
நான் DRMன் Fan இல்லை, ஆகவே “பரப்புரையால் மாறினேன்” என்று சொல்ல இயலாது. நான் மாறிய காரணம், DRM அநாவசியம் என்பதல்ல, இந்நூல்களால் இனி எனக்கு எதுவும் (பொருளாதாரப்) பலன் இருக்காது என்ற எண்ணத்தால்தான்.
இரவி –
தாராளமாக விலை வையுங்கள். DRM வேண்டாம் என்பது விலை வேண்டாம் என்ற கோரிக்கை அல்ல. நியாயமாகச் செயற்படக்கூடிய வாசகர்களுக்குத் தேவையற்ற தடைகளை உருவாக்கக்கூடாது என்பது தான் நோக்கம்.
//ஆகவே “பரப்புரையால் மாறினேன்” என்று சொல்ல இயலாது// விடுங்க. விடுங்க. ஒரு சின்ன புன்னகையுடன் இந்த உரையாடலில் இருந்து விடைபெறுகிறேன். நல்ல உரையாடல். நன்றி சொக்கன்.
//நான் மாறிய காரணம், DRM அநாவசியம் என்பதல்ல, இந்நூல்களால் இனி எனக்கு எதுவும் (பொருளாதாரப்) பலன் இருக்காது என்ற எண்ணத்தால்தான் // அதிகம் விற்பனையாகும் நூல்கள், ஆசிரியர்கள் தவிர வேறு யாருக்கும் (கிட்டத்தட்ட 90%கும் மேல்) DRMஆல் பலன் இல்லை. ஆனால், DRM இல்லாமல் விற்கலாம், அதனால் பெரிய பொருளாதார இழப்பு இல்லை, உண்மையில் வாசக வீச்சு கூடுவதற்கான வாய்ப்பு தான் உண்டு என்பதே பலருக்குத் தெரிவதில்லை. எனவே, பரப்புரை என்பது இப்படிப்பட்ட வாய்ப்புகளையும் சுட்டிக் காட்டுவதே.
என்.சொக்கன் –
//DRM இல்லாமல் விற்கலாம், அதனால் பெரிய பொருளாதார இழப்பு இல்லை, உண்மையில் வாசக வீச்சு கூடுவதற்கான வாய்ப்பு தான் உண்டு என்பதே பலருக்குத் தெரிவதில்லை. எனவே, பரப்புரை என்பது இப்படிப்பட்ட வாய்ப்புகளையும் சுட்டிக் காட்டுவதே.//
உண்மை!
===========
இனிய உரையாடலுக்கும், இங்கு பகிர அனுமதித்தமைக்கும் என்.சொக்கன், இரவி இருவருக்கும் நன்றி !
Comments
One response to “எழுத்தாளர் என்.சொக்கன் அவர்களுடன் DRM பற்றி ஒரு உரையாடல்”