நமது திட்டத்தின் பங்களிப்பாளர்கள், நூல் ஆசிரியர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்குபெற்று உரையாட ஒரு களத்தினை உருவாக்க நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன்.
http://dev.freetamilebooks.com ஐத் தொடங்கி, அங்கு புது நூல்களின் பங்களிப்புகளுக்கான உரையாடல்களை நிகழ்த்தி வந்தோம்.
ஆயினும் இது பங்களிப்பாளர்களுக்கான தளமாகவே இருக்கிறது.
பெருகி வரும் புது மின்னூல்களுக்கான வேண்டுகோள்களை ஆசிரியர்களே எழுதவும், நூல்களின் வளர்ச்சி நிலைகளைப் பார்வையிடவும், பங்களிப்பாளர்களுடன் நேரடியாக உரையாடவும், வாசகர்கள் தமது கருத்துகளை பகிரவும் எளிமையான ஒரு களத்தை தேடிக்கொண்டிருந்தோம்.
பல்வேறு Forum மென்பொருட்களை நிறுவி ஆய்வு செய்தோம். இறுதியில் கூகுள் வழங்கும் Forum சேவையே எளிதாகவும், தேவையான வசதிகளோடும் இருப்பதைக் கண்டோம்.
https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum
இங்கு நமது உரையாடல் களத்தைக் காணலாம்.
இங்கு உங்கள் அனைவரையும் இணைய வேண்டுகிறேன்.
புது மின்னூல் கோரிக்கைகளை இங்கு ஆசிரியர்களே நேரடியாக எழுதலாம்.
பங்களிப்பாளர்கள் தமது கருந்துகளையும் ஆக்களையும் எழுதலாம்.
இதன் மூலம் திட்டத்தின் அனைத்து ஆர்வலர்களையும் ஒரே இடத்தில் இணைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. திட்டத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி நிலைகள், புது யோசனைகள், புது பங்களிப்பாளர்கள் என அனைத்தையும் பொதுக் களத்தில் அனைவருடனும் உரையாடி முடிவு எடுக்கலாம்.
இதை இணையவழியிலேயே படிக்கும் ஒரு Forum ஆகக் கருதலாம். ஆயினும் எல்லா உரையாடல்களும் நமது மின்னஞ்சலுக்கு வருமாறும் செய்யலாம்.
8 MB வரையிலான கோப்புகளை இணைக்கலாம்.
இன்னும் பல்வேறு வசதிகள் உள்ளன.
உரையாடல் களத்தில் இணைந்து தமிழ் மின்னூல் உலகினுக்கான அடுத்த கட்ட வளர்ச்சிகளை உருவாக்குவோம் வாருங்கள்.
நன்றி
http://selvablogspotcom.blogspot.com
http://selvablogspotcom-selva.blogspot.com
I am a creative person.
I shall contribute to your service
always welcome
உங்களின் இந்த எண்ணம் தமிழ் வளர்ச்சிக்கு “ஆணிவேர்”ஆக விளங்கும்.
ஏற்கெனவே என் சில நினைவுகள் புத்தகம் இதில் மின்நூலாக வந்துள்ளது. chollukireen. word press.com இல் எழுதுகிறேன். என்பெயர் காமாட்சி மஹாலிங்கம். என்னுடைய அடுத்த வரைவு அன்னையர்தினப் பதிவுகள் குறித்து எந்தவரை முன்னேற்றமுள்ளது என்பது குறித்துத் தெரிந்து கொள்ள எழுதின மடலுக்கு இவ்விடம் எழுதும்படி மடல் வந்தது. தயவுசெய்து விவரம் தெரிவிக்கவும். சிரமத்திற்கு மன்னிக்கவும். அன்புடன் காமாட்சி மஹாலிங்கம்..மும்பை
great work.keep it up. all the very best to your services
ஐயா!ஏழைத் தொழிலாளர்களுக்கு கட்செவிக் குழுமம் வாயிலாகப் புததகங்களைத் தட்டச்சு செய்து அனுப்பி வருகிறேன்.நான் ஒரு ஓய்வூதிய சங்கத் தலைவர்.குறிப்பாக ஐயா.முசிவலிங்கம் அவர்களின் புத்தகங்கள் எளிமையாக உள்ளன.எகா.கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.எனவே மின்னூல்களை இலவசமாகப் படிக்க எனக்கு அனுமதி வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
புதிய வெளியீடுகளை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது