260 மின்னூல்களுடன் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் http://FreeTamilEbooks.com

இன்று, உங்களின் பேராதரவோடு, நமது http://FreeTamilEbooks.com திட்டம், மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து, நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 😉

இந்த 3 ஆண்டுகளில் 260 மின்னூல்களை யாவரும் பகிரும் வகையிலான கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட்டுள்ளோம்.

சென்ற ஆண்டில் பல நூலாசிரியர்கள் மின்னூலாக்கம் கற்று தாமாகவே மின்னூல்கள் உருவாக்கியது பெரு மகிழ்ச்சி தருகிறது.

தொடர்ந்து ஆதரவு தரும் எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.

திட்டத்தின் சிறப்புகள்:

* சமகால நூல்களை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் தருதல் .

* இந்திய / தெற்காசிய மொழிகளில் முன்னோடி முயற்சி.

* முழுக்க தன்னார்வ, இலாப நோக்கற்ற, கூட்டு முயற்சித் திட்டம். விளம்பரம் கிடையாது. நன்கொடை கிடையாது.

* வெளியிட்ட ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் தரவிறக்கங்கள், ஏராளமான பின்னூட்டங்களைப் பெறும் நூல்கள்.

* மின்னூல் வெளியீட்டை அச்சு நூல் வெளியீடு அளவுக்குப் பெருமிதத்துக்கும் பொதுமக்கள் ஏற்புக்கும் உரிய ஒன்றாக மாற்றி வருவது.

* தமிழ் மின்னூல் வணிக முயற்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தது.

* ஆன்டிராய்டு/ஐஓஎஸ் செயலிகள்

இத்திட்டம் அடுத்த கட்டத்துக்குச் செல்ல என்ன தேவை?

* இன்னும் நிறைய தன்னார்வலர்கள் தேவை. படம் வரைதல், மின்னூல் உருவாக்குதல், நுட்பம், பரப்புரை என்று பல்வேறு பணிகள் செய்யலாம்.

* உங்களுக்குத் தெரிந்த எழுத்தாளர்களை மின்னூலாகத் தரக் கோருங்கள்.

* உங்கள் கருவியில் தமிழ் மின்னூல் படிக்க வசதி இல்லையென்றால், கருவி உற்பத்தியாளர்கிடம் நுகர்வோர் குறையைப் பதிவு செய்யுங்கள்.

உங்கள் கருத்துகளைப் பகிர்க.

நன்றி!

Leave a Reply

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: