புள்ளிகள் நிறைந்த வானம் – கவிதைகள் – ப. மதியழகன்

புள்ளிகள் நிறைந்த வானம்(கவிதைகள்)
ப. மதியழகன்
முதல் பதிப்பு:நவம்பர் 2017

ஆசிரியர் மின்னஞ்சல்: mathi2134@gmail.com

மின்னூல் வெளியீடு: FreeTamilEbooks.com
உரிமை: Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லோரும் படிக்கலாம். பகிரலாம்
மின்னூலாக்கம்: ப.மதியழகன்

 

என்னுரை

கடலில் தன்னைத் தொலைக்கும்
மழைத்துளி
தனது ஆத்மாவைத் தேடியலையும்
காற்று
விடியலுக்கு முன்பு
வானில் கவிந்திருக்கும்
அந்தகாரம்
கவிதையில் நேர்த்தி
கைவரப்பெற
இன்னும் முயல வேண்டும்
இன்னும் மூழ்க வேண்டும்
கவிதையில் நான்
பரீட்சித்துப் பார்த்ததை
உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன்
இலக்கை அடைய
ஓய்வு கொள்ளாமல்
ஓயாமல் ஓடவேண்டியிருக்கும்
தனக்கான இடத்தை
தக்கவைத்துக்கொள்ள
போராட வேண்டியிருக்கும்
கடக்க வேண்டிய தூரம்
நம்மை மலைக்க வைக்கும்
நான் உங்களை மரண
வீட்டுக்கு அழைத்துள்ளேன்
தப்பு சத்தமும், ஒப்பாரியும்
உங்களுக்கு பீதியை ஏற்படுத்தும்
ஊதுபத்தியும், மரிக்கொழுந்தின்
பிணவாடையும் அந்தப் பகுதி முழுவதும்
சுற்றிக் கொண்டிருக்கும்
சவஊர்வலம் மயானத்தை
அடைந்தவுடன் உங்களுக்கு
ஒன்று புரிந்திருக்கும்
சிதைக்கு தீ மூட்டினால்
எல்லோரும் ஒருபிடி சாம்பல்தான்
என்று நீங்கள் உணர்ந்தால்
உங்களுக்கு அக்கணமே
ஞானக் கண் திறக்கும்
மரணம் நமக்கு இப்போது
வாய்க்காது என
செருக்குடன் நீங்கள் நடந்தால்
வாழ்வின் இறுதி தருணத்தில்
மேனியில் சாம்பலைப் பூசி
ஆடும் சுடலையை
நீங்கள் மயானத்தில்
காண வேண்டியிருக்கும்
மரணத்தை பொதுவில் வைத்து
விளையாடும் இயற்கையை
யாராக இருந்தாலும்
தலைவணங்க வேண்டியிருக்கும்
சத்தியத்தின் வழியே நடக்க
முயற்சிப்பவர்களுக்குத்தான்
சுவர்க்கத்தின் கதவுகள்
கூட திறக்கும்.

மன்னார்குடி ப.மதியழகன்
12.11.2017

 

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “புள்ளிகள் நிறைந்த வானம் epub” pulligalnirainthavanamepub%20-%20pamathiyalagan.epub – Downloaded 204 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “புள்ளிகள் நிறைந்த வானம் mobi” pulligalnirainthavanammobi%20-%20pamathiyalagan.mobi – Downloaded 44 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “புள்ளிகள் நிறைந்த வானம் A4 PDF” pulligalnirainthavanamA4.pdf – Downloaded 235 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “புள்ளிகள் நிறைந்த வானம் 6 inch PDF” pulligalnirainthavanam6inchpdf.pdf – Downloaded 123 times –

Send To Kindle Directly

 

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/pulligalnirainthavanam

புத்தக எண் – 328

நவம்பர் 23  2017

 

Leave a Reply

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

57 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: