fbpx

எனது வல்லமையாளர்கள் – தேமொழி

எனது வல்லமையாளர்கள்

தேமொழி

FreeTamilEbooks.com

மின்னூலாக்கம் லெனின் குருசாமி – [email protected]
எனது வல்லமையாளர்கள் ஆசிரியர்: தேமொழி
ISBN: 978-0-9963993-3-3
வெளியீடு: ஆகஸ்ட் 2017
பதிப்பகம்: அறிவொளி பதிப்பு
[email protected]
மேலட்டை உருவாக்கம்: தேமொழி

காப்புரிமை தகவல்:
நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப்படுகிறது. இதை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமையும் வழங்கப்படுகிறது.

Copyright Information:
Creative Commons license: Attribution-NoDerivs 3.0 Unported (CC BY-ND 3.0).
You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work.

என்னுரை

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

ஒவ்வொரு வாரமும் அந்த வாரம் தனது சாதனையால் மக்களைக் கவர்ந்த ஒருவரை அறிமுகப்படுத்தி, அவரது திறமைகளைப் பாராட்டி வல்லமை இதழ் அவர்களுக்கு வல்லமையாளர் என்ற விருதளிப்பது வழக்கம். வல்லமை மின்னிதழின் ஆசிரியர் குழுமத்தில் நான் பங்கேற்றபொழுது மார்ச் 2014 முதல் மார்ச் 2016 வரையில் உள்ள இடைப்பட்ட காலத்தில் நானும் இப்பொறுப்பினை ஏற்றேன்.

இப்பொறுப்பின் காரணமாக ஒவ்வொரு வாரமும் ஒரு சாதனையாளரை அடையாளங்கண்டு, அவரது சாதனையைப் பாராட்டி எழுதி, அச்சாதனையாளரை அவ்வார வல்லமை இதழின் “வல்லமையாளர் விருது” பெறுபவராக அறிவிக்கும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. இதன் பயனாக நூறு திறமைமிக்க சாதனையாளர்களைக் குறித்து அறிந்து கொள்ளும் நல்லதொரு வாய்ப்பும் கிடைத்தது. அவ்வாறு சாதனையாளர்களைப் பாராட்டி எழுதியக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடும் முயற்சியை முன்னெடுக்க ஊக்கமளித்த அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமாக அறியப்படும் கனடாவில் வாழும் அணுவியல் பொறியாளர் திரு. ஜெயபாரதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

வல்லமை இதழ் 2012 ஆம் ஆண்டு துவக்கிய வல்லமையாளர் விருதுக்கான தேர்வுகளை அறிவிப்பதற்கு முதலில் பொறுப்பேற்றவர் எழுத்தாளர்

திரு. திவாகர் அவர்கள். முதல் நூறு வல்லமையாளர்களைத் தேர்வு செய்து அறிவித்த திவாகர் அவர்களைத் தொடர்ந்து, அடுத்த நூறு வல்லமையாளர்களைத் தெரிவு செய்து பாராட்டும் வாய்ப்பை எனக்களித்த வல்லமையின் நிர்வாகக் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நிறுவனர் அண்ணாகண்ணன் மற்றும் நிர்வாக ஆசிரியர் பவளசங்கரி ஆகியோர் என்மீது கொண்டுள்ள நம்பிக்கை தந்த ஊக்கத்தில் ஒவ்வொரு கட்டுரையை எழுதும்பொழுதும் அந்த எழுத்து மனநிறைவைத் தந்தது.

சாதனைகள் மூலம் தங்களை வேறுபடுத்திக் கொண்டு உலகிற்கு முன்மாதிரியாக விளங்கியவர்களைப் பாராட்டி ஒவ்வொரு வார இறுதியிலும் கட்டுரை எழுதிய தருணங்கள் மகிழ்ச்சி தரும், நினைவில் உறைந்து போய்விட்ட அருமையான நேரங்கள். ஒவ்வொரு வாரமும் கலந்தாலோசனையில் உதவிய அண்ணாகண்ணன், பவளசங்கரி, மேகலா இராமமூர்த்தி ஆகியோருக்கு நன்றிகள். அவர்களது ஆலோசனையின் காரணமாக வல்லமையாளர் தெரிவுகள் சிறப்பாக அமைந்தன.

இந்நேரத்தில் சாதனையாளர்களை அடையாளம் காட்டும் பந்தத்தைக் கையிலெடுத்து, வழிகாட்டியாய் முன்னெடுத்துச் சென்று, தொடர் ஓட்டத்தில் என் கையில் பந்தத்தை கொடுத்துச் சென்ற திரு. திவாகர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பந்தத்தை என்னிடம் இருந்து பெற்று தொடர்ந்து எடுத்துச் சென்ற பேராசிரியர் முனைவர் செ.இரா. செல்வக்குமார் அவர்களுக்கும் எனது நன்றிகள் உரிதாகின்றன. என் பங்கைச் சிறப்பாக மனநிறைவுடன் செய்ய உற்சாகப் படுத்தி கருத்துக்களைப் பகிர்ந்து உதவிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பரிந்துரைக்கப்பட்டவர்களில் சிலர் விருது பெறும் நிலையை அடையாமல் போயிருந்தாலும், பரிந்துரைத்து எனது முயற்சிக்கு உதவிய நண்பர்களுக்கு நன்றி. குறிப்பாகப் பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள அணுவியல் விஞ்ஞானி திரு. ஜெயபாரதன் அவர்கள் மகளிர் பலரைப் பரிந்துரைத்து ஆதரவாக இருந்தது நெகிழ்வு தரும் செயல். பெண்களின் சார்பில் அவருக்கு எனது சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்ணிடம் தொடங்கி (முனைவர் வீ.எஸ். ராஜம்) பெண்ணுடன் (சர்வதேச கால்பந்து நடுவர் ரூபாதேவி) முடிவடைந்துள்ளது எனது வல்லமையாளர்கள் கட்டுரை வரிசை என்பதில் எனக்கும் தனிப்பட்ட மகிழ்ச்சி.

வல்லமையாளர்கள் கட்டுரைகள் யாவும் அவை வெளிவந்த காலவரிசைப்படியே இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளின் வல்லமையாளர்களைக் கண்டு ஊக்கம் கொண்டு மேலும் பல வல்லமையாளர்கள் உருவானால் அதுவே

‘வல்லமையாளர்’ விருதுக்குப் பெருமை சேர்க்கும், அதற்குப் பங்காற்றிய வகையில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.

“The gull sees farthest who flies highest” ― Richard Bach, Jonathan Livingston Seagull

உயரேப் பறக்கும் குருவியே காணுமாம்
ஊரின் தொலைவு தனை

அனைவருக்கும் நன்றி. அன்புடன்
தேமொழி

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “எனது வல்லமையாளர்கள் epub”

enathu_vallamaiyalargal.epub – Downloaded 1761 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “எனது வல்லமையாளர்கள் mobi”

enathu_vallamaiyalargal.mobi – Downloaded 1036 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “எனது வல்லமையாளர்கள் A4 PDF”

enathu_vallamaiyalargal_a4.pdf – Downloaded 2311 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “எனது வல்லமையாளர்கள் 6 inch PDF”

enathu_vallamaiyalargal_6in.pdf – Downloaded 1365 times –

Send To Kindle Directly

 

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/enathu_vallamaiyalargal

புத்தக எண் – 325

நவம்பர் 4  2017

 

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.