ட்விட்டர் 2006ல் துவங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இணைந்த மக்கள் தமது நண்பர்களுடன் தங்களின் குறுஞ்செய்திகளை, மன ஓட்டங்களை பகிர்ந்திடும் ஓடையாக இருந்தது, அவ்வளவு பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. செய்தி நிறுவனங்கள் உடனுக்குடன் செய்திச் சுருக்கங்களை வெளியிட ட்விட்டரை பயன்படுத்த ஆரம்பித்ததும், ட்விட்டர் தன் தளத்தின் நிரலாக்க இடைமுகத்தை (API) வெளியிட்டு அதைச் சார்ந்த சேவைகளை வழங்கிட இலவச அனுமதியளித்ததும் இதன் பயன்பாடு பன்முகமாக பெருகியது. Alexa திரட்டியின் ‘அதிகம் பேர் பயன்படுத்தும் வலைமனை’களின் பட்டியலில் முதல் 15 இடங்களுக்குள் ட்விட்டர் எப்போதும் இருக்கிறது. 2012 துவக்கத்தில் 465 மில்லியனுக்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் தினமும் 175 மில்லியனுக்கு மேற்பட்ட செய்திகள் பகிரப்படும் அளவில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. நொடிக்கு 11 புதிய ட்விட்டர் கணக்குகள் துவங்கப்படுகின்றன. Top 100 Learning Tools பட்டியலில் ட்விட்டரும் ஒன்று. நிறுவனங்கள் மக்களின் மனநிலையை அறிந்திட ட்விட்டர் பகிர்வுகளை ஆராய்கின்றன. உலகத்தலைவர்கள் ட்விட்டர் வழியே வெளிப்படையாக உரையாற்றிக் கொள்கிறார்கள்.
ட்விட்டர் நமக்கான, கட்டற்ற சுதந்திரமான ஊடகம். நம் கருத்துகளை நம் தாய்மொழியிலேயே வெளிப்படுத்திட வேண்டும் என்ற நோக்கில் கணினியிலும் மற்றும் அலைபேசியிலும் தமிழில் எழுதும் வழிகள் அனைத்தையும் தொகுத்து, புதியவர்களுக்கு ட்விட்டரை எளிமையாக விளக்கி கூறும் வகையில் எழுதி இருக்கிறோம்.
—
தமது நூலை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் வெளியிட்ட Twitamils குழுவினருக்கு நன்றிகள்.
ட்விட்டர் கையேடு
ஆசிரியர் : Twitamils குழு
வெளியீடு : @twitamils
முகவரி : http://TwiTamils.com/TTguide
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம், திருத்தம் செய்து மேம்படுத்திக் கொள்ளலாம்.
இந்த கையேடு Creative Commons Attribution 4.0 International License உரிமையில் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் எவரும் இதனை திருத்தம் செய்து மேம்படுத்திக் கொள்ளலாம்.
அட்டைப்படம் : ஜெகதீஸ்வரன்
http://sagotharan.deviantart.com/art/Twitter-Guide-Tamil-Free-Ebook-Cover-435646672
தமிழ் மின்னூல்களைப் பல்வேறு கருவிகளில் எவ்வாறு படிக்கலாம் என்பதற்கான வழிகாட்டி
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “ட்விட்டர் கையேடு - epub” Twitter-Guide-In-Tamil.epub – Downloaded 17028 times – 2 MB
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “ட்விட்டர் கையேடு mobi” Twitter-Guide-In-Tamil.mobi – Downloaded 790 times – 4 MB
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “ட்விட்டர் கையேடு A4 PDF” Twitter-Guide-In-Tamil-A4.pdf – Downloaded 8206 times – 4 MB
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
இணையத்தில் படிக்க – http://twitterintamil.pressbooks.com/
புத்தக எண் – 14
சென்னை
ஜனவரி 9 2014
[…] http://freetamilebooks.com/ebooks/twitter-guide/ […]
வணக்கம் நண்பரே, தாங்கள் கோரியவாறு படத்திலிருந்து இணைப்பும், கிரியேட்டிவ் காமென்ஸ் சின்னமும் அகற்றப்பட்ட அட்டைப் படத்தின் இணைப்பு,.
http://www.flickr.com/photos/110178158@N08/12691014564/sizes/l/in/photostream/
இந்த அட்டைப் படம் இத்தளத்திற்கெனவே செய்யப்பட்டிருப்பதால், இந்தப் படத்திற்கும் இணைப்பு தரவேண்டாம் நண்பரே.