(சிறுகதைத் தொகுப்பு)































எனை எழுத ஊக்குவித்துக்கொண்டிருக்கும் எனது



























n n n







படைப்பாளி தான் காணவிரும்பும் சமுதாயத்தைத் தனது கற்பனைத்திறனைப் பயன்படுத்தி வடித்துக்காட்டுவதுதான் சிறுகதை. எழுத்தாளன் தன்னைச் சுற்றி நடக்கும் சமூகச் சீர்கேடுகளை வெளிப்படையாக எதிர்க்க இயலாத காலக்கட்டத்தில் அவற்றைத் தனது எழுத்தில் வடித்துக்காட்டி சமூகத்தினரை விழிப்புணர்வு அடையச்செய்கிறான். இத்தகைய நோக்கில் பல சிறுகதைகள் எழுதப்படினும் அடிப்படையாகவே சிறுகதைகள் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கின்ற மக்களின் வாழ்க்கையினைப் பிரதிபலிப்பதாகக் கருதி கருத்துவேறுபாடு நிறைந்து வாழ்கின்றவர்களும் உண்டு. சிறுகதைகள் இயல்பாகவே ஒரு சிறுநிகழ்வின் தாக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு எழுதப்படுபவை.

உலகைத் திருத்தவல்ல எழுத்துகள் இளைய சமுதாயத்தைச் சென்றடையவேண்டும் என்பதனைக் கருத்தில்கொண்டு இச்சிறுகதைத் தொகுப்பு எழுதப்பட்டுள்ளது. இச்சிறுகதைத் தொகுப்பில் எழுதப்பட்ட சில சிறுகதைகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டவை.



ஆசிரியர்



















இப்புத்தகத்தில் காணப்படுபவை அனைத்தும் ஆசிரியரின் அனுமதியின்றி

வெளியிடுதல் சட்டப்படி குற்றமாகும்.









.எண்

தலைப்பு

பக்கங்கள்


1

கமிஷன்


6

2

தனியொருவனுக்கு உணவில்லையெனில்!


12

3

கரையாத மெழுகுவத்தி


17

4

நாய் கடித்த செருப்பு


22

5

மாதா பிதா குரு தெய்வம்


26

6

பாரிஜாதம்


36

7

இசைக்க மறந்த வீணை


42

8

தடம் மாற்றிய பண்டிகை


49

9

உயர்ந்த இடம்

52

10


கல்யாணப் புடவை


59

11.

உறவுகள்


65

12

வடு


67

13

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்


75

14

தாய்


79

15

உழவனின் டைரி


85

16

பூங்கொத்து

94



























என்னங்க? டாக்டரைப் பாத்தீங்களா? என்னதான் சொல்றார்?“

நம்ம பையனுக்கு வந்திருக்கிற நோய் பன்றிக்காய்ச்சலாம். பையனுக்கு பத்து வயசு தான் ஆகிறதாலும், பையன் உடல்நிலை மோசமாக இருக்கறதால இப்போதைக்கு ஏதும் சொல்லமுடியாதுங்கறார். ஆண்டவன் தான் நம்ம மோகனைக் காப்பாத்தணும்“

மருத்துவமனை வார்டில் பெட்டில் படுத்திருந்த பையன் மோகனுக்கு ட்ரிப்ஸ் ஏறுவதைப் பார்த்தபடி மனைவி உட்கார்ந்திருப்பதை வெறித்துப் பார்த்தான்.

யானை பல்தேய்க்கற பிரஷாப்பா இது! இல்லடா! இது கார் கிளீன் பண்ணுற பிரஷ்ஷூடா!

அப்பா! அப்பா! என்னடா? சொம்மா நொய்!நொய்ங்கற!

ஒரே ஒரு கேள்விப்பா?

ஏம்ப்பா உன் மீசை ரெண்ட் இஞ்ச் பிரஷ் மாதிரியும், உன்தாடி 36 ஆம் நம்பர் எமரி பேப்பர் மாதிரியும் இருக்கு!

அன்றைக்கு சிரித்தேனே! பையன் மழலை பேச்சை இரசித்தேனே!

இன்று நொய்!நொய் என்று பேச மாட்டானா என ஏங்குகிறேனே! இது என்ன பாவி மனம்!

தொண்டைக்குள் குற்றஉணர்வு முள்ளாய் மாட்டிக்கொண்டதுபோல இதயம் பலமுறை விட்டுவிட்டு அடித்த்து.

வைத்த சோறுகூட ரெண்டுபேரும் சாப்பிடலை! அவ சாப்பிடலைன்னா தொண்டை ஒட்டிக்கும்பாளே! அவ இல்லன்னா நான் அவ்வளவுதான்.

இரவு முழுவதும் நன்றாக இருந்த மோகன் கால் கை வலிக்குது என்று துவண்டு விழுந்தவன் இன்னும் எழுந்திருக்கவில்லை.

திருமணமாகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டவன் கொடுத்த அருட் கொடை. மனதுக்குள் என்னை நானே கேட்டுக் கொண்டேன். நான் யாருக்கும் தவறு செய்தேனோ? அதனால் என் பிள்ளை கஷ்டப்படுகிறானோ? அவன் நல்லபடியாக பிழைக்க வேண்டுமே!

ஹூம்! இனி ஒரு முடிவுக்கு வர வேண்டியதுதான்..................

அவனுக்குப் பிடித்த பிள்ளையாரிடம் போய் நின்றான் கண்ணீரில் நீர் வழிய................................மௌனமான வேண்டுதல் பிள்ளையாரின் காதில் ஒலித்ததா!

இரண்டு நாள் கழித்து மோகன் கண் விழித்தான்.

டாக்டர் அவனை வீட்டுக்குச் செல்லலாம் என்று கூறியபோது டாக்டரை இறுக்கிக் கட்டிக்கொள்ளலாம்போல இருந்தது. டாக்டருக்கு நன்றி கூறி விட்டு நகையை சேட்டு கடையில் வைத்து பணத்தை ஆஸ்பத்திரியில் கட்டி விட்டு பிள்ளையாருக்கு நன்றி சொன்னான்.

இன்னமும் கொஞ்சம் பணம் கொறையுது...............இருங்க வளையலை வச்சுத் தரேன்................கழற்றிய மனைவியை வெறிக்கப் பார்த்தான் வரதன்.

இவளுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்.............

பாவி மனம் அலறித் துடித்தது.

அதை வச்சுக்க.............இரு டாக்டரைப் பாத்துட்டு வர்றேன்.

அய்யா! உள்ளே வரலாமா?

என்னப்பா! பில் கொஞ்சம் காசு குறையுது...............

அப்படியா! கிளினிக்கில் இருந்த பெஞ்ச் எல்லாம் பெயின்ட் அடிக்கறியா! இந்தா பணம்! மீதியை ஆஸ்பத்திரி பில்லோடு கணக்கை பாத்துக்கலாம்..........ஐயா! நீங்க தான் எனக்கு டிரீட்மெண்ட் பாத்து குழந்தையை தக்க வச்சுக் கொடுத்தீங்க.........இன்னைக்கும் அதேமாதிரி உதவி செய்யுறீங்க.............

அதுக்குத்தாம்பா டாக்டருக்கு படிச்சுட்டு சேவை செய்யுறோம்...என புன்னகைத்தார் ஆகாஷ்.

மறுநாள் டாக்டர் கொடுத்த பணத்துடன் பெயின்ட் கடைக்குச் சென்றேன். மெர்க்குரி முதலாளி என்னைப் பார்த்து, ”வாப்பா, வரதா! என்ன நாலு நாளா ஆளைக் காணோம்?“ என்றார்.

அய்யா என் பையனுக்கு பன்றிக்காய்ச்சல் வந்து செத்துப் பிழைச்சான்யா. நம்ம ஆகாஷ் டாக்டர் தான் அவனக் காப்பாத்தினார். நாலு நாளா ஆஸ்பத்திரியில தான் இருந்தேன். அவர் கிளினிக் பெஞ்ச் பெயிண்ட் வேலை தான் வந்திருக்கு”

கவலைப்படாதே வரதா! எல்லாம் சரியாயிடும். உன் பையன் நல்லாயிடுவான். வீட்டில கொசு வராம பாத்துக்கோ. சரி இப்ப என்ன ஆர்டர்? சொல்லு!“

அய்யா இரண்டு லிட்டர் ஏசியன் எனாமல் ஒயிட் பெயிண்ட், இந்தாங்க சீட்டு இதுல மீதி எல்லாம் இருக்கு எடுத்துக் குடுங்க..................

என்னப்பா சின்ன ஆர்டரா இருக்கு?“

ஆமாம் அய்யா? பில் எவ்வளவு?“

ரூபாய் தொள்ளாயிரத்தி எண்பத்தெட்டு ஆகுதுப்பா!“

இந்தாங்க அய்யா பணம்!”

யாருடா அங்க! இந்த பில்லுக்கு சரக்கு எடுத்து வரதனுக்குக் கொடுடா!”

சரி வரதா! இந்தாப்பா உன் கமிஷன் நூறு ரூபாய்“

அய்யா! என்னை மன்னிக்கணும் எனக்கு இனிமேல் நீங்க ஒரு பைசா கூட கமிஷனா கொடுக்க வேண்டாம். நான் கமிஷன் வாங்கினதால தான் என் ஒரே மகன் சாகக்கிடந்து பொழச்சிருக்கான்னு நான் நினைக்கிறேன்“

என்ன வரதா நீ தான் பேசறியா? பக்கத்து கடைல இருபது பெர்சன்ட் கமிஷன் தர்றான், மோதிரம் தரான்னு அங்க போய் கொஞ்ச நாள் ஆர்டர் கொடுத்து என் கடை பக்கமே வராம இருந்த............இப்ப ரெகுலரா கொடுக்கற கமிஷன கூட வேண்டாங்கற!“ ஆச்சரியமாயிருக்கு..............நீயா பேசுற..............கார்பெண்டர் தொழிலுக்கு மாறிடப்போறியா? இன்னமும் கமிஷன் கிடைக்கும்னு.............வீட்டுக்காரங்ககிட்ட பொருளை உடைச்சிட்டு ரெண்டு சேத்து வாங்கிப் போடலாம்னு......................

விடாமல் பேசிய முதலாளியை வெறிக்கப் பார்த்தான் வரதன்.

நான் செய்யற வேலைக்கு வீட்டுக்காரங்க கேட்கற கூலியைக் கொடுக்கறாங்க. பின்ன எனக்கு எதுக்கு கமிஷன்? அநியாயமா வந்த பணத்தைக் கொண்டு தண்ணி அடிச்சி குடும்பத்தை கவனிக்காம இருந்த என்னை ஆண்டவன் நல்லா தண்டிச்சிட்டான். இனி குடிக்கவும் போறதில்லை. கமிஷனும் வாங்கப் போறதில்லை. நீங்க நியாயமான ரேட் பில் போட்டா போதும். கமிஷனை கழிச்சிப் பில் போடுங்க. அந்த பில்லை டாக்டர் கிளினிக்கில் கொடுத்திடறேன்“

வரதா! ரொம்ப சந்தோஷம்!

உன்னை மாதிரி ஒவ்வொரு தொழிலாளியும் நினைச்சி உழைச்சான்னா நம்ம நாடு வெகு சீக்கிரம் வல்லரசா மாறிடும்“என்றபடி வந்து நின்றவரைப் பார்த்தார் முதலாளி.

சார்! இந்த டிடிஎல் பாக்கெட்டைப் பாருங்க.....இது என் விசிட்டிங்கார்டு...........

சார் என்ன தொழில் செய்றீங்க?......எம்.எஸ்ஸி.,எம்ஃபில் எல்லாம் போட்டிருக்கே..........நான் இப்ப ஃப்ரீ இல்ல......மதியம் வந்தாத்தான் பேச முடியும். வந்த சரக்கெல்லாம் அப்பிடியே கிடக்கு.........

நான் இங்க ஒரு காலேஜ்ல வேலை செய்யுறேன். பார்ட்டைமா இந்த மாதிரி என் ஃபிரெண்டோட சேர்ந்து பாக்கட்ல போட்டு செய்யுறேன். கஸ்டமர்ஸ் கிட்ட நீங்க தான் மூவ் செய்யணும். மதியம் காலேஜூக்கு ஓடணும்......

இதோ பெயிண்டர்....இவங்க சொன்னாத்தான் இங்க எல்லாம்....பெரிய பெரிய கம்பெனியெல்லாம் பெயிண்டர்கிட்டதான் யோசனை கேக்கறான். அனுபவமுல்ல பேசுது..........என்ன இஞ்சினியர் கட்டினாலும் இவர்கள் இல்லாம ஒண்ணும் முடியாது.

முதலாளி பேசியபடி, “டேய் வரதனுக்கு மெமோ பில்லை மாத்திப் போடுடா! கமிஷன் கழிச்சி எவ்வளவு பில்லுன்னு சொல்லு“

அய்யா ரூபாய் 890 ஆகுது.“

வரதா, இந்தாப்பா மீதிப் பணம்”

நன்றி அய்யா! நான் வர்றேன்”

வேகமாகச் சென்றவனை கடை முதலாளி வெகுநேரம் பார்த்துக் கொண்டேயிருந்தார்.

சார் ......என்றழைத்த டிடிஎல் பாக்கெட் வைத்திருந்தவரைப் பார்த்தார்.

என்னய்யா அப்பிடி பாத்துட்டு நிக்கறீங்க?

நாங்களும் இன்றைய இளைஞர்களுக்கு இதைத் தான் சொல்லிக்கிட்டிருக்கோம்.

கடவுள் ஒவ்வொருவருக்கும் கஷ்டத்தைக் கொடுத்தாத் தான் மக்கள் திருந்துவாங்கன்னு நினைக்கறாருல்ல...............என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மேலே வைத்திருந்த பிள்ளையார் படத்திலிருந்த பூ கல்லாவின் மீது விழுந்தது.

























































11 மணி வெயிலின் சூடு காலைத்தாக்க, உச்‘ என்ற சப்தத்துடன் அலுத்துக்கொண்டார் காமராஜ்.

தாத்தா! 17 பஸ் போயிடுச்சா?

சாதா பஸ் போச்சுன்னு சொன்னாங்க! நானும் அதுக்குத்தான் நிக்கறேன்!“

என்ன! கொடியைத் தலைகீழாகப் பின் பண்ணியிருக்கே?“

அதுவா! ப்ச்! அப்பா பின் பண்ணச் சொன்னாரு. சரியா நான் பின் பண்ணலையா? நல்லவேளை! சொன்னீங்க! இல்லைன்னா என் ஃப்ரெண்ட்ஸ் சிரிச்சுருப்பாங்க!“

ஸ்கூல்ல கொடி ஏத்திட்டு திரும்பறியா!“

இல்ல தாத்தா! எங்க ஸ்கூல்ல எல்லாரையும் கூப்பிட மாட்டாங்க! “.............................“

என் ஃப்ரெண்ட் இருக்கற தெருல இன்னைக்கு இண்டிபென்டன்ஸ் டே செலிப்ரேஷன். அங்க இருக்கற ஒரு அஸோஸியேஷன் மூலமா ஒரு ப்ரோக்ராம்“.

காமராஜுக்கு தன் பையிலிருக்கும் ஸ்வீட்டை எடுத்து அந்தச் சிறுவனிடம் கொடுக்கும் ஆவல் மனசுக்குள் எழுந்தது. இருந்தாலும், பஸ் ஸ்டாப்பில் நின்று சிறுவனிடம் கொடுப்பதும் பேசுவதும் சரியாயிருக்காது என்றெண்ணி பஸ் வருகிறதா? எனப் பார்த்தார் காமராஜ். பழ வண்டிக்காரனிடம் வாங்கிய பழங்களும் ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து வைத்த மில்க் ஸ்வீட் பையும் கையைக் கனக்கச் செய்தன.

பிளாட்ஃபார்ம் நிறைய முளைத்த தள்ளுவண்டிக்கடைகள் மனிதர்களை நடுரோட்டில் நடக்கச் செய்ததைக் கவனித்தபடி நின்றிருந்தார்.

சரேலென இடிக்கும்படி தன் பக்கத்தில் வந்து நின்ற காரை எரிச்சலுடன் பார்த்தார் காமராஜ்.

என்ன பஸ்ஸுக்கா காமராஜ்! பாத்து ரொம்ப நாளாச்சே! நெறைய சேஞ்சஸ் உங்கிட்ட எனக்குத் தெரியுதே!“ குளிர்பதன வசதியுடன் கூடிய அதிநவீன சொகுசுக் கார் கண்ணாடியை இறக்கியபடி, கதவைத் திறந்தபடி வந்த நேருவை உற்றுப் பார்த்தார் காமராஜ்.

நீ சக்கரைப் பொங்கல் எடுத்துட்டுப் போறியா?“

எதுக்கு? கையை ஆதுரத்துடன் தடவியபடி, மறந்துடு.

மறக்கக்கூடியதா நேரு! அந்தக்கால இன்டிபெண்டன்ஸ்டே செலிப்ரேஷன்“

சரி! அதெல்லாம் அந்தக்காலம்! இன்னைக்கு என்ன இந்தப்பக்கம்? வீடு இங்க வாங்கிட்டு வந்துட்டாலும் கோயிலுக்குப் பழமும், ஸ்வீட்டும் அப்பப்ப பண்டிகைன்னா எடுத்துண்டு போவேன். இன்னைக்குன்னு பாத்து டிரைவர் வரலை. பேரன் டிவில ஏதோ சினிமான்னு டிரைவ் பண்ண வர மாட்டேன்னு சொல்லிட்டான். ஒண்டிக்கட்டை! அவ போனதுக்கப்புறம் நான் டிரைவ் பண்றதில்லை!“

அதான் பஸ்ல போயிடலாம்னு வந்தேன். செருப்பு போட மறந்துட்டேன்.“

உன் போலீஸ் டூயூட்டிக்கு இன்னைக்கு லீவா?“

வேலை எங்க என்னை விடும்? நானா தான் லீவு போட்டிருக்கேன். பேத்தி பிறந்திருக்கா எனக்கு! நாலு நாளா பாக்கப் போகலை! அவ்வளவு பிசி! இன்னைக்கும் போகலைன்னா அவ்வளவு நல்லாயிருக்காதுன்னு கிளம்பினேன். வழியில பழவண்டிக்காரனைப் பார்த்தேன். இவர் அப்பா அந்தக்காலத்து சுதந்திரப் போராட்ட வீரர். ரொம்ப நாளா இவருக்கு நான் ஒரு ரெகுலர் கஸ்டமர். எனக்குன்னா ரெண்டு பழம் கூடப் போட்டுத் தருவார்.

எங்கோ ‘ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!‘ பாட்டின் ஒலியை ரசித்தபடி இருந்த பையனை வினோதமாகப் பார்த்தார் காமராஜ்.

என்ன தாத்தா பாக்கறீங்க! பஸ் வர்ற வழியாத் தெரியல?“ “இந்த சாங் எங்க தாத்தாவுக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்குக்கூட ரொம்பப் பிடிக்கும்“.

மொபைல்ல ஃபோன் பண்ணி அப்பாவை வரச்சொல்லி வண்டில போலாம்ல. என்கூட கார்ல வேணும்னா வர்றியா?“

என்னிடம் மொபைல் கிடையாது. நாட் அலவ்ட் ஃபார் சில்ட்ரன்னு அப்பா சொல்லிட்டார்.

நோ தாங்ஸ் போலீஸ் தாத்தா!. தகுதிக்கு மீறி ஆசைப்படறது தப்புன்னு எங்க தாத்தா சொல்லியிருக்கார்“.

இன்னைக்குக் கார்ல போனா நாளைக்கும் அதே சுகம் கேட்கும்னு நினைக்கறியா“ நேரு கேட்டது சிறுவன் காதுக்குச் சென்றதோ இல்லையோ! அதையும் மீறிய பலத்த அடி விழும் ஓசை கேட்டது.

விடு! விடு! ஏம்பா அடிக்கற?“ எனக் கேட்டார் காமராஜ்.

பின்ன என்ன சார்! நானும் எம் பொஞ்சாதியும் கஷ்டப்பட்டு பழத்தை அடுக்கி வைச்சுட்டு உக்காந்துருக்கோம். நைசா லபக்குன்னு ஒரு ஆப்பிள் பழத்தை எடுக்குறான்“.

பசிக்குதுன்னு எடுத்தேன். திருடலை! நாளைக்குக் காசு கொடுத்துடுடலாம்னு நினைச்சேன். சின்ன பழந்தானே, அண்ணே! அதுக்குள்ள....“

ஒறவு மொறை சொல்ற லட்சணத்தைப் பாருங்க பிச்சைக்காரப்பய!“ என்னவோ கூடப்பிறந்த பொறப்பு மாதிரி!“

கிழிஞ்ச சட்டை போட்டிருக்கேன்னு தானே பிச்சைக்காரப்பயன்னு சொல்ற!“

யம் பி.எஸ்.ஸி மேத்ஸ் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிராஜவேட் தெரியுமா?

எல்லாந் தெரியுண்டா? இங்க வளந்தவந் தானே!

17 பஸ் வந்து நின்றும் யாரும் ஏறவில்லை.

நீ கிராஜுவேட்டாயிருந்தாலும் திருடித் திங்கறது தப்பில்லையா?“

போலீஸ்ல பிடிச்சிக் குடுக்கணும் இவனை! பத்து ரூபாய் கொடுத்து ஒத்த பழம் வாங்க வக்கில்லை“.எனக் கூறிய காதில் மாட்டலுடன் கூடிய ஜிமிக்கி அணிந்த பழவண்டிக்காரனின் மனைவியை வெறிக்கப் பார்த்தார் நேரு.

ரோட்டைத் தாண்டிய எதிர்ப்புறம் சாக்கடையை ஒட்டிய இடத்தில் கிழிசல் சட்டையைப் பார்த்தபடி 30 வயதுக்குரிய உடல் வளர்ச்சி எதுவுமின்றி சக்கர நாற்காலியில் துணியால் இறுகக்கட்டி வாயில் எச்சில் ஒழுகிய மனித ஜந்துவின் கண்ணில் கண்ணீர்.

காமராஜ்! நீ வண்டில ஏறிக்க! தம்பி நீயும் வா! உன் பேரென்ன?”

கல்கி தாத்தா.

இன்னைக்கு ஒரு நாளைக்கு உன் அப்பா கொள்கைய விட்டு வர்றதாலே ஒண்ணும் ஆயிடாது. காமராஜின் பழப்பை அவருக்கு இப்போது முன்னைவிடக் கனமாகத் தெரிந்தது.

தாத்தா! இந்தப் பழங்கள் யாருக்கு?” என்றான் கல்கி.

ஏதோ புரிந்தது போல்... கடவுளுக்குப்பா! என்றார் காமராஜ்.

நான் ஒண்ணு எடுத்துக்கட்டுமா?“

நான் இந்தப்பழ வண்டில வாங்கலைப்பா. நீ தாராளமா எடுத்துக்க!“

ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, கிழிந்த சட்டை மாட்டியவனைக் கண்களால் தேடினான். அசோக் பில்லர் தூணை வெறித்தபடி அம்மன் கோயில் சுவரில் ஒண்டிக்கிடந்தவனிடம், இந்தாண்ணா! வாங்கிக்கோ!” எனப் பெரியவரிடம் வாங்கிய பழத்தைக் கொடுத்தான் கல்கி.

நாளைக்கு எங்க வீட்டுக்கு வாங்க! இது எங்க அப்பாவோட விசிட்டிங் கார்டு. இதுல எங்க வீட்டு அட்ரஸ் இருக்கு. எனக்கு மேக்ஸ் டியூஷன் எடுக்கறீங்களா? நான் மேக்ஸ்ல ரொம்ப வீக்!“ என்ற கல்கியை உணர்ச்சி மேலீட்டால் கட்டித் தழுவிக் கொண்டான் கிழிசல் சட்டைக்காரன்.

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்என்ற வரிகள் ஏனோ நேருவுக்கு அந்த நேரத்தில் நினைவுக்கு வந்தது. காமராஜ்! அந்தக் கல்கியைக் கூப்பிடு! போலாம். அந்தப் பையனுக்கு யார் அந்தப் பேர் வைச்சான்னு கேட்கணும்.

நீ எங்கே பழம் வாங்கினே? சொல்! அங்கேயே காரை நிறுத்தி வாங்கிடலாம்“.

ஆமாம்! ஆமாம்! என்பது போல் காரின் முன்பக்க பளிங்குப் பொம்மை காந்தி பொக்கை வாயைத் திறந்து சிரித்துக் கொண்டிருந்தார்.













எந்திரிக்கலையா?… பொறவு லேட்டாயிடுச்சின்னு சொல்லாத சாவித்ரி!

சுருட்டைமுடியினைக் கையால் இன்னமும் சுருட்டியபடி, “அப்பா சந்தைக்கு கிளம்பிட்டாராம்மா?”

நீ முதல்ல படுக்கைய விட்டு எந்திரி!“ என பாயை விருட்டென சுருட்டினாள் அஞ்சலை.

சாவித்ரியின் காதோரத் தொங்கட்டான் பதினேழுவயதிற்கு கட்டியங்கூற, வெறுந்தரையில் கிடந்தபடி கதவில் ஒட்டிய சாயம் போன கலர் பேப்பர் ‘கனவு காணுங்கள்‘ கலாமிற்கு மனதிற்குள் சாவித்ரி குட்மார்னிங் சொன்னாள்.

இன்று என்ன நாள்? என்று பார்க்க நிமிர்ந்த சாவித்ரியின் சிவந்த முகத்திற்கெதிரில் லேப்டாப் தெரிந்தது. விசுக்கென்று எழுந்த சாவித்ரி,

ஏதம்மா இது?“

சாவித்ரியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் பிரகாசம்!

உனக்காகத்தான்… பக்கத்துவீட்டு மீனாகிட்ட கேட்டு வாங்கினேன். பாத்துட்டு கொடுத்துடு. ஸ்கூலில் சரியா பாக்கமுடியலன்னு சொன்னீல்ல…“

இதெல்லாம் சொல்றியே? நான் நல்ல மார்க் வாங்கி ஸ்டேட் லெவல் வந்தேன்னா என்னை எப்படிம்மா படிக்க வைப்பே?“

கொஞ்சநேரம் வானத்துச்சூரியனின் வர்ணஜாலத்தை ஓட்டைக்குடிசைப் பொத்தலின் வழியே பார்த்தபடி, பெருமூச்சுடன் “எதெதுக்கு விதி எப்படி இருக்கோ அப்படி நடக்கும்…! அப்பா வந்துட்டாருன்னு நினைக்கிறேன், போய் கதவைத் திற!“ என்றாள் அஞ்சலை.

பழப்பெட்டியுடன் வந்த கந்தனை, “போய்க் குளிங்க! நான் அதுக்குள்ள பழசு,புதுசுன்னு பார்த்து வண்டில அடுக்கறேன். சாப்புட்டுக் கௌம்புனா நாலு தெரு சுத்தி வர  சரியாயிருக்கும்“.

என்னம்மா ஸ்கூலுக்கு கிளம்பலையா?… ஏதோம்மா… என்னால முடிஞ்சது ஃபீசைக் கட்டி ஒரு ஸ்கூல்ல சேத்து விட்டேன். நல்லாப் படிம்மா.உங்க பிரின்சிபால்தாம்மா உன்னுடைய படிப்புக்குக் காரணம்“.

தெரியும்பா… ஆனா… என்னை இன்னமும் படிக்க வைக்கணும்னா நிறைய செலவு ஆகுமே! என்னப்பா செய்வீங்க?“

நீ சும்மா இருக்க மாட்டியா சாவித்ரி?“

என் கிட்டயும் இதே கேள்விதாங்க கேட்டா!… இவளுக்கு எதுக்கு குடும்ப கஷ்டம்?“

நீ நல்லா படிம்மா… பெத்தவங்க பாத்துக்கறோம்… ஸ்பெஷல் கிளாசுக்கு நேரம்ஆகலியா?“ சாவித்ரியின் மனம் வருந்தாமலிருக்க,அவளைப் பள்ளிக்கு அனுப்புவதில் குறியாக இருந்தாள் அஞ்சலை.

ஹூம்… இன்னைக்கு டெஸ்ட் பேப்பரெல்லாம் வரும். நான் கிளம்பறேன். அதுக்குள்ளே இருக்கற பழசை அம்மா நீங்க டிஃபன்பாக்ஸில் வைக்கிறீங்களா?“

ஏம் புள்ள… அதது ஹாட்பாக்ஸ்ல கட்டி வருதுன்ற… நீ என்னன்னா…“

நான் இதுக்கெல்லாம் கூச்சப்படமாட்டேன்“.

ஐஸ் ஐஸ் தான்

என் அம்மா மனசும் ஐஸ் தான்

எங்க வீட்டு ரைசும் ஐஸ் தான்‘

எனப் பாடியபடி அம்மாவிடம் பழையதை வாங்கி விரிசல் விட்ட டிஃபன்பாக்ஸில் அடைத்தாள் சாவித்ரி.

லேப்டாப்பைக் கொடுத்துடுங்க நான் பாத்துட்டேன்“ எனஇரட்டை ஜடையுடன் விர்ரெனச் சென்ற மகளைப் பார்த்த அஞ்சலை, “இவளை நம்மால் படிக்க வைக்க முடியுமாங்க? நீங்கபாட்டுக்கு பிரின்சிபால் சொல்றாங்கன்னு அவளை இம்புட்டு படிக்க வைச்சிட்டீங்க…“

நம்ம சாதியில எல்லாமே முக்காவாசி கை நாட்டுதானே… ஏதோ ஒண்ணு ரெண்டு தான் நாலோ,அஞ்சோ படிச்சிருக்கும். அதுவும் அமாவாசை மாதிரியில்ல முகங்கிடக்கும். அதுககிட்டபோய் எம்பொண்ண எப்படி?“

இதுக்கே நாட்டுக்கு சேவை செய்யறதுக்கா படிக்க வைக்கப்போறீங்கன்னு கேக்கறாங்க? நாத்த வேரோட புடுங்கிவேற இடத்துல நட்டுத் தானே ஆகணும்!னு எங்கிட்டயே கேக்கறாங்க”.

எனக்கும் அதே யோசனைதான் அஞ்சலை. நானும் வர்ற வழியிலே நம்ம ஒறவுமுறை ஒண்ணைப் பாத்தேன். பொண்ணுக்குக் கல்யாணம் பண்ற நினைப்பில்லையாங்கறான். சம்பாதிக்க வெச்சி திங்கணும்னு நினைக்கிறியான்னு பச்சையா கேக்குறான்ளா… ஒடம்பே ஆடிப் போச்சு. பொண்ணு ஒத்தையிலே போவுது. நான் பின்னாடி போறேன். வந்து வேலையப் பாப்போம்“.

சும்மா கிடங்க… அதோ… ஸ்கூல் பெல் சத்தம் கேக்குது“.

இந்நேரம் உள்ள போயிருப்பா… இங்கயிருக்கிற ஸ்கூலுக்கு பின்னாடியே போறாராமுல்ல… போய் வெரசா குளிங்க“

இதுக்கே இப்படி! பொண்ணைக் கட்டிக் கொடுத்தா என்ன செய்வாரோ…“ என்று முணுமுணுத்தபடி ஈர விறகை ஊதி எரிய வைத்தாள் அஞ்சலை

சாவித்ரி… அந்த ஆன்சர் ஷீட்ல நான் போட்ட கரெக்ஷ்ன்ஸ் பாத்துக்க… மேற்கொண்டு கொஸ்டின் பாங்க் கொஸ்டின்ஸ் எல்லாம் பாத்துக்க. வேறு எதுவும் சந்தேகம்ன்னா கேளு. உன்னை டென்த்ல ஸ்டேட் லெவல் மார்க் வாங்க வைச்ச மாதிரி பிளஸ் டூலயும் வாங்க வைக்கணும்னு நினைக்கிறேன். இஞ்சினீயரிங் சீட் டிரை பண்ணா கிடைச்சுடும்“.

மேடம் நான் நல்லா படிக்கிறேன். ஆனா இஞ்சினீயரிங் எல்லாம் வேண்டாம்“.

மூக்குக் கண்ணாடியைத் தலைக்கு மாற்றி, சாவித்ரியின் கண்களை ஊடுருவினார் பிரின்சிபால்.

ஏன்?“

எங்க வீட்டில பணம் இல்லைன்னு தெரிஞ்சும் என்னை ஏன் இஞ்சினீயரிங் படிக்க வைக்கணும்னு நினைக்கிறீங்க?“

பாங்க்ல லோன் தராங்க! வேலை கிடைச்சதும் நீ கட்டு. நான் அதுக்கு ஹெல்ப் பண்றேன்.

மேடம், நீங்க ஃப்ரீயா எங்கிட்ட பேசுறதால ஒண்ணு கேட்கவா? படிச்ச பொண்ணுங்க என்ன செய்கிறார்கள்? வேலை பாத்து சரியான வாழ்க்கைத்துணையுடன் இல்லறத்தைத் தொடங்கறாங்க. தன்னுடைய சுயமுயற்சியில் வாழறாங்க.  நீங்களும் அப்படித்தானே?“

ஆமாம். அதுக்கென்ன?“

ஒசந்த படிப்பு படிக்கணும்னா அதுக்குக் குடும்பமும் கொஞ்சம் ஒத்துப் போகணும்ல மேடம்?“

ஆமாம்…“

எங்க குடும்பத்துல அதிகம் படிச்சவங்களே கம்மி.அதுவும் நாலாங்கிளாஸ், அஞ்சாங்கிளாஸ் தான்“.

எங்க பேரண்ட்ஸ் நீங்க சொன்னீங்கன்னுதான் இவ்வளவு கஷ்டப்பட்டு குடும்ப வழக்கத்தை மீறி படிக்க வச்சிருக்காங்க. இதுக்கே படிச்சு ஒவ்வொரு சர்டிபிகேட்டையும் கழுத்துல கட்டித் தொங்க விட்டுக்கப் போறியான்னு எங்க சொந்தங்க கிண்டல் வேற!…“

அதுக்குன்னு நீ படிக்காமல் இருக்கப் போறியா?“

இஞ்சினீயரிங் படிச்சு நான் வேலை பாத்து ஃபாரின் போய் கைநிறைய சம்பாதிச்சேன்னு வச்சுக்குங்க. என் குடும்ப வாழ்க்கைய எங்க ஆரம்பிக்கிறது மேடம்?… லவ் மேரேஜ் தான் வழின்னு சொல்லிடாதீங்க! நான் அதுக்கு முதல் எதிரி“.

லவ்மேரேஜ் இன்னைக்கு எந்த அளவுல போய்ட்டிருக்குன்னு எனக்குத் தெரியும் மேடம். அரேஜ்ட் மேரேஜில் நான் வேலை பார்க்க எனக்கு வரப்போகும் துணை ஒத்துக்கணுமே! படிச்சா நான் அதுக்குத் தகுந்தமாதிரி வெளியுலகத்துல நடந்துக்கணும்.வீட்டுல இருக்கற உறவுகளுக்குத் தகுந்தாற்போல வாழணும். ஒத்து வருமா மேடம்?”

நெற்றிப்பொட்டைத் தேய்த்தபடி யோசித்த பிரின்சிபாலை ஒருகணம் தயக்கத்துடன் பார்த்த சாவித்ரி……

ஏன் மேடம்! கல்யாணம் பண்ணிக்காம நாட்டில எத்தனையோ பேர் இல்லையா? அது போல் நானும் இருக்க முடியாதா?“

ஏய் அறிவிருக்கா? உங்க அம்மாவுக்கு நீ ஒரே பொண்ணு. எந்தத் தாயும் அதை விரும்ப மாட்டாள்“.ரொம்பக் குழம்பிப்போயிருக்க……..

அப்ப எனக்கு வழி…“

நீயே சொல்லு! இவ்வளவு பேசறல்ல!“

நான் இந்த உலகுக்கு மெழுகுவத்தியா இருக்கணும்னு நெனைக்கிறேன். என்னுடைய உடல் உறுப்பு முதற்கொண்டு எல்லாத்துக்கும் பயன்படற மாதிரி வாழணும்னு நினைக்கிறேன். யோசிச்சு நாளைக்கு சொல்றேன் மேடம்.”என சொல்லிவிட்டு, கதவைத்தாண்டி ஓடிய சாவித்ரியை, எமன் தனக்குத் துணையாக இருக்கச் செய்யலாம் என நினைத்து விட்டான் போல் இருக்கிறது.

ரோடைக் கிராஸ் செய்யப் போகும்போது சாவித்ரியின் மீது மணல் ஏற்றிய லாரி நேராக மோதியது.

அடிபட்டுக்கிடந்தவளை ஹாஸ்பிடலுக்கு அள்ளிச்சென்ற பெற்றோரிடம் டாக்டர் மூளைச்சாவு என்றார். மூச்சில்லாமல் வானத்தைப் பார்த்தபடி, ஒருவர் தோளுக்கு ஒருவர் முட்டுக் கொடுத்திருந்த சாவித்ரியின் பெற்றோரைப் பிரின்சிபால் பார்த்தார்.

நான் உங்களை ஒன்று கேட்கவா?…““நீங்கதாம்மா படிக்க வச்சீங்க… எங்க கிட்ட பேசறதை விட அது உங்ககிட்ட தான் நிறைய பேசும்“.

நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னு எனக்குத் தெரியும். எம் பொண்ணு ஆசையும் தெரியும். நாலு பேருக்கு ஒளி கொடுக்கிற மெழுவத்தியா வாழணும்னு அது நினைச்சது மாதிரியே செஞ்சிடுங்க, கையெழுத்து எங்க தேவைன்னு சொல்லுங்க. அதுபடியே செஞ்சிடலாம்” எனச் சொல்லிவிட்டு தன் கணவனை அழைத்துக் கொண்டு நடந்தாள் அஞ்சலை.





அன்று ஏனோ அவள் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. காலையில் நடந்ததை நினைத்து அவள் ஒருகணம் நினைத்துப் பார்த்தாள். சூ! விட்டுத் தள்ளு! என உள்மனம் அவளுக்கு ஆணையிட்டாலும் அவள் படித்த படிப்பு அவளை நினைத்துப் பார்க்க வைத்தது. இதற்குத்தானா பிள்ளையைப் பெத்து வளர்க்கறது! என ஆழ்ந்து யோசித்தாள். டிரெயின் 8.45 மணிக்கு வந்து விடுமே! இன்று பள்ளியில் ஆண்டுவிழா வேறு! அலங்காரம் செய்ய பூக்கள் வேறு வாங்கவேண்டும்! வழக்கமா இருக்கற பூக்காரம்மாவை வேறு இன்று காணோம்! சே! ஊருக்குப் போனதே தவறு! அதனால் தான் இவ்வளவு லேட்! வந்துட்டு கோடம்பாக்கம் இறங்கி காலேஜூக்கு ஓடணும். ஆனாலும் ஆனந்திக்கு இவ்வளவு கொழுப்பு ஆகாதம்மா! நினைக்க நினைக்க தன் மகளை நினைத்து நெஞ்சம் அழுதது. ஊருக்கெல்லாம் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் பெண்ணா இப்படி என ஊர் என்னைக் கேட்டு விட்டால்!

நெஞ்சம் படித்த படிப்பை எண்ணி அழுதது. சைதாப்பேட்டைக்கு டிக்கட் வாங்கிக் கொண்டு பத்திரிகைக் கடையில் என்ன இருக்கிறது எனப் பார்த்துக் கொண்டிருந்தாள். கையில் ஏதோ கசகசவெனத் தெரிவதைக் கண்டு வேகமாகக் கையைப் பிரித்தாள். நேற்றைய டிக்கட்டைக் கிழித்துப் போடாமல் உள்ளே பேகில் வைத்திருந்தது எப்போது தன் கைக்கு மாறியது என விழித்தாள். குப்பையைக் கீழே போடும் பழக்கம் நமக்கு இல்லை! குப்பைத் தொட்டியையும் காணோம்! என்னசெய்வது எனச் சுற்று முற்றும் பார்த்தாள். குப்பை கீழே நிறையக் கிடப்பதைப் பார்த்து வேதனை அடைந்தாள். என்று தான் இந்த சமூகம் மாறுமோ! என நினைத்துக் குப்பையைப் பைக்குள்ளேயா எடுத்துப் போடமுடியும்? எடுத்துக் குப்பைத்தொட்டியில் போடலாம் என நினைத்தால் நம்மைப் பைத்தியக்காரன் என நினைக்க மாட்டார்களா? என சுமாலினி மனதிற்குள் நினைத்தபடி வேகமாக நடந்தாள். அவள் நடையே அப்படித்தான்! பலரும் அவளிடம் இது குறித்துக் கேட்டதற்கு அவளிடமிருந்து புன்னகை மட்டுமே பதிலாகக் கிடைத்தது.

தன் கால்வலியை மறைக்கக் காலாட்டியபடி கால் மேல் காலைப் போட்டு அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தாள். இலேசாகத் திரும்பியபோது சற்றே அதிர்ந்தாள். அங்கே நிசமாகவே ஒரு கால் மேலே ஏறியபடி சாக்ஸ், அங்கங்கு கடித்துக் குதறிய செருப்புடன் பரண்ட எண்ணெய் காணாத சிக்குப் பிடித்த சடைமுடியுடன் 35 வயது மதிக்கத்தக்க பெண் தனக்குத் தானே பேசியபடி குப்பையைப் பொறுக்கிப் பத்திரமாகக் குப்பைக் கூடையில் கொண்டுபோய்ப் போட்டதைப் பார்த்தாள். தனது சேலை முறுக்கிச் சாயம் போயிருப்பதும், சட்டை கிழிந்திருப்பது கூடத் தெரியாமல் உள்ளிருக்கும் பாவாடையெல்லாம் தெரிகிறது என்ற உணர்வில்லாமல் கீழே கிடக்கும் குப்பையைப் பொறுக்கித் தரையைச் சுத்தமாக்கும் வினோத பிறவியை அங்கிருந்த அனைவரும் வியப்புடன் பார்த்தனர். அங்கிருந்த டிடிஆர் இதைப் பார்த்தும் பார்க்காதவர் போல் சென்று கொண்டிருந்தார். ஹூம்! எனப் பெருமூச்சு விட்டபடி தூரத்தில் தெரிந்த மரத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். கூக்கூ வென எங்கோ ஒற்றைக் குயில் கூவுவதைக் கேட்டு முறுவலித்தாள். இந்தக் குயிலுக்கு மட்டும் இந்தக் குரலா! கடவுளிடம் ஒருநாள் கேட்க வேண்டும் என மனதிற்குள் குழந்தையைப் போல் இரகசியமாகத் தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள். சே! எத்தனை வயசானாலும் இந்தக் குழந்தை குணம் போக மாட்டேங்குதப்பா! என்றபடி அருகில் இருந்த கிட்ஸ் ஸ்கூல் விளம்பரப் பலகையைப் பார்த்தாள். அதில் ஊஞ்சல் படம் இருந்ததை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அதில் ஆடும் சிறுமியாகத் தன்னை நினைத்துக் கொண்டாளோ! என்னவோ! தெரியவில்லை. தூரத்தில் டிரெயின் வரும் சப்தம் கேட்டவுடன் எழுந்து சென்றாள்.

அருகில் ஒரு குழந்தையுடன் நின்றிருந்த பெண் உட்கார இடம் கேட்க சரி! என எழுந்து இடம் கொடுத்து நின்று கொண்டே வந்தாள் சுமாலினி. அந்த பைத்தியத்தின் காலில் இருந்த செருப்பும், தனது மகளின் செருப்பும் ஒன்றாக இருக்கிறதே! ஆனால் இவள் காலில் போட்டிருக்கிறாளே!

நாய் கடித்த செருப்பாக இருந்தால் என்ன? அவசரத்துக்குக் காலில் செருப்பை மாற்றிப்போட்டு அதை வெளிப்படையாகப் பேசும் மனிதர்களும் இருக்கிறார்களே என்பது கூட ஆனந்திக்கு ஏன் தெரியவில்லை? அடுத்தவர் பொருளைக் கேட்கிறோம் என்ற கூச்சமில்லாமல் வளர்ந்திருக்கிறாளே!

நான் வளர்த்ததில் கோளாறா! என எண்ணியபடி இருந்தபோது அருகில் ஹலோ! என்ன இந்த உலகத்தில் இல்ல போலிருக்கு! குரல் கேட்டு நிமிர்ந்தாள்.

ஆஷாவா! கவனிக்கவில்லையம்மா! சாரி! என்றாள் வேகமாக.

எனக்கெதுக்கு சாரி! எங்களுக்கு மேலே இருக்கற பாஸ் நீங்க!

அதெல்லாம் மனசளவில தான் தப்பு செஞ்சா யாராயிருந்தாலும் சாரி சொல்லணும்! உங்களக் கவனிக்கல! அதான் சாரி சொன்னேன்.

சொல்லியுமே சில பேருக்குத் தெரியமாட்டேங்குது! அது தான் வருத்தமா இருக்கு! அதெல்லாம் விடுங்க! என்னவோ பலத்த சிந்தனைல இருந்தீங்களே என்னாச்சு!

ஒண்ணுமில்ல! காலைல எங்க எல்லார் செருப்பையும் நாய் கடிச்சுடுச்சு! நான் இருக்கட்டும்னு உள்ள ஒண்ணு இருந்தது போட்டுட்டு வந்துட்டேன்! ஆனா எம்பொண்ணு வீட்டு வேலைக்கு எங்க வீட்டுல சின்னவயசுலருந்து வந்த பொண்ணு அவங்க! ரொம்ப வருஷமா இருக்காங்க அவங்ககிட்டபோய் அவங்க பொண்ணு ஃபாரின்லருந்து அவங்களுக்குன்னு ஆசையா வாங்கிட்டு வந்த செருப்பைக் கேட்டு வாங்கிப் போட்டுட்டு வர்றா! பின்னாடியே வந்தா! பிடிக்கல! அதான் விட்டுட்டு வந்துட்டேன்.

இதோ பார் மம்மி! நாய் கடிச்ச செருப்போடதான் வந்துருக்கேன்! ஆஷா ஆண்ட்டி...... அம்மா திட்டுவாங்கன்னு தெரியும்! அதான் செருப்பு புதுசு அப்பாவோட போய் வாங்கிட்டுப் பழையதையும் தூக்கிட்டு ஓடி வர்றேன். வியர்த்து வழிந்ததால் குழி விழுந்த கன்னத்தில் லேசாகக் காலையில் அப்பிய பவுடர் திட்டு திட்டாகத் துடைத்து விட்டபடி சின்ன உதடைச் சுழித்தபடி, நான் உன்னை மாதிரித் தான் மம்மி! யார் பொருளுக்கும் ஆசைப்படமாட்டேன் இனிமே! போதுமா! சாரி! சாரி! சாரி! எனச் சொல்லியவளை டிரெயின் என்பதையும் மறந்து மகளை முத்தமிட்டாள் சுமாலினி .

டேக் இட் ஈசி பாலிசி..............என எங்கோ மொபைலில் பாடுதோ! என்றாள் ஆஷா. நடந்ததை மறந்த சுமாலினி சிரித்தாள்.

































வெளிநாடு போகப் போறியா! எதுக்கு? எனக் கேட்டவனை அண்ணாந்து பார்த்தாள் நிர்மலா. அவளது பளபளப்பான உருண்டையான முகம் காலை வேளையில் அவனை ஏதோ உலகத்திற்கு அழைத்துச் செல்வது போல் தோன்றி தோளை இறுகப் பிடித்தான். அவளோ, அவனது பிடியை மறுத்து விலகிச் சிரித்தாள்.

குமார் எங்கே? அவனைப் படின்னு சொல்லி அரைமணிநேரம் ஆகுது! ஆளே காணோம்......... எங்கே இவ ஒருத்தன் டாக்டருக்குப் படின்னு சொல்லி படிக்க வச்சேன். ஆனா ....இவனோ ரிசர்ச் பண்றேன்னுட்டு .......டாக்டருக்கே படிக்க மாட்டேன்னுட்டான். சின்ன வயசுலர்ந்தே அவனுக்கு எதையாவது ஆராய்ச்சி பண்ணனும்னு ஒரே ஆசை. அதுக்கு வசதியா அவங்க மேடம் அமைஞ்சுட்டாங்க....

குமாருக்கு மலேசியால லைப்ரரில ஒரு வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு மலேசியா முருகன் கோவிலப் பாத்துட்டு வரலாம்னு ஒரு ஐடியா.

நீங்களும் வர்றீங்களா?

நோ.. ஐயம் பிஸி இன் மை பிசினஸ். இதெல்லாம் நீதான் பாத்துக்கணும்.கணவன் சம்பாதிக்கணும். மனைவி வீட்டைப் பாத்துக்கணும். குழந்தையைப் பாத்து வளக்கணும். அது தான் நல்லது. பிஸினஸ விட்டுட்டு உங்கூட வந்துட்டு..அதை வாங்கினியா! இதை வாங்கினா என்ன அப்படின்னு கேப்ப...

எந்த உலகத்துல இருக்கீங்க?

அங்க கிடைக்கற எல்லா ஐட்டம்சும் இங்கே கிடைக்குது. இதைப்போய் யாராவது சுமப்பாங்களா? தேவைக்கு அதிகமா வீட்டுல எதையும் அடைக்கக் கூடாது. அது ஒரு பெரிய வியாதியாயிடும். பாக்கறதையெல்லாம் வாங்கற சராசரிப் பொண்ணு நான் இல்லன்னு தெரிஞ்சும் என்னை இப்படி கேட்டீங்க?

எல்லாம் சும்மா ஒரு பேச்சுக்குத் தான் சொன்னேன். ஒண்ணும் தப்பில்லையே! என ஷூ லேசைக் கட்டியபடி, இந்த சாக்ஸ் ரெண்டும் பழசாயிடுச்சு! இன்னைக்கு நீ பர்சேசுக்கு எப்படியும் வெளியே போகும்போது எனக்கு வாங்கிட்டு வந்திடு!

ஆனா பணம் கொடுத்திடணும்! வீட்டு செலவு தனி! என்பணம் தனி! பிஸினஸ்மேன் கிட்ட கொடுத்தா எல்லாத்தையும் போட்டு ரோல் பண்ணுவீங்கன்னு தெரியாதா என்ன?

சிரித்துக் கொண்டே எவ்வளவும்மா! இந்தா கார்ட்ல எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கோ! ஆனா கணக்குல எழுதிடு! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சம்மா! பாத்து நடந்துக்கோ! உனக்கு ஆஃபிஸ் என்னாச்சு! நாலு நாலாச்சு! நீ சிஸ்டத்துல வேலை பாத்து..... வீட்டுல உட்கார்ந்தாலும் எதாவது செஞ்சுக்கிட்டே இருப்ப! வேணும்னா இன்னைக்கு மானேஜரைப் பாத்துக்கச் சொல்லிட்டு உங்கூட வரட்டுமா? முகத்தில் தெரிந்த வாட்டத்தை உணர்ந்து கேட்டான். ஒரு வாரம் லீவு எடுத்திருக்கேன். ஆடிட்டிங் நேரம் லீவு போடக்கூடாது தான்..... சின்ன மனசு உரசல்...சரியாயிடுச்சு....இருந்தும் எங்கே யாருக்காக இத்தனை வேலை பாக்கறமோ அவங்களுக்குப் போய்ச் சேரலை..அப்படிங்கற வருத்தத்துல தான் இப்பிடி.. ப்ச்...வெளியே போய்ட்டு வந்தா சரியாப் போய்டும்.....இல்ல ஒரு நாளும் இப்படி நீ இல்ல...

ஜஸ்ட் எல்லாமே ஒரே மாதிரி இயங்கறதில்ல இல்லையா? அப்படின்னு மேலிடத்துலருந்து ஒரு ஆறுதல். அதுல தான் லீவு எடுத்திருக்கேன்.

என்னைக்கு ஃப்ளைட்?

நாளைக்குக் காலைல போறேன். அரேஜ்மெண்ட் ஆஃபிஸ்ல ரெண்டு பேருக்கும் பண்ணிக் கொடுத்துட்டாங்க! முத முதல்ல போறேன்! அது தான் உங்க கூட போகணும்னு தோணுது!

அது தான் நம்ம பையன் வர்றான்ல!

இங்க பாருங்க! தாய் தகப்பன் உறவு பொண்ணுக்கு கடைசி வரை கிடையாது. மகன் மகள் உறவும் அப்படித்தான்!

கடைசி வரைக்கும் கூட வர்றது இந்த திருமண உறவு மட்டுந்தான். இதுல ஏன் நிறைய டைவோர்ஸ் வருதுன்னு தான் எனக்குத் தெரியல....

காரணம் நான் சொல்லட்டா....அன்னைக்கு பிரகதீசுவரர் கோவில்ல பாத்தோம் இல்லையா? கணவன் மனைவி தன்னுடைய பிரச்னையை தனிமைல உட்கார்ந்து பேசித் தீத்துக்கறதை!

ப்ச்....உஷ் அதெல்லாம் சில பேருக்குப் புரியறதில்ல....உட்கார்ந்தாலே சண்டைதான்..எதுத்த வீட்டப் பாருங்களேன். ரெண்டும் வேலைக்குப் போகுது.....ஒரே சண்டை பக்கத்துல இருக்கற கிரீன் கலர் கேட் போட்ட வீட்ல அந்த லேடி படிப்புன்னு சொல்லி ஒரு வருடந்தான் வீட்ல இருந்தாங்க..... ஆனா அது வேற ஏதோன்னு தெரிஞ்சுது...வந்து ஒன்றரை வருஷம் தான் ஆகுது... எங்கேயோ போய்ட்டு போய்ட்டு வந்தாங்க....

வேலைல அவங்க இல்லன்னதும் பக்கத்துல இருக்கற வீட்டுல கூட அவங்கள கிண்டலா சிரிக்குதுங்க. கடைசில பாத்தா அவங்க லைப்ர்ரிக்கு போய்ட்டு வர்றத ஒரு நாள் பாத்தேன். பெரிய படிப்பு எவ்வளவோ படிச்சுருக்காங்க.. இங்க வந்து ரெண்டு பேரும் இருக்காங்க! குழந்தைகளை ஊருல படிக்க வச்சுருக்காங்கன்னு சொன்னாங்க! இத்தனை வருடம் ஆகியும் அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் சாப்பிடறாங்க! பேசிக்கறாங்க! வாரம் ஒரு முறை தவறாமல் வெளியே போறாங்க! இருந்தா ரெண்டு பேர் மாதிரி வாழணும்னு குமாருக்கு நானே அட்வைஸ் செஞ்சிருக்கேன்.

அவன் என்ன சின்ன பையன் அவங்கிட்ட போய் இதெல்லாம்?

நீங்க வேற அவ இரகசியமா எங்கிட்ட என்ன கேட்டான் தெரியுமா? என்று இரகசியமாகச் சிரித்தாள்.

அவனோ, உஷ்...எனக் கை காட்டியபடி நின்ற ஃபோட்டோவை மௌனமாகப் பார்த்தான். அது தான் இறந்துடுச்சே! அப்பறம் என்ன அதைப் பத்தி சிந்தனை! பெத்தவ நானே தலை முழுகிட்டேன்.

இவனுக்கு கல்யாணம் எப்பன்னு கேக்கறான்?

நீ என்ன சொன்ன?

உன் அக்கா மாதிரி ஓடிப் போய்டாதடா! லவ்வுன்னா சும்மாடா!

நானே உனக்குப் பாத்து கல்யாணம் செஞ்சு வக்கறண்டா! அப்பிடின்னு சொன்னேன். பொண்ணு பாத்துட்டியான்னு கேக்கறான்!

எல்லாம் சினிமா பண்ற வேலை.

அவனுக்கும் வயசாகுது! ஆடி வந்தா 24 முடியுது. இப்பவே பாக்கணும்ல.

சரி! நான் கிளம்பறேன். நைட் பேசலாம்.

ஓகே!

பர்சேசுக்கு எங்கம்மா போலாம்?

நல்லி போலாம்மா! அங்க தாம்மா உனக்கு சேரீஸ் எல்லாம் எடுப்பா இருக்கும். அம்மா ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டியே!

என்னப்பா! நீ ஏம்மா வெளியில வரும்போது மட்டும் புடவை கட்டுற! வீட்லய கட்டேம்மா! உன்னை நைட்டில பாக்க எனக்கு பிடிக்கல.நைட் மட்டுந்தாம்மா நைட்டி.

உடை எங்கள் இஷ்டம். அதை நீங்க எப்படிப்பா சொல்ல முடியும்?

காலம் உங்கள மாதிரி ரொம்ப அட்வான்ஸ் இல்லம்மா! எல்லாருமே உலகத்துல இன்னமும் மாறலை.

சரி மாறிக்கிறேன். போதுமா பெரிய மனுஷா!

ஹூம்! நான் சொன்னாத் தான் கேக்குற அப்பா சொன்னா ஏம்மா கேக்க மாட்டேங்கறீங்க!

டேய்! அவரு உங்கம்மா இருக்கறப்ப......டேய்..டேய் ஏண்டா ஓடுற..

எனக்கு காது ரெண்டும் புளிச்சுப் போச்சு.....

பொம்பளைங்க கம்ப்யூட்டர் மாதிரின்னு சொன்னது சரியாப் போச்சு...

எப்பிடி.... தோ வர்றேன் பாரு....என அவனை அடிப்பது போல விளையாட்டுக்கு எழுந்தாள்.

வாசலில் ஏதோ நிழலாடுவது போலத் தெரிய சின்னஞ் சிறு சிறுமியைப் பார்த்தவுடன்,அவளுக்கு ஏதோ பழைய நினைவுகள் வந்தன.

ராகவியோட அம்மா நீங்க தானா! வாசலின் நிலைப்படிக்குக் கோலமிட்டு நிமிர்ந்த ஷண்பகத்திற்கு வெள்ளைத் தொப்பி மாட்டிய குறுந்தாடி இளைஞன் வித்யாசமாகத் தெரிந்தான். பெருமாள் கோவில் அக்ரகாரக் குடியிருப்பில் தெருவில் எத்தனையோ வேலை வெட்டி இல்லாததுகள் உக்காந்திருக்குமே! அதைத் தாண்டி எப்பிடி இங்க...என யோசித்தாள்.

நீங்க யாருன்னு...

உள்ள போய் பேசலாமா! என்றவளை இடைமறித்தாள்.

நான் அதோ பார்க்குக்கு வர்றேன். அங்க பேசலாம்.அங்க போய் இருங்க.

எனக் கூறியவளை வெறித்தான் அவன்.

பெயரைக்கூடக் கேக்கலியே! எனக்கு ஒன்றரை கழுத வயசாகுது! அந்தப்பையன் எம்பையன் மாதிரி! ஆனா, இந்த உலகத்து கண் காமாலைக் கண்ணாச்சே! எனத் திரும்பியவள் சன்னலின் ஓரம் ராகவி அந்த இளைஞனைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்

மனதிற்குள் ஆயிரம் வாட்ஸ் அடித்ததைப் போன்ற உணர்வு மண்டையில் தாக்கியது போன்ற அதிர்ச்சியுடன் ராகவி இங்க வா! எனக் கூப்பிட்டாள்.

அரைக்கால் பேண்டுடன் லூசாகப் போட்ட பனியனை இழுத்துக் கொண்டே காதில் போட்டிருந்த வளையம் ஆட இளமைத் துள்ளலுடன் ஓடி வந்தாள்.

அவன் யாரு ராகவி? எங்கூடப் பேசணுன்னு சொல்றான்!

அவன் பேரு அப்துல். நாங்க ரெண்டு பேரும் நிக்காஹ் செஞ்சுக்கறதா முடிவு செஞ்சுருக்கோம்.

நிக்காஹ்ஹா .........அதிர்ந்தாள் ஷண்பகம்.

அப்படின்னா முடிவு செஞ்சுட்டீங்க! உனக்கு இன்னும் அந்த வயசு வரல.

அதான் உங்களக் கேட்டு செய்யலாம்னு வந்துருக்கார்!

ஒன்றும் பேசவில்லை ஷண்பகம். இதயத்தில் ஒருமுறை தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட பாசத் துகளை கஷ்டப்பட்டு விழுங்கிக் கொண்டு அப்பா உனக்குப் பிடிக்கும்னு லட்டும், ஜிஆர்டியில் ஜிமிக்கியும் வாங்கப் போயிருக்கார்மா! என்றாள் மெதுவாக.

இல்லம்மா! அவனை எனக்குப் பிடிச்சுருக்கு!

எனக்குப் பிடிக்கலம்மா! அவனைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டேன். ஒரு வாரமா உன்னை நான் பாத்துக்குட்டே தான் இருக்கேன்.

என்ன நீங்க இன்னும் போகலையா!

இல்ல! கார்சாவி என்னிடம் மாட்டிக்குச்சு! கொடுத்துட்டுப் போலாம்னு வந்தேன். அதுக்குள்ள இவ இப்படி.........ஏற்கனவே பொண்ணப் பெத்தவன் எப்படி இருக்கணும்னு எனக்குத் தெரியும். அவன் சரியில்லம்மா! வேண்டாம்! விட்டுடு! உன்னை வித்துடுவா! ஸ்மகிள் பண்ற கூட்டத்துல கூலி வேல செய்யறாம்மா! வண்டியப் பாத்து மயங்கினியா? இல்ல அவன் அடிச்சிட்டிருக்கற பர்ஃப்யூமுக்கு மயங்கினியா?

என்னப்பா! காதல்னா என்னன்னே தெரியாத உங்ககிட்டப் போய் இதெல்லாம்!

குட்டிம்மா! உனக்கு கவுன் மாட்டி விட்டதுலருந்து பேண்ட் போடச் சொல்லிக் கொடுத்தவன் நானு! எனக்குத் தெரியும் எம் பொண்ணு எப்படின்னு?

அவங்கூட போறதுன்னா கிளம்பு! உள்ளே போறதுன்னா இரு.

கொஞ்சம்கூட யோசிக்காமல் ஸீ யூம்மா! பை..பை எனச் சென்றவளை ஷண்பகம் கண்ணில் நீர் கோர்க்கப் பார்த்தபடி தலைகுனிந்தாள்.

சடாரென நிகழ் உலகிற்குத் திரும்பியவள் இது என்ன! அதிசயித்தாள்.

கையில் பெரிய ஷாப்பிங் பை நிறைய நிறைய பொம்மைகள்.

யாரும்மா நீ?

நான் உங்க பக்கத்து வீட்டுப் பாட்டியோட தினேஷ் கூடப் படிக்கற பொண்ணு! எம் பேரு அஜிதா!

இன்னிக்கு எங்க ஸ்கூல் திடீர்னு லீவு! அப்பா ஆஃபிஸிருந்து வர லேட்டாகும். அதான் தினேஷ் என் வீட்டுக்கு வான்னு கூப்புட்டான்.

உள்ளே வான்னே கூப்புட மாட்டேளா!

இதென்ன இந்தப் பெண் நம்ம அக்ரகாரத்து பாஷை பேசறது என அதிசயித்தாள்.

வாம்மா குழந்தை! உனக்கில்லாத ரூமா?

பிஸ்கட் சாப்பிடறயா! கிட்டத் தட்ட ராகவியின் சாயலாகத் தெரிவதைப் போல் அவள் கண்ணுக்குத் தோன்றியது.

கண்ணை ஒரு கணம் தேய்த்து விட்டுக் கொண்டாள். கொடுத்த பிஸ்கட்டைப் பிளந்து நாக்கால் ஒரு சுழட்டி ஒரு விரலால் சாப்பிடுவது ராகவியின் குணம். இந்தக் குழந்தைக்கு எப்படி? வியந்தாள் ஷண்பகம்.

சந்தேகப்பட்டு ராகவியின் ஃபோட்டோ ஒன்றைப் பரணிலிருந்து வேகமாக எடுத்தாள். அஜிதாவிடம் வேகமாக அதைக் காட்டினாள்.

சீ! இந்தப் பொம்பளையா! இவ எங்கே இங்கே பாட்டி?

கண்ணில் நீர் வழிய ஷண்பகம் இது யாரும்மா? என்றாள்.

அவ என்னைப் பெத்துட்டுக் குப்பைத் தொட்டில போட்டுட்டு எங்கேயோ போய்ட்டாளாம்.

நான் அனாதை ஆஸ்ரமத்துல அப்பாட்ட வளந்தேன். அங்க இருக்கற எல்லாருக்கும் ஒரே அப்பா தான். அவரு ஒரு வேலையா ஆஸ்பத்திரிக்கு போயிருக்கார்.

வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருக்கார். ஆனா தினேஷைக் காணோம்.

வாசலில் நீளமான வெள்ளை அங்கியுடன் கையில் கனத்த புத்தகத்துடன் வந்தவரை ஏறிட்டுப் பார்த்தாள் ஷண்பகம்.

உங்களுக்கு இப்போ எல்லாம் புரிஞ்சிடுச்சாம்மா!

கண்ணில் நீர் வழிய எம் பொண்ணு எங்கே? இவ ஏன் அப்படிப் பேசுறா?

இவ கூட இருந்த ஆயாம்மா இவளுக்கு இப்படி சொல்லியிருக்காங்க....

எம் பொண்ணப்பத்தி எப்படித் தப்பாப் பேசுறா?

எயிட்ஸ் பாதிச்சவளோட பொண்ணுன்னு தெரிஞ்சா யாருமே இவளைச் சேத்துக்க மாட்டாங்களே! அதான்......

வெளியில் பொம்மையுடன் வெளியே நின்றிருந்த அஜிதாவைப் பார்த்தபடி பேசினார்.

அன்னைக்கு கிளம்பிப் போனப்ப தடுத்திருக்கணும்? நீங்க விட்டுட்டீங்க?

இப்ப உங்க பொண்ணு சாகக்கிடக்குறா! உங்களப் பாக்கணும்னு! வர்றீங்களா? இப்பவும் உங்க கணவர்கிட்ட கேட்டுத்தான் செய்வீங்களா?

பெரிய பிஸினஸ் மேக்னட்டாச்சே! உங்க கௌரவம் காத்துல பறந்துடுமே!

வீட்டைப் பூட்டிக் கொண்டு காரில் குமார் உள்பட அனைவரையும் உள்ளிழுத்துக் கொண்டு எந்த ஹாஸ்பிடல்? என்றாள் நர்மதா .

வேகமாகப் போங்க! இன்னமும் அரை மணி நேரம் தான் இருப்பாள்.

பெத்தவள் நான் இங்கிருக்க மகளைக் கடவுள் கூட்டிச் செல்லப் போகிறானா?

கண்ணில் நீர் நிறைந்திருக்க, அம்மாவைப் பார்த்த குமார், அம்மா விலகிக்க. நான் ஓட்டுறேன். அம்மா அப்பா எதுத்தாப்பல வர்றாரும்மா!

அப்பா மௌனமாக ஃபாதரைப் பார்க்க, நான் தான் உங்களுக்கும் சொல்லி அனுப்பிச்சேன். உங்க பொண்ணு பாக்க ஆசைப்பட்டா!

வண்டிக்குள் மௌனமாக ஏறி அமர்ந்தார்.

குமார் மடியில் அஜிதாவை உட்கார வைத்திருந்தான். அவள் முன்னிருந்த பட்டனைத் தட்டியவுடன் ராகவி பாடி பதிந்திருந்த குறையொன்றுமில்லை பாட்டு பாடத் தொடங்கியது.

பாட்டு முடிவதற்கும், ஹாஸ்பிடல் வருவதற்கும் சரியாக இருந்தது. இறங்கியவுடன் நர்ஸ் ஷண்பகத்திற்கு வழி காட்ட ஃபாதர் அஜிதா இங்கே வா! என்றார்.

அந்த இரண்டாவது ரூம் போய்ப் பாருங்கள்.

உள்ளே செல்ல 3 ஜோடி கால்கள் வேகமாக இயங்க ஆரம்பித்தன.

கட்டிலில் உடலோடு போர்த்திய வெள்ளைப் போர்வைக்குள் தெரிந்த ராகவி அறுபது வயதாகத் தெரிந்தாள்.

அப்பா! அம்மா! என்னை மன்னிச்சுடுங்க! என கையைக் கூப்பியபடி கண் அஜிதாவின் ஃபோட்டோவைப் பார்க்க வாய் கோணித் தலை சாய்ந்தவளின் அருகில் நர்ஸ் சென்றாள். அதற்குள் உயிர் யாரைத் தேடிச் சென்றதோ! வெளியில் ரோஜாப்பூக்களைப் பறித்து பொம்மையின் தலையில் வைத்துக் கொண்டிருந்த அஜிதாவின் அருகில் சென்ற ஷண்பகம், உன் அம்மா தூங்கறாங்க! அம்மா நல்ல அம்மா தான் உனக்கு யாரோ தப்பா சொல்லியிருக்காங்க! நீ அவங்கள பிடிச்சுக்கறியா? தூங்கறாங்கல்ல! பாட்டி அவங்களுக்கு டிரஸ் உடுத்திக் கூட்டிட்டுப் போகணும்.

எங்க பாட்டி! கண்ணில் வழிந்த நீரை வெளிக்காட்டாதபடி சாமி கிட்டம்மா! என்றாள்.

ரொம்ப நாளா உங்கம்மா சாமி கதைன்னா எனக்கு ரொம்பப் புடிக்கும்னு சொல்வா! சாமிகிட்டக்க அவ எல்லாரும் இருந்துட்டா என்னன்னு கேப்பா! அதாம்மா அவ ஆசைப்படி சாமிகிட்ட கூட்டிட்டுப் போறேன் என்றாள்.























எனக்கு ஒரு டேப்லட் வாங்கிக் கொடும்மா...........

மெடிகல் ஷாப் பக்கத்துல இருக்கு!டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் இருக்கு. போய் வாங்கிக்கோ! சொன்னாள் தங்கைஹரிதா.

ஹய்யோ! ஹய்யோ! சின்ன குழந்தையைப்போல தரையைக் கோபத்துடன் உதைத்த 28 வயது ரவியை வினோதமாகப் பார்த்தார் 70 வயது அப்பா சண்முகம்.

இன்னைக்கு பஸ்சுல பாத்தேன். எல்லாரும் காதுல மாட்டிண்டு பாட்டு கேக்கறத....உங்களுக்குப் பிடிக்கல.... நீங்க மாட்டிக்கல...நான் ஏன் வாங்கக்கூடாது.?....

பஸ் டிராவலிங்குக்குத்தான். அதுல சமைக்கமுடியாது....அன்னைக்கு வேகமா வந்து சொன்னியே.......பஸ்சுல கூட்டமா இருக்கறப்ப ஒருபொண்ணு கைல லேசா வளையல் உராய்ஞ்சதுக்கு இல்லாத ஒரு பொண்ணு உங்கிட்ட இருக்கறதுன்னு போட்டுட்டு வந்துட்டியான்னு கேட்டப்ப நீ என்ன சொன்னே! ஞாபகப்படுத்தி பாத்துக்கோ..சொன்ன தங்கையை ஒரு முறை முறைத்தான்.

நான் படிச்ச புஸ்தகத்தை அப்படியே மறுவருஷம் வாங்கிப் படிச்ச பழைய புக் நீ...எனக்கு நீ அட்வைஸ் பண்றியா.?............அதுதான் உனக்கு எதுவுமே சொல்லித்தரமாட்டேன். எனக்கு வேணுங்கற பேனா,பென்சில் எடுத்துவைக்கற ஜாதி நீ! உனக்கு வாய் வேறயா!

ஆமா.....மாறிப்போன புக்கை மறு வருஷம் வச்சு படி ஜெராக்ஸ் எடுத்துக்கோன்னு சொன்ன கிரிமினல் மைண்ட்னு எனக்குத் தெரியாதா....ஹேண்டிகேப் பர்சன்கூட வண்டில பினாயில்,ஆசிட் விக்கறான்னு சொல்லிட்டு....இப்ப என்னடா கேக்கற..........நான் வச்சிருக்கேன்னா அது எஜூகேஷன் பர்ப்பசுக்காக புரிஞ்சுதா..........!

அப்பாவுக்கு செலவு வைக்கக்கூடாதுன்னுதான் நீ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டி வாங்கிப் படிச்சேன். உனக்காக இல்ல.........இப்ப நான் உன்னைவிட அதிகமா சம்பாதிக்கிறேன்னு பொறாமைல பேசாதடா...........எனக்கூறியபடி குளிக்க துண்டு,சேலை இவற்றுடன் சென்ற மகளைப் பெருமை பொங்க அப்பா பார்த்தார்.

அதுக்காக பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்,...ஆம்பளைன்னா கொஞ்சம் ஒசத்திதான்....புரிஞ்சுக்கோ..........என் டிகிரி என்ன! படிப்பு என்ன! போயும் போயும் சமைக்கற உங்கிட்ட அட்வைஸ் கேக்கணும்னு எனக்கு தலையெழுத்து...........கத்தினான் ரவி.

சுரீரென என்னவோ கடித்தாற்போல இருந்தது. காலையிலேயே ஆரம்பிச்சாச்சா! அவளுக்கு சமைக்கவும் தெரியும்...சம்பாதிக்கவும் தெரியும்.......... ஆனா உனக்கு சுடுதண்ணியாவது வைக்கத் தெரியுமா..................? நெட்டுல படிச்சுக் காட்டுனேனே! ஆப்ரிக்கப்பெண் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கான்னு.......இன்னமும் மதரீதியா உன்ன மாதிரி படிச்ச முட்டாள் இருக்கறதாலதான் பெண் இன்னமும் என்னைமாதிரி உங்கிட்ட லோல்படவேண்டியிருக்கு! என டங்கென்று தரையில் பாத்திரத்தை வைத்தாள். அம்மாவின் வெந்நீர் பாத்திரம் சிதறி வெந்நீர் கையில் விழுந்தது. அம்மா வேண்டுமென்றே கொட்டும் ஆளில்லை. அதனால் பர்னால் தடவ டிராயரைத் திறந்தான். கடவுள் கெட்ட செயல் செய்யும்போது உடனே தண்டிப்பார் என்பார்களே! அதுபோலவா இதுவும்......என யோசித்துக்கொண்டிருக்கும்போது ஹரிதாவின் பேங்க்பாஸ்புக்கும்,கூடவே அவள் பையில் வைத்திருக்கும் பர்சும் கீழே விழுந்தது.

உடல்உறுப்புதானம் செய்வதற்கான அடையாள அட்டையுடன் அவன் பெயரிட்ட பேங்க் பாஸ்புத்தகத்தை வேகமாகப் புரட்டிப் பார்த்தான். இருந்த தொகையைப் பார்த்தவுடன் அவனுக்கு மயக்கமே வந்தது. தனது ஒரு மாத உழைப்பில் அரை பங்கு முழுவதும் அதில் மாதாமாதம் இருப்பதைக்கண்டு மிரண்டான்.

மிகவும் மெல்லியகுரலில் அப்பா............ என்றான்.

என்னப்பா! எல்லாத்தையும் பாத்தாச்சா!..........

பாத்துட்டேன். எதுக்கு அவ எம்பேர்ல பணத்தை போட்டுவைக்கிறா......

உனக்கு படிக்க விருப்பமில்லன்னுதான்.. டிகிரி சேர சேரத்தான் இன்னைக்கு சேலரி மார்க்கெட் கூடுது, ப்ளஸ் எக்ஸ்பீரியன்சும் வேணும். ஆனா நீ சம்பாதிக்க ஆரம்பிச்சதும் காலைல எழுந்துக்கறதும் லேட், படிக்கற காலத்துலயும் அப்படித்தான். ஆனா அவ நேரத்துல படு ஷார்ப். கிடைச்சா ஒரு மணிநேரத்துல என்ன டிஷ் கத்தக்கலாம்னும், என்ன படிக்கலாம்னு திங்க் செய்ற ரகம். அவ சின்னவயசுலருந்தே அப்படித்தான். சினிமாவ வேணும்னாலும் கேட்டுப்பார். ரோஜாபடக் குழிப்பணியாரம் முதல் விஐபி படம்வரை சொல்வா.. தப்பு யார் செஞ்சாலும் கேப்பா! கால்மேல காலுபோட்டு படுத்தாகூட அவளைத் திட்டுவேன்! டிரெஸ் ஒழுங்கா போடலன்னா திட்டுவேன். பாத்தியா...பாத்ரூம்போகும்போது அத்தனை துணியை அள்ளிட்டு போறதை....காரணம் என்ன தெரியுமா? அவ வெளில வேலைக்கு நாலு இடத்துக்குப்போறா...எங்க எப்பிடி இருக்குமோ?அதனால தான் இந்த கட்டுப்பாடு. ஆனா இதேபாரு...உன் அண்ணன் புள்ளையை என்னால சொல்ல முடியாது.ஏன் தெரியுமா? அது தகப்பன் அவன். அவந்தான் சொல்லணும். எம்புள்ளையை நாலுபேர் தப்பா பேசக்கூடாதுன்னுதான் வளத்தேன். அதுக்காக பொக்கிஷத்தை வீட்ல பூட்டமுடியாதப்பா! எதுக்குத் தெரியுமா! அவ சமுதாயத்துல மேல போறதுக்கு..... பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்னு முத்திரை. அதை அவ்வளவு சுலபத்துல எடுக்க முடியாது. அதனால தான் அப்பிடின்னு சொல்லுவேன்..அதை சிரிச்சுக்கிட்டே சமாளிச்சுடுவா..ஆனா மாத்திக்கலை.....ஏன்னு ஒரு நாள் அவ ஃப்ரெண்ட்கிட்ட பேசுனப்பதான் கண்டுபிடிச்சேன். அன்னைக்கு உனக்கு ஒரு பொண்ணுபாத்து முடிஞ்ச ஸ்டேஜ்ல வேண்டாம்னு சொன்னியே...ஞாபகம் இருக்கா...அன்னைக்கு கீழே விழுந்திருக்கா...அன்னைக்கு நீ தந்த வலி எல்லாத்துக்கும் மனசுலதான். ஆனா அவ உடம்புலபட்டதுனாலதான் அவ இன்னைக்குவரைக்கும் கால்மேலே கால் போட்டுட்டு இருக்கா... வலி தெரியக்கூடாதுன்னு...லைட்டான்னு சொன்னதுனால ஓட்றா.....தெரிஞ்சமாதிரி காட்டிக்காதே..சரியா............நீ செஞ்ச தப்பு பின்னாடி உன்னை பாதிக்கக்கூடாதுன்னு கோவிலுக்குப்போய் பணத்தைப் போட்டிருக்கா. ஆனாலும் இன்னமும் பயப்படுறா.....நீ செஞ்சதுக்கு.............இப்ப வெளிலமாதிரி பாத்ரூம்லய பக்கத்துல டிரெஸ்சிங் செஞ்சு தர்ற வசதியெல்லாம் அப்பாட்ட இல்லப்பா......அது அவளுக்குத் தெரியும். இருக்கற இடத்துக்குத் தகுந்தமாதிரி மாறிப்பா..அதுதான் அவகிட்ட ரொம்ப பிடிச்சது......ஆனா நான் அப்படியே சிக்கனமா வேலை செஞ்சுக்கிட்டே இருக்கேன்னுதாம்பா ஒரே வருத்தம். அதுதான் ரிடையராயிட்டேன். சந்தோஷமா அம்மா கொடுக்கற வீட்டுவேல செஞ்சுட்டு சாப்பிடுறேன். ரேஷன் அரிசிலதாம்பா டிஃபன். நீ வேண்டாம்னுட்டு போய்டுவே. அவ அம்மா கொடுத்தான்னா எதைக்கொடுத்தாலும் சாப்பிடுவாப்பா...........நீ பிறந்ததுக்குப் பிறகுதாம்பா இந்த வீடு எல்லாம்....சிக்கனமா இரப்பா.. அதைத்தான் அவ சொல்றா..... அதுக்காக இந்த வசதியெல்லாம் வேண்டாம்னு சொல்லலை. இந்தவசதி விலை கம்மின்னா அதை வாங்கிக்கோ..கண்ணுக்கு,காதுக்கு எது தேவையோ அதை மட்டும் வச்சுக்கோ சரியா...! அம்மா வீட்டுக்கு வெள்ளையடிக்க ஆள்பாக்கணும்னு சொன்னா....ஆளே வரமாட்டேங்கறா..அதான் சாமான் வாங்கிட்டுவந்தா நானே அடிச்சுடுவேன். எதுக்குப்பா சுண்ணாம்பு.?.உங்களுக்கும் சேத்துத்தான் டேப்லட் கேட்டேன்.......இழுத்தான் ரவி. பெயிண்ட் அடிக்கலாம்ல.....

நீ வேற என்கிட்ட இருக்கற பணத்துக்கு தகுந்தமாதிரித்தான் வாழணும்..நீ சம்பாதிக்கற காசுல சேத்து வைக்கமாட்டேன்னுதான் ஏடிஎம்கார்டுகூட என்கிட்ட இருக்கு........புரிஞ்சுதா......அவளைத் திட்டாதே.. ஒரு அலையன்ஸ் வந்திருக்கு.. ஏற்கனவே 10 வருஷத்துக்கு முன்னாடியே வந்தப்பல்லாம் பண்ணிக்கமாட்டேன்னுட்டா.. தன் கால்ல நின்னப்புறம்தான்னு. அப்படியே என்னைமாதிரி.....அவ என் பக்கத்துலயே இருக்கறமாதிரி ஒரு ஃப்ளாட் வாங்கியிருக்கா தெரியுமா! நேத்துதான் ரிஜிஸ்டர் செஞ்சேன். அவ டேஸ்டுக்குத் தகுந்தமாதிரி கூடத்துல ஊஞ்சல்......கொஞ்சம் வெளில இடம். செடி போடத்தான். ஒரு கார் வாங்க இடம். அவ்வளவுதாம்பா..வர்றியா....! பாக்க போலாமா......உங்காசுல இன்னமும் சேரலன்னுதான் உனக்கு பணம் சேக்கறா... துணில காசைக் கொட்டமாட்டான்னு உனக்குத் தெரியாதா? எந்த இடத்துக்கு எது தேவையோ அதை வாங்கிப்பா............

என்னப்பா இவ்வளவு சந்தோஷமா சொல்ல வேண்டியதை மெதுவா சொல்றீங்க...?

அவளுக்கு அது பிடிக்காதுப்பா...அதான் சொல்லலை. பப்ளிசிட்டி பிடிக்காது அவளுக்கு...வேலை பாக்கற இடத்துலயும் நல்ல பேர். அதான் அவங்க சொல்லிக்கொடுத்து இவ்வளவு முன்னுக்கு வந்துருக்கா......

உனக்கும் சேத்துதாண்டா பொண்ணுபாத்து வச்சுருக்கு.....பழையபடி அங்கலாவண்யம் பேசாதே......அழகு கூட வராது....பேசியபடி தலையில் முண்டாசு கட்டியபடி வந்த தங்கையை உற்றுப்பார்த்தான். நதியில் விளையாடி................ என அம்மா பாசமலர் பாடல் பாடிக்காட்ட அப்பா சிரித்தார்.தலைக்குச் சாம்பிராணி போட்டு தலையைத் தட்டிவிடட்டுமா என வாய் வரை வந்த கேள்வியை அப்பா மென்றுவிழுங்கினார். !......இவள் நாளை வேறு வீட்டிற்குச் செல்லவேண்டிய குத்துவிளக்கு.......சுவரில் வாத்துடன் பெண்ணைச் சேர்த்து அவள் வரைந்த படத்தினைப் பார்த்தபடி நின்றார். வெளியில் பாரிஜாதமரம் அருகில் உள்ள செம்பருத்திச் செடிக்குத் தனது பூக்களை வாரிக்கொட்டிக்கொண்டிருந்தது.

சன்னலோரத்து ரோஜா தலையை ஆட்டியபடி, கண்ணாடிக் கதவைத் தன் இதழ்வாயால் முத்தமிட்டுத் திறக்க முயற்சித்தபடி இருந்ததைக்கண்ட சிவா, “அப்பா! சூரியவெளிச்சம் செடிக்குத் தேவை தானே! ஏன் கதவைச் சாத்தியிருக்கு? எனக் கேட்க,

ஓவரா வெயில்பட்டா செடி வாடிப் போயிடும்பா, அந்த வெள்ளை ரோஜாவைப் பாத்தியா, ஓரத்தில பிங்க் நிறம் வச்சமாதிரி அதுக்கு பார்டர் வேற,  ஏம்பா நீதான் கதை எழுதறேன்னு உக்காண்டுருக்கியே, எழுந்து தண்ணீ ஊத்தறது, கதவைத் திறந்து வைக்கறது, ஏதோ சாஃப்ட்வேர் கம்பெனில வேலைல இருக்கோம்னு பொழுதன்னிக்கும் சிஸ்டத்தோட மல்லடிச்சிண்டு இருக்க, நீ காதுல பாட்டுக் கேட்க வயர் வயரா போட்டுக்கற,! ஆனா வாட்ச் கூட கட்டறதுல்ல. கேட்டா டிஸ்டர்ப்புங்கற.  ஏதோ இப்பதான் கொஞ்சம் நான் சொல்றேன்னு உனக்குப் பிடிச்ச லைனுக்கு வந்துண்டிருக்க…….. 

அப்பா இந்தக்காலத்து இளைஞர்களைப் பத்தி நீங்க இன்னும் புரிஞ்சுக்கலப்பா,     என்ன புரிஞ்சுக்கல? அதோ பாருங்க பஸ் போயிண்டிருக்கு, ரோடு ஃபுல்லா தூசி பறக்குது, ரோடு போடறதா சொல்லி நாலு மாசம் ஆகுது. அங்கங்க பள்ளம், இன்னமும் யாரும் அதைச் சரி செஞ்சமாதிரி தெரியல. பக்கத்துல டாஸ்மாக், விழுந்தான்னா அவன் வீட்டு கதி,   மழைக்காலமும் நெருங்கிடுச்சு, பக்கத்தாத்து சமையல்வேலை செய்யற மாமி பையன் இப்பத்தாம்பா வந்து சொல்லிட்டுப்போனான். அவன் இன்னும் ஸ்கூல் ஃபீஸ் கட்டலையாம்

உனக்கென்ன அதைப்பத்தி, நீ தான் ஃபாரின் போய் கை நிறைய சம்பாதிக்கப் போற, அப்புறம் என்ன உனக்கு அதைப்பத்தியெல்லாம் என்ன கவலை? படிச்ச படிச்சதுக்குத் தகுந்த  வேலை கிடைச்சுது. ஃபாரின் சான்ஸ் வந்தா கிளம்பு. அதானே இந்தக் காலத்துப் பசங்களுக்கு கார்ல போகணும். வேணுங்கறத வாங்கணும், நிக்க ஒரு இடம், படுக்க ஒரு இடம், உட்கார ஒரு இடம், உலகம் ஃபுல்லா சுத்தி வரணும். சனி, ஞாயிறுன்னா ஃப்ரெண்ட்ஸ் இதானே உங்க எய்ம்

நிறையபேர் அப்படித்தாம்பா நினைச்சுண்டிருக்கா. நான் என்ன சொல்ல வர்றேன்னா. நம்ம அப்புறமா பேசலாம், ”வா! கோயிலுக்குப் போகலாம்.சரி அப்படியே அம்மா படத்துக்கு அந்த ரோஜாவைப் பறிச்சு வச்சுட்டு வாப்பா. அப்பா உங்களை நான் ஒரு கேள்வி கேக்கட்டுமா

ஏம்பா! நீங்க அம்மா இறந்ததுக்கப்புறம் இரண்டாம் கல்யாணம் செஞ்சுக்கலை. மௌனமாக சுவரில் தொங்கியிருந்த தன் மனைவியின் படத்திலிருந்த கண்களை உற்றுநோக்கினார் அரவிந்த்

பூமியில பிறந்த மனிதர்கள் எல்லாம் அவங்க குழந்தைகள்னு நினைச்சுத்தாம்பா கடவுள் படைச்சாரு. நாம நம்ம கல்வி கத்துக்கறது, நம்ம பேரண்ட்ஸ், நமக்கு வழி காட்டின பெரியவங்க இவங்கள முன்னுதாரணமா வச்சுத்தாம்பா வாழறோம், என்னைப் பொறுத்தவரைக்கும் அப்பா, அம்மா, நமக்குக் கிடைத்த லைஃப் பார்ட்னர் எல்லாமே ஒரே ஒருத்தர் தாம்பா, பிடிச்சா வேற சட்டைய மாத்தியோ, வெரைட்டி ஃபுட் சாப்புடற மாதிரியோ இஷ்டத்துக்கும் இந்த உறவு முறையை மாத்திக்க முடியாதுப்பா

வாழ்க்கைன்னா நெளிவு சுளிவுன்னு இருக்கத்தான் செய்யும். அதுக்காக இஷ்டத்துக்கு வாழறது இல்லை வாழ்க்கை. இதாம்பா நா உங்கம்மாவோட வாழ்ந்த வாழ்க்கையில அனுபவிச்சு தெரிஞசுக்கிட்டது. அதுக்காக நம்ம வசதியான லைஃபை நாம தொலைக்கணுமா? பழகிய குரல் கேட்டு நிமிர்ந்தார் அரவிந்த். அப்துல்லா வாடா எப்ப வந்தே? ஆச்சு சன்னலோரத்து ரோஜாவுல ஆரம்பிச்சப்பவே வந்துட்டேன்.

ஏண்டா வந்தவுடனே உள்ள வர்றதுக்கு என்னடா, வாசப்படியிலேயே நின்னுண்ட, அப்பாவுக்கும் பையனுக்கும் நடுவுல நான் யார். நான் கேக்க நினைச்சு மௌனமாகிப் போனதை உம் பையன் கேக்கறானே? நீ என்ன சொல்றன்னு பார்ப்போம்னு தான் வெயிட்  பண்ணினேன்.என்றார் அப்துல்லா.

ஆமா என்ன கேட்ட, மனைவி இல்லாம இருக்கறத சொல்றியா, இதோ இந்த படம் வெறும் உயிரற்ற ஜடமா வேணும்னா பாக்கறவங்க கண்ணுக்குத் தெரியலாம்,ஆனா  சில உறவுகளைப் பற்றி வெளியே பேசலாம்.ஆனா தாம்பத்ய துணை அப்படியில்லைன்னு நினைக்கிறேன், மௌனமானார் அரவிந்த்

பதில ரொம்ப கரெக்டா சொல்லிட்ட என்றார் மேரி கொண்டுவந்த காப்பியை உறிஞ்சியபடி. அவிக எப்பயுமே இப்பிடித்தான், நானும் இந்தப் பையன் மூணு வயசு இருக்கறப்பதான் இங்கு தோட்ட வேலைக்கு வந்தேன், உங்கப்பா தான் வீட்டு வேலை அத்தனையும், இதோ தம்பிக்கும் கல்யாண வயசு வந்தாச்சு

மேரி பாட்டி, சும்மா கல்யாணம்னு இப்பவே பேசாதீங்கோ, எனக்குன்னு இன்னமும் சில கடமைகள் இருக்கு, என்ன செய்யப் போற? நான் இங்க வந்ததே அதுக்குத்தான், நல்ல அலயன்ஸ் ஒண்ணு வந்துருக்கு, உனக்கேத்த நல்ல குணம். உன் படிப்பு, அழகு, உன் கொள்கை எல்லாத்துக்கும் பொருத்தமா இருக்கும்னு எடுத்துட்டு வந்துருக்கேன். சாதகத்தோட முடிச்சிட்டு ஸ்டேட்ஸ்க்குப் போயிடு“ என்றார் அப்துல்லா.

அங்கிள் நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க, சாதகம் அது இதுன்னு, செல்ஃபோனில் ஒலித்த குறையொன்றுமில்லை, பாடலை நிதானமாக இரசித்த சிவா, ஹலோ என்றான். கிடைச்சா வாங்கிடு, உன் ஹஸ்பெண்ட் என்ன சொல்றார்

நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா, என் கொள்கையும், உன் கொள்கையுமே என்னைக்குமே ஒண்ணு தான் நிவி. இசைக்க மறந்த வீணையாய் பெட்டிக்குள்ள இருக்கறத நான் விரும்பல நிவி. ரி அப்புறம் பேசறேன். அங்கிள் வந்திருக்கார் பேசுறியா, சரி வைக்கிறேன், என் ஃப்ரெண்டுப்பா, உங்களுக்கும் தெரியும். நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருந்தாளே நிவின்னு. அவதான் பண்ணா, அப்பறமா சொல்றன்பா அதப்பத்தி

அவளா, சரிப்பா, சரி எங்க விட்டோம், முடிவா என்ன சொல்ற, அப்பா 5 ரூபாய்க்கு ஷேர் ஆட்டோவுல டிராவல் பண்ணா தஞ்சாவூர்ல டிக்கட் தர்றவனுக்கும், சென்னைல கடைல குடை வாங்கினாகூட பில் தராம இருக்கறவன் மனசும் வேறயா இருக்கறதுப்பா.இடமும் வேறயா இருக்கறதுப்பா. மனசு அது போலத்தாம்பா சில நேரங்கள்ல ரொம்ப கனமாயிடுதுப்பாபச்சை சாயத்துல தோச்செடுத்த வெள்ளை ரோஜா மாதிரி, இன்னைக்கு நாங்களும் தப்பா உங்க பார்வைல நிக்கறோம், நீங்க பணத்தை பிள்ளைங்க கிட்ட எதிர்பார்க்கறதில்ல, உங்க சொந்தம், உங்க ஊர்,பெருமையா பிள்ளை ஸ்டேட்ஸ்ல இருக்கான், அப்படின்னு சொல்லிக்க மட்டும்தான் நினைக்கிறீங்க, சோஷியல் சர்வீசும் செய்யறீங்க

சில பேர் இருக்காங்கப்பா, கஷ்டப்பட்டுட்டேதாம்பா இருப்பாங்க, கடைசிவரை பிள்ளைங்க பணத்தை எடுக்கக்கூடாதுன்னு. அவங்க ஐடியா என்னன்னே தெரியலப்பா, வெளிநாட்டுக்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கறதுன்னு போறோம். விவேகானந்தரையும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” புறநானூறையும் நினைச்சுத்தாம்பா வாழணும்னு நினைக்கிறோம். அதுக்காக குடும்ப ஸ்டைல மாத்திக்க மாட்டோம். இப்படித்தான் சொல்லுவீங்க, அப்பறம் உலக அழகி மாதிரி வேணும்பீங்க. சிரித்தார் அப்துல்லா. நோ நோ  இட்ஸ் இம்பாஸிபிள், .உங்க லைஃப் ஸ்டைல்தாம்பா கரெக்ட். உலகெங்கும் இந்த லைஃப் ஸ்டைல் வரக்கூடாதா? அப்படின்னு நாங்க நினைக்காத நாளில்லை

இதெல்லாம் இந்தக்காலத்துக்கு சரிப்படுமா, தம்பி ” என்றாள் மேரி. ஏன் சரிப்படாது பாட்டி? எங்களால் முடிஞ்சவரைக்கும் செய்யறோம். அங்கங்க சாஃப்ட்வேர் இன்ஜினியர்ஸ் நாங்கள்லாம் இடம் வாங்கறோம்னு சொல்றீங்கள்ல. நீங்க உங்க அளவுல சோஷியல் சர்வீஸ் செய்யறத நாங்க உலகளவுல செய்யத்தான் பாடுபடறோம். இவ்வளவு செஞ்சும் அங்க பாருங்க, நாய்க்குப் பிஸ்கட் வாங்கிப் போடும் அந்தப் பிச்சைக்காரப்பாட்டியை

மாமரத்தில் ஒற்றைக்குயிலொன்று சடசடவென்று கூட்டமாகப் பறக்கும் வெள்ளைப்புறாக்களைத் துரத்தியதைக் கண்கொட்டாமல் பார்த்தபடி, ஓரமாக இருந்த ஊன்றுகோலைத் தன் தோளுக்கு இடையில்  கொடுத்தபடி ரோஜாவைப் பறிக்க கட்டைக்கால்கள் சப்திக்க வேகமாக நடந்தான் சிவா

நடந்து கொண்டேகொஞ்ச நாளைக்கு முன்னாடி படிச்சேம்பா, கட்டு கட்டா பண மூட்டையை டாய்லெட்ல யாரோ வச்சுட்டு போய்ட்டாங்களாம். கண்டுபிடிச்சாங்களான்னு தெரியல, என .ஃபோட்டோவில் தெரசா சிரித்தபடி இருந்ததைப் பார்த்தபடி பேசினான்.

மனுஷனுக்கு மனுஷன் அன்பு செலுத்த ஆளில்லைங்கறபோது அந்தப் பணத்தை வைக்கிற இடம் எதுன்னு பாத்தீங்களாப்பா என்றான் சிவா. பறித்த ரோஜாவை உள்ளங்கையில் வைத்து அதன்  வெள்ளை வண்ணத்தைப் பார்த்தபடி மௌனமானான்.

எங்கோ துல்லியமான வீணையின் ஒலி கேட்க, அப்துல்லா வா! பக்கத்துல கௌரி ஆசிரமத்துல சில்ட்ரன்ஸ்டே செலிப்ரேஷன் இருக்கு, அதுக்கு ஏதோ ப்ரோக்ராம் அரேஞ்ச் பண்றான்னு நினைக்கிறேன், ஆறு நாள்ல தீபாவளி வேற, அதுக்கு வேற நிறைய வேலை கிடக்கு. மகனே வா கோயிலுக்குப் போய்ட்டு அவரவர் வேலையைப் பார்க்கலாம்”என்றார் அரவிந்த்வீணை இசை நல்லாயிருக்குப்பா… பெட்டிக்குள்ளே இருந்திருந்தா இதெல்லாம் கேட்க முடியுமா? என்றார் அப்துல்லா. அதை அங்கீகரிப்பதுபோல் மௌனமாக சிவாவின் தோளைத் தட்டினார் அரவிந்த்.          

டீபாயின் மேலிருந்த புத்தருடைய சிலையில் வைத்திருந்த பூ காற்றில் ஆடியபடி மௌனமாகச் சிரித்தது.























(Worldwidestory competition-2015) (இணையத்தளத்தில் முதல் பரிசு பெற்ற சிறுகதை)

நாய்க்கெல்லாம் பொங்கல் கொடுக்கலாமா அம்மா! மினி கேட்கறா!

பொங்கல் எல்லாம் மாடுகளுக்குத்தான். உன் மினிக்கு இல்லை. நீ மாட்டுவண்டில உட்கார்ந்து போக ஆசைப்படுவியேன்னு பக்கத்துவீட்டுக்காரர்கிட்ட சொல்லி உனக்கு ஒரு சீட் ஏற்பாடு பண்ணியிருக்கு…….

உனக்குப் பிடிச்ச டோரா கலர் சுடிதார் போட்டுக்க! வண்டில உட்கார வசதியாயிருக்கும்!

எத்தனைநாள்மா இந்த ஊர்ல இருப்போம்?

ஏம்மா! ஆதுரத்துடன் கேட்டாள் வீணா.

சிலிங்!சிலிங்! என்ற சப்தத்துடன் வண்டி வந்த சப்தம் கேட்டவுடன் பிரியாவைக் கையைப் பிடித்து வண்டியின் உள்ளே உட்கார வைத்தாள்.

வந்து பேசிக்கலாம். சரியா! என்றாள் கையைச் செல்லமாகத் தட்டியபடி.

என்னவோ அவ மனசில இந்த ஊர் பிடிச்சுப் போச்சு ஏன் தெரியலை? என்றாள்வீணா.

இது உன் பழைய ஃபோட்டோ ஆல்பம். பார்க்கிறியாம்மா என்றாள் பாட்டி.

கொண்டாங்க! பார்ப்போம். 20 வருடங்களுக்கு முன்னாடி இந்த ஊரை விட்டுப் போய்ட்டேன். இப்ப எல்லாமே தலைகீழா மாறியிருக்கு..!

ஆமாம்மா! ஆனா இந்த ஜீன் மட்டும் மாறலை பார்த்தியா! அதே கண்மாய்ல உன் பொண்ணு உன்னைப் போலவே தண்ணீரைச் சிதறவிட்டு வாய்ல அள்ளிப்போட்டுக்கறா! ஒற்றைக்கால்லயே தைய்யா! தக்கான்னு குதிக்கிறது! எல்லாமே உன்னைப் போலவேதான் இருக்கு…

மஞ்சு பாட்டியின் பேச்சினை அவ்வளவாக இரசிக்காத வீணா ஃபோட்டோவின் முதல் படத்தில் மஞ்சள் கலர் ஃப்ராக்குடன் இருந்த தன்னையும், கூட இருந்த ஜூலிநாயையும் பார்த்தாள்.

பாட்டிம்மா! இந்த ஜூலியைப் புதைச்ச இடத்தை இப்ப நான் பார்க்கமுடியுமா! அன்னைக்கு அப்பா வாடகை வீட்ல இருந்து கஷ்டப்பட்டப்போ இது எங்கூட எவ்வளவு உதவி பண்ணியது தெரியுமா?

கடைசியா அப்பா டிரான்ஸ்ஃபர் ஆகிப் போறப்ப ரோட்ல விட்டுட்டுப்போய்ட்டோம். அந்த சோகத்துல பத்துநாள் படுத்த படுக்கையா இருந்திருக்கேன். அன்னைக்குக்கூட இதே மாட்டுப்பொங்கல்தான். அப்புறம் யாரோ அதைக் கார்ல போறவன் அடிச்சுப்போட்டுட்டு போய்ட்டாங்கன்னும் தோட்டத்துக்காரன் எங்கேயோ புதைச்சு வச்சிருக்கான்னும் அப்பா சொன்னார். அப்பாவும் இறந்துட்டார். அன்னைக்கு நாயை வச்சுக்க என்னால முடியலைன்னுதான் என் பொண்ணுக்குப் பெரிய வீடா வாங்கிக்கொடுத்திருக்கேன்.

பாங்க்ல வேணுங்கற அளவுக்கு நான் சம்பாதிச்சதே கிடக்கு…போதாததிற்கு என் கணவர் வீட்டுச் சொத்தே எக்கசக்கம். மாட்டுப்பொங்கல் வேணும்னா கால வித்யாசத்துனால தடம் மாறியிருக்கலாம். ஆனா என் மனம் அப்படியேதான் இருக்கு.

இந்த ஊரு குளத்துல பூத்துக் குலுங்கற வெள்ளைத் தாமரைப்பூப்போல!

நீ படித்த படிப்பு வேஸ்டாகி விடாதாம்மா………? கல்விங்கறது எல்லாத்துக்கும் சரஸ்வதி கொடுக்கறதில்லம்மா! என்று இழுத்தாள் மஞ்சுப்பாட்டி.

எல்லா வேலை பார்க்கிற இடத்துலேயும், கடைசி காலம் வரைக்கும் பொண்ணுக்கு அன்பா, அனுசரணையா ,இருக்க இடம் கிடைக்கிறதில்லை பாட்டி.

எல்லாத்தையும் யோசிச்சு ஒரு முடிவோடதான் இங்கே வந்திருக்கேன்.

ஊருக்கு வெளியே ஒரு பெரிய பில்டிங் அது யாருடையதுன்னு விசாரிச்சுட்டேன். நான் படிச்ச படிப்புக்கு ஏற்ற இடம் அது. அதில சின்னதா ஒரு தொழில் தொடங்கப்போறேன். அதில் என்னைமாதிரி இருக்கற பெண்களுக்கு உதவப்போறேன்.

உன்னைமாதிரின்னா…..புரியலையே!

புரியலையா! பாட்டியம்மா! தடம் மாறிய பண்டிகை இந்த பொங்கல் மட்டுமல்ல! எனது திருமண வாழ்க்கையும்தான். மிலிடரில என் கணவர் திடீர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். அவர் இவ்வளவுதூரம் கைகொடுத்ததுனாலதான் என்னால் இவ்வளவுதூரம் வேலை பார்க்க முடிந்தது. இப்ப என் பெண்ணிற்கும் இந்த ஊரு பிடிச்சுப்போச்சு.

தாயி…..சொல்றேன்னு கோபிச்சுக்காதே…! இந்த ஊரு இன்னமும் மாறலை….புருசன் செத்துட்டான்னு தெரிஞ்சாலே இந்த கிராமத்துல முன்னேற விடமாட்டாங்க….சாதிவேற பார்ப்பாங்க.. இதையெல்லாம் மீறி என்னம்மா செய்வே! கூட துணைக்கு என் பிள்ளையைக் கொண்டுவந்து வச்சுடுவேன். இந்த ஊரு அதுக்கும் சம்பந்தமில்லாம பேசும்.

ஊரு பேசுறதுக்கு என்னம்மா! சும்மா இரு கொஞ்சநேரம்………!

முதலாளியம்மா! நீங்க அந்த இடத்தை வாங்க ஏற்பாடு செய்ங்க…..என்னால வாழ்க்கையில எத்தனையோ பெண்களுக்கு வாழ்வு கிடைக்குதுன்னா அதைத் தெய்வ செயலா நினைக்கிறேன் எனச் சொல்லியபடி வந்த சரவணனைப் புன்சிரிப்புடன் வீணா பார்த்தாள்.

கொன்றைப்பூக்கள் வெளியே அடித்த காற்றில் பறந்து சன்னல் வழியே இரண்டொரு பூக்களை வீணா தலையில் உதிர்த்தன.

என்ன காமெராவைப் பாத்துட்டு ஓடி வந்துட்ட ………….!

பசிக்குதுன்னு சொன்னியே! அதான் கூட்டிட்டு வந்தேன் பாப்பா….என்கிட்டயும் காசில்ல…..அப்பா கொடுத்த காசுக்கு பெட்ரோல் போட்டாச்சு……….

ப்ச்’….எத்தனையோமுறை அப்பாட்டயும், அம்மாட்டயும் சொல்லியாச்சு……ஊரைச்சுத்திக்கடன்….வித்துட்டு இருக்கறதை வச்சு சந்தோஷமா இருங்கன்னு……. ஊரு உலகத்துக்காக பயந்து வாழுற என் அப்பா அம்மாவுக்காக பாக்குறேன். பெரிய பிசினஸ் புள்ளி. ஆனா நான் எங்க நிக்குறேன்….பாத்தீங்களா! ரமேஷ் அண்ணா…..நான் காருக்குள்ளயே இருக்கேன்………..அம்மா உணவகத்துல என்ன இருக்கோ அத வாங்கிட்டு வாங்க……………….!

அதெல்லாம் அங்க வச்சே சாப்பிடணும்……….,

இல்ல……என் ஃப்ரெண்ட் அப்பாவுக்கு உடம்பு ரொம்ப முடியாதவரு….வயசு ரொம்ப ஆயிட்டதால அவரால சமைக்கமுடியாது. அதனால அவ போய் அவங்கப்பாவுக்கு கேக்கறப்ப கொடுத்தாங்க………

டிஃபன்பாக்ஸ் எதுவும் வச்சிருக்கியா!

வேலைக்காரிகிட்ட அம்மா பாத்திரம் சரியா கழுவுலன்னு சண்டை போட்டுட்டு, இன்னைக்கு வரலை…..அதான் நானே கழுவி கொண்டுவந்திருக்கேன்.

உனக்கேன் பாப்பா இந்தவேலை…… அம்மா உன்னை திட்டலையா!

அம்மா, அப்பாவோட சேந்து தண்ணியடிச்சுட்டு காலைலவரைக்கும் எந்திரிக்கலை……….! சமையல்காரியும் வரலை……..நாலுமணிக்குமேல எனக்கு எழுத வேண்டியிருந்தது…அதான் அடுப்படிக்கு போகலை……இல்லைன்னா சாதமாவது வச்சிருப்பேன்…………., போகும்போது எனக்கு சமையல் புக் ஒண்ணு வாங்கி வக்கிறியாண்ணா………, வெளில வந்து சாப்பாட்டுக்கு நிக்கறது அசிங்கமா இருக்கு…….யாராவது பாத்தா அப்பாட்ட சொல்லிடுவாங்க………….

கண்ணில் எழுந்த கண்ணீரை அவள் பார்க்காதபடி தூசி விழுந்ததுபோல லேசாகத் துடைத்தபடி ஏன் பாப்பா! உங்க ஸ்கூல்லயே காண்டீன் இருக்குல்ல!

அங்க போறதுக்கும் கைல காசு வேணும்ல……..ரெண்டுபேருக்கும் குடிக்கறதுக்கும், கார்ல அடுத்தவங்க பாக்கறதுக்கும் கடன்வாங்கி செலவு செய்யறாங்க….ஃபாரீன் மாதிரி படிச்சுக்கிட்டே வேலைன்னு இந்தியாவுல வந்தா நல்லாருக்கும்…..பத்துகூட முடிக்காத எனக்கு யார் வேலை தருவா இப்ப………..? காரு ஏன் மாறிப்போவுது அண்ணா?

நான் உன்னை எல்கேஜில இருந்து வண்டில இந்த ஸ்கூலுக்கு கொண்டுவந்து விட்டுட்டு இருக்கறேன் பாப்பா! என்னைக்கும் நீ பசின்னு சொன்னதில்ல……..அதான் மனசு கேக்கல….என் வீட்டுல சாப்பிட்டு போகலாம்.

ஆமா! இதுவரை நீங்க தனியால்ல இருக்கேன்னு நினைச்சிட்டு இருக்கேன்.

இல்ல பாப்பா! எனக்குன்னு ஒரு சின்ன குடும்பம் இருக்கு…வா! வீடு வந்திருச்சு…இறங்கு………

சுஜின்னு கூப்பிடு….எனக்கும் வயசாகுதுல்ல……….!

இல்லை பாப்பா…..எனக்கு அப்படியே கூப்புட்டு பழகிடுச்சு……………..நீ கல்யாணமாகி புள்ளை பெத்தாலும் நீ எனக்கு பாப்பாதான்.

கௌரி யார் வந்திருக்கான்னு பாரு………………!

எட்டிப்பார்த்த கௌரி சுஜியை வாம்மா! வந்து உட்காரு என்றாள்.

வீட்டைச்சுற்றிப் பார்த்த சுஜி அலமாரியில் இருந்த மதர் தெரசாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

அலமாரி முழுவதும் ஷீல்டுகளால் நிறைந்தபடி இருந்ததை வியந்து பார்த்தாள். நடுவில் ஒரு தேவதை டிரஸ் போட்ட எட்டுவயதுப்பெண் பாப்தலையுடன் சிரித்துக்கொண்டிருந்தாள்.

அண்ணா இது யாரு………..?

இது என் பொண்ணு……..!

இப்ப எங்க……………….?

கடவுளுக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சுப்போச்சாம்….அதான் பூமில ப்ரைஸ் நிறைய வாங்கிட்ட………….., என்கூடவந்து இருந்துக்கோன்னு கூட்டிக்கிட்டார். உன்ஸ்கூலுதான் பாப்பா…. உன்னோட ஒரு வயசு கம்மி………இருந்தா உன்னோட பேசிட்டு இருந்திருப்பால்ல………..சுவரில் தொங்கிய ஃபோட்டோவை வெறித்தான்.

வா பாப்பா! டைனிங்டேபிள்ல உட்காருன்னு சொன்ன கௌரியை முதன்முதலாகப் பார்த்தாள்.

வீட்டில் பரப்பி வைத்திருக்கும் ஹாட்பாக்ஸ், ஆடம்பர கண்ணாடி டம்ளர்,வெள்ளி பழத்தட்டு எனப் பார்த்துப் பழகிய கண்களுக்கு பரப்பிய வாழைஇலை சாப்பாடு அவளுக்குப் புதிதாகத் தெரிந்தது. அதைவிட கௌரி பரிமாறக் காத்திருந்தது புதிதாகத் தெரிந்தது.

சுஜி…எனக்கு ப்யூட்டிபார்லர்ல வேலை இருக்கு. நீ போய் வேலைக்காரிட்ட சொல்லி சாப்பிட்டுக்க…….! என்ற குரல் மனதில் ஒலித்தது.

நான் உங்க பொண்ணு மாதிரின்னு நினைச்சுதானே வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தீங்க….. தரையிலயே உக்காந்துக்கறேன்.

வாஷ்பேசின் எங்க! ஓ சாரி! கொல்லைப்பக்கம் எங்கிருக்கு?

ஓடிச் சென்று கையைக் கழுவித் துடைத்தபடி ஸ்கர்டை இழுத்துக்கொண்டு அமர்ந்த பெண்ணை பாசத்துடன் பார்த்தாள் கௌரி.

இன்னைக்கு நீ வருவேன்னு தெரியாது…….டிஃபன் செய்யல……….அதுதான் உருளைக்கிழங்கு பொரியலும், முருங்கைக்காய்கூட்டும், தக்காளிக்குழம்பும், அப்பளமும் வச்சிருக்கேன். சாப்பிடுறியா……………….

போடுங்க பசி உயிர் போகுது…..

ரசித்துச் சாப்பிட்டாள் சுஜி.

அண்ணா! எனக்கொரு உதவி செய்வியா? சாப்பிட்டுக்கொண்டே பேசினாள் சுஜி.

நான் டெய்லி இங்க வந்து சாப்புட்டுபோறதுக்கு எதாவது ஐடியா இருக்கா? படுத்துத் தூங்கக்கூடப் பிடிக்கல….எங்கயாவது போய் செத்துடலாம்னு தோணுது……….

கௌரி தன் கணவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

நீ சாப்பிட்டு கிளம்பு பாப்பா! ஸ்கூலுக்கு நேரமாய்டும்…..

கதவருகில் யாரோ வந்து நிற்பதுபோல நிழலாட………! சிலையாய் நின்றாள் சுஜி. அப்பா என்று உச்சரித்த சொல் தொண்டைக்குள் பயத்தால் குழறியது.

நான் அப்பவே நினைச்சேன். இவளைப்போய் இங்க கூட்டிட்டு வந்திருக்காரே…..அவங்க குடிச்சா உங்களுக்கென்ன? உங்களுக்கு இனி வேலை வெளில தேட வேண்டியதுதான். அலுத்துக்கொண்டாள் கௌரி.

இரவுநேரத் தூக்கமின்மையாலா, அல்லது குடித்துச் சிவந்திருந்ததாலா எனத் தெரியாத அதிகாரக்கண்களில் என்றுமே கண்ணீரைப் பார்த்தறியாத சுஜி அன்று கண்ணீரைப் பார்த்தாள்.

உனக்காகத்தானடா விழுந்து விழுந்து சம்பாதிக்கறேன். நம்ம கார் ஒண்ணை இங்க வொர்க்ஷாப்ல விட்டிருந்தேன். எடுக்கலாம்னு வந்தேன். வர்ற வழில உன் கார் இங்க நிக்குது…. என்னவோ டிரைவர் உன்னைச் என்ன செஞ்சிடுவானோன்னு பயத்துல மறைஞ்சு வந்தேன்.

பாத்தா இங்க நீ இப்பிடி பேசுற…….ரமேஷ்! இனி இது உன் வீட்டுப்பொண்ணு மாதிரி நினைச்சுக்கோ! அது எப்ப சாப்பாடு கேக்குதோ போடுங்க….. சுஜி முன்னாலேயே சொன்னமாதிரி கடனையெல்லாம் அடைச்சிடுறேன். மூட்டை தூக்கியாவது எம் பொண்ணைக் காப்பாத்துறேன்.. போதுமாம்மா..இனி நாங்க ரெண்டுபேரும் குடிக்கவும் மாட்டோம். அப்பாவோட ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்துடுறியாம்மா………!

பன்னீர்ரோஜாக்களை யாரோ தனது தலைமேல் கொட்டியதுபோல உணர்ந்தாள் சுஜி. இதோ! சாப்பிட்டு வர்றம்பா…….ஆண்ட்டி நல்லா வச்சிருக்காங்க…………..

நீங்களும் சாப்பிடுறீங்களாய்யா?

சும்மாயிருங்க..! அவரு எவ்வளவோ ஒசந்த இடத்துல இருந்து வந்தவரு……அவர்கிட்டபோய்……..

உசந்த இடம்கிறது பங்களாவுலயோ….போற கார்லயோ இல்லைம்மா…..பசிக்குதுன்னா…ஒருவேளை சாப்பிட சாப்பாடு கொடுக்கறாங்க பாருங்க …! அவங்கதான் உயர்ந்தவங்க……..கொண்டுவாங்க சாப்பாடை…….‘கீழேயே உக்காந்துக்கறேன்னு உயர்நதவன் என்ன! தாழ்ந்தவன் என்ன‘ எனப் பாடிய அப்பாவைச் சிரித்தபடி பார்த்தாள் சுஜி. ‘சாதி இரண்டொழிய வேறில்லை‘ எனப் பக்கத்துவீட்டுகுடிசையில் யாரோ படிப்பதைக் கேட்ட சுஜி அலமாரியில் ஒட்டியிருந்த விவேகானந்தர் படத்தின்கீழ் ‘உன்னால் எதையும் சாதிக்க முடியும்‘ என்ற வாசகத்தை மனதுக்குள் மௌனமாகப் படித்தாள். அவளுக்கு வாழ்க்கையின் பொருள் புரிந்ததுபோல இருந்தது.

























என்னங்க?. . . கோவிந்தனைப் பார்த்தீங்களா? நம்ப பொண்ணு கலாவுக்கு ஒரு புடவை வாங்கணும்னு தேடிக்கிட்டிருக்கேன்”

யாரு?. . . அந்த பழைய சைக்கிள்ல துணியால மூட்டை கட்டித் தெருத் தெருவா வித்துட்டு வருவாரே அவரா?”

ஆமாங்க! அவரைத்தான் தேடுறேன்”

சும்மா செல்ல கைல வைச்சுக்கிட்டு—–எப்பப் பாத்தாலும் பிரஸ் பண்ணிக்கிட்டு….

காலேஜ் பசங்க மாதிரி காதுல வேற செருகியாச்சு……

பிடுங்கி அதை எறிந்தாள் நந்தினி.

நந்து….உனக்கு விஷயமே புரிய மாட்டேங்குதே…கரெண்ட் டேட் சயின்ஸ் விஷயமெல்லாம் தெரிஞ்சுடணும். இல்லேன்னா வேலை பாக்கற இடத்துல குப்பை கொட்ட முடியாது.

அதுக்காக கண்ணுல கண்ணாடி வேற—– வெள்ளெழுத்து ஆரம்பிச்சு வருஷக்கணக்கா ஆகுது.

இந்த செல் கண்டுபிடிச்சவன் நம்பரெல்லாம் கொஞ்சம் பெரிசா வைக்கப்படாதா? எனக்கொரு டவுட்.

பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயங் கொள்ளலாகாது பாப்பா ‘ ன்னார் பாரதியார்.

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே”ன்னும் அவர்தானே பாடியிருக்கார். இதுக்கு என்ன பொருள்?

ரெண்டும் ஒரே ஆளாயிருந்தாலும் அவர் எந்த நேரத்துல பாடினாரோ? கவி தன் கற்பனைச் சிறகை எப்போது சிறகடிக்குமோ? யாருக்குத் தெரியும்?

சரி! என்னவோ கேட்டியே!

பேச்சை மாத்தாதீங்க……விடிய விடிய இராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னாங்களாம்!

புடவைக் கடை கோவிந்தனைக் கேட்டேன்……

இல்லையே! நான் அவரைப் பாத்துக் குறைஞ்சது மூணு மாசமாவது இருக்கும். அவர் வீடு எங்கன்னு தெரியுமா?”

எனக்குத் தெரியாது. அடுத்த தெரு அம்புஜம் மாமிக்குத் தெரியும். கேட்டுச் சொல்றேன்”

ஊரிலே எவ்வளவோ ஜவுளிக்கடையெல்லாம் இருக்கும் போது ஏன் கோவிந்தனைத் தேடிக்கிட்டிருக்கே?”

ரங்கநாதன் தெருவில போனா ஆயிரம் கடை இருக்குறது எனக்கும் தெரியும். கோவிந்தன் ஒரு ராசியான ஆள். அவர் கையால ஒரு நூல் புடவை வாங்கினா கூட வாங்கினவங்க வீட்லயும், வாங்கினவங்களுக்கும் நல்லது நடக்கும்.இது உங்களுக்குத் தெரியாதா?

ஏன் நம்ம மூத்த பொண்ணு லதாவுக்கு அவர்கிட்ட புடவை வாங்கினதக்கப்புறம் தானே மாப்பிள்ளையே அமைஞ்சது. அதை மறந்துட்டீங்களா?”ஆனாலும் கார்த்திகை நட்சத்திர மாப்பிள்ளை தானே கிடைச்சது..

ஏன் அதுக்கென்ன….இந்த பொம்பளைங்களே இப்படித்தான்….அமையற வரைக்கும் அப்படி…இப்படின்னு சொல்ல வேண்டியது……..அதுக்கப்புறம் ஏமாத்தி செஞ்சுட்டாங்கன்னு ஒரே குறை பாட வேண்டியது. பொண்ணப் பாத்துட்டு ஜாதகம் பாக்கறது, மாசக்கணக்குல வாழ்ந்துட்டு ஜாதகம் பாக்கறது இதெல்லாம் எனக்குப் பிடிக்காது.

ஆமா…. கார்த்திகை நட்சத்திரத்துக்காரங்ககிட்ட கல்மிஷம் இருக்கும். கண்மூடித்தனமா சொந்தங்ககிட்ட பாசம் இருக்கும். ஆனா வெளியே ஒண்ணு உள்ளே ஒண்ணா இருக்கும். அடுத்தவங்க அந்தரங்கம்னு தெரியும்.இருந்தும் மத்தவங்க கிட்ட சொல்றதுன்னா முதல் ஆளுதான். இது சரி தப்புன்னு ஒரு வயசுக்கு மேல தான் அவங்களால உணர முடியும். தன்னை வெளிப்படுத்திக்க என்ன வேணும்னாலும் செய்வாங்க……”அறை பறையன்ன கயவர்”னு தெரியுமா?

உன் ஜாதகம் பாக்கற புத்திய விட மாட்டியா? பொண்ணு கலியாணம் முடிஞ்சு ஒரு புள்ளையும் பெத்து அது அஞ்சு படிக்குது. இப்ப போய் விதைச்ச நெல்லை பிடுங்கிப் பாத்த மாதிரி……………திரும்பப் புது அத்தியாயமா எழுத முடியும்?பொண்ணு ஒங்கிட்ட வந்து குறை படிச்சாளா?சும்மா பிலாக்கணம் படிக்காதே.

ஜோதிடம் ஒரு சயின்ஸ் அது எல்லாருக்கும் பாக்க அமையாது. அதுக்கு முக ராசி வேணும். ………..அப்படியென்று இழுத்தார். சொன்னா கோபிச்சுக்கக் கூடாது.பெண்கள் ஜாதகம் பார்ப்பது வீட்டுக்கு நல்லது கிடையாது. சொன்னா நீ திட்டுவ….ஆனாலும் நீ சொன்னது கரிநாக்கு போல டாண்ணு தான் நடந்துக்கிட்டு இருக்கு….இருந்தும் உன்னைப் பாராட்ட மாட்டேனே…..என்று சிரித்தார் ராம் அர்த்தத்துடன்.

முப்பது வருடமாக என்னைக்கு நீங்க என்னை பாராட்டியிருக்கீங்க………………. விட்டா பெண் படிக்கக்கூடாதுன்னு சொல்வீங்களா?

சிரித்தபடி முகத்தை மலர்த்தினாள் நந்தினி. அவர்களுக்குள் மலர்ந்த தாம்பத்தியத்தின் சுவை அவள் பேச்சில் இனித்தது. அவள் அதைப் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை. கணவன் சொல்லும் வாயசைவிற்காகக் காத்திருந்தாள். .இல்லடா! பெண்கள் படிக்கணும். தன்னை,தன்னைச் சார்ந்து வாழும் சமூகம் இவற்றிற்குத் தொண்டு செய்து வாழணும். நேர்மையான முறையில. அதுக்குத்தான் உன் அறிவை விருத்தி செய்வதை நான் இவ்வளவு வருஷம் ஆகியும்  தடுக்கல. ஆனா……. நந்து……………..நட்சத்திரம் பாத்திருக்கியா…………அதைச்சுத்தி இருக்கிற எல்லாவற்றையும் எனக்குத் தெரியுமா? உனக்குத் தெரியுமா? எல்லாவற்றையும் தெரிந்தவர்கள்தாம்மா சரியா வாழ்க்கையைச் சொல்ல முடியும்.

வெட்டித்தனமா சில பேர் கிடைச்ச சுவடிய வைச்சிக்கிட்டு வயித்தைக் கழுவ உட்கார்ந்து பொழுதைக் கழிக்குதுங்க. ஹூம்…நான் என்ன சொன்னாலும் மாறவா போற….சொல்ல வந்ததைத் தெளிவா சொல்லு…

ஆமா! அத நானும் மறந்துட்டேன். “இப்ப கலாவுக்கும் மாப்பிள்ளை தேடிட்டிருக்கோம். எதுவும் அமையல. அதான் கோவிந்தன் கையால ஒரு புடவை வாங்கலாம்னு. . .”நீ கூட பர்ப்பில் கலர்ல லதா கலருக்கேத்த மாதிரி எடுத்த. நான் கூட ஏன் லைட் கலர்ல எடுத்தேன்னு கேட்டேன்”அந்தக் கதை தானே…….

அதே தாங்க………..

என்ன இருமற.. ஹாஸ்பிடல் போகலையா?……..

போகணும்….ஆனா மருந்துக்கு ஆயிரத்துக்கு மேல செலவாகும்….சேல எடுத்துடலாம் அதுக்கு.. உடம்புக்கு வந்தா செத்தா போய்டுவோம் இந்த காலத்துல……

உன் ஆசைய ஏன் கெடுக்கணும்? இந்தப் பொண்ணுக்குப் பரணி நட்சத்திர மாப்பிள்ளையைப் பாப்பமா? கோவிந்தன் அட்ரஸைக் கொடு. நான் போய்ப் பாத்து வர்றேன்” உன் நம்பிக்கையைப் போய்க் கெடுப்பானேன்! பரணி தரணி ஆளுமில்லையா?

நந்தினி அம்புஜம் மாமியிடம் அட்ரஸைக் கேட்டு வாங்கிக் கொடுத்து விட்டாள். அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. பகல் 12 மணி வாக்கில் டிவிஎஸ் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சாலிகிராமம் கிளம்பி விட்ட ராமை உள்மனம் ஏதோ எச்சரித்தது. அதை வெளிக்காட்டாமல் சாலிகிராமத்தை அடைந்தார் ராம்.

சாலிகிராமம், தசரதபுரம் 3வது தெரு, 10ம் நம்பர் வீடு இது தானே?”

ஆமாம்! நீங்க யாரு? எங்கேயிருந்து வர்றீங்க?” என்றபடி வந்தாள் வெள்ளைப்புடவை உடுத்திய பெண் .

என் பேர் ராம். திருவல்லிக்கேணியிலிருந்து வர்றேன். இங்க கோவிந்தன்னு புடவை விக்கறவர் இருந்தாரே!

ஆமாங்க!”

அவரைப் பாக்கலாம்னு தான் வந்தேன். அவர் இல்லையா?”

பெண்ணை உற்றுப்பார்க்கும் பழக்கம் ராமிடம் இல்லையென்றாலும் அவள் கண்களில் தெரிந்த ஒளி அவரை என்னவோ செய்தது.

நீங்க என்ன விஷயமா வந்தீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

உங்க வீட்டுக்காரர் கிட்ட ஒரு புடவை எடுத்த ராசி என் மூத்த பொண்ணுக்கு கல்யாண யோகம் கூடி வந்த மாதிரி என் இளைய பொண்ணுக்கும் ஒரு புடவை அவர் கையால எடுத்து கட்டலாம்னு நினைச்சி வந்தேம்மா!”

கொஞ்சம் உள்ளே வரீங்களா?

உட்காருங்க! நீங்க வந்தது சரியான வீடுதான்.

கொஞ்சம் இருங்க! புடவையை எடுத்துட்டு வரேன். அவர் நாலு மூட்டை புடவை வாங்கினது கிடக்கு……

அவள் உள்ளே சென்ற நொடியில் ராமின் மனம் யோசித்தது. இவள் கோவிந்தனுக்கு என்ன உறவு! வெள்ளைப்புடவை வேறு……..என யோசித்தபடி அருகிலிருந்த புத்தக அலமாரியை உற்று நோக்கினார் ராம். பகவத் கீதை தொடங்கி அபிராமி அந்தாதி, ராமகிருஷ்ணர்,சாரதாதேவி, அரவிந்தர் என ஒருவர் விடாமல் இடம்பெற்றிருந்த அந்த இடத்தை விட்டுக் கண்கள் ஏனோ அகல மறுத்தன.

ராம் பார்ப்பதைப் புடவை மூட்டையுடன் வந்த அந்தப் பெண் வெங்கலமணிகள் இணைந்த சப்தம்போல் சிரித்தாள். இவையெல்லாம் அவர் படித்தவை. என் பெண்……. எனக்கூறியவள்….கோவில் மணி எங்கோ ஒலிப்பதைக் கூர்ந்து கவனித்தாள்.

நீங்கள் இந்தப் புடவை மூட்டையில் உங்களுக்குப் பிடித்ததை எடுங்கள். இதோ வருகிறேன் எனக் கூறியபடி விர்ரெனப் பறந்து சென்றதைப்போல ராமிற்குத் தோன்றியது.

வெளியே நிறைய பேர் பேச்சுக்குரல் கேட்கவே, இலேசாக எட்டிப் பார்த்தார் ராம்.

வெளியே புழுதி பறக்க கையில் பூஜைத்தட்டுடன் ஒரு ஊரே கூடியிருந்தது.

ஐயா யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

நான் ராம். கோவிந்திடம் என் பெண்ணுக்கு கல்யாணம் செ்யவதற்காகப் புடவை வாங்க வந்தேன்.

இதைக் கேட்ட மறுநிமிடம் மஞ்சள் புடவை உடுத்தியிருந்தவள் புடவைத் தலைப்பால் வாயை மூடி அழத் தொடங்கி விட்டார்.

ஏம்மா அழுவுறீங்க? நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா?”

இல்லப்பா! ஊருக்கெல்லாம் கல்யாணம் செய்யப் புடவை வித்தவரு தம்பொண்ணு ஓடிப்போனதால பொண்ணு கல்யாணத்துக்கு எடுத்து வச்ச புடவையில நாண்டுக்கிட்டாங்க புருசன் பொண்டாட்டி  ரெண்டு பேரும்.

செத்து ஒரு மாதத்துக்கும் மேல ஆவுது. அவுங்க தொழிலை இங்க செய்யறதாகவும், அடிக்கடி வெங்கலமணிக்குரல் சிரிக்கறதா சொன்னாங்க எல்லாரும். அதான் பூசாரி கிட்ட சொல்லி பூஜை செஞ்சு தாயத்து வீட்டுல கட்லாம்னுட்டு வந்தோம்.

அது என்ன உங்க கைல….. இது கோவிந்து தம் பொண்ணுக்காக எடுத்து வைச்ச புடவையாச்சே…அது உத்தரத்துல பாதியால்ல தொங்குச்சு…

இதுதானே அவுங்க ரெண்டு பேர் உயிரையும் எடுத்தது.

சொன்னது தான் தாமதம் டிவிஎஸ்ஸை மறந்து புடவையைத் தூக்கி வீசியபடி ஓடினான் ராம்.

எங்கோ மூடப்பழக்கத்தினை ஒழிப்போம் ‘ என மைக்கில் யாரோ பேசியது ராமின் காதில் தெளிவாக ஒலித்தது.



அன்று நான் தூங்காமல் ஏனோ விழித்திருந்தேன். உறக்கம் வராமல் என் அருகில் படுத்திருந்த ஜிம்மியும், ஏனோ என்னை அதன் பச்சைக்கலர் டார்ச் லைட் கண்களால் பார்த்தபடி இருந்தது. அதன் கண்களுக்கு சுமி தெரிந்தாளோ? என்னை அழைத்துச் செல்ல வந்திருப்பாளோ? என ஜிம்மி என்ன செய்கிறது என உற்றுப் பார்த்தேன். அது நான் பார்ப்பதறிந்து ஃபோட்டோவிலிருந்த சாலினியைப் பார்த்தது. அதன் கண்ணில் ஏனோ இரண்டொரு துளி நீரை என்னால் உணர முடிந்தது. இரட்டை சடையும்,டென்னிஸ் பேட்டுமாய் அவள் சிரிக்கின்ற கன்னங்குழி அழகை இறைவன் தான் பார்க்க ஆசைப்பட்டு எடுத்தானோ?
ஏங்க! சாலினிக்குப் பட்டுப்பாவாடை பச்சைக்கலரில் வாங்கலாமா?

ஒரு ஃபோட்டோகூட எடுத்துடலாங்க! அவ வந்த பிறகு தான் இந்த வீட்டுல இத்தனை வசதி! சுமி!வேண்டாம்மா! நம்ம குடும்பத்துக்கு ஃபோட்டோ ஆகாது. நிலைக்காதுன்னு அம்மங்கா சொன்னாங்க!

ஒண்ணே ஒண்ணு தான்! அதுக்கப்புறம் உங்களைக் கேக்கவே மாட்டேன்! சொன்னது சசிகரனின் காதுக்குள் இன்னமும் கேட்டுக்கொண்டே இருப்பது போல் ஒரு பிரமை!

இருவருமே சொல்லாமலே சென்று விட்டீர்களே! என தொண்டைக்குள் ஏதோ மாட்டிய உணர்வு  தெரிந்தது. ஆட்டோவில் எவனோ வைத்த பாமிற்கு இவர்கள் தானா கிடைத்தார்கள்! பச்சைக்கலர் பட்டு கூட மிஞ்சவில்லையே அம்மா! என மனம் கூக்குரலிட்டு அழுதது. தவமாய் தவமிருந்து வாரிக் கொடுத்துவிட்டு நிற்கிறேனே! ஜிம்மி மட்டும் இல்லையென்றால் என்றோ இறந்திருப்பேன்!

இருட்டி வெகு நேரம் ஆனபோதும் எங்கள் இருவருக்கும் வெளிச்சமிட ஏனோ மறந்த இறைவனை நினைத்தபடி இருந்தேன். ஜிம்மி நடக்க முடியாமல் எழுந்து சாலினி இருந்த ஒவ்வொரு அறையாய் சென்று சிறிது நேரம் அப்படியே அமர்ந்து அவள் வைத்திருந்த ஒவ்வொரு பொருளாய்ப் பார்த்தது. அவளும், ஜிம்மியும் விளையாடிய பந்தை உருட்டித் தடுமாறி விழப்போனது. ஜிம்மி! என அழைத்த நான் கண்கலங்கியதைப் பார்த்து ஓடி வந்து எனது மடியில் படுத்தது. அழைத்து அழைத்துப் பார்த்தேன்!. அது எழுந்திருக்கவே இல்லை. வாழ்க்கையில் பல மரணத்தைப் பார்த்த என் கண்ணில் ஏனோ அன்று நீர் வரவேயில்லை. எனது அப்பா வாங்கிக் கொடுத்த ஈசிசேரில் படுத்தபடி ஜிம்மியைத் தடவியபடி இருந்தேன். உயிர் ஏனோ தன் வரவை யாருக்கும் சொல்லாமலே வருவது போல் சென்று விடுகிறது.

ாலைப்பனியில் மப்ளர் போட்ட செக்யூரிட்டி அய்யா! பால் என ஒருக்களித்த கதவை ஆச்சரியத்துடன் திறந்தான்! உள்ளே மடியில் ஜிம்மியுடன் ஃபோட்டோவைப்பார்த்த நிலையில் உயிர்பிரிந்த சசிகரனைப்பார்த்த அதிர்ச்சியில் வெளியே தகவல் சொல்ல ஓடினான்.





ஏன் நிக்கறே? உக்காந்துக்கறது தானே”. . .

ஸ்டீல்ல தட்டு மாதிரி போட்டிருக்கே. சுடுதும்மா. மேலே ரூஃபிங்கே இல்ல பாத்தியா!. . . வெயில் வேற. . . சுள்ளுன்னு அடிக்குது.“

ஏன் பஸ் வரலையா? வீட்லருந்து அப்பவே வந்துட்டியோ. . .“

நீ வேற இந்த ஸ்டாப்பிங்ல பஸ் வரலன்னு காது கேட்காத வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான பஸ்ல ஏறிட்டேன். ஏறுன பிறகு தான் தெரிந்தது. ஏண்டா ஏறினோம்னு. . . ஒரு ஸ்டாப் போய்ட்டு இறங்கிட்டேன்.“

ஏன்? என்னாச்சு? உங்களுக்குத்தான் முதியோருக்கான ஸீட் பஸ்ல முன் பக்கம் கவர்ன்மெண்ட் கொடுத்திருக்கே . . . “
அம்மாவின் முகம் மாறியதைப் பார்த்த மல்லிகா அம்மாவின் தோளை ஆதரவுடன் பற்றினாள்.

என்னம்மா. . . என்னாச்சு?“

ஒண்ணுமில்லம்மா! வரவர பெத்தவங்க வளர்ப்பு சரியில்லையோன்னு தோணுதும்மா!“
ஏம்மா?“ நல்லா படிக்குற, ஒழுக்கமான குழந்தைகள் இல்லையாம்மா?
கனத்த மௌனம் அம்மாவிடம் இருந்து புறப்பட்டது.

கொஞ்ச நேரம் அந்த பார்க்ல உக்காந்துக்கலாம் வர்றியா?“

தூரத்தில் தெரிந்த சாவு ஊர்வலத்தைப் பார்த்தாள் அம்மா. காருக்குள் இறந்தபெண்ணின் அருகில் ஒருவன் அவள் காதருகில் அழுதபடி அவன் பேசுவதை உற்றுப்பார்த்தாள். செத்தபிறகு பிணத்திற்கு எல்லாஉணர்வும் கேக்கும்னு சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். உணர்வுபூர்வமாக இன்றுதான் பார்க்கிறேன்…………….

அம்மாவின் மனமறிந்தாள் மல்லிகா.

இடத்தை விட்டுப்போய்விடவேண்டும் என நினைத்தாள்.
சரி! வாங்க பேசிட்டே போகலாம். . .“

நேற்று நான் காந்தி இறந்தப்ப போட்ட டிரஸ்ஸைப் பாத்தேன்.
பல தடவை பாத்துட்டேன். இருந்தும் அதைப் பாக்கும்போது பழைய ஞாபகம் வருது. வருஷம் பல மாறினாலும் ஒண்ணு தெளிவாத் தெரியுது. அங்க இருந்தவங்கள்ள நம்ம இந்தியர்களை விட வெளிநாட்டவர்கள் தான் அதிகம். உனக்குப் புரியுதா என் வேதனை… அங்கேயே இருந்துடலாமோன்னு தோணுச்சு…….

அம்மா நீங்க அதிகம் பேச வேண்டாம். அப்பா நாட்டுக்காக வாழ்ந்து உயிரை விட்டார். கவர்மெண்ட் தர எந்த சலுகையும் வேண்டாம்னு சொல்லிட்டீங்க….நாளைக்கு அப்பா இறந்தநாள் ஜனவரி 26. கொஞ்சநேரம் ஃபிரெண்ட்ஸைப் பாத்துட்டு வரேன்னு கிளம்பினீங்க…உங்களுக்குப் பிடிச்ச லைப்ரரிக்குப் போலாமா……

ஒண்ணும் வேண்டாம் வீட்ல தேவைப்பட்டது கிடக்கு. நீ போய் பால் மட்டும் வாங்கி வா..

தாய்போல மரத்தின் நிழல் சிமெண்ட்பெஞ்சைத் தடவியிருந்த இடத்தில் மஞ்சள் நிறக் கொன்றைமலர்கள் சிதறியிருந்ததை இரசித்தபடி சிவகாமி அமர்ந்தாள்.

அம்மாவுக்கெனச் சூடாகப் பால் வாங்க அருகில் இருந்த ஆவின் பூத்திற்குச் சென்றாள் மல்லிகா.

எதிர் பெஞ்சில் கண் தெரியாமல் அமர்ந்திருந்த சிறுவனைப் பார்த்தாள். அவனருகில் தட்டில் சாதத்துடன் நின்ற பெண்ணையும் பார்த்தாள். என்ன செய்கிறார்கள் எனப் பார்த்தபடி இருந்தாள் சிவகாமி.
சாதத்தை எடுத்துச் சிறுவனுக்கு ஊட்டுவாள் என எதிர்பார்த்திருந்த வேளையில், அந்தப் பெண் சிறுவனின் கையைச் சாதத்தில் வைத்துத் தொட்டுக்காட்டி, கையைப் பிடித்து வாயில் வைத்ததைச் சிவகாமி கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு நிமிடம் கண்ணை இமைக்க மறந்த சிவகாமி அடுத்து என்ன நடக்கும் என்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

சிறுவன் அம்மா கொடுத்த சாதத்தைப் பிசைந்து பொரியல் இருந்த இடத்தைத் தடவிச் சரியாகச் சாப்பிட்டு முடித்தான். கை கழுவ பக்கத்தில் வாட்டர் பாட்டிலைத் தடவினான்.

அம்மா!“

என்ன சிவா?“

கை கழுவ தண்ணிம்மா!“

உனக்கு இடது கைப்பக்கமா நாலு அடி எடுத்து வை. . . வாஷ் பேசின் இருக்கு. . . பாத்துப் போ!“ என்றாள் அந்தத்தாய்.

இந்தாங்கம்மா பால்!“ என்றாள் மல்லிகா.

வாயில் விரலை வைச்சு சிவகாமி, “உஷ்!. . . “ என்றாள் அந்தச் சிறுவனைச் சுட்டிக்காட்டியபடி.
சிவா, இந்தாப்பா. . .“ என கூறியபடி அவன் தோளைத்தட்டி ஸ்டிக்கை அம்மா கொடுத்தாள்.

சிவா ஸ்டிக்கை வலப்பக்கமும் இடப்பக்கமுமாக மண்தரையில் மாற்றி மாற்றி தட்டிப் பார்த்து நடக்க ஆரம்பித்தான்.
திடீரென ஏதோ ஸ்டிக்கில் தட்டுப்பட. . . அப்படியே உட்கார்ந்தான்.
பச்சைப் புல்லின் மென்மையான வாசத்துடன் காலைப்பனியின் ஈரம் கையில் ‘ஜிலீர்‘ரென உரச, இலேசாகப் புன்னகைத்தான்.

அம்மா. . . இதென்ன?. . .“

இதுவா. . . பனியின் ஈரம். . .“ என்றவள் சட்டென நாக்கைக் கடித்தாள்.

. . . உனக்குப் பனின்னா என்னன்னு தெரியாதே!“

தெரியும்மா. . . எங்க மிஸ் சொல்லிக் கொடுத்திருக்காங்க. . .“

சரி. . . பார்த்துப் போ. . .“

ஸ்டிக்கால் தரையைத் தட்டியபடி நின்றான்.

அம்மா, இந்தக்கல்லு எல்லாருக்கும் இடைஞ்சலா. . . வழுவழுன்னு இருக்கேம்மா. . . “

கூழாங்கல்லு தான் அது. . .“

பார்க்கை டெக்கரேட் பண்ணிட்டு அப்படியே போட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்.“

ஏம்மா அவங்களுக்குத் தன்னுணர்வு இல்லையா?“

தன்னுணர்வா அப்படின்னா?“

இது தெரியாதாம்மா உங்களுக்கு?“

அடுத்தவங்க பார்க்கறாங்கன்னு நமக்குப் பெருமை வரணுமேங்கறதுக்காக எந்த நியாயமான செயல் செய்வதுபோல நடிக்கக்கூடாது. வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது. ரோட்டில் கிடக்கிற குப்பையை எடுத்துக் குப்பைத்தொட்டியில போடணும். . . குழியா கிடக்குன்னு ரோடே போடலைன்னு மறியல் செய்யறதை விட அந்தக்குழிய நிரப்ப பக்கத்துல கிடக்கிற மண்ணையோ, கல்லையோ போட்டுக் குழியை மூடலாம்ல. . . தெருவுல போறவங்களுக்கு நிழல் வேணும்னு மரம் நடணும்னு தோணனும். மரத்து மேலே லைட்டைப் போட்டு தன் கடைக்கு மட்டும் விளம்பரம் தேடுறது இல்லம்மா தன்னுணர்வு. சென்னையத் தவிர மத்த ஊர்ல ஒரு நாள்ல அரைநாளுக்கும் மேல கரண்ட் இல்லாம மக்கள் திண்டாடுறது தெரிஞ்சும் சீரியல் செட், ஆடம்பர லைட் போட்டு மின்சாரத்தை இஷ்டத்திற்கு செலவழிக்கிறதில்லை தன்னுணர்வு. இருக்கறத சிக்கனமா எல்லாரும் பயன்படுத்தணும். அது தான் மனிதத்தன்மை. இது தாம்மா தன்னுணர்வுன்னு எங்க மிஸ் சொன்னாங்கம்மா. . .“
வானத்திலிருந்து புஷ்பங்கள் தன் உடம்பில் கொட்டியது போல உணர்ந்தாள் சிவகாமி. “ரொம்ப கரெக்ட்“ எனக் கூறியவாறு கை தட்டிய சிவகாமியைப் பார்த்தாள் அந்தத்தாய்.

உங்க பையனா?“

ஆமா . . . லேட் மேரேஜ்ல பிறந்தான். டெலிவரி அப்ப நர்ஸோட கவனக்குறைவால ரெண்டு கண்ணும் தெரியாம போய்டுச்சு. . .“ அந்தக் குறை தெரியாம இருக்க அப்பப்ப இப்படி வருவேன். அவனுக்கு அப்பா இல்ல. . . ஆர்மில இருந்தார். திடீர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். இருந்தும் அவன் கால்ல நிக்கணும்னு தான் இப்பிடி. . . அவனுக்கு இருக்கற மிஸ் ரொம்ப க்ரேட்டுங்க. . . எல்லாருக்கும் அப்படி வாய்க்கறதில்ல. . . என்றாள் சிவகாமி.
பால் குடிக்கறீங்களா?. . . எதுக்கும் இருக்கட்டும்னு ஃப்ளாஸ்க்ல ஜஸ்ட் இப்பதான் வாங்கிக்கிட்டு நேரா வரேன்.
இரண்டு தம்ளர் பால் எக்ஸ்ட்ரா தான் வாங்கினேன்“ என்றாள் மல்லிகா.

வேண்டாங்க. . . வெளில எங்கயும் சாப்பிடறதில்லே.“

ஏன் பயமா?. . . ஏதாவது கலந்து இருப்பாங்களோன்னு. . .“

சேச்சே. . . அதெல்லாமில்ல. . . டயட்ல இருக்கேன். இவன் ஒரு கால்ல நிக்கற வரைக்கும் நான் இருக்கணும்ல. . . காலம் போன காலத்துல பெத்து வச்சிருக்கேனே!.

இந்த பையனுக்கு ஒரு குறையும் வராதும்மா. . .“
பெருமூச்செறிந்தபடி அம்மா பேச ஆரம்பித்தாள்.

நான் இன்னைக்கு பஸ்ல போனேன்னு சொன்னேல்ல. . . கேளு மல்லிகா. . . நெஞ்சே ஆறலை. . . அங்க வயசான ஒரு பாட்டி என்னமாதிரின்னு வச்சுக்கோயேன். முதியோருக்கான சீட்ல உக்காந்துட்டாங்கம்மா! உடனே பக்கத்திலிருந்த பெண் ஐயய்யோ, எந்திருச்சுருங்க. . . இது அந்தப் பசங்க உட்கார்ற இடம்! வந்தா திட்டுங்க. . .“ என்றாள்.

அப்ப பாத்து பக்கத்துல ஒரு லேடி பேக் மாட்டிட்டு நின்னுக்கிட்டு இருந்தாங்க. எங்கே போறாங்கன்னு தெரியல. . . நீங்க உக்காருங்கம்மா. . . பாத்துக்கலாம்“ னு சொன்னாங்க.

பதிமூணு… பதினாலு… வயசு தாம்மா ஆகும் அவுங்களுக்கு. வாய் பேச முடியாத காதும் கேளாத பசங்கம்மா அவுங்க“.

அவங்களுக்குள்ளயே சைகைலேய பேசிட்டுக் கோபமாக கையைக் காட்டினாங்க.
அதப்பாத்தவுடன் அந்த வயசானஅம்மா எழுந்துட்டாங்க…..

பேக் மாட்டின பொண்ணு உடனே, “நீங்க உட்காருங்க! போர்டுல என்ன போட்டிருக்கு? முதியோர்னு போட்டிருக்கா? அந்தக்குழந்தைகளுக்காகக் காலியா இருந்தாலும் நாங்க நிக்கறோம்.
வயசானவங்க அப்படி இல்லை இல்லையா?

கடவுள் இவங்களைப் படைச்சதுக்கு வருத்தப்படறோம். ஆனா முதியோருக்கு மரியாதை தரணும்னு கூடத் தெரியலையேம்மா. . . “
குரல் வந்த திசையை நோக்கிச் சடாரெனத் திரும்பினாள் பேக் மாட்டிய பெண்.
வெறும் மஞ்சள்கயிற்றுக் கழுத்தோடு, நிறை மாதப் பெண்ணின் இடுப்பில் வாயில் எச்சில் ஒழுகியபடி, நடப்பது எதுவும் அறியாமல் கால் சூம்பியநிலையில் மாறுகண்ணுடன் இருந்த ஏழுவயதுக் குழந்தையைப் பார்த்தாள்.

அவங்க பாக்கறதைப் பாத்து அவங்க மேம் கிட்டே சொல்லப் போறாங்களாம். இந்த பஸ் அவங்களுக்காம். அதுல எல்லாரும் ஏறிட்டாங்களாம்“.

உங்களுக்கு இந்த லேங்வேஜ் எப்படித் தெரியும்?“

எங்க வீட்ல இந்த மாதிரி சொந்தம் உண்டு“ என்றாள் எங்கோ பார்த்தபடி. . .

பொய் சொல்கிறாள் என்பது அவள் பார்வையில் தெரிந்தது. கண் எப்படிப் பொய் பேசும்?“

பயமாயிருக்கும்மா. . . இதுங்க வாழ்க்கையை நெனச்சு!“ என்றாள்.

அதுசரி..நீங்க ஒரு ஆட்டோல போகக்கூடாதா…வயித்துல ஒண்ணு கையில ஒண்ணு……. என்றாள்.

என்னை விடும்மா…வலி வந்தா மரத்துக்கு மறைவுல புள்ளையை பெத்துட்டு அடுத்த நிமிஷமே வேலை பாக்கணும்னு நினைக்கற குடும்பத்துல பிறந்துட்டு… என்வசதியைப்பத்திப் பேசுறிங்களே.. பெண்கள் படிக்கணும்மா—நேர்மையா வாழணும்மா….தான் கற்ற அறிவு பிறருக்குப் பயன்படுற வகையில வாழணும்மா..அடக்கமாகவும் இருக்கணும்மா….இதுங்களுக்குக் கத்துக்கொடுத்த ஆசிரியரைத் தாம்மா தப்பு சொல்லணும்னுட்டு அந்தப் பெண் மடமடவென அடுத்த ஸ்டாப்பில் இறங்கி விட்டாள். அவள் வாழ்க்கையில எத்தனை பிரச்சினைகளைப் பாத்தாளோம்மா! நானும் இறங்கிட்டேம்மா. மனசு தாங்கல. . . சீட் எங்கள மாதிரி இருக்கறவங்களுக்குக் கொடுன்னு கேக்கலை. நாங்க வயசானவங்க அனுபவம் இருக்கு. ஆனா இந்தப் பசங்க என்ன செய்யப்போகுதோன்னு தான் பயமாயிருக்கு. . . யாருக்கும் விட்டுக் கொடுக்கணும்னு தோணலைன்னு நினைச்சுத்தாம்மா பஸ் ஸ்டாண்ட்ல நின்னேன். நீ வந்துட்டே. . . ஆனா கடவுள் தான் இந்தப் பார்க்குக்கு வர வச்சதுன்னு நினைக்கறேன். இல்லாட்டா சிவாவைப் பார்த்திருப்பேனா?“ என்றாள் சிவகாமி.

ஒரு பிள்ளைன்னாலும் அடிச்சுத் திருத்தாட்டியும் அன்பாகவாவது பெற்றோர் திருத்தற சூழல் வரணும்ல…“

மூடிக்கிடக்கிற கருமேகத்தை சூரியன் விலக்கப் பார்த்துத் தோற்றுக் கொண்டிருந்தது. பார்க்கிலிருந்த சூரியகாந்திப் பூக்கள் அப்போது வீசிய மெல்லிய தென்றல் காற்றில் மௌனமாகத் தலை அசைத்து நின்றன.





ஏம்மா! ஒருவேளை காப்பித்தண்ணி கூட கொடுக்கமாட்டேங்கறே!

நான் நாளைக்கு செத்தா என் சொத்தெல்லாம் உனக்குத்தானே ஆத்தா!

இருக்கும்போதே புடவை,நகைன்னு கேட்டே! சரி பொண்ணு ஆசைப்படுதுன்னு அத்தனையும் உனக்குக் கொடுத்து அழகு பாத்தேன்!

கல்லுடைச்சுதாம்மா இந்த வீடு கட்டினேன்! அத்தனையும் என் வியர்வைம்மா! என அழுதபடி படுக்கையில் படுத்தபடி இருந்த 80 வயது கோமளாவை உற்றுப் பார்த்தாள் மீரா.

சாப்பிட்டா உனக்கு இங்க அள்ளிப்போடவும், நனைச்ச துணியை மாத்தறதுக்கும் யார் இருக்கான்னு பார்த்தே!

நானே ஆஃபிசுக்கு போயிட்டு அப்பாடான்னு வரேன்! சோறு சமைச்சு வைன்னு சொன்னேன்.செய்யல.....இதுல வாய்வேறயா!...........

பத்து நாளா உடம்புக்கே முடியல! டாக்டர்கிட்ட கூட்டிட்டுபோன்னு சொன்னேனே!

உன்னைக் கூட்டிக்கிட்டு போறதுக்கு எனக்கு நேரமில்ல! வேணும்னா பக்கத்துவீட்டு அன்னம் கிட்ட சொல்லி போய்க்கோ!

காசு கொடம்மா! போறேன்.........கவர்மெண்ட் ஆஸ்பத்திரின்னாலும் ஆட்டோல இங்கேயிருந்து போறதுக்கு 100 ரூபாயாவது வேணும்ல...........பழைய காலத்து காசெல்லாம் சேத்து வச்சிருந்தேன்.அதெல்லாம் வேணும்னு கேட்டே......நீ மாத்திரை செலவுக்கே பணம் இல்லன்னு சொன்னதாலே எல்லாத்தையும் செலவழிச்சுட்டேன். இப்ப புது ரூபாய்க்கட்டும் காலி..........வீடு ஒண்ணுதான் மீதி......நீ இருக்கறதுன்னா இரு...இல்லைன்னா காலி பண்ணிக்கோன்னு உன்னை என்னால சொல்ல முடியாது...ஒரு பாதியை ஒதுக்கிக்கொடு..வாடகைக்கு விட்டுக்கறேன். உன்கிட்டயும் காசு கேக்கவேண்டாம்பாரு! .......எனக்கும் தன்மானம் இருக்குல்ல...........

புருசனுக்கேத்த இடி கொழுக்கட்டை......எங்க அப்பா...அதான் உம் புருசன் இருக்கறவரைக்கும் இருக்கற வீட்டுக்கு காசு கேட்டான். இப்ப நீ வந்துட்டியா! எதுக்கு நீங்கள்லாம் புள்ள பெத்தீங்க! உங்க வசதிக்கு பெத்துக்கவேண்டியது! அப்புறம் ரோடெல்லாம் பசங்க கஞ்சித்தண்ணி ஊத்தறதில்லன்னு புலம்ப வேண்டியது! கோடிக்கடை குப்புசாமி வேலைக்குப் போய்க்கிட்டிருக்கேன்....நிக்கவைச்சு கேக்கறான்....அசிங்கப்படுத்தறியா!

டொக்!டொக்! என கதவு தட்டிய சத்தம் கேட்ட மீரா, டீவியின் வால்யூமைக் குறைத்தாள்.

லொடக்‘ என எண்ணெயிடாத தாழ்ப்பாள் துருவுடன் கோமளாவின் தலையில் ஈறும்,பேனும் இருப்பதைப்போல, கோமளாவைப் பார்க்கமுடியாமல் தரையில் உடைந்து விழுந்தது.

இது புண்ணியமூர்த்தி-கோமளா வீடுதானே!

டாக்டர் கோட்டுடன் 22 வயதுக்குரிய அழகுடன் ஸ்டெதஸ்கோப்புடன் நின்ற பெண்ணை வெறித்தாள் மீரா.

ஆமா! எங்கிட்ட சொல்லாம டாக்டரை வரச் சொன்னியாம்மா! எனத் திரும்பி கோமளாவைப் பார்த்தாள் மீரா.

நெஞ்சுக்கூடு ஏறி ஏறி இறங்குவதைப் பார்த்தும்,பேச்சில்லாமல் இருக்கும் கோமளாவைப் பெற்ற தாய் என்ற உணர்வின்றி கெழவி இன்னைக்கோ நாளைக்கோ போய்டும்! இருந்து யாருக்கு என்ன பிரயோசனம்! அதான் நாலு நாளா கஞ்சித்தண்ணிகூட கண்ணுல காட்டல...இருந்தா யாருக்காகவாவது யூஸ்ஃபுல்லா இருக்கணும்...பழுத்த இலை, மட்டை உதிரத்தானே செய்யும்.......... அவுங்கதான் சொன்னாங்களா!

வந்து பாத்துட்டு போங்க! வெறுப்புடன் சொன்னாள் மீரா. ஃபீஸ் எவ்ளோன்னு சொல்லுங்க.?..எம் புருசன் வர்ற நேரம்தான்...தர்றேன்.....

எனக்கு யாரும் சொல்லி வரலைம்மா!..............................பழுத்த மட்டையா நம்ம நிக்கறப்பதாம்மா நாம என்ன செஞ்சோம்னு தெரியும். புள்ளைய பெத்துக்கறது அவுங்க சுகத்துக்காகவும், ஊருக்காகவும் இல்லம்மா! நம்ம வாழ்ந்துட்டு இந்த பூமில போனதுக்கப்புறம் நம்ம செஞ்ச நல்ல செயல்களை புள்ளைங்க செய்யணும்னுதாம்மா புள்ளைகளைப் பெத்து வளக்கறது...அசிங்கமா பேசிட்டிங்களேம்மா................. வாழை மரம், ஆலமரம் பாத்ததில்லையாம்மா நீங்க!

அவங்க என்னைப் படிக்க வைக்க உதவி பண்ணாங்கம்மா......இன்னைக்கு ஒரு நல்ல வேலைல இருக்கேன். அவங்கபேர்ல ஒரு ஆஸ்பத்திரி திறக்கிறேன். டிரஸ்ட்ல அவங்களுக்கு மாதாமாதம் பணம் போடுறதுக்கு ஏற்பாடு செஞ்சுருக்கேன். நான் நடத்துற முதியோர் ஆஸ்ரமத்துல அவங்கள வேணும்னா கூட்டிட்டு போய்டுறேன். அட்ரஸ் இப்பதான் எனக்கு கிடைச்சுது......கடவுள்தான் இங்க என்னை அனுப்பினார்னு நினைக்கிறேன்...........

கொஞ்சம் தள்ளுங்க....முதுமைங்கறது எல்லாருக்கும் வரும்...நமக்கு எப்படி இருக்கும்னு யாராலேயும் சொல்ல முடியாதும்மா...

எனக்கு நீங்க ஃபீஸ் ஒண்ணும் தர வேண்டாம்.

முடிஞ்சா அவங்களுக்கு வெந்நீர் வச்சுட்டு வாங்க! தினமும் அவங்களை குளிக்க வைக்கிறீங்களா வெந்நீர்ல?

வேகமாக கோமளாவைத் தொட்ட டாக்டர் நிலா கையை சட்டென மூக்கிற்கருகில் கொண்டு சென்றாள். ஸ்டெத்தை வேகமாக வைத்துப் பார்த்தாள். படுத்திருந்த பாயைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்த கட்டெறும்புகளை வெறித்தாள். தலையணையில் ஏதோ பூச்சி நெளிவதைக் கண்டு வேகமாகத் துக்கி எறிந்தாள்.

அம்மா நீங்க வெந்நீர் வைக்க வேண்டிய அவசியம் இல்ல......நானும் அவங்கள கூட்டிட்டு போகவும் வேணாம்..................

உங்கம்மாவுக்கு சில்லுன்னு பச்சைத்தண்ணியே போதும்...சொல்றவங்களுக்கு சொல்லியனுப்புங்க......அவங்க ஆசைப்படியே செத்தப்பவாவது வந்தேன்னு நினைச்சுக்கறேன்.

மீராவின் பையன் பாலு ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்‘ என உரக்கப் படித்துக்கொண்டிருந்ததை அவள் பெருமூச்சுடன் பார்த்தபடி வீட்டை விட்டு வெளியேறினாள்.













அன்று வானம் ஏனோ விடாமல் தூறிக் கொண்டிருந்த்து.

பகல்பொழுதே இரவோ என்னும்அளவு வானம் இருண்டிருந்தது.

இருகால்களையும் ஒட்டி வானத்தைப் பார்த்தபடி சுவரோரமாக உணர்வே இல்லாமல் சாய்ந்து உட்கார்ந்து இருந்த அம்மாவைக் கிரண் லேசாகத் தடவினான். கையில் பிடித்திருந்த பேண்ட்டின் நுனி விட்டால் கீழே விழுந்துவிடுமோ என்ற பயத்தில் மறுபடியும் அம்மாவின் தோளைப் பிடித்து உலுக்கினான்.

இலேசாகத் திரும்பிய அம்மாவைச் சைகையால் சாப்பிடுகிறாயா எனக் கையை வாய்க்கு அருகில் கொண்டுபோய்க் கேட்டான்.

வெறித்த பார்வையுடன் இருந்த அம்மா ஒன்றுமே பேசவில்லை.

நான் என்ன செய்வது என்று புரியாமல் வாலைக் குழைத்தபடி கிரணுக்கு அருகில் சுருண்டிருந்தேன். பிளாட்பாரத்தில் இன்று ஆதிக்கம் அதிகம் எனக் கிரண் யாரிடமோ பேசியது எனது காதுகளில் விழுந்தது.அவன் கையில் வைத்திருந்த பன் என் பசியைப்போக்குவதாக இருந்தாலும் ஏனோ அது இன்று என் வயிற்றுக்குத் தேவைப்படவில்லை.

சிலேட்டுபல்பத்துடன் எனது உடம்பின் சூட்டிற்காக என்னை இடித்தபடி அமர்ந்த கிரணின் அரவணைப்பே எனக்குப் போதுமானதாக இருந்தது.

இருந்த ஒரு பன்தான் இன்று கிரணுக்குக் கிடைத்திருக்க்க்கூடும் என்று எனக்குப் புரிந்தது. காலையில் அவன் எடுத்துப்போன பிளாஸ்டிக் குப்பைப்பை காலியாக இருக்கும்போதே நினைத்தேன்.இன்று தேர்தல் மீட்டிங் அல்லவா?குப்பையைச் சுத்தமாக வாரியிருப்பார்கள்.அதுதான் பாவம்…ஏதோ அதில் கிடக்கும் இரும்பு,நோட் அட்டை அதை வச்சே கடைக்குப்போட்டு காசு சேத்து எனக்கும்,அம்மாவுக்கும் ஏதாவது வாங்கும்.

ஸ்கூல்ல சாப்பிடற மதியம் சாப்பாடையும் தூக்கிட்டு பையில வந்து இங்கே கொடுத்துட்டு சாப்புடும். இன்னைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே! எனக் கண்களை லேசாக மூடியபடி படுத்திருந்தது கறுப்பி.

என்னடா கிரண்! புத்தகப்பை எங்கே? சட்டையெல்லாம் வேற கிழிஞ்சிருக்குது! குப்பைத்தொட்டிதான் உன் உறவுன்னு ஆகிப்போனதை மாத்தணும்ணுதானடா உன்னை கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கவச்சேன்.ஆனா நீயோ இன்னைக்கு ஸ்கூலுக்கே போகலையாமேடா!

தோளை ஆதரவாகப் பிடித்தபடி கேட்ட கணக்குவாத்தியார் சிதம்பரத்தை அழுதுவிடுபவன்போலப் பார்த்தான் கிரண்.

சார்! நான் யாருக்கும் தொந்தரவா இருக்கக்கூடாதுன்னுதான் ஏதோ இந்தக்கோவிலுக்குப்பக்கத்துல இருக்கற பிளாட்பாரத்துல நானு,எங்கம்மா,கறுப்பின்னு இருக்கோம்.ஆனா அதுகூடப் பொறுக்கலைசார் அந்த தாத்தாவுக்கு!

பாருங்க மழை வர்றமாதிரி இருக்கு..கறுப்பிக்கு மூட வச்சிருந்த பிளாஸ்டிக் பையைக்கூட தாத்தா கிழிச்சுட்டார்.

ஏண்டா! தாத்தா அந்த மாதிரி செஞ்சார்?

பிச்சைக்காரங்களே இல்லாம செய்யப்போறாராம். அதனால எங்களை எங்கேயாவது போகச் சொல்றார்.

நாங்க என்ன பிச்சைக்காரங்களா சார்! உழைச்சுதானேசார் சாப்பிடுறேன்.

பத்து வயதிற்குரிய வேதனை முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்ததைக் கறுப்பி பார்த்துக்கொண்டே இருந்தது.

அன்று கறுப்பி அம்மாவிடம் படுத்து விளையாடிக் கொண்டிருக்கும்போதே குடித்துவிட்டுக்கண்மண் தெரியாமல் தன் தாயைக் கொன்ற கார்க்காரனை நினைத்துப் பார்த்தது.

ஏனோ கிரணைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்போல இருந்தது.

கோடி வீட்டு தாத்தாவிடம் நான் பேசுகிறேன். நீ படுத்துத் தூங்கப்பா! சாப்பிட்டிங்களா மூணு பேரும்…..மழை ரொம்ப வர்ற மாதிரி இருக்கே…..என் வீட்டுக்கு வந்து படுத்துட்டு நாளைக்கு இங்க வரலாம்.இங்க எக்கசக்கமாய் நனையுமே!

பரவாயில்லைசார்.ஒரு பன் இருக்கு…அம்மாவுக்கு இன்னைக்கு என்னன்னு தெரியலை…பசியில்லை போலிருக்கு…..குளிப்பாட்டிவிட்டுட்டு ஆப்பக்காரம்மா போயிருக்காங்க…சோப் வாசனை தெரியுது…….பொட்டுகூட வச்சு விட்டிருக்காங்க…….

மௌனமானார் தாத்தா.

கிரண் வயிற்றில் இருந்த நாள்முதற்கொண்டு பார்க்கின்ற நாடகமாயிற்றே! சிறு பிள்ளையிடம் சொல்லவா முடியும்! தாய்க்கு இருக்கும் அத்தனை உணர்ச்சிகளையும் அந்த கிரணிடம் அவர் பார்த்தார்.

நேற்று நடந்ததுபோல இருந்த நிகழ்ச்சி ஒரு நிமிடம் அவர் கண்ணில் மனதில் ஆடியது.சார்! மிருதுளா அனாதை ஆஸ்ரமப் பொண்ணுசார்! அங்கேயிருந்து கூட்டிட்டுவந்து கல்யாணம் பண்ணிக்கறேன் சார்!எனக்குன்னு ஒரு சின்ன வீடுதான் சார்! வேலை இருக்கு.சாட்சி கையெழுத்து போட வாங்கசார்!

நடந்து முடிந்த கல்யாணத்துக்கு அச்சாரமாய் சார் நான் மிருதுளாவுக்கு வைத்த பொட்டு நல்லாயிருக்கான்னு பாருங்கசார்!எனக் கேட்டுச் சிரித்த கணேஷைக் கண்முன்னே திரும்ப பார்த்தார்.

டு வீலரில்போன அவனுக்கு எமன் குப்பை லாரியிலா வரவேண்டும்? அதுவும் குழந்தை பிறக்குற நேரத்துல என வாயில் அடித்துக்கொண்டு அழுத மிருதுளா அன்று மௌனமானவள்தான்.

குழந்தையைப் படாதபட்டு டாக்டர் கொண்டுவந்ததுமட்டும்தான் தெரியும் அவளுக்கு.

என் புள்ளையே இல்லை....எவ புள்ளை பெத்தா எனக்கென்ன! கை கழுவிய கோடி வீட்டுத் தாத்தாவைக் கரணுக்கு அடையாளமா காட்ட முடியும்! அச்சு அசலாக ஒவ்வொரு நடையிலும் தனது மகனை ஞாபகப்படுத்துகிறானெ என்ற எரிச்சலில் தானப்பா இந்த வேதனை என்பதை அவர் அவனிடம் எப்படி சொல்வார்.

பெண்டாட்டின்னா சமைச்சு மட்டும்தானே போடணும் என்கிற அதட்டலில் அடங்கிய பாட்டியின் முகம் எப்போதாவது சன்னலில் ஆர்வத்துடன் தலை தூக்கும். அந்த தண்ணீர் செம்பு எங்கே? என்ற குரலில் தலை தூக்கிய முகமும் உள்ளடங்கி விடும்.

காரில் போக வேண்டிய பையன் இப்படி குப்பை பொறுக்கி அம்மாவைக் காப்பாற்றுகிறதே! என நினைத்து அவர் வருந்தாத நாளில்லை.

ஒருமுறை தெருவில் உள்ள பெரிய மனிதர்கள் எல்லோரும் சேர்ந்து வீட்டு வாசலுக்குச் சென்று சொன்னபோது அதாரு.....என் வீட்டுப் படையலுக்கு வழி சொல்றது...அதது சோலியைப் பாத்துட்டு போகணும்ல....எடுபட்டுப்போய் குப்பையைக் கொண்டுவந்து வச்சுப் பாக்கணும்னு என மகன் பிரியப்பட்டான்.கடவுளுக்கே தலையில வச்சுக்க பிரியமில்லாமத்தான் அப்படியே எடுத்துட்டுப் போய்ட்டாரு...அந்த மூதேவிக்காக இங்க யாரும் வருவதாக இருந்தால் வரவே வேண்டாம்.

கறுப்பி தெருவோரமாக முன்னங்கால்களிடையில் முகத்தை முட்டுக்கொடுத்தபடி ஒரு கண்ணை மூடியபடி ஓரக்கண்ணால் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தது.

நடக்கவிருந்த கோவில் உற்சவத்தின் பெரும்பங்கு டொனேஷன் தாத்தாவுடையது என்பதால் ஊர் சனம் வாயை மூடிக்கொண்டது.

அம்மா யாரென்று தெரியாமல் அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்தது அவள் குற்றமா! காதலிக்கக் கூடாது என்று எந்த சட்டமும் சொல்லவில்லையே! அப்பாவின் எதிர்ப்பையும் மீறித்தான் அவளைக் கரம் பிடித்தான்.

வாழப் பிடிக்காத கடவுள் கொண்டுபோய் விட்டான் என்று இருந்த வீட்டையும் பிடுங்கி விரட்டிய தாத்தா தான் ஒரிஜினல்தாத்தா என இவனுக்குத் தெரிந்தால்! சிதம்பரம் முயற்சியெடுத்து அவனைப் பள்ளியில் சேர்த்தார்.

ஆப்பக்காரம்மா கொடுத்த சாப்பாடு கைக்குழந்தைக்கும்,கறுப்பிக்கும் போதுமானதாக இருந்தது. சுவரை வெறித்தபடி பார்த்திருக்கும் மிருதுளாவிற்கு கஷ்டப்பட்டு வாயைத் திறந்து ஊட்டிச் செல்லும் ஆப்பக்காரம்மாவிற்குக் கோவில் வைத்துத்தான் கும்பிடவேண்டும்.

ஓரளவு விபரம் ஸ்கூலில் சொல்லித் தெரிந்தபிறகு,

ஒரு நாள் ஆப்பக்காரம்மாவிடம் சென்றான்.

நாளையிலேருந்து சாப்பாடு வேண்டாம்.

ஏன்?ஸ்கூலிலே காலையில் தருகிறார்களா!

இல்லை.பிச்சை போடறமாதிரி நினைக்கிறேன்.

விறகு அடுப்பையே ஒரு கணம் மௌனமாகப் பார்த்தபடி இருந்த ஆப்பக்காரம்மா ஆறுவயது கிரணைச் சட்டெனத் திரும்பிப் பார்த்தாள்.

என் பேரன் இருந்தா நான் போட மாட்டேனா! என் மக இருந்தா குளிப்பாட்டி வுட மாட்டேனா! என்ன பேச்சு பேசுற நீ இந்த வயசுல!

உங்க காசா இருந்தா பரவாயில்லை.நீங்களே வட்டிக்கு வாங்கி எனக்கு சோறு போடறீங்க......அது தப்பில்லையா?

உழைச்சு கொண்டு வர்றேன்.முடிஞ்சதைப் போடுங்க...ஆறு வயதில் அறிவுக்கு மிஞ்சிய பேச்சைப் பேசும் பையனைப் பார்த்து சரி என்றாள்.ஆமா! உனக்கு இந்த வயசுல யார் வேலை தருவா?

எங்க வளர்ந்தேனோ அதுவே எனக்கு வேலை தரும்.

ட்ட்ட்டாய்ங்! அங்க பாருங்க குப்பைத் தொட்டியை! அதுல பார்த்தீங்களா!எத்தனை புக்! அட்டைப் பொட்டிங்க! பாட்லு....இதெல்லாம் போட்டா கடையில காசு கொடுப்பாங்க...

படிப்பு என்னைக்கும் கைவிடாதுப்பா! படியேன்....

அதுவரைக்கும் என்ன செய்ய...இது போதும் இப்போதைக்கு........4 வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருந்த தொழிலுக்கு முட்டுக்கட்டை போட்ட தாத்தாவை மனசுக்குள்ளே திட்டித் தீர்த்தான்.

கறுப்பி கிரணை ஓரக்கண்ணால் உற்றுப் பார்த்தபடியே இருந்தது.

யாரோ இலேசாக பூனைபோல நடந்து வரும் சத்தம் கேட்க மல்லிகைப்பூவாசனையில் நிமிர்ந்தான் கிரண். சன்னலில் தாத்தா முகம் கண்டால் உடனே மறைந்துகொள்ளும் ஜீவனாயிற்றே இந்த அம்மா என ஒரு கணம் மலைத்தான். அந்த பாட்டி கையில் என்னவோ இருந்ததை அப்போதுதான் பார்த்தான். ஒரு பெட்டியுடன் கூடிய படுக்கைமெத்தையுடன் இருந்ததைப் பாட்டி தரையில் வைத்தாள். இதை எடுத்துக்கிட்டு எல்லோரும் இங்கேயே படுத்துத் தூங்குங்க! அந்தப் பெட்டியில் நிறைய பிஸ்கட்டும்,பழமும் வச்சிருக்கேன்.எடுத்துக்கோங்க! ஆனா, இங்கிருந்து மட்டும் போய்டாதீங்க யாரும் எனக் கையெடுத்துக் கண்ணீர்வழியக் கும்பிட்டாள். ‘ஏன்! பாட்டி நாங்க போகக்கூடாது என்று சொல்றீங்க‘ என்றான் கிரண். குரல்கூட அப்படியே இருப்பதைப் பாட்டி பெருமூச்சுடன் பாரத்தவண்ணம் என் பையன் அப்படியே உன்னை மாதிரியேதாம்ப்பா இருப்பான்.அவன் இறந்து ரொம்ப வருஷங்களாச்சா! அதான் உன்னை என் பையனாப் பார்க்கறேன்னு சொன்னவளை ஏதோ புரிந்ததுபோல கறுப்பி

வேகமாக வாலை ஆட்டியது.





எனக்குத் தூக்கம் வருகிறது. வீட்டுக்குப் போகலாமா அப்பா? இரு அப்பாவுக்கும்,அம்மாவுக்கும் வேலை இருக்கு….முளை விட்டுடுச்சுன்னா ரொம்ப கஷ்டம்..வெளியே மழை பெய்கிறது….குடை வீட்ல மாட்டிக்கிச்சு…..போய் அப்பா தேடினாலும் அம்மா எங்கே வச்சாங்களோ…தேடணும். அப்பா சாக்கை விரிச்சு அதுல ஃப்ளைவுட் பலகை போட்டு வச்சிருக்கேன்.போய்த் தூங்கு…..இல்லைன்னா இந்த கள்ளிப்பெட்டியிலேயே சாஞ்சு தூங்கு…….போறப்ப அப்பா தூக்கிட்டுபோறேன்…….

கரோலினாவிற்கு முழுக்க சேரிலேயே சாஞ்சு குடிசைக்கட்டையில் மாட்டியிருந்த வேலுடைய முருகனைப் பார்த்துக்கொண்டே தூங்கிய நாட்கள் நினைவுக்கு வந்தது. இந்த முருகனுக்குத்தான் இந்தக் கதம்பமாலை எவ்வளவு அழகாக இருக்கு. ஆனா அந்த இடத்துல ஊதுபத்தி வச்சு புகை வந்துடுச்சு……முருகனுக்குச் சுடுமோ…என நினைத்த குழந்தை நாளை மௌனமாக அசைபோட்டாள் கரோலினா.

நேரமில்லைம்மா! அதனால அம்மா இப்படியே பூவை வச்சிருக்கேன். பின்னாடி கண்ணாடியில் திரும்பிப் பாத்துக்கோ! கண்ணுக்கு மை வச்சிருக்கேன். அப்பாட்ட காட்டு! அப்பா நல்லாயிருக்கான்னு சொல்வார். வேகமாக அப்பாவிடம் காட்ட ஓடிய நாளினை எண்ணிப் பார்த்தபடி பேப்பரில் செல்பி ஃபோட்டோ குறித்து ஒபாமா எடுத்த செய்தி வந்திருப்பதை ஒப்பிட்டுப்பார்த்தாள்.

அன்று இந்த வசதி இல்லை என அவள் வருத்தப்படவில்லை. காலக்கடிகாரம் அறிவியலில் சிக்கி வந்துள்ளதை எண்ணி மனதினுள் சிலாகித்தாள்.

அப்பாவைப் பார்த்து 5 மணி நேரம்தான் ஆச்சு………….

மருந்துவாடைமெல்ல எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும் ஏசி கதவினை லேசாகத் திறந்து அறிவியல் முன்னேற்றகருவிகளின் உயர்ந்த வயர்களுக்கு நடுவில் பீப்…..பீப்……எனக் கத்தும் பச்சை கிராஃப்கோடுகளைப் பற்றி கவலைப்படாது 8 வருடங்களாக இதே நிலையில் உறக்கநிலையிலேயே இருக்கும் அப்பாவின் தலையை லேசாகப் படித்தாள். வந்துட்டியா……!.

நீ இங்கே இருந்தாத்தான் எனக்கு நல்லாயிருக்கும் எனச் சொன்னது அப்பா இப்போது பேசியதுபோல இருந்தது.

கன்னத்தில் கொசு உட்கார்ந்திருந்ததை லேசாகத் தட்டினாள்.

மாம்பழம்மாதிரிம்மா இவளுக்குக் கன்னம்…….இப்படி தூங்கித்தூங்கி விழுந்தான்னா என்னடா செய்றது…….அப்பா இல்லையேடா….!.இவளை எப்படிடா தூக்கிப்போவது?

உப்புமூட்டை தூக்குவோம்டா!

டேய்! கீழே போட்டுடாதீங்க அவளை! அம்மா எச்சரித்தாள்.பூசணிஅக்காள் தெறிச்சுடுவாள் என அம்மா சிரித்தாள்.

அதெல்லாம் போடமாட்டோம்…..பத்திரமாக வீட்டுக்குக்கொண்டுபோய்டுவோம்.அப்படியே சாப்பிட்டுட்டு வர்றோம்.

ஏண்டா தொந்தரவு செய்றீங்க! இரண்டு பேரும்..நான்தான் தூங்கறேன்ல…தொந்தரவு செய்யாதீங்கடா……

ஏய்! கரோ…அப்பா இல்லை.அடம் பிடிக்காதே….அப்பா மாதிரி என்னால தோள்ல தூக்கிப்போடமுடியாது. உருண்டு விழுந்தா அப்பா பிளாஸ்டர்தான் போடணும். இனிமே …வம்பு பண்ணாதே….உப்புமூட்டை ஏறிக்கோ! கொஞ்சதூரம்தான் அதுவும். அதுக்கப்புறம் நடந்து வருவியாம்.அண்ணன் கதை சொல்வேனாம்.நீ கேட்டுட்டே நடந்து வருவியாம்.அதெல்லாம் முடியாது போடா!

அப்ப என்னைக் குண்டுன்னு சொல்றியாடா!

டேய்அவ ராட்சசிடா……அவகிட்ட தூங்கி வழிஞ்சான்னா பேச முடியாதுன்னு உனக்குத் தெரியாதா! எகனை, முகனையா பேசும்.அப்பத்தா மாதிரி! பேசாம பாதிதூரம் இரண்டுபேருமா இந்த கை பக்கம், அந்த கை பக்கம் போட்டுக் கூட்டிட்டுபோய்டுவோம்..எனப்பேசியதைக்கேட்ட கரோ,கையிலிருந்த காக்கை இறகால் கையைத் தட்டியபடி எழுந்தாள். போட்டானுங்கன்னா என்னாகுறது நம்ம கதி! பேசாம எழுந்திருச்சு நடந்தே போய்டுவோம்.

இவனுங்க சொல்ற கதையைக்கேட்டுட்டு…அதுலயும் அண்ணன் பேய்க்கதை சொன்னான்னா அவ்வளவுதான்! ரொம்ப நல்லாயிருக்கும். வீட்ல பொம்மை பிஸ்கட்வேற அய்யாப்பா வச்சிருப்பார். தின்னுக்கிட்டே தூங்கலாம் என்று விருட்டென எழுந்த நாளை எண்ணி மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்.

என்னால் ரொம்பநேரம் உப்புமூட்டை எல்லாம் தூக்க முடியாது. பாதிநேரம் கதை சொல்வேனாம்…கேட்டுக்கிட்டே கீழே போடமாட்டோம் என்று சொன்னசகோதரர்கள் சொன்னதுபோலவே கீழே விழாமலே தாங்கினார்கள் உயிருள்ளவரை..

முதல்முறையாகச் சகோதரர் இருவரும் இறந்த அன்று இந்த முருகன் ரொம்பமோசம்! என வைதது அவளுக்கு ஏனோ நினைவுக்கு வந்தது.படித்ததோ 3ஆம் வகுப்பு. என்ன அறிவு இருக்கும்? அப்போது.இப்போது மாதிரி படித்திருந்தால் அன்று தெரிந்திருக்கும்.நாம் செய்யும் கர்மாதான் நம்மைத் தொடரும் என்று.கல்யாணமான 3ஆவது மாதத்திலேயே ஜூரம் என்று ஹாஸ்பிடல் சென்றவன் ஊசி மாற்றிப் போட்டதால் பிணமாக வந்ததை ஏதோ படுத்திருக்கார்போல! மாத்திரை தூங்கறதுக்கு கொடுத்திருக்காங்கபோல என நினைத்த ஞாபகம் வந்தது. இப்போ எந்திருச்சுருவார் என அவருக்கு வியர்க்கும்..இருங்க! விசிறியால வீசறேன்னு சொன்னதும் அருகில் இருந்த பக்கத்துவீட்டுமாமி மௌனமானாள்.அம்மா வேகமாக உள்ளே சென்று கதவைச் சாத்திக்கொண்டாள். அண்ணன் வேகமாகக் கையைப் பிடித்துக்கொண்டு விசிறமுடியாமல் செய்தபோது ஏண்ணா! ஏன் அப்படிச் செய்றே! பாரு அவரு அசந்து தூங்கறாரு! ஒரு பக்க உதடு மட்டும் லேசா விரிஞ்சு புஸ்சுன்னு காத்துவரும்…ஆனா என்னன்னு தெரியலை…..இப்ப வரலை…இந்த மாதிரி இருந்தாருன்னா பத்து நிமிஷத்துல எழுந்திருச்சுவாருன்னு அர்த்தம் எனக் கண்ணை விரித்துப் பேசிய தங்கையை என்னசெய்வதென்று தெரியாமல் விழித்துப்பார்த்த அண்ணன் நெஞ்சைப் பிடித்து விழுந்ததும், தான் மயக்கமாகி இருந்ததும் ஞாபகத்திற்கு வந்தது.

விித்துப்பார்த்ததும் வீடு நிறைய ஆட்கள் வருவதும்போவதுமாக இருந்ததையும்,தான் அப்பா வீட்டில் படுத்திருப்பதையும் பார்த்தாள்.மெல்ல நினைவுபடுத்திப்பார்த்தாள். அண்ணனுக்கு என்னாயிற்று! நாம பாட்டுக்கு மயக்கமாயிட்டோம். படுத்தா உடனே எழுந்திருக்கிற பழக்கமே இல்லை எனத் திட்டும் அப்பா அன்று ஏன் வந்து என்னை எழுப்பவில்லை.எங்கு சென்றார்் என் கணவர்? கொல்லைப்பக்கம் இருக்கும் ஜாதி மல்லி பூத்த வாசம்இங்குவரை மணக்கிறது…அம்மாவும் பறிக்கவில்லையா! என எழுந்துகொள்ளமுயன்றாள்.

நீ ஒண்ணும் எழுந்துக்கவேணாம்…படுத்துக்கோ…..டம்பு பத்துநாளா அனலா கொதிச்சுது…..இப்பதான் தன்நினைவுக்கு வந்திருக்கிறாய்… இட்லி இருக்கு! பல்லைத் தேய்ச்சுட்டு சாப்பிடு…….உடம்பை வெந்நீர் வச்சுத் துடைக்க ஏற்பாடு செய்கிறேன்.

எங்கேம்மா அண்ணன் இரண்டுபேரும்…ஆளே காணோம்…இவரும் இல்லை..உடம்பு ஜூரம் விட்டுடுச்சா அவருக்கு…பாருங்க எல்லாருக்கும் ஜூரம் வருது………

எல்லோரும் வயலுக்கு உரம் வாங்கணுமாம்.அது கொல்லைத்தொலைவுல இருக்குல்ல….அதான் வர நேரமாகும்னு சொல்லிட்டுப்போனாங்க..அப்பா மட்டும் இருக்கார்.இதோ! அப்பாவே வந்துட்டாரே…எனச் சொல்லிவிட்டு எதையோ மறைத்துப்பேசுவதுபோல கரோலினாவுக்கு அப்போது தோன்றியது.

அப்பா உங்களை ஒரு கை பிடிச்சு நடக்கட்டுமாப்பா! கீழே விழுந்துடுவேனோன்னு பயமாயிருக்கு! நீ விழ மாட்டேம்மா அப்பா இருக்கறவரைக்கும்! எனக்கூறிச் சிரித்தார்.

அப்பா கொடுத்த கையை இன்று சுருங்கி சிறிதாகி ஊசியால் குத்தி இரணமாகி பிளாஸ்டரின் நடுவில் இருந்ததைப் பார்த்தாள்.

அம்மா பறிக்காமல் விட்டிருந்த ஜாதிமல்லிகையைப் பறிக்கச் சென்றபோது பக்கத்துவீட்டுப்பாட்டி வெள்ளைச்சேலையுடன் வேகமாகவந்து அதுதான் அவனை முழுங்கிட்டியே! நீயும் நானும்தான் ஒண்ணாயிட்டோமே! இப்ப எதுக்குடி உனக்கு இந்த பூ ஆசை எல்லாம். பூவே அவனுக்காகத்தானடி! அவனே இலலையேடி! பத்தும் பத்தாததுக்கு உன்னுடைய அண்ணன்மாருகளும் சேர்ந்துல்ல போய்ட்டானுங்க… இதுக்குத்தான் உங்கப்பனை அன்னைக்கே சொன்னேன். பொண்ணைப் படிக்கவைச்சு மேஜராக வந்தபிறகு கல்யாணம் செய்யுன்னு கேட்டானா! ஜாதகம் அமோகமா இருக்குன்னு முடிச்சுட்டான் பதினைஞ்சு வயசுல…என்ன குரு தசையோ! என்ன கண்றாவியோ! போ! என்னைமாதிரி நீயும் மூலைல உட்கார்ந்து உருத்ராட்சத்தை உருட்டிக்கிட்டு

இரு! எனக் கோபத்துடன் வந்து வீசிய வார்த்தைகளின் அமில நிஜத்தை அப்போதுதான் உணர்ந்தாள் கரோ. பூ பறிக்க வைத்த பந்தலிலிருந்து கையை எடுக்க நினைத்த அவளின் கையை அப்பா பிடித்தார் வேகமாக. நீ பறிச்சுக்கோ! கூடவே பக்கத்துல துளசியும் இருக்குபாரு! சேர்த்துக்கட்டு! சாமிக்கும்போட்டு உனக்கும் வேணும்னா தலையில வச்சுக்கோ! உலகத்துல மனசு சந்தோஷம்ங்கறது அவங்க மனசைப்பொறுத்தது.அடுத்தவங்களுக்குத் தீமை தராததா இருந்தா அது போதும். துளசி கதையே கற்புக்கரசி கதைதானே தவிர பெண் பூ வச்சுக்கக்கூடாதுன்னு சொல்ல்லையே! இதைக் கேட்டதும் முகத்தைச் சுழித்தாள் பாட்டி.

உங்கப்பனுக்கு ஒரே நேரத்துல 3 சாவைப் பாத்தான்ல.அதுல மூளை குழம்பிப்போச்சு……சொல்லியபடி.கதவை பட்டென்று அடித்துச் சார்த்தியபடி உள்ளே சென்றாள் பக்கத்துவீட்டுப்பாட்டி. உலகத்தை யாரோ தலைகீழாகச் சுற்றியதுபோல மறுபடியும் கிர்ரென வரவே, பந்தலைப் பிடித்துச் சமாளித்தாள் கரோலினா. லோகத்துல இன்னும் என்னவெல்லாம் பாக்கியிருக்கோ….இதெல்லாம் பார்க்கணும்னு தலையில எழுதியிருக்கோ அதுதானே நடக்கும்.அதைவிட்டுட்டு பகவானுக்குத் துளசி மாலை போடச்சொல்ற அப்பனை என்ன செய்றது…தோஷம் வந்துடுமே…..கோடியாத்துமாமாகிட்டசொல்லி இவாளை முதல்ல ஊரைவிட்டே ஓட வைக்கணும்.. பதினைஞ்சு வயசுல கல்யாணம் செஞ்சது தப்பு. படிக்கவைக்காதது அதைவிட தப்பு… இப்பபார் செய்யுற வேலையை….!

சும்மா கத்தாதேம்மா…..எந்தக்காலத்துல இருக்க நீ? அது படாதபாடுபட்டு பத்துநாள் கழிச்சு புது ஜனனம் எடுத்து முழிச்சுப்பார்த்து வந்துருக்கு…அதுகிட்டேபோய் உன் வெள்ளைப்புடவை,மடின்னு உபன்யாசம் செய்யாதே. தெருவுல இருக்கற பெரியவங்க எல்லாரும் சேர்ந்துதான் இந்தப் பொண்ணுக்கு அப்படி ஒரு முடிவை நாங்க கொடுத்திருக்கோம். ஏன்னா உன்னை நான் பார்க்கறேன்மா…அத்தையை நான் பார்த்திருக்கேம்மா! என்னால முடியாதும்மா இனியும்……..! கத்திய வெள்ளைப்புடவை பாட்டி அடங்கினாள். அவா வேற ஜாதிம்மா.. இருந்தாலும் பெண்களுக்கு கிட்டதட்ட ஒரே நியாயத்தைத்தான் தர்றீங்க பொம்பளைங்களாச் சேர்ந்து…!ஆம்பளைங்க நாங்க இல்லை இதுல…இது மாறணும்…..பேசிய சாம்புமாமாவை சன்னல் வழியாக வெட்கத்துடன் பார்த்து பயந்து உள்ளே ஓடினாள். கரோலினா.அப்பாவிடமும்,அம்மாவிடமும் பாடங்கள் நிறைய படித்தாள்.மேற்கொண்டு என்ன படிக்கவேண்டுமோ அதையெல்லாம் முடித்தாள்.

கணவன் இறந்தபின்தான் உலகத்தில் உள்ள பல சூட்சுமங்கள் மெல்ல அவள் மனதில் உரைத்தது. தான் மயக்கம் போட்டு விழுந்ததுமுதல் ஹார்ட்அட்டாக் என அண்ணனும், கூடவே தோட்டத்திற்குச் சென்ற மற்றொரு அண்ணனைப் பாம்பு தீண்டி இறந்ததையும் பக்கத்துவீட்டு மாமாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள். கல்யாணம் பண்ணிக்கிறியா அம்மா மறுபடி என அப்பா கேட்டபோது ஒருவனுக்கு ஒருத்திதாம்ப்பா! போதும். எங்காவது குழந்தை கிடைச்சா சொல்லுங்க! வளர்த்துக்கறேன். பேச்சுத்துணைக்கு ஆள் வேணும்ல….வருடங்கள் தத்தெடுக்காமலேயே ஏனோ சென்றுவிட்டது.

ஏதோ அப்பா கொடுத்த தைரியத்தில் படித்து ஒரு வேலை வாங்கி ஒரு ஆஃபிசில் கவர்மெண்ட் உத்தியோகத்தில் இருந்து முதல்மாத சம்பளத்தைப் பார்த்த சந்தோஷத்தில் கடமை முடிந்தது என உயிரை விட்ட அம்மாவை மனதிற்குள் நினைத்துக்கொண்டாள். அப்பாவிடம் உங்களது ஆசை என்ன அப்பா என்று பலமுறை கேட்டிருக்கிறாள்.அப்பா நேரம் வரும்போது சொல்கிறேன் என வயக்காட்டுக்குச் சென்றுவிடுவார். இத்தனைவருடங்களாகியும் மாறாத அப்பா ஒவ்வொரு காய்,பழம் பழுத்தபோதெல்லாம் உற்றுப்பார்த்துப் பல மணிநேரங்களுக்குப்பின்தான் அனுப்புவார். இறந்த பிள்ளைகளாக நினைப்பாரோ என கரோ நினைத்ததுண்டு. ஆனால், சமீபகாலமாக அவர்முகத்தில் ஏனோ சிரிப்பே இல்லாதிருந்ததைக் கவனித்தாள். ஈசிசேரில் சாய்ந்திருந்த அவரை, அப்பா என மெல்லக் கூப்பிட்டாள். தலை முழுதும் நரை இருந்ததைக் கவனித்த அப்பா ஏம்மா! இப்போல்லாம் டை நிறைய வந்துருச்சே! கெமிகல் இல்லைன்னு வேற சொல்றாங்களே! போடறதில்லையா நீ! காய்,பழம் இதுக்கெல்லாம்கூட சத்துபோட நிறைய மார்க்கெட்டுல வந்துருச்சாம்.ஃபாரீன்லருந்து வருதாம்மா! அந்து சொன்னான். அதுலவர்ற வியாதியையும் சேர்த்து…..மௌனமாக அப்பா இருந்ததற்கான காரணத்தை அப்போதுதான் கண்டுபிடித்தாள் கரோ.

நான் பலமுறை இதுபத்தி நம்ம ஊர்ல பேசியிருக்கேன்.எல்லாருக்கும் விளைஞ்சதுக்கும், வேலை செஞ்சதுக்கும் ஒண்ணுமில்லையான்னு கோபப்பட்டு இடத்தை ஃப்ளாட்போட்டு வித்துட்டுபோய்டணும்ணு பேசுறாங்க..தண்ணியில்லை…ஒண்ணுமில்லை…பக்கத்துல இருக்கற ஆத்துல எடுத்தா நீ வேற ஊரு……ஜாதி…அது இதுன்னு பேசுறான்….ஏன் உங்களுக்குன்னு என்னையே திருப்பறானுங்க……நீ என்னம்மா சொல்ற……?முதல்முறையாக வாழ்க்கையில் சொத்துகுறித்து அப்பா தன்னிடம் பேசியதை நினைத்துச் சந்தோஷப்பட்ட கரோ எனக்கு ஏம்ப்பா இந்தப் பெயர் வச்சீங்க! நான் எங்க வச்சேன்?

நானும்,அம்மாவும் 5 பெயர் செலக்ட் செஞ்சோம்.அதுல உனக்குப் பிடிச்சதை நீ வச்சுக்கிட்டே!பெயர்கூட என் இஷ்டம் 5 கொடுத்ததுதான். ஆனா தேர்ந்தெடுத்தது எல்லாம் நீதான். அதுதான் எனக்குப் பிடிச்ச பெயர். அம்மாகூட இதுபற்றி ரொம்பப்பெருமையாய்த்தான் பேசுவா!இது என்னோட படிச்ச பொண்ணு பெயரு.அந்த பொண்ணு நான் சாப்பிடாம பாதிநாள் இருந்தப்ப தன்னோட டிஃபன்பாக்சைத் தரும். வயக்காட்டுல இருந்துட்டு 3 கிலோமீட்டர் நடந்துட்டுபோய்த்தான் பள்ளிக்கூடத்துல படிச்சேன். சமயத்துல ஆத்துல லேசா வெள்ளம் வரும்.இடுப்பு உசரத்துக்கும்மேல. இப்பகூட எனக்குப்பிறகு நீதான் இருக்கப்போறே! டிரஸ் நனைஞ்சா ஸ்கூல்ல தரையில உட்கார்ந்து பாடம் படிக்கமுடியாதுல்ல! டிரஸ்செல்லாம் அப்படியே தலையில வைச்சு,பையை வச்சுக்கிட்டு போய்ச்சேருவோம்.என்னத்தைச்சொல்ல! அன்னைக்கு இருந்தமாதிரிதான் இன்னைக்கும் கிராமங்கள்ல பள்ளி இருக்கு…எந்த முன்னேற்றமும் தெரியலை…அன்னைக்கு என் வயிற்றை நிறைச்ச அன்னபூரணியாத்தான்மா அவ எனக்குத் தெரிஞ்சா! சிலுவைபோட்ட அவ மதம் எனக்குத் தெரியலைம்மா! அன்னைக்குத் தெருவுல உன்னைப் படின்னு ஊக்கப்படுத்திய அப்துல்காதரும், செருப்பு தைச்சுக்கிட்டு உனக்கு புக் வாங்கிக்கொடுத்தான்பாரு முனியாண்டியும்! வாய்க்கால் தள்ளி உடம்பெல்லாம் மலத்தைப்பூசி எழுந்து கழுவிட்டு சாமியைக்கும்பிட்டு உம்பொண்ணு நல்லாவருவான்னு சொல்லி அவங்கொடுத்த பேனாதாம்மா இப்போ நீ பிடிக்கிறது……நீயும் அதேமாதிரி எந்த இடத்துலேயும், எந்த நாட்டிலேயும் பிரிவினை பேசக்கூடாது சரியாம்மா! இன்னைக்கென்னடான்னா பசங்க பொம்பளைப்பசங்களை விதவிதமாப் படமெடுத்து வருதுங்கன்னு நியூசா வருது….காரணம் என்ன தெரியுமா! அதுங்களுக்கு வழிகாட்ட யாரும் இல்லை…சொன்னா கேட்பாங்க…ஆனா சொல்ல சுயநலமில்லாத ஆசிரியருங்க வேணுமுல்ல………. அப்பா இருக்கும்வரை தன்னை உயிருடன்இருக்கச்செய்யுமாறு அடிக்கடி முருகனிடம் வேண்டிய அவள் சரி! எங்கோ பேசி தலைப்பு எங்கோ செல்லுது……! இடத்தை என்ன செய்யலாம்? கேட்டிங்கள்ல……….வானம் பார்த்த பூமிதானே! கிணத்துலயும் தண்ணியில்ல….இப்போதைக்கு வைங்க…ஆஃபிசில் நல்ல மனிதர் ஒருவர் இருக்கார். கேட்போம்.எனக்கூறிச் சென்றாள்.ஆனால் அன்று மாலையே குளிக்கறதுக்குச் சென்றவர் பக்கவாதம் வந்து விழுந்து இதோ! கோமாஸ்டேஜ் வருடக்கணக்காய். தன்னைப் பற்றி யாராவது எழுத மாட்டார்களா என மனிதர்கள் பலபேர் நினைக்கிறார்கள்.ஆனால், என்கூட இருந்தவர்கள் எல்லோருமே பலன் கருதாமல் சத்தமில்லாமல் என்னை ஏற்றி விட்டிருக்கிறார்கள் என்பதை மனப்பூர்வமாகக் கரோ உணர்ந்தாள்.

நடைமுறை உலகிற்குத் திரும்பி அப்பாவின் தலையில் கைவைத்தவள் உங்கள் ஆசைப்படியே அந்த இடத்தை ஒரு படித்த ஏழை விவசாயிக்குக் கொடுத்துவிட்டேனப்பா! எனக்கு நிலத்தைவிட உங்கஆசைதான் முக்கியம்னு நீங்க எழுதி வைத்த டைரிதாம்ப்பா எனக்குச் சொன்னது என தனது கையின் மென்மையான அழுத்தத்தை அப்பாவின் நெற்றியில் அழுத்தினாள். அப்பாவின் நெற்றி அந்த சூட்டை இனங்கண்டு லேசாகச் சிலிர்த்ததை அவள் உணர்ந்து புன்னகைத்தாள்.



















அங்கே என்ன பார்வை?அதட்டினான் ராபர்ட்.

லூசி அவன் கேட்கும் கேள்விக்கு பதிலே சொல்லாமல் கார் கண்ணாடியின் வெளியே கையைப் பதித்து முத்தமிட்டு டாடா சொன்ன குழந்தையைப் பார்த்தபடி இருந்தாள்.

குழந்தை நம்ம பிரபு மாதிரி அழகாயிருக்குல்ல என்றாள்.

அதோ அந்த பஸ்சைப் பார்த்தாயா! எத்தனை பாசஞ்சர்ஸ் போறாங்க! அதுமாதிரிதான் லைஃபும். யாரும் கடைசிவரைக்கும் வர மாட்டாங்க! புரிஞ்சுக்கோ! என்று அலுத்துக்கொண்டான் ராபர்ட்.

அங்க விக்குற பொக்கே எனக்கு வேணும்.வாங்கிட்டு வர்றீங்களா!

இப்ப எதுக்கு அது?

என்னை முதல்ல ஆர்ஃபனேஜ்ல பார்க்க வந்தப்ப பொக்கே வாங்கிட்டு வந்தீங்க. அப்ப நான் கேட்டதுக்கு இதுல இருக்கற பூக்கள் ஒண்ணொண்ணும் வேறுமாதிரி இருந்தாலும் ஒண்ணா கட்டி வைச்சிருக்கறதுமாதிரி குடும்பம்னு சொன்னீங்கல்ல. இப்ப நினைவுக்கு வந்துச்சு....

நமக்கு இருக்கற உணர்வு ஏன் நம்மைப் பெற்றவர்கள்கிட்ட இல்லை ராபர்ட்.?..............................

என்னை ஒரு குப்பைத்தொட்டி கொடுத்திச்சு................................

உன்னை ஒருத்தி நேராக ஹோம்ல போட்டுட்டு போய்ட்டா.......

நீ ஃபாரீன்ல படிச்சே.........அங்கே படிக்கிறப்ப என்னைப் பார்த்தாய்...பிடிச்சிருந்துச்சு ........மோதிரம் மாத்தினோம்........லைஃப்ல செட்டிலானோம்.

இயந்திர கதியில மலேசியாவுல வேலை கிடைச்சு பையன் பிறந்து பிரபுன்னு பேரு வைச்சோம்..பொக்கேவைப் பிடி...மீதியை மறந்துடு...........

நாம சென்னைல செட்டிலாயாச்சு........காரணம் உனக்கு தமிழ் ரொம்பப் பிடிக்கும்......நீயோ..நானா செத்தா ஒண்ணும் பிரச்னை இல்லாத அளவு செஞ்சுட்டேன்.போதுமா..................கோபமாகப் பேச எழுந்த ராபர்ட்டின் நாக்கு லூசியின் முகத்தைப் பார்த்தவுடன் சாந்தமாக வார்த்தைகளை உதிர்த்தன.

என்றோ அவன் உன் ஹேரும்,கண்ணும் இந்தியனுக்குரியமாதிரி இல்லைன்னு சொன்னதை மனசுல நினைச்சு வருத்தப்படாதே...

சட்டெனக் கண்ணில் துளிர்த்த நீரை அடக்க இயலாமல் உதிர்த்தாள் லூசி.

ஏன் இதெல்லாம் நம்ம அப்பா,அம்மாவுக்குத் தெரியலை....?

தெரியலைம்மா....ஹூம் கொட்டினான் ராபர்ட்.

பாரு! நடந்தே கன்னிமராவரை வந்துட்டோம்.உள்ளே போகலாமா!

அந்த ஊஞ்சல் இருக்கற இடத்துக்குப் பக்கத்துல போய்டலாம். அங்கே ஜில்லுன்னு காற்று வரும் பாருங்க....சொர்க்கமே இதுதானோன்னு தோணும்........

கிரீச்!கிரீச் எனச் சத்தம் கேட்க ஊஞ்சலின் பக்கம் கண் திருப்பினாள் லூசி.

சுடிதார் பெண் தனது குழந்தையை ஊஞ்சலில் ஆட்டி விட்டுக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

எனக்கும் அம்மா இருந்திருந்தால் இப்படித்தான் .............இல்லையா ராபர்ட்.

பிரபு எனக்குக் குப்பைத் தொட்டிதான் சொந்தம்னு நினைச்சுக் கேட்டான் பாருங்க.....அதுதான் மனதெல்லாம் வலிக்குது.....

எனக்குன்னு ஒரு அம்மா படத்தை அவன்கிட்ட காட்டியிருந்தேன்னா அவன் பேசியிருக்கமாட்டான் இல்லையா?

அவன் ஃப்ரெண்ட் சர்க்கிள் அந்தமாதிரி.....

விதண்டாவாதம்தான் எல்லாம்............... பெரியவனாய்ட்டான்ல....சொந்த விஷயங்கள்ல தலையிட முடியாதல்லவா!

நமக்கும் இதுதான் வசதி.....சொத்து எதையும் அவனை நம்பி கொடுக்கலை.........கொடுத்தது பாசம்தான் இல்லையா!

ஏன் அந்த உணர்ச்சி நம்ம பெற்றோருக்கு இல்லை......?

இப்படியெல்லாம் நடக்கும்னு அவங்களுக்குத் தெரியுமா?

சிலபேருக்கு வாழ்க்கையே விளையாட்டாப்போச்சு...........

தாலாட்டறதுக்கு அம்மாவும்,கையைப் பிடிச்சு நடக்கறதுக்கு அப்பாவும் இருக்கற குடும்பத்துல பிறக்க வைன்னு கடவுள்கிட்ட விடாம பிரார்த்தனை செஞ்சுக்கோ.......அடுத்த பிறவியிலாவது கிடைக்கும்.இருக்கறவங்களுக்கு அதோட அருமை தெரியாம எத்தனை முதியோர் இல்லம் தொடங்கியிருக்காங்கன்னு................ பேப்பர்ல பார்!

உனக்கு வேணும்னா சொல்லு....ஒரு அம்மா,அப்பா இவங்களை வீட்டுக்குத் தர்றாங்களான்னு கேட்டுப் பார்க்கறேன். அதான் இப்ப என்னால முடியும்.

உனக்கும் வயசு 45 ஆகுதுல்ல............ தைரியமா உன்னால ஏன் வாழ முடியலை? என ராபர்ட் பேசிக்கொண்டே நிமிர்ந்தான்.

எதிரே கூலிங்கிளாசைச் சுழற்றியபடி அச்சு அசலாக லூசியைப் போன்றே ஒரு பெண் டீஷர்டுடன் லூசியைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

லூசி......லூசி...எதிரே பார்....உன்னைப்போலவே யாரோ.......சுரண்டிய ராபர்ட்டின் கையை விலக்கிவிட்டு நிமிர்ந்தாள் லூசி.

நீங்க யார்?

என்பெயர் ரோசி. என் அம்மா நர்ஸ். உங்களைப் பார்த்தபோது அம்மா உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க...........

யார் உங்க அம்மா? விருட்டென எழுந்தாள் லூசி.

அதோ! கார்ல கையை நீட்டுறாங்க பாருங்க..............

எப்படித் தெரியும் என்னை?

அதுதான் முகம்காட்டுதே.............

சிலையானாள் லூசி.

ஒரு நிமிடம் காற்றுகூடத் தன் அசைவை நிறுத்தியதோ என நினைத்தான் ராபர்ட்.

என்ன செய்வதென்றே புரியாமல் நாக்கு குளற அப்பாவும் இருக்காரா? ....... இந்த அப்பா வேறே என்றாள் ரோசி. கலர்கலராய் சோப்புக்குமிழிகள் பறந்ததை யாரோ பாய்ந்து உடைத்ததுபோல உணர்ந்தாள் லூசி.

நம்ம போகலாம் ராபர்ட் என வேகமாக நடந்தவளைப் பிடித்து இழுத்தாள் ரோசி.

விடுங்க கையை! இத்தனை வருஷமா எங்கேயிருந்தீங்க?

என்பையன் ஒருத்தன் இருக்கான். எங்களுக்குப் பிறந்தவன்தான்.

கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு குழந்தைக்குத் தகப்பன்.

கேட்டால் இது பரம்பரையா வருதும்மா! எனக்கு தாத்தா,பாட்டின்னு யாராவது தெரியுதான்னு கேட்டான். இதோ! அவனை விட்டு விலகிட்டோம். தொடர்ந்து பேசாமல் மௌனமானாள் லூசி.

முறைதவறி நாங்க பிறந்துட்டாலும் முறையோடத்தான் வாழறோம்.உலகெங்கிலும் பெண்கள் இந்த விஷயத்துல வேறுபட்ட கருத்து இருக்கிறதுனாலதான் ஆண் இன்னமும் பெண்ணை அசிங்கமாவே பார்க்கிறான்.இது ஜஸ்ட் வாழ்ந்து முடிச்சுட்டுபோற விஷயம் இல்லை.

இரத்த பந்தம் இல்லையா! நீ வா லூசி நாம் போகலாம்! என லூசியின் கையைப் பிடித்து வேகமாக நடந்தான் ராபர்ட்.

காம்பவுண்ட் வாசலில் அடித்த நாற்றத்தையும்மீறி குப்பைத்தொட்டியில்

ஒரு பெண் நாய்க்குட்டியுடன் குப்பையைக் கிளறியபடி இருந்ததைப் பார்த்தபடி இருந்தாள் லூசி. யாரும் எடுக்கலைன்னா என் கதியும் இதுதான் இல்லையா................!

குப்பையிலிருந்து பறந்த காகிதம் நேராக எதிரில் இருந்த கோவில் கோபுரத்தில் பறந்து ஒட்டிக்கொண்டது.