
சமூகப் பிரச்னைகளையே மையமாகக் கொண்டு எழுதி வரும் திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்கள் இந் நாவலிலும் இன்று தமிழகத்தில் படித்த பெண்கள் படும் அவலத்தை விரிவாகச் சித்தரித்துள்ளார். மனித நேயம் தேய்ந்து வரும் இந்நாளில் இவர் காட்டும் சில கதாபாத்திரங்கள் தம்முள் நம்பிக்கையை மலரச் செய்கின்றன.
கண்ணிருந்தும் குருடராய், வாயிருந்தும் ஊமையராய், சுமைதாங்கியாய், மேலும் நகை தாங்கிகளாய் நம்முள் உலா வரும் பெண்கள் பலப் பலர். எது சுதந்திரம் என்றே தெரியாது தவித்தும் மேலைநாட்டு நாகரீகத்தையும் முழுமையாகப் பின்பற்ற இயலாது நம்நாட்டுப் பண்பாட்டையும் கைவிட இயலாது தத்தனித்து, கருத்திழக்கும் மகளிரும் பலப் பலர். இப்படியாகக் குழம்பும் பண்பாட்டுத் தெளிவின்மைக்கு ஒர் நல்ல தெளிவைத் தருகிறது இந்நாவல்.
இயற்கையில் நடக்க இயலாத விஷயங்களைத் திரைப் படங்களிலும் பத்திரிகைகளிலும் பார்த்தும் படித்தும் எரிச்சலுறும் வேளையில் இந் நாவல் புரையோடிய புண்னைக் கீறி மருந்து கட்டுகிறது.சமூக அவலங்களைச் சுட்டிக் காட்டுவதுடன் நாம் எங்கே போகவேண்டும் என்ற பாதையையும் தெளிவாக்கிக் காட்டுகிறது இந்நாவல்.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “சுழலில் மிதக்கும் தீபங்கள் epub” suzhalil_midhakkum_deepangal.epub – Downloaded 1672 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “சுழலில் மிதக்கும் தீபங்கள் A4 PDF” suzhalil_midhakkum_deepangalA4.pdf – Downloaded 1942 times –செல்பேசிகளில் படிக்க
Download “சுழலில் மிதக்கும் தீபங்கள் 6 inch PDF” suzhalil_midhakkum_deepangal6inch.pdf – Downloaded 1297 times –நூல் : சுழலில் மிதக்கும் தீபங்கள்
ஆசிரியர் : ராஜம் கிருஷ்ணன்
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
மின்னூலாக்கம் : த . தனசேகர்
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை: உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 356
பிப்ரவரி 28 2018





Leave a Reply