சில ரகசியக் குறிப்புகள் – ஜோதிஜி திருப்பூர்

சில ரகசியக் குறிப்புகள் – ஜோதிஜி திருப்பூர்

மின்னூல் வெளியீடு
www.freetamilebooks.com

மின் நூல் ஆசிரியர் ஜோதிஜி திருப்பூர்
அட்டைப்படம்
(Design Making) http://avargal-unmaigal.blogspot.com/
அட்டைப்படம் புகைப்படம் உரிமை
Henk Oochappan https://www.facebook.com/oochappan
(முறைப்படி அனுமதி பெற்றது)
உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
கிரியேட்டிவ் காமன்ஸ்.
எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

ரகசியத்தை வெளியே பகிர்தல் ஆகாது. அந்தரங்கம் புனிதமானது என்கிறார்கள். ஆனால் எவையெல்லாம் அந்தரங்கம்? எது ரகசியம் என்பதற்கு அளவுகோல் உள்ளதா? எது வரைக்கும் அது அந்தரங்கம் என்ற எல்லைக்குள் வருகின்றது? குறித்து யாராவது நம்மிடம் சொல்லியிருக்கின்றார்களா?

நாம் எதையெல்லாம் மற்றவருக்குத் தெரியாமல் மறைக்க வேண்டும் என்று நினைக்கின்றோமா அவையனைத்துமே ரகசியமாகப் பார்க்கப்படுகின்றது. அதையே அந்தரங்கம் என்று சொல்லப்படுகின்றது.

குடும்பத்தலைவர், தலைவி, மகன், மகள் என்று ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அந்தரங்கம் உண்டு. இதன் தொடர்ச்சியாக நாட்டை ஆள்பவர்கள் வரைக்கும் அந்தரங்கம் விரிவடைந்து கொண்டே செல்கின்றது.

தற்போதைய நவீன தொழில் நுட்ப வசதிகளில் அந்தரங்க ரகசியங்கள் தான் அதி விரைவாக வெளியே வந்து விடுகின்றது. வீட்டுக்குள் தனியறையில் குளிக்கும் ஒரு இளம்பெண் ஏன் தன்னை அலைபேசியில் அவரின் நிர்வாண கோலத்தைப் படம் எடுத்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது? அலைபேசியில் அழித்தாலும் அது அழியாமல் எங்கங்கோ பரவும் வாய்ப்பு உள்ளது என்பதனை அறியாத அந்தப் பெண்ணுக்கு என்ன அறிவுரை சொல்ல முடியும்.? ஒரு அரசியல்வாதி பேசிய அலைபேசி உரையாடல் வெளியே வரும் போது அவரின் பதவியே பறிபோகின்றது.

ஆனால் நான் இந்த மின் நூலில் முகம் சுளிக்க வைக்க மற்றவர்களின் அந்தரங்கத்தைப் பற்றியோ, அதற்குப் பின்னால் உள்ள அசிங்கத்தைப் பற்றியோ பேசவில்லை. என் மனதோடு இருந்த பல விசயங்களைப் பற்றி பேசியுள்ளேன்.

இவ்வுலகில் ரகசியம் என்பதே இல்லை. நம் மனதை விட்டு மற்றவர்களுடன் உரையாடும் ஒவ்வொரு விசயமும் ரகசிய தன்மை இழந்துவிடுகின்றது. இதையே நான் பொதுவில் வைத்துள்ளேன்.

இந்த மின்னூல் வழியாகப் பல ரகசியங்களை உரையாடியுள்ளேன். நான் வாழும் சமூகம், சமூகத்தை ஒவ்வொரு நொடியும் பாதிக்கும் அரசியல், அதனை ஆட்டிப் படைக்கும் அரசியல்வாதிகள், அவர்களின் கொள்கை அதற்குப்பின்னால் உள்ள அவர்களின் கொள்ளை சார்ந்த சுயநலங்களைப் பற்றிப் பேசியுள்ளேன்.

நம் வாழ்வில் குழந்தைகள் அறிமுகமானதும் அவர்களுக்கும் நமக்கும் உண்டான அதிக முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல் மற்றும் பார்வை சார்ந்த ரகசியங்களைப் பகிர்ந்துள்ளேன்.

இந்த வருடம் நான் வாழும் சமூகம் என் பார்வையில் உள்ளது? என் குடும்ப உறவுகளில் உண்டான மாற்றங்கள் அதற்குக் காரணமாக இருந்த சமூகம் மற்றும் அரசியலைப் பற்றிப் பேசியுள்ளேன்.

இது வரையிலும் என்னுடைய மின் நூலில் நெடுங்கதை என்று எதையும் எழுதியதில்லை. இதில் ஒரு நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து ஒரு நெடுந்தொடர் கொடுத்துள்ளேன். உறவுகளும், அதற்குப் பின்னால் வெளியே பகிர முடியாத சிக்கல் சார்ந்த ரகசியங்களைப் பேசியுள்ளேன்.

சில ஏற்புடையதாக இருக்கும். பல இதையெல்லாம் எழுதி என்ன ஆகப் போகின்றது? என்ற கேள்வியைக் கூட உங்களுக்குள் எழச் செய்யும்?

நாம் வாழும் போது நாம் வாழ்ந்த சமூகத்தை அவரவர் மொழியில் எழுதி வைப்பது அவசியம் என்று கருதியதால் வலைபதிவில் எழுதிய கட்டுரைகளைச் செப்பனிட்டு என் ஒன்பதாவது மின் நூலாக உங்கள் பார்வைக்குத் தந்துள்ளேன்

என் எட்டு மின் நூலுக்கு நம்ப முடியாத ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. 1,75,000 க்கும் அதிகமான நண்பர்களுக்கும் சென்று சேர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை என்பது நண்பர் சீனிவாசன் மேற்பார்வையில் நடக்கும் இந்தத் தளத்தில் உள்ள எண்ணிக்கை மட்டுமே. வெவ்வேறு தளங்களில் என் மின் நூல்கள் வெளியாகி உள்ளது. இது தவிர வாட்ஸ் அப் வாயிலாகக் கண்களுக்குத் தெரியாத நண்பர்கள் மூலம் பலருக்கும் சென்று கொண்டிருக்கும் தகவல்களை இணையத் தள நண்பர்கள் வாயிலாக அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது.

இதுவே தொழில் நகர வாழ்க்கையில் இடைவிடாத கடமைகளுடன் என் குடும்பத்தினருக்காக மட்டும் நான் வாழும் வாழ்க்கையோடு சேர்த்து எழுத்துலகத்திற்காகவும் உழைக்க வேண்டும் என்ற ஆர்வம் உருவாகின்றது. மாதம் தோறும் யாரோ சிலர் என் மின் நூலைப் படித்து விட்டு விமர்சனக் கடிதங்களை இன்று வரையிலும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களின் ஆர்வத்திற்காகவும் தொடர்ந்து எழுத விரும்புகின்றேன். வாசிப்பனுபவம் கொண்ட ஒவ்வொரு நண்பர்களுக்கும் இந்த மின் நூலைக் காணிக்கையாக்குகின்றேன்.

நன்றி. வணக்கம்.

நட்புடன்

ஜோதிஜி. திருப்பூர்.

தேவியர் இல்லம்.
27.10.2017

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “சில ரகசிய குறிப்புகள் epub” sila-ragasiya-kurippugal.epub – Downloaded 1848 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “சில ரகசிய குறிப்புகள் mobi” sila-ragasiya-kurippugal.mobi – Downloaded 911 times –

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “சில ரகசிய குறிப்புகள் A4 PDF” sila-ragasiya-kurippugal-A4.pdf – Downloaded 2879 times –

செல்பேசிகளில் படிக்க

Download “சில ரகசிய குறிப்புகள் 6 inch PDF” sila-ragasiya-kurippugal-6-inch.pdf – Downloaded 1298 times –

Send To Kindle Directly

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/sila-ragasiya-kurippugal

புத்தக எண் – 318

அக்டோபர்  27  2017

மேலும் சில நூல்கள்

  • நேருவின் மரபு – கட்டுரைகள் – ஆர். பட்டாபிராமன்
  • ஹிந்த்  ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம் – தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும் – கட்டுரைகள் – ஆர்.பட்டாபிராமன்
  • கை கொடுத்த காரிகையர்
  • உடல் மனம் உள்ளே – கட்டுரைகள் – அன்பரசு சண்முகம்

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

4 responses to “சில ரகசியக் குறிப்புகள் – ஜோதிஜி திருப்பூர்”

  1. மதுரைத்தமிழன்(Deej Durai) Avatar

    வாழ்த்துக்கள் ஜோதிஜி……..மேலும் பல நூல்கள் எழுதி பதிவர் என்ற நிலையில் இருந்து புகழ் பெற்ற எழுத்தாளர் என்றும் சொல்லும் நிலையை அடைய வேண்டுகிறேன். நன்றி

  2. krishnamoorthys Avatar

    தடதடக்கும் ரயில் பெட்டிக்குள் முன்னனுபவம் இல்லாத ஒரு ஆத்மாவுடன் நடந்த, 10 ஆம் பக்கம் தொடங்கி 53 ஆம் பக்கம் வரை விரிந்த வாழ்வியல் அனுபவம் மனதை கனமாக்கியது .சில சமயம் என்னை ஆண் என்று சொல்லிக்கொள்ள உள்ளுக்குள் கூச்சப்பட்டு இருக்கிறேன் .இப்போது நாகமணி என்ற சகோதரி அனுபவத்தை வாசித்த பிறகு வெளிப்படையாகவே கூச்சப்படுகிறேன் . இதற்குப் பிராயசித்தம் தேடுவதே இதற்கான என் எதிர்காலமாக இருக்கட்டும்.

  3. Krishna Kumar PV Avatar
    Krishna Kumar PV

    book is interesting

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.