வகை : கட்டுரைகள்
ஆசிரியர்கள்: பியர்சன் கயே, ஆலன் வான்கா
தொகுப்பு : சார்லி ட்ராம்ப், ரோஸலின் கெல்லி
ஆக்கத்தலைமை: அய்லய்யா, மண்டேஸ்வாமி
தட்டச்சுப்பணி: பூங்கோதை, அய்யாவு ராமன்
மின்னூல் பதிப்புரிமை: தி ஆரா பிரஸ், இந்தியா.
அட்டை வடிவமைப்பு: தி இன்னோவேஷன் பொட்டிக், இந்தியா.
வெளியீட்டு அனுசரணையாளர்: Komalimedai.blogspot.in
மின்னஞ்சல்: sjarasukarthick@rediffmail.com
மின்னூலாக்கம் & மின்னூல் வெளியீடு – சிவமுருகன் பெருமாள் & sivamurugan.perumal@gmail.com
கிரியேட்டிவ் காமன்ஸ் உலகளாவிய உரிமம் 4.0 ன் கீழ் வெளியிடப்படுகிற இந்நூலை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அனைவரும் படிக்கலாம், பகிரலாம்.
ஆசிரியர்கள் உரை
இந்த நூல் Komalimedai.blogspot.in வலைப்பூவில் எழுதிய பல்வேறு புத்தகங்கள் பற்றிய எளிய பகிர்தல்களாகும். புத்தகங்கள் என்பவை படிப்பவரின் வாசிப்பு, வாழ்வனுபவம் பொறுத்து பெரிதும் மாறுபடக்கூடியவை. ஒருவர் கண்டடைந்த தரிசனம் இன்னொருவருக்கு கிடைக்கவில்லை என்பதற்கு இதுதான் காரணம். எனவே ஒருபோதும், திரைப்படம், புத்தகம் என எதனையும் பொதுப்படையாக ஒரு அறிவை மக்களுக்கானதாக கொண்டு விமர்சனம் செய்துவிட முடியாது என்பதுதான் நாங்கள் கண்டடைந்த தெளிவு.
நாற்பதிற்கும் மேலான இந்தப்புத்தகங்கள் பெரும்பாலும் நண்பர்கள் மூலமாகவும், நூலகங்களிலும் வாசிக்கப்பட்டவைதான். இதில் புத்தகத்தேர்வு என்பது பெரிதும் பின்பற்றப்படவில்லை என்றாலும் அதனை இந்த நூல் வலியுறுத்தும் என்று நம்புகிறோம். மற்றபடி நூல் வாசித்தலால் யாரும் புனிதர், மகான் ஆகமுடியாது. பல வாழ்வனுபவங்களிலிருந்து சிறிது விசாலமான மனதை பெற, புத்தகங்களிலிருந்து பெற்ற சிந்தனைகளை சோதித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி சாத்தியம். நமது பரிணாம வளர்ச்சிகூட எதை அதிகம் உடலில் பயன்படுத்துகிறோமோ அதுதான் இன்றைய நவீன காலம் வரை வளர்ந்து வந்திருக்கிறது. இன்று பலரும் தாம் என்ன படிக்கிறோம் என்று வெளிப்படுத்துவதில்லை. அறிவு என்பது பகிர்ந்துகொள்வதில்தான் வளருகிறது என்று முழுமையாக நாங்கள் நம்புகிறோம். அதன் வெளிப்பாடுதான் இந்த வாசிப்பு பகிர்தல் நூல். வாசித்துவிட்டு கருத்துக்களை கூறுங்கள். எழுத்துக்களின் தரத்தினை மேம்படுத்த அது பெரிதும் உதவியாக இருக்கும். இதனை உருவாக்கியதில் உதவிய ஆரா குழுவினருக்கும், படித்து பல விமர்சனங்களை நேர்மையாக பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கும் நன்றிகள் கோடிசொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,
பியர்சன் கயே, ஆலன் வான்கா
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “நூல்சூழ்உலகு” noolsoolulagu.epub – Downloaded 1025 times – 765 KB
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “நூல்சூழ்உலகு” noolsoolulagu.mobi – Downloaded 354 times – 2 MB
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “நூல்சூழ்உலகு” noolsoolulagu_A4.pdf – Downloaded 1512 times – 973 KB
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “நூல்சூழ்உலகு” noolsoolulagu_6inch.pdf – Downloaded 1279 times – 1 MB
புத்தக எண் – 151
மார்ச் 26 2015
[…] நூல்சூழ்உலகு […]
[…] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/noolsolaullagu/ […]