fbpx

மின்னூல்களுக்கு அட்டைப்படம் உருவாக்க உதவி புரிக

 

வணக்கம்.

FreeTamilEbooks.com ல் யாவரும் பகிரும் வகையில் இலவசமாக மின்னூல்கள் வெளியிட்டு வருகிறோம்.
முழுதும் தன்னார்வலர்களால் இயங்கும் இந்த சேவையில், அட்டைப்படங்கள் உருவாக்கி உதவ உங்களை அழைக்கிறோம்.

குறிப்புகள் –

ஒரு அட்டைப்படத்திற்கு பின்னணி படம் முக்கியம். அது மின்னூலின் தலைப்பு அல்லது உள்ளடக்த்தைக் குறிப்பதாக இருப்பது மிகவும் சிறப்பு. அவ்வாறான படங்கள் கிடைக்காத போது, சாதாரண நிறங்கள் கொண்ட எளிய படங்களே போதும்.

அட்டைப்படத்தில், மின்னூலின் பெயர், நூலாசிரியர் பெயர் முக்கியம். நூல் வகை இருந்தால் சிறப்பு.

அட்டைப்படம் 300 – 400 kb இருந்தால் போதும்.

பின்னணி படம் காப்புரிமை கொண்டதாக இருத்தல் கூடவே கூடாது. பொதுக்கள உரிமையில் (Public Domain) இருப்பதே நல்லது. கிரியேட்டிவ்காமன்சு உரிமையில் இருந்தால், எங்கிருத்து படத்தை எடுத்தோமோ, அந்த URL ஐயும் , உரிமை விவரங்களையும் சேர்த்தே பகிர வேண்டும். பொதுக்கள உரிமையில் உள்ள படங்களுக்கு இவ்வாறு செய்ய வேண்டியதில்லை.

பொதுக்கள உரிமையில் உள்ள படங்களை இங்கே பெறலாம் : https://www.pexels.com/public-domain-images/ & https://pixabay.com/

மேலும் சில குறிப்புகள்

1. அட்டைப்படத்தின் அளவு

அகலம் 1562 பிக்சல்
உயரம் 2316 பிக்சல்

2. எந்த மின்னூல்களுக்கு அட்டைப்படம் உருவாக்க வேண்டும்?

தயாரிப்பில் காத்திருக்கும் எல்லா மின்னூல்களும் இங்கே உள்ளன.
https://github.com/KaniyamFoundation/Ebooks/issues

இதில் ‘அட்டைப்படம் தேவை’ என்ற குறிப்போடு உள்ள மின்னூல்களுக்கே அட்டைப்படம் தேவை.

முழுப் பட்டியல் இங்கே.
https://github.com/KaniyamFoundation/Ebooks/issues?q=is%3Aissue+is%3Aopen+label%3A%22%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%22

 

3. எழுத்துருக்கள்

நான் பின்வரும் எழுத்துருக்களைப் பயன்படுத்துகிறேன். நீங்கள் இவற்றையோ அல்லது இன்னும் சிறந்தவற்றையோ பயன்படுத்தலாம்

நூலாசிரியர் பெயர் = TAU_Elango_Madhavi
http://www.freetamilfont.com/download.php?id=736279

நூல் வகை = TAU_Elango_Muthu
http://www.freetamilfont.com/download.php?id=736282

நூல் பெயர் = TAU_Elango_Guntalakesi
http://www.freetamilfont.com/download.php?id=736267

 

4. GIMP மென்பொருள் மூலம் அட்டைப்படம் உருவாக்கம்

அட்டைப்படம் உருவாக்க முறைகளை இந்தக் காணொளியில் விளக்கியுள்ளேன்.

காண்க –

 

5. மாதிரிக் கோப்பு

மாதிரி XCF கோப்பை இங்கிருத்து பதிவிறக்கம் செய்து,
தேவையான மாற்றங்கள் செய்யலாம்.
https://archive.org/download/kalam-kadandha-pinne/kalam-kadandha-pinne.xcf

 

6. அட்டைப்படம் உருவாக்கிய பின் என்ன செய்ய வேண்டும்?

github.com ல் ஒரு கணக்கு உருவாக்கி, உங்கள் புதிய அட்டைப்படத்தை, மின்னூலுக்கான issue ல் பதிவேற்றம் செய்க.
மறக்காமல், உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி தருக.

7. அடுத்து ?

மற்றொரு தன்னார்வலர், அட்டைப்படத்தோடு மின்னூல் உருவாக்கி, அதே issue ல் இணைப்பு தருவார். மற்றொருவர் FreeTamilEbooks.com ல் வெளியிடுவார்.

அழகான அட்டைப்படங்கள் உருவாக்கி, சிறந்த மின்னூல்களை தமிழ் வாசகர்களுக்கு அளிக்கும் அரும்பணியாற்ற உங்களை அழைக்கிறோம்.

ஏதேனும் ஐயங்களுக்கு தயங்காமல் எழுதுங்கள் – [email protected]

நன்றி

One Comment

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.